Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்

Featured Replies

நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்

மலேசிய நிருபர்

புதன்கிழமை, மார்ச் 24, 2010

மே 31 - ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த திட்டம். எனக்கு அப்படித்தான் இருந்தது. நானும் அந்த நாளில் (6ஆம் வகுப்பு)160 ரூபா சொச்சம் சேர்த்தேன். காசு சேர்த்ததனை விட அந்த நிகழ்தான் வெப்பியாரமாக இருந்தது.

நேற்று நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு சிலை அதே சிங்களப்படை உதவியுடன், அதே சிங்கள கூலிகளால் நொருக்கப்பட்டது. 12 நாட்கள் நல்லூரில் எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் உண்ண மறுத்து போரிட்ட அந்த திருமகனிற்காக 1987 ஆம் ஆண்டு எத்தனை மாணவர்கள் அழுதார்கள்? எத்தனை பெற்றோர்கள் அழுதார்கள்? இது ஒன்றும் புலிகள் வெருட்டி நடக்கவில்லையே தானாகவே நடந்தது. ஆனால் நேற்று அந்த மா தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டபோது ஒரு அழுகை, ஒரு குரல், ஒரு அறிக்கை, ஒரு... எங்கே ஐயா?

மக்களுக்குத்தான் அலுப்பு, சலிப்பு, பதைப்பு, வெறுப்பு, பயம் ஆனால் வந்துபாரடா நின்றுபாரடா என அரசியல் முழக்கமிடும் வேட்பாளர்களாவது அரசியலுக்கு கூட ஒரு கருத்து சொல்லி இருக்க கூடாதா? அந்த இடத்தை சென்று பார்த்திருக்க கூடாதா?அதற்காக சிங்களவனிடம் ஒரு தடவை அடிவாங்கினால் என்ன?சூடு வாங்கினால் என்ன? வாக்கு கேட்பதற்காக அடி வாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதற்கு ஏன் பின்னடிப்பு?

நம்புங்கள் நல்லூர்கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள் சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள் நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்படும் அப்போதாவது ஏதாவது பத்துமா என்று பார்ப்போம்.

மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் இடிக்கும் போது பேசாமல் இருந்தோம் சரி அவர்கள் , சிலர் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள்ஆனால் தியாக தீபம் திலீபனும் அப்படியா? இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது? சிங்களவனுக்கு செருக்கு, முறுக்கு ஏறிவிட்டது என்றுதானே அர்த்தம். எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்ய வேண்டாமா?

எதற்கெடுத்தாலும் ஒரு அடிபோட்டு மடக்குவீர்கள் அதாவது வெளி நாட்டில் இருப்போர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று. இது பற்றி பின்பு எழுதுகின்றோம். ஆனால் இப்போ யாழில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், தமிழர்களுக்காக உரிமை கேட்க புறப்பட்டவர்களை பார்த்துத்தான் கேட்கின்றோம். எதற்காக உங்கள் மெளனம்?

ஆக குறைந்தது திலீபனின் சிலை உடைக்கப்பட்டு எஞ்சி இருக்கின்ற கற்களையாவது பொறுப்பெடுத்து முடிந்தால் பாதுகாப்பாக வையுங்கள்.

http://www.eelanatham.net/story/Look%2C%20Tomorrow%2C%20Nallur%20Temple%20and%20Sangkiliyan%20statue%20should%20be%20demolished

  • கருத்துக்கள உறவுகள்

2009 மேயிலேயே எமக்கு இது தெரிந்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இனவாதத்தை வளர்க்காதீர்

யாழ் நூலகம் எரிந்தது.. என்ன சுப்பண்ணை சுருட்டு குடிக்கும் போது தவறி விழுந்தா..??!

நயினை நாகபூசணி அம்மன் தேர் எரிக்கப்பட்டது என்ன கற்பூரத்தட்டு தவறி விழுந்தா..??!

குமுதினிப் படகில் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டது.. என்ன சுறா வெட்டும் போது அரிவாள் தவறி விழுந்தா..??!

யாழ்ப்பாண தமிராட்சி மாநாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டது.. என்ன மின்சாரக் கம்பி தவறுதலாக அறுந்து விழுந்தா..??!

கொழும்பில் 1983 இல் இனக்கலவரம் வந்தது.. சும்மா முஸ்பாத்திக்கா...??!

கொறவப்பத்தானையில் கொழும்பு சொகுசு பஸ்களை மறித்து தமிழ் பயணிகளை மட்டும் தேர்தெடுத்து இறக்கி வெட்டி கொன்றது.. சும்மா இருக்கேலாத கடுப்பிலா..??!

கிளாலியில் கடலில் தமிழ் மக்களை படுகொலை செய்தது.. மீனுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சம் என்றா..??!

செம்மணியில் எமது மக்களை கொன்று புதைத்தது.. யாழ்ப்பாண வயல்களுக்கு உரம் போடவா..??!

முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்து எரித்தது.. வன்னிக் காட்டுக்குள் நுளம்பு விரட்டவா..??!

இத்தனை தரமும் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து அழிக்கப்பட்ட போது வராத இனவாதம்.. இப்போ மட்டும் எப்படி எங்களுக்கு வரும். நாங்கள் தானே எருமை மாடுகளாச்சே. எவனு வந்து என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். எங்களுக்கு வெளிநாட்டில வாழ அசைலமும் குடியுரிமையும் பெற கட்டுநாயக்காவுக்குள்ளால பாதுகாப்பாகக் கடக்க விட்டு பின் அவை கிடைத்ததும் சிறீலங்கன் எயார் லைன்சில் ரிக்கட்டும் புக் பண்ண விட்டால் போதும். சிங்கள மக்களைப் போன்ற நல்லவர்கள் இந்த உலகில் இல்லை என்றே சொல்வோம்..! இப்பவும் நாங்கள் லெமன் பவ்வும்.. அலியா நெக்டோவும் தான் வெளிநாட்டில கூட குடிக்கிறம். அத்தனை விசுவாசம் எங்களுக்கு.. அப்பே ரட்ட லங்கா மீது..!

இதற்குள்ள திலீபனாம்.. சிலையாம்.. என்று கொண்டு.. இனவாதத்தை வளர்க்கிறீங்க. திலீபன் இனவாதத்தை விதைக்கும் ஒரு சிலை. அதை இன ஐக்கியத்தை விரும்பும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டம். நாங்கள் தமிழ் வீணையையே விட்டிட்டு கொழும்பு வெத்திலையில நிற்கிறம்.. எதற்கு இன ஐக்கியத்தை கட்டி காக்கத்தானே. நாகபூசனி அம்மனை விட்டிட்டு நாகர் விகாரையை புனித பூமி ஆக்கிறம்.. எதற்கு நாங்கள் எங்கள் பூர்வ குடிகள் பெளத்தர்கள் என்பதால் தானே.

தமிழர்கள் திராவிடர்கள். ஆனால் நாங்கள் ஆரியர்கள். ஏனெனில் எங்கள் பூர்வீம மதம் பெளத்த மதம். வடக்குக் கிழக்கில் வாழ்பவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் சிங்கபாகு வழிவந்த ஆரியர்களின் வழித்தோன்றல்களே. அப்படி இருக்க.. சில பிரபாகரன்களால் ஏற்பட்ட மனக்கசப்புக்களை நாங்கள் வலு தீவிரமாக களைஞ்சு கொண்டிருக்கிற இந்த வேளையில் மீண்டும் இனவாத பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டீர்கள். நாங்களே காட்டிக் கொடுத்து உங்களைப் போட்டுத்தள்ள தயங்கமாட்டோம். 2006 இல் இருந்து 2008 வரை யாழ்ப்பாணத்தில் நடந்த களையெடுப்புப் பற்றி அறிஞ்சிருப்பியள் தானே. அது நடக்கும். கவனம்..! ஓகே..!

Edited by nedukkalapoovan

இன்றைய வேட்பாளர்களுக்கு, தியாகி திலிப்பனின் பெயராவது நினைவில் இருக்குமா என்பது கேள்வி.. நிலமை இப்படியிருக்க அவர்களாவது, சிலை உடைப்பு பற்றி கருத்துத் தெரிவிப்பதாவது

நெடுக்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை.

இதனால் தான் இத்தனை இயக்கங்களும் உருவானது.ஆனால் பின்னர் நான் மட்டுமே தலைவன் ,எமது இயக்கம் மட்டுமே போரட வெண்டும் என்று போராட வெளிக்கிட்ட எத்தனை இளஞர்களை எதிரி யாரென்று மறந்து துரத்தி துரத்தி கொன்றீர்கள்.இந்தியாவிடம் டீல் பின் களுத்தறுப்பு,பிரேமதசாவுடன் டீல் பின் களுத்தறுப்பு,ரனிலிடம் டீல் பின் களுத்தறுப்பு,சந்திரிகாவிடம் டீல்பின் களுத்தறுப்பு,கடைசியில் மகிந்தாவிடம் டீல் தமிழரின் களுத்தையே அறுத்துவிட்டான்.இனி நடப்பதை பார்த்துக்கொண்டிப்பதை தவிர இப்போதைக்கு வேறுவழியில்லை.

நாட்டில் இருப்பவர்களுக்கும்,தேசியக்கூட்டமைப்புக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் இது நன்றாகத்தெரியும்.புலம் பெயர்ந்து புலி எது செய்தாலும் சரி என்று அடம் பிடித்தவர்கள் அடுத்த கூத்து ஆரம்பித்திருகின்றார்கள்.ஊடகபலம்,பணபலம் உள்ள இவர்கள் இன்னமும் சில காலத்திற்கு தான் இந்த ஆட்டம்.

நாட்டில் இருப்பவர்கள் தமது தேவையை காலம் நேரம் அறிந்து முன்வைப்பார்கள்.

25 இருண்ட வருடங்கள் முடிந்ததே சனத்திற்கு பெரும் நிம்மதி.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை.

இதனால் தான் இத்தனை இயக்கங்களும் உருவானது.ஆனால் பின்னர் நான் மட்டுமே தலைவன் ,எமது இயக்கம் மட்டுமே போரட வெண்டும் என்று போராட வெளிக்கிட்ட எத்தனை இளஞர்களை எதிரி யாரென்று மறந்து துரத்தி துரத்தி கொன்றீர்கள்.இந்தியாவிடம் டீல் பின் களுத்தறுப்பு,பிரேமதசாவுடன் டீல் பின் களுத்தறுப்பு,ரனிலிடம் டீல் பின் களுத்தறுப்பு,சந்திரிகாவிடம் டீல்பின் களுத்தறுப்பு,கடைசியில் மகிந்தாவிடம் டீல் தமிழரின் களுத்தையே அறுத்துவிட்டான்.இனி நடப்பதை பார்த்துக்கொண்டிப்பதை தவிர இப்போதைக்கு வேறுவழியில்லை.நாட்டில் இருப்பவர்களுக்கும்,தேசியக்கூட்டமைப்புக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் இது நன்றாகத்தெரியும்.புலம் பெயர்ந்து புலி எது செய்தாலும் சரி என்று அடம் பிடித்தவர்கள் அடுத்த கூத்து ஆரம்பித்திருகின்றார்கள்.ஊடகபலம்,பணபலம் உள்ள இவர்கள் இன்னமும் சில காலத்திற்கு தான் இந்த ஆட்டம்.

நாட்டில் இருப்பவர்கள் தமது தேவையை காலம் நேரம் அறிந்து முன்வைப்பார்கள்.

25 இருண்ட வருடங்கள் முடிந்ததே சனத்திற்கு பெரும் நிம்மதி.

நெடுக்ஸ் சொன்னது தப்பாக புரிந்து தப்பாக எடைபோடப்பட்டுள்ளது

படைப்பாளி நெடுக்ஸ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
:( சிங்களவன் இவற்றைச் செய்யும்போது இனவாதமாகத் தெரியவில்லை ஆனால் நாம் இப்படி நடக்கப்போகிறது என்று சொல்வது மட்டும் இனவாதமாகத் தெரிகிறது??!!!!

சும்மா இனவாதத்தை வளர்க்காதீர்

... எங்கேயோ கேட்ட குரல்!!!!!!!!!!!!!! :( .... ஐயோ ... நோகுது நெஞ்சு!!! :D ... கீழுக்கு மாவீரர் வணக்கத்துடன் ... விடிவெள்ளியாம்!!! :D ... சூப்பருங்கோ!! ... ஆனால் மணந்திட்டுது! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் சொன்னது தப்பாக புரிந்து தப்பாக எடைபோடப்பட்டுள்ளது

பன்றிக்கு பார்ப்பது எல்லாம் பவ்வியாகத் தானே தெரியும்! :(

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை.

இதனால் தான் இத்தனை இயக்கங்களும் உருவானது.ஆனால் பின்னர் நான் மட்டுமே தலைவன் ,எமது இயக்கம் மட்டுமே போரட வெண்டும் என்று போராட வெளிக்கிட்ட எத்தனை இளஞர்களை எதிரி யாரென்று மறந்து துரத்தி துரத்தி கொன்றீர்கள்.இந்தியாவிடம் டீல் பின் களுத்தறுப்பு,பிரேமதசாவுடன் டீல் பின் களுத்தறுப்பு,ரனிலிடம் டீல் பின் களுத்தறுப்பு,சந்திரிகாவிடம் டீல்பின் களுத்தறுப்பு,கடைசியில் மகிந்தாவிடம் டீல் தமிழரின் களுத்தையே அறுத்துவிட்டான்.இனி நடப்பதை பார்த்துக்கொண்டிப்பதை தவிர இப்போதைக்கு வேறுவழியில்லை.

நாட்டில் இருப்பவர்களுக்கும்,தேசியக்கூட்டமைப்புக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் இது நன்றாகத்தெரியும்.புலம் பெயர்ந்து புலி எது செய்தாலும் சரி என்று அடம் பிடித்தவர்கள் அடுத்த கூத்து ஆரம்பித்திருகின்றார்கள்.ஊடகபலம்,பணபலம் உள்ள இவர்கள் இன்னமும் சில காலத்திற்கு தான் இந்த ஆட்டம்.

நாட்டில் இருப்பவர்கள் தமது தேவையை காலம் நேரம் அறிந்து முன்வைப்பார்கள்.

25 இருண்ட வருடங்கள் முடிந்ததே சனத்திற்கு பெரும் நிம்மதி.

அடுத்த மிக இருண்ட 25 வருடங்கள் தமிழ் மக்கள் முன் தெரிகிறது.இந்தியாவுடன் சேர்ந்து வீடு வீடாக புலிகளை தேடி அழிதது, மக்களை ரி.என்.ஏ என்ற ராணுவ கட்டமைப்பில் கட்டாய இராணுவ பயிற்சிக்கு கூட்டி சென்றவர்கள், வெள்ளை வானில் மக்களை கடத்தி காசு பறித்தவர்கள் வீடு உடைத்து களவெடுத்தவர்கள்,கற்பழித்தவர்கள் எல்லாம் எந்த இலாப நட்ட கணக்கில் போடுவது.இவர்களில் ஒரு சிலர் போராளிகளாக இருக்கலாம்.ஆனால் தலைமைகள் இந்திய இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளையும் மக்களையும் காட்டி கொடுத்தவர்கள் தான். இன்றும் மகிந்தவின் வேட்டிக்கு பின்னால் ஒழிந்து கொள்ளும் பச்சோந்திகள்.இவர்கள் அன்றும் என்றும் என்றும் அழிக்கப்பட வேண்டியவர்களே.

யாழ் நூலகம் எரிந்தது.. என்ன சுப்பண்ணை சுருட்டு குடிக்கும் போது தவறி விழுந்தா..??!

நயினை நாகபூசணி அம்மன் தேர் எரிக்கப்பட்டது என்ன கற்பூரத்தட்டு தவறி விழுந்தா..??!

குமுதினிப் படகில் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டது.. என்ன சுறா வெட்டும் போது அரிவாள் தவறி விழுந்தா..??!

யாழ்ப்பாண தமிராட்சி மாநாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டது.. என்ன மின்சாரக் கம்பி தவறுதலாக அறுந்து விழுந்தா..??!

கொழும்பில் 1983 இல் இனக்கலவரம் வந்தது.. சும்மா முஸ்பாத்திக்கா...??!

கொறவப்பத்தானையில் கொழும்பு சொகுசு பஸ்களை மறித்து தமிழ் பயணிகளை மட்டும் தேர்தெடுத்து இறக்கி வெட்டி கொன்றது.. சும்மா இருக்கேலாத கடுப்பிலா..??!

கிளாலியில் கடலில் தமிழ் மக்களை படுகொலை செய்தது.. மீனுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சம் என்றா..??!

செம்மணியில் எமது மக்களை கொன்று புதைத்தது.. யாழ்ப்பாண வயல்களுக்கு உரம் போடவா..??!

முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்து எரித்தது.. வன்னிக் காட்டுக்குள் நுளம்பு விரட்டவா..??!

இத்தனை தரமும் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து அழிக்கப்பட்ட போது வராத இனவாதம்.. இப்போ மட்டும் எப்படி எங்களுக்கு வரும். நாங்கள் தானே எருமை மாடுகளாச்சே. எவனு வந்து என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். எங்களுக்கு வெளிநாட்டில வாழ அசைலமும் குடியுரிமையும் பெற கட்டுநாயக்காவுக்குள்ளால பாதுகாப்பாகக் கடக்க விட்டு பின் அவை கிடைத்ததும் சிறீலங்கன் எயார் லைன்சில் ரிக்கட்டும் புக் பண்ண விட்டால் போதும். சிங்கள மக்களைப் போன்ற நல்லவர்கள் இந்த உலகில் இல்லை என்றே சொல்வோம்..! இப்பவும் நாங்கள் லெமன் பவ்வும்.. அலியா நெக்டோவும் தான் வெளிநாட்டில கூட குடிக்கிறம். அத்தனை விசுவாசம் எங்களுக்கு.. அப்பே ரட்ட லங்கா மீது..!

இதற்குள்ள திலீபனாம்.. சிலையாம்.. என்று கொண்டு.. இனவாதத்தை வளர்க்கிறீங்க. திலீபன் இனவாதத்தை விதைக்கும் ஒரு சிலை. அதை இன ஐக்கியத்தை விரும்பும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டம். நாங்கள் தமிழ் வீணையையே விட்டிட்டு கொழும்பு வெத்திலையில நிற்கிறம்.. எதற்கு இன ஐக்கியத்தை கட்டி காக்கத்தானே. நாகபூசனி அம்மனை விட்டிட்டு நாகர் விகாரையை புனித பூமி ஆக்கிறம்.. எதற்கு நாங்கள் எங்கள் பூர்வ குடிகள் பெளத்தர்கள் என்பதால் தானே.

தமிழர்கள் திராவிடர்கள். ஆனால் நாங்கள் ஆரியர்கள். ஏனெனில் எங்கள் பூர்வீம மதம் பெளத்த மதம். வடக்குக் கிழக்கில் வாழ்பவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் சிங்கபாகு வழிவந்த ஆரியர்களின் வழித்தோன்றல்களே. அப்படி இருக்க.. சில பிரபாகரன்களால் ஏற்பட்ட மனக்கசப்புக்களை நாங்கள் வலு தீவிரமாக களைஞ்சு கொண்டிருக்கிற இந்த வேளையில் மீண்டும் இனவாத பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டீர்கள். நாங்களே காட்டிக் கொடுத்து உங்களைப் போட்டுத்தள்ள தயங்கமாட்டோம். 2006 இல் இருந்து 2008 வரை யாழ்ப்பாணத்தில் நடந்த களையெடுப்புப் பற்றி அறிஞ்சிருப்பியள் தானே. அது நடக்கும். கவனம்..! ஓகே..!

என்னங்க சுமா கதைவிடுகிறீங்க.... நாங்கள் சும்மா இருக்க அவங்கள் வந்து அடித்து கலவரம் செய்தவங்ளோ ??

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க சுமா கதைவிடுகிறீங்க.... நாங்கள் சும்மா இருக்க அவங்கள் வந்து அடித்து கலவரம் செய்தவங்ளோ ??

இல்லைப் பாருங்கோ.. 1952ம் ஆண்டில இருந்து சிங்களவனை கண்ணிவெடி வைச்சு கொல்லுறதையே தமிழர்கள் தலையாய கடமையாச் செய்து கொண்டு வருகினம். அதுதான் சிங்களவர்கள் பழிக்குப்பழி வாங்கி இருக்கினம். இது கூடவா தெரியாமல் இருக்கிறம். தந்தை செல்வா வைத்த பெரிய கண்ணிவெடி வெடித்து 60000 சிங்களவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழிதான் முள்ளிவாய்க்கால்..! நீங்க சரியாக சொல்லி இருக்கிறீங்கள். நாட்டு மக்களே இந்த வெடிவெள்ளியாரின் கருத்தை கவனமா கேட்டு நடவுங்கோ. இது சிங்களவர்களின் பழிவாங்கலே அன்றி.. அவர்கள் தமிழர்களை தங்கத்தட்டி வைத்து தாங்கியதே எப்போதும் வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க சுமா கதைவிடுகிறீங்க.... நாங்கள் சும்மா இருக்க அவங்கள் வந்து அடித்து கலவரம் செய்தவங்ளோ ??

1172339.jpg

1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: *

''கனம் நீதிபதி அவர்களே!

ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.

எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.

இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?

நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.

இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?

காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?

பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.

இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?

பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.

இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.

எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.

எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.

ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.

வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு - நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு - தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.

உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.

இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.

விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ''இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?'' என்றார்.

''எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.

நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸப்ரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.

* நாம் வன்முறைமீது காதல் கொண்ட

மன நோயாளிகள் அல்லர் - தங்கதுரை

(வெளியீடு: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்).

42: நீதிமன்றம் மெளனமானது!

தங்கதுரை

தங்கதுரையின் நீதிமன்ற வாதம் மேலும் தொடர்கிறது -

நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.

இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.

தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.

எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்.

இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸப்ர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?

நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.

சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா?

அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.

நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?

இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா?

இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும்.

இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே.

இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.

தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம்.

இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.

எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை.

ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.

வாழ்க தமிழ்

வளர்க தமிழ் ஈழம்

அகன்று போகட்டும் வறுமையும்

அணுவாயுதப் பயமுறுத்தலும்.

ஒழிக பசியும் பிணியும்.

ஓங்கட்டும் மனித நேயம்.

தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம் மெளனமானது.

http://www.naamtamilar.org/tamilellam%20varalaru40-50.php

கட்டுரையாளரே தானே தன்ர கையால நல்லூருக்கு நெருப்பு பந்தம் எரிவார் போல இருக்கிதே. பூசை, மந்திரம் எல்லாம் ஆரியரிண்ட விசயம்தானே. அப்பிடித்தானே யாழில ஐ மீன் யாழ் இணையத்தில படிச்சு பகுத்து அறிஞ்ச எல்லாரும் சொல்லித்தந்திச்சீனம். அது திராவிடரிண்டது - ஐ மீன் தமிழரிண்டது இல்லைத்தானே. பிறகு ஏன் நல்லூர் பற்றி கவலைப்படுறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் சிங்களவர்கள் பழிக்குப்பழி வாங்கி இருக்கினம்.

பழிவாங்கல் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். முள்ளிவாய்க்காலில் செய்ததைப் போல் மனிதாபிமான நடவடிக்கையாத் தான் 56 இலிருந்து பல பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை செய்கின்றார்கள். அது தமிழர்களை பயங்கரவாத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற அக்கறையினால் தான். அதை இனவழிப்பு என்கிறார்களே எம்மில் சில பித்தர்கள்?

அவர்கள் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவந்து கூட தங்களுக்காக அல்ல. பாவம் தமிழர்கள் ஒரு பழைய இழிந்த மொழியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறர்களே! சிங்களம் என்ற உயர்ந்த புதிய மொழியை பின்பற்ற வேண்டும் என்ற பாசம் காரணமாகத்தான்.

அவர்கள் எம்மை வந்தேறு குடிகள் என்று அழைத்தது கூட எம்மை இழிவு படுத்தவல்ல. மாறக நீங்கள் எம்மிடம் வந்த விருந்தாளிகள் என்று அன்புடன் உபசரிக்கத்தான்.

இதுவெல்லாம் புரியாமல் எல்லாளன் தொடங்கி பிரபாகரன் வரை எம் பாசமிகு சிங்கள சகோதரர்கள் மீது பயங்கரவாதம் செய்தார்களே! இவர்களை மன்னிக்கமுடியுமா? சொல்லுங்கள் வெடிவெள்ளி ... சாரி ... விடிவெள்ளி சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகளை மறுக்கும்

வரலாற்றை திரிவுபடுத்தும்

தமிழர்களது தியாகங்களை கொச்சைப்படுத்தும்

தமிழர்களது வீரத்தை விற்கும்

தமிழரது இறையாண்மையை மறுக்கும்

தமிழரது சுய உரிமை கோரிக்கையை மறுதலிக்கும்

தங்களைப்போன்றோருடன் விவாதிப்பதை நான் விரும்பவில்லை

ஏற்கவில்லை

நன்றி

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

நல்லா திங் பண்ணுறீயள்... :(

சம்பந்தர் கூட்டம் அறிக்கை கூட விடவில்லை எண்டதுக்கு நல்லதொரு சப்பு கட்டு ஆக்கும்...?? அறிக்கை கூட விடாததினால் அவர்கள் செய்ய இல்லை எண்டு நிறுவிகிறீர்களாக்கும்...??

Edited by தயா

என்னங்க சுமா கதைவிடுகிறீங்க.... நாங்கள் சும்மா இருக்க அவங்கள் வந்து அடித்து கலவரம் செய்தவங்ளோ ??

...... ஐயோ!!!! .. ஆடுக்குட்டி முட்டை இட்டு கோழிக்குஞ்சு வந்ததென்று ...... :(

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

சிந்தியுங்கள் மக்களே

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன் தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தராக்கிக்கு இப்ப சம்பந்தர் அல்லவா தேசியத் தலைவர் ?? :lol:

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசோ சிங்கள ராணுவமோ கூட இப்படி இன்னும்

கூறவில்லை.

ஆனால் தாரக்கி மட்டும் இப்படிக் கூறியிருக்கின்றார்.

தாரக்கி நீங்களும் தமிழன் தானே?

வாத்தியார்

...............

இது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்களால் கூட செய்யப்பட்டிருக்கலாம்...இச் சிலையை உடைத்து அதன்மூலம் தேர்தல்காலத்தில் தமிழர்கள் வாக்குகளை கவர்வதற்கு...ஏனெனில் சிலை உடைக்கப்பட்டதும் உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டதும் சந்தேகப்படவைக்குது ....இத் தேர்தல் காலத்தில் சிங்களவனோ இல்ல டக்லசோ இதை செய்து தங்கள் வாக்குகளை இழக்க தயாரில்லை...

ஒருதரம் சிந்தியுங்கோ...மக்களே...

தராக்கி,

தயவுசெய்து இந்தக் கருத்தை நீங்களே மீளெடுத்துக் கொள்ளவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.