Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம்

நல்ல முன்னேற்றம்

தொடர வாழ்த்துக்கள்

யாழ். களத்தில் இப்படியும் ஒருத்தர் இருக்கின்றாரே என்ற கவலை கொஞ்சம் கொஞ்சமா எனக்கு நீங்குகிறது.....

  • Replies 99
  • Views 25.6k
  • Created
  • Last Reply

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

நடிகை ரஞ்சிதாவின் உல்லாசலீலைகள்:வீடியோ

பிரபலசாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும்வீடியோ காட்சி வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பையும் இந்துஅமைப்பினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சாமியாரின் முகத்திரையை கிழிக்கும் இந்த வீடியோ

http://www.youtube.com/watch?v=GTaKRNKLg_E

நக்கீரணும் தன்னுடைய கடமையை செய்திருக்கு.:D

Edited by r.raja

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், போலி சாமியார்கள். ...

இன்று ஜூனியர் விகடனில் கல்கி பகவான் எனும் இன்னொரு கள்வரினது லீலைகளும், சாய்பாபாவினது முக்கிய சீடரின் பாலியல் தொழில் சம்பந்தமாகவும் இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன

இன்று ஜூனியர் விகடனில் கல்கி பகவான் எனும் இன்னொரு கள்வரினது லீலைகளும், சாய்பாபாவினது முக்கிய சீடரின் பாலியல் தொழில் சம்பந்தமாகவும் இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன

அந்த பாபாவின் பிரதான தொழிலே விபச்சார விடுதி நடத்துவதென்றால்.இவர்களை என்ன செய்வது.

போலித்தனங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. பூசி மெழுகுவது இனத்துக்கு நல்லதல்ல.

இலங்கையிலும் பல போலி இந்திய-சாமியார்கள் (இந்து, கிறிஸ்தவ, பௌத்த) உள்ளார்கள். இவர்களை இலகுவாக கண்டுபிடிக்கலாம். பெண்களுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவதில், பெண்கள் பிரியர்களாக இருப்பதில், ஊரை ஏமாற்ற ஓரிரு அப்பாவி ஆண்களை இணைத்துக்கொண்டு பெண்களுடன் சுத்துவதில், ...... இவர்கள் கில்லாடிகள்.

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு சில இந்திய இந்து சாமியார்கள் வந்து போனார்களாம். இலங்கை மக்களின் கடவுள் பக்தியை, சமய நம்பிக்கைகளை தவறாக பயன்படுத்தும் நோக்கிலேயே இவர்கள் இலங்கை வருவதாக தெரிகிறது.

இதில் இந்து மட்டுமல்ல, பௌத்த துறவிகளும், கிறிஸ்தவ பாதிரிகளும் அடக்கம்.

இவர்களில் சிலர் இந்திய பயங்கரவாதிகளின் கையாட்களாகவும் செயல்படுகின்றனர். வட இந்தியர்களுடன் அதிகமாக திரியும் மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் தமிழரல்லாத இந்து சாமியார்களும், வன்னியில் சரணடைதல் நாடகத்தில் சம்பந்தப்பட்ட சில கிறிஸ்தவ பாதிரிகளும் இதில் அடங்குவர்.

தாம் எடுத்த துறவை காக்கும் ஒருசில நல்லவர்களும் சகல மதங்களிலும் உள்ளனர். போலிகளால் அவர்கள் பாடும் பரிதாபம் தான்.

கல்கி பகவான் அடுத்த ஏமாற்றுப் பேர்வழி. மகா போலி.

எனக்கு தெரிய புத்தளம் பகுதியில் இருந்து ஒரு சிலர் (பெண்கள் உட்பட) கல்கி பகவான் கூட்டத்தினரால் கவரப்பட்டு, இந்தியா சென்று, சில மாதங்களை வீணாக்கி, தமது வேலைகளை இழந்து, படிப்பை இழந்து, ஈற்றில் கல்கி பகவான் ஒரு போலி பகவான் என்றுணர்ந்து திரும்பி வந்துள்ளனர்.

சில கிறிஸ்தவ மதமாற்ற வெறியர்கள் செய்வதைப்போலவே, கல்கி பகவான் கூட்டத்தினர் செய்யும் இன்னுமொரு கொடுமை, பாடசாலை இளம் மாணவர்களை (3 - 7 வகுப்புக்கள்) மூளைச்சலவை செய்வது.

இந்த வெறியர் பிடியில் இருந்து மக்கள், மாணவர்கள் தப்பவேண்டும்.

எந்த அடிப்படை தகுதிகளும் இல்லாமல் படித்தவர் படியாதவர் என்ற பாகுபாடின்றி ஏமாற்றி பிழைக்கும் தொழில்கள் இரண்டு உள்ளன.

1. சாமியார்

2. அரசியல்வாதி

இரண்டுமே ஆசாமிகள் தான். மக்களின் அறிவுக் கண்கள் திறந்தாலன்றி இவர்களின் திருவிளையாடல்கள் நிற்கப்போவதில்லை. :D:lol:

கல்வி பகவானின் மனைவியா அம்மா பகவான்? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் மெளனமாக இருப்பவர்கள் தலை சுக்குநூறாக போகுமாறு ரஞ்சித தெய்வத்தை கேட்டுக் கொள்கின்றேன்

கல்வி பகவானின் மனைவியா அம்மா பகவான்? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் மெளனமாக இருப்பவர்கள் தலை சுக்குநூறாக போகுமாறு ரஞ்சித தெய்வத்தை கேட்டுக் கொள்கின்றேன்

கல்கி பகவானும் அம்மா பகவானும் ஒண்டோ இல்லையோ எனக்கு தெரியா, ஆனால் தொலைக்கட்சிகள் போட்டி போட்டு கொண்டு சாமியார்களை சந்திக்கு இழுக்கிறன.

இது கல்கி பாகவான் பற்றிய வீடியோ தொகுப்பு

http://velichathil.wordpress.com/2010/03/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF/

அது கிடக்க நெடுக்கால போவான் சொல்லுற மாதிரி, அவர் சாமியார் எண்டதை தவிர, அவரும் நடிகையோ அல்லது எந்த பெண்ணுமோ, சொந்த விருப்பத்தின் தனிமையில்/ படுக்கையில் இருப்பதை படம் எடுத்து ஒளிபரப்புவது அவர்களின் உரிமையை மீறும் செயல். இந்த சாமியார், சன் ரீவிக்கு எதிரா மனித உரிமை, மான நஸ்ட வழக்கு போட்டு சன் ரீவியை நீதி மன்றத்துக்கு இழுத்தா எனக்கு சந்தோசம்.

Edited by KULAKADDAN

அது கிடக்க நெடுக்கால போவான் சொல்லுற மாதிரி, அவர் சாமியார் எண்டதை தவிர, அவரும் நடிகையோ அல்லது எந்த பெண்ணுமோ, சொந்த விருப்பத்தின் தனிமையில்/ படுக்கையில் இருப்பதை படம் எடுத்து ஒளிபரப்புவது அவர்களின் உரிமையை மீறும் செயல். இந்த சாமியார், சன் ரீவிக்கு எதிரா மனித உரிமை, மான நஸ்ட வழக்கு போட்டு சன் ரீவியை நீதி மன்றத்துக்கு இழுத்தா எனக்கு சந்தோசம்.

இதனை நானும் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

..ஆனால், சன்நியாசம், துறவறம், தூய்மைவாதம் என்ற போலித்தனங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி பிழைக்கும் இவர்களின் உண்மையான முகங்களை மக்கள் காணச் செய்வதும் முக்கியமானது. உதவி தேவைப்படும் எவருக்கும் ஐந்து சதம் ஈயாத எம் மக்கள் இந்த போலிப்பூசாரிகளை நம்பி காசை இறைக்கும் தம் முட்டாள்தனங்களை நினைத்து தம்மைத் தாமே நொந்து கொள்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கு

Edited by நிழலி

இவர் போனவருடம் கனடாவுக்கும் வந்தவர். கெனடியில் அமைந்திருக்கும் மண்டபத்தில் தியான வகுப்பு நடத்தி, எங்கள் ஆட்களின் பணத்தையும் கொஞ்சம் சுருட்டிக் கொண்டு போனவர். இவரின் சிஸ்ய, சிஸ்யைகளாக எங்கள் ஆட்கள் கொஞ்சப் பேரும் இருக்கிறார்கள். இவரை நம்பி கணவர், மனைவிமாரைப் பிரிந்து அங்கு சென்றவர்களும் உண்டு.

ஆஆஆஆஆஆஆஆஆ.............. கொடுத்து வச்சவனடாப்பா உந்த சாமியார், ம்ம்ம்ம்ம்.....

பலருக்கும் தமது இயலாமையை, பலவீனத்தை, முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதற்கு நல்லதொரு கிழங்கு மாட்டியிருக்கு. நீங்கள்தான் சாமி என்று மரியாதை கொடுத்து சால்வை போர்த்தி விட்டீங்கள், மேடையில ஏற்றிவிட்டீங்கள். பிறகு நீங்கள்தான் அவருக்கும் மற்ற ஆக்கள் மாதிரி கக்கூசுக்கு போகிது என்று சொல்லி தூற்றுகிறீங்கள். ஆக மொத்தத்தில மனிசனை மனுசன் மனுசனாக இனம் காணத்தெரியாவிட்டால் இப்பிடித்தான்.. :D

எனக்கு அவர் செய்த எதுவும் தப்பா தோணல அவரை ஒரு சாதாரண மனிதராகத் தான் பார்க்கிறன்.பெற்ற தாய் தந்தையைத்தவிர மற்ற யாரும் சாமியாகப்பார்த்ததில்லை . சாதரணமனிதனுக்கு இயல்பாக இருக்க கூடிய உணர்வு தான் இது.முட்டாள் சனம் அவரை சாமியாக்கி உயரத்தில வைத்து பார்கிறது பிறகு அவர் அப்படி பண்ணிட்டாரே என்று கோபப்படுரதில எந்த அர்த்தமும் இல்ல.அவர் யாரையாவது கட்டாயப்படுத்தி ஏதாவது செய்தால் தப்பு சொல்லலாம் .ஆனா ஒரு பெண் விரும்பி போகும் போது அவரை தப்பு சொல்ல எதுவும் இல்லை. ஒருவருடைய தனிப்பட்ட படுக்கையறையில் நடந்ததை வீடியோ எடுத்து போட்ட மனநோயாளியின் மனநிலையை என்னவென்று சொல்ல :D

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சின்னச் சாமியாரின்ர லீலைகலை சீன் போடுக் காட்டுறீங்கள். ஆனால், அங்கே ஒருத்தன், உலக மகா கள்ளன், புட்டபத்தியில நாந்தான் கடவுள் அவதாரம் என்டு உலகத்தையே ஏமாத்திக்கொண்டு பெண்டுகள், சிறுவர்கள், வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் என்று வேறுபாடு இல்லாமல் காம வெறியாட்டம் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் போய் ஒரு படம் எடுக்க வக்கில்லை, காஞ்ச மாடு கம்பில விழுந்த ரேஞ்சில நித்தியானந்தத்தின்ர விளையாட்டை எழுதித் தள்ளுறீங்கள்.

முடிந்தால் அந்த உலக மகா கள்ளன் பற்றியும் துப்புத் துலக்கி எழுதுங்கள், பிறகு மற்றச் சின்னக் கள்ளர் பற்றிப் பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக துணை முதல்வர் கலைஞரின் மகன் ஸ்டாலின் செய்யாத லீலைகளா?. கலைஞரின் மகனுக்கு ஒரு சட்டம். நித்தியானந்தாவுக்கு ஒரு சட்டம்.

நித்தியானந்தாவின் நிகழ்ச்சி ராஜ் தொலைக்காட்சி, சி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. சன் தொலைக்காட்சி மற்றைய தொலைக்காட்சியில் வேலை செய்பவர்களை முன்பு பலமுறை பழிவாங்கியிருக்கிறது. ராஜ் தொலைக்காட்சியில் ராஜகீதம் நிகழ்ச்சியை நடாத்திய அப்துல் கமித்தை, ராஜ் தொலைக்காட்சியை விட்டு சன் தொலைக்காட்சியில் மட்டும் நிகழ்ச்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் இருந்து தூக்கி விடுவேன் என்று அப்துல் கமித்தை நிர்ப்பந்தித்த சம்பவங்களும் நடந்து இருக்கிறது. இதனால் அப்துல் கமித் சன் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போகிறவர்கள் யார் என்ற நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடாத்தியவர்களை சன் தொலைக்காட்சிக்கு இழுத்து அசத்தப் போகிறவர்கள் யார் என்ற நிகழ்ச்சியையும் செய்யவைத்தவர்கள் சன் தொலைக்காட்சி. நித்தியானந்தம் செய்த லீலைகள் சன் தொலைக்காட்சிக்கு கிடைத்தவுடன் ஒளிபரப்புச் செய்யும் சன் தொலைக்காட்சி, ஒருவேளை நித்தியானந்தம் சன் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி வழங்கி இருந்தால் சன் தொலைக்காட்சியில் நித்தியானந்தனின் லீலைகள் வந்திருக்குமா?

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியில் கருத்தெழிதிய எல்லோருக்கும் எனது நன்றிகள்

இந்த சாமியாருக்கு நான் அடிமை யானது இல்லை.இவருடைய பக்தர்கள் இவருடைய படம் வைத்த பென்ரறை உருத்திராச்சம் மாலையில் போட்டு சட்டைக்கு வெளியில் தொங்க விட்ட படி திரிவார்கள்.தாங்கள் தான் இதற்கு அடிமையாகினம் என்று இல்லாமல் மற்றவர்களையும் கரைச்சல் பண்ணுகிறது."நீங்கள் ஒருக்கா வந்து சாமியை பாருங்கோ....."அங்கு போனால்.....

இவருடைய தனிப்பட்ட வாழ்கையை கதைப்பது தப்பு என்றாலும் தான் ஒரு சன்நியாசி என்று சொல்லி சனங்களை ஏமாற்ற கூடாது.எத்தனையோ குடும்பங்கள் தங்கள் பிள்ளைகள் கணவர்மார்களை விட்டு விட்டு காசையும் கொட்டி இவை தான் கடவுள் என்று திரிந்தவர்களுக்கும்'இனிமேல் ஏமாராமல் இருப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல பாடம்.

ஒருவருடைய தனிப்பட்ட படுக்கையறையில் நடந்ததை வீடியோ எடுத்து போட்ட மனநோயாளியின் மனநிலையை என்னவென்று சொல்ல :D

இது எல்லாம் ஓர் சாபக்கேடு. மற்றவனிண்ட சீலையை தூக்கிப்பார்த்து மகிழிற ஊடக தர்மத்தை என்னவென்று சொல்லிறது. தொலைக்காட்சிகளில சாமியார்களிண்ட நிகழ்ச்சிகளை காசு கொடுத்து விளம்பரம் செய்கின்றார்கள். இன்று பார்த்தன் அம்மா பகவானாம் என்று ஒருவரைப்பற்றி தொலைக்காட்சியில நிகழ்ச்சி போகிது. ஆயிரமாயிரம் சனங்கள் அவரை கொசுக்கள் மாதிரி சுத்தி வருவதாக காட்சிகள். அவரைப்பற்றி விதம்விதமான பாட்டுக்கள். நாளைக்கு இவரைப்பற்றியும் கக்கூசுக்கை எப்படி குந்தி இருக்கிறார் என்று படம்போட்டு காட்டி சிரிச்சு மகிழுற காணொளிகள் வந்தாலும் ஆச்சரியப்படுகிறதுக்கு இல்லை. ஏதாவது சட்டவிரோதமாக செய்தால் காவல்துறையில முறையிடலாம். அதைவிட்டுப்போட்டு சீலையை களவாக தூக்கிபார்க்கிற புத்திகள் எல்லாம் இந்த ஊடகங்களிண்ட குரூர புத்தியை காட்டி நிற்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன பிடிபட்டவுடன் சுவாமி என்று தலைப்பு, இவரின் பிராண்ட் நேம் "ஸ்ரீல ஸ்ரீ பரமஹம்ச" தலைப்பிற்கு என்ன ஆச்சு? இந்த பகவத் கீதையே ஒரு பார்சி போலி சமாசாரம். எல்லா காவி உடுத்து நடிக்கும் போலி சாமிகளும் சில்மிஷ கூட்டம் தான். கொஞ்ச நாளைக்கு முன்பு தான் டெல்கியில் ஒரு ஸ்ரீல ஸ்ரீ காவி குருஜி விபச்சாரம் செய்து பிடிபட்டான்.

Holy man 'runs Delhi vice ring'

Police in the Indian capital Delhi are investigating a popular Hindu "holy man" whom they accuse of running a prostitution ring from his temple.

Shiv Murat Dwivedi is accused of supplying prostitutes in the wealthy areas of south Delhi and the city's five-star hotels.

Police say he was arrested on Friday by undercover officers posing as clients.

Six women were arrested with him including, police say, an aspiring Bollywood actress and a BA air hostess.

A spokesman for British Airways said the company was investigating if one of those arrested was a current or former member of staff, but had no information yet.

The police say that Shiv Murat Dwivedi was arrested twice before in the 1990s before changing his appearance and identity, and re-emerging as a self-styled holy man.

He reportedly claimed a following of more than 100,000 people, including leading politicians.

Story from BBC NEWS:

http://news.bbc.co.uk/go/pr/fr/-/2/hi/south_asia/8543832.stm

Published: 2010/03/01 15:46:47 GMT

© BBC MMX

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தச் சின்னச் சாமியாரின்ர லீலைகலை சீன் போடுக் காட்டுறீங்கள். ஆனால், அங்கே ஒருத்தன், உலக மகா கள்ளன், புட்டபத்தியில நாந்தான் கடவுள் அவதாரம் என்டு உலகத்தையே ஏமாத்திக்கொண்டு பெண்டுகள், சிறுவர்கள், வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் என்று வேறுபாடு இல்லாமல் காம வெறியாட்டம் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் போய் ஒரு படம் எடுக்க வக்கில்லை, காஞ்ச மாடு கம்பில விழுந்த ரேஞ்சில நித்தியானந்தத்தின்ர விளையாட்டை எழுதித் தள்ளுறீங்கள்.

முடிந்தால் அந்த உலக மகா கள்ளன் பற்றியும் துப்புத் துலக்கி எழுதுங்கள், பிறகு மற்றச் சின்னக் கள்ளர் பற்றிப் பேசுவோம்.

சகோதரர் ரகுநாதன், அதுக்கு நாங்கள் ஒன்றும் ஆராய்ச்சி செய்யத்தேவையில்லை ஆங்கிலத்திலேயே செய்துவிட்டார்கள்.

நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பத் தடை கோரி வழக்கு

First Published : 04 Mar 2010 05:00:48 AM IST

Last Updated :

சென்னை, மார்ச் 3: சுவாமி நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புவதையும், செய்திகள் பிரசுரிப்பதையும் தடை செய்யக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் சுவாமி நித்யானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையிலுள்ள சிவில் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு விவரம்:

உலகம் முழுவதும் 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் எனக்கு உள்ளனர். ஏழைகளுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவி போன்ற பல்வேறு சேவைகளை அளித்து வருகிறேன்.

எனது ஆசிரமத்தில் பணிபுரிந்த பிரேமானந்தா (எ) லெனின் கருப்பன் என்பவர் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

இதில் எனது உருவம் "மார்ஃபிங்' முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகளை தொடர்ந்து வெளியிட்டால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும்.

எனவே, இந்தக் காட்சிகளை வெளியிடுவதற்கும்,

இதுதொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

சென்னை நகர 15}வது உதவி நீதிபதி மாணிக்கவாசகர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கை மார்ச் 8}ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=206344&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

நித்யானந்தாவை கைது செய்ய வலியுறுத்தல்: பெங்​க​ளூர் ஆசி​ர​மத்​துக்கு தீ வைப்பு

First Published : 04 Mar 2010 05:03:11 AM IST

Last Updated :

சென்னை, மார்ச் 3: திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சென்னை, கோவை போலீஸ் கமிஷனர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது இந்திய குற்றவியல் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 5 பேர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதே போன்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவர், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுவிடம் மனு அளித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு பொது மக்கள் புதன்கிழமை தீ வைத்தனர். திருவண்ணாமலை, புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமக் கிளைகள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி சூறையாடினர்.

ராஜபாளையத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா தலைமறைவாகியுள்ளார்.

திருவண்ணாமலையில் பிறந்தவரான நித்யானந்தா, தனது ஆன்மிகச் சொற்பொழிவுகளால் பிரபலமானார். திருவண்ணாமலை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலும் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில், திரைப்பட நடிகை ஒருவருடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் பாலியல் படக்காட்சிகள், தனியார் டிவி, மற்றும் பத்திரிகைகளில் வெளியானது.

இதையடுத்து, திருவண்ணாமலையில் இவரது ஆசிரமம் முன் செவ்வாய்க்கிழமை இரவில் கூடிய பொதுமக்கள் ரகளை மற்றும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நித்யானந்தாவின் அனைத்து ஆசிரமக் கிளைகள் முன்னரும் இந்து மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரது படம், உருவபொம்மை எரிப்பு, சூறையாடல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் புகார்: இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ரஜினி, ராம் சிவராமன், கயல், சிவபெருமாள், லிங்கன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவை புதன்கிழமை அளித்தனர்.

நித்யானந்தா தொடர்பான பாலியல் காட்சிகள் வெளியாகியுள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நித்யானந்தாவின் செயல்கள் தமிழ் கலாசாரத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளன.

கிரிமினல் நடவடிக்கை: ஆன்மிக உரைகள் மூலம் சாமியாராக வலம் வந்து பொதுமக்களை நித்யானந்தா ஏமாற்றி வந்துள்ளார். மேலும், மக்களை ஏமாற்றி சொத்துகளையும் அவர் சேர்த்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள பாலியல் படக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நித்யானந்தா மீது இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை ஏமாற்றி அவர் சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் தீ வைப்பு: பெங்களூரில் உள்ள சாமியாரின் நித்யானந்தாவின் ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த கூரையால் வேயப்பட்ட கட்டடத்துக்கு புதன்கிழமை பிற்பகல் சிலர் தீ வைத்து விட்டுத் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். வனத்துறை அதிகாரிகள் ஆசிரமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=206345&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%80%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

---------

சாமியாரின் வேஷம் வெளிச்சத்துக்குக் கொண்டு வர நடிகை எடுத்த முயற்சியா இருக்குமோ இந்த வீடியோ பதிவு என்றும் ஜோசிக்கத் தோனுகிறது...

பெரும் பாலான காட்சிகளில் நடிகை முதுகுப் புறம் காட்டப் படுகிறது.

இதுக்கு முன்னால இப்படி ஒரு சாமியார் இருக்கிறார் என்று நான் அறிந்ததில்லை... ஹஹா சாமி அசப்பில காக்க காக்க வில்லன் பாண்டியா மாதிரி இருக்கு...

நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பத் தடை கோரி வழக்கு

First Published : 04 Mar 2010 05:00:48 AM IST

Last Updated :

அது மிச்சமிருக்கும் நடிகைகளைக் காப்பாற்ற எடுக்கும் முயற்ச்சியுங்கோ.

உந்தச் சின்னச் சாமியாரின்ர லீலைகலை சீன் போடுக் காட்டுறீங்கள். ஆனால், அங்கே ஒருத்தன், உலக மகா கள்ளன், புட்டபத்தியில நாந்தான் கடவுள் அவதாரம் என்டு உலகத்தையே ஏமாத்திக்கொண்டு பெண்டுகள், சிறுவர்கள், வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் என்று வேறுபாடு இல்லாமல் காம வெறியாட்டம் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் போய் ஒரு படம் எடுக்க வக்கில்லை, காஞ்ச மாடு கம்பில விழுந்த ரேஞ்சில நித்தியானந்தத்தின்ர விளையாட்டை எழுதித் தள்ளுறீங்கள்.

முடிந்தால் அந்த உலக மகா கள்ளன் பற்றியும் துப்புத் துலக்கி எழுதுங்கள், பிறகு மற்றச் சின்னக் கள்ளர் பற்றிப் பேசுவோம்.

அவருக்குப் பின்னால் பெரும் அரசியல் சக்திகள் இருக்கின்றது.பாபாவை ஆட்டமுடியுமா என்ன.பெரும் கள்வருடன் பெரிய கள்ளன்கள்தான் சேர்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.