Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வற்றாப்பளையில் அதிசயம்! கிலி கொண்ட படையினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேறெந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் குடியமர்த்தப்படாத நிலையில், வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசும் படைகளும் கூடிய கவனம் செலுத்தியமை குறித்து நம்பமுடியாத தகவல்கள் இலங்கைப் படையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி தெரியவந்துள்ளதாவது:-

அப்பகுதிக்கு மீளக்குடியமரச் சென்ற மக்களது ஓலைகளால் ஆன வீடுகள் அனைத்தும் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வீடுகள் ஏன் எரிக்கப்பட்டன? என அப்பகுதி மக்கள் இலங்கைப் படையினரைக் கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த படையினர், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் சலங்கை ஒலிகள் தொடர்ந்து கேட்டுவந்ததாலேயே தாம் வீடுகளுக்கு நெருப்பு வைத்தாகத் தெரிவித்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டிய போதிலும் ஓலை வீடுகள் மட்டுமே எரிந்தழிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதேவேளை தமது படைத்துறை அதிகாரி ஒருவர் வற்றாப்பளை அம்மன் ஆலயப் பகுதிக்குச் சென்ற போது அவரை வெள்ளை நாக பாம்பு ஒன்று கலைத்ததாகவும், அதில் இருந்து அவர் ஓடித்தப்பிச் சென்றதாகவும், அதேபோன்று ஆலய வளாகத்தில் வைத்து படையினரை ஆறு தடைவைகள் பாம்புகள் கலைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளை அடுத்து அந்தப் பகுதிக்குப் பொறுப்பான இலங்கைப் படை அதிகாரி அந்தப் பகுதி பிரதேச செயலர் ஊடாக வற்றாப்பளை அம்மன் ஆலய பூசாரியார் மற்றும் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு ஆலயத்தினை பராமரிப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கைக்கு முற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் முகாம்களிலும் முகாம்களில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்துவந்த மக்கள் வற்றாப்பளைக் கிராமத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.

மக்கள் குடியமர்த்தப்பட்டதன் பின்னர் வற்றாப்பளை கிராம எல்லைக்குள் எந்த ஒரு படைமுகாமையும் வைத்திருப்பதை இலங்கைப் படையினர் தவிர்த்துள்ளதுடன், அந்தக் கிராமத்தில் மாட்டிறைச்சி அழிப்பதற்கும் தடைவிதித்துள்ளனர்.

இதனைவிடவும் கள்ளு உற்பத்திக்கும் அந்தக் கிராமத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வற்றாப்பளை தவிர்ந்த அதன் அயற்கிராமங்கள் எவற்றிலும் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை அம்மனின் அருளால் மேலைத்தேயர்கள் ஆலயத்தில் இருந்து நந்திக்கடல் ஊடாக தலை தெறிக்க ஓடியதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வைகாசி மாதம் நடைபெறவேண்டிய பொங்கல் நிகழ்வு போர் ஆக்கிரமிப்புக் காரணமாக நடைபெற்றிருக்கவில்லை.

இந் நிலையில் இன்று திங்கட்கிழமை ஆலயத்தில் 'வளந்து நேர்தல்' எனப்படும் நிகழ்வு நடைபெறுகின்றது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாகவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாகர்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பூர்வீக நாகதம்பிரான் ஆலயப்பகுதியில் முகாம் அமைத்துள்ள இலங்கை இராணுவத்தினரும் இதே அனுபவங்களை சந்திக்க நோ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கழுவிக் காயவிட்டிருந்த சீருடை பைகளுக்குள் பாம்புகள் போய் இருந்து அவர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அதன் காரணமாகவே அங்கிருந்த இராணுவத்தினர் உடனடியாக அப்பகுதி உதவி அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு ஆலயத்தை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பணித்ததாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது ஆலயம் திறந்து பூஜைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. எனினும் அப்பகுதி மக்களை மீளக்குடியமர இன்னமும் இலங்கை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.

அத்துடன் அக்கிராமத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தினரால் உடைத்து தரைமட்டமாக்கியுள்ளதாகவும், பலரின் வீடுகள் இருந்த அடையாளங்களே இல்லாத அளவுக்கு கற்கள், ஓடுகள் மற்றும் மரங்கள் ஆகிய அனைத்துப் பொருட்களையும் இராணுவத்தினர் ஏற்றி வேறு இடங்களுக்கு கொண்டுசென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.sankamam.com

நந்திக்கடலின் அடுத்த கரையில் பரிதவித்த மக்களுக்கு உதவாத அம்மா பாம்பை விட்டு துரத்தினவவோ...???

எத்தினை சனம் அம்மா காப்பாத்து எண்டு அலறி அடிச்சு செத்து போய் இருக்கும்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் வேறை என்னத்துக்கோ பிளான் பண்ணுறான் போலை கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடியுமட்டும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்ப நாகாஸ்திரம் பாவிச்சு என்ன பயன்.குமாரசாமியர் சொன்னது மாதிரி பெரிய பிளான் இதுக்குள்ளை இருக்குது எண்டு மட்டும் விளங்குது.

என்ன அம்மா பாம்பையும் பூச்சியையும் ஏவி விடுறாவாமோ? நல்ல விசயம். இனி பல்லி, பூரான், கரப்பொத்தான் இதுகளையும் வெளியிலை விட்டுத் தன்ரை சக்தியைக் காட்டலாம்.

அட! வெய்யில் காலத்திலை சூடு தாங்கேலாமால் பாம்புகள் உடுப்புகளுக்கை ஏறி இருக்கிறது வழமை தானே. முந்தி சனத்தின்ரை உடுப்புகளுக்குள்ளையும் ஏறி இருக்கிறது வழமை தான். அதைப் போய் அம்மா சக்தியைக் காட்டிட்டா அது இது எண்டு சொல்லிறதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

வற்றாப்பளைக் கோயிலுக்குள்ளை கிடந்த மரம் தடியையே காப்பாத்த முடியாத அம்மா ஆமிக் காறனைக் கலைக்க வெளிக்கிட்டிருக்கிறாவோ?.... கேக்கிறவன் கேணையனா இருந்தா அம்மா பிளேனும் ஓட்டுவா......

  • கருத்துக்கள உறவுகள்

போதுவாக சிங்களவர்கள் பாம்புகளைக் கொல்வதில்லை. சில பாம்புகளை அப்பகுதியில் கண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது.

போதுவாக சிங்களவர்கள் பாம்புகளைக் கொல்வதில்லை. சில பாம்புகளை அப்பகுதியில் கண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது.

அவர்கள் போதுவாக தமிழர்களைத்தான் கொள்வார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் சுனாமி வந்து எங்கட சனம் இறந்தபின்பு கடலில் மகாவிஸ்ணு, அனுமார், ஜேசு, மேரியம்மா, அந்தோனியார், அல்லா , ஐயப்பன் போன்றோர் தோன்றியதாக வதந்தி பரப்பினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மாதனமுத்தா கதைகளை இப்போ நம்புவதில்லை. ஆனால் சிங்களவரின் மாதனமுத்தா கதைகளை தமிழர்கள் நம்ப தொடங்கி விட்டார்கள்.

வன்னியில் ஆட்களை விட பாம்புகள் கூட உள்ளன.இந்த ஆறு பாம்புகள் தான் ஆமியை கிலி கொள்ள வைத்துள்ளது என்றால் பாருங்கோவன். :wub::)

:wub::):D கற்பனை குதிரை நல்லா துள்ளி துள்ளி தான் ஓடுது. அதுக்கு இங்கே எல்லோரும் வாயை பிழப்பது தான் சகிக்க முடியாமல் உள்ளது.

:wub::):D கற்பனை குதிரை நல்லா துள்ளி துள்ளி தான் ஓடுது. அதுக்கு இங்கே எல்லோரும் வாயை பிழப்பது தான் சகிக்க முடியாமல் உள்ளது.

ஓமண்ணை.

குதிரையைப் பார்த்து நாங்கள் வாயை ஆவெண்டு வீணி வடிக்கிரம். எங்கன்ர வாயைப்பர்த்து நீங்க்களுமல்லோ வீனிவடிக்கிறிங்கள் அண்ணை.

போதுவாக சிங்களவர்கள் பாம்புகளைக் கொல்வதில்லை. சில பாம்புகளை அப்பகுதியில் கண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது.

அது சரி அவங்கள் தமிழரைதான் பொதுவா கொல்வாங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

போதுவாக சிங்களவர்கள் பாம்புகளைக் கொல்வதில்லை. சில பாம்புகளை அப்பகுதியில் கண்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது.

பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒரு சிரிப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சியில் தமிழர்களின் இன்றைய நிலையை அருமையாக காட்டினார்கள்

இரண்டு பௌத்தபிக்குகள் வழியால் நடந்து வருவார்கள்

குறுக்கால் பூச்சி போகும் உடனே நின்று அது போனதும் போவார்கள்

அடுத்து எறும்பு போகும் அதையும் போகவிட்டு அதை துன்பப்படக்கூடாது என்று இருவரும்பேசியபடி போவார்கள்

அடுத்து ஒரு தமிழனைக்கண்டு விட்டு இருவரும் கத்துவார்கள் சுடு சுடு கொல்லு அவனை என்று.

தொலைக்காட்சிகாறர் சொல்லி முடிப்பார்

இதுதான் தமிழரின் இன்றையநிலை என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன அம்மா தன்ட ஆப்பரேசனைத் தொடங்கீட்டா போல! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களனின் வேலையாக இருக்காது. இந்திய அறோகராவின் வேலையாகத்தான் இருக்கும்.

புலி செத்துபோட்டுது என்று மெகாசீரியல் படம் காட்டியாச்சு........ இனி புலியின் பெயரால் ஒன்றையும் ஒட்டு குழுக்கள் செய்ய முடியாது உள்ளது. அதுதான் டில்லியில் இருந்து அம்மன் வந்து இறங்கியுள்ளா........... இனி பாம்மையும் நெருப்பையும் வைத்தே தமிழ் என்று யாரும் வன்னி பக்கம் வாய்திறந்தால் பார்த்துகொள்வா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.