Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊருக்கு போகப் போகிறீர்களா????

Featured Replies

ம்ம்ம்ம்... பல வருடம் புல வாழ்வு! ... புலத்துப் பழக்க வழக்கங்களுக்கு அடிமை! ஊருக்கு அடிக்கடி போய் அங்குள்ளவற்றையும் இடைக்கிடையாவது தொடர்வதற்கு சிங்களவன் அனுமதிக்கிறான் இல்லை!!! ... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை ... என்பார்கள், ஆனால் எமக்கு சுடுகாட்டுக்கு முன்னமே பல தொட்டில் பழக்கங்கள் மாறிவிட்டன.

இனிவருவோம் விசயத்துக்கு ... மாறியதில் ஒன்றுதான் ... கக்காக்கு குந்தும் பழக்கம்!!!

.... முன்பு ஓடியாடி வேலை செய்வோம், விளையாடுவோம் ... குந்தி இருப்பதில் எவ்வித பிரட்சனைகளும் வருவதில்லை, அது குழந்தை முதல் கிழடு வரை! ஆனால் இங்கோ வீட்டினுள் இருந்து வீட்டு வாசலில் தரித்திருக்கும் காருக்கு போவதுதான் உடலுக்கு செய்யும் மிகப்பெரிய எக்ஸஸைஸாக உள்ளது. உடம்பும் வளைந்து நெளிவதற்கு இப்போ இடமும் கொடுக்காதாம்.

... இப்போது இன்னொரு இடைவெளி பலர் ஊருக்கு போக முற்படுகிறார்கள், போய் வந்தவர்கள் உந்த குந்திய பழைய பழக்கத்தை கூறி இனிமேல் போக மறுக்கிறார்கள் அல்லது பிள்ளைகள் குந்துவதில் பிரட்சனை என்று விட்டு தப்புகிறார்கள். என்ன செய்யலாம்????

... எனது நண்பர், தனது பேஸ்புக்கில் இதற்கொரு மாற்று வழி தந்திருக்கிறார்.

modernz.jpg

.. இங்கிருந்து போகும் போது ஒரு ராய்லெட் கவரை .. அருகிலுள்ள ஆகோஸில் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியதுதான். அங்கு போனவுடன், வீட்டினுள் இருக்கும் ஒரு பழைய ரீப்போவோ/ஸ்ரூளையோ எடுத்து மேல் தட்டை தட்டி விட்டு, ராய்லெட் கவரை நாலு ஆணியால் இறுக்கி விட வேண்டியதுதான் ... கொண்டு போனது பிளாஸ்டிகானால், போகும் போது ஒரு சுப்பர்குளுவையும் கொண்டு போய் ஒட்டி விட வேண்டியதுதான், மிகுதி பக்கத்தில் தண்ணீர் வரும் குளாயில் ஒரு எக்ரென்ஷன் செய்து படத்தில் காட்டியபடி விட்டால் .... வருவது புலத்து ராய்லெட்!!!!

.. எல்லாம் ரெடி!!! ... ஆனால் இன்னொரு பிரட்சனை வருகுதே???? ... ராய்லெட் ருஷு!!! ... ம்ம்ம் ... எங்கே போவது!! ... வீட்டிலுள்ள ஏதாவது பழைய புத்தகம், பத்திரிகைகள், கொப்பிகளை சுருட்ட வேண்டியதுதான் ... அந்தரத்துக்கு பாவமில்லை ........

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊரைப் பற்றி சரியாக அறியாதவர்கள் சொல்லும் தகவல் என்று நினைக்கிறேன். உலகில் எப்போது கொமட் அறிமுகமானதோ அப்போதிருந்து யாழ்ப்பாணத்தில் கொமட் இருக்கிறது. நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அதேவேளை பழைய முறைகளையும் மக்கள் அழிக்கவில்லை. அவற்றையும் பின்பற்றுகின்றனர்.

ரொயலட் ரிசு கொழும்பில் தாராளமாக இருக்கிறது. இப்போது யாழ்ப்பாணத்திலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் கே எவ் சி.. மக்டொலாட் எல்லாம் கொழும்பில் இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு திருமலைக்கு மட்டக்களப்புக்கு வவுனியாவிற்கு மன்னாருக்கு கூட விரைவில் வந்துவிடும்.

இது முற்றிலும் லண்டனில் உள்ளவர்களின் விடுப்புப் பேச்சு என்றே நான் நினைக்கிறேன். சிறீலங்காவில் உள்ள இடங்களுக்கே சரியாக போய் அறிந்திருக்கமாட்டார்கள்.. கொழும்பு வந்து லொச்சில் நின்றுவிட்டு களவா ஓடிவந்து அசைலம் அடித்தால் எப்படி தெரியும் உலகில் என்னென்ன நடைமுறைகள் எங்கெங்க இருக்கென்று.

அசைலம் அடித்த பலருக்கு ஆர்கோஸ் ஓடர் போமையே நிரப்பத் தெரியுதில்லை. இதுக்க ஊரில கொமட் இல்லை என்று கவலைப்படுகினமாம். சிறீலங்காவிற்கு போற வெள்ளையளோ.. அது சுற்றுலாவின் சொர்க்கம் என்கிறார்கள். அவர்களுக்கு கூட அங்கு அசெளகரியம் இல்லையாம்.. ஆனால்.. வடலி வளவுக்குள்ள கருக்குமட்டைக்குள்ள குந்தி இருந்திட்டு பூவரசம் இலையால தொடச்சிட்டு ஓடினவைக்கு.... கொமட்.. ரொயல்ட் ரிசு.. இல்லையாம்.

குறைக்கண்ணோடு நோக்காமல்.. தேடிப் பாருங்கள் எல்லாம் கிடைக்கும். ஆனால் அடிமைத்தனம் மட்டும் உங்களை விட்டுப் போகாது. போற இடமெல்லாம் சிங்கள ஆமிதான்.. நின்று விடுப்புப் பார்க்கப் போகுது.. அதை மனசில நிறுத்திக் கோங்கோ..! அதுதான் பெரிய குறையா எனக்குத் தெரியுது..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அண்ணோய் நெடுக்கர்!

.. ஆடுக்குள் மாட்டை செருகுவதை நிறுத்துங்கள் ... அங்கு உங்கள் வடலிக்குள் குந்த ஆமிக்காரன் பார்ப்பான் என்றால், ஏன் அவனை விட்டனீங்கள்! ... கையை தூக்கியல்லோ சரணாகதி அடைந்தனாங்கள்!!! ... உங்கள் வீரங்களை இங்கிருந்து காட்டுவதை விட அங்கு சென்று காட்டுங்கள்!!

அது ஒரு புறம் இருக்க .. இத்தலைப்பு உங்களுக்கு ஒத்து வராது என்பது எனக்கு தெரியும் தான்!! நீங்கள் மிகப்பெரிய ததேயின் தூணல்லவா?????!!!! .. ஆனால் ... உங்களுக்கு பிடித்த தலைப்புகளாக ...

1. பெண்களின் சட்டைக்கு நடுவே இடைவெளி!

2. பெண்கள் திருமணத்துக்கு முன் ... மறைக்க!

... இருந்தால் மேல் ஏறி இருந்து கூத்தாடி இருப்பீர்கள். என்ன செய்வது அப்படி இத்தலைப்பு இல்லை!

...

இனியாவது எல்லாவற்றுக்குள்ளும் உந்த ததேயை உள்ளடடுத்தி குதப்பாதையுங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் நெடுக்கர்!

.. ஆடுக்குள் மாட்டை செருகுவதை நிறுத்துங்கள் ... அங்கு உங்கள் வடலிக்குள் குந்த ஆமிக்காரன் பார்ப்பான் என்றால், ஏன் அவனை விட்டனீங்கள்! ... கையை தூக்கியல்லோ சரணாகதி அடைந்தனாங்கள்!!! ... உங்கள் வீரங்களை இங்கிருந்து காட்டுவதை விட அங்கு சென்று காட்டுங்கள்!!

அது ஒரு புறம் இருக்க .. இத்தலைப்பு உங்களுக்கு ஒத்து வராது என்பது எனக்கு தெரியும் தான்!! நீங்கள் மிகப்பெரிய ததேயின் தூணல்லவா?????!!!! .. ஆனால் ... உங்களுக்கு பிடித்த தலைப்புகளாக ...

1. பெண்களின் சட்டைக்கு நடுவே இடைவெளி!

2. பெண்கள் திருமணத்துக்கு முன் ... மறைக்க!

... இருந்தால் மேல் ஏறி இருந்து கூத்தாடி இருப்பீர்கள். என்ன செய்வது அப்படி இத்தலைப்பு இல்லை!

...

இனியாவது எல்லாவற்றுக்குள்ளும் உந்த ததேயை உள்ளடடுத்தி குதப்பாதையுங்கோ!!

ஆட்டுக்குள் மாடு அல்ல.

இந்த விடயம் ஊரின் நடைமுறைகளை சரிவர அறியாமல் எழுதப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஏதோ கொமட்டே இல்லை என்பது போல் ஒரு கற்பனையை நகைச்சுவை என்பதன் பெயரால் விதைக்க முற்படுவது அபந்தமானது. யாழ்ப்பாணத்தில் இருந்து திருமலை வரை கொமட் இருக்கிறது. அதை முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கு அறியச் செய்யுங்கள்.

ரொயலட் ரிசுவும் இருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள் ஏதோ ஒன்றும் தெரியாத ஆக்கள் என்று லண்டனுக்கு ஒன்றும் அறியாமல் போரை சாட்டு வைத்து களவாக ஓடிவந்தவர்கள் காட்ட நினைப்பதுதான் வேடிக்கையாக நகைச்சுவையாக இருக்கிறதே அன்றி வேறல்ல. அவர்கள் அறியாதது இவை மட்டுமல்ல.. தனது நிலம் அடிமைப்பட்டு இருப்பதையும் தான்.. கொமட்டும் ரொயல்ட் ரிசுவையும் ஊரில் தேட முதல் அந்த ஊரின் அடிமைத்தனத்தை உணர்த்த வழி செய்யுங்கள்.

ஊரில் உள்ளவர்கள் தான் ஊரைக் காக்க வேண்டும் என்றில்லை. ஊரை பாதுகாக்க திராணியற்று தங்களின் சொந்த வாழ்க்கையை பாதுகாக்க போரையும் போரில் ஏற்பட்ட பலிகளையும் தமக்கான முதலீடாக்கி வெளிநாடுகளுக்கு ஒடி வந்து அசைலம் அடித்து நிரந்திர வதிவிடம் கண்டவர்களும் தான் ஊரில் எதிரி வந்து நிற்க காரணம்.

எல்லோரும் ஒன்று திரண்டு எப்பவோ போராடி இருப்பின் இன்று சுதந்திர தாயகம் எட்டப்பட்டிருக்கும். அதைவிடுத்து அவன் சாகட்டும்.. நீயோடு நான் ஓடு என்று ஓடிவந்துவிட்டு இப்போ.. ஊருக்குப் போறமாம் அங்கு கொமட்டுக்கு வழி தேடுறம் என்ற பெயரில் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஊரில் போரினால் துவண்டு கிடக்கும் மக்களுக்கு போலி "விலாசம்" காட்ட இப்படியான ஆக்கங்களை படைப்பது இன்று அதிகரித்துவிட்டுள்ளது. அதற்கு உங்கள் போன்றோர் போலி விலாசம் தேடிக் கொடுக்கத்தான் வேண்டுமா..??!

------

நான் இங்கு ஏராளமான தலைப்புக்களை எழுதி இருக்கிறேன். அறிவியலில் இருந்து அரசியல் வரை எனது சொந்த சிந்தனையில் உதித்தவை உட்பட பெறப்பட்ட சங்கதிகளையும் செய்திகளாக்கி இணைத்திருக்கிறேன். ஆனால் அவற்றில் எதனையும் கண்ணுறாத நீங்கள் நான் பெண்கள் தொடர்பில் ஆரம்பித்த தலைப்புக்களை மட்டும் கண்ணுற்றதில் இருந்து உங்களின் பார்வையும் அத்தலைப்புகளையே நாடியே நிற்கின்றது என்பதைத்தானே புலப்படுத்துகிறது.

நான் எனது ஆக்கங்களை எனது சிந்தனையில் உதிப்பவற்றை எனக்குள் எழும் ஐயங்களை மையப்படுத்தி சமூகத்தில் காண்பவற்றை அடிப்படையாக வைத்து ஆக்குகிறேன். அவை எனது புனைவுகள் அல்ல. தலைப்புகள் எழுதப்படும் விடயம் சார்ந்து அமைகிறது. பெண்கள் பற்றி மட்டும் எழுதிக் கொண்டிருப்பதல்ல எமது நோக்கம். பெண்கள் பற்றியும் எழுத நேரிடுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகைக்கு பெண்கள் சமூகத்தில் உள்ளனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்கள் என்றால் எப்போதும் அவர்களைப் பற்றிய வர்ணிப்புக்களை.. காதலை.. வைத்து மென்மையான உங்கட உழுத்த சமூகம் போலியாக காட்டும் வரைபுகளுக்குள் நின்று தான் ஆக்கம் எழுத வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பின் அதற்கு வேறு யாரையும் பார்த்து உங்கள் அறிவுரையை வழங்குங்கள். என்னிடத்தில் இது எடுபடாது என்பதை தயவோடு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி. :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அண்ணோய் நெடுக்கர்,

... கொமேட் யாழ்பாணத்திலும் இருக்கென்ற ... உங்களுக்கு தெரிந்தது, எனக்குத்தெரிய சாத்தியம் இல்லை!!! ... உங்களை மாதிரி ஊருலகம், நடப்புக்கள் தெரியாது. இங்கு வந்ததற்கு அங்கு சென்றதில்லை!!!

உங்களை மாதிரி இல்லாமல், வடலிக்குள் பிறந்து, வடலிக்குள் இருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தென்ன போய், கொழும்பு வந்து ஒருதரும் இல்லாமல் லொட்ஸில் சுருண்டு கிடந்து வந்தவர்கள்தான் நாங்கள்!!!!!

... ஆமா, நீங்கள் என்ன உஅயர்திரு குடுமபத்தில் இருந்து இலங்கை முழுவதும் சுற்றுளா அடித்து இங்கு அகதியில்லாமல் வந்தேன் என்று கூறவா ... உந்த எழுத்துக்கள்!!!

திருவாளர் உயர்திரு நெடுக்கர், உந்தப்பெயர் மட்டும் வடலிப்பெயராக தெரியுது??? .. உதை பொஸ்ஸாக மாற்றவும்... உங்கள் தகுதிக்கு ஏற்றதாக :blink:

அண்ணோய்,

...... விதைக்க முற்படுவது அபந்தமானது. ..

... கனக்க மண்டையை போடு உடையாதையுங்கோண்ணை!! :wub: ... இது நகைச்சுவை பக்கம்தான்! :blink: ... உதை அபத்தம் என்றால் ... உங்களை நான் அறிவானவர் என்றல்லவா நினைத்திருந்தேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் நெடுக்கர்,

... கொமேட் யாழ்பாணத்திலும் இருக்கென்ற ... உங்களுக்கு தெரிந்தது, எனக்குத்தெரிய சாத்தியம் இல்லை!!! ... உங்களை மாதிரி ஊருலகம், நடப்புக்கள் தெரியாது. இங்கு வந்ததற்கு அங்கு சென்றதில்லை!!!

உங்களை மாதிரி இல்லாமல், வடலிக்குள் பிறந்து, வடலிக்குள் இருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தென்ன போய், கொழும்பு வந்து ஒருதரும் இல்லாமல் லொட்ஸில் சுருண்டு கிடந்து வந்தவர்கள்தான் நாங்கள்!!!!!

... ஆமா, நீங்கள் என்ன உஅயர்திரு குடுமபத்தில் இருந்து இலங்கை முழுவதும் சுற்றுளா அடித்து இங்கு அகதியில்லாமல் வந்தேன் என்று கூறவா ... உந்த எழுத்துக்கள்!!!

திருவாளர் உயர்திரு நெடுக்கர், உந்தப்பெயர் மட்டும் வடலிப்பெயராக தெரியுது??? .. உதை பொஸ்ஸாக மாற்றவும்... உங்கள் தகுதிக்கு ஏற்றதாக :blink:

ஒன்றை சரியாக தெரிந்து கொண்டு நக்கல் நளினம் செய்ய வேண்டும். அரைகுறையாக அறிந்து கொண்டு ஊரை மதித்து வாழும் மக்களையும் சொந்த மண்ணையும் அந்நியரின் பாத கழுவிப் பிழைப்போர் மட்டம் தட்டுவதுதான் வேடிக்கையானது.

நான் பொஸ்ஸோ.. புஸ்ஸோ என்பதைக் காட்ட அல்ல இதை எழுதி இருக்கிறேன். ஊரில் நான் கண்டதையே எழுதி இருக்கிறேன். ஊரைப்பற்றிய மட்டமானவர்களின் மட்டமான மதிப்பீடு எனியும் வேண்டாம். ஊருக்குச் செய்ய நிறைய இருக்குது. அதை செய்ய முற்படுங்கோ. வேண்டும் என்றால் குறை சொல்லிக் கொண்டு திரியாமல் உந்த வெளிநாட்டு பணக்காரர்கள் ஊரில தெருவுக்கு நாலு மிக நவீன மயப்படுத்தப்பட்ட கழிப்பறைகளை அமைச்சுக் கொடுங்கோ. அது உங்களைப் போன்று ஊரில் கொமட் தேடுபவர்களுக்கும் உதவியாக பொஸ்ஸா இருக்கும். அதைவிட்டிட்டு..??! :D

அண்ணோய்,

... கனக்க மண்டையை போடு உடையாதையுங்கோண்ணை!! :D ... இது நகைச்சுவை பக்கம்தான்! :wub: ... உதை அபத்தம் என்றால் ... உங்களை நான் அறிவானவர் என்றல்லவா நினைத்திருந்தேன். :blink:

நகைச்சுவை என்பதன் பெயராலும் நச்சுக்களை விதைக்க முடியும்.

அவனவன் ஊருக்கு போறதையே மீளாய்வு செய் எங்கிறான். இது (இந்த ஆக்கம்) ஊருக்கு போய் குந்திறதிற்கு வழி தேடுது. இது.. என்னத்தைச் சொல்லுது..??! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

. அரைகுறையாக அறிந்து கொண்டு ஊரை மத்தித்து வாழும் மக்களையும் சொந்த மண்ணையும் அந்நியரின் பாத கழுவிப் பிழைப்போர் மட்டம் தட்டுவதுதான் வேடிக்கையானது
.

அண்ணோய், புல்லரிக்குதுண்ணோய்!!! நீங்கள் அங்கேயெல்லோ இருக்க வேண்டியனீங்கள் ... வந்துட்டீங்கள் ... இப்பவும் ஒரேயடியாக போகலாம் ... அங்கு உயர்திரு உங்களுக்கு கொமேட் இருக்கும் ... குந்த!!!

ததேயின் தூணான ... உயர்திரு நிடுக்கர் ... உங்களுக்கு ஏற்ற தலைபொன்றை தேடுகிறேன் ... நீங்கள் அதில் ஒரேயடியாக உட்கார்ந்திருக்கலாம் ... வெளியில் கெதியாய் போகப்போகிறேன் ... உங்களுக்காக சண்ணோ, ஸ்ராரோ ... இல்லை ஸ்போட்டோ வேண்டி வந்து தலைப்டுகிறேன் ... பொறுமை காக்கவும்!! :lol:

உயர்திரு நெடுக்கர், .. சடீரென கிச்சினுக்குள் உள்ளட்டு மூக்கு முட்ட பச்சத்தண்ணீயை குடியுங்கள் ... தற்காலிகமாவது என் மேல் உள்ள கொதி தீரும் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

.

அண்ணோய், புல்லரிக்குதுண்ணோய்!!! நீங்கள் அங்கேயெல்லோ இருக்க வேண்டியனீங்கள் ... வந்துட்டீங்கள் ... இப்பவும் ஒரேயடியாக போகலாம் ... அங்கு உயர்திரு உங்களுக்கு கொமேட் இருக்கும் ... குந்த!!!

:lol:

புல்லரிச்சா.. ஊருல போய் கன்னுக்குட்டியை மேய விடுங்க. அல்லது லண்டனில் ஒதுக்குப்புறமா செம்மறியாடு நிக்கும்.. மேய விடுங்க..!

இது நகைச்சுவை பகுதியாக்கும்..! நீங்களே சொன்னீங்க போல..! :blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஊருக்கு தங்கள் பிள்ளைகளை விடுமுறைக்காக கூட்டிப் போவதற்காகவே சிலர் நவீன வசதிகள் கொண்ட கழிவறைகளை ஊரில் கட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கையாக் சொன்னாலும் பல் வருடங்களுக்கு பின் தாயகத்தை நோக்கி செல்லும் போது சந்திக்கும் நிஜம் . கொழும்பில் வசதிகள் உண்டு. கிராமப்புற பகுதிகளில் ...சங்கடம் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அன் நெல்லை கூள் கூள்.இந்த குந்துற விசயத்துக்கு போய் இவளவு டென்சன் ஆகாதையுங்கோ :blink: அங்க போறது சரி பிழை என்டதற்கு அப்பால் சில விசயங்கள் சிலருக்கு சிரமம்தான் குறிப்பாக இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு. :lol::blink:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அன் நெல்லை கூள் கூள்.இந்த குந்துற விசயத்துக்கு போய் இவளவு டென்சன் ஆகாதையுங்கோ :lol: அங்க போறது சரி பிழை என்டதற்கு அப்பால் சில விசயங்கள் சிலருக்கு சிரமம்தான் குறிப்பாக இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு. :):)

இங்குள்ள வெள்ளையளே அங்க போய் வந்து குறை சொல்லுறதில்ல. இங்க பிறந்த எம்மவர்கள் மட்டும் என்ன.. பெரிய கொம்போடையா பிறந்திருக்கினம். எல்லாரும் மனிதர்களே. சூழ்நிலைக்கு ஏற்ப எல்லாரும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்களே. அப்படி இன்றேல் அவர்கள் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்றோ அல்லது குறைபாடுள்ளவர்கள் என்றோ தான் கணிக்கப்படுவர்.

இது ஒரு பிரச்சனை எம்மவர்கள் மத்தியில். அநாவசியமாக அங்க பிறந்தவை இங்க பிறந்தவை.. அங்க பிறந்து இங்க வந்து வெட்டினம்.. புடுங்கினம்.. என்ற போலி வரட்டுத்தனமான வாதங்கள். எந்த மனிதனும் எந்தச் சூழ்நிலைக்கும் தன்னை இசைவாக்கிக் கொண்டு வாழக் கூடியவனே. அதனை முதலில் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படையை விளங்கிக் கொள்ளாமல்.. போலித்தனமான தோற்றப்பாடுகளோடு தாயகம் வாழ் மக்களை அணுகுவதை நான் வெறுக்கிறேன். அந்த மக்கள் எந்த வகையிலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் போரால் பல ஆண்டுகள் பிந்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டியவர்கள் அவர்களை மட்டம் தட்டும் வகையில்.. தமது தற்துணிவால் எழுந்த தற்பெருமைகளை.. புகலிடத்தில் பிறந்தவர்களின் பெயரால் நிறைவேற்றுவதை.. அல்லது காண்பிப்பதை முதலில் கைவிட வேண்டும்.

இந்தக் கீழ்த்தரமான எண்ணங்களே தமிழர்களை பிரித்தாளுகிறது..! இதை கைவிடாமல் தமிழர்கள் என்றுமே ஒற்றுமையை கைக்கொள்ளப் போவதில்லை. இங்கு வெள்ளைக்குப் பயந்து அவன் முன் கூனிக்குறுகி நிற்பவர்கள் அங்கே உள்ள மக்களின் முன் நிமிர்ந்து நிமிர்த்திக் காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் யாருக்கும் வக்காளத்து வாங்க வில்லை.நீங்கள் சொல்லும் விடையங்களுடன் நானும் ஒத்து வாறன்.ஒரு உதாரனம்.இங்கு உள்ள வெள்ளைகள் பைப்(குழாய்)தண்ணீர் குடிக்க எம்மவர் போத்தல் தண்ணீர் குடுக்கினம் பிள்ளைகளுக்கு.வெள்ளைகளின் பிள்ளைகள் பூங்காவில் பிரன்டு உருன்டு விளையாடுங்கள் ஆனால் எங்கடை பெற்றோர்கள் வெறும் காலோடை நடக்க விடாதுகள்.இங்கிருந்து அங்கு போய் பிலிம் காட்டுவது பிழை என்பதில் எனக்கு எந்த கருத்து வேறு பாடும் இல்லை.நீங்கள் சொல்ல வாற விசையத்தை அமைதியா வாழப்பழத்தில ஊசி ஏத்துற மாதிரியும் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் சொல்லுங்கோ.உங்கள் திறமையை வீண் டென்சனால் வீண்ணாக்கைதையுங்கோ.(இது எனது தனிப்பட்ட ஆதங்கம்) :)

நெடுக்ஸ் அன் நெல்லை கூள் கூள்.இந்த குந்துற விசயத்துக்கு போய் இவளவு டென்சன் ஆகாதையுங்கோ :)

அதானே. நான் உங்க கருத்தை பச்சை குத்தி ஆமோதிப்பம் எண்டு பார்த்தால்.. நான் ஏற்கனவே நல்லாய் குத்திபோட்டனாம் இண்டைக்கு.

நெல்லை... உதைவிட பாம்பு, நுளம்பு உதுகளோட கக்கூசு செய்யேக்க எப்பிடி முகம்குடுத்து போராடுறது எண்டு ஐடியா சொன்னால் நல்லாய் இருக்கும். கரப்பான் பூச்சியும் தாராளமாய் இருக்கும். ஊரில இருந்தகாலத்தில நிம்மதியாய் மலசலகூடத்துக்கு போவம் எண்டால் எனக்கு வில்லன் மாதிரி வாறது இந்த மூண்டும்தான்.

நெடுக்கு, அசைலம் அடிச்சு அகதியாய் வந்தமோ எப்பிடி வந்தமோ... என்ன இருந்தாலும்.. வெளிநாட்டில மலசலகூடத்துக்கை நிம்மதியாய் இருந்து கக்கூசு செய்யமுடிகிது என்பது மாத்திரம் இல்லை... லப்டொப் பாவிச்சு யாழுக்கும் வரமுடிகிது எண்டுறது யதார்த்தம். நெல்லையிண்ட கருத்திலயும் ஒரு பொயிண்ட் இருக்கத்தான் செய்கிது.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, அசைலம் அடிச்சு அகதியாய் வந்தமோ எப்பிடி வந்தமோ... என்ன இருந்தாலும்.. வெளிநாட்டில மலசலகூடத்துக்கை நிம்மதியாய் இருந்து கக்கூசு செய்யமுடிகிது என்பது மாத்திரம் இல்லை... லப்டொப் பாவிச்சு யாழுக்கும் வரமுடிகிது எண்டுறது யதார்த்தம். நெல்லையிண்ட கருத்திலயும் ஒரு பொயிண்ட் இருக்கத்தான் செய்கிது.

நான் நினைக்கிறேன்.. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு எல்லாம் செளக்கியமே என்பது போல் கதைக்கிறீங்க என்று. இதையே ஊரில இருந்திருந்தாலும் இப்படித்தான் ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்பியள்.

என்னுடைய நிலைப்பாடு என்பது சும்மா உந்த தேவையில்லாத வெட்டிப் பந்தா காட்டாம.. போய் ஊரில உள்ள சனத்துக்கு பிரயோசனமா ஏதாவது செய்யுங்கோ.

பாலாண்ணா கூட ஒருக்கா சொன்னவர் என்று நினைக்கிறன். யாரோ அவரின்ர நண்பராம். ஊருக்கு வந்து உதவண்டாப்பா என்று சொல்ல அங்க கொமட் இல்லை என்றாராம். அதுக்கு பாலாண்ணா சொன்னாராம்.. நீ ஊரில இருக்கேக்கையே கொமட்டில இருக்கல்லையே.. வடலி வளவு தானே தேடி திரிஞ்சனி என்று. சரி பறுவாயில்லை நீ ஊருக்கு வா எங்கட பொடியள் எல்லா வசதியும் செய்து தருவாங்கள் என்று.

இப்படி கொமட்டு.. கரப்பான் பூச்சி.. சிலந்தியை காரணம் காட்டிக் கொண்டு இருங்கோ. உங்க தமிழ் ஆக்கள் இருக்கிற இடங்களில கரப்பான் பூச்சியில இருந்து எலி பூரா ஓடுது. தமிழ் கடை வழிய காஞ்சு உழுத்துப் போனதுகளை விக்கிறாங்கள்.. அதையும் வேண்டி சாப்பிட்டுக் கொண்டு.. கதையென்றால்.. ரெம்ப ஓவர் உதெல்லாம்..!

உந்த வெட்டிப் பந்தாவால் தான் தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடும் இன்றி நட்ட நடு வீதியில ஊரூரா.. அடுத்தவனட்ட வாழ பிச்சை எடுத்துத் திரிகிறார்கள். அசைலம் அடிச்சவையை வெள்ளையளே மதிக்கிறதில்ல. இதில இவைக்கு ஒரு வெட்டி பந்தா. அதுவும் ஊரில நலிஞ்சு கிடக்கிற சனத்துக்கு முன்ன போய் நின்று கொண்டு..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குந்தியிருக்கிறதாலை நன்மைகள் அதிகம் பாருங்கோ.

குந்தியிருக்கேக்கை எங்கடை வயித்துக்கை இருக்கிற கன சாமான்களுக்கு(ஈரல்,குடல்,சிறுநீரகம்)ஒரு மசாஜ் செய்யுற மாதிரியிருக்குமெண்டு பரியாரிமார் சொல்லுறாங்கள்.

கிட்டத்தட்ட இதுவும் ஒரு யோகாசனம் மாதிரியேல்லே

எனக்கென்னவோ..

வடலியோ பத்தையோ காத்தோட்டமாய் அரக்கிஅரக்கி இருக்கிற சந்தோசம்

கதிரையிலை இருக்கிறமாதிரி இருக்கேக்கை வராது

சிரிப்போம் சிந்திப்போம் என்று போட்டு,

கடிப்போம் கடிபடுவோம் என்று கருத்து வைக்கிறீயள் , :)

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை, வேலை தலங்களில் வியட்னம் நாட்டை சேர்ந்தவர்கள் கொமட்டின் மேல் குந்தி இருந்து காலை கடனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு பின்னர் வெளியில் எழுதி போட்டார்கள் " கொமட்டில் குந்தி இருந்து காலை கடன் செய்வது ஆபத்தானது என்று.இப்படியும் கேஸுகள் இங்குண்டு. :):lol:

இப்படி கொமட்டு.. கரப்பான் பூச்சி.. சிலந்தியை காரணம் காட்டிக் கொண்டு இருங்கோ. உங்க தமிழ் ஆக்கள் இருக்கிற இடங்களில கரப்பான் பூச்சியில இருந்து எலி பூரா ஓடுது. தமிழ் கடை வழிய காஞ்சு உழுத்துப் போனதுகளை விக்கிறாங்கள்.. அதையும் வேண்டி சாப்பிட்டுக் கொண்டு.. கதையென்றால்.. ரெம்ப ஓவர் உதெல்லாம்..!

எனக்கு கக்கூசு இருக்கேக்க கரப்பான், சிலந்தி, நுளம்பு எல்லாம் சுத்திவரநிண்டால் நிம்மதியாய் குந்த முடியாது. வேற வழி ஒண்டும் இல்லையெண்டால் ஒண்டும் செய்ய ஏலாது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் இருக்கேக்க எப்பவும் ஒருத்தன் நல்ல தெரிவைத்தான் நோக்குவான். எனக்கு வெளிநாட்டு மலசலகூடம் செளகரியமாய் தெரியுது. உங்களுக்கு வடலியுக்கை சுத்தி வர நுளம்புகள் கூடிநிண்டு குண்டியில குத்தேக்க, இடைக்கிடை பாம்பு வந்து பீதி கிளப்ப, குழியுக்கால கரப்பானுகள் வந்து எட்டிப்பார்க்க நிம்மதியாய் கக்கூசு இருக்கலாம் எண்டால்.. பிரச்சனை இல்லை, அது உங்க தெரிவு. எல்லாரும் உங்கமாதிரி மனவலிமை உள்ளவர்களாய் இருக்க ஏலாதுதானே. என்னமோ முந்திய மாதிரி ஷெல் விழும், பம்பர் அடிக்கும் எண்டு அந்தரத்தில பங்கருக்கை ஓடுறதுக்கு ஆயத்தமாய் நிண்டுகொண்டு கக்கூசு இருக்கிற நிலமை இனி ஊரில சனத்துக்கு இல்லையெண்டுறது கொஞ்சம் ஆறுதலான விசயம். :):lol:.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கக்கூசு இருக்கேக்க கரப்பான், சிலந்தி, நுளம்பு எல்லாம் சுத்திவரநிண்டால் நிம்மதியாய் குந்த முடியாது. வேற வழி ஒண்டும் இல்லையெண்டால் ஒண்டும் செய்ய ஏலாது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் இருக்கேக்க எப்பவும் ஒருத்தன் நல்ல தெரிவைத்தான் நோக்குவான். எனக்கு வெளிநாட்டு மலசலகூடம் செளகரியமாய் தெரியுது. உங்களுக்கு வடலியுக்கை சுத்தி வர நுளம்புகள் கூடிநிண்டு குண்டியில குத்தேக்க, இடைக்கிடை பாம்பு வந்து பீதி கிளப்ப, குழியுக்கால கரப்பானுகள் வந்து எட்டிப்பார்க்க நிம்மதியாய் கக்கூசு இருக்கலாம் எண்டால்.. பிரச்சனை இல்லை, அது உங்க தெரிவு. எல்லாரும் உங்கமாதிரி மனவலிமை உள்ளவர்களாய் இருக்க ஏலாதுதானே. என்னமோ முந்திய மாதிரி ஷெல் விழும், பம்பர் அடிக்கும் எண்டு அந்தரத்தில பங்கருக்கை ஓடுறதுக்கு ஆயத்தமாய் நிண்டுகொண்டு கக்கூசு இருக்கிற நிலமை இனி ஊரில சனத்துக்கு இல்லையெண்டுறது கொஞ்சம் ஆறுதலான விசயம். :) :).

பிரச்சனை வெளிநாட்டுக் கக்கூசில இல்லை. கக்கூசு எங்க இருந்தாலும் அதைப் பராமரிக்கிறதிலதான் இருக்குது அதன் சுகாதாரம் என்பது. நானும் ஊரில தான் இருந்து வந்திருக்கிறன். எங்கட வீட்டில என்றுமே கக்கூசு (குளியறையுடன் கூடியது) என்றுமே கரப்பான் பூச்சி.. பாம்பு வந்ததில்ல. பயந்து கொண்டிருந்ததும் இல்ல. வெளிநாட்டில ஒரு குட்டி பாத்துரும். திரும்பவும் ஏலாது நிமிரவும் ஏலாது. அடங்கி ஒடுங்கி நின்றுதான் எல்லாத்தையும் செய்ய வேண்டும். உங்களுக்கு அடக்குமுறைக்குள்ள இருக்கிறது பிடிக்கும். ஏன்னா அங்கு ஊரில நீங்கள் அனுபவிக்காத வசதி இருக்குது என்ற எண்ணம் உங்களை ஆக்கிரமிச்சு நிற்குது. இந்த நிலையில.. ஒரு நாளில ஒரு தடவை கக்கூசுக்கு இருக்கிறதிற்கு 15 நிமிடம் பொம்பர் வந்து சுத்துறது.. கஸ்டமா போயிருக்கின்னா.. கொடுமை.

நான் பொம்பர் அடிக்கிற காலத்தில விடியவா ரொயலட் போயிடுவன். ஏன்னா பொம்பர் அப்ப எல்லாம் அதிகாலையில வந்து குண்டு போடுறது வெகுகுறைவு. அதேவேளை கொழும்புக்கு வந்த போது பொலிஸ்காரனும் ஆமிக்காரனும் செக்கிங்குக்கு எந்த நேரம் இல்லை என்றில்லாமல் வந்து நிற்பாங்கள். அதுதான் பொம்ரை செல்லை விட மோசமான பீதி. பொம்பர் செல்லுக்கு பங்கருக்கையாவது இருந்து போட்டு வந்திடலாம். இது எங்கையும் போக முடியாது. பொலிஸ் ஸ்ரேசனுக்கு வா என்றால் போய் மண்டி இட்டுக் கொண்டு நிற்க வேண்டியதுதான்.

எனக்கு பொம்பர் செல் கரப்பான் பூச்சி.. சிலந்தி எல்லாத்தையும் விட கூடிய சுதந்திர உணர்வை ஊர் ரொயலட் தந்ததை சொல்வதில் ஒளிப்பு மறைப்பு இல்லை. ரொயலட்டை நீங்கள் பராமரிக்கிறல தான் அங்கு ஜந்துகள் வராமல் ஜேம்ஸ் வராமல் இருக்க செய்ய முடியும். வெளிநாட்டிலும் அதே தான் நிலை..! வெளிநாட்டு (பொதுவா) ரொயலட் சிறுசு.. ஒடுக்கம்.. அந்த வகையில் அசெளகரியமும் கூட..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

modernz.jpg

.. எல்லாம் ரெடி!!! ... ஆனால் இன்னொரு பிரட்சனை வருகுதே???? ... ராய்லெட் ருஷு!!! ... ம்ம்ம் ... எங்கே போவது!! ... வீட்டிலுள்ள ஏதாவது பழைய புத்தகம், பத்திரிகைகள், கொப்பிகளை சுருட்ட வேண்டியதுதான் ... அந்தரத்துக்கு பாவமில்லை ........

Toilet_Rolls.jpgpampers-788470.JPGpampers.jpg

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் உள்ள, சில கடைகளில் ரொய்லற் ரிஷு , பம்பர்ஸ் எல்லாம் தாராளமாக கிடைக்கின்றது.

சின்ன ஒரு பிரச்சினை , பாவித்த பம்பர்ஸை ரொய்லற்றுக்குள் போட்டு தண்ணி அடிக்காமல், அல்லது குப்பைக்குள் போடாமல் கிடங்கு வெட்டி தாட்டு விடுங்கள்.smiley-toilet11.gif

அதனை கிடங்கில் தாக்காமல் விட்டால், நாய்கள் அதனை கவ்வி கொண்டு போய்...... உங்கள் ஊர் சந்தியில் போட்டு மானத்தை வாங்கிவிடும்.smiley-ashamed008.gif

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

பிரச்சனை வெளிநாட்டுக் கக்கூசில இல்லை. கக்கூசு எங்க இருந்தாலும் அதைப் பராமரிக்கிறதிலதான் இருக்குது அதன் சுகாதாரம் என்பது. .......

எனக்கு பொம்பர் செல் கரப்பான் பூச்சி.. சிலந்தி எல்லாத்தையும் விட கூடிய சுதந்திர உணர்வை ஊர் ரொயலட் தந்ததை சொல்வதில் ஒளிப்பு மறைப்பு இல்லை. ரொயலட்டை நீங்கள் பராமரிக்கிறல தான் அங்கு ஜந்துகள் வராமல் ஜேம்ஸ் வராமல் இருக்க செய்ய முடியும். வெளிநாட்டிலும் அதே தான் நிலை..! வெளிநாட்டு (பொதுவா) ரொயலட் சிறுசு.. ஒடுக்கம்.. அந்த வகையில் அசெளகரியமும் கூட..! :D:)

என்ன நெடுக்கர், என்னா, பராமரிக்கப் போகிறீங்களோ? அதுவும் வடலி பிறீரேஞ்சை!!! ... ஓம், வடலிகளுக்கு மாபிளும் போட்டு, அடைக்கடி பிளீச்சால் மொப்பிங்கும் கொடுத்தால் ... சுகாதாரம்தான்! :lol:

இங்குள்ள வெள்ளையளே அங்க போய் வந்து குறை சொல்லுறதில்ல. இங்க பிறந்த எம்மவர்கள் மட்டும் என்ன.. :lol::)

ஓஓஓஒ.... அண்ணோய், வெள்ளையள் அங்கு போய் எங்கடை குத்துகிறதுகளிலைதானே இருக்கினம், குறை சொல்ல???????!!!!!!!! அவங்கள் 3ஓ, 4ஓ, 5களில் போய் வெஸ்ரேன் ரேஞ்சுக்கு இருந்து வருவான்! .... நீங்கள் ....ம்ம்ம்ம்ம்ம் :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் உள்ள, சில கடைகளில் ரொய்லற் ரிஷு , பம்பர்ஸ் எல்லாம் தாராளமாக கிடைக்கின்றது.

.

2003 இலிலேயே எல்லாம் அங்கு நான் வாங்கினேன்

அதைவிட வண்டில்களில் நாம் இங்குஎடுப்பது போல் எடுத்துவந்து டிக்கற்களை மெசினில் பிடித்து காசு கட்டும் முறையும் அப்போதே அங்கு இருந்தது

சில குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டி அவற்றை சீர்செய்தும் இருந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.