Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நடக்குது இங்க??????

Featured Replies

http://www.yarl.com/forum3/uploads/monthly_06_2010/yarukku1.mp3

எழுத்து: தமிழப்பொடியன்

ஒலிப்பதிவு (குரல்): எட்வேட்

தொடர்புடைய பதிவு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=72657

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறஒண்டும் இல்லை அண்ணை! எல்லாத்தையும் நாங்கள்தான் செய்யவேணும் எண்டு எண்ணுற ஒரு கூட்டம் செய்யுற வேலதான் அண்ணை! தப்பித்தவறி வேற ஒருத்தன் தமிழரிற்கு ஏதாவது நல்லது செய்ய வெளிக்கிட்டால் அதை எப்பிடியாவது மிரட்டி உறுட்டி வெருட்டி நிப்பாட்டப்பாக்கிறது அதுக்கெல்லாம் பணியாது மக்களின் ஆதரவைப்பெற்று தொடர்ந்து செயற்பாட்டால் விழுந்தும் மீசையில மண் ஒட்டவில்லை என்று சொல்ல்வதைப்போல நாங்கள் தூணாக இருந்தோம் அத்திவாரமாக இருக்கிறம் முகடாய் இருக்கிறம் முகட்டு வளையாக இருக்கிறம் என்று புழுடா விடுறது. எத்தினை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்???????????????????????.................................

அது வேறஒண்டும் இல்லை அண்ணை! எல்லாத்தையும் நாங்கள்தான் செய்யவேணும் எண்டு எண்ணுற ஒரு கூட்டம் செய்யுற வேலதான் அண்ணை! தப்பித்தவறி வேற ஒருத்தன் தமிழரிற்கு ஏதாவது நல்லது செய்ய வெளிக்கிட்டால் அதை எப்பிடியாவது மிரட்டி உறுட்டி வெருட்டி நிப்பாட்டப்பாக்கிறது அதுக்கெல்லாம் பணியாது மக்களின் ஆதரவைப்பெற்று தொடர்ந்து செயற்பாட்டால் விழுந்தும் மீசையில மண் ஒட்டவில்லை என்று சொல்ல்வதைப்போல நாங்கள் தூணாக இருந்தோம் அத்திவாரமாக இருக்கிறம் முகடாய் இருக்கிறம் முகட்டு வளையாக இருக்கிறம் என்று புழுடா விடுறது. எத்தினை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்???????????????????????.................................

நல்லா இருக்கு சின்ன ஒரு பின்னணி இசையும் குடுத்தால் அழுத்தமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவும் புதுமையாகவும் இருக்கின்றது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். கொஞ்சம் ஓசை நயத்தில் கவனம் வைத்து இத்தகைய ஆக்கங்களை அலசல், விமர்சனங்களுக்குப் பயன்படுத்தும் ஓர் மரபையே உருவாக்க முடியும். செய்தவர்களுக்கு எனது பாராட்டுக்கள். ஆனாலும் ஒரு சிறிய பணிவான கருத்து: அதாவது சற்று மிகையாகத் தென்படுகிறது. அதை பாலன்ஸ் செய்து கொஞ்சம் நேரத்தையும் குறைத்தால் சுவையான உருப்படிகள் கிடைக்கும்.

ஆகா இப்படி தெளிவானவர்களும் நாட்டில் இருக்கின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

.

நியாயமான கேள்வி.

நல்ல ஆக்கம்.

.

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் பொதுஜனத்தின் உள்மனக் கேள்விகள் ஏதோ கொஞ்சம் கொட்டிட்டுது! :lol:

இணைப்புக்கு நன்றி மோகன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமே விளங்கேல்ல :):lol::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு. மக்களின் நியாயமான கேள்விகளின் குரலாக ஒலிக்கின்றது. "இந்தக் கேள்விகளுக்கான பதில் கிடைக்குமா?" என்ற கேள்வியே உள்ளத்தில் தொக்கி நிற்கின்றது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்பவர்களுக்கு...

தங்களின் உதவியில்லாத எந்தக்குழுவாலும் வாழமுடியாது

இதை புரிந்து கொண்டு

தங்களால் முடிந்த அழுத்தங்களைக்கொடுப்பதே இவற்றை மாற்றுமே தவிர...

கேள்விக்கு எதிர்கேள்வி போடுவதால் ஒன்றும் வந்துவிடாது

நமது சேட்டின் கொலரை தூக்கி ஆடுவதைத்தவிர.....

ஏற்கனவே எழுதியதற்கு வெட்டு விழுந்தாச்சு

இது கொஞ்சம் தாழித்து எழுதியிருக்கு பார்க்கலாம் :lol::):wub:

ஆக கேள்வி கேக்கிற ஆக்களாக தான் இருக்க விரும்புகினம்... பலரும் பலதையும் செய்ய முனைகினம்... அதில் ஒரு சிலர் ஒண்டை இரண்டை செய்ய வேண்டும் அதுக்கு பின்னாலை ( வழமையாக வேலைக்கு போய் வந்து இணையங்களிலை செய்திகளை படிச்சு) நாங்கள் ஆதரவு குடுப்பம்... குழப்பம் இல்லாமல் குடுப்பம் எண்டு சொல்லும் ஒரு குரல் எண்டு இதை எடுத்துக்கொள்ளலாமா....??

இல்லை நாங்கள் ஒண்டும் முன் எடுக்க மாட்டம் நீங்களும் பலவாறு பல வளிகளில் முன் எடுக்க கூடாது எண்டு எடுக்கலாமா....??

ஆயுதப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் நடந்து இருக்கலாம்.. அரசியல் போராட்டமும் ஒரு கட்ச்சியின் கீழ் ஒரு வளியில் மட்டும் தான் நடக்க வேண்டுமா...??? பல கட்ச்சிகள் பல அமைப்புக்கள் தமிழருக்காக போராட முடியாது அல்லது கூடாது எண்டு சொல்லுதா இந்த பொது சனம்....?? :lol::):wub:

Edited by தயா

ஒன்றுமே விளங்கவில்லை என்றபடி,

ஒன்றுமே விளங்காதவர் என்ன நடக்குது என்று தெரியாமல்,

ஒருசில களைகளை விதைத்து விதைத்து புலம்பும் புலம்பல்,

ஒன்றுமே விளங்காத ஈழத் தமிழருக்குக் கூட விளங்காமல் போய்விடுமா?

"தெளிவா குழம்பிப் போய்யுள்ளோம்!"

இணைப்பிற்கு நன்றி மோகன் அண்ணா

அருமையான குரல் அசைவு.... ஏற்ற...இறக்க... ஆதங்க நடிப்பு நன்றி :):lol::wub: நய்நா

ஒன்றுமே விளங்கவில்லை என்றபடி,

ஒன்றுமே விளங்காதவர் என்ன நடக்குது என்று தெரியாமல்,

ஒருசில களைகளை விதைத்து விதைத்து புலம்பும் புலம்பல்,

ஒன்றுமே விளங்காத ஈழத் தமிழருக்குக் கூட விளங்காமல் போய்விடுமா?

அருமையான கருத்து நன்றி :wub:

நன்றிகள், ... நன்றிகள், ... நன்றிகள்!! ... ஒவ்வொரு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆதங்கங்களை மிக தெளிவாக ...

புலத்தில் காலாகாலமாக அனுபவித்து வந்து, இன்று புலத்து மக்களையே குழப்பும் கும்பல்களுக்கு ... எங்கள் ஆதங்கங்கள் எப்போது புரியப் போகிறது??????

Edited by Nellaiyan

என்ன நடக்குது இங்க??????

துரோகிகள் என்ற சத்தங்களுக்கு அப்பால் .... "அண்ணைக்கு எல்லாம் தெரியும்! அவருக்கு என்ன, எப்போ, எதை.எப்படி,எங்கு, எவ்வாறு, ... செய்வதெனபது எல்லாம் தெரியும்!! ......... நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள்! ..." ... என்ற பதில்கள் வரப்போகின்றன!!!!!!!!!!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் விளங்கித்தானே முள்ளிவாய்க்காலில் போய் முடிந்து தற்போது வடக்கின் மூலையிலுள்ள குக்கிராமங்களில் கூட சிங்களமொழியில் (இராணுவம் அல்ல) உரையாடிக்கொண்டு திரிகின்றனர். விளங்கியவர்கள் இன்னமும் விளக்கங்கள் தருவார்கள். நாங்கள் கேள்வி கேட்காமல் இருக்கப் பழகினால் நல்லது.

எல்லாம் விளங்கித்தானே முள்ளிவாய்க்காலில் போய் முடிந்து தற்போது வடக்கின் மூலையிலுள்ள குக்கிராமங்களில் கூட சிங்களமொழியில் (இராணுவம் அல்ல) உரையாடிக்கொண்டு திரிகின்றனர். விளங்கியவர்கள் இன்னமும் விளக்கங்கள் தருவார்கள். நாங்கள் கேள்வி கேட்காமல் இருக்கப் பழகினால் நல்லது.

எல்லாரும் யாரை குற்றம் சாட்ட முயல்கிறீர்கள் எண்டு தான் எனக்கு விளங்க இல்லை... பாத்தால் எல்லாரும் சரியாக 100 % செயற்பட்டனர் ஆனால் பிழை விட்டது ஒரு சிலர் தான் எண்டு கையை ஒரு தரப்பை காட்டுறது போல கிடக்கு...

எனக்கு தெரிய இயலுமானதை செய்தவர்கள் செய்தார்கள்... இப்ப குறை கூறுகிறவை ஒண்டை மட்டும் தெளிவாக சொல்லுகினம் ... போட்டம் எண்ட ஒண்டு நடந்தது... அதிலை நாங்கள் பங்கு எடுக்கவில்லை எண்டு... அப்படி எண்டால் வேடிக்கை பாத்தவை தான் இப்ப கையை நீட்டி கொண்டு நிக்கினம்... ஒருவேளை காசை குடுத்து வாடகைக்கு தனக்காக செய்ய ஆள் பிடிச்சு போட்டம் எண்ட மேல் தட்டு குணமாக கூட இருக்கலாம்...

ஆனால் பாருங்கோ இறங்கி வேலை செய்தவை யாரையும் குற்றம் சாட்ட மாட்டினம்... குற்றம் சாட்டவும் முடியாது... காரணம் தவறு அவர் மீதும் தான்....

இப்படி இறங்கி வேலை செய்த கொஞ்சப்பேரை பெரும்பான்மையானவை குற்றம் சாட்டுகினம்... தம்பி நீ செய்ததுகள் சரியில்லை எண்டு...

நான் சொன்னதில் கொஞ்சம் விளங்கினாலும் நல்லது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னதில் கொஞ்சம் விளங்கினாலும் நல்லது...

குற்றம் குறை காண்பவர்கள் ஒன்றுமே நாட்டுக்குச் செய்யாதவர்கள். எனவே பொத்திக்கொண்டு இருப்பது நல்லம் என்ற மாதிரி விளங்கிச்சு. :lol:

குற்றம் குறை காண்பவர்கள் ஒன்றுமே நாட்டுக்குச் செய்யாதவர்கள். எனவே பொத்திக்கொண்டு இருப்பது நல்லம் என்ற மாதிரி விளங்கிச்சு. :lol:

அப்ப ( அந்த நேரம்) பொத்தி கொண்டு வேடிக்கை பாத்தமாதிரி எண்டு இடை செருகல் சேர்த்தால் இன்னும் நலமாக இருக்கும்...

இல்லை

அவை செய்ததுகள் இருக்கட்டும் நீங்களும் செய்யுங்கோ எண்ட மாதிரி ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அவை செய்ததுகள் இருக்கட்டும் நீங்களும் செய்யுங்கோ எண்ட மாதிரி விளங்க இல்லையோ...??

எங்கே ஓட்டைகள் இருந்தன என்பதைச் சொல்லாமல் எல்லாம் நன்றாகவே நடந்தது என்றால் நாங்களும் "கதம் கதம்" என்று சொல்லிப் போகவேண்டியதுதான்.

செய்பவன திருந்தச் செய்ய வேண்டுமென்றால் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்கவேண்டும். இல்லையேல் அதே தவறுகளைத் தொடர்ந்து செய்து இன்னமும் அழிவுகளைச் சந்திக்கவேண்டியதுதான். எனவே கலைந்த குட்டை தெளியுமட்டும் அடிப்படைகளை விளங்குவதும் விளக்குவதும்தான் தற்போது செய்யக்கூடியது..

எங்கே ஓட்டைகள் இருந்தன என்பதைச் சொல்லாமல் எல்லாம் நன்றாகவே நடந்தது என்றால் நாங்களும் "கதம் கதம்" என்று சொல்லிப் போகவேண்டியதுதான்.

செய்பவன திருந்தச் செய்ய வேண்டுமென்றால் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்கவேண்டும். இல்லையேல் அதே தவறுகளைத் தொடர்ந்து செய்து இன்னமும் அழிவுகளைச் சந்திக்கவேண்டியதுதான். எனவே கலைந்த குட்டை தெளியுமட்டும் அடிப்படைகளை விளங்குவதும் விளக்குவதும்தான் தற்போது செய்யக்கூடியது..

நீங்கள் ஒண்றை ஆக்காமல் வெறும் குறைகளை... சரி உங்களின் பாணியில் ஓட்டைகளை காட்டி மட்டும் என்ன பயன்....??

நீங்கள் முன்னாலை போனால் பின்னாலை வருவதுக்கு உங்களின் செயற் திட்டம் கொள்கை எல்லாத்தையும் சொல்லி நீங்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம்... உங்களுக்கு புலிகள் செய்தவை தவறாகவும் ஆயுதம் பிழையாகவும் இருக்கலாம்... ஆனால் நீங்கள் போகும் பாதையை முதலில் காட்டுகள்... பிறகு போன பாதை பிழையா இல்லையா எண்டதை ஆராய்வோம்...!

நாங்கள் தோத்து போனதுக்கு எங்களுக்கு ஆதரவு எண்டு காட்டிக்கொண்டு எதையும் செய்யாமல் இருந்தவர்கள் மீது வெளிப்படையாகவே நான் குற்றம் சாட்டுகிறேன்... நீங்கள் தான் தோல்விக்கு காரணம்...

இல்லை நீங்கள் போன பாதை தவறு ஆதலால் நாங்கள் பின்னால் வர வில்லை எண்று சொல்ல போகிறீர்களா....??? இல்லை என்னால் என் குடுப்பத்தை விட்டு இதுக்கு எல்லாம் நேரத்தை ஒதுக்க முடியவில்லை எண்று உண்மையை சொல்லப்போகிறீர்களா...??

இங்கை தோத்து போவியள் எண்டு எங்களுக்கு ஏற்கனவே தெரியும்... அதை உங்களுக்கு இப்ப விளங்க படுத்த போறம் எண்டு இன்னும் நிறையப்பேர் எழும்பி வருவினம்... ஆனால் உங்களுக்கு தெரியுமோ தெரியாது ஆனால் நாங்கள் கண்ணை வித்து தான் கண்ணாடி போட்டு கொண்டு இருக்கிறோம் எண்டு புலிகளால் நன்கு உணரப்பட்டு இருந்தது எண்டு...

இதவி விட வளி எண்ற ஒண்டையும் தமிழ் மக்களும் ஆக்கவில்லை, சிங்களமும் விடவில்லை...

Edited by தயா

எனக்கும் இவ்வாறான விமர்சனக்கள் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது.இந்த விமர்சகர்களிடம் நான் கேட்கும் கேள்விகள்.

பாதை பிழை என்றால் உங்கள் பாதை எது? அந்தப் பாதையில் பயணிக்க நீங்கள் தயாரா? ஒரு பதினாலு வயதுப் பெடியன் தனது வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி செயலூக்கமாக ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தை உருவாக்கிய செயற்திறன் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் இன்று நீங்கள் தான் பிரபாகரன் உங்கல் வழி தான் புலிகளின் வழியாக இருந்திருக்கும்.

காலை ஆட்டிக் கொண்டு எமது சுயவாழ்வை வளமாக்கிக் கொண்டு பாதுகாப்பாக இருந்து கொண்டு விமர்சங்களை வைக்கலாம்.ஆனால் வரலாறு உண்மையாக செயற்படுபவர்களாலையே எழுதப்படுகிறது.அவர்களே மக்களால் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு உண்மையாக செயற்படுபவர்களாலையே எழுதப்படுகிறது.அவர்களே மக்களால் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

உண்மையாகச் செயற்படுபவர்களைக் கூட தமது சுயநலன்களுக்குப் பாவிக்கும் ஒரு கூட்டம் இருப்பதனால், மக்களினால் அங்கீகரிக்கப்படக்கூடிய தலைவர்கள் தற்போது தமிழர்களிடையே இல்லை. எனினும் வரலாற்றில் நிற்கக்கூடிய தலைவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த தவறுகளை ஒரு தடவை ஒரு வருசைப்படுத்த முடியுமா?

பல ஆய்வுக் கட்டுரைகள் வரிசைப் படுத்தியுள்ளன.

உதாரணம்: http://dbsjeyaraj.com/dbsj/archives/1454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.