Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.

asin1d.jpg

பாதிக்கப்பட்டவர்

இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.

சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.

இதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)

asin3.jpg

மருத்துவர் ஒப்பம்

அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார். எனக்கும் அந்த ஒலிப் பதிவை இணைக்கத்தான் விருப்பம் ஆனால் அதை கேட்க முடியாது. அவற்றில் சிலதை கத்தரித்து எழுதுகிறேன்.

1) எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.

2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்...

இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோது

“எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.

இதற்கு முடிவென்ன..?

யார் பதில் சொல்லப் போகிறீர்கள்...?

தமிழராகிய எங்களால் இதற்கு என்ன செய்ய முடியும்...?

தயவு செய்து சிந்தியுங்கள். இவர் ஏற்கனவே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். இவரிடமும் பணம் இல்லை. இராமருக்கு உதவிய அணில் போலாவது ஏதாவது செய்யுங்கள். இந்தத் தகவலை உலகிற்கு சேருங்கள் முடிந்தால் சம்பந்தப்பட்டவருக்குச் சேருங்கள். இது எம் உறவுக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்பதை மறக்க வேண்டாம்.

இதற்கு சகல பதிவர்களும், வாசகர்களும், இணையத்தள உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

குறிப்பு - தயவுசெய்து இக்கட்டுரையை யாரும் அசினுக்கெதிராகப் பயன்படுத்த வேண்டாம் இது எம் பிரச்சனை இதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. அதை அசட்டை செய்தால் தான் அவர் மீது குற்றம். முதலில் எம் மலத்தை நாம் கழுவுவோம் பின்னர் அடுத்தவருடையதுக்காய் மூக்கை பொத்துவோம்.

http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

300 பேருக்கு செய்யப்பட்ட சிகிச்சையில் 10பேருக்கு பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது 290பேரின் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது? 10பேரிற்கு சிகிச்சை வெற்றியளிக்காமைக்கு பல மருத்துவ காரணங்கள் இருக்கக்கூடும். இதற்கு அசின் எப்படி பொறுப்பாக முடியும்? வைத்தியர்கள்தான் பதில்கூற வேண்டும். அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த வறியவர்கள்? தலைப்பு புரியவில்லை, ஆக மொத்தத்தில் அசினை எப்படியாவது போட்டுத்தாக்குவது என்று முடிவெடுத்தாயிற்று. இதற்காக நம்மவர்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு திரிகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் அசினை அந்த மாதிரி திட்டி எழுதுவார்கள் பிறகு அசினின் படத்தை ஜொல்லு விட்டுக் கொண்டு பார்ப்பார்கள்

இணையத்தில் அசினை அந்த மாதிரி திட்டி எழுதுவார்கள் பிறகு அசினின் படத்தை ஜொல்லு விட்டுக் கொண்டு பார்ப்பார்கள்

பின்ன,

அது வேற இது வேற. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன,

அது வேற இது வேற. :lol:

கலையையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலையையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது..! :lol:

நாங்கள் எல்லாரும் அதி சிறந்த கலாரசிகர்கள் :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

300 பேருக்கு செய்யப்பட்ட சிகிச்சையில் 10பேருக்கு பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது 290பேரின் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது? 10பேரிற்கு சிகிச்சை வெற்றியளிக்காமைக்கு பல மருத்துவ காரணங்கள் இருக்கக்கூடும். இதற்கு அசின் எப்படி பொறுப்பாக முடியும்? வைத்தியர்கள்தான் பதில்கூற வேண்டும். அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த வறியவர்கள்? தலைப்பு புரியவில்லை, ஆக மொத்தத்தில் அசினை எப்படியாவது போட்டுத்தாக்குவது என்று முடிவெடுத்தாயிற்று. இதற்காக நம்மவர்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு திரிகின்றார்கள்?

வெகு சாதாரணமாக சொல்லுறீங்க 300 பேரில் 10 பேர் கண் பறிபோனா என்ன.. 290 பேர் சரியாகிட்டாங்க தானே என்று. 32 இலட்சம் 32,000,00 பேரில் வெறும் 30,000 பேர் தானே முள்ளிவாய்க்காலில் இறந்தாங்க என்று இப்படித்தான் அசினும் கணக்குப் போட்டிருப்பாவோ...??!

இவ்வாறான சிகிச்சைகள் 100% வெற்றி அளிக்கக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்க ஏன்.. அந்தப் 10 பேரும் கண்பார்வை இழக்க வேண்டும்.

அசினின் அவசரமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வைத்தியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் அரசியல் விளம்பரங்களுக்காக குறுக்கிய கால கண் சிகிச்சை அளிக்கப் போயும் இந்த நிலை தோன்றி இருக்கலாம். கண் சிகிச்சைகளுக்கு முன்னும் பின்னுமான கண்காணிப்பு அவசியம். இன்றேல் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகி விடும். அசின் போன கையோட இவர்களும் கவனிப்பாரற்று விடப்பட்டிருப்பார்கள். அதனால் கூட இவர்களுக்கு இக்கதி ஏற்பட்டிருக்கலாம்.

இது தொடர்பாக சாந்தி சமாதானம் சொல்லிக் கொண்டிராமல்.. இச்செய்தி உண்மை எனில் சுகாதார திணைக்களங்கள் இது தொடர்பில் நீதி விசாரணை செய்ய வேண்டும். பிரிட்டனில் 6 மாணவர்களுக்கு மருந்து ஒவ்வாமை வந்த போது வெறும் ஆறு பேர் தானே என்று விடவில்லை. முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நீதிமன்றத்துக்கும் அந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டது.

சிறீலங்கா போரில் மட்டுமல்ல.. பிற பல விடயங்களிலும் மனித உரிமைகளை மீறி வருகிறது. இதுவும் அதற்கு ஒரு உறுதியான உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் அசினை அந்த மாதிரி திட்டி எழுதுவார்கள் பிறகு அசினின் படத்தை ஜொல்லு விட்டுக் கொண்டு பார்ப்பார்கள்

பின்ன,

அது வேற இது வேற. :D

கலையையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது..! :lol:

நாங்கள் எல்லாரும் அதி சிறந்த கலாரசிகர்கள் :lol::lol::lol:

முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுவதே.... ரதியின் வேலை.

சரி... சரி..... இவரா அசின்?

asin-hot.jpg

இது தொடர்பாக சாந்தி சமாதானம் சொல்லிக் கொண்டிராமல்.. இச்செய்தி உண்மை எனில் சுகாதார திணைக்களங்கள் இது தொடர்பில் நீதி விசாரணை செய்ய வேண்டும். பிரிட்டனில் 6 மாணவர்களுக்கு மருந்து ஒவ்வாமை வந்த போது வெறும் ஆறு பேர் தானே என்று விடவில்லை. முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நீதிமன்றத்துக்கும் அந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டது.

அவசர அவசரமாக அசின் மீது குற்றம் சுமத்துவதன் பின்னணி, நோக்கம் என்ன? இதைத்தான் நாம் கேட்கின்றோம். முதலில் விசாரணை செய்யட்டும்... சரியான காரணங்களை கண்டுபிடிக்கட்டும்... அதன் பின்னர் உங்கள் விரல்களை நீட்டலாம், போட்டுத்தாக்கலாம்.

ஏற்கனவே வேலணையில் ஒரு தாதி கொல்லப்பட்ட விடயத்தில் சிறீலங்கா அரசும் அதன் படைத்துறை நிர்வாகமும் நடந்து கொண்ட முறையைப் பார்க்கின்ற போது இதற்கெல்லாம் விசாரணைகள் நடக்க வாய்ப்பே இல்லை.

எனவே இவ்வாறான விளைவுகளுக்கு தூண்டுதலாக இருந்ததன் பெயரில் அசின் மக்களால் குற்றச்சாட்டப்படுவது ஒன்றும் அநீதியான செயற்பாடாகத் தெரியவில்லை. அசின் போன்றவர்களுக்கு சிறீலங்காவின் நிலவரம் விளக்கிக் கூறப்பட்டும் அதை மதிக்காமல் இவ்வாறான தவறுகள் நிகழக் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது அவர்கள் மீது மக்களின் கோபமும்.. இவ்வாறான குற்றச்சாட்டுக்களும் வலுப்பெற ஏதுவாக இருக்கின்றன.

இந்த நிலைக்கு அசினும் அவரின் நடவடிக்கைகளுமே காரணம். மக்களை குறை சொல்ல முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பத்துப் பேருக்கும் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்கு ஏதாவது யோசனையைச் சொல்லுங்கள் என்றால் அசினைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

ஒருவரின் மீள் சிகிச்சைக்கான செலவை(4500 ரூபா) நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன்

அசினைப் பற்றி இன்னொரு திரியில் ஆராய்ச்சி செய்யலாமே :lol:

வாத்தியார்

*********

முதலில் அசினின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்லவேணடும்

செய்யக்கூடியவர்கள் யாh?

வாத்தியார் இப்படி எல்லாத்தையும் நாங்களே பார்த்துக் கொள்ளுவம் என்று நினைத்தால் சிங்களம் எல்லா அநியாயங்களையும் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை நாங்களே செய்யவும் சொல்லும்.

அரசு சார்ப்பான விடயங்கள் அந்த அரசே அதன் மக்களுக்கு செய்ய அனுமதிக்க வேண்டும். சிறீலங்கா தங்கள் நாடு.. அங்கு வாழ்பவர்கள் தங்கள் மக்கள் என்றால் முதலில் தமிழ் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு சிறீலங்கா அரசுடையது. அவர்கள் அதனை தட்டிக் கழித்துக் கொண்டு சிறீலங்கா.. ஐக்கிய இலங்கை.. இன ஒருமைப்பாடு.. செளயண்ணியம்.. என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இதே நிலை 10 சிங்களவர்களுக்கு நடந்திருந்தால் அது தென்னிலங்கை ஊடகங்களில் பெருமளவில் பிரச்சாரப்படுத்தப்பட்டு அதுவே அரசுக்கு நெருக்கடியாகவும் மாற்றப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் தான் இருக்கிறோமே.. அவன் அடிக்க அடியும் வாங்கிக் கொண்டு நாமே நமக்கு எண்ணையும் தடவிக் கொள்வதால் பெருமை அடைவதாக நினைத்துக் கொள்ள. அதுதான் அவனும் விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறான். நாங்களும் எண்ணை தடவிக் கொண்டே திரியுறம்.. உலகம் பூராவும். ஆனால் இன்னும் உலகம் ஐக்கிய இலங்கை பற்றித்தான் பேசிக் கிட்டு இருக்குது. ஆனால் அங்கோ ஐக்கிய இலங்கைக்குரிய எந்த நடைமுறைகளையும் தமிழ் மக்கள் அனுபவிப்பதாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்ததெற்கெல்லாம் எண்ணை தடவ முண்டியடிக்கும் நாமும் ஒரு காரணம்.

அரசின் தவறை அரசு உணர்ந்து தானே திருந்த அனுமதிக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகுக்கும் சிறீலங்காவின் இந்தப் பாரபட்ச நடைமுறைகளை தெளிவாக உணர்த்த வேண்டும். அல்லது அவர்களும் அதே ஐக்கிய இலங்கை பல்லவியைப் பாடிக் கொண்டு தமிழ் மக்கள் ஏனைய இனங்களோடு ஐக்கியமாகவும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் உள்ளதாக வியாக்கியானப்படுத்துவார்கள். அதுமட்டுமன்றி.. நாமாக போய் அரசின் பாரத்தை சுமக்க வெளிக்கிட்டால் சிங்களம் எம்மை அடித்துக் கொண்டே காலாட்டிக் கொண்டு தமிழ் மக்கள் சந்தோசமா இருக்கினம் என்று வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அசினின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்லவேணடும்

செய்யக்கூடியவர்கள் யாh?

முறைப்படி..... அசினை யாழ்ப்பாணத்து ஆசுப்பத்திரிக்கு கூட்டி வந்தவர்கள் தான்..... இதனையும் அசினின் கவனத்துக்கு கொண்டு போக வேணும்.

Asin-trip-to-srilanka.jpgIMG_0826.jpgasin_12_07_10_01_88520_445.jpg

முறைப்படி..... அசினை யாழ்ப்பாணத்து ஆசுப்பத்திரிக்கு கூட்டி வந்தவர்கள் தான்..... இதனையும் அசினின் கவனத்துக்கு கொண்டு போக வேணும்.

Asin-trip-to-srilanka.jpgIMG_0826.jpgasin_12_07_10_01_88520_445.jpg

நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்

அவர்கள் செய்யமாட்டார்கள் மறைக்கத்தான் பார்ப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்களுக்கு ஒரு பச்சை :lol:

அடிசசவன்தன் வந்து எண்ணெய் தடவ வேண்டும் என்றால் வெகு விரைவில் ஒன்டும் இல்லாமல் போய்விடும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழினத்துக்கு கோடி, கோடியாய் சேர்த்தவர்கள் எங்கே?

இலங்கை 4500 ரூபா என்பது... 30 ஐரோ. ஆனால் அதனைக் கூட இனிமேல் குடுக்கக் கூடாது என்று எப்பவோ.... முடிவெடுத்து விட்டேன்.

நான் எனது மனச்சாட்சிக்கு உட்பட்டு, சில உதவிகளை தனிப்பட்ட முறையில் நேரடியாக செய்துகொண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இப்படி எல்லாத்தையும் நாங்களே பார்த்துக் கொள்ளுவம் என்று நினைத்தால் சிங்களம் எல்லா அநியாயங்களையும் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை நாங்களே செய்யவும் சொல்லும்.

அரசு சார்ப்பான விடயங்கள் அந்த அரசே அதன் மக்களுக்கு செய்ய அனுமதிக்க வேண்டும். சிறீலங்கா தங்கள் நாடு.. அங்கு வாழ்பவர்கள் தங்கள் மக்கள் என்றால் முதலில் தமிழ் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு சிறீலங்கா அரசுடையது. அவர்கள் அதனை தட்டிக் கழித்துக் கொண்டு சிறீலங்கா.. ஐக்கிய இலங்கை.. இன ஒருமைப்பாடு.. செளயண்ணியம்.. என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இதே நிலை 10 சிங்களவர்களுக்கு நடந்திருந்தால் அது தென்னிலங்கை ஊடகங்களில் பெருமளவில் பிரச்சாரப்படுத்தப்பட்டு அதுவே அரசுக்கு நெருக்கடியாகவும் மாற்றப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் தான் இருக்கிறோமே.. அவன் அடிக்க அடியும் வாங்கிக் கொண்டு நாமே நமக்கு எண்ணையும் தடவிக் கொள்வதால் பெருமை அடைவதாக நினைத்துக் கொள்ள. அதுதான் அவனும் விடாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறான். நாங்களும் எண்ணை தடவிக் கொண்டே திரியுறம்.. உலகம் பூராவும். ஆனால் இன்னும் உலகம் ஐக்கிய இலங்கை பற்றித்தான் பேசிக் கிட்டு இருக்குது. ஆனால் அங்கோ ஐக்கிய இலங்கைக்குரிய எந்த நடைமுறைகளையும் தமிழ் மக்கள் அனுபவிப்பதாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்ததெற்கெல்லாம் எண்ணை தடவ முண்டியடிக்கும் நாமும் ஒரு காரணம்.

அரசின் தவறை அரசு உணர்ந்து தானே திருந்த அனுமதிக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகுக்கும் சிறீலங்காவின் இந்தப் பாரபட்ச நடைமுறைகளை தெளிவாக உணர்த்த வேண்டும். அல்லது அவர்களும் அதே ஐக்கிய இலங்கை பல்லவியைப் பாடிக் கொண்டு தமிழ் மக்கள் ஏனைய இனங்களோடு ஐக்கியமாகவும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் உள்ளதாக வியாக்கியானப்படுத்துவார்கள். அதுமட்டுமன்றி.. நாமாக போய் அரசின் பாரத்தை சுமக்க வெளிக்கிட்டால் சிங்களம் எம்மை அடித்துக் கொண்டே காலாட்டிக் கொண்டு தமிழ் மக்கள் சந்தோசமா இருக்கினம் என்று வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும். :lol:

உண்மைதான்

சில நிறுவனங்களுடன் பேசியபோது அவர்கள் இவற்றையே தெரிவித்தனர்

உதாரணமாக

பாடசாலைகளுக்கு புத்தகங்கள், பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள்.......... போன்ற சிலவற்றை எமது புலம்பெயர் மக்கள் செய்ய அரசு அதற்காக ஒதுக்கிய பணங்களை சிங்கள தேசப்பக்கம் திருப்பிவிட்டதாக சொன்னார்கள்

எனவே செய்பவர்களும்அரசு கவனியாத தொழில் காணி நிலம் வாங்குதல் குடியமர்த்தல் பக்கம் கவனம் செலுத்தவேண்டுமே தவிர

அரசு செய்தே ஆகவேண்டிய இதுபோன்ற அவர்களது பணிகளுக்குள் செல்லாது தவிர்த்தல் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , விசுகு அண்ணா நீங்கள் இருவரும்

"தாயக உறவுகளுக்கு உதவுங்கள் "

என்று உங்கள் கருத்துக்களுக்கு கீழே இடும் விளம்பரத்தின் நோக்கம் என்னவோ?

வாத்தியார்

*********

அந்தப் பத்துப் பேருக்கும் மீண்டும் சிகிச்சை அளிப்பதற்கு ஏதாவது யோசனையைச் சொல்லுங்கள் என்றால் அசினைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒருவரின் மீள் சிகிச்சைக்கான செலவை(4500 ரூபா) நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

நீங்கள் எப்படி பணம் அனுப்புவீர்கள்? பாதிக்கப்பட்டவரின் தொடர்பு விபரம் ஏதும் உங்களிடம் உள்ளதா? எப்படி உதவி செய்வது என்று பதிவில் ஏதும் தகவல் தரப்பட்டுள்ளதா? :lol:

இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25,000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்”

நல்லகாலம் லென்சை தவறாக வைத்து சிகிச்சை செய்யவேண்டும் என்று அசின் உத்தரவு இட்டார் என்று கூறவில்லை. தனிப்பட 25,000 ரூபா வைத்தியரிடம் கொடுத்தால் மறுநாளே சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாமாம். நன்றி கெட்ட நமது சனத்திற்கு உதவப்போனது அசினின் தவறுதான்.

இந்தப்பதிவை பதிந்தவரின் குறிப்பிட்ட வலைத்தளத்திற்கு போனால் விளம்பரம் தேடுவது அசினா அல்லது இவரா என்பதை கண்டுகொள்ள முடியும்.

50+art.jpg

இங்கு வேடிக்கை என்ன என்றால்.. அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த வறியவர்கள் என தலைப்பில் எழுதிவிட்டு இறுதியாக பதிவர் இவ்வாறு கூறுகின்றார்:

குறிப்பு - தயவுசெய்து இக்கட்டுரையை யாரும் அசினுக்கெதிராகப் பயன்படுத்த வேண்டாம் இது எம் பிரச்சனை இதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. அதை அசட்டை செய்தால் தான் அவர் மீது குற்றம். முதலில் எம் மலத்தை நாம் கழுவுவோம் பின்னர் அடுத்தவருடையதுக்காய் மூக்கை பொத்துவோம்.

அசின் தனது சமூகப்பணி மூலம் 290 வறியவர்களுக்கு பார்வை கொடுத்தார் என்று எழுதுவதைவிட 10பேருக்கு பார்வையை இழக்கச்செய்தார் என்று எழுதும்போதுதான் கிளுகிளுப்பாக இருக்குமோ என்னமோ...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , விசுகு அண்ணா நீங்கள் இருவரும்

"தாயக உறவுகளுக்கு உதவுங்கள் "

என்று உங்கள் கருத்துக்களுக்கு கீழே இடும் விளம்பரத்தின் நோக்கம் என்னவோ?

வாத்தியார்

*********

எதை என்று விளக்கமாக எழுதுங்கள்

பதில் எழுத...

உண்மைதான்

சில நிறுவனங்களுடன் பேசியபோது அவர்கள் இவற்றையே தெரிவித்தனர்

உதாரணமாக

பாடசாலைகளுக்கு புத்தகங்கள், பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள்.......... போன்ற சிலவற்றை எமது புலம்பெயர் மக்கள் செய்ய அரசு அதற்காக ஒதுக்கிய பணங்களை சிங்கள தேசப்பக்கம் திருப்பிவிட்டதாக சொன்னார்கள்

எனவே செய்பவர்களும்அரசு கவனியாத தொழில் காணி நிலம் வாங்குதல் குடியமர்த்தல் பக்கம் கவனம் செலுத்தவேண்டுமே தவிர

அரசு செய்தே ஆகவேண்டிய இதுபோன்ற அவர்களது பணிகளுக்குள் செல்லாது தவிர்த்தல் நன்று.

நேசக்கரத்துக்கான எனது அழைப்பை தாங்கள் குறிப்பிட்டிருந்தால்....

எப்போதும் ஆதரிப்போம்

கரம் கொடுப்போம்

என்பதுதான்

விளக்கமாக எழுதியுள்ளேன் எனது கருத்தில்.

இப்படி நடக்குது என்றும்

அதற்கான எனது கருத்தையும் எழுதினேனே தவிர...

குந்தகம் விளைவிக்கும் எந்த நோக்கமும் இல்லை

அப்படி யாருக்காவது பட்டிருந்தால்

எழுதுங்கள்

அழித்துவிடுகின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எதை என்று விளக்கமாக எழுதுங்கள்

பதில் எழுத...

உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. .....

இப்படி நீங்கள் இடும் விளம்பரத்தைப் பற்றிச் சொன்னேன். :lol:

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதியதை பாருங்கள் வாத்தியார்

அதை விட நாம் ஒரு கொள்கையில் இருந்தால்

அதை மீட்டுப்பார்க்கக்கூடாது என்று எந்த விதியும் இல்லையே....

நன்மை தீமையை ஆராய்வது நல்லது தானே..

உண்மைதான்

சில நிறுவனங்களுடன் பேசியபோது அவர்கள் இவற்றையே தெரிவித்தனர்

உதாரணமாக

[color="#008000"]பாடசாலைகளுக்கு புத்தகங்கள், பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள்.......... போன்ற சிலவற்றை எமது புலம்பெயர் மக்கள் செய்ய அரசு அதற்காக ஒதுக்கிய பணங்களை சிங்கள தேசப்பக்கம் திருப்பிவிட்டதாக சொன்னார்கள்

எனவே செய்பவர்களும்அரசு கவனியாத தொழில் காணி நிலம் வாங்குதல் குடியமர்த்தல் பக்கம் கவனம் செலுத்தவேண்டுமே தவிர

அரசு செய்தே ஆகவேண்டிய இதுபோன்ற அவர்களது பணிகளுக்குள் செல்லாது தவிர்த்தல் நன்று.

இதற்கு தாயகத்தில் வேலை செய்யும் அமைப்புகளைச்சார்ந்தவர்கள் எவராவது பதில் தந்தால் நன்றாக இருக்கும்

Edited by விசுகு

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் ரிப்போட்டர்(24.10.2010) வெளிவந்த ஆக்கம்

53699421.jpg

இலங்கையில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழா தோல்வியில் முடிந்தது. எனவே, அங்கு படப்பிடிப்புக்குச் சென்ற நடிகை அசினைப் பயன்படுத்தி தமிழர்களுக்கு உதவி செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயன்றது.

தனது இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு வந்தபோது அசினும்,‘‘32 ஆண்டுகளாக யாரும் செல்லமுடியாத யாழ்ப்பாணத்திற்கு நான் சென்றேன்.நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக ஓர் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறேன். 300 பேருக்கு என் சொந்த செலவில் ஆபரேஜன் செய்தேன். 10 ஆயிரம் பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்’’என்றெல்லாம் உணர்ச்சி ததும்ப பேட்டியளித்திருந்தார்.

இப்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பார்வை பறிபோய்விட்டதாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, ‘‘ஒப்பரேசன் முடிந்து அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. ஆனா முழுசா பார்வை பறிபோயிடுச்சு. இப்படி பத்துப் பேருக்கு மேல இருக்கிறொம். டொக்டரிடம் போனால் லென்ஸ் மாற்றி வைச்சிருக்காங்க. அதை மாத்த 25 ஆயிரம் ஆகும் என்டு சொல்றார்.சண்டையில எல்லாத்தையும் இழந்து நிக்கிறொம்.

அவ்ளோ பணத்துக்கு எங்கே போறது? இண்டியன் கவர்ன்மெண்ட் 1987-ல் ஒப்பரேசன் லிபரேசன் என்டு சொல்லி எங்களைக் கொன்னாங்க.இப்போ கண் ஒப்பரேசன் என்டு கொல்றாங்க. என்ன பாவம் நாங்க செஞ்சோம்?’’ என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள்.

அசினின் இலங்கைப் பயணத்தை எதிர்த்த மே 17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனிடம் பேசினோம், ‘‘ஐ.நா. சபை நுழைய முடியாத பகுதிகளில் அசினை அனுப்பிய போதே இலங்கை அரசின் சதி புரிந்துவிட்டது.ஏற்கெனவே போரினால் எல்லாவற்றையும் இழந்த தமிழர்களின் கண்பார்வையும் இப்போது பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அசின் முழுப் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டார்.

அசினின் கருத்தறிய முயன்றபோது, ‘காவலன்’ படத்தில் பிஸியாக இருப்பதாகச் சொல்லப்பட்டது.

- வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.