Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பச்சோந்திகளிடம் பணத்தை உதவிகளை எதிர்பார்த்து நிற்பதிலும் வன்னி மக்கள் நேரடியாக மகிந்தவிடம் அதை எதிர்பார்த்தால் நல்லா இருக்கும். அவன் எதிரி என்றாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களைக் காட்டிலும் திறம் எனலாம்..! அடுத்தவன் சாகும் வரை களம் அனுப்பிப்போட்டு.. இப்போ மனித நேயம் பொங்க.. எழுதிறவையைக் கண்டால்.. இதுகள் எல்லாம் மனிதாபிமானம் பார்க்கிறதுதான் வேடிக்கையா இருக்குது..!

  • Replies 123
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த பச்சோந்திகளிடம் பணத்தை உதவிகளை எதிர்பார்த்து நிற்பதிலும் வன்னி மக்கள் நேரடியாக மகிந்தவிடம் அதை எதிர்பார்த்தால் நல்லா இருக்கும். அவன் எதிரி என்றாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களைக் காட்டிலும் திறம் எனலாம்..! அடுத்தவன் சாகும் வரை களம் அனுப்பிப்போட்டு.. இப்போ மனித நேயம் பொங்க.. எழுதிறவையைக் கண்டால்.. இதுகள் எல்லாம் மனிதாபிமானம் பார்க்கிறதுதான் வேடிக்கையா இருக்குது..!

அப்ப மொத்தத்தில தலைவரைப்பற்றித்தான் எழுதியிருக்கிறீங்கள். :rolleyes:

ஆனாலும் தலைவரை ஒருமையில் அழைப்பது தவறு பன்மையில் அழைக்கவும்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து… இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள். கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள். இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.

Edited by sathiri

பிள்ளையை கொண்டு போய் ஆஸ்பத்திரியில ஒப்படையுங்கோ.. அல்லது கொழும்பில் உள்ள லேடி ரிஸ்வே கொஸ்பிற்றலுக்கு கொண்டு போங்கோ பிள்ளை சுகமாயிடும். அல்லது சர்வதேச செஞ்சிலுவையிடம் ஒப்படைங்கோ. எனி உங்களை நம்பி 5 சதமும் தர முடியாது. நீங்கள் உந்தப் பிள்ளையை வைச்சு உங்கட சொந்த கருத்துக்களை பிள்ளையின் கருத்தாக திணிப்பதை விடுத்து.. சிறீலங்கா சுகாதார சேவையிடம் கையளியுங்கள்... சிறீலங்காவின் பிரஜையை சிறீலங்கா அரசிற்கு காப்பாற்றத் தெரியும்.. அப்படித்தான் சிறீலங்கா சொல்கிறது.

அதுவும் பயங்கரவாதிகள் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைக்கு கருணா அம்மானே நேரடியா உதவி செய்வார். டக்கிளஸ் அம்மான் கூட நின்று கால் வருடி விடுவார்.. கொண்டு போங்கோ.

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

Edited by nedukkalapoovan

... இப்போதெல்லாம் இங்கு சிலர் தாம் என்னத்தை செய்கிறோம் என்ற நோக்கத்தை மறந்து, ஏதோ சொல்லப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயற்படுவது போல தோன்றுகிறது!!!!!!!!!!!!!?????????????? .... இதை நான் பார்த்து ஆச்சரியப்படுகிறேன், சிலர் இல்லை இது முன்பே தெரிந்ததுதான் என்கீறார்கள்!!!!!!

இது ஏறக்குறைய ... அண்மையில் முதலைக்கண்ணீர் விட்ட ... கேபியின் செயற்களை ஒத்ததாக இருக்கிறது???????????

... எனக்கு தெரிந்த ஒருவர் ... இங்குள்ள சில மருத்துவர்களுக்கு, அங்குள்ள மக்களுக்கு என்று மாதாந்தம் பணம் கொடுத்து வந்தார்! திடீரென நிறுத்தி விட்டார்!! ஏன்? என்றதற்கு ... நான் ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு கொடுத்தது, அது கேபியின் கைகளினூடாக செல்கிறதாக அறிந்தேன். சரி அப்படி கேபியினூடாக செய்யப்பட்டாலும் ... நான் இந்த கேவலம் கெட்டவன் மூலம் செய்ய விரும்பவில்லை! இவனது மூலம் நான் கொடுப்பதால் வாழ்வு பெறுவதிலும் பார்க்க, அச்சனம் சாகலாம்!!!

இதுதான் இங்கு பலரது நிலைப்பாடு!! ... நீங்கள் உண்மையை கூறி ... நாங்கள் யாரென்பதை ... கேட்டுப்பாருங்கள்???? அள்ளித்தருவார்கள்????????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு காலத்தில் தமிழீழ விடிவிற்காகப் பணம் சேர்க்க வந்தார்கள். கடுங்குளிரையும் பார்க்காது சிரமப்பட்டு வந்தவர்களை சில வீடுகளில் தனிநாடு ஏன் தேவை என்று விளங்கப் படுத்துங்கோ என்று கேட்டால், சிரமப்பட்டு வந்தவர்களுக்கு சிலவேளைகளில் ஆத்திரம் வரும். வந்தாலும் அடக்கிக்கொண்டு மிகவும் பொறுமையாக தேவையை விளங்கப்படுத்தி உதவி கோருவார்கள். அவர்கள் எல்லாம் தாம் உண்டு தன் பாடுண்டு என்று இருந்திருந்தால் 90களில் தமிழீழப் போராட்டம் தானாகவே இயற்கை எய்தியிருக்கும். இப்போது தமிழீழப் போர் முடிவடைந்துவிட்டது. எனினும் போரில் பங்கெடுத்து இலங்கையில் மிஞ்சியுள்ளவர்கள், அழிவுகளைச் சந்தித்த பொதுமக்கள் தற்போது கால்வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்குச் சோறுகிடைக்கின்றதுதானே என்று சொல்லி, புலம்பெயர் நாடுகளில் பெரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவும் அமைப்புக்கள்கூட கைவிட்ட நிலையில், சிறு உதவிகளைச் செய்யும் நேசக்கரம் போன்ற அமைப்புக்க்கள்மீது வசவுகள், காழ்ப்புணர்ச்சிகள், சேறுகள் பூசி, அந்தச் சிறு உதவிகளுக்கும் தடங்கல் செய்வது என்பது எந்த வகையான மனிதாபிமானத்தில் சேர்த்தி?

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

. நீங்கள் உண்மையை கூறி ... நாங்கள் யாரென்பதை ... கேட்டுப்பாருங்கள்???? அள்ளித்தருவார்கள்????????????

எப்படிச் சொன்னால் அள்ளித் தருவார்கள்? 30,000 பேரைப் போருக்குத் தயார்படுத்த ஆயத்தங்கள் நடக்கின்றது, எல்லாம் ஆபிரிக்கக் கண்டத்தில் தயாராக இருக்கு. இலங்கைக்குப் போய்ச் சேர உதவிகள் உடனடியாகத் தேவை என்று சொன்னால் அள்ளித் தரக்கூடும்.

கிருபன், ... உமக்கு எனக்கு தெரியும் உந்த பெரும் நிறுவனபயப்பட்ட அமைப்புகள் உதவிக்கு போனாலும் அதனை சிங்களவன் எப்படி விடுவான் என்று!! அங்கு தமிழர்களின் நிறுவனங்கள் என்ன சர்வதேச தொண்டு நிறுவனங்களே செயர்பட முடியாத நிலை என்ன தடை!! செஞ்சிலுவைச்சங்க நடவடிக்கைகள் பலவற்றுக்கு முட்டுக்கட்டை!! சில நாட்களுக்கு முன்னுக்கும் செஞ்சிலுவைச்சங்கம் கொடுக்க கொண்டு சென்ற சிறிய டிராக்டர்களுக்கு நடந்த கதையும், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதி கண்ணீர் விட்டு அழுத செய்திகளும் இன்னும் பல ஊடகங்களின் தலைப்பை விட்டு நீங்கவில்லை"!!!!

நேற்றும் ஒருவர் கூறினார் தான் ஒரு குடும்பத்தை வன்னியில் பொறுப்பெடுத்திருக்கிறேன் என்று! எனக்கு ஆச்சரியம், எந்த அமைப்பின் மூலம் என்று கேட்டேன்!! அங்கு அப்படி செயற்பட விடமாட்டாங்கள் ... என்று விட்டு சொன்னார் லண்டனில் மாத்திரம் ஏறக்குறைய ஆயிரம் பேர் வன்னியில் உள்ள குடும்பங்களை பொறுபெடுத்திருப்பதாக!!! வேறு ஒருவரும் இத்தகவல்களை உறுதி செய்தார்!!! ... ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாதிருப்பதாக நினைக்க வேண்டாம்!!! ... உதனையும் காட்ட்டி கொடுத்த நாசமாக்க இங்கு சிலர்!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே ஒருவரும் ஒன்றும் செய்யாதிருப்பதாக நினைக்க வேண்டாம்!!! ... உதனையும் காட்ட்டி கொடுத்த நாசமாக்க இங்கு சிலர்!!!!!!!!!!

பலர் தனிப்பட்ட ரீதியில் உதவுவது தெரிந்ததுதான். எனினும் தேவை மலையளவு இருக்க, உதவிகள் தினையளவுதான். எனவே எல்லா வழிகளாலும் உதவிகள் போகவேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். ஊழல் நிறைந்த எமது சமூகத்தில் உதவிகளும் சரியான வழியில் சரியானவர்களைச் சென்றடைவதில்லை. எனினும் அதைச் சாட்டி சனம் சாகட்டும் என்று விட்டுவிடுவது மனிதாபிமானம் ஆகாது. எங்களுக்கு மனிதாபிமானம் தேவை இல்லை, வெறும் குற்றவுணர்வே போதும் உதவி செய்வதற்கு.

மனிதாபிமான அரசியலை இங்கு காணலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

இந்தக் கருத்தாடல் சாதித்தது என்ன? செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் அரசியலைச் சேர்ப்பது உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தான் பாதிக்கும். நாடு கடந்த அரசில் போராளிகளைக் கவனிப்பதற்கான ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரைத் தொடர்பு கொண்டீர்களா? புலம் பெயர்ந்தவர்களுக்கு தமீழம் என்பது ஒரு கனவு மட்டுமே அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை அல்ல. நிலத்தில் இருக்கும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறதோ அதற்காகவே அவர்கள் போராடுவார்கள்.புலத்தவரின் கனவையும் நிலத்தவரின் வாழ்வையும் புலிகள் அரசியல் ரீதியாக இணைத்ததனாலேயே அவர்களால் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட போராட்டத்தை நடாத்த முடிந்தது.ஆனால் இன்று நீங்கள் செய்ய முனையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு அவ்வாறான ஒரு அரசியற் கனவு இல்லை.அதனால் புலத்தவருக்கு இத்தகைய அரசியலில் நாட்டம் இல்லை. நீங்கள் அரசியல் அற்ற வகையில் மனிதாபிமானம் கொண்டே இதனை அணுக முடியும்.இல்லாது விடின் நீங்கள் நினைக்கும் நோக்கை எட்ட முடியாது.

சுகனிடம் நான் இதனையே பலமுறை சொல்லி இருக்கிறேன்.புலத்தில் இருப்பவர்களின் வர்க்க நலனும் களத்தில் இருப்போரின் நலனும் வேறு வேறானது.அதனை இணைக்கும் அரசியற் கோட்பாடு எது என்பது பற்றி ஆராயாமால் வெருமனே பேசிக் கொண்டிருப்பதால் எதுவுமே நடந்து விடப் போவதில்லை.

பிள்ளையை கொண்டு போய் ஆஸ்பத்திரியில ஒப்படையுங்கோ.. அல்லது கொழும்பில் உள்ள லேடி ரிஸ்வே கொஸ்பிற்றலுக்கு கொண்டு போங்கோ பிள்ளை சுகமாயிடும். அல்லது சர்வதேச செஞ்சிலுவையிடம் ஒப்படைங்கோ. எனி உங்களை நம்பி 5 சதமும் தர முடியாது. நீங்கள் உந்தப் பிள்ளையை வைச்சு உங்கட சொந்த கருத்துக்களை பிள்ளையின் கருத்தாக திணிப்பதை விடுத்து.. சிறீலங்கா சுகாதார சேவையிடம் கையளியுங்கள்... சிறீலங்காவின் பிரஜையை சிறீலங்கா அரசிற்கு காப்பாற்றத் தெரியும்.. அப்படித்தான் சிறீலங்கா சொல்கிறது.

அதுவும் பயங்கரவாதிகள் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைக்கு கருணா அம்மானே நேரடியா உதவி செய்வார். டக்கிளஸ் அம்மான் கூட நின்று கால் வருடி விடுவார்.. கொண்டு போங்கோ.

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

ம்ம்ம்ம்ம்........ நெடுக்கர் சொல்வதும் சரிபோல கிடக்குது!! ... புலிகள் இறுதிக்காலங்களில் பிழை விட்டார்கள் அது மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ இல்லை!! பல பிழைகள் வாங்கப்பட்டவர்களினாலும், உள் நுளைக்கப்பட்டவர்களாலுமே மேற்கொள்ளப்பட்டன ... ஆனால்

இன்று ...

1) சிங்களவன் நல்லவன், நாம் சேர்ந்து ஐக்கிய இலங்கையினுள் வாழ வேண்டும். அவன் எம்மை அரவனைப்பான்!

2) டக்லஸ் அல்லலுறும் மக்களை அரவணைக்கிறார், ஆறுதலாக இருக்கிறார்.

3) கருணா அம்மான் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் கரிசனையுடன் இருக்கிறார்.

4) எல்லாவற்றுக்கும் மேலாக கேபி கைது செய்யப்பட்ட/சரணடைந்த போராளிகள் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். புத்தரின் வழிகாட்டலில் அன்பே உருவமாக!

... இப்படி பல பல அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!!!!!!!!!!!!! நாம் புலம்பெயர் பரதேசிகள் ஏன் உதவுவான்???????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

கிருபன்,

மன்னிக்கவும் இப்பகுதியில் தொடர்ந்து எழுதியமைக்கு. எதுவுமே எழுதுவதில்லையென்றுதான் இருந்தேன். ஆனால் எல்லைமீறீய 3ம் 4ம் நபர்களின் கதைகளைக் கேட்டு எங்களுக்காகவே செத்துக் கொண்டிருக்கிறவர்களையெல்லாம் துரோகி போராளிகள் இல்லை வியாபாரிகள் என்பதும் உண்மையிலேயே கேட்க சகிக்க முடியவில்லை. இன்னும் மிஞ்சினவையும் சாகவேணுமென்று அடம்பிடிக்கும் கருத்துக்களும் தொடர்கிறது.

கிருபன் மற்றும் தனிமடல் மின்னஞ்சல் ஊடாக பலர் வேண்டுதலுக்கு இணங்க இத்தோடு இப்பக்கத்தில் எழுதுவதை மட்டுமல்ல இனி எங்குமே விவாதிப்பதில்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாந்தி உம்மை நோகும்! உம் எழுத்துக்களும், இந்த தலைப்புமே இவ்வளவு கருத்துக்களையும் கொண்டு வந்தது!!! ... இங்கு முன்பு ஒரு திரியில் சாத்திரி எழுதியது போல ... இக்களத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வருகிறார்கள் ... அதனை உங்கள் எழுத்துக்கள் தான் கெடுக்கின்றன.

இதற்கு முன் எவராவது உங்கள் நேசக்கர செயற்பாடுகளை குறை கூறினார்களா???? இல்லை!!!!! ... உங்களது அரசியல் தற்போதைய நிலைப்பாடுதான், உங்களது இப்போதைய எழுத்துக்களுக்கு காரணம்!!! சிலவேளை இப்படி எழுதினால்தான் சிங்களவன் உங்களை அங்கு சேவை செய்ய அனுமதிப்பானோ தெரியாது??? இல்லை இதுதான் உங்கள் ஒப்பந்தமோ தெரியாது???? புலி, புலி செய்தது... புலி புலி செய்தது ... ஆனால் சிங்களவன் ஒன்றுமே செய்யவில்லை, ????? நல்லவன்??????????

நீர் உண்மையில் இங்கு இணைத்தது உதவி எதிர்பார்த்தல்ல என்பது உமது எழுத்துக்களில் நான் கண்டது!! நீர் சொல்ல வந்த சேதி வேறு!!!! அது உமது அடுத்த திரியிலும், முன் சில திரியிலும் தெரிகிறது!!!

... சுட்டி விரலை நீட்ட முன், கையைப் பார்த்தல், நான்கு விரல்கள் எம்மை நோக்கி நீட்டும் ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் ஈலிங் அம்மன் கோயிலைத் தொடர்ந்து என்பீல்ட் நாகபூசனி அம்மன் கோயிலாலும்,கோயிலுக்கு வரும் அடியவர்களாலும் நிறைய குழந்தைகள் இங்குள்ளவர்களால் பொறுப்பெடுக்கபடுகிறது...ஒவ்வொருவரும் தங்களுக்கு விரும்பிய குழந்தைக்கு தெரிவு செய்து காசு அனுப்புகிறார்கள்...இது கோயிலோடு சேர்ந்து நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தான் நேசக்கரத்தினூடாக நான் உதவி செய்ய நினைத்த போதும்.. அதன் சமீபகால அணுகுமுறைகள் மக்களை பாகுபாடின்றி ஒருங்கிணைப்பதற்கும் ஒத்துழைக்க செய்வதற்கும் பதில் சிலரை திருப்திப்படுத்த என்று அமைய வெளிக்கிட்டதால் அதில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்து கொண்டேன். இவை குறித்தும் நேசக்கரம் சிந்திக்க வேண்டும்.

சாந்தியக்கா

சாத்திரி

இருவரும் இது பற்றியும் கவனத்திலெடுங்கள்

நன்றி

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

இந்தக் கருத்தாடல் சாதித்தது என்ன? செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் அரசியலைச் சேர்ப்பது உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தான் பாதிக்கும். நாடு கடந்த அரசில் போராளிகளைக் கவனிப்பதற்கான ஒருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரைத் தொடர்பு கொண்டீர்களா? .

எதற்கு இன்னும் இன்னும் ஏமாளி புலம்பெயர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய நினைக்கிறீங்க..???!

உங்களிடம் திட்டும் ஏச்சும் வாங்கி மனிதாபிமானம் சொரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களால முடியல்லையோ.. விட்டிட்டு.. வேற வேலையைப் பாருங்கோ.. இல்ல தேர்தல் கீர்தல் வந்தால் அதில நில்லுங்கோ.. இதை விட பொப்பிலராகலாம்.

இதற்கு முன் எவராவது உங்கள் நேசக்கர செயற்பாடுகளை குறை கூறினார்களா???? இல்லை!!!!! ... உங்களது அரசியல் தற்போதைய நிலைப்பாடுதான், உங்களது இப்போதைய எழுத்துக்களுக்கு காரணம்!!! சிலவேளை இப்படி எழுதினால்தான் சிங்களவன் உங்களை அங்கு சேவை செய்ய அனுமதிப்பானோ தெரியாது??? இல்லை இதுதான் உங்கள் ஒப்பந்தமோ தெரியாது????

நீர் உண்மையில் இங்கு இணைத்தது உதவி எதிர்பார்த்தல்ல என்பது உமது எழுத்துக்களில் நான் கண்டது!! நீர் சொல்ல வந்த சேதி வேறு!!!! அது உமது அடுத்த திரியிலும், முன் சில திரியிலும் தெரிகிறது!!!... சுட்டி விரலை நீட்ட முன், கையைப் பார்த்தல், நான்கு விரல்கள் எம்மை நோக்கி நீட்டும் ...

கிருபன் மற்றும் தனிமடல் மின்னஞ்சல் ஊடாக பலர் வேண்டுதலுக்கு இணங்க இத்தோடு இப்பக்கத்தில் எழுதுவதை மட்டுமல்ல இனி எங்குமே விவாதிப்பதில்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுபற்றி ஆரம்பத்திலேயே இரு பகுதியையும் எச்சரித்திருந்தேன்

அத்துடன்

இந்த திரியின் தலைப்பு தாங்கி நிற்கும் சொற்களில் உடன்பாடில்லை. இது நேசக்கரத்தின் உதவுனர் தொகையை பாதிக்கக்கூடியது.அத்துடன் சாத்திரி அவர்கள் முன்னமே இதற்காகவே இங்கு எழுதுவதை தவிர்த்துவந்தார். எனவே சாந்தியக்காவின் இம்முடிவை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

தொடரட்டும் தங்கள் பணி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தடி சாக்கல் சவுக்கெடுத்து விளாசுகின்றீர்கள்.

அதுசரி இப்பவும் போராட்டம் இருக்கின்றதா. போராட்டம் என்ற சொல்லைக் கேட்டுப் "போர்" அடித்துவிட்டது. ஏதாவது வேறு சொல்லைக் கண்டுபிடித்தால் நல்லது.

போராட்டம் என்பது உங்களுக்கு வாழ்க்கை, அதற்கு தேள்வையான வசதிகள் அதன் மூலம் வந்தபின்னர் அது உங்க~உக்கு போர் அடித்து விடும் என்பது உண்மைதான், ஆனால் எமக்கு அதுவே எமது சுவாசம், அது எளிதில் அடங்காது. இறுதி மூச்சு வரை அது தொடரும்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெண்டா மெத்தச்சரி. போராட்டம் ??????? ஒரு புனிதமான வார்த்தையை நம்பி அழிஞ்ச ஒருதனுக்கு கொடுக்கும் கவுரவம் நன்றாயேயுள்ளது.

இறுதியில் எரிந்து போற வயிற்றுக்கு நீங்கள் சாப்பிடாமல்தானே இருக்கிறியள். இல்லது எரிஞ்சு போற வயிற்றுக்காக நீங்கள் வேளை தப்பாமல் எல்லாம் குடுக்க வேணும். ஆனால் தன்னையே இிழந்து தாயகத்தை நேசித்தவனெல்லாம் எரியிற வயிற்றுக்காக வாழவேகூடாது. வாழ்க உங்கள் போராட்டமும் கொள்கையும்.

சொந்தச் சகோதரர்கள் துனப்பத்தில் சாதல் கண்டு சிந்தையிரங்காரடி கிளியே....எனப்பாடிய மீசைக்கவிஞா எல்லாம் தெரிஞ்சுதானோ எழுதிவைத்தாய் இப்படி??!!!!

இதென்ன கதை போர் ஆடிக் களைத்துப் போயுள்ளோம் நீங்கள் இதுக்கை எங்கடை போராட்டம் பற்றி கொமன்ற் அடிக்கிறியள்.

சொந்த சனத்துக்கு புலம்பெயர்தமிழர் அனுப்பிய கப்பலையே பேரீச்சம் பழத்துக்கு போகப்போவது என சாபம் கொடுத்தவர், வன்னிசனம்மீது இரக்கம் காட்டுகிறாவாம், சாத்திரியார் டொங்கியினால் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விட்டு விடபோறேன் என கூறிய போது ஓடோடிவந்து பொறுப்பேற்றது ஏன், வன்னிச்சனத்துக்கு உதவி செய்யவா? தான் பொப்புலர் ஆகவா? செத்தபிணங்களின் மீது பொப்புலர் தேடும் கேடு கெட்ட இனம், அதற்காக போராட்டத்தையும், தலைவரையும், அவர்தலையையும் கோடரியால் கொத்திபிளந்து கவிதை வடித்து மகிழ்ந்த கூட்டம், வன்னிசனத்துக்கு இரங்குவதாக கூறுவது வெறும் நடிப்பு,

Edited by சித்தன்

போர் நிறுத்த ஒப்பந்தம் அவசியம் போல தெரிகிறது.

நல்ல பணிகள் தேவையில்லாத விவாதங்களால் நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

இதனுடன் இத் திரிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது உங்களுக்கு வாழ்க்கை, அதற்க்கு தேல்வையான வசதிஅக்ள் அதன் மூலம் வந்தபின்னர் அது போர் அடித்து விடும் என்பது உண்மைதான், ஆனல் எமக்கு அதுவே எமதுன் சுவாசம் அது எளிதில் அடங்காது. இறுதி மூச்சு வரை அது தொடரும்.

நல்லது. தொடருங்கள்.

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் சிங்களைப் பெரும்பான்மையாகிவிடும். வடக்கிலும் சிங்களவர்கள் செறிவாக வாழ்வார்கள்.

அப்போதும் நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம்.

இதனுடன் இத் திரிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன?

சாத்திரி/சாந்தி அவர்களுக்கு:

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நிறையப் பொறுமை தேவை. Integrity (தமிழ்ச்சொல் தெரியவில்லை) ஐ கேள்விக்கு உட்படுத்தினாலும், சளைக்காது செய்யவேண்டிய கடமைகளுக்கு சக்தியைச் செலவழிப்பது மேல். உணர்ச்சிமேலீட்டினால் வரும் ஒரு சில வார்த்தைகள்கூடத் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, உங்கள் செயற்பாடுகளை மலினப்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடும்.

நான் சொல்ல விரும்பியதை கிருபன் கூறியுள்ளார்...நாரதரின் பதிலும் காத்திரமானது

நன்றி சாந்தி உங்களின் முடிவும் சிறப்பானது....

ஆராவமுதன் கூறுவது போல், இத் திரியை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது

நல்லதோர் வீணை செய்தோம்

அதை

நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்

சொல்லடி சிவசக்தி

எம்மை சுடர் மிகு அறிவுடன்

ஏன்

படைக்கவில்லை..............................??

நன்றிகள் நிழலி!

நல்லது. தொடருங்கள்.

இன்னும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணம் சிங்களைப் பெரும்பான்மையாகிவிடும். வடக்கிலும் சிங்களவர்கள் செறிவாக வாழ்வார்கள்.

அப்போதும் நாம் சுவாசித்துக்கொண்டுதான் இருப்போம்.

கிருபன், என்ன செய்யலாம் சொல்லுஙகள்??? ... சரி ஆயுதப்போர் இனி கற்பனை, வேண்டாம்!! சாத்வீகமாக நாம் புலத்தில் செய்யக்கூடியதையும் நிறுத்த வேண்டும்???? சாரி, நிறுத்துவோம்!!! சிங்களவன் உவற்றை நிறுத்தப் போகிறானா????

கிருபன் நீர் நேற்று இணைத்த இணைப்பில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளா விடினும், இத்திருக்கும், சிலரின் கருத்துக்களுக்கும் பதிலுள்லது!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், என்ன செய்யலாம் சொல்லுஙகள்??? ... சரி ஆயுதப்போர் இனி கற்பனை, வேண்டாம்!! சாத்வீகமாக நாம் புலத்தில் செய்யக்கூடியதையும் நிறுத்த வேண்டும்???? சாரி, நிறுத்துவோம்!!! சிங்களவன் உவற்றை நிறுத்தப் போகிறானா????

கிருபன் நீர் நேற்று இணைத்த இணைப்பில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளா விடினும், இத்திருக்கும், சிலரின் கருத்துக்களுக்கும் பதிலுள்லது!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77289

அந்தத் திரியில் மிகுதியை அலசுவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.