Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். - குமரன் பத்மநாதன் (கே.பி.)

Featured Replies

திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010 11:50

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது :-

கே: கடந்த வருடம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

ப: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது.

துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கே: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?

ப: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கே: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?

ப: இல்லை நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கே: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?

ப: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன் என்பதாகும்.

கே: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?

ப: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதியிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துக்கொண்டது. ஒருவர் 'வெரி சொரி மிஸ்டர் கே.பி'. என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் (2 பகல்களும் 2 இரவுகளும்) அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்கவேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடு கடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்கா? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா? அல்லது வேறெங்குமா? கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின், நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன? 2007ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

ப: நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது.

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

கே: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.

ப: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர். இலங்கை அதிகாரிகளால் நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன். அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.

ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.

பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்" என்பதுபோல் ஏதோ கூறினேன்.

கே: நீங்கள் குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?

ப: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன்.

எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.

கே: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?

ப: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.

பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும் ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு "நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் " என்றார்.

நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும் அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.

கே: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?

ப: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.

இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.

நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்;கொள்ளப்படுகின்றன.

கே: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?

ப: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

கே: அது எப்படி?

ப: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கே: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?

ப: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கே: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக்கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

ப: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.

மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.

அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.

புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார்.

எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கே: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?

ப: ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.

கே: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?

ப: அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.

கே: அதன்பின் என்ன நடந்தது?

ப: நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

கே: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?

ப: அது இன்னொரு கதை. ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.

பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.

பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் 'இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன்.

அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன்.

கே: பாலா அண்னை (அன்ரன் பாலசிங்கம்) ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?

ப: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம்"'நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்" எனக் கூறினார்.

பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.

கே: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்;வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?

ப: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.

இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கே: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?

ப: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.

அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர் நண்பர் அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது.

கே: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக, பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ப: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில,; அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் 'இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன'; எனவும் வலியுறுத்தியிருந்தார்.

கே: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?

ப: அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் "உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாள்.

எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். ஆவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். ஆவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.

கே: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?

ப: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)

DBS Jeyaraj can be reached at djeyaraj2005@yahoo.com

(தமிழில்: ஆர்.சேதுராமன்)

Edited by Bond007

  • Replies 106
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி யாழில் திருப்பி திருப்பி அரைக்கப்படுகிறது. :D:)

எந்த உத்தரவுப் பிரகாரம் கே.பி. கைது செய்யப்பட்டார்? நீதிமன்ற அறிவுறுத்தலா, கோத்தபாயவின் நடவடிக்கையா?

கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளாரா?

அவ்வாறாயின் அவர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரிலா? அல்லது பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் கோத்தபாயவின் நடவடிக்கை யின் பிரகாரமா?

இவ்வாறு நாடாளுமன்றில் நேற்றுக் கேள் விக் கணைகளைத் தொடுத்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸா நயக்கா.

இது தொடர்பாக அவர் சபையின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை யாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது:

மிகப் பயங்கரமானவனவரான கே.பி. தொடர்பாக நான் இந்தச் சபையில் சில கேள்வி களை முன்வைக்கின்றேன்.

கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளாரா அப் படியாயின், அது நீதிமன்றத்தின் அறிவு றுத்தலுக்கு அமைவாகவா? இல்லாவிட் டால் பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரின் நடவடிக்கைக்கு அமைவாகவா? அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்? அவர் தொடர்பில் முழுமையான விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததும் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி கே.பி. புலிகள் அமைப்பின் அடுத்த தலைவராகத் தன்னைத்தானே கே.பி. பிரகடனப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அவர் தாய்லாந்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அந்தக் கைதை அப்போதைய பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தினார். அத்தோடு கே.பியிடமிருந்து இரகசிய தகவல்கள் பெறப்படுகின்றன என்றும் கூறினார்.

கே.பியிடம் அதிக சொத்துகள் இருக்கின்றன என்றும் அவற்றை அரசுடைமை யாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து கே.பியின் தகவலின்படி கொழும்பில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பல மீட்கப்பட்டன என்று அவர் ஹொர ணையில் வைத்துக் கூறினார். இவற்றை வைத்துப் பார்க்கும்போது இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கே.பி. உதவினார் என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில், இவ்வருடம் ஜூன் மாதம் 20ஆம் திகதி கே.பி. யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களுக் குச் சென்று வந்தார் என்று அரச ஊட கங்களே தெரிவித்தன.

ஜூலை 29ஆம் திகதி பத்திரிகையில் கே.பியின் பேட்டி ஒன்று வெளியானது. வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபி விருத்தி அமைப்பொன்றையும் அவரது தலைமையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதி ஒருவர் இவ்வாறு பல்வேறு இடங் களுக்குச் செல்லவோ, பத்திரிகையில் பேட்டி வழங்கவோ சட்டத்தில் இட மில்லை. அவர் அரச சாட்சியாக மாற்றப் படுவார் என்று கெஹலிய கூறியிருந்தார்.

புலிகள் அமைப்பில் இருந்து செயற் பாட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள னர். அவர்களின் பெயர் விவரங்கள் வெளி யிடப்படவில்லை.

பலவந்தமாகக் கடத்திச் சென்று புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறையில் வாடுகின்ற நிலையில், அந்த அமைப்புக்குத் தலைமை வகித்தவர்களுக்கு மன்னிப்பளிப்பது விசனத்திற்குரியதாகும். என்றார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3697&Uthayan1281087674

ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.

பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்" என்பதுபோல் ஏதோ கூறினேன்.

000202FE.gif

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ... புத்தன்ரை தேப்பனுக்கோ கோத்தபாயா பிறந்தவர்???????? .... கேயண்ணா பீயண்ணாவுக்கு தெரிந்த கோத்தாவின்.."கருணை, காருண்யம், ..." ... புல்லரிக்க வைக்கிறது!!! ... இவன் பாவி பிரபாகரனை பேயனாக்கினது மட்டுமல்லாது, இன்று எங்களுக்கு அதுக்குள்ளை வைக்க வெளிக்கிடுகிறான்!!!!

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.
0002053E.gif

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது.

தலைவர் ஓய்வெடுக்கச் சொன்னார், ஆனால் நீங்கள் ஓய்வெடுக்கவில்லை உங்கள் , ஆட்களும் ஓய்வெடுக்கவில்லை. கஸ்ரோவின் நிர்வாகத்துள் உங்கள் ஒற்றர்கள் நிறைந்தே இருந்தார்கள். குறிப்பாக ஊடகங்களுக்குள் உங்கள் ஆட்க ள், உங்கள் ஆட்களின் ஆடிவருடிகள் நிறைந்தே இருந்தார்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப: அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.

துரோகி, தன் இனத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பு, வேடம் கலைந்த பின்னர் கண்ணீர் சிந்தி பலன் இல்லை :D:):D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ இடிக்குது

பேசட்டும்

இன்னும் கொஞ்சம் பேசட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கதைப்படி பார்த்தாலே தெரியுது..

இவர் என்னவோ சுத்துமாத்துச் செய்திருக்கிறார்..

தலைவர் வன்னிக்கு அழைத்திருக்கிறார்...

இவர் வெளிநாட்டு தேடுதல் பட்டியலைக் காட்டி வன்னிக்கு வராமல் இருந்திருக்கிறார்..

(சமாதான காலத்தில் பொட்டம்மா சூசையண்ணன் போன்றோரே.. சிங்கப்பூர் போய் சிகிச்சை பெற முடிந்த அளவுக்கு இவரால் ஏன் வர முடியவில்லை...??????!)

இதே காலப்பகுதியில் தான் கருணாவும் இவர் செய்ததையே செய்திருந்தார்..

கருணா இயக்கத்தை விட்டு ஓடியது 2003/4 இல்...

இவர் விலக்கப்பட்டது 2003 இல்...

இவர் தன்னில் மக்கள் குறை கண்டுபிடிக்காமல் இருக்க.. இப்போ தலைவர் தலைவர் என்று பேசுகிறார் என்று நினைக்கிறேன்.

இவருக்கு பிடிக்காதவர்களை.. கருணாவுக்கும் பிடிக்கவில்லை... தமிழேந்தி.. தமிழ்செல்வன்.. இப்படி இவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இறுதியில் இவரை வெளிநாட்டு விவகாரங்களுக்காக இயக்கம் நியமித்தது என்பது தலைவர் எடுத்த முடிவா அல்லது இவரது ஆட்களால் எடுக்கப்பட்ட முடிவா என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

தலைவர் பற்றி உலகமே தேடிக்கொண்டிருந்த போது இவர் தலைவர் வன்னியில் தான் என்று அறிக்கைவிட்டுச் சொன்னவர்.. ஏன்..??! அதுவும் இராணுவம் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்திருந்த நிலையில்..

இவர் 2003 இலேயே.. இயக்கத்தின் மீது பழிதீர்க்கும் படலத்தை ஆரம்பித்து விட்டார். வந்த ஆயுதக் கப்பல்களின் விபரங்களை தனது ஒற்றர்கள் மூலம் அறிந்து இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கி வந்துள்ளார்.

இவர் 2003 இல் அல்லது அதற்கு முதலிருந்தே சிறீலங்காவுக்கான ஒற்றராக செயற்பட்டுள்ளார்.

அந்த நெருக்கமே இன்று இவரை பாதுகாத்துள்ளது. அதுவும் டக்கிளஸ்.. கருணா ரேஞ்சை கடந்து இவர் அங்கு செல்வாக்குச் செய்பவராக இருக்கிறார்..!

தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று அறிக்க விட்டவர்,.. பின்னர் இல்லை என்று அறிக்கை விட்டார். இது எதனடிப்படையில்.. சிறீலங்கா கூறியதன் அடிப்படையில் இருக்கலாம்.

ஆக இவர் தலைவரால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். தண்டனைக்குப் பயந்து மலேசியாவிலேயோ தாய்லாந்திலோ தங்கி விட்டார். கருணா செய்த அதேவேலையை செய்திருக்கிறார். தலைவர் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.. இவர்களின் சதியால்.

இந்தப் பிளவுகளை ஆழப்படுத்தி இயக்கத்தைப் பலவீனப்படுத்தி அழித்துவிட்டார்கள். இதில் பல நாட்டுச் சதிகள் உள்ளடக்கம்..!

இதுதான் யதார்த்தம் போல் தெரிகிறது.

உண்மை ஒரு நாள் வெளி வரும்..! இந்தக் கேபியின் உண்மை முகமும் வெளி வரும்..!

இவரை யாரும் கைது செய்யவில்லை. இவர் பற்றிய தகவல் சதிகள் புலம்பெயர் நாடுகளில் இருந்த தீவிர தலைவர் விசுவாசிகளுக்கு தெரிய வந்ததால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டு மலேசிய அதிகாரிகளிடம் கூறி தனக்கு விசுவாசமான சிறீலங்காவிடம் அடைக்கலம் தேடியுள்ளார்.

அதாவது கருணா எப்படி தேடிக்கொண்டாரோ அப்படி.

இது இன்று நேற்றல்ல.. தலைவருக்கும் இயக்கத்திற்கும் எதிராக பின்னப்பட்ட பெரிய சதி வலையின் ஒரு அங்கமே ஆகும்..! இதனை தலைவர் எப்படியோ உணர்ந்துதான் இவரை பொறுப்புக்களில் இருந்து நீக்கி விசாரணைக்கு அழைத்துள்ளார்.

தலைவர் அவருடன் கூட இருந்தவர்களாலேயே ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதுதான் நடந்திருக்கிறது. களத்தில் நின்றவர்களும் சிலர் இவருக்கு விசுவாசமாக இருந்து செயற்பட்டு சிறீலங்கா இராணுவத்திற்கு உதவி இருக்கலாம்..! இதுவும் நடந்திருக்கச் சாத்தியம்.

அதன் அடிப்படையில் தான் போராளிகளின் முக்கிய எதிர்ச்சமர்கள் சில தோல்வியை சந்தித்துள்ளன. ஒரு சமர் தோல்வியில் முடிந்தால் அதன் விளைவு பாரதூரமானது. அதையே இயக்கம் சந்தித்து நின்றுள்ளது.

எதிரி வெறும் படைப்பலத்தை மட்டும் நம்பி.. போகாமல்.. பன்னாட்டு ஆதரவோடு இயக்கத்தின் முதுகெலும்பையே முறித்து விட்டுத்தான் உள் நகர்ந்திருக்கிறான்..! அதுதான் தலைவர் எதிர்பாராத விதங்களில்.. போராட்டம் முடிவை எட்டி இருக்கிறது. மீண்டும் தலைவர் முதலும் இறுதியுமாக நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் சந்தேகங்கள் மக்கள் மனதில் உள்ள கேள்விகள்தான்.தலைவர் கே.பீயை ஒதுக்கி வைத்திருந்த போதும் இறுதிக்கட்டத்தில் மீணடும் கே.பீயுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய ~சூழ்நிலை வந்திருக்கிறது.ஏனெனில் மே 15இல் சூசையின் பேட்டியில் கேபி மூலமாகப் பேசுகிறோம் என்று வரி சொல்லியிருக்கிறார்.ஆகவே அந்தத் தொடர்புகளை வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் தானே தலைவர் அறிவித்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்திருக்கிறார்.அது முடியாமல் போகவே கைது நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

.. சற்றுமுன் பிபிசி நியூஸில் சாள்ஸ் ரெயிலரின் யுத்தக்குற்ற வழக்கு தொடர்பான செய்தியில் ... முன்னால் யுகோச்லாவியா அதிபர் மெலோசிவிச், அதன் பின் தற்போது சாள்ஸ் ரெயிலரின் வழக்குகள், உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் இன்றோ, நாளையோ யுத்தக்கூண்டில் நிறுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக .....

இன்று கேபி மூலமான இம்மாயைகளும், புலத்தில் நடைபெறும் எம் சிலரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முயற்சிகளை சீர்குலைப்பதற்கு, மிக திட்டமிட்டு சிங்களம் செயற்படுத்ததொடங்கியிருக்கிறது!!!!

இன்று எம்முன் இருக்கும் தேர்வு ... இருக்கிறார்/இல்லை, புலி/பூனை/எலி ... ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழி வகைகளில் சிங்களம் கடந்த காலங்களில் நடாத்திய மனித உரிமை மீறல்களுக்கான நியாயம் தேடி, இலக்கை சீராக நிர்ணயித்து, அதனை நோக்கி பயனிப்பதே!!!!!

அதை விடுத்து ..... கட்டளைக்கு காத்திருக்கிறோம், வெட்டுவோம், விழுத்துவோம், ... என்று உலகம் ஏற்காததும், நிஜத்துக்கு சாத்தியப்படாததுகளை இன்னும் இழுத்துக் கொண்டு போக வெளிக்கிட்டோமாயின் .... மிகுதி எம்மினமும் பூண்டோடு அழிவதை தவிர்க்க முடியாது!!!!

இன்று கேபி மூலமான இம்மாயைகளும், புலத்தில் நடைபெறும் எம் சிலரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முயற்சிகளை சீர்குலைப்பதற்கு, மிக திட்டமிட்டு சிங்களம் செயற்படுத்ததொடங்கியிருக்கிறது!!!!

இன்று எம்முன் இருக்கும் தேர்வு ... இருக்கிறார்/இல்லை, புலி/பூனை/எலி ... ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழி வகைகளில் சிங்களம் கடந்த காலங்களில் நடாத்திய மனித உரிமை மீறல்களுக்கான நியாயம் தேடி, இலக்கை சீராக நிர்ணயித்து, அதனை நோக்கி பயனிப்பதே!!!!!

இதே வேலையை ( இணக்க அரசியலை) கூட்டமைபு செய்தால் ஆதரிப்பீர்கள் KP செய்தால் எதிர்பீர்களோ...??? என்ன ஒரு சிறப்பான நிலைப்பாடு.... :D

உங்கட பிரச்சினை ஆக்களை குழப்புறதே தவிர இணைக்கிறது இல்லை எண்டது மட்டும் உண்மை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், உங்கள் ஆதங்கத்தினைப் படித்துப் பார்த்தேன். ஒருபக்கம் பார்த்தால் உங்கள் கருத்துச் சரியாகப் பலருக்குத் தோன்றுகின்ற அதேவேளை அதனை மறுபக்கம் ஆராய்ந்தால் யாரில் சரி-பிழை என எமக்குள் குழப்பங்கள்தான் வரும்.

இவ்வாறு எல்லாம் எழுதுவதால் நான் கே.பி.யைப் புகழ்வதாக பலரும் எண்ணுவார்கள். எனக்கு அதுபற்றியெல்லாம் கவலையில்லை.

கே.பி.யையோ அல்லது கருணாவையோ நீக்கும்போது விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இவர்களால் வரக்கூடிய பின்விளைவுகளை எதிர்பார்க்காமலா அவர்களை விலத்தியிருப்பார்? அப்படியெனில் நீங்களே விடுதலைப் புலிகளின் தலைவரின் மதிநுட்பத்தினையும் தீர்க்கதரிசனத்தையும் கேலி செய்வது போன்றல்லவா உள்ளது.

அடுத்து, கே.பி.யை மீண்டும் வெளியுறவுப் பணிகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் நியமித்த செய்தியை தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களே கொடுத்திருந்தார். நடேசன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரின் அனுமதியின்றி அந்தச் செய்தியினை கொடுத்திருக்க முடியாது.

இது தொடர்பான செய்தி, தமிழ்நெட் இணையத்தளத்தில் இருக்கும் பாருங்கள். அத்துடன், அவர்கள்தான் முதன்முதலில் அவரின் முகத்துடன் கூடிய படத்தினையும் வெளியிட்டிருந்தார்கள் என்பதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். (தமிழர்களின் செய்திகளை வெளிக்கொணர ஒரு இணையத்தளம் தேவை என்று இணையப் புரட்சி தொடங்கிய காலத்தில் தமிழ்நெட் இணையத்தளத்தினை உருவாக்க நோர்வேயில் அடித்தளம் இட்டவர்களில் கே.பி.யும் ஒருவர் என்பதனை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்)

சூசை, பொட்டம்மான் ஆகியோர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றதாக எழுதியிருந்தீர்கள். இது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் சென்றிருந்தால் யார்தான் அவர்களை கைது செய்யமுடியும்? (இவர்கள் சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார்கள் எனில் சிங்கள அரசு எவ்வளவு நல்லவர்கள் என்பதனையும் மறைமுகமாக நீங்களே ஒப்புக்கொள்கின்ற மாதிரியல்லவா இருக்கின்றது)

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கிறார்; இல்லை என்கிற விடயம் தொடர்பான செய்திக் குழப்பத்துக்கு காரணம் தமிழ்நெட் இணையத்தளமும் நெடியவன் குழுவுமே தவிர கே.பி. அல்ல.

அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று கூறினால்தான் புலம்பெயர் மக்களிடம் செயற்பட முடியும் (அதாவது, நிதி அறவிடலாம்) என நெடியவன் குழு கூறி அப்படி நீங்கள் கூறினால்தான் உங்களின் தலைமையை ஏற்போம் என கே.பி.க்கு நெடியவன் குழு கூறியது. இந்தக் குழப்பத்தில் கே.பி.யும் எடுபட்டது என்னவோ உண்மை. ஆனால், இப்படி ஏமாற்றுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கே.பி. பின்னர் உணர்ந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்த செய்தியை வெளியிட்டார்.

கே.பி.யின் அண்மைய காலச் செயற்பாடுகளைப் பார்க்கும்போது அவர் யதார்த்த நிலைக்கு உடன்பட்டுச் செல்ல விரும்புகின்றார். இல்லாத ஒன்றை இருக்கின்றது என்று கூறி மக்களை ஏமாற்றுவதிலும் பார்க்க இருக்கின்ற ஒன்றை வைத்து செயற்படக்கூடிய தன்மையில் அவர் செல்ல விரும்புகின்றார் என்பதே அவரது செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கே.பி. பேட்டியின் ஓரிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால்- கைது செய்யப்பட்டுள்ள தான் அரசுக்கு ஒத்துழைக்காது பிடிவாதமாக இருந்திருப்பேன் எனக் கூறுகின்றார். இந்த இடத்திலேயே அந்த மனிதர் யதார்த்தத்துடன் செயற்பட விரும்புவதனைத்தான் காட்டுகின்றது.

ஒருவேளை நெடியவன் நாளை பிடிபட்டால் வீரத்துடனா செயற்படுவார்? எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து விட்டு தனது குடும்பத்தினை காப்பாற்றிக்கொள்ளத்தான் முயல்வார். அப்போது நீங்களோ நானோ அவரைக் குறை கூறமுடியாது. ஏனெனில் சூழ்நிலை அப்படியானது.

2001 ஆம் ஆண்டு காலகட்டப் பிற்பகுதிகளில் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க சு.ப.தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, தமிழேந்தி ஆகியோர் புலத்தில் உள்ள நிர்வாகக் கட்டமைப்புக்களில் தலையிடுவதற்கு பேச்சுவார்த்தைக் குழுவில் தமது உறுப்பினர்களை அனுப்பி- அதாவது, புலத்தில் உள்ள கட்டமைப்புக்களில் தமது உறுப்பினர்களை நுழைத்து புலத்தில் பல பிரிவுகளை உருவாக்கினர். (அதாவது, அவர் சு.ப.தமிழ்ச்செல்வனின் ஆள், இவர் தமிழேந்தியின் ஆள், அவர் காஸ்ட்ரோவின் ஆள் எனப் பல பிளவுகளை உருவாக்கினர்)

பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டப்பகுதியானது புலத்தில் உள்ள உண்மையான செயற்பாட்டாளர்களுக்கு தகடு வைக்கின்ற பொன்னான காலமாகவும் இருந்தது என்பதே சரியானது.

அதாவது, களத்தில் உள்ளவர்கள் புலத்தில் உள்ளவர்களை தாமே கட்டுப்படுத்தலாம் என்கிற அதீத நம்பிக்கையினால் முன்னர் கே.பி.யின் கீழ் இருந்த கட்டமைப்புக்களை குழப்புவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இல்லாத பொல்லாததுகளை கூறினர். இங்கே விடுதலைப் புலிகளின் தலைவர் அழைத்தபோது கே.பி. போகாத காரணத்தினால் அவர்மீது சந்தேகங்கங்களை உருவாக்குவதாக எழுதப்பட்டிருக்கின்றது. ஜெயசிக்குறு சமர் இடம்பெற்ற காலத்தில் தனது தகவலை தெரிவிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் தனது பிரதிநிதியாக தமிழேந்தி அவர்களை அனுப்பினாரே தவிர கே.பி.யை வருமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை.

ஒருவேளை நீங்கள் யாவரும் நினைப்பது போன்று கே.பி. அந்த நேரம் சென்று அவர் கைதாகியிருந்தால் அது ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்துக்கே ஆபத்தாக அமைந்திருக்கும். (இவ்வளவற்றையும் நாங்கள் ஆராய்வதனை விட அவர் தனது பாதுகாப்பில் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்கிற விடயத்தினையே நாங்கள் நோக்க வேண்டும்)

புலத்தில் உள்ள தமிழர்களில் யாராவது இப்போதும் ஊரில் வாழ்வது போன்று வேட்டி சாரத்துடன் வீதிகளில் திரியவில்லை. அந்த அந்த நாட்டுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். நான் இங்கே கூற வருவது யாதெனில், களத்தில் உள்ளவர்கள் புலத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்த நினைத்த செயற்பாடானது களத்தில் மக்களை நடத்திய முறை போன்றதே.

அதாவது, நிதி சேகரிப்பிலிருந்து பல விடயங்களைக் கூறலாம். இதுவே முன்னர் கே.பி.யின் கட்டமைப்பு மிகவும் திறமையாக பலரை அணுகி நிதி சேகரிப்புச் செய்ததுடன் ஆயுதங்களையும் அனுப்பியது. காஸ்ட்ரோவின் நிர்வாகம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டபோது எத்தனையோ இடங்களில் அநாகரிகமான முறையில் செயற்பட்டதோடு நிதி சேகரிப்பில் ஈடுபடுவோரை ஊக்கத்துடன் செயற்பட வைப்பதற்கு சேகரிக்கும் நிதியில் குறிப்பிட்ட வீதம் அவர்களுக்கு எனவும் கூறி அவர்களை அநாகரிகமாக செயற்பட வைத்தது.

இங்கே நான் ஒட்டுமொத்தமாக கூற வருவது இதுதான் கே.பி.யால்தான் விடுதலைப் போராட்டம் அழிந்தது என்று கூறுபவர்கள் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களின் வகைகளில் அடங்குவார்கள்.

விடுதலைப் போராட்டம் அழிந்ததற்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன.

அதில் முக்கியமானவை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னை அதிகம் புகழ்பவர்களை நம்புகின்ற அதேவேளை மற்றவர்களைப் பற்றி இவர்கள் கூறுவதனை நம்பி ஏதேச்சதிகாரமாக முடிவுகளை எடுத்திருக்கின்றார். இதில் தமிழ்ச்செல்வன் அதிக பங்காற்றியிருக்கின்றார். தமிழ்ச்செல்வன் தனது விருப்பு-வெறுப்புக்களையே விடுதலைப் புலிகளின் தலைவரிடம் திணித்து வெற்றியும் பெற்றிருக்கின்றார். ஆனால் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்திருக்கின்றது. (இறந்தவர்களை கொச்சைப்படுத்தி எழுதக்கூடாது. ஆனால், பலரும் உண்மைகளை உணராது திரிவுபடுத்தி எழுதுவதனால்தான் நான் இவ்வாறு எழுத வேண்டியிருக்கின்றது)

பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டப் பகுதியில் நான் வன்னிக்குச் சென்றிருந்தவேளை அங்கே ஒவ்வொரு பிரிவினரும் மற்றப் பிரிவினரைக் கவிழ்கின்ற சிந்தனையோடு இருந்தனரே தவிர அனைவரும் ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்துக்கு தாம் போராடுகின்ற மனநிலையில் இருந்ததாக எனக்குப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தான் அதிகம் நம்பியிருந்தவர்களாலேயே ஏமாற்றப்பட்டிருக்கின்றார். அவர் ஒதுக்கி வைத்தவர்களே விசுவாசத்தோடு விடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை போராடி வீரச்சாவடைந்திருக்கின்றனர்.

கே.பி.யும் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அவர்களும் எவ்வாறான நண்பர்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களிடம் கேட்டால் தெரியும். ஆனால், இந்த இரண்டு பேரையும் கடைசிக்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒதுக்கி வைத்தது துரதிர்ஸ்டவசமான செயற்பாடுகளில் ஒன்றாகவே அமைந்தது.

அது சரி வழமையாக நான் கேட்கின்ற கேள்விகளை மீண்டும் கேட்கின்றேன்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளுக்கும் முள்வேலி தடுப்புக்குப் பின்னால் இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கும் புலத்தில் உள்ள நாம் இதுவரை என்ன செய்தோம்?

வடக்கு-கிழக்கில் தீவிரமாக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்காவது புலத்தில் நாம் ஏதாவது போராட்டம் செய்தோமா?

இப்படியே தொடர்ந்து அவர் துரோகிதான் இவர் துரோகிதான் என்று கூறிக்கொண்டே இருக்கப் போகின்றோமா?

மீண்டும் நான் கேட்டுக்கொள்வது இதுதான் வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு தற்போது எது தேவை என்பதனை உணர்ந்து அதற்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும். இல்லையெனில் நாம் எதனையும் பேசாது புலம்பெயர் வாழ்வோடு ஒன்றிணைந்து வாழ்ந்துவிட்டுப் போகவேண்டியதுதான். ஏனெனில் அந்த மக்கள் யதார்த்தத்தோடு உடன்பட்டு வாழப் பழகிக்கொண்டிருக்கின்றனர். அதற்குள் கல்லெறிகின்ற வேலைகளை நாங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று கூறினால்தான் புலம்பெயர் மக்களிடம் செயற்பட முடியும் (அதாவது, நிதி அறவிடலாம்) என நெடியவன் குழு கூறி அப்படி நீங்கள் கூறினால்தான் உங்களின் தலைமையை ஏற்போம் என கே.பி.க்கு நெடியவன் குழு கூறியது. இந்தக் குழப்பத்தில் கே.பி.யும் எடுபட்டது என்னவோ உண்மை. ஆனால், இப்படி ஏமாற்றுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கே.பி. பின்னர் உணர்ந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்த செய்தியை வெளியிட்டார்.

அடுத்த நாளே உணர்ந்து இளையபாரதிக்கு ஒரு மணி நேர பேட்டி கொடுத்தவர் என்ன?

பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டப்பகுதியானது புலத்தில் உள்ள உண்மையான செயற்பாட்டாளர்களுக்கு தகடு வைக்கின்ற பொன்னான காலமாகவும் இருந்தது என்பதே சரியான

nirmalan

உண்மையாக செயற்பட்ட அந்த உத்தமர்கள் , யார் ஐயா?

Edited by kalaivani

  • தொடங்கியவர்

:D கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன் :)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், 'தமிழ் மிரர்' இணையத்தளத்திற்கு அளித்த விசேட நேர்காணலில் கூறினார்.

தான், புலிகள் அமைப்பிலிருந்த போது தான் கே.பி.யை சந்தித்துள்ளதாகவும் ஆனால் கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது,

“இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது தவறானதும் முட்டாள் தனமானதுமாகும். கே.பி. இலங்கை சட்டத்திட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர். அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதற்காக சிலர் இவ்வாறான கதைகளை கூறுகிறார்கள். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவர் கைதி என்பதால் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவை இருக்கிறது அது வேறு விடயம்” என பிரதியமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்கு 5 வருடங்கள்வரை தேவைப்படலாம் எனக் கூறிய அவர், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் குடியேறினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை திருப்பிக்கொடுக்க வேண்டும் என தான் கூறியதாக வெளியான செய்திகளையும் நிராகரித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை விவகாரம், பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் வழங்கிய செவ்வியை காணொளியில் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் கேபி உண்மையாகவே கைது செய்யப்பட்டு இருந்தால் சிங்கள அரசு அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குமா?...சர்வதேசத்தால் தேடப்படுபவரை இந்தியா முதல் ஏனைய நாடுகள் வரை கைது செய்யாமல் பார்த்துக் கொண்டு இருப்பதன் மர்மம் என்ன?...நெடுக்ஸ் தலைவரின் மதிநுட்பத்தினையும்,தீர்க்கதரிசனத்தையும் கேலி செய்து எழுதி இருக்கிறார் என எழுதும் நீங்களும் அதே தானே எழுதியுள்ளீர்கள்[புகழ்ச்சிக்கு மயங்குபவ்ர் என எழுதுவதன் மூலம்]...நிதி சேகரிப்பில் கேபி திறமையாக செயற்பட்டார் என எழுதி இருந்தீர்கள் ஆனால் கேபி பொறுப்பு ஏற்றவுடன் தானே ஆயுதக் கப்பல்கள் பிடிபட்டன...எல்லா கப்பல்களும் எப்படி சொல்லி வைத்த மாதிரி பிடிபட்டது? கேபியால் காட்டிக் கொடுக்கப்படவில்லை என நீங்கள் சொன்னாலும் சொல்வீர்கள்...அப்படியாயின் கேபியின் நிர்வாகத் திறமை இன்மை காரணமாய் தான் பிடிப்பட்டது என எடுக்கலாமா...தலைவர் கேபியிடம் பொறுப்பை கொடுத்தது கடைசி நேரத்தில் தலைவருக்கு கேபியில் நம்பிக்கை இல்லா விட்டாலும் அங்கு கடைசியாய் அவரோடு இருந்த மக்களையும்,காயம் உற்ற போராளிகளையும் காப்பாற்ற வேண்டி இருந்தால் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை இருந்ததால் பொறுப்பை கேபியிடம் கொடுத்தார்...தலைவ எதிர்பார்த்தார் கேபிக்கும் இந்தியாவிற்கு நட்பு உள்ளதால் கேபி எப்படியாவது யுத்தத்தை நிறுத்துவார் என நினைத்து தான் பொறுப்பை கொடுத்திருப்பார் ஆனால் கேபி அப் பொறுப்பில் இருந்து தவறி விட்டார் என்பதே உண்மை.

கேபி தற்போது யதார்த்தமாக செயற்படுகிறார் என எழுதுகிறீர்கள் எந்த வகையில் என சொல்ல முடியுமா? டக்லஸ் தேவானந்தாவும் காசு கொடுத்தால் கைது செய்ய வைத்திருப்பவர்களை விடுதலை செய்ய உதவுகிறாராம் கேபிபின் உதவியால் யாராவது விடுதலை செய்யப்பட்டு உள்ளனரா?[எனக்கு தெரிந்து இல்லை] அப்படியாயின் அவரும் நாங்கள் புலிக்கு கொடுத்த காசை வைத்து தானே வெளியே எடுக்கிறார்...டக்லஸ்சுக்கும்,கேபிக்கும் என்ன வித்தியாசம் என்டால் டக்லஸூக்கு நாங்கள் போராட என காசு கொடுக்கவில்லை ஆனால் கேபிக்கு கொடுத்த காசை போராட்டத்திற்கு பயன்படுத்தாமல் ஏமாற்றி விட்டார் போராளிகளை வெளியில் எடுக்கவாவது அக் காசை பயன்படுத்தட்டுமே...நீங்கள் சொல்வது போல் அவ் மக்கள் யதார்த்ததோடு வாழ பழகி விட்டார்கள் அங்கு இருப்பவரை பொறுத்த வரை கேபியிலும் பார்க்க டக்லஸ் சிறந்தவர் அது தான் யதார்த்தம்.

நீங்கள் கேட்ட இரு கேள்விக்குமான பதில் இதற்காக கேபி என்ன செய்தவ்ர்,செய்து கொண்டு இருக்கிறார்,செய்வார் என நீங்கள் நினைக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

(இவ்வளவற்றையும் நாங்கள் ஆராய்வதனை விட அவர் தனது பாதுகாப்பில் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்கிற விடயத்தினையே நாங்கள் நோக்க வேண்டும்)

தனது பாதுகாப்பில் தெளிவாக இருந்தவர் கண்ட கண்ட வானொலிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் பேட்டிகளை ஓடி ஓடி கொடுத்தது ஏன்?மக்களே பேசிக்கொண்டார்கள் ஏன் இந்த ஆள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளவில்லை என. முன்பு போல யாரென்றே தெரியாமல் இருந்து இருக்கலாம்.அல்லது திட்டத்தின் படி தான் செயற்பட்டு இறுதியில் இலங்கை அரசிடம் போய் சேர்ந்தாரா?

  • தொடங்கியவர்

ஆனால் கேபி பொறுப்பு ஏற்றவுடன் தானே ஆயுதக் கப்பல்கள் பிடிபட்டன...எல்லா கப்பல்களும் எப்படி சொல்லி வைத்த மாதிரி பிடிபட்டது? கேபியால் காட்டிக் கொடுக்கப்படவில்லை என நீங்கள் சொன்னாலும் சொல்வீர்கள்...அப்படியாயின் கேபியின் நிர்வாகத் திறமை இன்மை காரணமாய் தான் பிடிப்பட்டது என எடுக்கலாமா...தலைவர் கேபியிடம் பொறுப்பை கொடுத்தது கடைசி நேரத்தில் தலைவருக்கு கேபியில் நம்பிக்கை இல்லா விட்டாலும் அங்கு கடைசியாய் அவரோடு இருந்த மக்களையும்,காயம் உற்ற போராளிகளையும் காப்பாற்ற வேண்டி இருந்தால் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை இருந்ததால் பொறுப்பை கேபியிடம் கொடுத்தார்...தலைவ எதிர்பார்த்தார் கேபிக்கும் இந்தியாவிற்கு நட்பு உள்ளதால் கேபி எப்படியாவது யுத்தத்தை நிறுத்துவார் என நினைத்து தான் பொறுப்பை கொடுத்திருப்பார் ஆனால் கேபி அப் பொறுப்பில் இருந்து தவறி விட்டார் என்பதே உண்மை.

இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது - KP

2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான். - KP

2001இற்கு முன் தான் கே.பி பொறுப்பாக இருந்தார். 1983 - 2001 அந்த காலத்தில் தான் புலிகளின் இராணுவ வெற்றிகள் குவிந்த காலம்.

அதன் பின் சர்வதேசப் பொறுப்பகள் பொட்டு - கஸ்ரோவினரே நடாத்தினர். மிகவும் இரகசிய அமைப்பாக செயற்பட்ட இந்த நேரத்தில் தான் கொள்வனவு கப்பல்களே மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள்.

சேறு பூசுவது நல்ல நடக்குது, இங்கே தலைவர் அப்படி ஏமாந்தார், இப்பாடி ஏமாந்தார் என்று எழுதுவாதைப் பார்த்தால் ஏதோ வேலிச் சண்டைல் தான் தலைவர் தோத்துப் போனார் போல் அல்லவோ நடக்குது இங்கே, அமேரிக்க,இந்தியா உட்பட கிட்டத்டட்ட 20 நாடுகளின் இராணுவப் பலம்,புலனாய்வு சக்தி, பணப் பலம் என்பவற்றோடு மோதித்தான் எமது போராட்டம் தோத்துப் போனது என்ற யதார்த்தம் மட்டும் மறக்கப்பட்டுவிட்டது, அதுக்காக இவர்களுடன் மோத வெளிகிட்டது தலைவரின் முட்டள்தனம் என்று பலர் தொடங்கலாம், ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போர் எம்மீது திணிக்கப்பட்டிருக்கும், ஈராகில் நடந்தது என்ன,ஆப்கானிஸ்தானில் நடந்தது என்ன அதே பாணியில் தான் இங்கும் நடக்குது என்றைக்கு ஆனையிறவில் எமது தேசியக் கொடி பறந்ததோ அன்றே எமது விடுதலை போராட்டட்திற்கு சாவு மணி அடிச்சாசு அதன் முதல் பாகாம் 2000ம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் தலையீட்டுடன் யாழ் முற்றுகை தவிர்க்காப்பட்டது,அதன் பின்னர் எல்லம் ஒரு நிகழ்ச்சி நிரலின் பால் நடக்குது, இதை ஆரய்ந்து அதற்குரிய மாற்று வழிகளைத் தேடாமல் எமக்குள்ளே அடிபட்டு நாம் ஒன்றையும் காணப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனது பாதுகாப்பில் தெளிவாக இருந்தவர் கண்ட கண்ட வானொலிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் பேட்டிகளை ஓடி ஓடி கொடுத்தது ஏன்?மக்களே பேசிக்கொண்டார்கள் ஏன் இந்த ஆள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளவில்லை என. முன்பு போல யாரென்றே தெரியாமல் இருந்து இருக்கலாம்.அல்லது திட்டத்தின் படி தான் செயற்பட்டு இறுதியில் இலங்கை அரசிடம் போய் சேர்ந்தாரா?

அப்படி கேளுங்கோ..கேபி போட்ட நாடகம் அப்ப எங்களுக்கு தெரிய வில்லை.. இப்ப எல்லாம் வெளிச்சமாய் தெரியுது..சிங்களவன் அவர எப்படி எல்லாம் வைச்சு பார்க்கிறான்..மே18க்கு பிறக்கு கேபி நிறைய தரம் சொல்லி இருக்கிறார் மீண்டும் போர் தொடுப்போம் என்று..இப்ப என்ன சொல்லுது என்ரா தான் யுத்தத்தை விரும்பினது இல்லையாம்..கடவுளே :wub::huh:

சேறு பூசுவது நல்ல நடக்குதுஇ இங்கே தலைவர் அப்படி ஏமாந்தார்இ இப்பாடி ஏமாந்தார் என்று எழுதுவாதைப் பார்த்தால் ஏதோ வேலிச் சண்டைல் தான் தலைவர் தோத்துப் போனார் போல் அல்லவோ நடக்குது இங்கேஇ அமேரிக்கஇஇந்தியா உட்பட கிட்டத்டட்ட 20 நாடுகளின் இராணுவப் பலம்இபுலனாய்வு சக்திஇ பணப் பலம் என்பவற்றோடு மோதித்தான் எமது போராட்டம் தோத்துப் போனது என்ற யதார்த்தம் மட்டும் மறக்கப்பட்டுவிட்டதுஇ அதுக்காக இவர்களுடன் மோத வெளிகிட்டது தலைவரின் முட்டள்தனம் என்று பலர் தொடங்கலாம்இ ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போர் எம்மீது திணிக்கப்பட்டிருக்கும்இ ஈராகில் நடந்தது என்னஇஆப்கானிஸ்தானில் நடந்தது என்ன அதே பாணியில் தான் இங்கும் நடக்குது என்றைக்கு ஆனையிறவில் எமது தேசியக் கொடி பறந்ததோ அன்றே எமது விடுதலை போராட்டட்திற்கு சாவு மணி அடிச்சாசு அதன் முதல் பாகாம் 2000ம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் தலையீட்டுடன் யாழ் முற்றுகை தவிர்க்காப்பட்டதுஇஅதன் பின்னர் எல்லம் ஒரு நிகழ்ச்சி நிரலின் பால் நடக்குதுஇ இதை ஆரய்ந்து அதற்குரிய மாற்று வழிகளைத் தேடாமல் எமக்குள்ளே அடிபட்டு நாம் ஒன்றையும் காணப்போவதில்லை.

இச் சர்வதேச சக்திகளுடன், எம்மினத்துரோகிகளும் சேர்ந்தே எம்மின விடுதலைப்போராட்டத்தை இப்போது வீழ்த்தியுள்ளனர்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இச் சர்வதேச சக்திகளுடன், எம்மினத்துரோகிகளும் சேர்ந்தே எம்மின விடுதலைப்போராட்டத்தை இப்போது வீழ்த்தியுள்ளனர்.

ஆமாம். புலிக்கொடி பிடித்துக்கொண்டே என்றும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாதங்களுக்கு எதிர் வாதங்கள் செய்வது நன்றாகத்தான் இருக்கும். இப்படியே நாம் வாதிட்டுக்கொண்டே போகலாம்.

கடைசி நேரத்தில் தனது பாதுகாப்பில் அவர் அக்கறையின்மையாக இருந்தமையால்தான் அவர் கைதாகியிருக்கின்றார். நெடியவன் குழு அவருடன் இணக்கப்பாட்டுக்கு வராத காரணத்தினால்தான் தன்னை வந்து சந்திக்குமாறு வெளிநாட்டில் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நெடியவன் குழு தமது நிர்வாகக் கட்டமைப்புக்களை கே.பி.யுடன் இணைந்து செயலாற்றுமாறு பணித்திருந்தால் இன்று விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அச்ச நிலையில் இருந்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்தவர்களை நீங்கள் கேள்வி கேட்காது, கே.பி.யை நோக்கியே கேள்விகள் எழுப்புகின்றீர்கள்.

கடைசி நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி.யை நம்பி நியமித்தபோது அவர் மக்களையும் போராளிகளையும் காப்பாற்றத் தவறிவிட்டார் என இங்கே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு எப்படியானது எனில், ஓட்டை வீழ்ந்து கப்பல் முக்கால்வாசி மூழ்கிக்கொண்டிருக்கும் போது அந்தக்கப்பலை காப்பாற்றுமாறு சிறப்பு தொழில்நுட்பவியலாளரை நியமித்தது போன்றதாகும்.

சரியாகச் சொல்வதனால் யாவும் காலதாமதமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் கேபியிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதை செய்ய முடியா விட்டால் அப் பதவியை அவர் ஏற்றிருக்க கூடாது...பின்னர் எதற்காக கடைசி நேரத்தில் அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது...தலைவரால் பொறுப்பான பதவி கொடுக்கப்பட்டது கேபிக்கு ஆனால் அவர் நொடியவனைப் பார்த்துப் பயந்தார் என சொல்வது நம்பக் கூடியதாகவா இருக்கிறது... நெடியவனின் ஆட்கள் இணங்கி வராததால் தான் அவர் தன்னை வெளிக் காட்டினார் எனச் சொல்கிறீர்கள் அப்படியாயின் அவர் அனைவரையும் ஒருங்கினைக்க தவறினால் எப்படி இவர் இப் பதவிக்கு பொறுத்தமானவர்...கிட்டதட்ட தலைவரின் ஆயுதப் போராட்டத்திற்கும் கேபியின் ஆயுதக் கடத்தலுக்கும் ஒரே வயது அப்படிப்பட்டவர் அவ்வளவு காலமும் பிடிபடாமல் புலிகள் அழிந்தவுடன் காட்டிக் கொடுத்து பிடிபட்டார் என சொல்வது அபத்தம்.உண்மை ஒரு நாளைக்கு இலங்கை அரசாலேயே வெளி வரும் அது வரை பொறுத்திருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.