Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ்

கனடாவில் உள்ள ஈழத் தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் சுமார் 300,000 ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்பினர் கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போது, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

எனினும், அதற்கான அறிகுறிகள் எவையும் இதுவரையில் தெரியவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

த ஹிந்துஸ்தான் டைம்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில ஈழத்தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்று செய்தி வெளியிடும் கிந்துஸ்தான் பத்திரிகை, அவுஸ்திரெலியாவில் வட இந்திய வன்முறையாளர்களினால் கொல்லப்பட்ட இந்தியர்களை( தங்களுக்குள் தாக்கி அழிபட்ட) அவுஸ்திரெலியர்களினால் தான் கொல்லப்பட்டார்கள் என்று பொய்யான செய்தி வெளியிட்டது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா!

எப்படியெல்லாம் கதைகளை உருவாக்கி, புலம்பெயர்ந்த நாடுகளிலையும் எங்கடை நிம்மதியை குழப்ப முயற்சிக்கிறாங்களா? அப்படியென்றால் தமிழினமே வன்செயல் இனம் என்றே தீர்மானித்து விட்டீர்களா? இந்தப்பாவம் உங்களை சும்மா விடாதடா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தமிழர்களின் அமைதியைக்குலைக்க இந்தியாவின் ப+ச்சாண்டி விளையாட்டு.

தமிழர்கள் மிகவும் கவனம். இற்கு என்ன தமிழர்கள் பொற்கோவில் கட்டி அதற்குள் குடி இருக்கின்றார்களா?

அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? 70,000க்கும் மெற்பட்ட தமிழர்களை இந்தியா கொன்ற பொழுதும் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத்தினைத்தான் நடத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். சிலவேளை பணத்தைக்காட்டி சில தமிழர்களை விலைக்கு வாங்கி ஒரு குழப்பத்தை உண்டுபண்ண இந்தியா யோசித்து இருக்கலாம். சிங்களவர்கள் தாங்களே விகாரைக்கும், உணவகத்திற்கும் நெருபபு வைத்து தமிழர்கள் மீத பழிபோட்டதும் எல்லோருக்கும் நினைவிருக்கும். அதையே இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் பெரிதாக ஊதிக்காட்டியதும், தமிழர்களின் போராட்டங்களை மழுப்பிக்காட்டியதும் இவர்களது ஒருபக்க சார்பான நிலைப்பாட்டினை அப்பட்டமாகப்படம்பிடித்துக் காட்டிஇருக்கின்றது. வல்லவன் கையில் பம்பரம் இருக்கும்போது நீதிக்கும் நியாயத்திற்கும் இடம் ஏது? தமிழர்கள் ஒற்றுமையாகலும் கவனமாகவும் இருந்தால் இந்தச்சதிகளை முறியடிக்கமுடியும்.

இது இந்திய ஹிந்தி , சிங்கள பெளத்தர்களின் சித்து விளையாட்டு.

பாகம் ஒன்று இன்னமும் வரும்.

வட இந்தியனுக்கு தமிழனை காட்ட கூடாது. இங்கு

link

இங்கு கருத்துரைப்போர் அங்கும் நாலு கேள்விகள் கேட்கமுடியும்

இந்துஸ்தான் டைம்ஸ்

Edited by சுனாமி

இது இந்திய ஹிந்தி , சிங்கள பெளத்தர்களின் சித்து விளையாட்டு.

பாகம் ஒன்று இன்னமும் வரும்.

இப்பிடிச் சொல்லிச்சொல்லியே திரிவம்.. அவங்கள் சுத்தி புரிவைச்சு மாட்டினாப்பிறகு வீதியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்து அவன் சொன்னதை உறுதிப்படுத்துவம்.

என்றைக்குமே ஏதும் நடக்கமுன்னம் உசாராக இருக்கவேண்டும்... கடந்தகால அனுபவத்தில் இருந்து பாடம் கற்கவேண்டும்.. இப்பிடித்தான் புலிகள் மீது மெல்ல மெல்ல அழுத்தம் போட்டு தமது காரியத்தை சாதித்தார்கள்.

இப்போது புலத்தில் உள்ள மக்களின் எழுச்சிக்கு அலுவல் பாக்கிறார்கள் போலகிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிய விளையாட்டுக்கள் இந்தியாவில் தொடரும் என தகவல் அறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. :lol::D

வன்முறையை தூண்டும் இந்த ஹிந்தி இந்திய பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா?

இந்தியா எப்போதும் இலங்கையை தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கு தமிழர்களை காட்டி சிங்களத்தை அச்சுறுத்துகின்றது. புலிகள் பலமாக இருக்கும் வரை புலிகளை காரணம்காட்டி இலங்கைக்குள் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது இலங்கைக்குள் மூக்கை நுழைக்க புதுப்புது வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றுதான் இந்த புலம்பெயர் தமிழர்களை சுட்டிக்காட்டி அச்சுறுத்துவது. என்னும் டில்லியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அலுவலகம் திறப்பது. ஒருலட்சம் அளவிலான அகதிகளை தமிழகத்தில் வைத்திருப்பதற்காகவே அவர்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அகதிகளை காரணம் காட்டி பிரச்சனை கொடுப்போம் என்ற அச்சுறுத்தல் தான் இதன் பின்னணியில் இருக்கின்றது.

எம்மைப்பொறுத்தவரை சிங்களவன் எதிரி அதைவிட மோசமான எதிரி இந்தியா. மோசமான எதிரியை எதிர்கொள்ளவேண்டும் என்றால் சிங்கள எதிரியுடன் தற்காலிகமாக இணையவேண்டும். தமிழர் சிங்களவர் என்ற முரண்பாட்டை கடந்து இலங்கையர்களாக இருக்கும் போது மட்டுமே எம்மை தமது சுயநலத்திற்காக இந்தியா பயன்படுத்த வாய்பில்லாமல் போகும். எமது பலவீனமான தேசியவாத எழுச்சிகள் இந்தியாவின் மூக்கு நுழைப்பிற்கு சாதகமாகவே அமைகின்றது. இதற்கு வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு முனைவுகள் நாடுகடந்த அரசு அமைக்கும் முனைவுகள் போன்றனவும் விதிவிலக்கில்லை. மேற்கு நாடுகளில் நாம் எடுக்கும் இவ்வாறான முனைவுகளுக்கு மேற்கு நாடுகள் சார்ந்த இந்தியாவை வைத்தே சமாளிக்க முடியும் என்ற நிலைக்குள் இலங்கை வரும். இதைப் பயன்படுத்தி இந்தியா எப்போதும் இலங்கைக்குள் ஆதிக்கம் செலுத்தும். நாம் வழமைபோல் விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாகவே இந்தியா என்ற நாசகார நயவஞ்சக நெருப்பில் வீழ்ந்து மடிந்துகொண்டிருப்போம்.

குறிப்பிட்டளவு காலத்திற்கு எம்மைப் பயன்படுத்த இந்தியாவுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதபடி எமது தேசியவாதத்தையும் எமது இருப்பையும் தக்கவைக்க முடிந்தால் நாம் ஒரு நாள் விடுதலை பெறுவோம்.

எமக்குள் இருந்த இருக்கின்ற அனைத்து முரண்பாட்டு இடைவெளிக்குள்ளும் இந்தியா தனது நயவஞ்சக விழையாட்டை காட்டியே வருகின்றது. தனிமனிதன் தொடக்கம் சாதி மதம் பிரதேசவாதம் அனைத்திலும் தலையிட்டு எம்மை சீர்குலைக்கின்றது. இதனால் நாம் உருத்தெரியாமல் சிதைந்து போகின்றோம். இதில் முதல் குற்றவாளி நாங்களே. இந்தியா பயன்படுத்த ஏதுவாக சந்தர்ப்பத்தை கொடுகின்றோம். இதை தடுக்கின்ற அதே நேரம் இந்திய தேசிய இனங்களுக்குள் விரோதத்தை வளர்ப்பதில் நாம் முடிந்தளவு ஈடுபட வேண்டும்.

vada இந்தியனின் அடுத்த இன அழிப்பு கனடா தமிழர்களை நோக்கி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியை எந்த பாதுகாப்புத் தெரிவித்தனர் என்பதை ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெளிவாக்கியிருக்க வேண்மே நமக்கு தெரிந்து கனடாவில் எந்த பாதுகாப்பு பிரிவும் அப்பிடி அறிக்கை வெளியிட்டதாய் இல்லை. அப்படியோ குறிப்பிட்ட இனக்குழுமத்தை நோக்கி இப்பிடி குற்றசாட்டுக்களை முன்வைக்கவும் முடியாதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடி ஒண்டும் கனடா அரசாங்கம் பயப்படவில்லை. இது சும்மா இந்திய பார்சி பத்திரிக்கை புரளி கிழப்பி இருக்கிறது. ஒரு கண்ணாடி உடைஞ்சால் வன்முறைஎண்டால் 20000 மக்களை ஒரு இரவில் கொல்வதை என்ன என்பது?

கனடா அரசாங்கம், தங்களது அமைச்சர்களை கொழும்பிற்கு அழைத்து பின் நாட்டை விட்டு கடத்திய போதே எதிர்ப்பு நிலையை எடுத்துவிட்டது. மற்றும் கனடிய எம்பசியை சிங்கள காடையர்கள் அடித்து நொறுக்கியதும் இன்னொரு காரணம். மற்றும் கனடாவில் வாழும் 300000 தமிழரும் கனடிய பிரஜைகள். அவர்கள் இப்போது அங்கு அரசியலில் கலக்கி வருகிறார்கள்.

உண்மையில், மேற்கு உலகில் கடந்த ஏழு மாதங்களாக தமிழர் அழுத்தத்தால் ஸ்ரீ லங்காவிற்கு எதிரான நிலைப்பாடு வலுத்துவிட்டது. ஸ்ரீ லங்காவும் சீனா, இரான், ரசியா, பர்மாவுடன் ஒட்டி உறவாடுவதும் வலுத்துவிட்டது. அதனால், கையாலாகாத இந்திய ஸ்ரீ பார்சி கொங்கிரஸ் சும்மா இலாதாதை கிழப்பி தமிழரை குழப்ப நினைக்கிறார்கள்.

இந்த அரத பழைய அரசியல் யுக்திகளை தெற்காசிய ஆடுகளுடன் வைத்திருகட்டும், மேற்கு தமிழ் கழுகுகளுக்கு எல்லாம் இது சும்மா யுயுபி!

தமிழ் ஈழம் சம்பந்தப்பட்ட விடயத்தில் பிச்சைக்கார இந்தியா மூக்கை நுழைக்காமல் குந்தியிருப்பதே நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சார்பான அமைப்புக்கள் இது சம்பந்தமாக, இது சம்பந்தப்பட்ட தரப்பை அணுகி தகுந்த செயலில் காலம் தாழ்த்தாது இறங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடை இந்தியன் வேலை இது,தன்னுடைய நாட்டில் பாகிஸ்தானி என்ன செய்தாலும் இவன்களுக்கு சோடு சொரனை கிடையாது.எங்கலுடன் உரசுவதுதான் இவங்கல் வேலை.ஏனெனில் எமது தலை எழுத்து அப்படியாகிவிட்டது.இதில் இருந்து நிமிர்வோமென்றால் எம்மிடயெ ஒற்றுமையே கிடையாதே.......

  • கருத்துக்கள உறவுகள்

வடை இந்தியன் வேலை இது,தன்னுடைய நாட்டில் பாகிஸ்தானி என்ன செய்தாலும் இவன்களுக்கு சோடு சொரனை கிடையாது.எங்கலுடன் உரசுவதுதான் இவங்கல் வேலை.ஏனெனில் எமது தலை எழுத்து அப்படியாகிவிட்டது.இதில் இருந்து நிமிர்வோமென்றால் எம்மிடயெ ஒற்றுமையே கிடையாதே.......

இவங்களே செய்து விட்டு பாகிஸ்தானி மீது பழி போட்டாலும் போடுவாங்கள். யாரை நம்பினாலும் ..... நம்பக்கூடாது.

கருணா பிரிய முயற்சி செய்த காலத்தில், அதை தூண்டி உசுப்பேத்திவிட்டவர்களில் ஒருவர் ஹிந்துஸ்தான் பத்திரிகையின் இலங்கை நிருபராக நீண்டகாலம் கடமையாற்றிய மலையாளி PK பாலச்சந்திரன். இவர் நிருபர் என்ற பெயரில் இயங்கிவந்த இந்திய பயங்கரவாதிகளின் முகவர் என்ற விடயம் தெரியவர 2007 இல் தப்பி ஓடிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப்பொறுத்தவரை சிங்களவன் எதிரி அதைவிட மோசமான எதிரி இந்தியா. மோசமான எதிரியை எதிர்கொள்ளவேண்டும் என்றால் சிங்கள எதிரியுடன் தற்காலிகமாக இணையவேண்டும். தமிழர் சிங்களவர் என்ற முரண்பாட்டை கடந்து இலங்கையர்களாக இருக்கும் போது மட்டுமே எம்மை தமது சுயநலத்திற்காக இந்தியா பயன்படுத்த வாய்பில்லாமல் போகும். எமது பலவீனமான தேசியவாத எழுச்சிகள் இந்தியாவின் மூக்கு நுழைப்பிற்கு சாதகமாகவே அமைகின்றது. இதற்கு வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு முனைவுகள் நாடுகடந்த அரசு அமைக்கும் முனைவுகள் போன்றனவும் விதிவிலக்கில்லை. மேற்கு நாடுகளில் நாம் எடுக்கும் இவ்வாறான முனைவுகளுக்கு மேற்கு நாடுகள் சார்ந்த இந்தியாவை வைத்தே சமாளிக்க முடியும் என்ற நிலைக்குள் இலங்கை வரும். இதைப் பயன்படுத்தி இந்தியா எப்போதும் இலங்கைக்குள் ஆதிக்கம் செலுத்தும். நாம் வழமைபோல் விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாகவே இந்தியா என்ற நாசகார நயவஞ்சக நெருப்பில் வீழ்ந்து மடிந்துகொண்டிருப்போம்.

ஒரு உதாரனத்துக்கு நாங்கள் ஒற்றை ஆட்ச்சிக்குள் சிங்களவருடன் சமாமானமாக வாழ நினைத்தாலோ அல்லது சிங்களவன் எமக்கு தனி நாடோ அன்றி அதி உச்ச அதிகாரங்களுடன் கூடிய சுயாட்ச்சி தர நினைத்தாலோ உந்த இந்தியன் விட மாட்டான்.இலங்கையில் அமைதியோ பொருளாதார வளர்ச்சியோ வருவதை இந்தியா விரும்பப் போவதில்லை.இதை சிங்களவனும் உணர வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டுத்தமிழன் வன்முறையில் ஈடுபடுவான் என்ற பயம் வடக்கத்திநாட்டாமைகளுக்கு கொஞ்சம்கூட இல்லை.ஏனென்றால் திரைப்படமும்,கருணாநிதியும் இருக்கும்வரைக்கும் இந்தப்பயம் இல்லை.இப்ப கனடாவைப் பயமுறுத்தும் செய்திகளை விட்டு குளிர்காயநினைக்கினம்.

பம்பாய்குண்டுவெடிப்பின் முக்கியமானஆள் இப்ராகிம்தாவுத் இன்னமும் கராச்சியில்தான் இருக்கிறான்.அவனுடைய தலைமுடியைக்கூட தொடமுடியாத இந்தியா ஈழத்தமிழர்களை தொடர்ந்து குழிபறிப்பது கேவலம்.

இந்த செய்தியை எந்த பாதுகாப்புத் தெரிவித்தனர் என்பதை ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெளிவாக்கியிருக்க வேண்மே நமக்கு தெரிந்து கனடாவில் எந்த பாதுகாப்பு பிரிவும் அப்பிடி அறிக்கை வெளியிட்டதாய் இல்லை. அப்படியோ குறிப்பிட்ட இனக்குழுமத்தை நோக்கி இப்பிடி குற்றசாட்டுக்களை முன்வைக்கவும் முடியாதே!

இந்துஸ்தான் ரைம்ஸ் மட்டுமல்ல, கனடா பத்திரிகையான நசனல் போஸ்ட்டும் இப்படி தான் சொல்கிறது.

Tamil Tiger defeat could lead to bombings here, report says

http://www.nationalpost.com/story.html?id=2608595

The report examines the state of the Tamil diaspora almost a year after the end of the brutal Sri Lankan civil war, which routed the Tamil Tigers rebels who had been fighting for independence.

Canada has the world's largest Tamil diaspora and was a major Tiger fundraising base. Several Canadians were also involved in procuring arms for the rebels.

The report says the defeat of the rebels has left the diaspora feeling "powerless, betrayed by the West, demanding justice and, in some cases, wanting revenge."

An unnamed Canadian security official was quoted in the report saying that, "Because of what we learned from Canada's connection with Khalistan we're compelled to look at issues concerning the Tamil Tigers here differently.

Edited by KULAKADDAN

இந்துஸ்தான் ரைம்ஸ் மட்டுமல்ல, கனடா பத்திரிகையான நசனல் போஸ்ட்டும் இப்படி தான் சொல்கிறது.

இந்திய ஓநாய்களின் ஊடுருவல் பல இடங்களில் உண்டு என தெரிகிறது. கனடா தமிழர் வட இந்திய ஓநாய்களை ஓரம் கட்டுவது நல்லது.

கனடியர் தமது மாற்று கருத்துக்களை ஆங்கில பத்திரிகைகளிலும் தாராளமாக, அடிக்கடி வெளிப்படையாக வைத்து - வட இந்திய (ஹிந்தி) ஓநாய்களின் சதிகளை முறியடிக்கவேண்டும்.

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.