Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்

Featured Replies

சரத் பொன்சேகா சற்று நேரத்தின் முன் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.....

Former Army Chief General Sarath Fonseka Was arrested a short while ago .........MP Mano Ganeshan Dilly morror

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், கடந்த சனாதிபதித் தேர்தலில் சனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியவருமான சரத் பொன்சேகா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெயிலி மிரர் மற்றும் பிபிசி என்பன செய்தி வெளியிட்டுள்ளன. இவருடன் சேர்ந்து இவரது ஊடகப் பேச்சாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். இவரது கைதை இராணுவப் பேச்சாளரும் உறுதி செய்துள்ளார்

டெயிலி மிரர் செய்தி:

Former army Chief and opposition Presidential candidate General Sarath Fonseka and his media secretary Senaka de Silva were arrested by the military police a short while ago, opposition Member of Parliament Mano Ganeshan told Daily Mirror online.

Military spokesman Major Prasad Samarasingha confirmed that the General has been arrested from his office in Colombo.

டெயிலி மிரர்

S Lanka election loser arrested

The defeated candidate in Sri Lanka's presidential election, Gen Sarath Fonseka, has been arrested, news reports have said.

Gen Fonseka was defeated by incumbent Mahinda Rajapaksa last month by six million votes to four million.

Gen Fonseka rejected the results and vowed to challenge them in court.

The government has been seeking legal advice to bring a court martial against the general on charges of plotting to overthrow the administration.

BBC

நல்ல செய்தி :lol:

வாழ்க ஜனநாயகம்!

பார்க்கலாம் ஜனநாயகத்தின் விளையாட்டுக்களை.

அமெரிக்க பிரஜையாக்கும் . அவையள் வேற உன்னிப்பா கவனிக்கினமாக்கும். ஜெனிவாவிலிருந்து திரும்பியதும் வெளிய வந்து விடுவார்.

சரத் பொன்சேகா திடீர் கைது

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும்இ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்றுஇ திங்கட்கிழமை இரவுஇ கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவப் போலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச்சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று ராணுவத்துக்காகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார்.

கைது செய்யப்பட்ட போதுஇ சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

சரத் பொன்சேகா மிகவும் மோசமானஇ அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் கூறினார்.

ராணுவப்போலிசார் இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் இ திங்கட்கிழமைஇ

ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போதுஇ தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

"எனக்கு தெரிந்ததுஇ நான் கேள்விப்பட்டதுஇ எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை"இ

என்று தெரிவித்தார் ஜெனரல் சரத் ஃபொன்சேகா.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு போர் குற்றங்களை செய்தன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்இ அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

பீபீசீ தமிழோசை

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழர்களோடை யார் எல்லாம் சேருகிறார்களோ அவர்களுக்கு சனி ஒட்டிக்கொள்ளுது...

தமிழர்களோடை யார் எல்லாம் சேருகிறார்களோ அவர்களுக்கு சனி ஒட்டிக்கொள்ளுது...

மகிந்தவுடனும் கூட்டுச் சேரப் போகினம் எண்டு சிங்கள ஊடகம் சொல்லியிருக்காம். :lol::unsure:

தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டார் பொன்சேகா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ராணுவத்தினரால் தர தரவென இழுத்து செல்லப்பட்ட பொன்சேகாவை ரகசிய இடத்தில் வைத்து ராணுவ போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=26396

மகிந்தவுடனும் கூட்டுச் சேரப் போகினம் எண்டு சிங்கள ஊடகம் சொல்லியிருக்காம். :D:D

விதி வலியது... :D

கைது செய்யப்பட்ட போதுஇ சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

சரத் பொன்சேகா மிகவும் மோசமானஇ அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் கூறினார்.

தயா, on 09 February 2010 - 08:22 AM, said:

தமிழர்களோடை யார் எல்லாம் சேருகிறார்களோ அவர்களுக்கு சனி ஒட்டிக்கொள்ளுது...

மகிந்தவுடனும் கூட்டுச் சேரப் போகினம் எண்டு சிங்கள ஊடகம் சொல்லியிருக்காம். :D:D

அவைக்கு ஏழரைச்சனி விலகுதாக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சந்தோசம் கொழும்பு அரசியல் குழம்புவது நல்லது.

பக்கத்து வீட்டு பெரியவைக்கு தலையிடியாத்தான் இருக்கும். நடப்பவை நல்லதுக்கே

பக்கத்து வீட்டு பெரியவைக்கு தலையிடியாத்தான் இருக்கும். நடப்பவை நல்லதுக்கே

ஐயோ தம்பி ! உதெல்லாம் அவையளுக்குத் தலையிடியில்ல. பெரிய சந்தோஷமாகத்தான் எடுத்துக் கொள்ளுவினம். இவன விழுத்தினா அவன் வருவான் . அவன விழுத்தினா இவன் வருவான் எண்டு அவையளுக்குத் தெரியும். ரணிலுக்கு சிலவேளை தலையிடியாயிருக்கலாம். :D

அப்ப ஏன் ரணில் இந்தியாவுக்கு ஓடினவர். விடயம் இருக்குமோ?

குற்றம் நிரூபிக்கபட்டால் இந்தியாவும் தனது பங்கை வாங்க நேரிடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் மாதிரி சரத் பொன்சேகா, கொல்கிறார்கள், கொல்கிறார்கள் என்று கத்தி நாடகம் போடவில்லை.

வெறும் வெத்துவேட்டாக இருந்தது இப்பாத்தான் அக்சன் தொடங்கி இருக்கு...

கிளைமாக்ஸ் எப்படி இருக்குமோ?

ஒரு வேற்று நாட்டு நண்பன் தானுடைய நாட்டின் இராணுவத்தில் இருந்து விட்டு இப்போது விலகி என்னுடன் வேலைசெய்கிறான் அவன் சொல்வான் "அரசில இராணுவ சதுரங்கம் ஒரு ஊத்தை விளையாட்டென்று"

இதன் பொருளை நாம் நன்கறிவேமேன்று அவனுக்குத் தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்த சரத் கைது செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

1827366207fon2.gif

குடும்பமா கூட்டத்தோட எப்ப கவிழுமோ? யார் கவிழ்க்கப் போகினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தன்வினை தன்னைச்சுடும்.

வலி என்றால் என்ன என்பதை இப்போது சரத்திடமும் ஓரளவு கேட்டறிந்து கொள்ளலாமோ?

ஹக்கீமுக்கு தர தர என பொன்சேகா இழுத்து செல்லப்பட்டது அருவருக்குது..

மற்றைய தேர்தல் கூட்டணியின் தலைவர்களின் கருத்துக்களையும் அவசியம் யாராவது கேட்டு பிரசுரித்தால் நன்றாயிருக்கும்,மறக்காமல் சம்பந்தரிடமும் கேட்டுதான் பார்த்து விட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை சரத்பொன்சேகா புலிகளுக்கு தகவல் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்படக்கூடும்.

அதற்கு சாட்சியாக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த ஒரு குருடன் சாட்சியாகவரக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.