Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்கள ஆண்களே நீதி கூறுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது அண்மையில் லண்டனில் நடந்த சம்பவம்.உங்களில் சில பேர் இதைக் கேள்விப்பட்டு இருக்க கூடும்.

லண்டனைச் சேர்ந்த தமிழ் பெற்றோர் அவர்களுக்கு ஒரு மகனும்,மகளும்.அவர்களுடன் அவர்களது தாத்தாவும் ஒரே வீட்டில் வசிக்கிறார்...அண்மையில் அந்த சிறுமி பதினொரு வயது தான் இருக்கும் பெரிய பிள்ளை ஆகி விட்டார்.பெற்றோர் அச் சிறுமியை அவரது தாத்தாவுடன் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.அந்த காமகன் 75 வயது கிழவன் அச் சிறுமியை தன் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி விட்டான்.இச் சிறுமி பயத்தில் இது பற்றி தனது பெற்றோருக்கு சொல்லவில்லை.

இந் நேரத்தில் நான்கு மாதங்களுக்குப் பின் அச் சிறுமிக்கு சாமர்த்திய வீடு செய்ய வெளிக்கிட அக் கிழவன் வெளிக்கிட்டு ஊருக்கு போய் விட்டது...சாமத்திய வீடன்று அச் சிறுமியை வெளிக்கிடுத்தி மண்டபத்திற்கு கூட்டி வரும் போது அச் சிறுமி மயங்கி விழுந்து உள்ளார்.பதறிப் போன பெற்றோர் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.அங்கே சென்ற பின் தான் தெரியும் தங்கள் மகள் 3 மாத கர்ப்பம் என்டு.அச் சிறுமியை யார் கற்பத்திற்கு காரணம் என வற்புறுத்திக் கேட்டும் சொல்லவில்லை[கிழவன் அந்தளவிற்கு பயமுறுத்தி வைத்து உள்ளான்.]பிறகு டீ என் ஏ சோதனை எடுத்து பரிசோதித்த பிறகு தெரிந்தது இந்தக் கிழவன் தான் காரணம் என்டு.இங்குள்ள காவல்துறையால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கிழவனை திருப்பி லண்டன் கொண்டு வந்து சிறையில் அடைத்து உள்ளனர்.3 மாதத்திற்கு மேலானதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என வைத்தியர்கள் சொல்லி விட்டார்களாம்.

ஆண்களே இதற்கு என்ன நீதியை நீங்கள் சொல்லப் போறீர்கள்?...அந்த சிறுமி தனது சொந்த தாத்தாவால் பலத்தகாரத்திற்கு உட்பட்டு அவனது வாரிசை சுமந்து கொண்டு நிற்கிறாள்.இந்த கிழவனுக்கும் இவனைப் போன்ற பாலியல் பலத்தகாரங்களில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

  • Replies 57
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள காவல்துறையால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கிழவனை திருப்பி லண்டன் கொண்டு வந்து சிறையில் அடைத்து உள்ளனர்.

நானெண்டால் உந்த கிழவனை இஞ்சை திருப்பி கூப்பிட விட்டிருக்கவேமாட்டன்.

அங்கை அவனை உயிரோடை வைச்சிருந்து அச்சுவேறை ஆணிவேறையாய் கொஞ்சம்கொஞ்சமாய் பிரிச்சு எடுத்திருப்பன் :D

அந்த சிறுமியை, அவள் மனத்தை நன்றாக பெற்றோர் , உறவினர் கவனிக்க வேண்டும். அவளை எமது சமுதாயம் ஏற்கவேண்டும். அவள் படித்து பெரியவளாகி அவளையும் அவள் பிள்ளையையும் ஒருவன் ஏற்று வாழ்வு கொடுக்க வேண்டும்.

அந்த கிழவனுக்கு, பிரித்தானிய சட்டப்படி தண்டனையை அனுபவிக்கவிடல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட நடவடிக்கைதான் சரி......பாக்கு வெட்டி சரிவராது.......காமம்......உறவு......முற்போக்காளர் யாரம் வந்து இது பற்றி அலசி ஆராயட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளின் அவலநிலையை நினைத்து வருந்துவதைத் தவிர வேறு என்ன வழி? :D

அதேசமயம் இந்தக் கிழவனை மாதிரியான மிருகங்களை ஆண் இனத்துக்குள் வகைப்படுத்தி எமக்கு இழிபெயரைக் கொண்டுவர வேண்டாம்..! :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கிழவனுக்கு, பிரித்தானிய சட்டப்படி தண்டனையை அனுபவிக்கவிடல் வேண்டும்.

கிழவனுக்கு ஏற்கனவே 75வயது....இதிலை பிரித்தானியா சிறை?

நேரகாலத்துக்கு சாப்பாடு

மருத்துவ வசதி

தொலைக்காட்சி வசதி...எண்டு இன்னும் வசதியாய் கிழவன் கடைசிக்காலத்தை ஓட்டப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக அந்தச் சிறிமியை, ஆசிய நாடு ஏதாவது ஒன்றில் வைத்து கருவை கலைப்பதே.... சிறுமியின் எதிர்காலத்துக்கு நல்லது.

கரு வளர்ந்து குழந்தை பிறந்தால்.... அந்தச் சிறுமி வாழ்க்கை முழுக்க... 75 வயது தாத்தாக் கிழவனையே.... யோசித்து, வாழ்க்கை மேலும் வீணாக சந்தர்ப்பம் அதிகம். இப்படிப் பட்ட கிழட்டுப் பயல்களை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு வைத்திருந்த சிறுமியின் பெற்றோர், அவருக்கு முதலிலேயே தனி வீடு எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும், அல்லது வயோதிபர் மடத்தில் சேர்த்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு 70 வயதில் ஒரு கிழவியை வாழ்க்கைத் துணையாக மணம் முடித்துக் கொடுத்திருக்க வேண்டும்.

நடந்து முடிந்த பின் இனி புலம்பி என்ன பலன். சிறுமியின் எதிர்காலம் தான்.... வீணாகிப் போய் விட்டது.

இதற்குத்தான்... பெற்றோர் வேலை, வேலை என்று அலையாமல்...

தங்களின் பிள்ளைகளுடன் நண்பர்களாகப் பழகி, கூடிய நேரத்தை ஒதுக்க வேண்டும்.

கிழவன் இப்போ... பிரிட்டிஷ் சிறையில் உள்ளதால்... அவர் பாதுகாப்பாக உள்ளார்.

அவருக்கு இனி நீங்கள் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச் சம்பவம் என்றால்:

ஊர் மாதிரி வெளியில் சென்று தன்னொத்த வயதினருடன் பொழுதுபோக்கமுடியாத தாத்தா, வீட்டில் நம்பிக்கையாகப் விட்டுச் சென்ற அறியாப் பருவப் பேத்தியை தன்னிச்சைக்குப் பலியாக்கியிருக்கின்றார். அதைப் பற்றி எதுவித குற்றவுணர்வும் இல்லாத மாதிரி ஊருக்கும் போயிருக்கின்றார் என்பதால், இவரை வெளியில் சகமனிதராக ஊரிலோ, அல்லது பிரித்தானியாவிலோ இருக்க அனுமதிக்கக் கூடாது. என்வே அவர் சிறையில் இருப்பதுதான் சரி. அத்துடன் அவர் வெளியில் வந்தால், அவரை மனநலம் குன்றியோருக்கான இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு அண்மையில் செல்ல அவரைச் சட்டம் அனுமதிக்காது.

சிறுமிக்கு கருக்கலைப்பு சாத்தியமில்லை என்றால், குழந்தை பிறந்த பின்னர், அக்குழந்தையைச் சிறுமி வளர்க்க விரும்பாத பட்சத்தில், குழந்தையில்லாமல் இருப்போருக்கு தத்துக் கொடுக்கலாம். இங்கு அரச சமூக சேவை நிறுவனங்கள், இத்தகைய விடயங்களைச் சரியாகக் கையாளும் என்றே நம்புகின்றேன்.

குறிப்பு: பிரித்தானிய நீதித்துறையும், சமூக சேவை அமைப்புக்களும் நீதியாக நடக்கும் என்பதால், யாழ்கள ஆண்களின் நீதி கூறி சமூகத் தண்டனை எதுவும் இந்த நாட்டில் கொடுக்கமுடியாது.

.

கதையில் நிறைய விஷயம் இடிக்குது !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானெண்டால் உந்த கிழவனை இஞ்சை திருப்பி கூப்பிட விட்டிருக்கவேமாட்டன்.

அங்கை அவனை உயிரோடை வைச்சிருந்து அச்சுவேறை ஆணிவேறையாய் கொஞ்சம்கொஞ்சமாய் பிரிச்சு எடுத்திருப்பன் :D

சரியாய் சொன்னீங்கள் அண்ணா நான் என்டால் ஆட்களை வைத்தாவது அவனை கண்ட துண்டமாய் வெட்டி இருப்பேன் முக்கியமாய் அவனது ஆண் உறுப்பை வெட்டி இருப்பேன்.

.

கதையில் நிறைய விஷயம் இடிக்குது !!

ஈசன் இது கதையல்ல உண்மையாய் நடந்த சம்மந்தம்...நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்டு எனக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது பெற்றோர்தான்.

தன் பிள்ளையை தான் பார்க்க வேண்டியதை விடுத்து மற்றவர்கள் நம்பி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாய் சொன்னீங்கள் அண்ணா நான் என்டால் ஆட்களை வைத்தாவது அவனை கண்ட துண்டமாய் வெட்டி இருப்பேன் முக்கியமாய் அவனது ஆண் உறுப்பை வெட்டி இருப்பேன்.

75 வயது கிழவனின் ஆண் உறுப்பை வெட்ட ஏன்... ஆட்கள் சேர்க்க வேணும்? wheelchair.gif

தனியவே வெட்டி எறியலாமே.....violent-smiley09.gif

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது பெற்றோர்தான்.

தன் பிள்ளையை தான் பார்க்க வேண்டியதை விடுத்து மற்றவர்கள் நம்பி விட்டது.

இதில் மற்றவர்கள் என்பவர்கள் அந்நியர் கிடையாதே. சொந்தக் குடும்பத்தினரின் மீது நம்பிக்கை வைத்துதானே விட்டுச் சென்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காமகன் 75 வயது கிழவன் அச் சிறுமியை தன் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி விட்டான்.இச் சிறுமி பயத்தில் இது பற்றி தனது பெற்றோருக்கு சொல்லவில்லை
.

பிரித்தானிய சட்டப்படி அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.இப்படி பல காமுகர்கள் அலைகிறார்கள்.மேற்படி சிறுமியின் வாழ்க்கையை அநியாயமாக்கியவருக்கு தூக்குத்தண்டனை வழங்கினாலும் தகும்.ஆண்குலத்துக்கே அவமானமானவர்.சிறுமியின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை.11 வயதில் பிள்ளையுடன்..... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் இது கதையல்ல உண்மையாய் நடந்த சம்மந்தம்...நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்டு எனக்குப் புரியவில்லை.

கிழவன் இல்லாமல் எப்படி டி என் ஏ சோதனை மூலம் அவர்தான் என்று உறுதிப்படுத்த முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

கிழவன் இல்லாமல் எப்படி டி என் ஏ சோதனை மூலம் அவர்தான் என்று உறுதிப்படுத்த முடியும்?

அதுதானே

நிலை இந்தளவுக்கு போன பிறகு நடந்தவற்றை சிறுமி சொல்லியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இதில் மற்றவர்கள் என்பவர்கள் அந்நியர் கிடையாதே. சொந்தக் குடும்பத்தினரின் மீது நம்பிக்கை வைத்துதானே விட்டுச் சென்றுள்ளனர்.

யாரைத்தான் நம்புவது?

உடனடியாக அந்தச் சிறிமியை, ஆசிய நாடு ஏதாவது ஒன்றில் வைத்து கருவை கலைப்பதே.... சிறுமியின் எதிர்காலத்துக்கு நல்லது.

கரு வளர்ந்து குழந்தை பிறந்தால்.... அந்தச் சிறுமி வாழ்க்கை முழுக்க... 75 வயது தாத்தாக் கிழவனையே.... யோசித்து, வாழ்க்கை மேலும் வீணாக சந்தர்ப்பம் அதிகம். இப்படிப் பட்ட கிழட்டுப் பயல்களை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு வைத்திருந்த சிறுமியின் பெற்றோர், அவருக்கு முதலிலேயே தனி வீடு எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும், அல்லது வயோதிபர் மடத்தில் சேர்த்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு 70 வயதில் ஒரு கிழவியை வாழ்க்கைத் துணையாக மணம் முடித்துக் கொடுத்திருக்க வேண்டும்..

அங்கேயும் இதே தான் பதிலாக அமையும் தமிழ்சிறி.

.

75 வயதில் இனவிருத்தி செய்யும் அளவிற்கு தாத்தா இருக்கவேண்டும். ரொம்ப‌ ரொம்ப‌ க‌ஸ்ட‌மான‌ விஷ‌ய‌ம்.

3 மாத கருவை DNA சோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமா ? தாத்தா ஓடிவேறு போய்விட்டார்.

சிறுமி 3 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் வரை தாய் கவனிக்காமல் இருந்திருப்பாளா ? (அதுவும் அப்போதுதான் பெரியவளான பிள்ளையை)

கூகிள் க‌ட‌வுளிடம் எப்ப‌டித் தேடினாலும் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை காட்டுகின்றாரில்லை.

யாழ்கள ஆண்களே நீதி கூறுங்கள்

இசைக்கலைஞன் ஒரு சிறிய மாற்றம்.

அதேசமயம் இந்தக் கிழவனை மாதிரியான மிருகங்களை ஆண் இனத்துக்குள் வகைப்படுத்தி யாழ்கள உறவுகளுக்கு இழிபெயரைக் கொண்டுவர வேண்டாம்.

இந்த சம்பவத்தை ஒரு தண்ணி பார்ட்டியில் ஜெர்மனியில் இருந்து வந்தவர் சொன்னார் ( ஊருக்கு கிழவன் போனது மட்டும் தான் சொன்னர் ) அப்போது நான் நினைத்தேன் குடித்துவீட்டு எங்கையோ நடந்த சம்பவத்தை கற்பனை பன்னி பேசுகிறார்கள் என்று ஆனால் யாழில் செய்தியாக பார்க்கும் போது திகைப்பாக இருக்கு ஆனால் ஊடகங்களில் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியை ஆரம்பித்த ரதி அவர்கட்கு

இந்த மாதிரி சம்பவங்கள் மனித இனத்துக்கே கேவலமானவை. அப்படியிருக்க ஆண்களை மட்டும் கூப்பிடுவது சரியல்ல.

ஊரில் நான்கேள்விப்பட்டுள்ளேன். வயது போனவர்களால்தான் பலசிற்றின்ப இம்சைகளும் சேட்டைகளும் ஆரம்பித்துவைக்கப்படுவதாக.

அப்புறம் ஈசன் சொல்வதுபோல் பல தவறுகள்இருந்தாலும் இதை நானும் கேள்விப்பட்டேன் என்ற முறையில் இந்த சம்பவம் உண்மை என்றே தோன்றுகிறது.

என்னைப்பொறுத்தவரை அவருக்கான தண்டனை ஆரம்பித்துவிட்டது

அவர் இனி எமது சமூகத்துடனான சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதை உணர்வார். அதுவே அவரைக்கொஞ்சம்கொஞ்சமாக கொன்றுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

75 வயதில் இனவிருத்தி செய்யும் அளவிற்கு தாத்தா இருக்கவேண்டும். ரொம்ப‌ ரொம்ப‌ க‌ஸ்ட‌மான‌ விஷ‌ய‌ம்.

3 மாத கருவை DNA சோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமா ? தாத்தா ஓடிவேறு போய்விட்டார்.

சிறுமி 3 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் வரை தாய் கவனிக்காமல் இருந்திருப்பாளா ? (அதுவும் அப்போதுதான் பெரியவளான பிள்ளையை)

கூகிள் க‌ட‌வுளிடம் எப்ப‌டித் தேடினாலும் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை காட்டுகின்றாரில்லை.

75 வயதிலும் அதற்கு மேலும் ஆண்களுக்கு இனப்பெருக்கம் செய்ய முடியும். பெரும்பாலானோர் செய்வதில்லை என்பதேயொழிய இனப் பெருக்க இயலுமை இல்லாமல் போவதில்லை.

மூன்று மாதக் கருவிலிருந்து டி.என்.ஏ என்றால் குழந்தையிலிருந்து டி.என்.ஏ என்று அர்த்தம் இல்லை. குழந்தையைச் சுற்றி இருக்கும் அம்னியோரிக் திரவத்திலிருந்து குழந்தையின் சில கலங்களை எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய இயலும். இதேமுறை மூலம் தான் குழந்தைக்கு பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது உள்ளனவா என்றும் சோதனை செய்வார்கள். தாத்தாவின் டி.என்.ஏ எப்படிப் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. அவர் மீது சந்தேகம் கொண்டதால் அவரது உள்ளாடைகளை டி,என்.ஏ மூலங்களாகப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மூன்று மாத கற்பம் கவனிக்காமல் விடப் பட வாய்ப்புகள் அதிகம். பன்னிரண்டே வாரங்கள், சிலருக்கு வாந்தி மயக்கம் எதுவும் வருவதில்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது பருவமடைந்த புதிதில் பொதுவாக காணப்படக் கூடிய ஒன்று தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஈசன் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களால் ஒரு பெண்னை கருத்தரிக்க வைக்க முடியாதா?

அந்த சிறுமியின் கரு 3 மாதம் என நினைக்கிறேன்...எனக்கு சரியாகத் தெரியாது என நண்பி தான் இச் சம்பவத்தை என்னிடம் சொன்னார்...1 மாதத்திற்குப் பிறகு டீஎன் ஏ எடுக்கலாம் என நினைக்கிறேன்...குற்றம் நடந்தால் முதலில் சொந்த,பந்தங்களை விசாரிப்பார்கள் அந்த வகையில் எல்லோரிடம் டீ என் ஏ எடுத்து பொருந்தாதலால் தாத்தா தான் என முடிவு செய்து இருப்பார்கள்...அப்படி தாத்தா செய்து இருக்கா விட்டால் அப் சிறுமியின் தந்தை தான் செய்து இருக்க வேண்டும்...நான் வைத்தியர் இல்லை ஆனால் ஒருவரின் டீஎன் ஏ சாம்பிளை வைத்து குறிப்பாக யார் என்டு கண்டு பிடிக்கலாம் என நினைக்கிறேன்...[தந்தையின் டி என் ஏ வைத்து அது அவரது மகனா,மகளா அல்லது தகப்பனா? என கண்டு பிடிக்கும் வசதியுள்ளது.]இதனை பற்றீ தெரிந்தவர்கள்[நெடுக்ஸ்]யாராவது எழுதவும்.

அந்த சிறுமி வாந்தி எடுத்திருந்தால்[கற்பத்திற்கு உரிய அறிகுறிகள் காணப்பட்டால்]அது கட்டாயம் பெற்றோருக்கு தெரிந்து இருக்க வேண்டும் முக்கியமாக தாயிக்கு...இது எனக்கு புரியாத புதிராக உள்ளது...பெற்றோர்கள் அவ்வளவு பிசியாக இருக்க வேண்டும் அல்லது அச் சிறுமி வாந்தி எடுப்பது தெரிந்தாலும் வித்தியாசமாக எடுக்காமல் விட்டு இருக்க வேண்டும்.ஆனால் நடந்த சம்பவம் மட்டும் உண்மை.

விசுகு அண்ணா சொன்ன மாதிரி இதுக்கு ஆண்கள் மாத்திரம் காரணம் இல்லை பெண்களூம் தான்...வேலை,வேலை என ஓடி குழந்தைகளை தனியே விட்டு செல்வதால் கூட இருக்கும் சொந்த,பந்தங்களே இந்த பாதகத்தை செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

75 வயதில் இனவிருத்தி செய்யும் அளவிற்கு தாத்தா இருக்கவேண்டும். ரொம்ப‌ ரொம்ப‌ க‌ஸ்ட‌மான‌ விஷ‌ய‌ம்.

3 மாத கருவை DNA சோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமா ? தாத்தா ஓடிவேறு போய்விட்டார்.

சிறுமி 3 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் வரை தாய் கவனிக்காமல் இருந்திருப்பாளா ? (அதுவும் அப்போதுதான் பெரியவளான பிள்ளையை)

கூகிள் க‌ட‌வுளிடம் எப்ப‌டித் தேடினாலும் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை காட்டுகின்றாரில்லை.

தாய் தகப்பனின் டி என் ஏ இலிருந்து பிள்ளைகளின் டி என் ஏ ஐ அறியலாம்..! ஆனால் மறுவளமாக முடியுமா என்று தெரியவில்லை. அதாவது இந்தக் கிழடின் மகளோ மகனோ.. அவர்களின் இரத்தத்திலிருந்து கிழடின் டி என் ஏ ஐ ஓரளவுக்கு உறுத்திப் படுத்தலாம் என நினைக்கிறேன் (Partial Profile). :D

அதுபோல வயதுக்கு வந்த பெண்கள் எல்லோருக்கும் முதல் ஒரு வருடத்துக்கு மாதவிடாய் ஒழுங்காக வராது என்று கேள்விப்பட்டிருக்கிறன்..! :D அதனால் பெற்ரோரும் கோட்டை விட்டார்களோ என்னவோ?! :D

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தகப்பனின் டி என் ஏ இலிருந்து பிள்ளைகளின் டி என் ஏ ஐ அறியலாம்..! ஆனால் மறுவளமாக முடியுமா என்று தெரியவில்லை. அதாவது இந்தக் கிழடின் மகளோ மகனோ.. அவர்களின் இரத்தத்திலிருந்து கிழடின் டி என் ஏ ஐ ஓரளவுக்கு உறுத்திப் படுத்தலாம் என நினைக்கிறேன் (Partial Profile). :D

இதெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையென்பதால் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். விடயம் மிகவும் எளிமையானது: காவல் துறைக்கு முறைப்பாடு போனதும் அவர்களின் முதல் கேள்வி குழந்தை யாருடன் தனியாக இருந்திருக்கிறது என்பதாகத் தான் இருந்திருக்கும். அந்தப் பட்டியலில் ஒரிரு பெயர்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். இதில் தாத்தா வேறு ஓடிப் போய் விட்டாரா, அதனால் அவர் விசேட கவனத்திற்குரிய (person of interest) நபராக கணிக்கப் பட்டிருப்பார். டி.என்.ஏ எடுக்க அந்த நபர் தேவையில்லை. அவரது உள்ளாடைகள், பற்தூரிகை, அவரது அறை போன்ற இடங்களில் கண்டெடுக்கக் கூடிய ஒரு தலைமுடி இவை போல பல சடப் பொருட்களில் இருந்து டி.என்.ஏ எடுத்திருக்க முடியும். பல சமயங்களில் சடப் பொருட்களில் இருந்து டி.என்.ஏ எடுப்பதையே விசாரணையாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், ஒரு நபரிடமிருந்து டி.என்.ஏ எடுக்க, அவர் குற்றவாளியாக இல்லாதவிடத்து, அவரது அனுமதி வேண்டும். அவர் அனுமதி தர மறுத்தால் (அனேகமான கிரிமினல்கள் அனுமதி தராமல் அப்பீல் அது இது என்று காலத்தை இழுத்தடிப்பார்கள்) நீதிமன்ற ஆணை மூலம் மட்டுமே ஒருவரிடமிருந்து டி.என்.ஏ எடுக்க முடியும். சடப் பொருட்களில் இருந்து டி.என்.ஏ எடுத்து ஒருவரைக் குற்றவாளியாக்குவது விசாரணையாளர்கள் அதிகமாகப் பாவிக்கும் குறுக்கு வழி.

  • கருத்துக்கள உறவுகள்

75 வயது தாத்தா, தனது பேத்தியை ஒரு முறையில் கர்ப்பமாக்கியிருப்பாரா என்பது சந்தேகமே....

பலமுறை இது நடந்திருந்தால் பெற்றோர் கடுமையான கண்டனத்துக்குரியவர்கள்.

மேலும்..... 18 வயதுக்குட்பவர்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் விட்டதற்கு, பெற்றோரும் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.