Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகிள் தேடுதல் இரகசியங்கள் !!

Featured Replies

நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி Google !! இதில் பொதுவாக இணையத்தளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம். ஆனால் GOOGLE இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம்.

1.நமக்கு SONY நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய.......sony stock price என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.

2. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலையை அறிய உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள colombo weather என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.

3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள உதாரணமாக இலங்கையின் நேரத்தை அறிய sri lanka time என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.

4.ஒரு குறிப்பிட்ட அணியின் Score மற்றும் அட்டவணையை தெரிந்துகொள்ள sri lanka cricket score என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.

5.Google-ல் உள்ள Calculator மூலம் நாம் விரும்பும் Equation-க்கு விடையை மிக எளிமையாக அறிந்திட முடியும். உதாரணமாக 2+2= என்று type பண்ணினால் விடை 5 என்று வரலாம். eg:- 2*10= , 1000/58= etc....

6.ஒரு அளவினை வேறு ஒரு அளவினில் அறிந்திட,சான்றுக்கு 4 Kg ஐ gram ல் அறிந்துகொள்ள 4 Kg in g என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.

7.ஒரு குறிபிட்ட சொற்கள் பற்றி மட்டும் தேடாமல்,அந்த சொற்களுக்கு தொடர்பான சொல்லை பற்றியும் அறிந்து, ~ என்ற எழுத்தை பயன்படுத்தவும். சான்றுக்கு ~ animation.

8.ஒரு குறிப்பிட்ட சொற்களின் Definition-ஐ அறிந்துகொள்ள, சான்றுக்கு philosophy என்பதின் Definition-ஐ அறிந்துகொள்ள define philosophy என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.

9.ஒரு திரைப்படத்தின் Reviews மற்றும் Shoetimes பற்றி அறிந்து கொள்ள சான்றுக்கு Movie Endhiran என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.

10. ஒரு இடத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் Housing பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள housing colombo or real state colombo என்று Type செய்து Enter Key அழுத்தவும்.

11.ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்கள் குறிப்பிட்ட ஊரிற்கு வந்து செல்லும் விவரங்களை அறிய,அந்த விமானத்தின் எண்ணை சேர்த்து கொடுத்தால் போதும்.... Sri lankan airlines 320

12.ஒரு நாட்டின் நாணய மதிப்பை வேறு நாட்டின் நாணய மதிப்பிற்கு மாற்ற. சான்றுக்கு, US டாலரை இலங்கை ரூபாவில் பெற.... 200$ in LKR or

$ இன் இன்றைய மதிப்பை இலங்கை ரூபாவில் அறிய.... 1$ in LKR

13.Colombo Map-ஐ நாம் பார்க்க வேண்டும் என்றால் Colombo map என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.

14. Google Search where,the,how,and போன்ற வார்த்தைகளை ஒதுக்கிவிடும் ஆகையால் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது " + " என்ற குறியை சேர்த்து கொடுக்கவும் .

15.ஒரு குறிப்பிட்டவர் கண்டுபிடித்த பொருள் போன்ற விவரங்களை அறிய விரும்பினால் " * " என்ற குறியை சேர்த்து பயன்படுத்தலாம்,சான்றுக்கு isaac newton பற்றி அறிய...... isaac newton discovered*

16.குறிப்பிட்ட US Telephone Area Code-ன் Geographical Location-ஐ பார்க்க விரும்பினால்,Google Search Box-ல்,அந்த Location-ன் மூன்று இலக்க Area Code-ஐ தட்டச்சி செய்து Enter Key-ஐ அழுத்தவும் ...

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .. உங்கள் கருத்துக்கள் தான் எம்மை இத்துறையில் தொடர்ந்து ஈடுபட வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் .......

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக 2+2= என்று type பண்ணினால் விடை 5 என்று வரலாம். :huh::huh:

http://www.google.ca/#hl=en&source=hp&biw=1596&bih=659&q=+2%2B2&rlz=1R2GGLT_enCA389&aq=f&aqi=g10&aql=&oq=&gs_rfai=&fp=b2e55ce234543ea9

சுட்டி,நன்றி இணைப்புக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுட்டி! எனக்குப் பயனாக இருக்கும் போல் உள்ளது!

கூகிளில் "படங்கள்" தேடல் ( இது பலருக்கு தெரிந்திருந்தாலும் சிலருக்கு பலனுள்ளதாக அமையும்)

1. செல்ல வேண்டிய தளம் : http://www.google.com/imghp?hl=en&tab=wi

2. உதாரணத்திற்கு ரோசா பூவை தேடுகின்றேன்: அதில் rosa என சொடுக்கின்றேன்

3. பின்னர் அதை சுருக்கி தனிய மஞ்சள் நிற ரோசா பூவை மட்டும் தேட கீழுள்ளதை முகவரியில் பதியலாம்

http://images.google.com/images?q=rose&imgcolor=yellow

இல்லை வெள்ளை நிற மாளிகைகளை தேட

http://images.google.com/images?q=palace&imgcolor=white

இல்லை நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை. இப்போது கூகிள் பட தேடலில் சிவப்பு நிற (NOKIA) கைபேசியைன் (Model) பற்றி எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

கூகிள் பட தேடலின் (URL)லில் கடைசியில் &imgcolor=red என்று சேர்த்தால் போதும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வந்து தமிழிலை எழுதித்தான் கூகிள்ளை தேடுறனான். உதாரணத்துக்கு கள்ளுக்கொட்டில் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தவரை இந்த metatag keywords என்பதெல்லாம் வெறும் பிம்பிளிக்கெ பிளேப்ப்பி அதற்கு மேல் google counter தான் வேலை செய்யுது என நினைக்கிற்ன் :huh:

கூகிளில் பொதுவாக நாம் தேடும்போது எமக்கு தேவையான உபயோகமான தவல்களுடன் அவை சம்பந்தப்பட்டவையும் கிடைக்கும். இந்த நேரத்தில், அநேகமான தவல்கள் உபயோகமாக இருந்தாலும் எமக்கு குறிப்பிட்ட தவலை தேட "உயர்தர தேடலை" ( Advanced Search) சொடுக்கலாம்.

http://www.google.com/advanced_search

இந்த தேடுதல் உங்களிடம் இருந்து கூடுதலான தகவல்களை எதிபார்க்கும். ஆனால், அதனால் தேடுதல் இயந்திரம் எமக்கு தேவையான தகவல்களை அழகாக தொகுத்து தரும்.

கூகிள் தான் என் கடவுள்... அவர் நான் கேட்கும் அனைத்தையும் உடனே தந்து விடுகின்றார்

ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள ஒன்றை பற்றி அனைத்து விடயங்களையும் பார்க்க வேண்டும் என்றால் அந்த தளத்தில் Site:<> என்று விட்டு நீங்கள் தேடும் விடயத்தை குறிப்பிடுங்கள். உதாரணமாக யாழில் வந்த சுகனின் கருத்துகளை பார்க்க வேண்டும் என்றால்

site:yarl.com sukan என தேடல் இடத்தில் குறிப்பிட்டால் சுகன் எழுதியது அனைத்தும் கிடைக்கும். தேடப்படுபவர் பெயர் தமிழில் இருந்தால் பெயரை தமிழில் குறிப்பிட்டால், தேடித் தரும்

( site:yarl.com நிழலி)

நான் கூகுள் image பகுதிக்கு சென்று தான் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பொருட்கள் பெயர் புரியவில்லையாயின் (விளையாட்டுச் சாமான்கள், உணவுப் பொருட்கள் போன்றவை) அது எது என என அடையாளம் காண்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது தொழிலுக்கு

கூகிள்தான் கடவுள், வழிகாட்டி .....

என்னதான் இல்லை

எதைத்தான் காட்டமாட்டார்

தூக்கமோ, சோம்பலோ இல்லாத கண்ணால் கண்ட கடவுள் அது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் என்றை சொல்லை சொல்லும் நிழலி அண்ணா,விசுகு அண்ணாக்கு ஒரு "ஓ" நானும் கடவுள் நு தான் சொல்லுவேன். அண்ணா யாரும் ஏதாச்சும் கேட்டால் எனக்கு தெரியாவிட்டால் உடனை சொல்லுவேன் இருங்கோ கடவுளட்டை கேட்டுச்சொல்லுறேன் என்று. அந்தளவுக்கு கூகிளின் வசதி.

எவ்வளவு நன்மையோ அதை மாதிரி கொஞ்சம் கூடாத விசயம் என்ன என்றால் சின்னதா சொந்த மூளையை பயன்படுத்துற விசயத்துக்கு கூட பஞ்சியிலை கூகிளுக்கே போக வேண்டி இருக்கு அது தான் ஒருமாதிரியா இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை ஒருசில டாக்குத்தர்மாருக்கே? கூகுள் ஆண்டவர்தான் வழிகாட்டி

என்ரை கண்ணாலைகண்டனான்

நான் வந்து தமிழிலை எழுதித்தான் கூகிள்ளை தேடுறனான். உதாரணத்துக்கு கள்ளுக்கொட்டில் :D

:unsure::lol:

kookilaalai tamililai theda inkai paarungo

கூகிள் உதவி மையம் தற்போது உங்கள் மொழியில்... !!!.... :rolleyes: :rolleyes:

Edited by ஜெகுமார்

http://www.google.com/intl/ta/help/features.html

மேலுள்ள இணைப்பு பயனுள்ளது, நன்றி ஜெகுமார்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.