Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் ஆரோக்கியமானதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைய கால கட்டத்தில் காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர்கள் மூலம் பேசித் திருமணம் செய்வது நல்லதா...காதலித்து திருமணம் செய்தால் எமது மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்யலாம் கணவன்,மனைவிக்கிடையே ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு ஆனால் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்து தம்பதியினரிடையே பிரச்சனை வந்தால் அதற்கு திருமணம் செய்து வைத்தவரே பொறுப்பு...உங்களைப் பொறுத்த வரை எந்த திருமணம் சிறந்தது என நினைக்கிறீங்கள்?

புலம் பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்தோர் அந்த நாட்டில் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்கின்றனர் இது ஆரோக்கியமானதா...இதனால் எமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்பன அழிந்து போகாதா...அல்லது மாறி வரும் இண்டைய உலகத்தில் இது தேவையானதா...

காதலித்து தோல்வியுற்றால் ஆணோ,பெண்னொ வேறோருவரை திருமணம் செய்து வாழ முடியாதா....உலகில் 90% காதல் தோல்வியில் தானே முடிகிறது ஆனால் அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோத்து விட்டார்களா என்ன...அவர்களும் திருமணம் செய்து நிம்மதியாய் வாழ்கிறார்கள் தானே...ஏன் 10% பேர் காதலனையோ,காதலியையோ மறக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்?...ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒருவரை ஏமாற்றினால் ஒட்டு மொத்தமாக முழு ஆண் சமுதாயத்தையோ,அல்லது பெண் சமுதாயத்தையோ குற்றம் சாட்டுவதேன் இது ஆரோக்கியமானதா?

இத் தலைப்பில் யாழில் கருத்தெழும் அனைவரும் வந்து தங்கள் கருத்துகளை பதிய வேண்டும்[மோகன் அண்ணாவில் இருந்து யாயினி வரைக்கும்]...பார்ப்போம் யார் துணிந்து கருத்து எழுதுகிறார்கள் என்டும் யார் கழுவிற மீனில் நழுவுற மீன்களாக இருக்கிறார்கள் என்டும் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

(இந்தக்கால ஆண்களுக்கு மட்டும்.. பெருசுகள் கோபப்பட வேண்டாம்).. :D

என்னைப்பொறுத்தவரையில்..

:rolleyes: உண்மையான காதல் திருமணம் என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். தன்னால் இன்னுமொருவரையும் காப்பாற்ற முடியும் என்கிற தீர்மானத்தை பறைசாற்றும் தீர்மானமே காதல் திருமணம்.

:unsure: பணம், இனம் பார்த்து வருவது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம். பையனின் சொந்தக்காலில் நிற்கும் திறமையை மறுத்து சீதனம் வாங்கிப் பிழைப்பு நடத்தப் போடப்படும் திட்டமே பேசி நிச்சயிக்கப்படும் திருமணம்..! :D

இன்னும் இருக்கு.. இப்ப நேரமில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி .......பெற்றோர் பேசியபின் காதலித்து ( ஒருவர் ஒருவருடன் பழகி )செய்யும் திருமணம் சிறந்தது. அல்லது காதலிக்கும்போதே பெற்றவருக்கு தெரிவிக்கவேண்டும். பெற்றோரும் அவர்களது குடும்ப பின்னணி பற்றி அலசி ஆராய்வார்கள். என்ன தான் இருந்தாலும் வாழபோவது அவர்கள் அவர்களது முடிவே முதன்மையானது. காதலித்து கட்டினாலும் பிரியும் குடும்பங்கள் உண்டு பேசி செய்தாலும் பிரியும் குடும்பங்கள் உண்டு .ஊரில் சமுதாயத்துக்கு பயந்து எதையும் சகித்து வாழ்ந்து கொண்டார்கள். கால ஓட்டத்தில் இடம்பெயர்வில் எல்லாமே மாறிவிட்டது. இன்று தொட்டதுக்கும் விவாக ரத்து . அதை ஊக்குவிப்பது போல் எளிதில் கிடைத்து விடுகிறது .காதலிக்கும்போது அவர்கள் உள் மன ஓட்டம் விளங்க்குவதில்லை சில காதலர்களுக்கு. இன்றைய சமுதாயத்தில் சகிப்பு தன்மை குறைவு. காதலிக்கும்போது நிலைவேறு குழந்தை குடும்பம் என்ற நிலைவேறு . பொறுப்புகளை ஏற்க விரும்பாத் இளசுகள் குழந்தைபேறு ...திருமணம் என்பதை தமது சுகங்களுக்காக் தள்ளிபோடுகிறார்கள். சேர்ந்து வாழ்வோம் பிடித்தால் திருமணம் செய்வோம் என்ற நிலைக்கு போய் விட்டது .திருமணத்தின் புனித தன்மை விளங்கப்டுவதில்லை. உண்மையான் காதல் எதையும் சகித்து வாழும். பெற்றோரால் ஒழுங்கு செய்து காதலித்து (பேசி பழகி )செய்யும் திருமணம் சிறந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக் புரிந்து விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை நிலைத்து நிற்கும்.

உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு எல்லோரிடமுமிருந்து தரவு எடுக்கிறீங்கள் போல கிடக்கு. நல்ல விடயம். :rolleyes:

இதைப்பற்றி கை வலிக்கும் மட்டும் எழுதலாம். நேரமில்லை. திருமணம் முடித்த ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும். போக போகத்தான் பூதம் வெளியே வரும். திருமணத்திற்கு முன் மனம் விட்டு கதைப்பது நல்லது.

சுருங்கக் கூறின், காதல் திருமணமோ பேசி முடித்த திருமணமோ

இரண்டுமே சம்பந்தபட்ட ஆண் பெண் இருவரின் பௌதீக- இரசாயண கவர்ச்சி (இதைப் பற்றி எப்படி சரியாக அறிந்து கொள்வதென யாரும் எடைக்கு மடக்கா கேட்கவேண்டாம்) , இருவரின் ரசனை, திருமணத்தின்பின் தனது துணையையும் தன்னில் ஒருவராக நினைத்தல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், மற்றவர்களைப் பார்த்து தனது துணையும் அதே போல இருக்க வேண்டும் என்ற ஆசை கொள்ளாதிருத்தல், முக்கியமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நண்பர்களாகப் பழகுதல் ஆகியவற்றிலே தங்கியுள்ளது.

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா ... ஒரு நாள் முழுக்க இதைப்பற்றி சொல்லலாமே. ஆனால் சொல்ல மாட்டேன்.

(இந்தக்கால ஆண்களுக்கு மட்டும்.. பெருசுகள் கோபப்பட வேண்டாம்).. :D

என்னைப்பொறுத்தவரையில்..

:rolleyes: உண்மையான காதல் திருமணம் என்பது தன்னம்பிக்கையின் அடையாளம். தன்னால் இன்னுமொருவரையும் காப்பாற்ற முடியும் என்கிற தீர்மானத்தை பறைசாற்றும் தீர்மானமே காதல் திருமணம்.

:unsure: பணம், இனம் பார்த்து வருவது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம். பையனின் சொந்தக்காலில் நிற்கும் திறமையை மறுத்து சீதனம் வாங்கிப் பிழைப்பு நடத்தப் போடப்படும் திட்டமே பேசி நிச்சயிக்கப்படும் திருமணம்..! :D

இன்னும் இருக்கு.. இப்ப நேரமில்லை.. :lol:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ... ஒரு நாள் முழுக்க இதைப்பற்றி சொல்லலாமே. ஆனால் சொல்ல மாட்டேன்.

:rolleyes::D

:unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:D

யாயினி அக்கா. என்னை வச்சு காமடி கீமடி பண்ணலை தானே???? :rolleyes::lol::unsure:

காதல் வெற்றி தோல்வியால் தீர்மானிக்கப்படும் விசயம் இல்லை. அது ஒரு உணர்வு. கடசிவரை பிரியாமல் குடும்பம் நடத்தினால் போல் அது வென்றதாக அர்த்தம் இல்லை அதே போல் பிரிந்தால் அது தோற்றதாக அர்த்தம் இல்லை. எனக்குத் தெரிந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றது. தற்போது புருசன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகின்றார். மனைவியை மிக மோசமாக துன்புறுத்துகின்றார். பிரான்சின் சட்டப்படி விருப்பத்தின் பெயரில் எத்தனை பேரை வேண்டுமானாலும் வைத்திருக்கலாமாம். யாராவது பிரான்ஸ் உறவுகள் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும். கணவர் வாக்குவாதப்பட்டு கோபம் தலைக்கேறி மனைவி ஏதாவது பொருளை எடுத்து அவர்மேல் வீசி எறிந்த பின்தான் மனைவியை அடிப்பாராம். அப்போதுதானாம் காவல் துறைக்கு பிரச்சனை போகாமல் பார்த்துக்கொள்ளலாமாம். இன்னும் பல செய்வினை சூனியக்காரர்களிடம் மனைவி பல ஆயிரங்களை கொடுத்து புருசனை கள்ளக் காதலியிடம் இருந்து பிரித்து தன்னிடம் சேர்ப்பதற்காக பல ஆயிரங்களை செலவளித்துக்கொண்டிருக்கின்றார். இது கடந்த மூன்று வருடங்களாக நடக்கின்றது. பெண்ணின் பெற்றோர் குடும்ப கெளரவத்துக்காகவும் தங்கைகளின் வாழ்வுக்காகவும் புருசனை பிரிந்தால் தாங்கள் செத்துவிடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். இன்னும் பிரியாத இந்தக் காதல் வென்றதா? இதைப்போல் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் சமூக அந்தஸ்த்துக்காக தங்களை குடும்பமாக காட்டிக்கொள்கின்றது !!

சாதி மதம் பணம் அந்தஸ்த்து படிப்பு ஊர் எல்லாம் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமத்தில் காதலுக்கு எந்த அடிப்படை இருக்கின்றது? காதல் இதயம் சம்மந்தப்பட்டது புனிதமானது என்று பினாத்தி திரிபவர்கள் எவருக்காவது நிறம் குறைந்தவர்களிடம் காதல் வந்ததுண்டா? அழகில்லை என்று வரையறை செய்யப்படுபவர்களிடம் காதல் வந்ததுண்டா? கடவுள் உருவங்கள் முதல் தமிழ்ச் சினிமா முதல் எமது சமூக அமைப்பு அனைத்தும் வெள்ளை நிறத்தின் மீது மோகத்தை வளர்த்து தன் சுய நிறம் மீது தாள்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. காதலின் இயல்பு அடிப்படையில் இங்கேயே பறிக்கப்பட்டுவிடுகின்றது.

எமது சமூகத்தில் பெற்றோரின் விருப்பம் என்பது தனியே பிள்ளைகளின் அக்கறை சார்ந்ததில்லை. புரையோடிப்போன வரதட்சணை சாதி மதம் ஊர் அந்தஸ்த்துபோன்ற இன்னோரன்ன விடையங்களை சமூகத்தில் தொடர்ச்சியாக தக்கவைக்கும் விருப்பு சார்ந்ததும் ஆகும்

ஆணும் பெண்ணும் தமது தேவைகளை தமது உழைப்பில் பூர்த்தி செய்யக் கூடிய தகுதியில் இருப்பதும் தமக்கு விருப்பமானவரை தாமே தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதும் அறிவுக்கு அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துணிந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டர்வர்களுக்கு நன்றி...சுகனின் கருத்து அருமையானது...நான் பல குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் குடும்ப கெளரவம் அது,இது என்டு சொல்லி பல பெற்றோர் ஊருக்காகவும்,உலகத்திற்காகவும் தமது பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கி உள்ளனர்...பல தம்பதியினர் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லா விட்டாலும் ஊருக்காக ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள் இப்படியான தம்பதியினரால் அவர்களது பிள்ளைகள் தான் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

ஒரு ஆண் காதலித்தால் அவன் தன்னை விட பெண் அழகாக இருக்க வேண்டும் என்டு தான் முதல் நினைக்கிறான் பிறகு படிப்பு,வசதி எல்லாம் பார்த்து காதலிக்கிறான் ஆனால் ஒரு பெண் காதலித்தால் அந்த ஆண் தன்னை வைத்து காப்பாற்றக் கூடிய பொருளாதார வசதி இருக்குதா,அவன் என்ன படித்திருக்கிறான் என்பதை பார்க்கிறாள்...ஆணோ,பெண்ணோ மனத்தைப் பார்த்து காதலித்தவர்கள் இந்த உலகில் ஒரு வீதத்திற்கும் குறைவாக இருப்பார்கள் என நினைக்கிறேன்...காதல் ஒரு உணர்வு அது மனதை பார்த்து தான் வருகிறது என்டால் ஏன் யாராவது தங்களை விட அழகிலோ,அறிவிலோ,வசதியிலோ குறைந்தவர்களைப் பார்த்துக் காதலிப்பது இல்லை...வேற்று மொழி பேசுபவர்களையோ அல்லது வேற்றினத்தவர்களையோ காதலிப்பவர்கள் அல்லது திருமணம் செய்பவர்கள் தங்கள் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள்? அவர்கள் தங்கள் வயது போன காலத்தில் தங்கள் மொழி பேச வேண்டும் என்ட உணர்வு இருக்காதா இது என்னுடைய கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான காதல்கள் புறத்தோற்றத்தின் அடிப்படையிலேயே உருவாகிறது.

புறத்தோற்றம் என்பதில் அழகை மட்டும் சொல்லவில்லை. கலகலப்பாகப் பேசுதல், நாகரிகமாக நடந்துகொள்ளுதல், பிறருக்கு உதவி செய்தல் போன்றன

சில காதல் இவரை இன்ன காரணங்களுக்காக காதலிக்கவேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிட்டே உருவாகிறது.அதாவது ஆசை, காமம், பணம், அந்தஸ்து போன்றவற்றை அடைய வேண்டும் என்பதற்காகா அவனோ அவளோ ஒருவரைக் காதலிக்க முயற்சிப்பது . திட்டம் எனும்போதே அதில் காதல் என்பது காணாமல் போய், ஒரு போரில் வெற்றிகொள்வதற்கான தந்திரங்களும், பொய்களும்; களத்தில் இறக்கி விடப்படுகின்றன. தந்திரத்தாலும், பொய்களாலும் ஜெயித்த காதலில் எங்கிருந்து உண்மை இருக்க முடியும். திருமணத்தின் பின்னர் தான் அடைய வேண்டியதை அவனோ அவளோ அடைந்து விட்ட பின்னர் காதல் கசந்து விடும்.

என்னைப் பொறுத்தவரையில், ஒரு சிறந்த ஆண்-பெண் நட்பே உண்மையான காதலாகப் பரிணமிக்கமுடியும் என்று நினைக்கிறேன். ஒரு ஆணும், பெண்ணும் பின்னாளில் காதலித்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், இயல்பான நண்பர்கள் போல் பழகிக்கொண்டிருக்கவேண்டும். நாம் நண்பர்களிடம் நமது சகல பலங்கள் பலவீனங்கள் நிறைகள் குறைகள் எல்லாவற்றையும் சொல்லிக்கொள்வது போல், அந்த ஆணும், பெண்ணும் தங்கள் எல்லா விஷயங்களையும் பரிமாறிக்கொண்டு, ஒரு கட்டத்தில் அவர்கள் மனதில் மிக இயல்பாக, இவனை அல்லது இவளைத் திருமணம் செய்துகொண்டால் தன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தோன்றவேண்டும். இப்படி ஒரு காதல் உருவானால் அது திருமணத்தின் பின்னர் பொய்த்துப்போகாது என்று நான் நம்புகின்றேன்

வாத்தியார்

*************

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி வாத்தியார் ஒரு ஆணும்,பெண்ணும் வெறும் தூய்மையான நட்பாக இருக்க முடியுமா...அவர்கள் நட்பாக இருந்து காதலித்து திருமணம் செய்தால் அது பரவாயில்லை ஆனால் அவர்களது நட்பு திருமணத்தில் முடியா விட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் நட்பாக இருக்க முடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.

ரதி,

உங்களது பதிவின் முதற் பந்தியில் மூன்று வரிகளிற்குள் இரண்டு தடவை "யார் பொறுப்பு" என்று கேட்டுள்ளீர்கள். அதாவது உங்கள் பார்வையில் திருமணம் என்பது ஒரு உத்தரவாதமாகவே பதிந்திருப்பதாகத் தோன்றுகின்றது. இதை நான் குறையாக முன்வைக்கவில்லை. இன மொழி கலாச்சார வேற்றுமைகள் தாண்டி திருமணம் என்பது ஓரளவிற்கேனும் உத்தரவாதமாகத் தான் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொறுப்பு என்று நீங்கள் கூறுகின்ற உத்தரவாதத்திற்கு அப்பால் சட்டபூர்மான உத்தரவாதங்களும் சமய ரீதியான உத்தரவாதங்களும் எனப் பல உத்தரவாதங்கள் திருமணம் என்ற நிறுவனத்தின் அங்கமாகியுள்ளன.

எனினும், எனது பார்வையில், உத்தரவாதம் கோருபவர் தமக்குள்ளே கேட்டுத் தெளியவேண்டியது, இந்த உத்தரவாதத்தின் வாயிலாக என்னத்தைத் தக்கவைக்க முயல்கிறோம் என்பதே. அதாவது, அனைத்துமே நன்றாக நடந்து கொண்டிருக்கையில், அன்பு ஈர்ப்பு முதலியன இருவரிற்குமிடையில் இருக்கையில் உத்தரவாதம் பற்றிய சிந்தனையே எழாது. அதற்கான தேவையும் இல்லை. உத்தரவாதங்கள் திருமணம் என்ற நிறுவனத்தின் சரிவில் மட்டுமே அர்த்தம் பெறுபவை. அன்பையும் ஈர்ப்பையும் எந்த உத்தரவாதத்தாலும் தக்கவைக்க முடியாது. வெறுப்பை எந்த உத்தரவாதத்தாலும் தவிர்க்க முடியாது. ஆக உத்தரவாதம் என்பது, பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில், ஒவ்வொருவரும் இந்த உத்தரவாதங்களைத் தாண்டி தத்தமது வாழ்வு பற்றி தம்மால் செய்யக் கூடிய பாதுகாப்புக்களைத் (பொருளாதாரம் உள்ளிட்ட) தாமாகவே ஏற்படுத்திக் கொள்வது வினைத்திறன் மிக்கது.

எங்கள் அப்பாக்களும் அம்மாக்களும் பணி தொடங்கிய அதே நிறுவனத்தில் ஓய்வு பெற்றார்கள். இப்போதெல்லாம் ஒரே நிறுவனத்தில் வாழ்நாள் முளுவதும் எவரும் குப்பை கொட்டுவதில்லை. சம்பளம் மட்டுமன்றி, தமது தகiகைள்

எங்கனம் பாவிக்கப்படுகின்றன, தமது அபிலாசைகள் குறித்த நிறுவனத்தில் எவ்வளவு தூரம் சாத்தியம் முதலான பல காரணங்களால் இருவருடங்களிற்கொரு முறை நிறுவனங்கள் மாறுவது, சுய தொழில் தொடங்குவது, மீண்டும் நிறுவனத்தில் பணிபுரிவது போன்று வேலை என்ற முனை உலகளாவிய ரீதியில் மாறிவருகின்றது. வேலையும் திருமணமும் ஒன்றில்லை எனினும், வேலை திருமணம் இரண்டும் ஒரே மனிதர்கள் பற்றியது. சமூக மாற்றங்கள் பல காரணிகளால் நடக்கின்றன, ஒன்று சார்ந்து மற்றையது அவதானிக்கப்படக்கூடியது. எவ்வாறு பாட்டாளி நடுத்தரவர்க்கம் என்ற நிலைக்கு வளருகையில் அவனது தொழில் சார்ந்த தேர்வுகள் அவன் முன் விரிகின்றனவோ, அதே போன்று அடுப்பங்கரையில் கணவனின் கையை பொருளாதாரத்திற்குப் பார்;த்துக் காத்திருந்த பெண்ணின் கல்வி மற்றும் பொருளாதாரம் சுயபூர்த்தி அடைகையில் திருமணம் என்ற நிறுவனத்தின் பாரம்பரிய சீ.ஈ.ஓ க்களான ஆண்களின் கொன்றோல் தளர்வது தவிர்க்கமுடியாதது. ஆனால் இந்த காலத்த்திலும் கூட எவனைக் கட்டி அவனது சம்பாத்தியத்தில் தொடர்நாடகம் பார்த்தபடி வாழ்வை நகர்த்தலாம் என்று நினைக்கும் பெண்களும் இருக்கவே செய்கின்றார்கள். ஆண்களை விட, இந்தத் தொடர்நாடகப் பெண்களும் விவாகரத்தை நாக்கில் நர்த்தனம் நிகழ்த்தி விமரிசிப்பார்கள். ஏனெனில் திருமணம் முறிந்தால் பொருளாதாரம் இவர்களிற்கு இல்லை. தங்களது தகமைகளை வளர்த்துக் கொள்ளாது தங்கி வாழ்பவர்களிற்கு இது பூதாகாரமான பிரச்சினை. குழந்தைகள் நலன் சார்ந்து வீட்டில் ஒரு பெற்றார் நிற்பது பற்றி இங்கு நான் பேசவில்லை. ஆனால் பெற்றோர் இருவரும் தமது காலில் நிற்கும் வகை தம்மை வைத்திருப்பது அவசியம்.

சுருக்கமாய், அன்பு ஈர்ப்பு முதலான உணர்வுகள் உத்தரவாதங்களிற்கு அப்பாற்பட்டன என்பது புரியப்படவேண்டியது. அது போன்று தான் காதல் திருமணம் செய்யலாமா என்று விசாரித்து முடிவிற்கு வந்த பின் காதலிக்க ஆள் தேடுவதும் அவ்வளவு சாத்தியமானதாய்ப் படவில்லை. சரி வரைவிலக்ககணங்கள் பற்றிய சிக்கலை விடுவோம் மற்றபடி உங்கள் பதிவு என்னைப் பொறுத்தவரை உத்தரவாதம் சார்ந்தே சித்திக் வைத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் எழுத வேண்டும் என்று போட்டதால்........... :rolleyes:

நீங்கள் எழுதிய ஒரு பந்தியில் வருகிறது 90 வீதமான காதல் தோல்வியில் வருகிறது என்று..எங்கே இந்த தரவை எடுத்தீர்கள்? (இங்கே) நீங்கள் சொல்லும் காதல் என்றால் என்ன? அதே போல் தோல்வி என்றால் என்ன, விவாகரத்தா? கலியாணம் இல்லையா? வேற வேற பிரச்சனையா?

என்னவா இருந்தாலும், எனக்கு தெரிந்த வரையில், நாங்கள்..இந்த காதல்/ சோடி சேர்ந்து திரிவதற்கு கொடுக்கும் கவனம்/ சிரத்தை மிக அதிகம்..இது வைரமுத்து சொன்ன கவிதைக்கு மறுதலையாக இருப்பினும்..( ஈ, காக்கை கூட கவனியாது, ஆனால் நீயோ உலகமே உறுப்பற்பதுபோல் நினைத்துக்கொள்வாய்) நாங்கள் இப்படி திபவர்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட.

இலகுவாக அல்லது சாதரணமாக ஒரு ஆணும் பொண்ணும் உறவாய் (காதல்/. நட்பு என்பதர்ற்கு தவிர) இருப்பதர்ற்கு என்ன பெயர்? ஏனெனில் எங்களுக்கு காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான இடைவெளி என்னவென்று தெரியாது அல்லது எதை காதல் என்றோ அல்லது எதை நட்பு என்றோ சொல்லத்தெரியாது. இன்னுமொன்று, இந்த காதல் என்ற வார்த்தையை உறவு முறையை குறிப்பதர்ற்கு பயன்படுத்தாமல் விட்டாலும் நல்லம். மகள் அப்பாவிடம் i love you appa.. என்ன அது அன்பே தவிர, உறவுமுறை அல்ல..ஆனால் ஒரு 18 வயது பெடியன் 19 வயது பெட்டையிடம் சொன்னால் அதை நாங்கள் எதோ ஒரு புது உறவு என நினைத்து பார்க்கிறேம்..( அவர்களும்தான்) எனவே இப்படியான உறவை சொல்ல சரியான சொல்லை கண்டால் சரி .... இந்த உறவுமுறையில் என்ன என்ன எல்லாம் செய்யலாம் என்பது அல்லது அதற்கு உரிய உரிமைகளை சட்டம் தீர்மானிக்கட்டும்...அவர்கள் ஒன்றாய் இருந்தால் என்ன, சோதினைக்கு சேர்ந்திருந்து படித்தால் என்ன, ஒரு கொக்கக்கோலாவை 2 இஸ்ரோ வைத்து குடித்தால் என்ன........

சுருக்கமாக இங்கே காதல் என்ற பதம் ஒரு பொதுவில் குறிந்த வயதில் செய்யப்பட்டும் எல்லா செயல்களையுமே குறித்து நிற்கிறது, அது காமாக இருக்கட்டும், அல்லது ஒருவகையான வன்முறையாக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் அந்த சொல்லே பயன்படுத்துவதால் நாங்கள் அதற்காக நிறைய பயப்படுகிறோம், அதனால் அதைப்பற்றிய அதீத கற்பனைகளும், கவனசிதறல்களும், சமூக பாதிப்புகளும் அந்த நபர்பகல் மீது திணிக்கிறோம். எனக்கு தெரிய சில நல்ல உதாரனங்கள் உண்டு ஆனால் தனிமனித வாழ்க்கைகளை கதைக்க விரும்பவில்லை. உணமையிலே இவ்வாறான காதல்களில் ஈடுபட்டதற்க்காய் எமது சமூகம்...(நானும் நீங்களும் தான்) கொடுக்கும் தண்டனை அதிகம்.

முடிவாக கலியாணம் கட்டுவர்தர்ர்காக காதலிப்பவனும் மூடன்/மூடி அப்படி காதலித்தர்காகவே அவனையோ/ அவளையோ கட்டுபவனும்/ காடுபவலும் மூடி/மூடன். காதல் செய்யுங்கள், அது காதலிப்பதர்ர்காக........கலியாணம் அல்லது சேர்ந்து வாழுங்கள் வாழவேண்டும் என்பதற்காக. காதலுக்கும் கலியானத்துக்க்மான பாதை நெடும்தூரம், காதலே எட்டத்தூரத்தில் உள்ளபோது, அங்கே இருந்து கலியாணம்....

சுபம்...

காதல் ஏதோ ஹோமோன் பிரச்சனையாம் என்று ஒரு தரப்பு சொல்லிது. அப்பா, அம்மா பேசி கட்டுற ஆக்களுக்கு கலியாணம் கட்டினபிறகுதானாம் சிகிசிகி டில்லாங்கடி டிங்கா உணர்வுகள் வேலைசெய்யுமாம் என்று சொல்லுறீனம். உவையின்ர கதையை கேட்டால் புரோக்கர் வேலையை பேசாமல் டாக்குத்தர்மாரே செய்தால் எல்லாம் ஆரோக்கியமாய் அமையும் என்று சொல்லத்தோன்றிது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

love-smiley.gifkiss-smiley-flying-flying-kiss-love-female-smiley-emoticon-000518-large.gif

திருமணத்தின் முன், காதல் என்பது இரு தரப்பும் தங்கள் சுயநலத்தை முன்னிறுத்தி லாபம் பெற பாவிக்கப் படும் சொல்.

உண்மைக் காதல் என்பது, ஆறறிவு படைத்த மனிதனில் இருக்க சாத்தியமில்லை.

திருமணத்தின் பின் மனைவியை காதலிப்பதே.... உண்மையான காதல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் உங்கள் கருத்து உண்மை தான் காதல்,அன்பு என்பன உணர்களுக்கு அப்பாற்பட்டன...காதல் திருமணம் செய்யலாமா என யோசித்து செய்வதும் தப்புத் தான் பார்த்த உடனே ஒருவரைப் பிடித்திருந்தால் அவரைத் திருமணம் செய்ய விரும்பினால் திருமணம் செய்யலாம் என்டு நினைக்கிறேன்...பழகிப் பார்த்து திருமணம் செய்தால் ஒரு ஆணும், பெண்ணும் பழகிப் போட்டு அந்த ஆண் பெண்ணை திருமணம் செய்யாமல் விட்டால் அதன் பாதிப்பு பெண்ணுக்கு தான் அதிகம் என நினைக்கிறேன்.

வொல்கனோ நீங்கள் சொல்வது போல இந்த சமூகத்திற்கு விரும்பியோ,விரும்பாமலோ அதிகம் பயந்து தான் வாழ்கிறோம்...கலைஞன் காதல் உண்மையாகவே ஒரு ஹொமோன் பிர‌ச்ச‌னை தான்...பார்த்த உட‌னே அவனை/அவளை பிடிப்பதற்கு இந்த ஹொமோனே கார‌ணம்.

தமிழ்சிறி கல்யாணத்திற்குப் பிறகு மனைவியை நேசிக்கும் ஆண்கள் மிகக் குறைவு என்டே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் திருமணம் செய்வதைவிட பெற்றோர் பேசி முடிக்கும் திருமணம் முன்னேற்றமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆளை ஆள் பார்த்துப் பழகிவிட்டு டேட்டிங் போவதை விட பிளைண்ட் டேட் முன்னேற்றகரமானதுதானே..! :rolleyes:

காதல் ஆரோக்கியமானது. சாதி, மதம், பணம், பதவி, நிற வேற்றுமை இன்றி ஏற்படும் காதல் புனிதமானதும் கூட... அது ஒரு மனிதன் அவனது உண்மையான நிலையை தானே அறிந்தது கொள்ள வலுச் சேர்ப்பது. காதலிக்கும் இருவர் கடைசிவரை ஒருவர் ஒருவரை அறிந்து உணர்ந்து, விடுக்கொடுத்து, காதலுக்காக தோள்கொடுத்து கடைசி வரை வாழ்ந்து முடிக்கிறார்களோ அங்கே உண்மையான காதல் நிலைத்து நிற்கிறது என நான் நினைக்கிறன்.

ஆனால் இதெல்லாம் இந்தக் காலத்தில் எங்க ஆருக்கு வருகுது? அப்படி ஓரிரு உண்மையான காதல் அரும்பினாலும் உறவினரும், நண்பர்களும் 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்று அல்லவா பட்டம் குடுக்கிறார்கள்... அத்தோடு அவர்களை அடக்கி ஆளும் முறையையும் கையில் எடுத்து அந்தக் காதலை அரும்பும் போதே எல்லோரும் சேர்ந்து நசுக்கி விடுகிறோம். பிறகு உண்மையான காதல் இல்லை என்று சொல்கிறோம்...

நவநாகரீக காலத்தில் இருந்தது கொண்டு பண்டைய காலத்து உண்மையான காதலைத் தேடுவதும் முட்டாள் தனம். பெரும்பாலான ஆணோ, பெண்ணோ ஒருவர் ஒருவரை எதிபார்த்து, சார்ந்து தான் வாழ்கிறார்க்ள. சிலர் விதிவிலக்கு... அப்படி நிலைமை இருக்கும் போது தனக்கு எது எங்கு கிடைக்கும் என்று நினைகிறானோ/நினைக்கிறாளோ அங்கே தான் அவர்களுக்கு 'காதல்' ஏற்படுகிறது. இதுவும் ஒரு முழுமை பெற்ற சுயநலம் தானே?

பெற்றோகள் பார்த்து நிட்சயப்பதும் ஒரு வித சுயநலமான திருமணம் தானே? சில பெற்றோர் தாம் விரும்பி பல எதிர்ப்புகளை முறியடித்து ஒன்று சேர்ந்த்திருப்பார்கள். இருபது வருடங்கள் கழித்து தனது மகனோ, மகளோ காதலித்தால் அதுக்கு எத்தனை பெற்றோர் சமத்திது இருக்கிறார்கள்? உண்மையான அன்புக்கு இவ்வுலகில் இடமில்லை.

இப்போதெல்லாம்...

நிறம் குறைந்தவர்களுக்கு நிறம் கூடியவர்கள் மேல் காதல்

படிக்காதவர்களுக்கு நாலு எழுத்துப் படித்தவர்கள் மேல் காதல்

ஐந்து எழுத்துப் படித்தவர்களுக்கு பத்து எழுத்துப் படித்தவர்கள் மேல் காதல்

குண்டானவர்களுக்கு மெல்லியவர்களில் காதல்

கட்டையானவர்களுக்கு உயரமானவர்களின் மேல் காதல்

ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் மீது காதல்

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊரில் இருப்பவர் மீது காதல்

பணம் இல்லாதவருக்கு பணக்காரர் மேல் காதல்

பணக்காரருக்கு அவர்களைக் விட அதிகம் பணம் உள்ளவர்களின் மேல் காதல்

உண்மையான காதலை எதிர் பார்பவர்கள் முழு முட்டாள்கள். பிழைக்கத் தெரியாதவர்கள். அதனால் பெற்றோர் சொல்லுக் கேட்டு அவியல் பார்கிறவர்களைக் கட்டி பதினாறு வரமும் பெற்று நிம்மதியா வாழுங்கோ.

தமிழர்களில் தாலிக் கோடியில் இரு கைகள் இணைவது போல ஒரு இருக்கும் பார்த்து இருப்பீர்கள். அதற்கு என்ன அர்த்தமாம்? இரண்டு dealers ஒரு விஷயத்தை டீல் பண்ணி கை சேர்க்கினம். ஆக திருமணம் என்பது ஒரு டீல்!

காதல் என்ற பெயரில அடுத்த உயிரை எடுத்துவிட்டு போகாதேங்கோ!!!

'காதல் தோற்றத்தில்லை, ஆனால் காதலர்கள் தங்கள் நிலை இல்லாத அவர்களின் மனங்களால் தோற்றுப் போயுள்ளார்கள். அதற்கு சாட்சியாக பல கல்லறைகள் இருக்கின்றன' என்று வரிகள் படித்த ஞாபகம்! அது உண்மையே!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

love-smiley.gifkiss-smiley-flying-flying-kiss-love-female-smiley-emoticon-000518-large.gif

திருமணத்தின் முன், காதல் என்பது இரு தரப்பும் தங்கள் சுயநலத்தை முன்னிறுத்தி லாபம் பெற பாவிக்கப் படும் சொல்.

உண்மைக் காதல் என்பது, ஆறறிவு படைத்த மனிதனில் இருக்க சாத்தியமில்லை.

திருமணத்தின் பின் மனைவியை காதலிப்பதே.... உண்மையான காதல்.

சிறி அண்ணை

திருமணத்தின் பின்னர் மனிதருக்கு எத்தனை அறிவு குறைந்து விடுகின்றது? :(:(

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.