Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது.

Featured Replies

திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது. விடயங்களை நீட்டாமல் நேரிடையாக சுருக்கமாகவே கேட்க விருப்புகிறேன்.

முக்கியமான ஒன்று இது உங்களுக்காகன விமர்சனமே அல்லது வீன்பழியே அல்ல. தமிழீழம் என்ற சொல்லுக்காக மட்டுமே உயிரையும் இழக்க புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னமும் தயாரகவே உள்ளார்கள் இதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த கடிதத்திற்கான முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.

அதற்குமுன் எனது பங்கிற்கும் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியல்ல இது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தடங்கள் ஏற்படுத்தும் சிந்தனைக்குறைபாடன வேலையும் இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்பும் அதே வேளையில் பல நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களின் நிலைப்பாடனதே எனதும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களுடனான பலமான கருத்துப்பரிமாற்றத்தின்பின்பே இக்கடிதம் வரையப்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முக்கியமானது நாடுகடந்த அரசின் கோட்பாடுகள் எமது தேச நலன்களுக்கு எதிராக இருப்பது. அடுத்தது தேர்தல் விதிமுறைகள்.

உதாரணம்: தமிழீழத்தில் இருநாடுகள் தேசியக்கொடி ஏற்காதது போன்றது மிக முக்கியமானது.

புலம்பெயர் மக்களிடம் நேரடி விவாதங்கள் மூலமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் இந்த முக்கியமான விடயத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தன்னிச்சையாக இந்த முடிவுகள் எட்ட காரணங்களை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீங்கள் அறிவித்தபடியே நடைபெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமிழினம் பேரழிவை சந்திப்பதை தவிர்க்க இயலாது போய்விடும்.

இன்று நீங்களும் சரி நாங்களும் சரி உலகிற்கு தெரிவதற்கும் உலகம் உங்களை அறிவதற்கும் காரணம் எமது தேசியத் தலைவரும் அவர் வழி வந்த விடுதலைப்புலிகளும் அவர்கள் செய்த தியாகங்களும்தான். அவ்வழிகாட்டியவர்களின் தீர்க்கமான போரட்ட சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் மாற்ற உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?.

விடுதலைப்புலிகளின் சிந்தனையும் கோட்பாடும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் விருப்பமே அன்றி தனிநபர்களுடையது அல்ல. ஆகவே அதை மற்ற வேண்டிய தேவையின் அவசியம்தான் என்ன? எமது மக்களும் மாவீரர்களும் நேசித்து நெஞ்சை நிமிர்த்தி வணங்கிய கொடியினைஇ எமது மக்கள் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சுவிட்டு கண்கள் தளும்ப இந்தக்கெடியினை ஏற்றி மீண்டும் எப்போது எமது விடுதலை வீரர்கள் வணங்கப்போகிறார்களே என ஏங்கும் கொடியினைஇ இளையோர் கை சேர்ந்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் எழுட்சியும் வீரமும் தந்திட்ட கொடியினைஇ பாரில் நாம் தமிழரென எம்மை அடையாளப்படுத்திய கொடியினைஇ நீங்கள் மட்டும் ஏற்ற மறுத்ததன் மர்மம்தான் என்ன.

இது தீவிரவாதிகள் கொணர்ந்த கொடி ஆகவேதான் என எமக்கும் தீவிரவாதம் காட்ட நினைக்கின்றீர்களா?.அப்படி நீங்கள் எதிர்க்கவில்லையென்றால் ஏன் நாடுகடந்த அரசின் கொடி புலிக்கொடி என அறிவிக்கவில்லை. இல்லை இவற்றை தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் தீர்மானிப்பார்கள் என்றால் ஏன் முன்கூட்டியே கோட்பாடு வரையப்பட்டது. அனைத்து வரைவுகளையும் தீர்மானிக்கும் பொறுப்புக்களையும் பிரதிநிதிகளிடமே விட்டிருக்கலாமே.

தேர்தலை நடத்தும் பொறுப்பை மட்டும் வகிப்பதோடு நிறுத்தியிருக்கலாமே. சிலது மட்டும் இப்பொழுது மற்றையது பிற்பாடு என ஏன் தள்ளாட்டம். வெளிப்படையானது என்றால் தடைகளை நேரிடையாக மக்களிடம் அறிவிக்கலாமே. முஸ்லிம் மக்களை நாம் வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. அவர்களும் தமிழர்கள் போன்று அனைத்து சுதந்திரத்துடனும் எதிர்கால தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களினது விருப்பமும்.

தமிழீழத்தில் அனைத்து சமூக மக்களும் சரி நிகரான பேதத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் எமது தேசியத் தலைவரின் விருப்பமும் கூட. இதை அறியாதவர்கள் அல்லர் எமது மக்கள். அனைத்து தரப்பு மக்களின் விருப்பமும் அதுவே. விரும்பும் விரும்பாத பட்சத்தில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படியான மிக முக்கியமான விடயங்களை மக்களுக்கு முன் நேரடி விவாதத்திற்கு விட்டிருக்கவேண்டும்.

விடயம் இப்படியிருக்க முஸ்லிம் சகோதரர்களுக்கு தனி நாடு ஆசை காட்டி எதிர்கால சந்ததியினர்க்கு பெரும் துரோகம் இழைக்கும் இந்த இகழ்ச்சியான சிந்தனையை உங்களுக்கு தந்தவர்கள் யார்?. விடாமல் மீண்டும் வேற்றுமையை தேற்றுவித்து பகைமையை உருவாக்கி தீராத போராட்டத்தையும் பேரிழப்பையும் எமக்கு ஏற்படுத்துவதுதான் உங்கள் திட்டமா?.

தேர்தலுக்கு வருவோம்...

முக்கியமானவற்றைப் மட்டும் இப்போது பார்ப்போம்.

1.தேர்தலில் நிற்பதற்கு ஆயிரம் பவுண்ஸ்கள்?!!

2.காவற்துறையின் நற்சான்றிதழ்?!!

3.அந்தந்த நாட்டில் வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!!

முதலாவது ஆயிரம் பவுண்ஸ்கள் யார் முடிவெடுத்தது. சரி ஆயிரம் பவுண்ஸ் கேட்ட நீங்கள் இளையோர்களை எப்படி எதிர்பார்ப்பீர்கள்?. ஒரு மனிதனின் சராசரி வருமானமே 800 முதல் 850 பவுண்ஸ்கள்தான். அப்படியிருக்க படித்துக்கொண்டு மிகுதிநேரத்தில் வேலைசெய்யும் ஒருவருடைய வருமானம் எவ்வளவாக இருக்கும் என நினைக்கினறீர்கள்? சரி படிக்காத இளையோர்களை எடுத்துக்கொண்டால் ஒருமாதத்திற்கு மேற்பட்ட வருமானத்தை உங்களுக்கு தந்தால் அவர்களின் அந்த மாத குடுப்பச் செலவை யார் அண்ணா ஏற்பார்? தமிழீழத்திற்காக உயிரையும் கூட கொடுப்பார்கள் ஆயிரம் பவுண்ஸ்களையா கொடுக்கமாட்டார்கள் என கேட்கின்றீர்களா?? அப்படிக் கேட்டாலே நீங்கள் யார் என்பதை மக்கள் இலகுவில் ஊகித்துக்கொள்வார்கள்.

ஆகவே நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்படியானால் எப்படித்தான் அரசு நடத்துவது என்கின்றீர்களா?. பிரித்தானியா ஏற்பாட்டாளர்களே கூறினார்களே இதுவரை நடந்த கூட்டங்களுக்கே 45ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் செலவாகியது என்று. சாதாரண விளக்க கூட்டமே 5ந்து நட்சத்திர விடுதியில்தானே பல பல ஆயிரம் பவுண்ஸ்கள் செலவழித்து நடந்தது அதுபோல நடத்த முடியாத?

நானே பல முறை நட்சத்திரக் கூட்டங்களுக்கு வர முயன்றும் முடியவில்லை அங்கு வருவதற்கும் பணம் தர வேண்டுமாமே பல நுறு!. அப்படியிருக்க சாதரண மக்கள் எப்படி உங்கள் கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை பெற முடியும் என நினைத்தீர்கள்?. அனைவருக்கும் எப்படி உங்களுடன் கருத்துக்கள் பரிமாறியிருக்கமுடியும் அனேக நேரத்தில் உங்கள் பேச்சை ஒளிபரப்ப ஸ்கைப் கூட வேலை செய்வதில்லையாமே! அதைக்கூட முளுமையாக ஒழுங்கு செய்யத்தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி அண்ணா?

சரி பணத்திற்கு வருவோம். எனக்குத் தெரிந்து பிரித்தானியாவில் ஜநூறு பவுண்ஸ்களும் இந்தியாவில் 30 ஆயிரம் ரூபாக்கள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆவதற்கு தேர்தல் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் உங்களுக்கு தருவதற்காக தரவுகள் எடுக்கவில்லை எனக்கத் தெரிந்தவையே இவைகள் ஆனாலும் பொய்யில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஆயிரம் கேட்பதேன் நானே நேரிடையாக விசாரித்தேன் காரணம் கூரினார்கள் ஒன்று பலர் போட்டிக்கு வரக்கூடாது என்பது ஒன்று முக்கியமாக அவர்கள் கூறியது பலர் என்பதன் அர்த்தம் எதிரிகளையும் துரோகிகளையும் மகிழ்வாகவே இருந்தது எச்சரிக்கையாக இருக்கின்றர்களே என்று ஆனால் இன்று பல விடயங்களில் பலமாக இருப்பது எதிரியும் துரோகிகளும்தான் அவர்களுக்கு இந்த ஆயிரம் என்பது மிக சொற்பமான தொகையே.

எதிரிகளும் துரோகிகளும் இதற்குள் இறங்குவதென்று முடிவெடுத்து விட்டாலே அவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்குமா??. அடுத்தது அவர்கள் கூரியது இந்தப்பணம் அப்படியே தமிழீழ அரசுக்குச் செல்லும் அரசின் தேவைக்குப் பயன்படும் என்று. தேர்தலில் தோற்றால் கட்டுப்பணம் போய்விடும் வென்றால் திருப்பித் தருவீர்களா? மற்றது குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் ஓட்டுப் பெற்றாலும் கட்டுப்பணம் திருப்பித்தரப்படும் என்று தெரிந்திருக்கின்றேன் தருவீர்களா?.

அரசுக்குச் இந்தப்பணம் செலவுக்கு உதவும் என்கின்றீர்கள் சரி அந்தக் செலவுக்கான கணக்குகளை கட்டுப்பணம் செலுத்தியவர்களிடமாவது காட்டுவீர்களா?. தேர்தலுக்காக அனைத்துவிடயங்களிலும் சட்டத்தை பின்பற்றும் நீங்கள் பண விடயத்தில் மட்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என்பது எவ்விதத்தில் நியாயம்? சரி பண விடயத்தை இத்தோடு முடிப்போம். அடுத்து காவற்துறையின் சான்றிதழ். அதாவது எனக்கு எவ்விதமான வழக்கும் இல்லை நான் அப்பழுக்கற்றவன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நல்ல விடயம்தான் சான்றிதழ் கோட்பது தவறில்லைதான். ஆனால் யாரிடம் கோட்கின்றீர்கள் தெரியுமா? சென்ற வருடம் இதே மாதம் பல இலட்சம் மக்கள் கூடி போரை நிறுத்து எமது மக்களின் உயிரோடு விளையாடாதே என முழங்கிய பல இளையோர்களுக்கு இன்று வரை நீண்டுகொண்டே செல்கிறது பிரித்தானிய நீதிமன்றின் பிடியானை ஓ பரமேஸ்வரனுக்கு ஏதே கேஸ் இருக்குப் போல அதுதான மனுசன் இப்படிக்கத்துறான் என்பார்கள்.

எனக்கு பிரித்தானியாவில் ஒரு வழக்கு இருப்பதாக நிரூபித்தாலும் அவர்களுக்கு வாழ்நாழ் அடிமையாக இருப்போன். எனக்கு பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று சரி இதை விடுவோம். ஆகவே போராட்டத்தில் பங்கு பற்றி காவற்துறையோடு முரன்பட்டவர் முட்டிமோதியோர் நான் புலி என்னையும் பிடி சிறையெடு என கதறியோர் என பெரிய பட்டியலே அடங்கும் பிரித்தானியா பிரஜா உரிமை கேட்க போன இடத்திலும் இதைக்காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு.

இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது ஆனாலும் பெரும்பாலும் நீங்கள் அழைக்கும் இளையோர்களே. அப்படியிருக்க இவர்களுக்கு எப்படி நற்சான்றிதல் தருவார்கள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?ஆகவே தொலைநோக்குள்ள நீங்கள் எதிர்பார்ப்பது எவ்வித வீரியமான போராட்டங்களில் பங்கெடுக்காத தூர நின்று வேடிக்கை பார்தவர்களைத்தானே அன்றி போராட்டவாதிகளை அல்ல. நல்லது. ஆகவே இதிலும் குற்றச்செயல்கள் பட்டியலிட்டு தகுதி பெறும் பெறாதவை என வரையறுக்கப்படல் வேண்டும்.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் விடுதலைக்குப் போராடி தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் அவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் அப்படியா?. அடுத்தது வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!! நீங்கள் கூறும் காரணங்கள்.. வேறு நாடுகளில் கூட்டங்கள் நடக்கும்போது அவர்கள் கண்டிப்பாக பயணிக்க வேண்டும். ம்ம்ம் சரி இந்தியாவில் இருந்து ஜந்து பிரதிநிகளை தேர்ந்தெடுக்கப்போகின்றீர்களே அவர்களுக்கு இந்திய அரசாங்கமும் நீங்கள் கூட்டங்கள் நடத்தப்போகும் நாடுகளும் விசா தரும் என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?

பிரித்தானியாவில் அனேகமானேருக்கு பிரித்தானியாவில் வசிக்கலாம் எனவும் பல பேருக்கு விசா வழங்குவது இன்னும் நிழுவையில் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை. இதற்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?.அடுத்து இலங்கைப் புத்தகம் வைத்திருப்பவர்களும் ரவல் டொக்கிமெண்டு வைத்திருப்பவர்களும் நீங்கள் அழைக்கும் நாடுகளுக்கு வர முடியும் என்பதையாவது உங்களால் உறுதி செய்ய முடியுமா?

ஏனெனில் பிரிட்டனில் இருந்து பிரான்ஸ்சுக்கும் பிரான்ஸ்சில் இருந்து பிரிட்டனுக்கும் வரவே எவ்ளவே பேர் எனக்கு தெரிந்தே அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே அப்படி அவர்கள் வரமுடியாத பட்சத்தில் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்? இன்று தொழில் நுற்பம் வியப்புமிக்க வகையில் வளர்ந்திருக்கம் நிலையில் றூற்றுக்குமேற்பட்டவர்களை பல நாடு கடந்து ஒட்டுமொத்தமாக பல இலட்சம் பவுண்ஸ்களையும் ஈரோக்களையும் டொலர்களையும் செலவிட்டு நீங்கள் நடத்தப்போகும் கூட்டங்களுக்கு செலவழிப்பதைவிட இன்றைய தேவையுணர்ந்து பல தேவைகளுக்காக காத்திருக்கம் எமது தேச மக்களுக்காக செலவிடலாம்.

ஒரு பாரளுமன்றத்தையே கொண்டுசெல்வது எத்தகைய சிரமம் ஆனால் நீங்கள் நாடு நாடாக தமிழீழ பாரளுமன்றத்தை பல இலட்சங்கள் செலவில் கொண்டுதான் சென்றாகவேண்டுமா?. நாடுகடந்த அரசு தேவையா இல்லை என்பதல்ல எமது விவாதம். தமிழீழ அரசு நிச்சயம் தேவை அதில் எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் சரிசெய்ய வேண்டும் என்பதே எமது அவா. ஏனெனில் எதிர்கால சந்ததியிடமும் போராட்டத்தை ஒப்படைத்து வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம் என்பதே எமது எண்ணம்.

அனைத்தையும் திறந்துவிட்டுவிட்டு என்னதான் செய்வது அப்படியெல்லாம் விடமுடியாது என்கின்றீர்களா? முடியும் நீங்கள் அறிவித்த விதிமுறைகளில் சிறப்பானது 100 கையொப்பம் மற்றும் விலாசம் பெற்றுவர வேண்டும் என்பது.100 கையொப்பத்தை 200 ஆக்குங்கள் மக்களுக்கு தெரிந்தவர்களும் வந்த மாதிரி இருக்கும். வீடுவீடாக ஏறி இறங்கி ஆதரவுகேட்டமாதிரியும் இருக்கும்.

இதுநாள்வரை வீடு வீடாக சென்றவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும். நாட்டுக்கு உழைப்பதென்றால் என்வென்றும் தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும்.

இதில் துரோகிகளே எதிரிகளோ வர வாய்ப்பே இருக்காது ஏனெனில் மக்கள் இப்போது அனைவரையும் அறிந்திருக்கின்றார்கள். என்னுடைய வரிகள் உங்கள் மனதை காயப்படுத்தியிருக்கும் ஆனாலும் தவிர்க்க இயலாதது. காயங்களை தாங்க இயலாவிட்டால் போராட்டத்தில் இருக்கமுடியாது என்பது நீங்கள் உணராதது இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றியுடன்

சு.பரமேஸ்வரன்

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா!

தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்டிவதைக்க தமிழினம் துடிதுடித்துத் தவித்துப்போயிருந்த காலத்தில், நாடுகடந்த தமிழீழம் என்ற ஒற்றைவரி, தமிழர்களை சற்று நிமிர்த்தி உட்கார வைத்திருக்கின்றது. எதிர்காலம் பற்றிய ஒருவிதமான நம்பிக்கையை விதைத்திருக்கின்றது. மீண்டும், சிரிக்க ஆரம்பித்திருக்கின்றோம். கால்களை மெல்ல நிலத்தில் ஊன்றி நிமிர்வதற்கான ஒரு தென்பு கிடைத்திருக்கின்றது.

புலத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கையைச் சிதைத்தழிக்கும் நடவடிக்கைகளில், சிலர் ஈடுபட்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது.

இது குறித்து நீங்கள், வரைந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஊடகங்களில் வாசித்தேன். முதல் வெளிவந்த மடலைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு மடல் வரையவேண்டும் என நினைத்தேன் பின் அது அப்படியே போய்விட்டது. இன்று நீங்கள் வரைந்திருக்கும் இரண்டாவது மடல் கண்டு இதனை வரைகின்றேன்.

உங்கள் முயற்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கிலும், தடை ஏற்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து, நீங்கள் வேதனைப்படுவதும், உங்கள் முயற்சிகளை இடையில் நிறுத்திவிட நீங்கள் முயற்சித்து பின் அதிலிருந்து மீண்டதாகவும் இதுவிடயங்களில் மிக நெருக்கமானவர்களினூடாக அறிந்தேன். வேதனைப்பட்டேன். அதனால், இதனை வரைகின்றேன்.

அண்ணா!

இது வரலாறு. உங்கள் மீது சுமத்தியிருக்கும் பெரும் பணி. எமது தேசியத் தலைவர், எத்தனை துன்பங்களை, எத்தனை நெருக்கடிகளை, எத்தனை அவமானங்களை, எத்தனை ஆபத்துக்களைச் சுமந்து கல்லில் நார் உரிப்பதுபோல இந்த விடுதலை இயக்கத்தை கட்டிவளர்த்திருப்பார்? எண்ணிப்பாருங்கள். சுயநல சிந்தனையுடைய யாழ்ப்பாண சமூகத்தில் இருந்து அதி அற்புதமான தியாக மனிதர்களை உருவாக்க அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்?

இன்று, உலகத்தமிழ் சமூகத்தை, நாடு பற்றிய இனம் பற்றிய சிந்தனையுடன் அக்கறையுடன், தமது இனத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புடன், உணர்வுள்ள மக்கள் சமூகமாக மாற்ற அவர் புரிந்த தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் நினைத்துப் பார்க்கமுடியாதவை.

விரும்பியோ விரும்பாமலோ, குடும்பத்திற்கு வழிகாட்டவந்த ஒரு மூத்த சகோதரன்போல பெரும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றீர்கள்.

குழப்பவாதிகள், குழப்படிக்காரர், தங்கள் அதிகார இருப்பு ஆட்டங்கண்டுவிடும் என்ற பயத்தில் இருப்பவர்கள், தங்கள் பிழைப்பில் மண்வீழ்ந்துவிடும் என அச்சப்படுபவர்கள், தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் தங்களின் அனுமதியுடனேயே நடைபெறவேண்டும் என்று, தலைமைக்குப் புறம்பாக சிந்திக்கத் தலைப்படும் குட்டிக் குட்டி குறுநில மன்னர்கள் இப்படியாக பலர் குறுக்கிடுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பயணப்பட வேண்டியது, தமிழ்மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களினது தலையாய பணி.

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள்.

அதிகாரங்களை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு, மக்களைப் பிழையாக வழிநடத்துபவர்கள், அவர்களே சில தமிழ் ஊடகங்களையும் தம்கையில் வைத்திருக்கின்றனர். மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் இவர்களின் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது.

தமது தேவைக்கு ஏற்ப எங்கும் உடைவுகளை மேற்கொள்வதே இவர்களின் தற்போதைய பணி. தாயகத்தில், தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதும் இவர்களின் வேலையே. புலத்திலும் தமிழர்களின் பலத்தைச் சிதறடிப்பது இவர்களின் தற்போதைய பணி. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் சங்கங்கள் குறித்து மக்கள் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

தாயகத் தமிழர்கள், இந்த பிரகிருதிகளின் முயற்சிக்கு தகுந்த பாடத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் கருவிகளாகச் செயற்பட்ட மனிதர்கள்தான் பாவம். ஆனால் அவர்களும் தமது பிழைகளை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே என்போன்றவர்களின் விருப்பம்.

எந்த நல் முயற்சியும், உடனடியாக வெற்றிபெற்றுவிடாது. அதற்குக் காலம் எடுக்கும்.

காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும்.

உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம்.

அன்புடன்

ராஜநாதன்

thanks

nathakeetham@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

சு.பரமேஸ்வரன்

இன்னும் ஒரு மாரித் தவக்கை.

tamilvalg_poster.jpeg?rnd=0.06809604376655165

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிதங்கள் பறக்குது....சங்கரி ஐயாவ மிஞ்சிடுவினம் போல கிடக்கு..... :lol::lol:

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊ

இன்னும் ஒரு மாரித் தவக்கை.

tamilvalg_poster.jpeg?rnd=0.06809604376655165

:lol::D

கடிதங்கள் பறக்குது....சங்கரி ஐயாவ மிஞ்சிடுவினம் போல கிடக்கு..... :lol::lol:

நாங்கள் போட்டி போட கூடாதோ?

ஓ நீங்கள் நினைப்பது புரிகிறது

கடந்தவை தோல்விகள் அல்ல, பாடங்கள். கொடுத்த விலைகள் அதிகமாக இருந்தாலும், படித்த பாடங்களை, பரிசோதிக்கும் களங்களைத் தவறவிடக்கூடாது.

நாடு கடந்த தமிழீழ அரசும் அது போன்ற ஒரு பரிசோதனையே. ஆனால் சிங்களத்தால், தொடக் கூட முடியாத முன்னெடுப்பு இது. இந்திய பார்ப்பனியக் கொள்கை வகுப்பாளர்களால்

எதிர்வு கூற முடியாத ஒரு அரசியல் பொறி. இதன் பலமும் பலவீனமும் நாங்கள் ஒவொருவரும் தான்.

சிங்களமோ, பார்ப்பனியமோ விலை பேச முடியாத ஒரே சொத்து, எமது நம்பிக்கை, மனஉறுதி.

இதை உடையவிடாமல், விலை பேசி விக்காமல், இரும்பொத்த மனவலிமையுடன் செயல் வலிமையும் கூட்டினால்,

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!

நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் வாக்களியுங்கள், உங்கள் உறவுகளையும், நண்பர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி.

இந்தியா நாடாளுமன்றத்தேர்தல் வரும் போது, ஜெயலலிதாவை வாழ்த்தி புலம் பெயர்ந்த தமிழர்கள் கடிதம் எழுதினார்கள். சிறிலங்கா நாடாளுமன்றத்தேர்தலின் போது , சம்பந்தருக்கு ஒரு கண்டனக் கடிதம் என்றும், கஜேந்திரனுக்கு ஆதரவுக் கடிதம் என்றும் எழுதினார்கள். இப்பொழுது நாடுகடந்த தமிழிழம் தேர்தல் என்றதும் உருத்திரகுமாரனுக்கு கடிதம் எழுதுகிறார்கள். சங்கரி, கலைஞரை விட அதிக கடிதம் எழுதி சாதனை படைக்கிறார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

கடிதம் எழுதுங்கோ விவாதியுங்கோ

போட்டிபோடுங்கோ சண்டை பிடியுங்கோ

ஆனால் போட்டிக்கு என்னொரு நாடுகடந்த அரசு என்று கிளம்பாதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவை தோல்விகள் அல்ல, பாடங்கள். கொடுத்த விலைகள் அதிகமாக இருந்தாலும், படித்த பாடங்களை, பரிசோதிக்கும் களங்களைத் தவறவிடக்கூடாது.

நாடு கடந்த தமிழீழ அரசும் அது போன்ற ஒரு பரிசோதனையே. ஆனால் சிங்களத்தால், தொடக் கூட முடியாத முன்னெடுப்பு இது. இந்திய பார்ப்பனியக் கொள்கை வகுப்பாளர்களால்

எதிர்வு கூற முடியாத ஒரு அரசியல் பொறி. இதன் பலமும் பலவீனமும் நாங்கள் ஒவொருவரும் தான்.

சிங்களமோ, பார்ப்பனியமோ விலை பேச முடியாத ஒரே சொத்து, எமது நம்பிக்கை, மனஉறுதி.

இதை உடையவிடாமல், விலை பேசி விக்காமல், இரும்பொத்த மனவலிமையுடன் செயல் வலிமையும் கூட்டினால்,

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!

நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் வாக்களியுங்கள், உங்கள் உறவுகளையும், நண்பர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி - தெளிவான கருத்து. அதுவே எனதும்.

ஏனோ சிலர் இதைப் புரிந்துகொள்கிறார்களில்லை.

அல்லது புரியாதவர்கள் போல நடிக்கிறார்கள்.

79cedcfc1dfae49b557abfb8f1e885d6.gif

Edited by vanangaamudi

பாவம் உருத்திர குமார் ஐயாவும் லண்டன் பூசாரிகளின் ஆட்டத்திற்கு எடுபட்டுப் போனாராம். நா.க.த முக்கிய உறுப்பினர் ஒருவர் முறுகலாக மனவேதனையுடன் புலம்பினார். வன்னிக்கே ஆப்படிச்ச பூசாரிமாரா கொக்கா....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரனுக்கு...

ரொரன்ரோவிலிருந்து நேசன் ஆல் எழுதப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010 07:01

போராட்டத்தின் இறுதி நாட்களில் நீங்கள் நடாத்திய உயிர் போராட்டத்துக்கு தலைவணங்கும் அதே வேளை, போராட்டத்தின் முடிவுரையை எழுதிய புலம்பெயர் புண்ணாக்குகளுடன் நீங்களும் இணைகின்றீர்களா என்ற சந்தேகத்தை தந்த நாடு கடந்த அரசுக்கான மடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். நாடு கடந்த அரசை பெயரளவில் வைத்திருக்க விரும்பும் சில சுயநலவாதிகளையும் உங்களையும் ஒப்பிட எனக்கு மனதில்லை.

வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் தலைவர் மாவீரர் என்று கூறும் போது நெஞ்சு குளிர்கின்றது. ஆனால் அந்த வீரர்களின் தியாங்களை பற்றி பேசும் போது அவர்கள் விட்டுச் சென்ற பாதையை தொடர நாம் என்ன செய்ய போகின்றோம்.?

அவர்களை புதைத்த விதைகுழிகளை கூட காப்பாற்ற முடியாமல், அவர்களது எலும்புகளை கூட பார்க்க முடியாமல் அழிக்கும் சிங்களத்தை பார்த்து கைகட்டி பார்த்திருக்கும் எம்மால் எதை சாதிக்க முடியும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இப்படியே நாம் இருந்தால் இருக்கும் கொஞ்ச மானமும், தமிழர்களும் அழிக்கப்பட்டு விடுவார்கள். காலத்தின் தேவையையும் அதன் கட்டாயத்தையும் புரிய மறுக்கும் அனைத்துலக தொடர்பகங்களின் கைப்பொம்மையாகாதீர்கள்!

நாடுகடந்த அரசு என்பது ஒரு சுயாதீனமான அரசாக இயங்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பும். உங்கள் முன் இன்று இருக்கும் ஒரு தெரிவும் கூட! ஆயுதப்போராட்டத்தை செழுமைப்படுத்தி அது ஒரு நிழல் அரசாக மாறியதோ அப்படியே பிரச்சினைகள், குறைபாடுகளுக்கு அப்பால் இந்த நாடுகடந்த அரசை நாங்கள் அனைவரும் இணைந்து தூக்கி நிறுத்த வேண்டியது எமது கடமை.

நாடுகடந்த அரசு என்ற குழுந்தை பிரசவிக்க முன்னரே நாலு திசைகளிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது எமக்குள் இருக்கும் காழ்புணர்வையே காட்டுகின்றது.

தேர்தல் கட்டுப்பணம், முதல் நற்ச்சான்றிதழ் வரை தேர்தல் விதிமுறைகளே அன்றி மாறாய் உருத்திரகுமார் அவர்களின் தனிப்பட்ட விருப்பு அல்ல.! நற்சான்றிதழ் பத்திரித்தை யாராவது தமிழ் அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விருப்புகின்றீர்கள் போல இருக்கின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக அமைக்க அது சட்டத்தின் முன்னும் உலக அரசுகளின் முன்னும் தன்னை நிலை நிறுத்த நாடுகடந்த அரசுக்கு இந்த தேர்தல் விதி முறைகள் நிறையவே தேவைப்படுகின்றது,

மாற்றீடாக முன்னைய புலத்து அமைப்புக்களின் தலைமைகள் செய்ய உப்பு சப்பில்லா செயற்ப்பாடுகளையும், திரை மறைவுச் செயற்ப்பாடுகளையும் செய்வதன் ஊடாக நாடுகடந்த அரசும் சட்டத்தின் பிடியில் சிக்குவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?

முடியும் வரை முயற்ச்சித்து முள்ளிவாய்க்காலில் மூாச்சையாகி விட்டது எமது இனத்தின் உயிர் நாடி!

இளையோரை பற்றி வரிக்கு வரி எழுதும் நீங்கள் எமது இளையோரின் நிலை என்ன என்பது பற்றி எழுத அறிந்து கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்காலின் முடிவுக்கு பின் யாரினதோ கைப்பொம்மைகளாய் அறிக்கை விடுவதோடு புலத்து இளையோர் அமைப்புக்கள் இருக்கின்றன.

இதுவே கனடா போன்ற இடங்களில் அதற்க்கு மெல் போய் இளையோர் அமைப்பு இல்லை என்ற அளவுக்கு இன்னோர் அமைப்பின் உருவாக்கம் அமைந்துள்ளது.

எமது தலைவர் தான் இந்த இளையோர் அமைப்பையும் உருவாக்கினார். எமது தலைவர் இளையோரின் கையில் இந்த போராட்டத்தை கையளித்தார். ஆனால் இளையோரின் செயற்பாடுகள் யாரை நோக்கி நடைபெறுகின்றது?

இளையோரின் சுயதீன செயற்பாடுகள் எங்கே?

அதை விடுவோம்,

பள்ளியில் படித்த படி, பகுதி நேர வேலை செய்த படி நாடுகடந்த அரசில் அங்கம் வகித்து காட்டமான ஒரு பங்கை ஒரு இளைஞனால் வழங்க முடியுமா? அப்படி முடியும் எனில் 1000 பவுன்ஸ் கட்டுவதில் எந்த சிக்கலும் இருந்திருக்க போதில்லை.

கட்டுக்கட்டாய் சேர்த்த பணங்கள் யரரினதோ பெயரில் இருக்க எமக்கான புறநிலை அரசொன்றை உருவாக்கும் இந்த நாடுகடந்த அரசுக்கு நிதியில்லை. யாரோ ஒருவரின் வீட்டு அடமானக்கடன் கட்டவும், யாரோ ஒருவரின் பெயரில் இயங்கும் வணிப நிறுவனமும், யாரோ ஒருவரின் பெயரில் இயங்கும் விழா மண்டபங்களும், யரோ ஒருவரின் பெயரில் இயங்கும் ஆலயங்களும், இவற்றிலிருந்து வரும் வருமானத்தில் நாடுகடந்த அரசுக்கு எதிரான பரப்புரைகளை செய்யும் அமைப்புக்கள், ஊடகங்களையே விலை பேசும் அமைப்புக்கள், இன்னும் எழுத்தாளர்கள் என்ற பெயரில் புனைகதை எழுதுவோருக்கும் சம்பளம் கொடுக்கும் அமைப்புகள் இவை எல்லாவற்றையும் நிறுத்தி நாடு கடந்த அரசு என்ற எமது இறுதி தெரிவுக்கு நிதியுதவி அளிக்க குறிப்பிட்ட அமைப்புக்கள் முன்வந்திருக்குமேயானால் இலவசமாகவே தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்.

கடந்த ஒருவருட கால இடைவெளியில் எந்த இளையோர் இதை செயற்ப்படுத்த அல்லது நாடுகடந்த அரசு பற்றி அக்கறை காட்டினார்கள்? யாரும் வாங்கி கொடுத்த பியருக்காய் அவர்களுக்காய் அறிக்கை விட்டுக்கொண்டு திரிகின்றனர்.

போதாக்குறைக்கு சுவிஸ் இளையோர் அமைப்பு இலங்கை தேர்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாய் அறிக்கை விடுகின்றது. கட்டணம் செலுத்தி இலங்கையிலிருக்கும் பத்திரிகையில் விளம்பரம் போடுகின்றது.

இந்த இளையோர் கையில் தலைவர் போராட்டத்தை கையளித்தார் என்று நினைத:த தலைவரே கவலைப்படுவார்!

நாடகடந்த அரசை விமர்சிப்பது தவறல்ல ஆனால் சுயாதீனமாய் விமர்சியுங்கள், மற்றவர்களின் பேச்சுக்காய், மற்றவர்களின் விருப்புக்காய், மற்றவர்களின் தூண்டுதலுக்காய் உங்கள் பெயரை நீங்களே மாசுபடுத்தாதீர்கள்,

http://www.annaright.com/new/index.php?option=com_content&view=article&id=63:2010-04-13-07-02-59&catid=36:2010-02-03-11-21-11&Itemid=54

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேசுவரன் உருத்திரகுமாருக்கு எழுதிய கடிதம் பல நியாயமான கேள்விகளை கொண்டுள்ளது.

அதற்கு பதில் எழுத வக்கில்லாதவர்கள் தமிழ்நாட்டுஅரசியல் அடிவருடிகள்போல பந்தம்பிடிக்கும் எழுத்துக்களை எழுதி புதிய 'நக்கிப்பிழைக்கும் அரசியலை' ஆரம்பிக்கிறார்கள்.

பரமேசுவரன் கேட்கமறந்த சில கேள்விகள்...

1.கனடாவில் நாடுகடந்த தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ராஜரெட்ணம் பகிரங்கமாகவும்,தனிப்பட்டமுறையிலும் பலரிடம் 'இப்போதும் கே.பி நோர்வேயில் இருக்கும் சர்வேயுடன் தினமும் கதைக்கிறார் என்றும்,எப்பிடியாவது இந்த நாடுகடந்த அரசை அமைத்தே தீரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் என்றும் சொல்லித்திரிகிறார். இது பற்றி..?

2.நாடுகடந்த அரசு தெரிவானபின்னர் சபையை கூட்டுகிறீர்கள். சரி! பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்.?அறிக்கை விடுவீர்கள்!

கண்டனம் செய்வீர்கள்! கெஞ்சுவீர்கள்!!(முள்ளிவாய்க்காலில் உறவுகள் கூடிநின்றபோது ஏதும் செய்ய திராணிஇல்லாத நீங்கள் இதைவிட எதுவும் செய்துவிடமாட்டீர்கள்) மிகத்தெளிவாக மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் நாடுகடந்த (இந்திய)அரசின் திட்டங்களை எழுதமுடியுமா?

3.சிறீலங்கா இதனை எதிர்க்கிறது என்ற ஒரு காரணமே உங்களை புலம் பெயர்மக்கள் ஆதரிக்க நியாயமாகிவிடுமா?

அவர்கள் கூட்டமைப்பையும் தடைசெய்ய வேண்டும் என்றுதான் மார்ச்7ம் திகதி கத்தினார்கள். பிறகு இப்போது தங்களுடன் கூட்டமைப்பை இணைய கேட்கிறார்கள். சிங்களத்தின் புதியமுறை என்னவென்றால் தமிழர்களை பிரிக்கும் திட்டங்களுக்கு தாங்கள் பயப்படுவதுபொல காட்டி அதை வளர்த்துவிடுவதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

பரமேசுவரன் கேட்கமறந்த சில கேள்விகள்...

இல்லை பரமேசுவரன் தன்னை மறந்து கேட்ட கேள்விகள்!!

வல்வைக்கடல் ரொம்ப தான் சூடாக இருக்கிறார், இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் போல் பந்தம் பிடிப்பவர்களை கண்டு கொண்டு விட்டார். நீங்கள் என்னத்தை வெட்டிப் புடுங்கி போட்டு கதைக்கிறீங்கள் என்று தான் விளங்கவில்லை. செய்யிறவங்களையும் செய்ய விட மாட்டீங்கள் செய்யவும் மாட்டீங்கள்.. இது தான் வைகோல் பட்டடை ஏதோ என்று சொல்லுவாங்கள்..

நீங்கள் வட்டுக்கொட்டைக்கு வழியென்ன என்று தேடிக்கொண்டிருக்கையில பாதிப்பிரச்சினை முடிஞ்சிடும்.. உங்கட ஆக்கட கதையை கேக்கனும், உங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கனும்.. இல்லை என்றா இளையோர் அமைப்பு போல நீங்கள் சொல்லுற மாதிரி அறிக்கை விடவேணும். இல்லை என்ற மற்ற ஆக்கள் எல்லாம் துரோகிகள்...

நீங்கள் உண்மையில தேசிய ஆக்கறை உடையவர் என்றா, நியாயமாக நிறைய கேள்வி கேட்க வேண்டி இருக்கும் கனடாவில உலகத்தமிழரில இருந்து கனபேரிட்ட அவையிட்ட கேளுங்க கேட்டிட்டு மற்றவர்களை குறை கூறுங்கள்..

பரமேஸ்வரன் கேட்ட கேள்விகளுக்கும் , கறுப்பு என்ற பெயரில் உருத்திரகுமாரன் அவர்களுக்கு எதிராக உலாவும் மின்னஞ்சலுக்கும் நேற்றே பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த மடலை எடுத்து வந்த ஊடகங்கள்.. அந்த விளக்க அறிக்கையை போட மாட்டினம் ஏன் என்றா அது தான் தேசியத்துக்காய் உழைக்கினம் எல்லோ!

கீழ இருக்கிற இணைப்பில பாருங்க..

http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dOgmU0ecAA0W4a4dd4Scd3cYJ3dc2Coc2b424OS2e220Mq20

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வைக்கடல் வெப்பமான கடல்தான்.இந்தியபேயரசுக்கும்,சிங்களஇனவாதத்துக்கும் இடையில் அலையாடுவதால் அது கொதித்துதான் போயிருக்கும்.

எதையும் வெட்டிப்புடுங்காமல் தேர்தல்வேலை செய்யவில்லை நான்.முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களை கொன்றழித்த இந்திய-சிங்கள கூட்டுத்திட்டமான நாடுகடந்த அரசை பகிரங்கப்படுத்துவதுதான் தேசியகடமை!

18ம் திகதி மே மாதம் இனஅழிப்பு முடிந்தபிறகு ஓரிரு மாதங்களில் உருத்திரகுமாரின் செய்தியை தாங்கி பிரித்தானிய தமிழர் பேரவை செந் கந்தையாவும் இங்கிலாந்து இந்தியஅரசியல்வாதி ஒருவரும் போய் டெல்லியில் ராகுல்காந்தி,சிதம்பரம் போன்றோரை சந்தித்தது ஏன்?

திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது. விடயங்களை நீட்டாமல் நேரிடையாக சுருக்கமாகவே கேட்க விருப்புகிறேன்.

முக்கியமான ஒன்று இது உங்களுக்காகன விமர்சனமே அல்லது வீன்பழியே அல்ல. தமிழீழம் என்ற சொல்லுக்காக மட்டுமே உயிரையும் இழக்க புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னமும் தயாரகவே உள்ளார்கள் இதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த கடிதத்திற்கான முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.

அதற்குமுன் எனது பங்கிற்கும் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியல்ல இது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தடங்கள் ஏற்படுத்தும் சிந்தனைக்குறைபாடன வேலையும் இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்பும் அதே வேளையில் பல நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களின் நிலைப்பாடனதே எனதும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களுடனான பலமான கருத்துப்பரிமாற்றத்தின்பின்பே இக்கடிதம் வரையப்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முக்கியமானது நாடுகடந்த அரசின் கோட்பாடுகள் எமது தேச நலன்களுக்கு எதிராக இருப்பது. அடுத்தது தேர்தல் விதிமுறைகள்.

உதாரணம்: தமிழீழத்தில் இருநாடுகள் தேசியக்கொடி ஏற்காதது போன்றது மிக முக்கியமானது.

புலம்பெயர் மக்களிடம் நேரடி விவாதங்கள் மூலமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் இந்த முக்கியமான விடயத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தன்னிச்சையாக இந்த முடிவுகள் எட்ட காரணங்களை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீங்கள் அறிவித்தபடியே நடைபெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமிழினம் பேரழிவை சந்திப்பதை தவிர்க்க இயலாது போய்விடும்.

இன்று நீங்களும் சரி நாங்களும் சரி உலகிற்கு தெரிவதற்கும் உலகம் உங்களை அறிவதற்கும் காரணம் எமது தேசியத் தலைவரும் அவர் வழி வந்த விடுதலைப்புலிகளும் அவர்கள் செய்த தியாகங்களும்தான். அவ்வழிகாட்டியவர்களின் தீர்க்கமான போரட்ட சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் மாற்ற உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?.

விடுதலைப்புலிகளின் சிந்தனையும் கோட்பாடும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் விருப்பமே அன்றி தனிநபர்களுடையது அல்ல. ஆகவே அதை மற்ற வேண்டிய தேவையின் அவசியம்தான் என்ன? எமது மக்களும் மாவீரர்களும் நேசித்து நெஞ்சை நிமிர்த்தி வணங்கிய கொடியினைஇ எமது மக்கள் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சுவிட்டு கண்கள் தளும்ப இந்தக்கெடியினை ஏற்றி மீண்டும் எப்போது எமது விடுதலை வீரர்கள் வணங்கப்போகிறார்களே என ஏங்கும் கொடியினைஇ இளையோர் கை சேர்ந்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் எழுட்சியும் வீரமும் தந்திட்ட கொடியினைஇ பாரில் நாம் தமிழரென எம்மை அடையாளப்படுத்திய கொடியினைஇ நீங்கள் மட்டும் ஏற்ற மறுத்ததன் மர்மம்தான் என்ன.

இது தீவிரவாதிகள் கொணர்ந்த கொடி ஆகவேதான் என எமக்கும் தீவிரவாதம் காட்ட நினைக்கின்றீர்களா?.அப்படி நீங்கள் எதிர்க்கவில்லையென்றால் ஏன் நாடுகடந்த அரசின் கொடி புலிக்கொடி என அறிவிக்கவில்லை. இல்லை இவற்றை தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் தீர்மானிப்பார்கள் என்றால் ஏன் முன்கூட்டியே கோட்பாடு வரையப்பட்டது. அனைத்து வரைவுகளையும் தீர்மானிக்கும் பொறுப்புக்களையும் பிரதிநிதிகளிடமே விட்டிருக்கலாமே.

தேர்தலை நடத்தும் பொறுப்பை மட்டும் வகிப்பதோடு நிறுத்தியிருக்கலாமே. சிலது மட்டும் இப்பொழுது மற்றையது பிற்பாடு என ஏன் தள்ளாட்டம். வெளிப்படையானது என்றால் தடைகளை நேரிடையாக மக்களிடம் அறிவிக்கலாமே. முஸ்லிம் மக்களை நாம் வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. அவர்களும் தமிழர்கள் போன்று அனைத்து சுதந்திரத்துடனும் எதிர்கால தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களினது விருப்பமும்.

தமிழீழத்தில் அனைத்து சமூக மக்களும் சரி நிகரான பேதத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் எமது தேசியத் தலைவரின் விருப்பமும் கூட. இதை அறியாதவர்கள் அல்லர் எமது மக்கள். அனைத்து தரப்பு மக்களின் விருப்பமும் அதுவே. விரும்பும் விரும்பாத பட்சத்தில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படியான மிக முக்கியமான விடயங்களை மக்களுக்கு முன் நேரடி விவாதத்திற்கு விட்டிருக்கவேண்டும்.

விடயம் இப்படியிருக்க முஸ்லிம் சகோதரர்களுக்கு தனி நாடு ஆசை காட்டி எதிர்கால சந்ததியினர்க்கு பெரும் துரோகம் இழைக்கும் இந்த இகழ்ச்சியான சிந்தனையை உங்களுக்கு தந்தவர்கள் யார்?. விடாமல் மீண்டும் வேற்றுமையை தேற்றுவித்து பகைமையை உருவாக்கி தீராத போராட்டத்தையும் பேரிழப்பையும் எமக்கு ஏற்படுத்துவதுதான் உங்கள் திட்டமா?.

தேர்தலுக்கு வருவோம்...

முக்கியமானவற்றைப் மட்டும் இப்போது பார்ப்போம்.

1.தேர்தலில் நிற்பதற்கு ஆயிரம் பவுண்ஸ்கள்?!!

2.காவற்துறையின் நற்சான்றிதழ்?!!

3.அந்தந்த நாட்டில் வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!!

முதலாவது ஆயிரம் பவுண்ஸ்கள் யார் முடிவெடுத்தது. சரி ஆயிரம் பவுண்ஸ் கேட்ட நீங்கள் இளையோர்களை எப்படி எதிர்பார்ப்பீர்கள்?. ஒரு மனிதனின் சராசரி வருமானமே 800 முதல் 850 பவுண்ஸ்கள்தான். அப்படியிருக்க படித்துக்கொண்டு மிகுதிநேரத்தில் வேலைசெய்யும் ஒருவருடைய வருமானம் எவ்வளவாக இருக்கும் என நினைக்கினறீர்கள்? சரி படிக்காத இளையோர்களை எடுத்துக்கொண்டால் ஒருமாதத்திற்கு மேற்பட்ட வருமானத்தை உங்களுக்கு தந்தால் அவர்களின் அந்த மாத குடுப்பச் செலவை யார் அண்ணா ஏற்பார்? தமிழீழத்திற்காக உயிரையும் கூட கொடுப்பார்கள் ஆயிரம் பவுண்ஸ்களையா கொடுக்கமாட்டார்கள் என கேட்கின்றீர்களா?? அப்படிக் கேட்டாலே நீங்கள் யார் என்பதை மக்கள் இலகுவில் ஊகித்துக்கொள்வார்கள்.

ஆகவே நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்படியானால் எப்படித்தான் அரசு நடத்துவது என்கின்றீர்களா?. பிரித்தானியா ஏற்பாட்டாளர்களே கூறினார்களே இதுவரை நடந்த கூட்டங்களுக்கே 45ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் செலவாகியது என்று. சாதாரண விளக்க கூட்டமே 5ந்து நட்சத்திர விடுதியில்தானே பல பல ஆயிரம் பவுண்ஸ்கள் செலவழித்து நடந்தது அதுபோல நடத்த முடியாத?

நானே பல முறை நட்சத்திரக் கூட்டங்களுக்கு வர முயன்றும் முடியவில்லை அங்கு வருவதற்கும் பணம் தர வேண்டுமாமே பல நுறு!. அப்படியிருக்க சாதரண மக்கள் எப்படி உங்கள் கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை பெற முடியும் என நினைத்தீர்கள்?. அனைவருக்கும் எப்படி உங்களுடன் கருத்துக்கள் பரிமாறியிருக்கமுடியும் அனேக நேரத்தில் உங்கள் பேச்சை ஒளிபரப்ப ஸ்கைப் கூட வேலை செய்வதில்லையாமே! அதைக்கூட முளுமையாக ஒழுங்கு செய்யத்தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி அண்ணா?

சரி பணத்திற்கு வருவோம். எனக்குத் தெரிந்து பிரித்தானியாவில் ஜநூறு பவுண்ஸ்களும் இந்தியாவில் 30 ஆயிரம் ரூபாக்கள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆவதற்கு தேர்தல் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் உங்களுக்கு தருவதற்காக தரவுகள் எடுக்கவில்லை எனக்கத் தெரிந்தவையே இவைகள் ஆனாலும் பொய்யில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஆயிரம் கேட்பதேன் நானே நேரிடையாக விசாரித்தேன் காரணம் கூரினார்கள் ஒன்று பலர் போட்டிக்கு வரக்கூடாது என்பது ஒன்று முக்கியமாக அவர்கள் கூறியது பலர் என்பதன் அர்த்தம் எதிரிகளையும் துரோகிகளையும் மகிழ்வாகவே இருந்தது எச்சரிக்கையாக இருக்கின்றர்களே என்று ஆனால் இன்று பல விடயங்களில் பலமாக இருப்பது எதிரியும் துரோகிகளும்தான் அவர்களுக்கு இந்த ஆயிரம் என்பது மிக சொற்பமான தொகையே.

எதிரிகளும் துரோகிகளும் இதற்குள் இறங்குவதென்று முடிவெடுத்து விட்டாலே அவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்குமா??. அடுத்தது அவர்கள் கூரியது இந்தப்பணம் அப்படியே தமிழீழ அரசுக்குச் செல்லும் அரசின் தேவைக்குப் பயன்படும் என்று. தேர்தலில் தோற்றால் கட்டுப்பணம் போய்விடும் வென்றால் திருப்பித் தருவீர்களா? மற்றது குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் ஓட்டுப் பெற்றாலும் கட்டுப்பணம் திருப்பித்தரப்படும் என்று தெரிந்திருக்கின்றேன் தருவீர்களா?.

அரசுக்குச் இந்தப்பணம் செலவுக்கு உதவும் என்கின்றீர்கள் சரி அந்தக் செலவுக்கான கணக்குகளை கட்டுப்பணம் செலுத்தியவர்களிடமாவது காட்டுவீர்களா?. தேர்தலுக்காக அனைத்துவிடயங்களிலும் சட்டத்தை பின்பற்றும் நீங்கள் பண விடயத்தில் மட்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என்பது எவ்விதத்தில் நியாயம்? சரி பண விடயத்தை இத்தோடு முடிப்போம். அடுத்து காவற்துறையின் சான்றிதழ். அதாவது எனக்கு எவ்விதமான வழக்கும் இல்லை நான் அப்பழுக்கற்றவன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நல்ல விடயம்தான் சான்றிதழ் கோட்பது தவறில்லைதான். ஆனால் யாரிடம் கோட்கின்றீர்கள் தெரியுமா? சென்ற வருடம் இதே மாதம் பல இலட்சம் மக்கள் கூடி போரை நிறுத்து எமது மக்களின் உயிரோடு விளையாடாதே என முழங்கிய பல இளையோர்களுக்கு இன்று வரை நீண்டுகொண்டே செல்கிறது பிரித்தானிய நீதிமன்றின் பிடியானை ஓ பரமேஸ்வரனுக்கு ஏதே கேஸ் இருக்குப் போல அதுதான மனுசன் இப்படிக்கத்துறான் என்பார்கள்.

எனக்கு பிரித்தானியாவில் ஒரு வழக்கு இருப்பதாக நிரூபித்தாலும் அவர்களுக்கு வாழ்நாழ் அடிமையாக இருப்போன். எனக்கு பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று சரி இதை விடுவோம். ஆகவே போராட்டத்தில் பங்கு பற்றி காவற்துறையோடு முரன்பட்டவர் முட்டிமோதியோர் நான் புலி என்னையும் பிடி சிறையெடு என கதறியோர் என பெரிய பட்டியலே அடங்கும் பிரித்தானியா பிரஜா உரிமை கேட்க போன இடத்திலும் இதைக்காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு.

இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது ஆனாலும் பெரும்பாலும் நீங்கள் அழைக்கும் இளையோர்களே. அப்படியிருக்க இவர்களுக்கு எப்படி நற்சான்றிதல் தருவார்கள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?ஆகவே தொலைநோக்குள்ள நீங்கள் எதிர்பார்ப்பது எவ்வித வீரியமான போராட்டங்களில் பங்கெடுக்காத தூர நின்று வேடிக்கை பார்தவர்களைத்தானே அன்றி போராட்டவாதிகளை அல்ல. நல்லது. ஆகவே இதிலும் குற்றச்செயல்கள் பட்டியலிட்டு தகுதி பெறும் பெறாதவை என வரையறுக்கப்படல் வேண்டும்.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் விடுதலைக்குப் போராடி தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் அவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் அப்படியா?. அடுத்தது வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!! நீங்கள் கூறும் காரணங்கள்.. வேறு நாடுகளில் கூட்டங்கள் நடக்கும்போது அவர்கள் கண்டிப்பாக பயணிக்க வேண்டும். ம்ம்ம் சரி இந்தியாவில் இருந்து ஜந்து பிரதிநிகளை தேர்ந்தெடுக்கப்போகின்றீர்களே அவர்களுக்கு இந்திய அரசாங்கமும் நீங்கள் கூட்டங்கள் நடத்தப்போகும் நாடுகளும் விசா தரும் என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?

பிரித்தானியாவில் அனேகமானேருக்கு பிரித்தானியாவில் வசிக்கலாம் எனவும் பல பேருக்கு விசா வழங்குவது இன்னும் நிழுவையில் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை. இதற்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?.அடுத்து இலங்கைப் புத்தகம் வைத்திருப்பவர்களும் ரவல் டொக்கிமெண்டு வைத்திருப்பவர்களும் நீங்கள் அழைக்கும் நாடுகளுக்கு வர முடியும் என்பதையாவது உங்களால் உறுதி செய்ய முடியுமா?

ஏனெனில் பிரிட்டனில் இருந்து பிரான்ஸ்சுக்கும் பிரான்ஸ்சில் இருந்து பிரிட்டனுக்கும் வரவே எவ்ளவே பேர் எனக்கு தெரிந்தே அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே அப்படி அவர்கள் வரமுடியாத பட்சத்தில் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்? இன்று தொழில் நுற்பம் வியப்புமிக்க வகையில் வளர்ந்திருக்கம் நிலையில் றூற்றுக்குமேற்பட்டவர்களை பல நாடு கடந்து ஒட்டுமொத்தமாக பல இலட்சம் பவுண்ஸ்களையும் ஈரோக்களையும் டொலர்களையும் செலவிட்டு நீங்கள் நடத்தப்போகும் கூட்டங்களுக்கு செலவழிப்பதைவிட இன்றைய தேவையுணர்ந்து பல தேவைகளுக்காக காத்திருக்கம் எமது தேச மக்களுக்காக செலவிடலாம்.

ஒரு பாரளுமன்றத்தையே கொண்டுசெல்வது எத்தகைய சிரமம் ஆனால் நீங்கள் நாடு நாடாக தமிழீழ பாரளுமன்றத்தை பல இலட்சங்கள் செலவில் கொண்டுதான் சென்றாகவேண்டுமா?. நாடுகடந்த அரசு தேவையா இல்லை என்பதல்ல எமது விவாதம். தமிழீழ அரசு நிச்சயம் தேவை அதில் எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் சரிசெய்ய வேண்டும் என்பதே எமது அவா. ஏனெனில் எதிர்கால சந்ததியிடமும் போராட்டத்தை ஒப்படைத்து வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம் என்பதே எமது எண்ணம்.

அனைத்தையும் திறந்துவிட்டுவிட்டு என்னதான் செய்வது அப்படியெல்லாம் விடமுடியாது என்கின்றீர்களா? முடியும் நீங்கள் அறிவித்த விதிமுறைகளில் சிறப்பானது 100 கையொப்பம் மற்றும் விலாசம் பெற்றுவர வேண்டும் என்பது.100 கையொப்பத்தை 200 ஆக்குங்கள் மக்களுக்கு தெரிந்தவர்களும் வந்த மாதிரி இருக்கும். வீடுவீடாக ஏறி இறங்கி ஆதரவுகேட்டமாதிரியும் இருக்கும்.

இதுநாள்வரை வீடு வீடாக சென்றவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும். நாட்டுக்கு உழைப்பதென்றால் என்வென்றும் தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும்.

இதில் துரோகிகளே எதிரிகளோ வர வாய்ப்பே இருக்காது ஏனெனில் மக்கள் இப்போது அனைவரையும் அறிந்திருக்கின்றார்கள். என்னுடைய வரிகள் உங்கள் மனதை காயப்படுத்தியிருக்கும் ஆனாலும் தவிர்க்க இயலாதது. காயங்களை தாங்க இயலாவிட்டால் போராட்டத்தில் இருக்கமுடியாது என்பது நீங்கள் உணராதது இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றியுடன்

சு.பரமேஸ்வரன்

நியாயமானதும், யதார்த்தமான கேள்விகளைத் தானே கேட்டு இருக்கிறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழற்றை தலையெழுத்து..தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான்.

Edited by ஜீவா

அபிராம் எழுதும் கதைகளில் கடைசிக் காலங்களில் புலிகள் உணவிற்கும் ஏன் சயனைட்டிற்குமே கஸ்டம் என்று எழுதுகின்றார்.

உலகம் முழுக்க புலிகளின் வியாபாரங்கள் ஒகோ என்று கொடிகட்டி பறக்கின்றது.இதை கேட்பார் யாரும் இல்லையா?

நாடுகடந்த அரசுக்கு முதல், புலியில் பொறுப்பில் இருந்த காரணத்தால் இவைகளுக்கு ஒரு தெளிவான பதிலை உருத்திரகுமார் சொல்லலாம் தானே.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னமும் 3,4 வருடங்களில் ஊரில அவர் இருந்த மாடிவீட்டை விட பெரிய மாடியில் இருக்கப் போகின்றார்.

இரவுபகலாக வேலை செய்து ப்ன்னால் திரியும் இளையவர் பாடு அம்போ? தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தற்போது எல்லோரும் கடிதம் எழுதத் தொடங்கி விட்டார்கள்!

புலிகள் இல்லை என்றது பூனைகள் வெளிக்கிட்டு விட்டார்கள்.

ஏதாவது எழுதவும்...

உங்கள் மனதில் என்ன இருக்கின்றது?

ஒன்றும் இல்லை, நன்றி! வணக்கம்!

உரியவன் இல்லாட்டி ஒரு ழுழம் கொட்டான். தமிழன்ர தலையெழுத்து யார் யார் என்ன என்ன செய்யவேண்டும் என்றே தெரியாம போச்சுது.

அப்ப தம்பி பரமேசுவரன் உங்கள் திட்டம்தான் என்ன? தமிழர்ர எதிர்காலத்துக்கு என்ன செய்யுறதா உத்தேசம்? ஏதாவது புதிய திட்டம் இருந்தால் நீங்களும் அறிவிச்சிவிடலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லை என்றது பூனைகள் வெளிக்கிட்டு விட்டார்கள்.

பூனை வெளிக்கிட்டா கூட பரவாயில்லை மனிதனை ஒட்டி வாழ்ந்தாலும் ஏதோ புலியின் ஜாதி என்று பொறுத்து கொள்ளலாம்.

இது பூச்சி புளு எல்லாம் கிளம்பினால்?

தாங்க முடியல்ல..........!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வைக்கடல் வெப்பமான கடல்தான்.இந்தியபேயரசுக்கும்,சிங்களஇனவாதத்துக்கும் இடையில் அலையாடுவதால் அது கொதித்துதான் போயிருக்கும்.

எதையும் வெட்டிப்புடுங்காமல் தேர்தல்வேலை செய்யவில்லை நான்.முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களை கொன்றழித்த இந்திய-சிங்கள கூட்டுத்திட்டமான நாடுகடந்த அரசை பகிரங்கப்படுத்துவதுதான் தேசியகடமை!

18ம் திகதி மே மாதம் இனஅழிப்பு முடிந்தபிறகு ஓரிரு மாதங்களில் உருத்திரகுமாரின் செய்தியை தாங்கி பிரித்தானிய தமிழர் பேரவை செந் கந்தையாவும் இங்கிலாந்து இந்தியஅரசியல்வாதி ஒருவரும் போய் டெல்லியில் ராகுல்காந்தி,சிதம்பரம் போன்றோரை சந்தித்தது ஏன்?

அண்ணா வல்லைக்கடல்,

இந்தி -சிங்கள கூட்டுத்திட்டத்தை அம்பலப்படுத்தவில்லை. தமிழர்களின் எதிர்கால நம்பிக்கையில் நீங்கள் மண் அள்ளி போடுகின்றீர்கள், ஏதோ ஒரு அமைப்புக்கு வக்காலத்து வாக்கும் நிலையில் அவர்களுக்கு நீங்கள் நேரடியாக ஆதர கொடுக்காமல் இப்படியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக உதவுகின்றீர்கள். உங்களுக்கு நிறையவே விசயம் தெரிந்திருக்கு ஆனால், உங்கள் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது அண்ணா, உங்களுக்கு தெரிந்த மே 18ம் திகதி சந்திப்பை நீங்கள் ஏன் இந்த மே அதாவது 1 வருடத்துக்கு பிறகு வந்து சொல்லுறீங்கள்? ஏதாவது நாள் நச்சத்திரம் பாத்து சாமியார் சொன்னவரோ? சாமியார் என்றது புலத்தில பூச்சாண்டி காட்டிக்கொண்டு திரியிறாங்கள் அவங்களை தான் சொன்னான்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் பணிக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

இந்த பரமேஸ்வரன் யார்? இணைத்த ஆதிரை இதை எங்கிருந்து பெற்றார்? (மூலங்கள் குறிப்பிடப்படவில்லை)

நா.க.த.அ. இன் ஒரு சிறுகுழு பரமேஸ்வரன் போன்றவர்களை நேரில் அழைத்து பேசினால் என்ன? (நட்சத்திர விடுதியில் அல்ல, சிறுகுழு விரும்புமிடத்தில், அதற்கான செலவுகளை பரமேஸ்வரன் போன்றவர்கள் ஏற்கவேண்டும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.