Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு பேபி, சாத்திரி, மற்றும் அனைவருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இப்படி ஒரு தலைப்பு? வித்தியாசமான தலைப்பு தான் கூடுதலானவர்களை கவருது. :wub: யாழில், முன்னர் நான் அதிகம் வாசிக்கும் காலங்களில் இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசித்தேன். ஜம்முபேபியின் எழுத்து இனிமையாக இருக்கும். அவரின் பெயரைக்கூட இக்குறும்படத்தில் பாவித்திருக்கிறேன். இந்தக்குறும்படம் சோகத்தையும் நக்கலாக சொல்லும் வகையானது(Dark Comedy). எல்லோரும் தவறாது உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.

Edited by rajeeve

  • கருத்துக்கள உறவுகள்

நான் தென்னிந்திய தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் குறும்படங்கள் சிலவற்றை பார்த்து வருகிறேன். அவற்றோடு ஒப்பிடும் போது உங்கள் குறும்படம் தாங்கி வந்திருக்கும் கருத்தம்சம்.. காட்சி அமைப்புக்கள்.. கதையில் ஏற்படுத்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ்.. என்பன நன்றாக இருக்கிறது. வித்தியாசமான வகையில் ஆரம்பித்திருக்கிறீர்கள். ஒரு செய்தி அறிக்கைக்குள் ஒரு குறும்படத்தையே அடக்கியது நல்ல முயற்சி. பாராட்டுக்கள். தொடருங்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.நல்லலொதுரு கருத்தை எடுத்துள்ளீர்கள்.எமது சமூகத்தில் உள்ள பெரும்பாண்மையானவர்களுக்கு சாட்டடையடி.தொருங்கள் வாழ்த்துக்கள.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajeeve

எங்கள் கலைஞர்களிடம் இருக்கும் திறமைகள் நிச்சயம் பெரிய அளவில் வெளிப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த விமர்சனத்தை வைப்பதால் நிறைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுகிறேன்....

நிறைகள்: நீங்கள் சொல்லவந்த செய்தியை பங்குபற்றும் பாத்திரங்க்களின் எண்ணிக்கையைக் குறைத்து dark comedy style ல் வானொலிச் செய்தியுடன் சொன்னவிதம் புதுமை அத்துடன் உங்களிடம் இருக்கும் Creative Ideas ஐயும் தமிழ் சமூகமேம்பாட்டுக்காக தெரிவுசெய்த மூலக்கதையும் உங்களின் சமூகநல சிந்தனையையும் காட்டுகிறது.......

குறைகள்:அம்மா, அப்பாவாக வரும் அவர்களிடம் நல்ல நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருந்தாலும் உங்களின் காட்சியமைப்பு சற்று சலிப்பைத்தருகிறது ஒரு இடத்தில்..... அதாவது முதல் காட்சியில் அந்த அறையில் இருந்து கதைக்கும் பொழுது பதற்றமான சூழ்நிலையில் இருக்கும் அவர்களை அமைதியாக ஓரிடத்தில் இருந்து கதைப்பது செயற்கைத்தனமாக காட்சியளிக்கிறது.அதே போல விரக்தியுற்ற அந்த இளைஞனும் ஓரிடத்தில் அமர்ந்து ஒரே இடத்தைப்ப பார்ப்பதுபோல இருப்பதும் சற்று செயற்கைத்தனமாகவே தோன்றுகிறது....

நண்பன் இளைஞனாக வந்தவரின் நடிப்பும் அவரின் முகபாவமும் நன்று...

பின்னணி இசை எல்லா இடத்திலும் ஒரேமாதிரியும் ஓர் மைனஸ் தான்.....

நாங்கள் எம்மவரின் படைப்புக்களை தென்னிந்திய திரைப்படதரத்துடன் ஒப்பிட முடியாவிட்டாலும் அவர்கள் என்ன வானத்திலிருந்தா குதித்தார்கள் அவர்களும் இப்படித்தானே வளர்ந்தார்கள். விமர்சனங்களில் இருந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ், வாழ்த்துக்கள். தொடர்ந்து வளர இனிய நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பராட்டுக்கள் ராஜிவன்..நல்லதொரு கருத்தை நகைச்சுவையுடன் கலந்து கொடுக்கும் திறைமை உங்களிடம் உள்ளது.தொடருங்கள்.நானும் முன்னர் எமது மக்களிடம் உள்ள சமூகபிரச்சனைகளை நகைச்சுவை நாடகங்களாக ஜரோப்பியஅவலம் என்கிற பெயரில் தயாரித்திருந்தேன் அது பரவலாக அனைவரையும் கவர்ந்திருந்தது.நானும் ஜம்மு வும் யாழில் தற்சமயம் எழுவது குறைந்துவிட்டாலும் எங்களை ஞாபகம் வைத்து எழுதியதற்கு நன்றிகள்.தொடருங்கள் உங்கள் படைப்புக்களை. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ் சகலகலாவல்லவனாக இருக்கிறீர்கள்.

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி!

ஆக்கத்திற்கும், இணைப்பிற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

ஆரம்பம் நல்லாய் இருந்திச்சிது. முக்கால்வாசி சொச்சம் இருந்து பிடிக்க இல்லை, இறுதிப்பகுதியை நான் பார்க்க இல்லை. சில விசயங்களை சுருக்கமாக நச் என்று சொன்னால் நல்லாய் இருக்கும். உங்கள் படைப்புக்கும், கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள் ரஜீவ்!

உங்கள் குறும்படம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் படிப்பினை ஊட்ட கூடிய வகையில் நன்றாக உள்ளது. மேலும் பல குறும்படங்கள் திரைப்படங்களை வெளியிட வாழ்த்துக்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan, sagevan, ilankavi, nunavilan, sathiri, eelapirean, வல்வை லிங்கம், மச்சான், ஈழமகள், அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இக்குறும்படத்தை காட்டி முடியுமானால் அவர்களின் கருத்துக்களையும் எடுத்து வாருங்கள். உங்களால் முடிந்தால் எப்படி இந்தப்படத்தை இன்னும் நன்றாக, நகைச்சுவையாக எடுத்திருக்கலாம் என்று சொல்லுங்கள்.

ilankavi நல்ல காட்சி அமைப்புக்கு உதாரணங்கள் சில தர முடியுமா? அப்பா,அம்மா ஒழிந்திருப்பது பாழடைந்த கட்டடத்தில் என நினைத்திருந்தேன். அப்படி இடம் கிடைக்கவில்லை. அதனால் புது வீடு கட்டப்படும் இடத்தில் எடுத்தோம். மகன் போதையில் மேலே வெறித்துப்பார்ப்பதாக யோசித்திருந்தேன்.

sathiri உங்களுக்கு நகைச்சுவை வரும் என்பதால், இக்குறும்படத்தை எவ்வாறு என்னும் நகைச்சுவையுடன் தரலாம் என கூறமுடியுமா? இவ்வகை படத்தை எல்லோரும் ரசிக்கும் படி எடுப்பதானால், எப்படி எடுப்பது நல்லது? சிலருக்கு Darkcomedy பிடிப்பதில்லை...

மச்சான் என்னும் விபரமான விமர்சனங்களை வைக்க முடியுமா? எனக்கு அவை நல்ல உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் பிழைகளை திருத்திக்கொள்ள உதவும். குறிப்பாக ஏன் இறுதிப்பகுதியை பார்க்கவில்லை என சொல்ல முடியுமா?

அனைவருக்கும் நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படம் நல்ல கருத்தம்சம் நிறைந்ததாக இருந்தாலும் சில காட்சியமைப்புக்கள் கதையுடன் ஒத்துப்போகாமல் இருப்பதாக உணருகின்றேன். உதாரணமாக மகன் செய்யும் தவறுகளுக்காக பெற்றவர்கள் ஏன் ஒளிந்திருக்கிறார்கள்? தந்தை மட்டும் மாறுவேடத்தில் இருக்க தாய் சுயமாக இருப்பதேன்? பெற்றவர்கள் உரையாடும்பொழுது எவ்வித பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஆசனங்களில் அமர்ந்திருந்து உரையாடுவது செயற்கையாக உள்ளது.வாசிக்கப்படும் செய்திகள் மிகவும் நகைச்சுவையாகவும் தற்போதைய நாட்டு நடப்புக்களை விளக்குவதாயும் மிகவும் ரசிக்கக்கூடியதாயும் உள்ளது.மணித்துளிகளைப் பணத்துக்கு அடகுவைக்கும் நாட்டில் உங்கள் பொன்னான நேரத்தை இப்படியான கலை முயற்சிகளுக்காக செலவிடும் உங்கள் கலை ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது. உங்களுக்குள் நிறையத் திறமை இருக்கிறது.துணிந்து நின்று தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் முயற்சி,பகுதி 2 ஒலிப்பதிவு கொஞ்சம் மக்கர் பண்னுது போல கிடக்குது சரி செய்தால் நல்லாய்யிருக்கும்.

சிறந்த குறும்படம் எடுக்க வேண்டுமா இன்றே நாடுங்கள் ......ரஜீவ்....தொடர்புகளுக்கு ...ஜம்மு...12345679 :wub::lol::lol:

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த தமிழ் சமுகத்தில் உள்ள பிரச்சனையை சொன்ன கதைக்கரு,புலம் பெயர்ந்த மேற்கத்தைய நாடுகளில் நாட்டு நடப்புக்களை நகைச்சுவையுடன்(மக்களின் அறியாமையை கிண்டல் செய்யும் - உ+ம் சாமியாரிடம் பிள்ளை வரம் கேட்கப் போகிறவிடயம்) வானொலியில் சொல்லிய விதம்(புதிய முயற்சி), தேவையில்லாத அலட்டல் இல்லாது சுருக்கமாக பிரச்சனைகளைச் சொன்ன விதம் பாராட்டத்தக்கது.

காவலூர் கண்மணி அவர்கள் எழுதியது போல எனக்கும் ஏன் மகன் செய்த பிழைக்கு தகப்பன் மாறு வேடத்தில் திறிகிறார் என்று யோசித்தேன். கனடா சிறிலங்கா, இந்தியா அல்ல. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை காவல்துறையினரால் சித்திரவாதை கனடாவில் செய்யப்படுவதில்லை. மகனின் நடிப்பு கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது.

தொடர்ந்து உங்களின் படைப்புக்கள் வரவேண்டும். வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Kavallur Kanmani,putthan,கந்தப்பு அனைவருக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. putthan, ஜம்முபேபியின் பன்ச் வசனங்களை இப்படத்தில் சேத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர்தான் தலைமறைவாய் விட்டார். :lol:

Kavallur Kanmani, கந்தப்பு இப்படத்தில் வரும் சம்பவங்கள், அரசாங்கத்தின் சட்டங்கள், நடவடிக்கைகள் யாவும் கற்பனையே. நிஜவாழ்வை இதில் எடுக்க முனையவில்லை. கற்பனையான ஒரு காலகட்டத்தில், கனேடிய அரசு பிள்ளைகள் செய்யும் குற்றத்திற்கு, பெற்றோரும் தண்டிக்கப்படவேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவருவதாக படத்தில் பாவித்திருந்தேன். நகைச்சுவைக்காக தாயைவிட, தந்தை பயந்துள்ளார் என்பதை காட்டுவதற்காக தாடியும் விக்கும் பாவித்திருந்தோம்.

அப்பா, அம்மா ஒளிந்திருக்கும் வீட்டில் இருந்து கதைப்பது செயற்கையாக தான் எனக்கும் பின்புபார்க்கும் போது உள்ளது. இந்த காட்சி அமைப்பை எவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் என விசயம் தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள். :wub:

ராஜீவ், உங்களுக்கு சயந்தனை தெரிஞ்சு இருக்கும். நல்லாய் கதைகள் எழுதுவார் (கதையும் விடுவார்). சயந்தனோட கதைக்கும்போது சொன்னார் அவரது கதைகளின் வசீகரத்தின் ஓர் இரகசியம் அல்லது அவர் பயன்படுத்தும் ஓர் நுட்பம் என்ன என்றால்... இப்படி இப்படி என்று சுவையாக பல்வேறு சம்பவங்களை கதையாக சொல்லுவார். ஆனால்.. கதையின் முடிவை.. இதுதான் காரணம், பிரச்சனை என்று அடிக்கோடு போட்டு சொல்லமாட்டார். அதை வாசகர்களிண்ட கைகளில ஒப்படைச்சு விடுவார். நீங்கள் அவஸ்தைகளை விபரிச்சாலே - உதாரணமாய் ஒருபக்கம் அம்மா, அப்பா செல்லம் பொழியேக்க அதை மகன் எப்படி பயன்படுத்துகிறான் எண்டு அவனது வாழ்க்கை முறையிண்ட சில சம்பவங்களை படம்பிடிச்சு காட்டேக்க, அதைமட்டும் சொல்லிப்போட்டு போகேக்க பார்க்கிறவர்களுக்கு அது சுவாரசியமாயும் இருக்கும், இதனாலதான் இவன் இப்பிடி கெட்டுபோறான், பொறுப்பு இல்லாமல் இருக்கிறான் எண்டும் விளங்கும். ஆனால்.. அம்மா, அப்பாவே இப்படி இப்படி செய்ததால இப்படி இப்படி நடக்கிது எண்டு சொல்லி அறிவுரை மாதிரி சொல்லிறது சுவாரசியத்தை குறைச்சுவிட்டிடும். ஒன்றை பச்சையாக சொல்லாமல் கொஞ்சம் குறியீட்டு மொழிகளை பாவிச்சீங்கள் எண்டால் உங்கள் படைப்புக்கள் இன்னமும் தூக்கலாய் வரும் எண்டு நினைக்கிறன். உதட்டுக்கு அளவாய் அடிச்சால்தான் சாயம் அழகாய் இருக்கும். இதேமாதிரித்தான் நடிப்பும் முடியுமான அளவு செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாய் இருக்கும்படி பார்த்துக்கொண்டீங்கள் எண்டால் மேலும் நன்றாக இருக்கும் உங்கள் படைப்புக்கள் எண்டு நினைக்கிறன். நன்றி!

Edited by மச்சான்

சுப்பர்.

உதைத்தான் நான் எதிர்பார்த்தன்.

எனக்கு நல்ல திருப்தி.

கலர் நல்லால்லை கமரா சரியில்லை சவுண்ட் காதைப் பிக்குது என்பதெல்லாம் பேய்க்கதை.

கள்ள கமராக் கொப்பியிலை படம் பார்க்கிற எங்களுக்கு உது எவ்வளவோ திறம்.

நிரம்ப எதிர்பார்க்கிறம்.

தொடரட்டும் உங்கள் பணி.

பெடியனையும் பெட்டையையும் மரத்தைச் சுத்தி ஓட விட்டு படம் எடுக்காட்டி சரி.

வாழ்த்துக்கள் ராஜீவ்! நல்ல முயற்சி!!

மறைந்திருந்து கொல்லும் (தமிழ்) சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து தொடர்ந்தும் குறும் படங்கள் பல செய்ய வாழ்த்துகிறேன்!

குறும்படத்தின் நீளம் 12 நிமிடங்களாக இருந்தால் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் நன்றி.

மச்சான், நல்ல விபரமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்துக்களை உள்வாங்கி உள்ளேன். எதிர்காலத்தில் முடிந்தளவு குறைகளை திருத்துவேன்.

Saniyan, பெடியனும் பெட்டையும் மரத்தை சுத்தி ஓடுரதுல என்ன தப்பு?? பெடியனும் பெடியனும் மரத்தை சுத்தி ஓடினா தான் தப்பு! :rolleyes:

Aasaan, உங்களைப் பொறுத்தவரை, முக்கியமான சமூகப்பிரச்சனையாக எவற்றை கருதுகிறீர்கள்? கதைகள் இருந்தால் தாருங்கள், எதிர்காலத்தில் எனக்கு உதவும் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.