Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூர்யா - ஸ்ருதி கமல் இணையும் ஏழாம் அறிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யா - ஸ்ருதி கமல் இணையும் ஏழாம் அறிவு

on 04-08-2010 22:14

சூர்யாவும் ஸ்ருதி கமலும் இணைந்து நடிக்கும் படம் 7 ஆம் அறிவு. இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சூர்யாவும், முருகதாஸும் இணையும் இரண்டாவது படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது ஏழாம் அறிவு படக்குழு. ஏழாம் அறிவு - க்கு இசையமைக்க இருப்பது ஹாரீஸ் ஜெயராஜ். படத்தின் அதிகபட்சக் காட்சிகளை சீனாவில் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் முருகதாஸ். இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் சர்க்கஸ் கம்பெனியில் விலங்குகளுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் கதாபாத்திரம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. இதுபற்றித் தெரிவித்த ஏ.ஆர்.முருகதாஸ், இந்தப்படம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யும் என்று சவால் விடுத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கறுப்பி! :lol:

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7ஆம் அறிவு' படக் காட்சி இணையத்தில் வெளியானதால் பரபரப்பு

Date :- 18.3.2011

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா ஸ்ருதிஹாசன் நடிக்கும் '7ஆம் அறிவு' படத்தின் ஒரு காட்சியானது படப்பிடிப்பின் போது இணையத்தளத்தில் கசிந்துள்ளது.

இந்தப் படத்தின் காட்சிகள் படம் முடிவுறும் வரையில் வெளியிடுவதில்லை என தயாரப்பாளரும் இயக்குநரும் தீர்மானித்திருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள இக்காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/cinema/news/001view.asp?key=3429

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஏழாம் அறிவு" படம் ஆவணி மாதம் பாக்ஸ் ஆவிஸில் வெளியீடு...........

Date :- 5.5.2011

ஏழாம் அறிவு திரைப்பட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது..

இதன் இறுதி கட்டபணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடையுமென தெரியவந்துள்ளது.

விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களின் மூலமாக அத்திரைப்படம் ஆடி அல்லது ஆவணி மாதளவில் nவிவருமென நம்பப்படுகிறது.

இத்திரைப்படமானது உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜயன்ட்டின" இயக்கத்திலும் எ.ர்.முருகதாஸின் இயக்கத்திலும் இயங்கிவருகின்றது.

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதுடன் நடிகைகளாக ஸ்ருதி ஹாசனும் நாடோடிகள் திரைப்பட நடிகை அபினயாவும் நடிக்கிறார்கள்.இத்திரைப்படத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதுடன் ரவி.கெ.சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றார்.

அத்துடன் இத்திரைப்படத்தில் அதிகமான வரைவியல் வடிவமைப்பாளர்கள் பணிபுரிவதுடன் வரைவியல் பணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படலதாகவும் தெரியவந்துள்ளது..

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்களுக்கு சமர்பணமாக ஒரு பாடல்!

Published on August 13, 2011-2:31 pm

ஹரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்திருக்கும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்களில் ஒரு பாடலை இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் என்ன தோழா என்ற பாடலையே இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஹரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த கஜினி படத்தை தொடர்ந்து இவர்கள் இணைந்திருக்கும் ஏழாம் அறிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=30172

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு? –

26 அக்டோபர் 2011

7Nth2_CI.jpg

‘‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்’’ சொல்கிறது ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.

‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600&ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

‘யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

7Nth%201.jpg

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,

‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று("bodhi dharma was the 3rd child of king's skanda in south tamilnadu" written by 'Hideo Nakamura' -1955) கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.

‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார். ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா.கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69177/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Quote:"சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது"

எங்கிருந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Quote:"சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது"

எங்கிருந்து

எனக்கு மகிந்தாவை பார்த்தால்தான் சத்தி வரும்.அடிச்சி நொறுகோனும் போலிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மகிந்தாவை பார்த்தால்தான் சத்தி வரும்.அடிச்சி நொறுகோனும் போலிருக்கும்

எனக்கும்தான் என்ன செய்ய, பிளைட் பிடிச்சி உடன வாங்க கறுப்பி , நான் வேலை செய்யும் கட்டிடத்துக்கு முன்னால்தான் CHOGM, எங்கு மகி நிற்பான் என்று காட்டுகிறேன் பாய்ந்து அடியுங்கோ ஆசை தீர, தூர நின்று நான் கல்லேறிகிறேன், பொலிஸ் பாதுகாப்பு குறைவு, வெள்ளி 10-12 பொது ஊர்வலம் பல பிரச்சனைகளை முன்வைத்து (http://video.perthnow.com.au/2159843248/Nine-News---Protest-fizzer), அதில் தமிழர்களையும் வரச் சொல்லியிருக்கு, நான் போவேன்.

Quote: "பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை"

பெளத்தத்தை ஏற்றுக்கொண்ட சிங்கள காடையர்கள் செய்த அசிங்கங்களை இந்த நாகர் சேனை கண்ணை மூடி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்

ரெண்டு படமுமே பார்த்துட்டேன்............. !

ஏழாம் அறிவு ... ரொம்ப சீரியஸா போவுது.......!

+ அசர வைக்கும் டெக்னாலாஜி!

வேலாயுதம் காமெடி+ செண்டிமெண்ட்...........ஒரே சிரிப்பு !

எனக்கும் - என் டாவுக்கும் ,,, வேலாயுதம் தான் ரொம்ப .....புடிச்சிருக்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

7ம் அறிவு - உபயோகம்.

வேலாயுதம் - அநியாயம். :):D

ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்...

கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்! (via Facebook)

ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்...

கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்! (via Facebook)

இது மட்டுமல்ல இன்னும் நிறைய வசனம்கள் இருகின்றன குறிப்பாக yarl நூலக எரிப்பு பற்றியதை சொல்லலாம் இறுதியில் சமர்ப்பணம் எண்டு அழிக்கபட்ட தமிழர்க்கும் அழியாத தமிழுக்கும் இப்படம் சமர்ப்பணம் எண்டு வருகிறது..இந்த வசனம்களுகாகவே இப்படம் இலங்கையில் தடை செய்ய படலாம் என்று நினைக்கிறன் வேலாயுதம் இன்னும் பார்க்கவில்லை 7m அறிவு பிடிச்சிருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் அறிவு - கருத்துக்கள் நிறைய இருந்தாலும்,

கமர்ஷியல் கலவைகள் சரியில்லை!

படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்... ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!

படத்திற்கு வருவோம்... தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.

பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்... ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்... இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.

போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம். இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.

சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர். அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.

பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது. அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான்.

அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர். சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்... அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே!

ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான். வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்?

மறபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர். இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும். போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி. (இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin's Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது...)

சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்... இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு... சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான். போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.

சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.

போதிதர்மரின் திறமைகள் திருப்பவர... விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி!

படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்... பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.

முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.

ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு. காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.

முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் - எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை... வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.

வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.

ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் என்ன தோழா... பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்..., யம்மா யம்மா..., அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை. இந்தக் கூட்டணியில் இன்னொரு கஜினியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் கீழே தான்!

http://cinema.nakkhe...ies.aspx?T=1082

இது தானா கதை...ச்சாய் ..என்னுடைய ஸீரோ அறிவு தொடர் இதிலும் பார்க்க நல்லாய் கொண்டு போயிருக்கலாம்....தவிர்க்க முடியாத காரணங்களினால் தொடர முடியவில்லை....சும்மா ஒரு வாய் சவடால் தான்..கோபிச்சு போடாதையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு வருத்தம் என்னவென்றால் சுருதி பேசும் தமிழ் ஆங்கிலத்தமில்போல் சுருதியின் தகப்பன் சொல்லும் ஆங்கிலம் கலந்த டமில் பேசுகின்றார் அதை தவித்து நல்ல தமிழில் பேசியிருந்தான் சிறப்பாக அமைந்திருக்கும். :wub:

வீரம் வீரம்னுதானே சண்டை போட்டாங்க எங்க பக்கத்து நாட்டில

ஜெயிக்க முடிஞ்சுதா?

செத்துதானே போனம்!?

வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ!

ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொன்றதுக்குப் பேர் வீரமல்ல.

துரோகம்!!!

ஆயிரத்தில் ஒருவனுடன் எனக்கு இவர்களில் ஒரு சந்தேகம் . வியாபாரத்திற்கா ? அல்லது உண்மையில் மனமொத்தா என்று ?

இவர்களை புரிந்து கொள்வது மிக கஷ்டம் ,இதை தயாரித்ததே உதயநிதி தானே .

டெல்கியில்(அண்ணை மீண்டும்} ஒரு பத்திரிகையாளர் சொன்னது இந்தியாவின் நிழல் கூட படாமல் தான் உங்கள் அரசியல் இருக்க வேண்டுமென்று .உண்மையிலும் உண்மை

7 ஆம் அறிவுக்கு இலங்கையில் தடையா?

நடிகர் சூர்யா, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதி நடித்துள்ள 7 ஆம் அறிவு தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் சூர்யா புத்த துறவியாக நடித்துள்ளார். ஒரு நாட்டை 9 நாடுகள் சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்று சூர்யா பேசியிருக்கிறார்.

அந்த வசனத்தையும், தமிழரான போதிதர்மரை புத்தருக்கு இணையாக பேசப்படும் காட்சிகளையும் பார்த்து சிங்களவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனராம். தமிழரான போதிதர்மருக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவது எல்லாம் இந்த படத்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அந்தக் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கள அமைப்புகள் குரல் எழுப்பி வருவதால் அந்தப் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களுக்குப் பிடிக்காத காட்சிகளை நீக்கிய பின் திரையிட அனுமதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 7 ஆம் அறிவு யாழ்ப்பாணத்தில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

http://www.alaikal.com/news/?p=86343

Edited by akootha

ஆயிரத்தில் ஒருவனுடன் எனக்கு இவர்களில் ஒரு சந்தேகம் . வியாபாரத்திற்கா ? அல்லது உண்மையில் மனமொத்தா என்று ?

இவர்களை புரிந்து கொள்வது மிக கஷ்டம் ,இதை தயாரித்ததே உதயநிதி தானே .

டெல்கியில்(அண்ணை மீண்டும்} ஒரு பத்திரிகையாளர் சொன்னது இந்தியாவின் நிழல் கூட படாமல் தான் உங்கள் அரசியல் இருக்க வேண்டுமென்று .உண்மையிலும் உண்மை

அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் பணம் வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் சிந்தனைத்திறனை மழுங்கடிப்பதற்காகவே எம்மைக் கவரும் விதத்தில் படங்களை எடுக்கிறார்கள். அதில் வெற்றியும் கண்டுவருகிறார்கள். அவர்களுக்கேற்றாற்போல் எமது தமிழ் இளையோர்களும் தமிழ்ப் படங்களையே அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள். தமிழ்ப்படங்கள் ஓடும் தியேட்டர்களில் தமிழ் இளையோர்களை அதிகம் காணலாம். அதுவும் ஜோடிகளாக.

(குறிப்பு: இங்கு ஆங்கிலப் படங்கள் ஓடும் தியேட்டர்களிலேயே தமிழ்ப் படங்களும் ஓடும். )

ஏழாம் அறிவு படத்தை நானும் பார்த்துவிட்டேன். வழக்கம்போல, ஒரிரண்டு ரீல்களில் மட்டும் ஒருசில விடயங்களைக் கூறிவிட்டு மிச்சம் அனைத்தும் மசாலாவாக்கியிருக்கிறார்கள். ஆகவே, இதுவும் வியாபாரத்தில் களை கட்டும். கொஞ்ச நாளைக்குப் போதி தர்மரைப் பற்றிப் பேசுவார்கள். அதன் பின் எல்லோரின் மனதிலும் நிலைத்து நிற்கப்போவது அந்த மசாலாக்கள்தான்.

இன்றிரவு படம் பார்த்தேன். தமிழ் தேசிய உணர்வுகளை கொஞ்சம் வியாபாரப்படுத்தி காட்டியுள்ளார்கள். சண்டைக் காட்சிகளும் சீனா வின் இயற்கை வளக் காட்சிகளும் அருமை. ஆனால் கதையோ கதையோட்டமோ மனதை தொடும்படி எனக்கு இருக்கவில்லை. முடிவும் ஏதோ சடாரென முடிந்தது போல இருந்தது. அத்துடன் டி.என்.ஏ பரம்பரை தொடர்பான செய்திகளை தனக்குள் சேமித்து வைத்திருக்கும் என்றுதான் அறிந்து இருக்கின்றேன். முகர்ந்து பார்த்து குணாதிசயம் கண்டுபிடித்த மூலிகைகள் பற்றிய தகவல்களையெல்லாம் தனக்குள் சேமித்து வைத்திருப்பதாக காட்டுவது நல்ல பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

Edited by Sabesh

ஏழாம் அறிவும் ,, வேலாயுதமும் ........... பார்க்க..

ஏழாம் அறிவு :........ http://www.tubekolly.com/watch/160b9198302ebdb144dc/7am-Arivu-DVD

வேலாயுதம்: .......... http://www.tubekolly.com/watch/81d783f8764e508151cd/Velayudham-No-watermark-HQ-Print

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.