Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!

Featured Replies

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!

இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள்.

இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன்.

அவங்கள் மனுசிமாரையும் வேலைக்கு விடாமல் ஐந்தாறு அறைகளிலே வீடும் வாங்கிக் கொண்டு புதுப் புதுக் கார்களிலே திரியட்டும். நீங்கள் வீட்டிலே நிற்க நேரமில்லாமல் ஒன்றுக்கு மூன்று வேலை செய்து அவையளுக்கு அறுத்துக் கொண்டு இருங்கோ. போங்கோ என்னவாச்சும் செய்யுங்கோ.

கோமதி திரும்பி வந்து முகத்தை மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள். தில்லைநாதன் பெருமூச்சு விட்டார். எந்த வீட்டிலும் இயக்கத்துக்குக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப் படாது. இதுதான் பிரச்சினை ஏன்?

தில்லையார் கீழே வந்து கதவைத் திறந்தார். மூன்று பேர் குளிரில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் நிறைய இருந்தன. தெருவோரத்தில் அவர்கள் வந்த வீ. எம். டபுள்யூ வாகனம் தில்லையாரின் காரிலிருந்து இரவு முழுவதும் ஒழுகி ஓடிய கறுத்த எஞ்சின் ஒயிலின் மேல் ஏறி நின்றது.

உள்ளே வாங்கோ தம்பி என்றார் அவர். உள்ளே வந்தவர்கள் இருக்கத் தயங்கினார்கள். நின்று கொண்டே பேசினார்கள். நாட்டு நிலைமைகள் தெரியும்தானே. இறுதிப் போருக்கு வெளிநாட்டிலே இருப்பவர்கள் பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என்று ஊரிலே எதிர்பார்க்கினம். அதுதான் நாங்கள் எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும் சந்திச்சுக் கொண்டு வாறம் என்றார் ஒருவர்.

இது இறுதி யுத்தம் என்றபடியால் நூறு, இருநூறு குடுத்துப் பிரயோசனம் இல்லை. பெரிசாக நீங்கள் ஏதாவது செய்தால் தான் நல்லது என்றபடியே பத்திரிகையும் சில துண்டுப் பிரசுரங்களும் என்று நீட்டினார் இன்னொருவர். தில்லையார் பேசாமல் வாங்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தார்.

அவர்களின் கைகளில் பல மோதிரங்கள் தெரிந்தன. புத்தம் புதுச் சட்டைக்குள் இருந்து கையில் விலை உயர்ந்த மணிக்கூடு அடிக்கடி வெளியே தெரிந்தது. தலையைத் திருப்பும் போது கழுத்திலே தாலிக்கொடி போன்ற தங்கச் சங்கிலியும் கண்டார் தில்லைநாதன்.

அவருக்குத் தன் மகள் பெரிய பிள்ளை ஆன போது ஒரு சங்கிலி போடுவதற்குப் பட்ட துன்பம் ஞாபகத்துக்கு வந்தது. பழைய எழுத்து மோதிரம், உடைந்த தோடு என்று பொறுக்கி எடுத்து செய்து பெரிதாகப் போட்ட சங்கிலி இப்போது பிள்ளை வளர்ந்து விட்டதால் அட்டியல் போல சிறுத்து விட்டது. பிள்ளை ஞாபகம் வரும்போது கேட்கும். பொறம்மா, அப்ப்பாவுக்கு வருமான வரிக்காசு வரட்டுக்கும் வாங்கித்தாறன் என்று மூன்று வருடங்களாக அவர் சொல்லிக் கொண்டு வருகிறார்.

என்ன யோசிக்கிறியள் என்றார் வந்தவர்களில் ஒருவர்.

ஒன்றுமில்லைத் தம்பி, நீங்கள் தேசியக் குற்றம் ஒன்று செய்யுறியள். இயக்க எதிர்ப்பாளர்களுக்கு அது பிடிக்கும். நீங்கள் அப்படித்தான் நடப்பது நல்லது என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் நாட்டையும் விடுதலை இயக்கத்தையும் நேசிக்கிற என் போன்றவர்களுக்கு அது சங்கடமாக இருக்கிறது. உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன்.

தியாகராசா சாமியார் என்று எங்கள் ஊர் பெரியவர் ஒருவர் ஊரிலே இருக்கிற கோயில் ஒன்றுக்கு திருப்பணி செய்ய இங்கே என்னிடம் காசுக்கு வருவார். ஆளைப் பார்த்தால் சைவப் பழமாக இருப்பார். தேவார திருவாசகம் பற்றித்தான் வந்தால் கதைப்பார். திருநீறு தருவார். சிறு சிறு சமயப் புத்தகங்கள் தருவார். என்னுடைய மனைவி கோயில் காரியம் என்று நிறையப் பணம் கொடுத்தா. போன வருடம் எனது தகப்பனார் இறந்த போது நான் ஊருக்குப் போன சமயம் தான் கோவில் திருப்பணிக்கும் சாமியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தது.

அதே நேரத்தில் உங்களுக்கு நான் தந்த பணம் இரண்டாயிரம் மட்டிலே அங்கே கிடைத்ததாக சொன்னார்கள். ஒரு சதமும் பிழைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுக்கு நான் பணம் தருவதில் என் மனைவிக்கு உடன்பாடில்லை என்ன காரணம்? தயவு செய்து அதுக்கு அரசியல் அறிவு இல்லை என்று மட்டும் சொல்லிப் போடாதையுங்கோ.

ஒரு கேள்வியோடு அவர்களைப் பார்த்தார் தில்லையார். அவர்கள் சிரித்தார்கள்.

காசு ஊரிலே கிடைச்சிட்டுது என்றும் சொல்லுறியள். தரமாட்டோம் என்ற மாதிரியும் கதைக்கிறியள். எங்களுக்கு ஒன்றுமாய் விளங்கேல்லை என்றார்கள்.

தம்பிமார்! இந்த நாட்டிலே பெரிய ஆட்கள் எல்லாரும் தமிழன் என்ற சுவடு தெரியாமல் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கமும், கீழ்மட்டத்தில் உள்ளவர்களும் தான் குருவி தானியம் சேர்ப்பது போல தேடிய காசிலே உங்களுக்குத் தந்து கொண்டு இருக்கிறம். இதிலே பெரும்பாலானவர்கள் சராசரி இதயமுள்ளவர்கள். அவர்களுக்கு முன்னாலே இப்படியான வாகனங்களிலே நீங்கள் வரலாமா? அப்படி வந்தால் சந்தேகம் வராதா?

ஐயா! ஐயா! பொறுங்கோ என்று இடைமறித்தார் ஒருவர். எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராயாதையுங்கோ. நாங்கள் என்ன தொழில் செய்யுறோம். வருமானம் என்ன? எவ்வளவு காசுக்கு வாகனம் வைத்திருக்கிறோம் அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விசயம். நீங்கள் தருகிற பணம் ஊருக்குப் போய்ச் சேர்ந்ததா இல்லையா? என்று மட்டும் பாருங்கோ என்றார் அவசரமாக.

இப்போது காசு சேர்ப்பதிலே உள்ள சட்டரீதியான ஆபத்துக்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். வாழ்க்கையைப் பணயம் வைத்து இயங்குகிற எங்களை இப்படிக் கொச்சைப் படுத்திக் கதைக்காதையுங்கோ. ஒன்றுமே செய்யாமல் இருக்கிறவர்களை விட நாங்கள் நாட்டுக்காக ஏதோ செய்யுறோம் என்றார் இன்னுமொருவர்.

இல்லைத் தம்பி நீங்கள் செய்யுறது பிழை. குறை சொல்ல முடியாத குற்றம். பனைக்குக் கீழே இருந்து பாலைக் குடித்தாலும் அது கள்ளு என்றுதான் ஆட்கள் நினைப்பினம். இந்த வாகனத்திலே நீங்கள் கல்யாண வீட்டுக்கு போங்கோ, கோவிலுக்குப் போங்கோ, படத்துக்குப் போங்கோ. அது உங்களுடைய தனிப்பட்ட விசயம். ஆனால் காசு கேட்டு வராதையுங்கோ. காசு கேட்டு வாறதுக்கு ஒரு முறை இருக்கு.

தம்பி! ஐந்து டொலருக்கு வாங்கிய மீனையே நல்லதோ என்று பத்துத்தரம் காதுப் பூவை திறந்து பார்க்கிற எங்கள் சனங்கள் ஐந்நூறு டொலரைத் தந்துவிட்டு உங்களை எப்படியெல்லாம் கவனிப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கோ.

அதனாலேதான் சொல்லுறன் கவனமாக நடவுங்கோ. இன விடுதலைக்குப் பாடுபடுகிறது என்பது ஒரு தெய்வீகத் தொண்டு மக்காள். இன விடுதலைக்குப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு இங்குள்ள மக்களுக்கு முன்னால் பவிசு காட்டி மக்களையும் விடுதலையையும் அந்நியப்படுத்தி விடாதையுங்கோ தம்பி!

உங்களுக்கு நான் தந்த காசை விட தியாகராசா சாமியாருக்கு என் மனைவி கொடுத்த பணம் அதிகம். அது ஊர் போய்ச் சேரவில்லை என்பது வேறு விடயம். ஆனால் கேட்டால் மறுக்காமல் கொடுக்கக் கூடிய எண்ணத்தை ஏற்படுத்தும் தோற்றத்தில் அவர் இருந்தார்.

அதுக்காக கையில் நீங்கள் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஊரிலே அல்லல் படும் எங்கள் உறவுகளின் அவலத்தை எடுத்துக் காட்டுவதாக உங்கள் தோற்றங்கள் அமையட்டும். உங்கள் கண்களிலே ஈழத்தின் ஏக்கம் தெரியட்டும்! உங்கள் வாழ்க்கை முறையிலே ஒரு எளிமை தெரியட்டும். கையிலே உள்ள பத்திரிகைகள் மட்டும் உங்களை இயக்க வாதிகள் என்று காட்டிக் கொண்டால் போதாது.

பணம் கேட்டு நீங்கள் செல்லுகின்ற வீடுகளில் ஐயோ! ஊருக்கு அனுப்புவது இருக்கட்டும் முதலில் நீங்கள் இந்த உடுப்பை மாற்றுங்கோ, சாப்பிடுங்கோ என்று உங்களைக் கண்டு வேதனையில் நெஞ்சு பதறுகின்ற இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கோ தம்பி. உங்களைக் கண்டு ஒளிக்கிற நிலையை இனிமேல் வைக்காதையுங்கோ.

ஐயா! இப்ப ஊர் இருக்கிற நிலையிலே உண்மையான இன உணர்வு உள்ளவன் உங்களைப் போல இவ்வளவு நேரம் கதைச்சுக் கொண்டு இருக்க மாட்டான். ஏதாவது உதவி செய்யத்தான் பார்ப்பான் என்றார் இதுவரை கதைக்காத மூன்றாவது மனிதர். அவரின் பேச்சுத் தொனியிலே நீ யார் எங்களுக்கு உபதேசம் பண்ண? என்ற கேள்வியும் கலந்து கிடந்ததை தில்லையார் உணராமல் இல்லை.

தில்லையார் சிரித்தார். அம்மா, அப்பா, படிப்பு, காதல் கல்யாணம் என்று எல்லாத்தையும் துறந்து அந்தப் பிள்ளைகள் களத்திலே நின்று போராடுதுகள். கேவலம் நீங்கள் சொகுசு வாழ்க்கையைத் துறக்க முடியாமல் கஸ்டப்படுகிறியள் இல்லே. இப்படித்தான் வருவோம். நீங்கள் மறு பேச்சு பேசாமல் காசு தர வேணும் என்று நினைக்கிறதும் கூட தமிழ்த் தேசியத்துக்கு நல்லதில்லே.

இந்தாங்கோ தம்பி இதிலே இருநூறு டொலர் இருக்கு. ஆயிரம் டொலர் தருகிற பத்து வீட்டுக்குப் போக ஆசைப்படாதையுங்கோ. பத்து டொலர் தாற ஆயிரம் வீட்டுக்கு போங்கோ. அதுதான் தமிழ்த் தேசியத்துக்கு நல்லது. இன்னும் இரண்டொரு மாதத்திலே வாங்கோ. கனக்க இல்லை இருநூறு தான் தருவேன். இந்தக் காசு எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியிலே தான் தாறன். உங்களைக் கன நேரம் மினக்கெடுத்திப் போட்டேன். ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது. உங்களுக்குச் சொல்லாமல் நாலு நாலு பேராய்க் கூடி எங்களுக்குள்ளே கதைக்கிறதிலே ஆகப்போறது ஒன்றுமில்லை. சரி தம்பியவை போட்டு வாங்கோ.

தில்லையார் வாசல் கதவைத் திறந்து அவர்களை வழியனுப்பி விட்டு அவர்களின் வாகனம் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார். அதன் சக்கரங்களில் ஒன்று ஒழுகிய ஒயிலைத் தொட்டு வீதியில் சிறிது தூரத்துக்குத் தடவிக் கொண்டு சென்றது.

ஐயா! உங்களுடைய காரா ஒயில் ஒழுகுது? எங்களுடைய கராச்சுக்கு கொண்டு வாங்கோ. கூலிக்காசு இல்லாமல் செய்து தாறம். இப்படி அவர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தால்!

அவர்கள் சொல்லவே இல்லை. அதற்கான வசதிகளும் அவர்களிடம் இல்லை. சொல்லப் போனால் இப்படியான சின்னச் சின்ன அணுகு முறைகளினால் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற சிந்தனை கூட அவர்களிடம் இல்லை.

ஈழ விடுதலை இலட்சியத்தை அடைய போடப்பட்ட நெடுஞ்சாலைக்கு கூட நாம் இன்னும் செல்லவில்லை. நெடுஞ்சாலையை அடையும் குறுக்கு றோட்டில் நின்று கொண்டுதான் கும்மாளம் அடிக்கிறோம். நெடுஞ்சாலையை அடைவது எப்போது? இலட்சியத்தை அடைவது எப்போது?

தில்லையார் கண்கள் பனிக்க படியில் ஏறி மாடிக்குச் சென்றார். பெரிய வள்ளல் காசு கொடுத்து வழி அனுப்பிப் போட்டு வாறார். வாற கிழமை வீட்டுக் காசு திரும்பட்டும் பிறகு கதைக்கிறன் என்றாள் கோமதி.

இரா சம்பந்தன்

ezilnila.com

தில்லையார் கண்கள் பனிக்க படியில் ஏறி மாடிக்குச் சென்றார். பெரிய வள்ளல் காசு கொடுத்து வழி அனுப்பிப் போட்டு வாறார். வாற கிழமை வீட்டுக் காசு திரும்பட்டும் பிறகு கதைக்கிறன் என்றாள் கோமதி.

:huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை பக்கத்து நாடு ஒன்றுக்கு போயிருந்தேன்

அங்கு இயக்க வேலை செய்பவர் தனது சொந்த செலவில் கடைசியாக வந்த மொடலில் புதுக்கார் ஒன்று எடுத்து வைத்து அதை இயக்கவேலைகளுக்கே பாவித்து வந்தார். அவருக்கும் இதுபோன்ற சிக்கல்கள் வந்தன. ஒரு நாள் என்னுடன் கதைத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு அன்பர் நேரடியாகவே கேட்டார். தம்பி இந்த புதுக்கார் வைத்திருப்பதனால் இயக்கத்துக்கு கெட்ட பெயர்அல்லோ என்று. அவர் அதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சில முக்கிய விடயங்களாக போகும்போது இப்படியான கார்களில் போனால்............ மறிப்பது குறைவு. அதனால்தான் இதனை பாவிக்கின்றேன் என்று சில காரணங்களைச்சொன்னார். ஆனால் அந்த அன்பர் விடுவதாக இல்லை. கொஞ்சம்அவரை மட்டம் தட்ட வேண்டும் என்றே விவாதித்துக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இன்றிரவு பக்கத்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு இவ்வளவு பணம் செலுத்தணும் உங்கள் காரில் போவதென்றாலும் சரி

எனது காரில் போவதென்றாலும் சரி என்று தனது கார் திறப்பைக்கொடுத்தார். அந்த அன்பர் தட்டித்தடுமாறி அது உங்களது வேலை நான் ஏன் செய்யணும் என்று வழிந்தார்.

ஒரு முறை லா சப்பலில் ஒரு கடையில் இருந்தேன். ஒரு இயக்க பெடியன் வந்து பகோடா வாங்கிச்சாப்பிட்டபடி சென்றார். அங்கிருப்பவர் சொல்கிறார் எங்கட காசில பகோடா கேட்குது அவையளுக்கு என்று. தூக்கிப்போட்டு மிதிக்காத குறையா ஏசிப்போட்டு வந்தேன்.

நான் இங்கு எல்லாமே சரியாக நடந்தது என்று எழுதவில்லை. நாமும் வைக்கல்பட்டறை நாயாக இருந்தோம்.

  • தொடங்கியவர்

விசுகு அண்ணை கீழை இருக்கும் ஒரு விடயத்தை மட்டும் மீண்டும் பாருங்கோ.... எங்கள் மீதான உண்மையான விமர்சனமாகவும் அக்கறையாகவும் இதுதான் எனக்கு தெரிகிறது...

தியாகராசா சாமியார் என்று எங்கள் ஊர் பெரியவர் ஒருவர் ஊரிலே இருக்கிற கோயில் ஒன்றுக்கு திருப்பணி செய்ய இங்கே என்னிடம் காசுக்கு வருவார். ஆளைப் பார்த்தால் சைவப் பழமாக இருப்பார். தேவார திருவாசகம் பற்றித்தான் வந்தால் கதைப்பார். திருநீறு தருவார். சிறு சிறு சமயப் புத்தகங்கள் தருவார். என்னுடைய மனைவி கோயில் காரியம் என்று நிறையப் பணம் கொடுத்தா. போன வருடம் எனது தகப்பனார் இறந்த போது நான் ஊருக்குப் போன சமயம் தான் கோவில் திருப்பணிக்கும் சாமியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தது.

இந்திய இராணுவ காலத்தில் போராளிகள் ஒரு நேர சோத்துக்கு வளி இல்லாமல் அலைந்து திரிந்த போது தேடித்திரிந்து எங்கட சனம் சாப்பாடு குடுத்ததுகள்... அந்த காலத்து போராளிகளை நினைத்து பார்தீர்கள் எண்டால் புரியும்... கட்டின வேலி ஏறி பாயும் போது கிளிஞ்ச சாறம், செருப்பு கூட இல்லாத கால்கள், மளித்து மாதங்கள் கடந்த தாடி ஒதுக்காத மீசை... இப்படித்தான் புலிகளை நீண்ட காலமாக மக்களுக்கு தெரியும்...

யார் பெத்த பிள்ளையோ எங்களுக்காக அலஞ்சு திரியுது... இதை அனேகமாக காது பட கேட்டு இருந்து இருப்பீர்கள்...

நானும் ஒத்துகொள்ளுறன் குறையே இதில் சொல்ல முடியாத குற்றம்தான்...

Edited by தயா

ஈழ விடுதலை இலட்சியத்தை அடைய போடப்பட்ட நெடுஞ்சாலைக்கு கூட நாம் இன்னும் செல்லவில்லை. நெடுஞ்சாலையை அடையும் குறுக்கு றோட்டில் நின்று கொண்டுதான் கும்மாளம் அடிக்கிறோம். நெடுஞ்சாலையை அடைவது எப்போது? இலட்சியத்தை அடைவது எப்போது?.....

  • கருத்துக்கள உறவுகள்

வருகிறவர்கள் நிஜமாகவே இயக்கத்துக்கு வேலை செய்பவர்களா என்று மட்டும் உறுதிப்படித்துக் கொண்டால் போதுமானது. சொகுசுக் காரை லோன் போட்டு வாங்கிப் போடலாம், ஆனால் ஒரு மனிதன் தனது நேரத்தை செலவழித்து பலரிடம் கிடைக்கும் அவ மரியாதைகளையும் தாங்கிக் கொண்டு, சாதாரணமாய் வீதியில் வேறு அலுவலாய் போனாலும் கூட தன்னைக்கண்டு ஒளிப்பவர்களையும், ஒதுங்குபவர்களையும் கண்டும் காணாத மாதிரி கடந்து செல்வதும், தொடர்ந்தும் சேவை செய்வது மிகவும் அரிதான செயலாகும்! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

காசு சேர்ப்பவர்களில் 50 வீதமானோர் மட்டுமே உண்மையாய் தாயகத்தை நேசித்து காசு சேர்த்து அந்தக் காசை அப்படியே ஒரு சதமும் தாங்கள் எடுக்காமல் ஊருக்கு அனுப்புகிறார்கள்...ஒவ்வொரு இடத்திற்கு போவதற்கு முன் என்ன மாதிரிப் போக வேண்டும் என்டு வழி முறை இருக்கு...கோட்,சூட் போட்டுக் கொண்டு பி எம் டயூ காரில் போய் இறங்கினால் அவர்கள் உண்மையாகவே உழைத்த காசின வேண்டினதாய் இருந்தாலும் ஒருதரும் காசு கொடுக்க மாட்டார்கள்...அவர்களில் நம்பிக்கை வராது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டுக்கு வந்தவர் ஆடம்பரமாக எல்லாம் வரவில்லை..! :huh:

தனிநலமும் பொதுநலமும்

தனிநலம் -

- எனது பிள்ளை போராளியாக கூடாது ஆனால் விடுதலை வேண்டும்

- எனது வீடோ காணியோ விடுதலைக்கு பயன்பட கூடாது, ஆனால் விடுதலை வேண்டும்

- எனது உழைப்பு விடுதலைக்கு வலு சேர்க்க பயன்பட கூடாது, ஆனால் விடுதலை வேண்டும்

ஊர் வாழ்ந்தால் தான் நான் வாழலாம் என்பது வெள்ளிடைமலை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தயா

தங்களதும் அவரதும் விமர்சனத்தை ஏற்கின்றேன்

அவரது புத்தி சொல்லல் பாராட்டத்தக்கதுதான்.

வந்த எல்லோரும் ஒரே மாதிரியான போர்வையில் கதைத்தார்கள் என்பதைத்தவிர இதில் எனக்கு எந்த மனக்கஸ்டமுமில்லை.

பொதுச்சேவை செய்யும்போது அதற்கு ஏற்றாப்போல் மாறணும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இங்கு சுவி எழுதியதுபோல்

அவரை வேறு ஒரு இடத்தில் இந்த காரில் கண்டால்

அந்த பெரியவரின் பார்வையோ அந்த அம்மாவின் பார்வையோ எப்படி இருக்கும் என்றும் சிந்திக்கவேண்டும்

அவரவர் வேலைகள் செய்து கொண்டு

அவரவருக்கு கிடைத்த சில மணித்துளிகளை எமக்காக செலவளித்தார்கள். அவர்களிடம் இப்படிவா அப்படி வா என்றால்.....???

அவர்களது நேரத்தையும்

அவர்களால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்ற பற்றையும் நாம் புறக்கணிப்போமாயின் வெளியில் எந்த வேலையும் நடந்திருக்காது. சம்பளம் வாங்கி வேலை செய்தவர்கள் பற்றி எமது கருத்துக்கள் தெரிந்தவை தானே.

அத்துடன் நானும் தம்பியும் நல்ல வேலையில் இருந்தோம்

இருவரும் ஒரு வீட்டில் இருந்ததனாலும் காரைப்பற்றி எதுவும் தெரியாதனாலும் ஒரு புதுக்கார் வாங்கினோம்

அந்த காரைத்தான் பாரிசிலிருந்து தூர இடங்களுக்கான பங்களிப்பை பெற பாவித்தார்கள். ஒரு நாலு வருடத்தில் அது இந்த தேவைக்கு மட்டும் 2 லட்சம் கிலோமீற்றர்கள் ஓடிவிட்டது. பிரான்சின் மூலை முடுக்கெல்லாம் அந்த கார் அறியும். சில இடங்களுக்கு போய்விட்டு வந்து கார் விட்ட இடத்தில் இருந்தால் சந்தோசப்படுவோம். ஏனெனில் அப்படியான இடங்கள். யாரும்; வந்து திறப்பைத்தா என்றால் கொடுக்கவேண்டிய இடங்கள் அவை. அந்த இடங்களில் எனது கார் பறி போயிருந்தால்...... ???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காசு சேர்ப்பவர்களில் 50 வீதமானோர் மட்டுமே உண்மையாய் தாயகத்தை நேசித்து காசு சேர்த்து அந்தக் காசை அப்படியே ஒரு சதமும் தாங்கள் எடுக்காமல் ஊருக்கு அனுப்புகிறார்கள்...ஒவ்வொரு இடத்திற்கு போவதற்கு முன் என்ன மாதிரிப் போக வேண்டும் என்டு வழி முறை இருக்கு...கோட்,சூட் போட்டுக் கொண்டு பி எம் டயூ காரில் போய் இறங்கினால் அவர்கள் உண்மையாகவே உழைத்த காசின வேண்டினதாய் இருந்தாலும் ஒருதரும் காசு கொடுக்க மாட்டார்கள்...அவர்களில் நம்பிக்கை வராது.

இது காசு குடுக்க விரும்பாமல் எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொள்ற போலிக் காரணமேயொழிய வேறொண்டுமில்லை. காரைப் பார்த்து ஆக்களை எடை போடுகிற எங்கட ஆட்கள் நிச்சயம் தங்கட வீட்டுக்கு வெளியால என்ன நடக்குது எண்டு தெரியாத கிணற்றுத் தவளைகளாகத் தான் இருப்பீனம். இந்தக் காலத்தில ஒரு வேலையும் ஒரு மாத வருமானமும் இருந்தால் BMW என்ன, புகட்டி, அல்பா ரோமியோ எண்டு மில்லியன் பவுண்ஸ் காரையும் அவுட்டுக் கொண்டு வரலாம். அது தான் இப்ப வாகனச் சந்தை நிலமை. கோட்டுச் சூட்டு? நான் சின்ன் வயசில நினைக்கிறது வெளிநாட்டில எல்லாரும் கோட்டுப் போட்டிருக்கிறாங்கள், எல்லாரும் பணக்காரன்களாக்கும் எண்டு. இங்க வந்தாப் பிறகு தான் தெரியுது குளிருக்கு சில நேரம் தெருவில நிக்கிறவனும் கோட்டுச் சூட்டுத் தான் போட வேண்டியிருக்குது. போராட்டத்துக்குக் காசு கேட்டு வாறவன் தான் பிச்சைக் காரனா வேடமிட்டு வர வேணுமெண்ட எதிர்பார்ப்பு ஊரில கிழிஞ்ச சேர்ட் போட்ட பிச்சைக்காரனுக்குத் தான் நாங்கள் அள்ளிக் குடுப்பம் எண்ட மனநிலையினுடைய தொடர்ச்சி போலத் தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் போராளிகள் ஒரு நேர சோத்துக்கு வளி இல்லாமல் அலைந்து திரிந்த போது தேடித்திரிந்து எங்கட சனம் சாப்பாடு குடுத்ததுகள்... அந்த காலத்து போராளிகளை நினைத்து பார்தீர்கள் எண்டால் புரியும்... கட்டின வேலி ஏறி பாயும் போது கிளிஞ்ச சாறம், செருப்பு கூட இல்லாத கால்கள், மளித்து மாதங்கள் கடந்த தாடி ஒதுக்காத மீசை... இப்படித்தான் புலிகளை நீண்ட காலமாக மக்களுக்கு தெரியும்...

யார் பெத்த பிள்ளையோ எங்களுக்காக அலஞ்சு திரியுது... இதை அனேகமாக காது பட கேட்டு இருந்து இருப்பீர்கள்...

தயா பொதுவாக எங்களின் சமூகத்தில் இருக்கும் அடிப்படை மனோவியல் இதுதான். நேற்று நாங்கள் தாயகத்தில் கண்ட போராளிகள்மேல் வைத்திருந்த பற்றுக்கு அளவே கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த வாழ்க்கைச்சூழலிலும் அதையே எதிர்பார்க்கின்ற அடிப்படைக்குணம் நம் எல்லோரிடமும் ஆழமாகவே படிந்திருக்கிறது. புலத்துப்போராளிகள் என்ற வகைக்குள் அடங்கும் தொண்டர்கள்மீதும் சமூகம், தாயகத்தில் தாம் பார்த்த போராளிகளின் சாயலை எதிர்பார்க்கிறது. அவ்வெதிர்பார்ப்பை புலத்துப் போராளிகளால் திருப்திப்படுத்தமுடியாத ஓர் சூழல் இங்கு இருக்கிறது.

  • தொடங்கியவர்

சகரா அக்கா / விசுகு அண்ணை...

நீங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு இருப்பீர்கள் , தன்னலம் இல்லாமல் எவ்வளவு பாடு பட்டு இருப்பீர்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு... ( சகரா அக்கா என்னுடன் தனிப்பட பேசியவர் அவர் என்ன செய்கிறார் என்பது தெளிவு / விசுகு அண்ணைய நேரடியாக பார்த்து இருக்கிறேன்... வேறு ஒருவர் மூலமாகவும் எனக்கு அவரை பற்றி தெரியும்... ) நீங்கள் செய்தவைகள் பட்ட கஸ்ரங்களுக்காக தனிப்பட எந்த நன்மையையும் நீங்கள் பெற்று இருக்கவில்லை...

சரி உங்களிடன் நான் கேக்க விரும்புவது இதுதான் .... எப்போதாவது சிந்திச்சு பார்த்து இருக்கிறீர்களா நீங்கள் எதுக்காக இப்படி கஸ்ரப்பட வேண்டும், யாருக்காக கஸ்ரப்படுகிறீர்கள் எண்று.... ??? இனிவரும் காலத்திலையும் நீங்கள் செய்ய தான் போகிறீர்கள்... அப்படி நீங்கள் கஸ்ரப்படுவதாக இருந்தால் காரணம் என்ன...??

எனக்கு புரிந்த காரணம் இந்த மக்களுக்காக , அவர்களின் நல்வாழ்வுக்காக என்பதே.... பிழையாக இருக்காது எண்று நம்புகிறேன்... வேறு காரணமாக இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்...

எங்கட மக்களை எப்போதும் எங்களுக்காக மாற்றுவது கடினமானது, அவர்கள் மாறவும் மாட்டார்கள்.... ஆனால் அவர்களுக்காக நாங்கள் மாற முடியும்....! இல்லையா....?? மாற்றம் ஒண்று தானே எப்பவும் மாறாதது ...

அரச துறைகளின் சேவைகளில் பாருங்கோ... தபால், காவல், மற்றும் படை, களிலையும் பாடசாலைகளுக்கும் சீருடை தரிக்க வேண்டும் எண்டு சட்டம் வைத்து இருக்கிறார்கள், நகைகள் அணியக்கூடாது எண்றும் சட்டம் உண்டு .... காரணம் அவர்களுக்குள் ஏற்ற இறக்க காட்ட படவோ பேணப்படவோ கூடாது என்பதுக்காக....

நீங்கள் பங்கு பற்றியதும் சேவைதான் ...

எனது கருத்து வெறும் மாற்று கருத்து மட்டும் தான் ... உங்களை எதுவகையிலும் காயப்படுத்துவது அல்ல நோக்கம் ... ஆற்றும் சேவையை எப்போதும் மதிக்கிறேன்...

( மக்கள் மீதும் சமூகம் மீது உங்களை போல எனக்கும் கோபம் எல்லாம் இருக்கு...)

Edited by தயா

சமூகத்தைவிட இத்தொண்டர்களை இழிவாக நடத்துபவர்களில் சக செயற்பாட்டாளர்களே அதிகம். வீடு வீடாகச் சென்று பணம் சேர்க்கும் தொண்டர்களை இவர்கள் நடத்தும் விதம் இருக்கிறதே. மிகவும் கேவலம். அதுவும் குறிப்பாக, சமாதான காலத்தின் பின் கேட்கவே வேண்டாம். ஏதோ அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்றும், இவர்கள் அடிமைகள் போன்றும் சிலர் நடநது கொள்வார்கள். வேடிக்கை என்னவென்றால், அத்தொண்டர்கள் நீண்டகாலமாகவே தொண்டர்களாக இருந்தவர்கள். இவர்களோ கடைசிநேரத்தில் வடம் பிடிக்க வந்தவர்களாக இருந்தார்கள்.

90களின் ஆரம்பத்திலிருந்தே நான் இக்கடமையைச் செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு பெரிய சண்டை நடக்கும்போதும், கிறிஸ்மஸ் விடுமுறையின்போதும் செய்வதுண்டு. அப்போதெல்லாம் எங்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகை அறியாதவர்கள் வீடுகளில்தான் கழியும். கடுங்குளிரையும் கால் புதையும் பனியையும் பாராது நாம் பட்ட கஸ்டங்கள் கொஞ்சமா? அதுவும் 90களில் தொண்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருப்பவர்களை வைத்துக் கொண்டு காலை முதல் இரவு வரை பணி தொடரும். நாம் எமது வீட்டிற்குத் திரும்ப 12 மணியாகும். அடுத்தநாள் மீண்டும் 9 மணிக்கு அங்கிருப்போம். நான் கிறிஸ்மஸ் விடுமுறையை வீட்டில் கழித்த ஆண்டுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நான் செய்தது வருடத்திற்கு இருமுறைதான். ஆனால், எத்தனையோ பேர் இதனை நாளாந்தம் செய்து வந்திருக்கிறார்கள். அவ்வாறானவர்களில் எத்தனையோ தொண்டர்கள், பத்திரிகையை பாத்ரூமில் இருந்துதான் படிப்பார்கள். அத்தனை உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டிருக்கிறார்கள். ஊர்வலம் தொடக்கம் ஒரு நிகழ்வைச் செய்து முடிப்பது வரை வியர்வை சிந்தி உழைப்பவர்கள் அவர்களே. ஆனால் பலனை அனுபவித்தவர்களோ சொகுசாக இருந்தவர்கள்தான். எனது வேதனை என்னவெனில், சமாதான காலத்திற்குப் பின்னர் வடம் பிடிக்க வந்தவர்களுக்குக் கொடுத்த மரியாதையைக்கூட இத்தொண்டர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

இது காசு குடுக்க விரும்பாமல் எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொள்ற போலிக் காரணமேயொழிய வேறொண்டுமில்லை. காரைப் பார்த்து ஆக்களை எடை போடுகிற எங்கட ஆட்கள் நிச்சயம் தங்கட வீட்டுக்கு வெளியால என்ன நடக்குது எண்டு தெரியாத கிணற்றுத் தவளைகளாகத் தான் இருப்பீனம். இந்தக் காலத்தில ஒரு வேலையும் ஒரு மாத வருமானமும் இருந்தால் BMW என்ன, புகட்டி, அல்பா ரோமியோ எண்டு மில்லியன் பவுண்ஸ் காரையும் அவுட்டுக் கொண்டு வரலாம். அது தான் இப்ப வாகனச் சந்தை நிலமை. கோட்டுச் சூட்டு? நான் சின்ன் வயசில நினைக்கிறது வெளிநாட்டில எல்லாரும் கோட்டுப் போட்டிருக்கிறாங்கள், எல்லாரும் பணக்காரன்களாக்கும் எண்டு. இங்க வந்தாப் பிறகு தான் தெரியுது குளிருக்கு சில நேரம் தெருவில நிக்கிறவனும் கோட்டுச் சூட்டுத் தான் போட வேண்டியிருக்குது. போராட்டத்துக்குக் காசு கேட்டு வாறவன் தான் பிச்சைக் காரனா வேடமிட்டு வர வேணுமெண்ட எதிர்பார்ப்பு ஊரில கிழிஞ்ச சேர்ட் போட்ட பிச்சைக்காரனுக்குத் தான் நாங்கள் அள்ளிக் குடுப்பம் எண்ட மனநிலையினுடைய தொடர்ச்சி போலத் தான் தெரியுது.

ஜஸ்டின் நீங்கள் fact ஜ அடிப்படையாய் வைத்துக் கதைக்கிறீர்கள் அதாவது புலிக்கு என்டு யாராவது காசு கேட்டால் யார் காசு கேட்கிறார்கள் என்டு இல்லை மூச்சு,பேச்சி இல்லாமல் காசு கொடுக்க வேண்டும் என்பது உங்கள் கருத்து ஆனால் நான் எழுதியது மக்களது கருத்து.கோயில்களிலோ,பொது இடங்களிலோ மக்கள் இது பற்றி என்ன கதைக்கிறார்கள் என்பதை பற்றியே நான் எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சகரா அக்கா / விசுகு அண்ணை...

நீங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு இருப்பீர்கள் , தன்னலம் இல்லாமல் எவ்வளவு பாடு பட்டு இருப்பீர்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு... ( சகரா அக்கா என்னுடன் தனிப்பட பேசியவர் அவர் என்ன செய்கிறார் என்பது தெளிவு / விசுகு அண்ணைய நேரடியாக பார்த்து இருக்கிறேன்... வேறு ஒருவர் மூலமாகவும் எனக்கு அவரை பற்றி தெரியும்... ) நீங்கள் செய்தவைகள் பட்ட கஸ்ரங்களுக்காக தனிப்பட எந்த நன்மையையும் நீங்கள் பெற்று இருக்கவில்லை...

சரி உங்களிடன் நான் கேக்க விரும்புவது இதுதான் .... எப்போதாவது சிந்திச்சு பார்த்து இருக்கிறீர்களா நீங்கள் எதுக்காக இப்படி கஸ்ரப்பட வேண்டும், யாருக்காக கஸ்ரப்படுகிறீர்கள் எண்று.... ??? இனிவரும் காலத்திலையும் நீங்கள் செய்ய தான் போகிறீர்கள்... அப்படி நீங்கள் கஸ்ரப்படுவதாக இருந்தால் காரணம் என்ன...??

எனக்கு புரிந்த காரணம் இந்த மக்களுக்காக , அவர்களின் நல்வாழ்வுக்காக என்பதே.... பிழையாக இருக்காது எண்று நம்புகிறேன்... வேறு காரணமாக இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்...

எங்கட மக்களை எப்போதும் எங்களுக்காக மாற்றுவது கடினமானது, அவர்கள் மாறவும் மாட்டார்கள்.... ஆனால் அவர்களுக்காக நாங்கள் மாற முடியும்....! இல்லையா....?? மாற்றம் ஒண்று தானே எப்பவும் மாறாதது ...

அரச துறைகளின் சேவைகளில் பாருங்கோ... தபால், காவல், மற்றும் படை, களிலையும் பாடசாலைகளுக்கும் சீருடை தரிக்க வேண்டும் எண்டு சட்டம் வைத்து இருக்கிறார்கள், நகைகள் அணியக்கூடாது எண்றும் சட்டம் உண்டு .... காரணம் அவர்களுக்குள் ஏற்ற இறக்க காட்ட படவோ பேணப்படவோ கூடாது என்பதுக்காக....

நீங்கள் பங்கு பற்றியதும் சேவைதான் ...

எனது கருத்து வெறும் மாற்று கருத்து மட்டும் தான் ... உங்களை எதுவகையிலும் காயப்படுத்துவது அல்ல நோக்கம் ... ஆற்றும் சேவையை எப்போதும் மதிக்கிறேன்...

( மக்கள் மீதும் சமூகம் மீது உங்களை போல எனக்கும் கோபம் எல்லாம் இருக்கு...)

நன்றி தயா

எனக்கும் இதற்கு மாற்றுக்கருத்து இல்லை

பட்டவேதனைகள்

அலைச்சல்கள்

காசு, வயது இழப்புக்கள்

அத்துடன்

தோல்வி

இழப்பு

வஞ்சிக்கப்பட்டமை

காட்டிக்கொடுக்கப்பட்டமை...........

அத்துடன்மீண்டும் நாம் வந்துநிற்கும் இடம்.............................................

போன்றவற்றால் சிறிய குட்டுதலும் பெரிதாக வலிக்கிறது.

எந்த விதத்திலும் எம்மக்கள் மேலிருந்த பாசம் குறையவில்லை. அது அதிகரித்தே செல்கிறது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் நீங்கள் fact ஜ அடிப்படையாய் வைத்துக் கதைக்கிறீர்கள் அதாவது புலிக்கு என்டு யாராவது காசு கேட்டால் யார் காசு கேட்கிறார்கள் என்டு இல்லை மூச்சு,பேச்சி இல்லாமல் காசு கொடுக்க வேண்டும் என்பது உங்கள் கருத்து ஆனால் நான் எழுதியது மக்களது கருத்து.கோயில்களிலோ,பொது இடங்களிலோ மக்கள் இது பற்றி என்ன கதைக்கிறார்கள் என்பதை பற்றியே நான் எழுதியுள்ளேன்.

புலி கேட்டால் உடன குடுங்கோ என்று எழுதினதாக எனக்கு ஞாபகம் இல்லை. கருத்து மயக்கம் இருந்தால் மன்னிக்கவும். ஆனால் நான் குறிப்பிட்டது நீங்கள் சொன்ன அதே விடயத்தைத் தான்: fact தெரியாமல் கிணற்றுத் தவளை மாதிரி இருந்து கொண்டு பொது இடங்களிலும் கோயிலிலும் மக்கள் கதைப்பதை வைத்துக் கொண்டு நீங்கள் "50% வீதம் பிழை" என்று quantitative ஆக கதைப்பதை "heresay" என்பார்கள். இதை வைத்துக் கொண்டு எந்தத் திசையிலும் முன்னேற இயலாது. பொது இடங்களில் கதைத்துக் கொண்டே இருக்க மட்டும் தான் முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் நானும் யாழில வந்து மற்றவர்கள் மாதிரி காசு கொடுக்கிறனான் அதே மாதிரி எல்லோரும் கொடுப்பார்கள் என எழுதிப் போட்டுப் போகலாம்...2008 மாவீரர் தினத்திற்கு முதல் லண்டனில் சேர்த்த காசு எத்தனையோ மில்லியன் என அறிவித்தார்கள் ஆனால் அந்தக் காசு கொடுத்தவர்கள் லண்டனில் மொத்த சனத் தொகையில் 50% ஆகும்...மிச்ச 50% சனமும் காசைக் கொடுத்தால் என்னும் எவ்வளவோ காசு கூடும் ஆனால் நீங்கள் எழுதிற மாதிரி கொடுக்க விரும்புவர்கள் கொடுப்பார்கள் விருப்பம் இல்லாதவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்டு இல்லை.அவர்களுக்கு கொடுக்க விருப்பம் இருந்தாலும் எப்படி கொடுப்பது எனத் தெரியாது இருக்கும்,முதலில் யாரிடமாவது காசு கொடுத்து ஏமாந்து இருக்கலாம்,காசு சேர்க்க வருபவர்களிடம் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம் அதனால் தான் எழுதினேன் காசு சேர்க்க செல்பவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி செல்ல வேண்டும்...அந்த மக்கள் அப்படிக் கதைப்பதற்கு என்ன காரணம் என கண்டறிந்து அதுக்கேற்ப செயற்படோனுமே தவிர[அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டுமே] அவர்களை ஒதுக்கி விட்டு ஒன்டுமே சாதிக்க இயலாது...அவர்களது கருத்து தான் என்ட இறுதியான தீர்மானம் என நான் சொல்லவில்லை.

கதையில் வந்தது போல் எவரும் காசு சேர்க்க வருவதில்லை.

இந்த காசடி விசயம் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை,தெரிந்தாலும் நாம் எமது கடமையை செய்வோம் என இருந்துவிடுவார்கள்.

இங்கு ஒரு கோவில் அர்சகர் மேல் பலருக்கு கோவம்.அவர் உண்மையில் மிக லச்சரி வாழ்க்கை தான் வாழுகின்றார்கள்.அவரிடம் காசு கொண்டுபோய் கொட்டும் முதியவர்களிடம் இதை சொன்னால் நாங்கள் கடவுளுக்கு தான் கொடுக்கின்றோம் அதை அர்சகர் எடுத்தால் கடவுள் அதை பார்த்துக்கொள்ளுவார் என்பார்கள் .அதே நிலை தான் இங்கும்.

எல்லோரும் கள்வர்களென்றும் இல்லை.ஒருத்தரும் காசடிக்கவில்லையென்றும் இல்லை.இதற்காக இயக்கத்திற்கு வந்தவர்களே இருக்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் கூட எமது இந்தப்போராடத்தால் தமது வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர்.

புலிகளுக்காக வேலைசெய்திருந்தால் அவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்போலவும் மற்றவர்கள் ஏதோ பாவப்பட ஆத்மாக்கள் போலவும் சிலர் நினைக்கினம்.அது அவரவர் சுதந்திரம்.

இரத்தினசபாபதியை எத்தனை பேருக்கு தெரியும்.80 களில் இயக்கம் என்றால் லண்டனில் தெரிந்த ஒரே பெயர் இரத்தினசபாபதிதான்.சொந்த வாழ்க்கையை தொலைத்து நாடு நாடு என அலைந்து தனக்கென எதுவும் சேர்க்காமல் மறைந்துவிட்டார்.

விலாசம் காட்டுபவனை தான் இந்த உலகம் தூக்கிப்பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தினசபாபதியை எனக்கு தெரியும்

பிடிக்கும்

அவர் மறைந்தும் அவரை நான் மதிக்கின்றேன் என்றால் அது அவர் எமக்காக செய்தவையை வைத்தே....

நன்றி அவரை ஞாபகப்படுததியமைக்கு....

  • 2 years later...

இரட்ணசபாபதியை பற்றி ஈரோஸ் இயக்க போராளி கூறியது,(தங்கச்சி மடம்,தமிழ்நாடு) நாங்கள் இங்கை சாப்பிட காசு இல்லாமல் இருக்கிறம்.இவர் எங்களுக்கு வகுப்பு எடுக்க விஸ்கியும் சிகரட்டும் கேட்குது. :(

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தயா சொல்வது போல சிலர் தங்களின் நடவடிக்கைகளினை மாற்றினால் எல்லோருக்கும் நன்மை என்பது உண்மைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.