Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யலாம்

Featured Replies

எல்லாவற்றையும் வித்த்தியாசமாக பார்கின்றேன் என்று நிரூபிக்க முயல்வது போல் இருக்கு

தணிகாசலம் இவற்றை ஒரு காலியான புரோகருக்கு சொல்லி இருந்தால் சரி,... யுத்தத்தால் அனைத்தையும் இழந்தவருக்கு உதவும் அமைப்பினை சேர்ந்தவரிடம் கேட்பது தான் தவறு... நீங்கள் சொல்வது போல், யாராவது ஒரு பெண் இதற்கு சரி எனலாம்...அது அவரின் இயலாமையில் இருந்து வெளி வர முயலும் முயற்சியாகத் தான் இருக்குமே ஒழிய, அவரின் ஆசைகளை அங்கீகரித்த ஒரு செயலாக இருக்காது

I'm with you...

போரின் கோரவடுவால் பாதிக்க பட்ட ஒரு பெண்ணை அதைக்காரணம் காட்டி தனது சபலத்துக்கும் இச்சைக்கும் பயன் படுத்த நினைப்பது கடைந்தெடுத்த கயமை... அப்பு ஒரு 45 அல்லது 50 வயது ஆச்சியை கேட்டு இருந்தால் அது அவருக்கான உதவிக்கு எண்று எடுக்கலாம் ஆனால் இது... ?? வெளிப்படையான இச்சைக்கான தேடல்...

நாளைக்கு அந்த பெண் நடை பிணம் தான்... அப்புவாலை இன்னும் ஒரு 5 வருசமோ 10 வருசமோ தான் எதையும் தானாக செய்ய முடியும்... (பாலியல் பிரச்சினைகளை இதுக்குள் நான் அடக்கவில்லை) அதன் பிறகு அந்த பெண் அப்புவின் வேலைக்காறி... அப்பு வெளி நாட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்து அந்த பெண்ணை வேலைக்கு அனுப்பி போட்டு வீட்டை இருந்தாலும் ஆச்சரியப்பட ஒண்டும் இல்லை...

அவர் தன் தேவைக்கு கதவு தட்ட வேண்டிய இடம் வேறு என்பது தான் எனது முடிவு... அதுக்கு மேலையும் சேட்டை விட்டார் எண்டால் ஆளை கூப்பிட்டு வேண்டாம் வேண்டாம் எண்ட நல்லா இனிப்பு சாப்பாட்டை சாப்பிட குடுத்து அனுப்பி விடுகிறதுதான் நல்லது....

அது முடிய இல்லை எண்டால் அந்த பெண் பிள்ளையை பிடிச்சு ஒரு பாழும் கிணத்துக்கை தள்ளி விடுங்கோ புண்ணியமாக போகும்...

Edited by தயா

  • Replies 187
  • Views 14.5k
  • Created
  • Last Reply

தணி, இளம்பெண்ணை துணையாக விரும்புவதோ அல்லது முதிய பெண்ணை துணையாக விரும்புவதோ அவரது தனிப்பட்ட விடயம். அதில் யாரும் தலையிடப்போவதில்லை. ஆனால் இவர் ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஆதரவு கேட்டு நிற்கும் நலிந்தவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக பாவிக்க பார்க்கிறார்.

இலங்கையிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அநாதை சிறுவர்களையும் விதவைகளையும் பலர் தங்கள் வக்கிர ஆசைகளுக்கு பாவிக்கிறார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை. அவர்களது பலவீனத்தை பாவித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள்.

இவற்றை எப்படி ஏற்றுக்கொள்வது? ஊரில் இப்படியான சம்பவங்கள் நடப்பதை அறிந்தேன். சகிக்க முடியவில்லை.

மற்றும்படி இதற்கு 'பாக்கு வெட்டி' தான் தீர்வு என நான் எழுதியது பிழையானது என ஒப்புக்கொள்கிறேன்.

Edited by thappili

"நன்றாகத்தான் எனது கருத்துக்களை மேய்ந்து இருக்கின்றீர்கள். ஆனால், அதை நீங்கள் கூறிய context இனுள் வைத்து குறிப்பிட்ட எனது கருத்தை பார்த்தால் இப்படி எழுதமாட்டீர்கள். உங்களுக்கு morality, context இவை இரண்டும் பற்றி தெளிவில்லை என்பது இப்போது புரிகின்றது.

அந்த context இல், "நிர்வாணமாக கனடாவுக்கு ஓடிவந்தவர்கள், எமது மக்கள், கனடாவின் சட்ட விதிகளுக்கு அப்பால்", ஒரு morality யையும் ethic ஐயும் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்கள். கருத்தில் ஒத்துபோனேன்.

இந்த context இல், "தாயகத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்ட எம்மக்கள் மீது கருணை காட்ட கேட்கப்பட்ட இடத்தில்" அதே morality யையும் ethic ஐயும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றத்தை தந்து விட்டீர்கள்.

தமிழ் பெண்கள் வந்து பாருங்கோ கிள்ளுக்கீரைகள்... அதுவும் தாயகத்திலை இருக்கிறவை அதை விட கேவலம்... ஏதும் இல்லாமல் இருக்கு அனாதைகளுக்கு காசையும் பவிசையும் காட்டி விபச்சாரத்துக்கு கூப்பிடுகிறது கூட எங்கட ஆம்பிளையளுக்கு சரியானது தான்... அதோடை இதை ஒப்பிடும் போது எவ்வளவு நாகரீகமாக கல்யாணம் எனும் மாய மூடியை போட்டு கூப்பிடுகிறார்... இதை வரவேற்காமல் நீங்கள் வேறை வரை முறைகள் தார்மீகம் எல்லாம் கதைச்சு கொண்டு...

எனக்கு வாற கோவத்துக்கு உங்களுக்கு ஒரு பச்சை குத்தி இருக்க வேணும்... முடிஞ்சு போச்சுது... அதாலை நாளைக்கு குத்துறன்...

அந்த context இல், "நிர்வாணமாக கனடாவுக்கு ஓடிவந்தவர்கள், எமது மக்கள், கனடாவின் சட்ட விதிகளுக்கு அப்பால்", ஒரு morality யையும் ethic ஐயும் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்கள். கருத்தில் ஒத்துபோனேன். இந்த context இல், "தாயகத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்ட எம்மக்கள் மீது கருணை காட்ட கேட்கப்பட்ட இடத்தில்" அதே morality யையும் ethic ஐயும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றத்தை தந்து விட்டீர்கள்.

வானொலியில் பகிரங்கமாக பாலியல் துவேசத்தை வெளிப்படுத்துவதற்கும், தனிப்பட்ட ரீதியாக ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது உள்ளக்கிடக்கையை கூறுவதற்கும் பாரியவேறுபாடு உண்டு.

தமிழ் பெண்கள் வந்து பாருங்கோ கிள்ளுக்கீரைகள்... அதுவும் தாயகத்திலை இருக்கிறவை அதை விட கேவலம்...

அதேசமயம், வாழ்க்கை வெறுத்து ஊரிலேயே தற்கொலை செய்யக்கூடிய விதவைப்பெண்கள் பற்றியும் சிந்தித்து பார்க்கலாம். இவர் மூலம் இன்னமும் சில நாட்களில், அல்லது சில மாதங்களில், அல்லது சில வருடங்களில் தற்கொலை செய்யப்போகும் விதவைப்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்படக்கூடும், குறிப்பிட்ட பெண் பிரான்சிற்கு வந்து பல்லாண்டுகள் வசதிகள், வாய்ப்புக்களுடன் வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு வன்னி/வவுனியாப் பகுதியில் இருக்கும் ஒரு புரோக்கரை அணுகும்படி சொல்லிவிடுவதுதான் நல்லது.

தனிமையில் இருப்பவர் சபலத்துடனும் பெண்ணாசையுடனும்தான் இருக்கவேண்டியது என்றில்லை. அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஒருவர் தேவைப்படலாம். இல்லாவிட்டால் ஏன் தமிழ் ரேடியோக்களைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்.

பாக்குவெட்டி வேண்டும் என்பவர்கள் பாக்குவெட்டியை எடுத்துக் கொண்டு வன்னியில் நின்று எங்கள் தமிழ்பெண்களைத் தொந்தரவு செய்யும் சிங்கள இராணுவதினரினதை நறுக்க புறப்பட்டால் நல்லது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உந்த வயதில செக்ஸ்காகவா திருமணம் முடிக்க நினைக்கிறார் இல்லைத் தானே!வயது போன காலத்தில ஆதரவாய்ப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவையாயிருக்கிறது அவருக்கு அப் பெண் அவருடைய வயதை சேர்ந்த பெண்ணாயிருந்தால் அப் பெண்ணும் வயது போன பெண்ணாய்த் தான் இருப்பார் அதனாலே தான் இளம் பெண்ணைத் தெரிவு செய்தார் போல இருக்குது...ஆனாலும் 30 வயதுப் பெண் என்பது ரொம்ப,ரொம்ப ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

.

பாக்கு வெட்டியால்.... ஒரேயடியாக....."தணியின், மணியை.... வெட்டுவது எங்களது விருப்பமல்ல....."

சின்ன ஒரு ஒப்பரேஷன் தான்....

மூண்டு மணித்தியாலத்திலை... அவர் மூத்திரமும் பெய்யலாம்.

ஆனால்....., பூனைக்கு மணி கட்டுவது யார்?

.

  • கருத்துக்கள உறவுகள்

தணி அண்ணை நாட்டுக்கு தானே போகிறார்.தனக்கு பிடித்தமான ஒருவரை தேடிப்பிடித்து திருமணம் செய்ய செய்வது தான் அவருக்கு இலகுவானது.இதனை அவருக்கு சொல்ல வேண்டியது தானே.

அவரது 56 வயது தனிமை வாட்டலாம். அதற்கு ஒரு துணை தேவை. 30 வயதோ 18 வயதோ வருகின்ற பெண் முடிவு எடுப்பார்.

நாங்கள் இப்போ வன்முறையை விட்டு மென்முறையை தானே பின்பற்றுகிறோம். :lol::unsure:

பாக்குவெட்டி வேண்டும் என்பவர்கள் பாக்குவெட்டியை எடுத்துக் கொண்டு வன்னியில் நின்று எங்கள் தமிழ்பெண்களைத் தொந்தரவு செய்யும் சிங்கள இராணுவதினரினதை நறுக்க புறப்பட்டால் நல்லது :lol:

நம்மவர் மணியுடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை போலும். :unsure: அவன் மணியை அறுக்க புறப்பட்டு தமது மணிகளை காப்பாற்ற முடியாமல் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர் மணியுடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை போலும். :lol: அவன் மணியை அறுக்க புறப்பட்டு தமது மணிகளை காப்பாற்ற முடியாமல் போகின்றது.

ஒரு மணிக்குப் பின்....... இரண்டாவது, மணியும் அடிக்கும். இது உலக நியதி. :unsure:

பாக்குவெட்டி வேண்டும் என்பவர்கள் பாக்குவெட்டியை எடுத்துக் கொண்டு வன்னியில் நின்று எங்கள் தமிழ்பெண்களைத் தொந்தரவு செய்யும் சிங்கள இராணுவதினரினதை நறுக்க புறப்பட்டால் நல்லது :lol:

நறுக்கப் போகவேண்டியவர்கள் சிங்கள் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்த மாற்றுக்கருத்து மனிதாபிமான மாணிக்கங்களும் , புலி வெல்லும் மட்டும் விசிலடித்து கைதட்டி விட்டு மே 19 பின் திடீரென ஞானம் பெற்றவர்களுமே. :unsure:

எத்தனை பேர் சீதனம் வாங்காமல், சாதி, சமையம் பார்க்காமல் கணவனை இழந்த ஒரு கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வெளிநாடுகளிலிருந்து அல்லது ஊரிலிருந்து தன்னும் முன்வருவார்கள்? இங்க இருபவர்களுக்கு ஊரில போய் பில்ட்அப் குடுக்கத் தான் ஏலுமே தவிர உருப்படியான ஒரு காரியம் செய்ய தெரியுமா? மகனுக்கு வயது வந்ததும் பெற்றோர் கணக்குப்பார்க்கத் தொடங்கிடுவினம் சீதனத்துக்கு...

வயதுள்ளவர்கள் அப்படி இருக்கும் போது வயதானவர்களுக்குத் தான் இப்போதெல்லாம் இப்படியான யோசனைகளை தோன்றுகிறது. இதற்கு தனி ஒருவரை மட்டும் குறை சொல்லி பிரயோசனம் இல்லை. இன்றைக்குத் தணிகாசலம் மாதிரி நாளைக்கு இன்னும் பல பேர் வரலாம்...

இருப்பினும், எனது மனசாட்சிக்கு தணிகாசலத்தின் சிந்தனை சிறிதேனும் நியாயமானதாகப் படவில்லை. அவர் தனக்குத் தேடும் வயதை ஒத்த மணப்பெண்ணுக்கு அவரின் பிள்ளையின் வயது கூட இருக்கலாம். ஒரு வேளை அவரின் மகள் அந்த நிலைமையில் இருந்தால் தனது வயதை ஒத்த ஆணுக்கு மணம்முடித்துக் குடுக்க சம்மதிப்பாரா? (தெனாவட்டுப் போல...)

எனது சகோதரிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று தான் நினைப்பேன், அதற்காக தகப்பன் வயதை ஒத்த ஒருத்தனுக்குத் தாரை வார்த்து கொடுப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது!

கரும்பு, உண்மையில் கணவனை இழந்து கஷ்டப்படும் உங்கள் உடன்பிறப்புக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஒரு சிலரின்ர கருத்தை பார்த்தால், 30 வயதில தாரமிழந்த, பிள்ளை இல்லாதவருக்கு 56 வயதில கணவனை இழந்தவர் வாழ்க்கை குடுக்கலாம் போல... :lol:

ஒரு குழந்தை இல்லாத விதவைப் பெண் ஒருவேளை தணிகாசலத்தை மறுமணம் செய்ய முன்வந்தாலும், வக்கிரப் புத்தியில் இருக்கும் ஒருவரால் எப்படி நிதானமாக அந்தப் பெண் வாழ்க்கை வெறுக்காத வகையில் வாழமுடியும்?

அத்தோடு, அவரின் தனிப்பட்ட வாழ்க்கைத் தேவையை ஏன் பொதுசேவை மூலம் அடையப் பார்க்கிறார்?? இவரைப் பார்த்தே இன்னும் பலர் வெளிவருவார்கள்...

அதிகப் படியான கருத்துக்கள் மூலம் எதிர்ப்பை முன்வைத்து உள்ளார்கள், அதனால் மேஜரின் மைனர் குஞ்சை கட் பண்ணி தீர்ப்பு வழங்குவது தான் சரி என படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, மைனர் குஞ்சின் பாட்டை போடுங்க.......

அப்பதான்.... இந்தச் சனத்துக்கு புத்தி வரும்.

எனது சகோதரிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று தான் நினைப்பேன், அதற்காக தகப்பன் வயதை ஒத்த ஒருத்தனுக்குத் தாரை வார்த்து கொடுப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது! கரும்பு, உண்மையில் கணவனை இழந்து கஷ்டப்படும் உங்கள் உடன்பிறப்புக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு சிலரின்ர கருத்தை பார்த்தால், 30 வயதில தாரமிழந்த, பிள்ளை இல்லாதவருக்கு 56 வயதில கணவனை இழந்தவர் வாழ்க்கை குடுக்கலாம் போல... :lol:

யூகேயில் வாழும் நீங்கள் ஒரு பேச்சுக்கு உங்கள் 30வயது சகோதரி ஊரில் தாரமிழந்து வாழ்ந்தால் அவருக்கு பிரான்சில் உள்ள 56வயது நபர் ஒருவரை மணம் முடித்து கொடுப்பது பற்றி இங்கு கூறப்படவில்லை. வாழ்க்கை வெறுத்து, எதுவித பொருளாதார வசதிகளும் இன்றி, அநாதரவாக கைவிடப்பட்டு இன்றைக்கோ நாளைக்கோ தற்கொலை செய்யக்கூடிய ஆபத்தில் உள்ள ஓர் விதவைப்பெண் பற்றியும், தனியாளாக எதுவித உதவிகளும் இன்றி வசதிகள், வாய்ப்புக்கள் உள்ள பிரான்ஸ் நாட்டில் வாழும் ஓர் நபர் பற்றியும் சிந்திக்கின்றோம். இங்கு வயது என்பது ஓர் பகுதியே. வயது சம்பந்தப்படாத ஆயிரம் விடயங்கள் உள்ளன. அதைப்பற்றியும் சற்று சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நறுக்கப் போகவேண்டியவர்கள் சிங்கள் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்த மாற்றுக்கருத்து மனிதாபிமான மாணிக்கங்களும் , புலி வெல்லும் மட்டும் விசிலடித்து கைதட்டி விட்டு மே 19 பின் திடீரென ஞானம் பெற்றவர்களுமே. :unsure:

அவர்கள் நறுக்கப் போகமாட்டார்கள். நறுக்கப் போவார்கள். :lol:

நறுக்கப் போகவேண்டியவர்கள் சிங்கள் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்த மாற்றுக்கருத்து மனிதாபிமான மாணிக்கங்களும் , புலி வெல்லும் மட்டும் விசிலடித்து கைதட்டி விட்டு மே 19 பின் திடீரென ஞானம் பெற்றவர்களுமே. :unsure:

உதவி செய்வதாக கூட்டிச்சென்று ஓர் முப்பது வயது பெண்ணுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட எழுபது வயது மிகவும் பிரபலமான புலி ஆதரவாளர் ஒருவரை எனக்கு தனிப்பட தெரியும். அவருக்கும் பாக்குவெட்டி தூக்கலாமா? :lol:

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

யூகேயில் வாழும் நீங்கள் ஒரு பேச்சுக்கு உங்கள் 30வயது சகோதரி ஊரில் தாரமிழந்து வாழ்ந்தால் அவருக்கு பிரான்சில் உள்ள 56வயது நபர் ஒருவரை மணம் முடித்து கொடுப்பது பற்றி இங்கு கூறப்படவில்லை. வாழ்க்கை வெறுத்து, எதுவித பொருளாதார வசதிகளும் இன்றி, அநாதரவாக கைவிடப்பட்டு இன்றைக்கோ நாளைக்கோ தற்கொலை செய்யக்கூடிய ஆபத்தில் உள்ள ஓர் விதவைப்பெண் பற்றியும், தனியாளாக எதுவித உதவிகளும் இன்றி வசதிகள், வாய்ப்புக்கள் உள்ள பிரான்ஸ் நாட்டில் வாழும் ஓர் நபர் பற்றியும் சிந்திக்கின்றோம். இங்கு வயது என்பது ஓர் பகுதியே. வயது சம்பந்தப்படாத ஆயிரம் விடயங்கள் உள்ளன. அதைப்பற்றியும் சற்று சிந்தியுங்கள்.

இவ்வளவு தூரம் ஆராயும் தாங்கள்

56 வயதுக்கும் 30 வயதுக்கும் இடையில் வரப்போகும் செக்ஸ் சம்பந்தமான சிக்கல்கள் பற்றியும் அறிந்திருப்பீர்களே....?

அல்லது காசு இருந்தால் என்னவும் வாங்கலாம் என்கிறீர்கள்... சரி சரி...

கீழுள்ள படத்தில் காணப்படும் நபருக்கு தற்போது ஐம்பத்து ஆறு வயது.

Kamal-Hassan_2.jpg

கீழ் உள்ளவருக்கு தற்போது அறுபத்து ஒரு வயது.

Rajinikanth2.jpg

யூகேயில் வாழும் நீங்கள் ஒரு பேச்சுக்கு உங்கள் 30வயது சகோதரி ஊரில் தாரமிழந்து வாழ்ந்தால் அவருக்கு பிரான்சில் உள்ள 56வயது நபர் ஒருவரை மணம் முடித்து கொடுப்பது பற்றி இங்கு கூறப்படவில்லை. வாழ்க்கை வெறுத்து, எதுவித பொருளாதார வசதிகளும் இன்றி, அநாதரவாக கைவிடப்பட்டு இன்றைக்கோ நாளைக்கோ தற்கொலை செய்யக்கூடிய ஆபத்தில் உள்ள ஓர் விதவைப்பெண் பற்றியும், தனியாளாக எதுவித உதவிகளும் இன்றி வசதிகள், வாய்ப்புக்கள் உள்ள பிரான்ஸ் நாட்டில் வாழும் ஓர் நபர் பற்றியும் சிந்திக்கின்றோம். இங்கு வயது என்பது ஓர் பகுதியே. வயது சம்பந்தப்படாத ஆயிரம் விடயங்கள் உள்ளன. அதைப்பற்றியும் சற்று சிந்தியுங்கள்.

எந்த நிலையிலும் என்னால் நியாயப் படுத்த முடியாது. அப்படி ஒரு நிலைமை வருமாயின், அந்த வயதுக்கு ஏற்ற ஒருவரை தெரிந்தவர்கள் உறவினர்கள் மூலம் விசரிப்பேனே தவிர எனது தந்தையின் வயதுடையவருக்குத் தாரை வார்க்க மாட்டேன்! ஊரில் உள்ள தமிழ் பெண்களை கேவலமாக எண்ணும் சிந்தனையை நான் இன்னும் அடையவில்லை.

எப்ப தனது வசதியை ஒரு காரணமாக வைத்து பெண்களை அவமதிக்க வெளிக்கிடுகிறார்களோ அவர்கள் ஆண் என்ற வரையறையை இழந்து விடுகிறார்கள். நீங்கள் என்னதான் காரணம் சொன்னாலும் இது நியாயமானது இல்லை!

தாய்க்கும்-மகனுக்கும், தகப்பனுக்கும்-மகளுக்கும் என்ற உறவையே இது கொச்சைப் படுத்துகிறதாகவே தோன்றுகிறது!!!!

சரி ஒரு தனிப்பட்ட கேள்வி, குறை நினைக்கக் கூடாது... வெளிநாட்டில் உங்களுக்கு இருக்கும் வசதியை காரணமாக்கி, தணிகாசலத்தின் இடத்தில நீங்கள் இருந்தால், அதாவது உங்களுக்கு 56வயது இருக்கும் போது... இதே மாதிரி "வாழ்க்கை வெறுத்து, எதுவித பொருளாதார வசதிகளும் இன்றி, அநாதரவாக கைவிடப்பட்டு இன்றைக்கோ நாளைக்கோ தற்கொலை செய்யக்கூடிய ஆபத்தில் உள்ள ஓர் விதவைப்பெண் பற்றியும், தனியாளாக எதுவித உதவிகளும் இன்றி..." 30வயதைக் கொண்ட ஒரு பெண் இருந்தால் அந்தப் பெண்ணை கலியாணம் கட்டுவதற்கு நீங்கள் (நீங்களும் தாரமிழந்த, பிள்ளைகள் உள்ள நிலையில்...) இப்படியான செயலில் ஈடுபடுவீர்களா? அதை நியாயப் படுத்துவீர்களா?

Edited by குட்டி

உங்கள் வினாவை வேறுவகையில் தொடுத்தால்..

அதாவது,

ஊரில் நான் ஓர் முப்பது வயது விதவைப்பெண்ணாக இருந்து, எதுவித ஆதரவும் இன்றி மற்றவர்களினால் கைவிடப்பட்டு, அடுத்த நேரம் உணவிற்கு மாறடிக்கும் நிலை எனக்கு ஏற்பட்டு, எனக்கு வாழ்க்கை மிகவும் வெறுத்துபோயுள்ள நிலையில்.. பிரான்சில் வாழ்கின்ற இரண்டு பிள்ளைகள் உள்ள, தாரம் இழந்த ஆனால் நல்ல அன்புள்ள ஓர் ஐம்பத்து ஆறு வயது நபர் என்னை ஊரில் இருந்து பிரான்சிற்கு எடுத்து, நான் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து, எனக்கு பொருளாதார ஆதரவும் தருவாராக அமையின், அவரை மணம் முடிப்பதை சாதகமான வகையில் பரிசீலிப்பதற்கு நான் ஆயத்தமாக காணப்படுவேன்.

....

தணிகாசலம்...எனக்கு தம்பி இப்ப 56 வயது

...

நான்..ஓ அப்ப நீங்கள் தனிச்சு போனியள் உங்கடை கவலை விளங்குது அப்பிடியெண்டால் ஒரு சின்ன பிள்ளையொண்டை பொறுப்பெடுத்து வளவுங்கோவன் அதுக்கான வசதியை செய்து தரலாம்..

தணிகாசலம்..நான் ஒரு பிள்ளையை பொறுப்பெடுத்து வளக்கிறதெண்டிறது கஸ்ரம் தம்பி அதோடை நான் இந்தமாத கடைசி ஊருக்கு போறன் அங்கை ஆரும் பிள்ளையள் இல்லாத விதைவை இருந்தால் நான் பொறுப்பெடுத்து உதவிசெய்யலாமெண்டு பாக்கிறன். அப்பிடி யாரும் உங்கடை லிஸ்ரிலை இருந்தால் சொல்லுங்கோ. அதுவும் வயது ஒரு முப்பதுக்குள்ளையெண்டால் இன்னும் நல்லது......

....

அவருக்கு பிள்ளையள் பெறும் யோசனை அறவே இல்லை... ஏற்கெனவே 2 பிள்ளைகள் பெற்றவர் அதைப் பற்றி கவலை படபோவது இல்லை... ஆனால் அவருக்கு வாற பெண்ணும் பிள்ளை இல்லாமல் இருக்கவேணும்... அதாவது பச்சையாச் சொன்னால் படுத்து எழும்புறதுக்கு மட்டும் ஒரு இளம் பெண் அவருக்குத் தேவை... இதெல்லாம் ஒரு பிழைப்பா??

உங்கள் வினாவை வேறுவகையில் தொடுத்தால்..

அதாவது,

ஊரில் நான் ஓர் முப்பது வயது விதவைப்பெண்ணாக இருந்து, எதுவித ஆதரவும் இன்றி மற்றவர்களினால் கைவிடப்பட்டு, அடுத்த நேரம் உணவிற்கு மாறடிக்கும் நிலை எனக்கு ஏற்பட்டு, எனக்கு வாழ்க்கை மிகவும் வெறுத்துபோயுள்ள நிலையில்.. பிரான்சில் வாழ்கின்ற இரண்டு பிள்ளைகள் உள்ள, தாரம் இழந்த ஆனால் நல்ல அன்புள்ள ஓர் ஐம்பத்து ஆறு வயது நபர் என்னை ஊரில் இருந்து பிரான்சிற்கு எடுத்து, நான் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து, எனக்கு பொருளாதார ஆதரவும் தருவாராக அமையின், அவரை மணம் முடிப்பதை சாதகமான வகையில் பரிசீலிப்பதற்கு நான் ஆயத்தமாக காணப்படுவேன்.

வேறு வகையில் தொடுக்கவேண்டாம்... நேரடியாகவே பதில் தரமுடிந்தால் தாருங்கள்!

1. எனது மனைவி நான் ஐம்பத்து நான்கு வயது வரும்போது இறந்தால்.. அவள் உண்மையில் என்னில் அன்பை பகிர்ந்து எனது உள்ளத்தில் நிரந்தர இடத்தை பிடிக்காதவளாக காணப்படின்,

அத்துடன்

2. நன்றி கெட்ட எனது இரண்டு பிள்ளைகள் தாங்கள் மணம் முடித்தபின்னர் என்னை யாரோ மூன்றாம் மனிதனாக நினைத்து கைவிட்டு சென்றால்.. தமது அன்பை என்மீது செலுத்தாவிட்டால்,

அத்துடன்

3. பிரான்சில் வாழ்கின்ற என்னிடம் பொருளாதார பலமும், உடல் உள உறுதிகளும் காணப்பட்டால்

அத்துடன்

4. ஊரில் உள்ள ஓர் முப்பது வயது விதவைப்பெண் என்னில் அன்பு செலுத்தி, எனது வாழ்க்கைத் துணையாக இணைவதற்கு உளப்பூர்வமாக சம்மதித்தால்

அவளை திருமணம் செய்வதை சாதகமான வகையில் பரிசீலிப்பதற்கு ஆயத்தமாக நான் காணப்படுவேன்.

குட்டி, மைனர் குஞ்சின் பாட்டை போடுங்க.......

அப்பதான்.... இந்தச் சனத்துக்கு புத்தி வரும்.

சிறி அண்ண இந்தாங்கோ இதுவா நீங்கள் கேட்டது? விவேக்கை கண்ணாடியோட பார்த்தல் சாத்திரி அண்ணர் மாதிரி தான் இருக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.