Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்து சமயம் எங்கே போகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

  • Replies 56
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கோயிலில் சொன்னார்கள் பங்குனி மாதம்[மார்ச்] வருகின்ற சிவராத்திரி தான் உண்மையாக விரதம் அனுட்டிக்க வேண்டுமாம் ஏனென்றால் பெப்ரவரி மாதம் அனுட்டித்தால் அது தமிழுக்கு தைக்கு வருமாம் அப்படி தையில் வரக் கூடாதாம்...அதனால் பங்குனியில் அனுட்டித்தால் அது தமிழுக்கு மாசி மாதத்திற்கு வருவதால் அதை தான் அனுட்டிக்க வேண்டும் எனவும் மேலும் சிவராத்திரிக்கு பேர் போன திருக்கேதீஸ்வரத்திலும் பங்குனி மாதம் தான் அனுட்டிக்கிறார்களாம்.

இது என்னவென்று எனக்கு தெரியாது .ஆகவே விசயம் தெரிந்தவர்களிடம் இதை விட்டுவிடுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

மகா சிவராத்திரி

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

சந்திரனின் நிலையை வைத்துத்தான் நாள், திதி கணிக்கின்றார்கள். வாக்கிய முறைக்கும், கணித முறைக்கும் வித்தியாசம் உள்ளது.

E=MC2

1cm=10cm

என்பன விஞ்ஞான விதிகள்;

இவை என்றும் மாறுபடாதவை;ஒளியின் வேகமும் மாறுபடாதவை; ஆனால் அஞ்ஞானம் எல்லா இடங்களிலும் மாறுபடும். என் கணித சாத்திரத்திலும் பஞ்சாங்க சாத்திரத்திலும் என்று மாறுபடும். ஒரு ஹைட்ரஜன் கூட்டுச் சேரும் ஒட்சிசனின் இயல்பு அகிலம் முழுதும் ஒரே மாதிரித்தான். ஆனால் சனியுடன் கூட்டுச் சேரும் வெள்ளி ஒவ்வொரு சாத்திரிக்கும் ஏற்ப மாறுபடும்

இனியாவது தமிழர் இந்த பொய் சாத்திரத்தில் இருந்து விடுபட்டு; 1+1=100 என்று சொல்லும் பொய்யிலிருந்து விடுபட்டு; விஞ்ஞானத்தை நம்ப வேண்டும்;

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு நிழலி...நீங்கள் இதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்...ஆனால் புலம் பெயர் நாட்டில் ஜயர்மார் தங்கள் சுய லாபத்திற்காக இவற்றினை மாற்றலாம்...அதில் வேண்டுமானால் பிழை கண்டு பிடியுங்கள்...அதற்காக இந்து சமயத்தையே குறை பிடிக்காதீர்கள்.

முன்னைய கருத்துக்களத்தில் இந்து மதத்தைப் பற்றிச் சில கட்டுரைகளை இணைத்திருந்தேன். தேடினால் கிடைக்கும். வாசித்துவிட்டு என்னைத் தேடி வரக்கூடாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்கையும் போகட்டும் வரட்டும்.ஆனால் நாங்கள் எங்கையும் போகாமல் இருந்தால் சரி. :lol:

நவகிரக வழிபாடு நாலாயிரம் வருடங்களுக்கு மேல்.

விஞ்ஞானரீதியாக ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்து கடந்த நூற்றாண்டில்தான்.

ஆனால் தற்போது... 99.999999999990 பொய், புரட்டு, முட்டள்தனம்.

நவகிரக வழிபாடு நாலாயிரம் வருடங்களுக்கு மேல்.

விஞ்ஞானரீதியாக ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்து கடந்த நூற்றாண்டில்தான்.

ஆனால் தற்போது... 99.999999999990 பொய், புரட்டு, முட்டள்தனம்.

ஆனால் சந்திரனும் எப்படி நவக்கிரகமானது??

ஆனால் சந்திரனும் எப்படி நவக்கிரகமானது??

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

ஐயோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்டமாதிரிக்கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் எங்கே போகிறது என்பதிலும் பார்க்க நாம் எங்கே போகிறோம்? என்பது தான் முக்கியம்.

கேட்டுப் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை.

http://www.blogtalkradio.com/search/sov/

Edited by akathy

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

சிவராத்திரி மட்டுமல்ல பல வித்தியாசங்கள் இரு பஞ்சாங்கத்திலும் உண்டு.இருவரின் கணிப்புகளும் வித்தியாசமானவை.ஆதலால் தான் நாட்களும் வித்தியாசப்படுகிறது.

இந்து சமயம் எங்கே போகிறது என்பதிலும் பார்க்க நாம் எங்கே போகிறோம்? என்பது தான் முக்கியம்.

கேட்டுப் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை.

http://www.blogtalkradio.com/search/sov/

கேட்ட இனிமையாக இருக்கிறது..

அதில் கூறப்படுவது விழங்கிறதோ இல்லையோ என்பதர்கு அப்பால் ..

அந்த நிகழ்சியை வழங்கும் உரை நடை அருமையாக உள்ளது ..

இணைப்புக்கு நன்றி அகதி...

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பம் இருந்தால் இரு மாதங்களிலும் விரதம் பிடிக்க வேண்டியதுதான்.. உடம்பாவது குறையும்..! :lol:

E=MC2

1cm=10cm

என்பன விஞ்ஞான விதிகள்;

இவை என்றும் மாறுபடாதவை;ஒளியின் வேகமும் மாறுபடாதவை; ஆனால் அஞ்ஞானம் எல்லா இடங்களிலும் மாறுபடும். என் கணித சாத்திரத்திலும் பஞ்சாங்க சாத்திரத்திலும் என்று மாறுபடும். ஒரு ஹைட்ரஜன் கூட்டுச் சேரும் ஒட்சிசனின் இயல்பு அகிலம் முழுதும் ஒரே மாதிரித்தான். ஆனால் சனியுடன் கூட்டுச் சேரும் வெள்ளி ஒவ்வொரு சாத்திரிக்கும் ஏற்ப மாறுபடும்

இனியாவது தமிழர் இந்த பொய் சாத்திரத்தில் இருந்து விடுபட்டு; 1+1=100 என்று சொல்லும் பொய்யிலிருந்து விடுபட்டு; விஞ்ஞானத்தை நம்ப வேண்டும்;

நிழலி! நீங்கள் முழு தப்பாக E = m x c x c என்றும் மாறுபடாதவை; ஒளியின் வேகமும் மாறுபடாதவை; என எழுதி, பௌதிகம் அறியாதவர்களை பிழையான திசையில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து விளங்குங்கள். விஞ்ஞானம் என்ற போர்வையில் உங்கள் அஞ்ஞானத்தை வெளிப்படுதியுள்ளீர்கள்.

மேற்படி சமன்பாட்டில், திணிவு m ஆனது அதன் கதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கோட்பாடுகளின்படி திணிவு (M), நீளம் (L), நேரம் (T) ஆகிய அடிப்படை கணியங்கள், அவை சம்பந்தப்பட்ட பொருளின் கதிக்கு ஏற்ப மாற்றமடையும். இதன்படி, பூமியில் 1 m நீளமுடைய கோல், மிக வேகமாக செல்லும் ரொக்கட் இல் இருந்தபடி அளவிடும் பொது 1 m க்கு குறைவாகவே (உ+ம்: 0.9 m) காணப்படும்.

ஒளியின் வேகமும் மாறுபடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நிழலி.

கிரகங்கள் / கோள்கள் அதன் நீள்வட்ட பாதையில் ஒரே கதியில் பயணிப்பதில்லை. மையத்திலிருந்து தூரத்தில் உள்ள போது அவற்றின் கதி உயர்வாகவும், அருகில் வரும் போது கதி குறைவாகவும் இருக்கும்.

நிழலியைப்போலவே, தற்காலத்தில் பரம்பரையாக பஞ்சாங்கம் கணிப்பவர்களும், முறையான அறிவின்றி, சமன்பாடுகளை கோள்களின் நிலைக்கு ஏற்ப மாற்றாமல், அல்லது மாற்றுவதில் பிழைகள் விடுவதால் வேறுபாடுகள் ஏற்படுவதாகவே தோன்றுகிறது. முறையான அறிவைபெறாது பஞ்சாங்கத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் சுயநலவாதிகளால் இந்த வேறுபாடுகள் ஏற்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.

முறையான அறிவைபெறாது சொல்லப்படும் கருத்துக்கள் இந்து சமயம் "கேலிக்குரியது" என்ற மாயை தோற்றுவிக்கிறது.

நிழலி நீங்கள் இதை முழுமையாக விளங்கிக்கொண்டால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

அதே நேரத்தில், என்ன காரணத்தாலோ, இந்த வேறுபாடுகள் பொது மக்கள் மத்தியில் செல்லும்போது - அவை குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, இந்து சமயத்தை கேலிக்குரியதாக மாற்றி, பாமரர்களின் நம்பிக்கையை சிதைக்க முயற்சிக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் - மாற்றுக்கருத்துக்கள் சொன்னவர்களையும், இத் திரியை ஆரம்பித்தவர்களையும் பாராட்ட வேண்டும்.

அதே நேரத்தில் தொடரும் இப்போக்கு, இந்து சமயத்தை இழிவுபடுத்தி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், தம்மை பகுத்தறிவுவாதிகளாக காட்டிக் கொள்ளும் போலிகளுக்கும், குழம்பிய குட்டைகளில் மீன் பிடிக்க காத்திருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே இவற்றுடன் தொடர்புடைய இந்துக்கள் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='Aasaan' date='07 February 2010

எனவே இவற்றுடன் தொடர்புடைய இந்துக்கள் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும்.

இதில் கருத்தெளுதி தெரிய படுத்தியவர்களுக்கு எல்லோருக்கும் எனது நன்றிகள்

ஆசானுடைய இந்த கருத்து சரியாக உள்ளது.

நிழலி! நீங்கள் முழு தப்பாக E = m x c x c என்றும் மாறுபடாதவை; ஒளியின் வேகமும் மாறுபடாதவை; என எழுதி, பௌதிகம் அறியாதவர்களை பிழையான திசையில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து விளங்குங்கள். விஞ்ஞானம் என்ற போர்வையில் உங்கள் அஞ்ஞானத்தை வெளிப்படுதியுள்ளீர்கள்.

மேற்படி சமன்பாட்டில், திணிவு m ஆனது அதன் கதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கோட்பாடுகளின்படி திணிவு (M), நீளம் (L), நேரம் (T) ஆகிய அடிப்படை கணியங்கள், அவை சம்பந்தப்பட்ட பொருளின் கதிக்கு ஏற்ப மாற்றமடையும். இதன்படி, பூமியில் 1 m நீளமுடைய கோல், மிக வேகமாக செல்லும் ரொக்கட் இல் இருந்தபடி அளவிடும் பொது 1 m க்கு குறைவாகவே (உ+ம்: 0.9 m) காணப்படும்.

நான் எங்கு சொன்னேன் திணிவு எங்கும் மாறுபடாது என்று? நான் கூறியது E = m x c x c எனும் விதி (சார்பியல்) என்றும் மாறுபடாது என்று; அதன் அர்த்தம் அது பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி E = m x c x c எனும் விதி மாறுபடாது என்று. உங்களுக்கு ஏற்ற மாதிரி என் புரிதலை புரிந்து கொண்டு விட்டு அதில் பிழை சொல்கின்றீர்கள். E = m x c x c எனபது மாமேதை அயின்ஸ்ரின் இன் கருத்தான E = m x c x c என்பது இன்று வரைக்கும் நிரந்தரமானது; பர பிரம்மம் என்றதைக் காட்டிலும் நிரூபணமானது

ஒளியின் வேகமும் மாறுபடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நிழலி.

இந்த நிமிடம் வரை அது மாறியதாக விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை.

உதாரணத்துக்கு 5 எனும் வலுவுடன், இன்னும் ஒரு 6 சேர்ந்தால் அது 11 ஆகும் (5+6=11). ஆனால் ஒரு வாகனம் 100 கி.மி வேகத்தில் செல்லும் போது, அதனை விஞ்சும் வாகனம் 110 கி.மி இல் சென்றால் சாதாரண கூட்டல் விதிப்படி அது 210 ஆக வேண்டும். ஆனால் சார்பியல் தத்துவம் படி, 100 கி.மி வேகத்தில் செல்லும் வாகனத்துக்கு அதனை விஞ்சும் வாகனத்தின் வேகம் வெறும் 10 தான். இங்கு தான் E=MCC எனும் கோட்பாடு பற்றிய பிரக்ஞை உருவாகுன்றது. அது எங்கு என்றால் இது ஒளியின் வேகம் தொடர்பான ஆராய்வில்

ஒரு வாகனமும் ஒளியும் ஒன்றை ஒன்று கடந்து ஓடும் இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்திலும் ஒளியின் வேகம் (186,000 மைல்)(300,000 km/S) இன்னொரு வாகனம் சார்பாக அளவிடும் போதும் அது மாறிலியாக (மாறாது, அதே வேகம்) காணப்படுகின்றது. அதாவது, 120 kM/s ஆக ஓடும் ஒரு வாகனத்தை ஒளி கடந்து போகும் போது அதன் வேகம்

300,000 km/S- 120 kM/S=299880 ஆக இருப்பதில்லை, மாறாக அதே 300,000 km/S ஆகவே இருக்கின்றது. இங்கு தான் அயின்ஸ்ரின் எனும் மாமேதையின் E=MCC தத்துவம் பற்றிய புரிதல் ஏறபடுகின்றது

ஆனால் சாத்திரத்தில் ஒரு தத்துவம் எல்லா இடத்திலும் பொய்க்கின்ற்து. ஒரு சாத்திரி 1+1=2 என்றால், இன்னொரு சாத்திரி அதே கிரக பலனைக் கொண்டு 1+1=100 என்பார். அதே போல் எண் கணித சாத்திரம் ஒன்றைச் சொல்லும், பஞ்சாங்க சாத்திரம் இன்னொன்றைச் சொல்லும். ஒரே சாதகத்தை 3 சாத்திரிகளிடம் காட்டினால் 3 விதமல்ல 300 வித பலன் சொல்வர்( ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் சாதகத்தை குறிப்பிட்ட ஒரு சாத்திரியிடம் வேறு நபர்கள் மூலம் காட்டுங்கள்; இது தான் நடக்கும்) இது சுத்த பம்மாத்து. வெறும் வாயுக்களும், உறை/அதியுச்ச வெப்பமும், கோள வடிவம் கொண்ட ஒரு சுற்றுப் பாதையில் சுற்றும் கிரகங்கள் மானுட வாழ்வில் மாறுதலைக் கொண்டு வரும் என்பது சுத்த பம்மாத்து (ஒரு துணியை கோள வடிவமாக்கி அதில் ஒரு ரூபாயை/டொலரை வட்ட பாதையில் சுழட்டி எறியுங்கள்; அது கோள வடிவமாகவே சுற்றும்; ஏனெனில் கோள வடிவப் பாதை என்பது மைய விசை கொண்டது)

நீங்கள் தலை கீழாக நின்று மூட நம்பிகைகளை மெய் என்று நிரூபிக்க முனைகின்றீர்கள்; பாவம் நீங்கள் இன்றைய தலைமுறை உங்களைப் போன்றவர்களை நம்பத் தயாரில்லை

மற்றப்படி, பல நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட எந்த சமய கோட்பாடும்,, அது இந்து சமயமாக இருந்தால் என்ன, கிறிஸ்தவம். இஸ்லாமாக இருந்தால் என்ன இன்றைய விஞ்ஞான மெய்களின் மத்தியில் பொய்யாகவே உணரப்படும், அது எப்படி என்றால் பிரம்மன் தான் எல்லாரையும் படைத்தார் என்பதிலும், ஆதாமின் விலா எலும்பில் பெண் படைக்கப்பட்டாள் என்பதிலும் உள்ள பரிபூரண பொய்யைப் போல

Edited by நிழலி

நிழலி! பௌதிகவியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள். சார்பியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. உங்களுக்கு பௌதிகவியல் படிப்பிக்க எனக்கு நேரமில்லை! மன்னியுங்கள்!!

பாவம் நீங்கள் இன்றைய தலைமுறை உங்களைப் போன்றவர்களை நம்பத் தயாரில்லை

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்றைய தலைமுறை என்று சொல்லிக்கொள்பவர்கள், பெரும்பாலானவர்கள், அரைகுறையாக தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்தமாதிரி நடந்ததால் தான் தமிழினம் பாரிய அழிவுகளை சந்தித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Edited by Aasaan

நிழலி! பௌதிகவியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள். சார்பியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. உங்களுக்கு பௌதிகவியல் படிப்பிக்க எனக்கு நேரமில்லை! மன்னியுங்கள்!!

எவை தவறானவை என முடிந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள். நான் பெளதீகவியல் மாணவன். கணணித் துறை என் இரண்டாம் பட்ச தெரிவுதான். சந்தேகங்கள், சர்ச்சைகள் பின் தெளிவுகள் என்ற அறிவுத் தேடலின் மூலம்தான் என் பெளதீகவியல் அறிவை வளர்க்க விரும்புகின்றேன். நான் கூறியவற்றில் எங்கு தவறு இருக்கென்று சொன்னால்,அதற்கான தேடலை செய்யவும், அதற்குரிய பதிலை தரவும் தயாராக இருக்கின்றேன். விஞ்ஞானத்தில் எதுவும் பரிபூரண அறிவு இல்லை. 100 வருடமாக நம்பிய ஒரு விதியை ஒரு சின்ன சம்பவம் மாற்றி விடும்,அல்லது கேள்விக்குட்படுத்தும். என்னுடம் விவாதிக்க விரும்பினால் தொடருங்கள். அது என் புரிதல்களில் உள்ள இடைவெளிகளை மீண்டும் சரிபார்க்க எனக்கும், உங்களுக்கும் உதவும்

உங்களுக்கு ஒரு தகவல்: Discovery/ National Geography என்ற இரு பிரபல்யமிக்க தொலைக்காட்சிகளில் இது பற்றிய தொடர் விவாதம் ஒவ்வொரு கிழமையும் போகின்றது. விரும்பினால் பாருங்கள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்றைய தலைமுறை என்று சொல்லிக்கொள்பவர்கள், பெரும்பாலானவர்கள், அரைகுறையாக தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்தமாதிரி நடந்ததால் தான் தமிழினம் பாரிய அழிவுகளை சந்தித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

எவை அரை குறை என்று சான்றுகளுடன் தாருங்கள். உங்களால் என் கேள்விகளுக்கு பதில் எழுத முடியாவிடின் மொட்டையாக 'அரை குறை' என்று சொல்லாதீர்கள். சார்பியல் தத்துவம் தொடர்பாக விரிவாக நான் குறிப்பிட்டவற்றில் என் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள், பதிலளிக்கின்றேன்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவும். இன்றைய தலைமுறை உங்களைப் போன்று விவாதம் என்றவுடன் ஓடி ஒளிக்காது உண்மையான தேடலை செய்து பல அரிய கண்டுபிடிப்புகளையும் விஞ்ஞான தத்துவங்களையும் கண்டு பிடித்துள்ளன என்பதை

மீண்டும், மேலும் விவாதிப்போம். என்னில்/ நான் கூறிய சார்பியல் தொடர்பான விடயங்களில் எவை தவறென காட்டுங்கள். தவறெனில் நிச்சயம் ஒத்துக் கொள்வேன். இல்லையெனில் இறுதிவரைக்கும் விவாதம் செய்வேன்

Edited by நிழலி

நீங்கள் பௌதிக மாணவன் என்பதை அறிந்தது மகிழ்ச்சி. உங்களுடன் விவாதத்தை தொடர விரும்புகிறேன்.

தற்போது வெளியே செல்ல இருப்பதால், நேரம் கிடைக்கும்போது விரிவாக பதில் எழுதுகிறேன்.

அதே நேரம் உங்கள் பௌதிக ஆசிரியர்களிடமும் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பௌதிக மாணவன் என்பதை அறிந்தது மகிழ்ச்சி.

http://www.youtube.com/watch?v=KIdqrtbtGIk

http://www.worsleyschool.net/science/files/emc2/emc2.html

Edited by ஜீவா

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

அப்ப சூரியன் கிரகமோ...?? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.