Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் கட்சி சிங்களம் எதிர்கட்சி தமிழாகவர ஒரு சந்தர்பம் !!

Featured Replies

-

55 சதவீதமான மக்களே வாக்களிப்பு!!

"...

இலங்கையின் ஏழாவது நாடாளுமன் றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 52 முதல் 55 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் செய லகமும் கண்காணிப்பாளர்களும் தெரி வித்துள்ளனர்."

55 சதவீதமான மக்களே வாக்களிப்பு!! நாங்கள் ஒருமையாக போய்யிருந்தால் !!!

ஆளும் கட்சி சிங்களம் எதிர்கட்சி தமிழாகவர ஒரு சந்தர்பம் !! ...எங்கள் ஒருமையின்மை கரணமாக அது நழுவப் போகிறதா?

-

Edited by ஜெகுமார்

உங்கட பகிடிக்கு இண்டைக்கு எங்களால் சிரிக்க முடியவில்லை மன்னிக்கவும்.

ஒற்றுமையா ஒண்டுக்கு கூட போகமுடியாது. பாராளுமன்றத்துக்கு எப்படிப்போறது?

பாராமன்றம் போறேண்டாலே உடன தமிழ் ஈழத்தை கதைச்சு கொண்டுவாங்கோ எண்டால் எங்கேருந்து கொண்டுவாறது?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுபான்மை இனம் எதிர்க்கட்சியாக வருவதால் ஏதாவது நன்மையுண்டா...?

இன்றைய சூழ்நிலையில் வெற்றியைக்கொண்டாடிவரும் சிங்களமக்கள் மத்தியிலும் மகிந்தவின் காய் நகர்த்துதலாலும் பல ஆண்டுகளுக்கு மகிந்தவின் ஆட்சியே இலங்கையில் இருக்கப்போகின்றது

ஆனால் இதில் தமிழர்களுக்கு சார்பானதாக ஏதாவது நடக்குமாக இருந்தால் அது ரணிலுடன் போட்டிபோடுவதையே தமிழர்தரப்பு தற்போது செய்யமுடியும் என்று எனக்கு தோன்றுகிறது

அதாவது மகிந்த மிகப்பெரும் பெரும்பாண்மையுடன் வெல்வார் என்பதும்

அதனால்ரணில் மிகப்பெரும் தோல்வியை தழுவுவார் என்பதும் ஊகிக்க கூடியதே.

அப்படியாயின் எதிர்க்கட்சியாக எவர் வருவது என்பது சிந்திக்கப்படவேண்டியதாகும்

சிறுபான்மை இனத்தவர் எல்லோரும்ஒன்றாகி சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகளை முன்வைத்து போட்டியிட்டு எதிர்க்கட்சியாக வந்தால் சர்வதேசரீதியில்ஏதாவது நன்மையுண்டா...? என்பது என் கேள்வி மட்டுமே....

இது பற்றி நான் அன்றே குறிப்பிட்டேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68775

Edited by விசுகு

  • தொடங்கியவர்

77 லில அப்படி நடந்ததாம் ?

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்பெரும் நகைச்சுவை என்று சொல்லலாம்!

எதிர்கட்சியாக தமிழர்தரப்பு வந்தபோது தமது உறுப்பினர்களைக் கொடுத்து, எதிர்கட்சியாகக் கூட தமிழ்க்கட்சிகள் வந்துவிடக்கூடாது என்ற பாரம்பரியம் மிக்க சனநாயக நாடாக்கும்.

animated16s.gif

Edited by nochchi

சர்வதேசத்து மக்களுக்கு (அரசுகளுக்கல்ல) எமது பிரச்சனையை ஜனநாயகரீதியாக எடுத்துச்சொல்ல ஒரு சரியான வழி. . .

உலகச் சரித்திர ஏட்டில் எமது பிரச்சனையை நிரந்தரமாக பொறித்து வைப்பதற்கு ஒரு சரியான வழி. . .

அதோட இனறைய நிலமையில தமிழர் எதிர் கட்சியக முடிந்தால் இலங்கைப் பாராளுமன்றம் சீன இந்திய பேச்சுத் தளமாக் கூடும். . .

அல்லது மகிந்தவும் சம்பந்தரும் "வாட மச்சான், எங்களுக்கு உந்த அன்நிய நாடுகள் தேவையில் நாங்களே பிரச்னைகளை தீர்துக்கொள்ளலாம்" எனறு கதையை முடித்துவிடக்கூடும் . . . இரசாயன குண்டு வித்தவரிட போய் நஷ்டஈடு கேட்கக்கவும் கூடும். . . !
^_^:)

-

Edited by ஜெகுமார்

-

77 லில அப்படி நடந்ததாம் ?

-

77ல நடந்ததாம் இல்ல நடந்தது. அனால் அன்று எனக்கு அது தெரியாது ஆனாலும் பின்நாளில் அறிந்து கொண்டேன்.

அனால் இன்று 77 அல்ல 2010 அதுதான் அப்படிச் சொன்னேன்.

அத்தோடு இன்று நாம் அழிந்த மாதிரி என்றும் நடந்திருக்குமோ தெரியாது. பண்டாரன்னியன் சங்கிலியன் காலத்தில என்னவோ எனக்குத் தெரியாது.

சாதாரணமா ஒரு விபத்தை பார்த்தவருக்கே மனோவியல் ஆலோசனை அது இது என்று சுழலும் உலகம் ஒரு மாபெரும் அவலத்தின் பின்னர் எங்களை சாதாரணமாக சனநாயக முகமூடி அணியச் சொல்லுது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் தமிழர் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் கிடைக்குமென உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்

... எங்களை சாதாரணமாக சனநாயக முகமூடி அணியச் சொல்லுது.

எங்களை சாதாரணமாக சனநாயக முகமூடி அணி எண்டு

உலகம் சொல்லுது, கவனமாகக் கேட்கத்தான் வேண்டும் ... இன்று வேறு வழியில்லை . . . ? ...

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயக்குமார்

உங்கள் விருப்பமும் ஆதங்கமும் அதுவாக இருக்கலாம், ஆனால் தற்போது இலங்கையில் உள்ள தேர்தல் முறையில் சிறுபான்மையினர் பிரதான எதிர் கட்சியாக வருவது மிகக் கடினம்...விகிதாசார பிரதினிதுவம் மூலம் அந்த மாவட்டங்களில் தோல்வியடைந்த, அல்லது 2 அல்லது 3 நிலையில் உள்ள கட்சிகளுக்கும் ஆசனங்கள் கிடைப்பதால் தோல்வியடைந்த பெரும்பான்மையின கட்சிகள் எங்களை விட கூடுதலான ஆசனங்கள் பெறுவதற்கான சந்தர்பங்கள் மிக அதிகம். நாங்கள் சில மாவட்டங்களிலோ அல்லது தொகுதிகளிலோ வெல்லுவதால் எதிர் கட்சியாக வர முடியாது..அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது நடைமுறையில் இருந்த தேர்தல் வேறு ..இப்போது வேறு..

எங்களை சாதாரணமாக சனநாயக முகமூடி அணி எண்டு

உலகம் சொல்லுது, கவனமாகக் கேட்கத்தான் வேண்டும் ... இன்று வேறு வழியில்லை . . . ? ...

-

ம்ம்ம்..... நீங்கள் முறையான இடம் பார்த்துத்தான் ஆணியை அடிக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

ஜெயக்குமார்

உங்கள் விருப்பமும் ஆதங்கமும் அதுவாக இருக்கலாம், ஆனால் தற்போது இலங்கையில் உள்ள தேர்தல் முறையில் சிறுபான்மையினர் பிரதான எதிர் கட்சியாக வருவது மிகக் கடினம்...விகிதாசார பிரதினிதுவம் மூலம் அந்த மாவட்டங்களில் தோல்வியடைந்த, அல்லது 2 அல்லது 3 நிலையில் உள்ள கட்சிகளுக்கும் ஆசனங்கள் கிடைப்பதால் தோல்வியடைந்த பெரும்பான்மையின கட்சிகள் எங்களை விட கூடுதலான ஆசனங்கள் பெறுவதற்கான சந்தர்பங்கள் மிக அதிகம். நாங்கள் சில மாவட்டங்களிலோ அல்லது தொகுதிகளிலோ வெல்லுவதால் எதிர் கட்சியாக வர முடியாது..அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது நடைமுறையில் இருந்த தேர்தல் வேறு ..இப்போது வேறு..

உண்மை, விளக்கத்திற்கு மிகவும் நன்றி .

ஒரு நாள் இப்படியும் நடந்தது !!

post-6858-12645953738736_thumb.png

தற்போதைய கட்சிகள் எல்லாம் சிங்களவரை தமிழரிற்கும் தமிழரை சிங்களவரிற்கும் காட்டி வாழ்வதில் தான் காலம் கழிக்கின்றன . . .

ஒரு நாள் !

தமிழர் கட்சிகள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதற்கான "இலங்கை ஒன்றியம்" (இரண்டு தேசக் கூட்டுறவு) என்ற அடிப்படையில் அமைந்த, நாட்டை அன்நிய ஆதிக்கங்களுக்கு விற்காத ஒரு திட்டத்தை தீட்டி அதை சிங்களவரிற்கும் விளங்கவைத்தால் . . . வரங்காலத்தில் எங்களில் ஒருவர் மகிந்தவி இடத்திற்கு வர முடியுமா ?

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கில் தமிழர் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் கிடைக்குமென உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வளவு ஆசனங்களைப் பெறவேண்டும் பிரதான எதிர் கட்சியாவதற்கு ?

-

ரணிலின் UNPஐ விட தமிழருக்கு 1 ஆசனம் கூட கிடைச்சா

  • தொடங்கியவர்

ரணிலின் UNPஐ விட தமிழருக்கு 1 ஆசனம் கூட கிடைச்சா

முன்பு ஒரு நாள் இப்படியும் நடந்தது !!

post-6858-12645953738736_thumb.png

-

முன்பு ஒரு நாள் இப்படியும் நடந்தது !!

-

அப்படி மக்கள் முற்று முழுதாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கூட, அவர்களால் பிரதான பாரளுமன்ற எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை தற்போது உள்ள விகிதாச்சார பிரதினிதித்துவ தேர்தலில் பெறமுடியாது. ஏன் எனில் சிங்கள மக்களின் தொகை 72 % இலும் அதிகம் தற்போது. அத்துடன் சிங்கள மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இப்போ ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் முடிவுகளை கொண்டு எப்படி பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள், ஒவ்வொரு கட்சியும் எவ்வாறு உறுப்பினர்களை பெற்றுக்கொள்கிறன என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

Backgrounder: Mathematical complexity in Sri Lanka's parliamentary election

http://english.people.com.cn/90001/90777/90851/6943700.html

Edited by KULAKADDAN

உங்களுக்கு தெரியாததா? முந்தின தேர்தல் முறயில சிரிலங்கா சுதந்திரக் கட்சி 9 ஆசனத்தயும், ஒரு சிற்பான்மையின கட்சி (த வி கூ) 18 ஆசனங்களோட எதிர்க்கட்சியா 1977இல வந்தாலும் தமிழனுக்கெண்டு ஏதும் நன்மை வந்தகோ? இனி சிறுபான்மையினம் எதிர்க்கட்சியா வரக்கூடாது எண்டுதானே ஜேயார் விகிதாசார தேர்தல் முறைய கொண்டுவந்தார். தான் கொண்டுவந்த அரசியலமைப்பை இனிவருகிற எந்தஒரு கட்சியும் மாத்தவும் ஏலாம, மூண்டில்ரண்டு பெரும்பான்மை பெறவும் முடியாம செய்த நரித்தனம் செய்தவரெல்லோ?

  • தொடங்கியவர்

Backgrounder: Mathematical complexity in Sri Lanka's parliamentary election

http://english.people.com.cn/90001/90777/90851/6943700.html

இணைப்பிற்கு நன்றி குலகண்டன் !

Thursday's Sri Lankan parliamentary election promises to be the last of its kind. The new parliament members are expected to shed the very system. The system elected parliaments in 1989, 1994, 2000, 2001 and 2004.

Here is a look at the mathematical wonder of appointing Members of Parliament (MP) based on the proportional representation (PR) system of election in Sri Lanka.

A total of 196 MPs elected from 22 electoral districts would join 29 MPs to be elected based on the national PR to make the total number of MPs in parliament to 225.

Every voter in addition to his vote for the party or independent group of his choice, is entitled to indicate his preference for not more than three candidates nominated by the same political party or independent group. But the preference votes could be cast only if he/she votes for the party/independent group of his choice.

The first step is the determination of the political party/ independent group which has polled the highest number of votes in the particular electoral district or in other words the party or group which won the district. The candidate who is in that party' s list with highest number of preference votes gets elected. This is popularly known as the "Bonus Seat."

Every political party/independent group polling less than 5 percent of the total votes cast in the district is disqualified from having any candidate elected. The votes polled by such parties are deducted from the total votes polled in the district. The balance is known as the "relevant number of votes."

Assuming the final result of the Colombo district would be as shown below;

Number of votes polled in the district 1,200, 000

Votes polled by party A 645, 000

Votes polled by party B 350, 000

Votes polled by party C 150, 000

Votes polled by party D 55, 000

The A party candidate who has secured the highest number of preference votes will get elected as an MP.

The number of votes polled by D would be deducted from the total votes polled. The relevant number of votes for Colombo would then be 1,145,000

The relevant number is then divided by one less than the number of members to be elected from Colombo, i.e.: 19-1 = 18

1,145,000/18 = 63,611

The D gets eliminated as they have polled less than 5 percent.

Thereafter number of votes polled by Party A, B and C is divided by 63,611 as given below;

Party A gets the bonus seat: 1

Party A's total votes 645,000/63,611=10 remainder 8, 890

Party B's total votes 350,000/63,611= 5 remainder 31, 945

Party C's total votes 150,000/63,611= 2 remainder 22, 778

The total number of MPs elected so far would then be 18. Still one more seat remains to be filled up.

The Party B would be entitled to this 19th seat as it has polled the highest remainder.

In case where remainders are level-pegging, the last seat would be decided by drawing lots.

The national list of MPs is created as follows:

After 196 members have been elected, the Commissioner of Elections will apportion the remaining 29 seats among the political parties/independent groups in the same proportion as the votes polled countrywide by each political party/independent group.

For example:

In the last general election the total votes cast was 7,943,706. When it was divided by 29 (seats) the result was 273,920.

Party A polled 3,887,823/273,920=14 seats

Party B polled 3,498,370/273,920=13 seats

Party C and D who polled 143,307 and 132,461 were entitled to the remaining two seats.

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

உங்களுக்கு தெரியாததா? முந்தின தேர்தல் முறயில சிரிலங்கா சுதந்திரக் கட்சி 9 ஆசனத்தயும், ஒரு சிற்பான்மையின கட்சி (த வி கூ) 18 ஆசனங்களோட எதிர்க்கட்சியா 1977இல வந்தாலும் தமிழனுக்கெண்டு ஏதும் நன்மை வந்தகோ? இனி சிறுபான்மையினம் எதிர்க்கட்சியா வரக்கூடாது எண்டுதானே ஜேயார் விகிதாசார தேர்தல் முறைய கொண்டுவந்தார். தான் கொண்டுவந்த அரசியலமைப்பை இனிவருகிற எந்தஒரு கட்சியும் மாத்தவும் ஏலாம, மூண்டில்ரண்டு பெரும்பான்மை பெறவும் முடியாம செய்த நரித்தனம் செய்தவரெல்லோ?

அப்ப ... நாளை ...நாங்கள் ஒன்றுபட்டால் கூட உந்தத் தடைகளைப் பாய முடியாது என்கறீர்கள் ... ம்ம்ம் ...!

-

Edited by ஜெகுமார்

அப்ப ... நாளை ...நாங்கள் ஒன்றுபட்டால் கூட உந்தத் தடைகளைப் பாய முடியாது என்கறீர்கள் ... ம்ம்ம் ...!

-

சம்பந்தரையும், சுரேஸ் பிரேமசந்திரனையும் அயல் நாடு கூப்பிட்டு எதிர்க்கட்சியாக இருக்க சொல்லுதோ தெரியாது.

ஏனெண்டா உங்களுக்கு தடையா இரூந்தவையை வெளியேற்றி தோற்கப் பண்ண்ணி போட்டியள்.

இனி உங்க பாடு தான்

ஏனெண்டா உங்களுக்கு தடையா இரூந்தவையை வெளியேற்றி தோற்கப் பண்ண்ணி போட்டியள்.

இனி உங்க பாடு தான்

தோற்கப்பண்ணினது எண்டதை விட அவர்களுக்கு ( ஆக குறைந்தது) வாக்களிக்க போன மக்களிடம் (18%) செல்வக்கு இருக்கவில்லை என்பதே உண்மை. குறைந்தது வாக்களிக்க போன மக்களிடம் செல்வக்கு இருக்கும் என்றால்/ அல்லது மக்கள் மனங்களில் குறிப்பிட்ட வெட்பாளர்களை பற்றி மிக நல்ல அபிப்பிராயம் இருக்கும் என்றால், அவர்கள் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காக ஆவது தமிழ் காங்கிரசுக்கு வாக்களித்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள சங்கடமாக இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அது தான்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, விளக்கத்திற்கு மிகவும் நன்றி .

ஒரு நாள் இப்படியும் நடந்தது !!

post-6858-12645953738736_thumb.png

தற்போதைய கட்சிகள் எல்லாம் சிங்களவரை தமிழரிற்கும் தமிழரை சிங்களவரிற்கும் காட்டி வாழ்வதில் தான் காலம் கழிக்கின்றன . . .

ஒரு நாள் !

தமிழர் கட்சிகள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதற்கான "இலங்கை ஒன்றியம்" (இரண்டு தேசக் கூட்டுறவு) என்ற அடிப்படையில் அமைந்த,
நாட்டை அன்நிய ஆதிக்கங்களுக்கு விற்காத ஒரு திட்டத்தை தீட்டி அதை சிங்களவரிற்கும் விளங்கவைத்தால் . .
. வரங்காலத்தில் எங்களில் ஒருவர் மகிந்தவி இடத்திற்கு வர முடியுமா ?

-

நல்ல யோசனைதான்.இதை மாதிரியான கருத்ததை தான் கள உறவு சுகனும் சொல்கிறார்.ஆனால் கேட்பவர் தான் யாரும் இல்லை.நாங்கள் முதல் இந்திய ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேன்டும்.அதுக்காக யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தப்பு இல்லை.ஆனல் நடப்பது

என்ன.நாங்கள் இங்கை கனவுலகில் புடுங்குப்ட்டுக்கொன்டிருக்க இந்தியன் வீடு கட்ட சீமந்து கொடுக்கிறான்.அதை நாங்கள் செய்தால் என்ன.இது ஒரு சிறு உதாரனம் மட்டுமே.

  • தொடங்கியவர்

உலகப்பெரும் நகைச்சுவை என்று சொல்லலாம்!

எதிர்கட்சியாக தமிழர்தரப்பு வந்தபோது தமது உறுப்பினர்களைக் கொடுத்து, எதிர்கட்சியாகக் கூட தமிழ்க்கட்சிகள் வந்துவிடக்கூடாது என்ற பாரம்பரியம் மிக்க சனநாயக நாடாக்கும்.

animated16s.gif

உந்தப் பூனை, என்ன ...

விழுந்து விழுந்து சிரிக்குதோ?

அல்லது விழுந்து விழுந்து விறாண்டுதோ? :rolleyes::wub:

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆளும் கட்சி சிங்களம் எதிர்கட்சி தமிழாகவர ஒரு சந்தர்பம் !!

இனி மேல்......

எதிர்க்கட்சியாக வரவோ.......

பிரதமராக வரவோ......

சான்ஸே இல்லை.

அப்படி கிடைதாலும்?.... பிக்குமார் விடுவாங்களா.....? ஒட்டுக்குழுமார் விடுவாங்களா......?

பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நிறைவேறும் போது .....

புலி இருக்கும் காலத்திலை கூட.... ரணில் கட்சியும் அதுக்கு ஆதரவாத்தான் கை உயத்தும். மகேஸ்வரனை தவிர.

இப்ப... எல்லாரையும் சுட்டுக் கொண்டாச்சு...

இனி....... ஆருக்கு வேண்டும் உந்தப் பதவிகளெல்லாம்.......

.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை அன்நிய ஆதிக்கங்களுக்கு விற்காத ஒரு திட்டத்தை தீட்டி அதை சிங்களவரிற்கும் விளங்கவைத்தால் .

சிங்களவருக்கு விளங்கும் நிச்சயமாக. ஆனால் தமிழருக்கான உரிமை என வரும் போது நிச்சயமாக அவர்கள் மாற இன்னுமொரு நூற்றாண்டு ஆகலாம். :rolleyes::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.