Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் பெரியார்தாசன்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

PERIYARDASAN.jpg

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

thatstamil.com

என்ன கொடுமை சரவணன் இது?

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வயதுபோன காலத்திலும் இவருக்கு சுன்னத்து கலியாணம் செய்யப்படுமா?

திராவிடத்தின் கொள்கைகள் வெறுத்துவிட்டதோ?

எவ்வளவு பணம் கிடைத்ததென்பதையும் சொல்லியிருக்கலாமே.

ஆச்சரியமாக உள்ளது :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

PERIYARDASAN.jpg

அசல் பரதேசி Train-dogs.jpg

ஓடுகாலி...... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் எம்மதத்துக்கு மாறுவதும் விழகுவதற்கும் உரிமையிருக்கிறது. ஆனால் அவர் மதம் மாறினாலும் தமிழ் உணர்வு உள்ளவர். தமிழ் நாட்டில் வாழும் இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்கள், ஈழத்தில் வாழும் இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களைவிட அதிக தமிழ் உணர்வுடன் பலர் இருக்கிறார்கள்.

இங்கே சிலர் ஓடுகாலி பரதேசி என்று திட்டுகின்றனர். நிர்வாகம் இதைக் கவனிக்காதோ? என்ன உரிமை இருக்கின்றது இவ்வாறு சொல்வதற்கு? விரும்பியவன் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் உரிமை அதில் விசனப்பட எமக்கென்ன உரிமை இருக்கின்றது? தமிழகத்தை சேர்ந்த ஒருவன் அங்கேயே இருந்துகொண்டு தன்விரும்பிய மதத்தை பின்பற்றுகின்றன் தாயகத்தை விட்டு ஓடிவந்த நாம் பரதேசிகள் என்பதன் சுயருபமாகவும் ஓடுகாலிகள் என்பதன் சுயருபமாகவும் நாம் இருந்துகொண்டு எப்படி நாம் இவ்வாறு சொல்ல முடியும்?

இவைகள்தான் இப்போது இங்கே கண்டனதுக்கு உரிய கருத்துகளாக பார்க்கபடுகின்றன. தனிமனித சுதந்திரம் பொதுவிடயமாகவும் பொதுவிடயம் தனிமனித சொத்தகவும் ஆக்கபட்டு முன்வைக்கும் கருத்துக்களுக்கே இங்கே இப்போது மவுசு அதிகம். புலிகளை நையபுடைந்தால் பச்சை புள்ளி நிறைய குத்துகிறார்கள். நீங்களும் இனி இராஜதந்திரம் பழகிகொள்ளுங்கள் ............... சும்மா நிர்வாகத்தை சாடாமல்.

இங்கே சிலர் ஓடுகாலி பரதேசி என்று திட்டுகின்றனர். நிர்வாகம் இதைக் கவனிக்காதோ? என்ன உரிமை இருக்கின்றது இவ்வாறு சொல்வதற்கு? விரும்பியவன் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் உரிமை அதில் விசனப்பட எமக்கென்ன உரிமை இருக்கின்றது? தமிழகத்தை சேர்ந்த ஒருவன் அங்கேயே இருந்துகொண்டு தன்விரும்பிய மதத்தை பின்பற்றுகின்றன் தாயகத்தை விட்டு ஓடிவந்த நாம் பரதேசிகள் என்பதன் சுயருபமாகவும் ஓடுகாலிகள் என்பதன் சுயருபமாகவும் நாம் இருந்துகொண்டு எப்படி நாம் இவ்வாறு சொல்ல முடியும்?

மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கத் தெரியாதவர்கள், தம் இன சுதந்திரம் பற்றிக் கதைக்க அருகதை அற்றவர்கள். இந்தத் திரியில் பல கருத்துகளை நீக்கினாலும், மிச்சம் இருப்பவையில் கூட பல அநாகரீகமானவையாகவே இருக்கின்றன. நீக்குவதை விட, அவர்களின் அறிவின் தரத்தை அவர்களது அநாகரீக வார்த்தைகளை வெட்டாமல் விட்டு விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதே சிறந்த செயல் என இப்போது நினைக்கின்றேன்

Edited by நிழலி

.

தத்துவ இயல் (Philosophy) மனித வாழ்க்கை - ‍உண்மை என்பவற்றோடு தொடர்பான காரண காரிய ஆய்வு. கேள்வி பதில் முறையில் நகர்கின்றது. இந்து, பௌத்த மதங்கள் மிகவும் வளமான தத்துவ பிண்ணனியைக் கொண்டவை.

இது ஒரு விஞ்ஞானம். கருத்துக்கள் குறை காணப்பட்டு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த விஞ்ஞானம் தான் தத்துவவியல்.

முப்பொருள் உண்மை, பின் இரு பொருள் உண்மை, பின் "நான் அவனே" என்னும் ஒரு பொருள் உண்மை என்று அறிவியல் முதிரும் பாங்கு ஏணிப்படிகள் போல் அமைவதை வேதாந்தத்தில் காணலாம்.

பிரச்சனை இது தான்..!

தத்துவ இயல் சோசலிசம் போல உணர்ச்சியற்றது. வரட்டு வாதம் !!

எவ்வளவு தான் அறிவிருந்தும் மனம் பலவீனமடைந்த நிலையில் தத்துவ அறிவு ஒரு துரும்பும் உதவப் போவதில்லை. "நான் அவனே" என்னும் அறிவு வயிற்று வலியைப் போக்குமா என்ன‌..?

தத்துவ ஆய்வுகளோடு கூடிய மனப் பயிற்சிகளும் தான் ஒருவனை முழுமையாக்குகின்றது.

இவர் தத்துவ இயல் பேராசிரியராக இருந்திருக்கலாம். இந்து பௌத்த மத தத்துவ இயலை கரைத்துக் குடித்திருக்கலாம். ஆனால் நாத்திகராகையால் மனப் பயிற்சி இவரிடம் இல்லை. கிடைத்த அறிவை வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க பயன் படுத்தும் வல்லமை மனப் பயிற்சி இல்லையேல் இல்லை!!!!

பாழாய்ப்போன நொந்த மனம் உதவுவார் இல்லையோ என்று அபலைப் பெண்போல் அலையும். அப்போது பிடிப்பதற்கு ஒரு கொம்பு இவருக்குக் கிடைத்திருக்கின்றது.

பிடித்த கொம்பில் மனம் சிறிது பலமடையும். மனம் பலமடைய அறிவு மெதுவாகத் தன் ஆய்வைத் தொடங்கும். அப்போது தான் இருக்கிறது பிரச்சனை ! :wub:

.

மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்கத் தெரியாதவர்கள், தம் இன சுதந்திரம் பற்றிக் கதைக்க அருகதை அற்றவர்கள். இந்தத் திரியில் பல கருத்துகளை நீக்கினாலும், மிச்சம் இருப்பவையில் கூட பல அநாகரீகமானவையாகவே இருக்கின்றன. நீக்குவதை விட, அவர்களின் அறிவின் தரத்தை அவர்களது அநாகரீக வார்த்தைகளை வெட்டாமல் விட்டு விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதே சிறந்த செயல் என இப்போது நினைக்கின்றேன்

TE08B_B_BigImprovement.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது அவருடைய தனிப்பட்ட விடயம்

நித்தியானந்தாவின் விடயத்தையும் அவரின் தனிப்பட்ட விடயமாக எடுத்திருக்கலாம். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TE08B_B_BigImprovement.jpg

அப்ப இதுக்கு முதல் :wub::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவின் விடயத்தையும் அவரின் தனிப்பட்ட விடயமாக எடுத்திருக்கலாம். :wub:

எமது கனவுகன்னி ரஞ்சிதாவின் விடயத்தை எப்படி நித்தியானந்தாவின் தனிபட்ட விடயமென்று உங்களால் எடுக்க முடியும்.

எமக்கு கிடைக்காதது யாருக்கோ கிடைத்தால்.....????? பொறமை என்ற ஒன்றையும் சேர்த்து படைத்த இறைவனிடமே நீங்கள் பதில் தேடவேண்டும்.

மற்றையபடி இப்போதைக்கு இந்த மாட்டரை நாங்கள் விடப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நீக்குவதை விட, அவர்களின் அறிவின் தரத்தை அவர்களது அநாகரீக வார்த்தைகளை வெட்டாமல் விட்டு விடுவதன் மூலம் வெளிக்காட்டுவதே சிறந்த செயல் என இப்போது நினைக்கின்றேன்[/quote]

நிழலிக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்

நன்றி

அப்ப இதுக்கு முதல் :wub::lol:

சித்தன்,

நீங்கள் நிழலி எழுதியதை வாசிக்கவில்லை போல் உள்ளது!

எமது மட்டுறுப்பினர்களிடம் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது!!

இதை வரவேற்கனும் இல்லையா!!!? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாத்தீகம் பேசியவர் எது செய்தாலும் அது தனிப்பட்டவிடயம்(நாத்தீகம் என்பது சைவமதத்தை தாக்குபவர்கள்)

ஆனால்

ஆத்தீகம் பேசுபவர்கள் தொட்டால் குற்றம் பட்டால் குற்றம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நாத்தீகம் பேசியவர் எது செய்தாலும் அது தனிப்பட்டவிடயம்(நாத்தீகம் என்பது சைவமதத்தை தாக்குபவர்கள்)

ஆனால்

ஆத்தீகம் பேசுபவர்கள் தொட்டால் குற்றம் பட்டால் குற்றம:wub:

தொடுகைக்குள் வாருங்கள் தீண்ணடலுக்குள் நில்லுங்கள் நிஜத்தை காணுங்கள் என்பதே நாத்தீகம்.

தொடாதீர்கள் தீண்டாதீர்கள் என்பது ஆத்திகமாக உள்ளது. கோவிலில் வெளிவீதி தொடங்கி மூலஸ்தானம்வரை ஒவ்வொருமனிதனாக தடைசெய்ய படுகிறான்.

பின்பு இவர்களே தீண்டிவிட்டு தொட்டுவிட்டு நாம் தொட்டால்தான் குற்றமா என்றால்???

தொடுவதும் தீண்டுவதும் குற்றமல்ல................ தொடாதே தீண்டாதே என்று பரப்புரை செய்துகொண்டே உரசுவதே உறைப்பானது.

மற்றையபடி நாத்திகர்கள் தொடுகைக்குள் நில்லுங்கள் ஒருவரையொருவர் கட்டியணையுங்கள் என்றே சொல்கிறார்கள்................ அதற்காக காமத்தை முன்நிறுத்தி கட்டில்வரை போகதேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் கொள்கைக்காரனும் அண்மையில் மதத்தில் இணைந்தவனும் தரும் துவேச விளக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடுகைக்குள் வாருங்கள் தீண்ணடலுக்குள் நில்லுங்கள் நிஜத்தை காணுங்கள் என்பதே நாத்தீகம்.

தொடாதீர்கள் தீண்டாதீர்கள் என்பது ஆத்திகமாக உள்ளது. கோவிலில் வெளிவீதி தொடங்கி மூலஸ்தானம்வரை ஒவ்வொருமனிதனாக தடைசெய்ய படுகிறான்.

பின்பு இவர்களே தீண்டிவிட்டு தொட்டுவிட்டு நாம் தொட்டால்தான் குற்றமா என்றால்???

தொடுவதும் தீண்டுவதும் குற்றமல்ல................ தொடாதே தீண்டாதே என்று பரப்புரை செய்துகொண்டே உரசுவதே உறைப்பானது.

மற்றையபடி நாத்திகர்கள் தொடுகைக்குள் நில்லுங்கள் ஒருவரையொருவர் கட்டியணையுங்கள் என்றே சொல்கிறார்கள்................ அதற்காக காமத்தை முன்நிறுத்தி கட்டில்வரை போகதேவையில்லை.

கடவுளே இல்லையென்றவன்

இன்று

அல்லாவின் காலடியில்

நாளை???????

பொறுத்திருங்கள் இன்னும் வரும்

அதற்காக

நான்

நித்தியானந்தா தாசன் இல்லை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இல்லையென்றவன்

இன்று

அல்லாவின் காலடியில்

நாளை???????

பொறுத்திருங்கள் இன்னும் வரும்

அதற்காக

நான்

நித்தியானந்தா தாசன் இல்லை :wub:

தேடல்களே வாழ்கையாக இருக்கின்றது..............

ஆனால் சிலரோ தேடலின் தொடக்கத்திலேயே இதுதான் வாழ்வு என்று ஏற்றுகொன்றுவிடுகின்றார்கள்.

ஆக காலநீரோட்டத்தில் அவர்களால் மிதக்க முடிவதில்லை............. வெறொரு தேடலில் தம்மை மீண்டும் அழைக்கிறார்கள்.

ஆனால் உண்மைகள் எதுவோ அது அதுவாகவே இருக்கின்றது.

சூரியனை பார்த்தால் அதில் உள்ள சக்தியை பெற்று மற்றவருடைய வாழ்வையும் சிறப்பிக்க எண்ணுகிறான் ஒருவன்.......... அவனால் ஒளிசக்தி மின்சக்தியாக மாற்றம் பெற்று உலகத்தில் பலகோடி மக்கள் நன்மையடைகிறார்கள்.

இன்னுமொருவன் கடவுளே முகிலைதாண்டி இன்றும் வந்துவிட்டாயே என்னையும் மற்றவரையும் நீயே காப்பாற்று என்று விட்டு வீட்டுக்குள் போய்கிடக்கிறான். வீணாக பட்டினியால் சாகிறாயே ஏதாவது வேலைவெடி;டிக்குபோ என்றால் அது அவர் எனக்கு எழுதிய விதி என்கிறான் இவன்.

இல்லாதவைகளை சிருஸ்டிக்க வேண்டிய நிலமை சோம்பேறிகளுக்கும் ஏமாற்று பேர்வழிகளுக்கும் நிற்சயம் இருக்கும். இருப்பவைகளை இருப்வைகளாக அவர்களால் ஏற்ற முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமர்ப்பணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.