Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாத திடீர் விஜயம். கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருந்தது. லண்டனில் இருந்து போவர்கள் கட்டுநாயக்காவில் விசாரிக்க படுகிறார்கள். நான் நேராக கொழும்பு செல்லாமல் ஒரு மத்திய கிழக்கு ஆசியா நாடு ஊடாக எனது பயணத்தை தொடர்ந்தேன்.

கொழும்பு செல்ல அதிகாலை நேரமாக இருந்த படியால் பலர் கடமையில் இல்லை. என்னை விசாரித்தவர் சில சாதாரண கேள்விகளை கேட்டார். எனது பதில்கள் அவரை திருப்தி படுத்தியதால் என்னை உள்ளே அனுமதித்தார். இதிலிருந்து வெளியே வரும் வரைக்கும் பல கழுகு கண்கள் வரும் பயணிகளை நோட்டம் இட்ட படி இருந்தது. நான் ஒருவாறு வெளியில் வந்து எனது பயணத்தை நான் பிறந்த ஊருக்கு தொடர்ந்தேன்.

பகல் பயணம் ஓமந்தையில் எனது அடையாளத்தை காண்பித்துவிட்டு வன்னியூடாக நான் சென்ற வான் பயணித்தது. கடும் மழை, வெள்ளம், பாதை சீரின்மை காரணமாக என் பயணம் 12 மணித்தியாலங்கள் ஆனது.

நான் செய்திகளில் வாசித்த பலவற்றை நேரில் பார்த்தேன். இந்தியன் கொடுத்த வீடு சிங்களவன்னுக்கு, ரெண்டு தகர கொட்டில் எம் மக்களுக்கு. சனங்கள் சாப்பாடுக்கு, மண் எண்ணைக்கு வரிசையில் நிக்குதுகள். ஆமிக்காரனுக்கு பக்கத்தில் சிங்களவங்கள் இருக்கிறாங்கள். எங்கும் ராணுவ மயம், சில இடங்களில் சீனாகாரன் ரோடு அளக்கிறான். இந்தியனை அடையாளம் காண முடியவில்லை , ஆனால் சிங்கள சுற்றுலா பயணிகள் அதிகம். நத்தார் விடுமுறை ஆன படியால் பாடசாலை பிள்ளைகள் அதிகம். ஒரு இனத்தின் அழிவில் இன்னொரு இனம் உல்லாசம் அனுபவிக்குறது.

இராணுவத்தின் "சாதனையாக" புலிகளின் ஆனையிறவு சமர் கவச வாகனம் தாக்கி அழிப்பு, முகமாலையில் சில கனரக வாகனங்கள், கிளிநொச்சி தண்ணீர் தாங்கி இன்னும் பல காட்சிப் பொருள்களாக கண்டேன். அங்காங்கே ஆமிக்காரனின் உணவகம் சிங்கள மக்களுக்கு. வடக்கின் வசந்தம் பெரிய விளம்பர பலகை மட்டும் கண்டேன். எனது வாகன ஓட்டுனர் வலது பக்கம் காண்பித்து அரை குறையாக கட்டின கட்டிடத்தை காட்டி இதுதான் வடக்கின் வசந்தம் என்றார். நாம் அரசியல் கதைக்கவில்லை. அது உயிருக்கே உலை வைக்கலாம்.

வறணி ஊடாக எங்கள் பயணம் தொடர்ந்தது. வறணி முகாமை சுற்றி வான் போனது. எங்கள் 20 வருட வாகன பயிற்ச்சி காணாது இங்கு வாகனம் ஓட, பாதை விபரிக்க முடியாது. எனது ஓடுநர் ஒரு 20 - 22 வயது இளைஞர், ஹர்ட்லியில் படித்தவராம் (நானும்தான் 30 வருடங்களுக்கு முன்) அவரது திறமைக்கும், ஆற்றலுக்கும் எனது பாராட்டுக்கள்.

நான் எனது 7 நாள் பயணத்தை 4 நாட்களாக மாற்றிக்கொண்டு கொழும்பு திரும்பினேன். நாளுக்கு நாள் வரும் செய்திகள் எங்களை பயமுறித்தியது. ஆறு மணிக்கு ஊர் அடங்கியது. நான் சில நாட்கள் வீடு மாறி படுக்க வேண்டி வந்தது. கல்வி அதிகாரி கொலை, அல்வாயில் கணவனை இழந்த 6 பிள்ளைகளின் தாய் வர்த்தக பெண்மணி கடத்தல், மணல்காடு இளைஞர் கொலை, சிவில் உடை துப்பாக்கிதாரிகளின் நடமாட்டம் என்பன என்னையும், என்னை சுற்றி இருந்தவர்களையும் கிலி கொள்ள வைத்தது. நாம் இங்கு வந்து இங்குள்ளவர்களை சிக்கலில் மாட்டி விட வேண்டி வருமோ என தோன்றியது. அப்படி ஊருக்கு போனாலும் சாதாரணமாக திரிந்தால் நல்லது. சாரம், சைக்கிள், பாட்டா, பணத்தை அளவுடன் செலவழிக்கவும் பழகி கொள்வது நல்லது.

திரும்பி வரும் போது கட்டுனயகவில் விசாரித்தார்கள், அங்கு இங்கிலாந்தில் நான் செய்யும் தொழிலையும் நிறுவனைத்தையும் சொல்லி வெளியேற வேண்டி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதையே சுதந்திரமாகக் கருதும் அடிமை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு 15 வருடங்கள் தாண்டிவிட்டன. எனவே சுதந்திரமான தேசத்தில் இருந்து ஊருக்குப் போவது தற்போதைய இறுக்கமான நிலமைகளில் திகில் பயணமாகத்தான் இருக்கும் என்பதைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய யாழ்பாணப் பயணம் பாதாளகிணத்தில பயங்கர மோட்டார்க்கார் ஓட்டுவதற்குச் சமனானது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் வெளிநாடுகளில் இருந்து போவர்கள் முற் கூட்டியே விசா எடுக்க வேண்டும் என்று ஓரு செய்தி அடிபட்டது.ஆது உண்மையா?உல்லாசப் பயணிகளின் வருமானத்தை முக்கிய வருமானமாகக் கொள்ளும் ஓரு நாட்டுக்கு இத்தகைய நடவடிக்கை மேலும் வீழ்ச்சியைக் குடுக்குமே?

  • தொடங்கியவர்

ஆமாம் ராஜபக்சே சகோதரர்கள் கூடி ஆராந்ததாக செய்தி வந்தது. இப்பொழுது 1 மாத விசா கொடுப்பதில்லை. நீங்கள் கேட்பதை பொறுத்து. 1 கிழமை , 10 நாட்கள்....

நீங்கள் பார்த்ததை எழுதியிருக்கிறீர்கள் அகத்தியன்

எல்லா இடமும் உங்களால் போயிருக்கமுடியாது

நீங்கள் பார்த்ததைவிடவும் கடுமையான நிலவரங்கள்

உங்கள் பார்வைக்கு பட்டிருக்காது

பகிர்வுக்கு நன்றி

கிருபன்

Posted Today, 04:40 AM

மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதையே சுதந்திரமாகக் கருதும் அடிமை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு 15 வருடங்கள் தாண்டிவிட்டன. எனவே சுதந்திரமான தேசத்தில் இருந்து ஊருக்குப் போவது தற்போதைய இறுக்கமான நிலமைகளில் திகில் பயணமாகத்தான் இருக்கும் என்பதைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்

.

நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் கிருபன்?

ஒருவர் சுதந்திரமான நாட்டிலிருந்து போனதால்

அவருக்கு இது திகிலாக தெரிகிறது மற்றும்படி

இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பார்த்ததை எழுதியிருக்கிறீர்கள் அகத்தியன்

எல்லா இடமும் உங்களால் போயிருக்கமுடியாது

நீங்கள் பார்த்ததைவிடவும் கடுமையான நிலவரங்கள்

உங்கள் பார்வைக்கு பட்டிருக்காது

உண்மைதான் காரணிகன், நான் சென்ற துயர நிகழ்வுக்கு பல இடங்களிலும் இருந்து ஆட்கள் வந்திருந்தார்கள், அவர்களின் கதைப்படி பல சம்பவங்கள் நடக்குது. நாம் நினைத்த இடங்களுக்கு போக முடியாது. போய் இறங்கின உடனே நான் கண்ட காட்சி இரு இளைஞர்கள் சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் செல்வதை கண்டேன், பின்னுக்கு இருந்தவரின் பின் பாக்கெட்டில் பிஸ்டல் இருந்தது. இடமோ ஆட்கள் நடமாட்டம் குறைந்த பனைக் காணிகள் உள்ள இடம் . என்னவும் எதுவும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் யாழ்பயணத்தை நினைத்தே பார்க்க முடியாது.

இனி வரும் காலங்களில் யாழ்பயணத்தை நினைத்தே பார்க்க முடியாது.

சரி நினைக்க வேண்டாம் ஆனால் போய் பார்க்கலாம் தானே? :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி நினைக்க வேண்டாம் ஆனால் போய் பார்க்கலாம் தானே? :D

அம்மாவையே பார்க்க முடியாமல் போய்விட்டபோது, அங்குபோகும் எண்ணமும் இல்லாமலே போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சீ

இது எல்லாம் மண்டை களுவப்பட்டவை சொல்கிற பொய்கள். நீங்கள் போய் வாங்கோ............ :lol:

அது சரி

இந்த பயண அனுபவம் எழுதிய .....வெள்ளிக்கு என்ன நடந்தது. அவரது சுயசரிதம் இடையில நிக்குது............??? :(

அம்மாவையே பார்க்க முடியாமல் போய்விட்டபோது, அங்குபோகும் எண்ணமும் இல்லாமலே போய்விட்டது.

5000 ஈரோ தந்தால் நான் அம்மாவை போய் பார்பேன் எல்ல்லொ? :D

  • கருத்துக்கள உறவுகள்

5000 ஈரோ தந்தால் நான் அம்மாவை போய் பார்பேன் எல்ல்லொ? :D

வேதனையை புரிந்து கொள்ளுங்கள் வினித் :(

இது அவரது வேதனையான செய்தி :(

சீ

இது எல்லாம் மண்டை களுவப்பட்டவை சொல்கிற பொய்கள். நீங்கள் போய் வாங்கோ............ :lol:

அது சரி

இந்த பயண அனுபவம் எழுதிய .....வெள்ளிக்கு என்ன நடந்தது. அவரது சுயசரிதம் இடையில நிக்குது............??? :(

நீங்கள் பாரிஸ் வர்த்தகர் நிச்சையமாக புலிகளுக்கு காசு கொடுத்து இருப்பீர்கள் ஆனால் நமப்பு அப்படி இல்லை கொழும்பில் மகிந்தா தலைவர், யாழ்ப்பாணம் போனால் டக்கிள்ஸ் தலைவர், மட்டக்களப்பு போனல கருணா தலைவர் வெளிநாடு வந்தால் மட்டும் பிரபாகரன் தலைவர்.

வேதனையை புரிந்து கொள்ளுங்கள் வினித் :(

இது அவரது வேதனையான செய்தி :(

எனக்கு அம்மா தங்கை ஊரில் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் கிருபன்?

ஒருவர் சுதந்திரமான நாட்டிலிருந்து போனதால்

அவருக்கு இது திகிலாக தெரிகிறது மற்றும்படி

இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா?

ஆமாம். அங்கு இருப்பவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இப்படியான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுப் போயிருப்பதால் அவர்களுக்கு இவை சாதாரண விடயங்களாகப் போயிருக்கும் என்று நினைக்கின்றேன். எனினும் நேரடி அனுபவம் எனக்குக் கிடைக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அந்த மாதிரி என்று இன்னமும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

அங்கிருப்பவர்களுக்கு முந்தியிலும் திறம் .இங்கிருந்து போவர்களுக்கு அவரவர்களை பொறுத்தது.

பல்கலைகழக காணொளி பார்த்தனீர்கள் தானே என்ன சந்தோசமாக இருக்கின்றார்கள்.

இப்ப தலிபான்கள் இல்லைத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருப்பவர்களுக்கு முந்தியிலும் திறம் .இங்கிருந்து போவர்களுக்கு அவரவர்களை பொறுத்தது.

பல்கலைகழக காணொளி பார்த்தனீர்கள் தானே என்ன சந்தோசமாக இருக்கின்றார்கள்.

இப்ப தலிபான்கள் இல்லைத்தானே.

நிச்சயம் உங்களைப் போன்றவர்கள் 1990 - 1995 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கமாட்டீர்கள். அப்போது நீங்கள் இப்போது உணரும் சுதந்திரத்தை விட பல மடங்கு சுதந்திரம் உணரப்பட்டது.

மக்கள் மரண பயமின்றி வாழ்ந்தார்கள். மேலால வந்து அடிக்கும் போது மட்டும் தான் பயம். இப்போ தினமும் பயம்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அன்றும் இதேபோல் நிகழ்ச்சிகள் நடந்தன தான். அப்போதும் மாணவர்கள் அங்கு படித்தனர் தான். வெறுமனவே இப்படியான நிகழ்வுகள் இன்று மட்டும் சிங்கள ஆக்கிரமிப்பின் பின் தான் நடப்பதாகக் காட்டாதீர்கள். அன்று அவை மட்டுப்படுத்திய அளவில் தேவைகளோடு நடந்தன. இன்று அவை அளவு பிரமாணம் இன்றி எழுந்தமானமாக நடக்கின்றன.. இதுதான் வேறுபாடு.

நான் வன்னியில் இருந்து கொழும்புக்கு வந்து பல்கலையில் இணைந்த போது என்னிடம் சிங்கள மாணவர்கள் கேட்டது புலிகளிடம் இருந்து தப்பி வந்தது சுதந்திரமா இருக்குமே என்று. நான் அவர்களுக்கு சொன்னது.. நான் அப்படி நினைக்கவில்லை என்று. உண்மையில் அங்கிருந்து வந்தது முதல்.. உணர்ந்தது எதையோ தொலைத்துவிட்டு வாயை இறுக்க மூடியதை மட்டுமே..!

இதுதான் ஒரு உண்மை பேச விரும்பும் தமிழனின் உள்ள உணர்வு.

இதற்கு மேலதிகமானவை சிங்கள ஆளுகைக்குள் எமது சுதந்திரத்தை அடகு வைக்க முயலும் கோழைகளின் தேவையுள்ளவர்களின் குறுநிலைச் சிந்தனை மட்டுமே ஆகும். :( :(

Edited by nedukkalapoovan

ஐயா நெடுக்ஸ் நீர் நீடூழீ வாழ்க

உமது கருத்தே எனது கருத்தும்

வாத்தியார்

**********

இந்த கதையின் ஆரம்பமே கதை விடுகிற மாதிரி தெரிகிறதே?? இலண்டனில் இருந்து வருகிறவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என்பதால் இவர் மத்திய கிழக்கால் சுத்தி போனாராம்

.1) மத்திய கிழக்கால் சுத்தி போனால் இவர் லண்டனிலை இருந்து வருகிறார் என்று தெரியாமல் போய் விடுமா?

2) அதிகாலை நேரமோ மத்தியான நேரமே ஒரு விமான நிலையத்தில் கடைமையில் இருப்பவர்கள் தங்கள் கடைமையில்தான் இருப்பார்கள் அதிகம்பேர் கடைமையில் இருந்தால் அதிக சோதனை குறைந்தளவு அதிகாரிகள் இருந்தால் குறைந்தளவு சோதனை என்பது நடைமுறையானது அல்ல.

3)கழுகு கண்கள் தன்னை கவனித்ததாம் அதனை இவர் கவனித்தாராம். நீங்கள் என்ன புலனாய்வு பிரிவில் கன காலம் பணிபுரிந்தவரா?

4)கொழும்பிலிருந்து ஏ9 பாதையூடாக போவதற்கு ஏன் வறணிக்கு போக வேண்டும்.

5)எப்படியும் உங்கள் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து போனால் உறவினர் பக்கத்து வீட்டு கார்களிற்கு தகவல் நிச்சம் தெரிந்திருக்கும். நீங்கள் வீடு மாறிப்படுத்தாலும் பிரயோசனம் இல்லை உங்கள் வீட்டிற்குவந்து கடத்தல் காரர்கள் உதைத்தாலே நீங்கள் மாறிப்படுத்திருந்த வீட்டை காட்டிக்கொடுத்திருப்பார்கள் அது மட்டுமல்ல ஓமந்தை சோதனை சாவடியிலேயே நீங்கள் போகும் விலாசம் நிச்சயமாக கேட்டு பதிந்திருப்பார்பகள்

அடுத்த தடைவையாவது கதையை கவனமாக நம்புகின்றமாதிரி எழுதிப் பழகுங்கள்

Edited by DAM

எனக்கு அம்மா தங்கை ஊரில் இல்லையோ?

உங்கள் அம்மா இருக்கிறார். கருப்பியின் அம்மா இல்லை போல் தெரிகிறது. அதை புரிந்து கொள்ளுங்கள். ஒருவரின் துயரை புரிந்துகொள்ள வேண்டும்.

அகஸ்தியன், உங்கள் பதிவுக்கு நன்றி. நேரில் கண்ட அனுபவங்களை விபரித்தது மற்றவர்களின் பயணத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாம் ஏன் போராடுகின்றோம் என்ற அடிப்படையையே மறந்துவிட்டு கதைசொல்லாக்கூடாது.இப்போ ராஜபக்சா செய்வது எல்லாம் சரியென்பவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.அதே போல்தால் புலிகள் செய்வது எல்லாம் சரியென்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் யாரையாவது வாய் திறக்கவிட்டார்களா? சமாதானகாலத்தில் இவர்களும் இவர்களது ஆதரவார்களும் ஆடிய ஆட்டங்கள் உலகம் அறியும்.உங்களுக்கு அவைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாது ஏனெனில் புலி எது செய்தாலும் உங்களுக்கு சரி.அதேதான் இன்று டக்கிளசும் செய்கின்றார் தான் மந்திரியாக இருக்கும் அரசு எது செய்தாலும் அவர் கண்ணுக்கு பிழையாக படுகுதில்லை.

முதல் நேர்மையான மனிதர்களாகுங்கள் பின்னர் விடுதலை பற்றி பேசுங்கள்.

முதலில் நீங்கள் புலிகள் செய்த பிழைகளை எது பிழை.. என்ன காரணத்திற்காகப் பிழை.. புலிகள் பிழைவிடாமல் வேறு என்ன வழியில் அதை கையாண்டிருக்க வேண்டும்.. இதுகளை உங்களின் அறிவுக்கு எட்டியவரை சொல்லுங்கோ பார்ப்பம்.

எதுக்கெடுத்தாலும்.. புலிகள் பிழைவிட்டிட்டினம்.. ஏன் மற்றவை விடக்கூடாது. இப்படிக் கேட்டுக் கேட்டு ஈழம் கேட்டு எடுத்த ஆயுதங்களை சொந்த மக்களுக்கு எதிராக பாவித்ததைத் தவிர வேறெதுவும் செய்யாத டக்கிளஸ் போன்ற துரோகிகளை புலிகளுக்கு சரி நிகராக பேசுவதை நிறுத்துங்கோ.

எனிமேல் நீங்கள் புலிகள் மீது கருத்துச் சொல்வதானால் மேலே கேட்பட்ட வினாக்களுக்கு பதிலளிச்சிட்டு சொல்லுங்கோ. அல்லது பொத்திக்கிட்டு இருங்கோ.

சும்மா வெறுமனவே ஒரு சிலர் புலிகளால் சமூக நலன் கருதி தண்டிக்கப்பட்ட காழ்புணர்ச்சியில் புலிகளை விமர்ச்சித்துக் கொண்டு திரிவதெல்லாம் ஜனநாயக பண்புள்ள மாற்றுக் கருத்தோ நேர்மையோ கிடையாது. அதை முதலில் புரிஞ்சு கொள்ள வேணும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள் புலிகள் செய்த பிழைகளை எது பிழை.. என்ன காரணத்திற்காகப் பிழை.. புலிகள் பிழைவிடாமல் வேறு என்ன வழியில் அதை கையாண்டிருக்க வேண்டும்.. இதுகளை உங்களின் அறிவுக்கு எட்டியவரை சொல்லுங்கோ பார்ப்பம்.

எதுக்கெடுத்தாலும்.. புலிகள் பிழைவிட்டிட்டினம்.. ஏன் மற்றவை விடக்கூடாது. இப்படிக் கேட்டுக் கேட்டு ஈழம் கேட்டு எடுத்த ஆயுதங்களை சொந்த மக்களுக்கு எதிராக பாவித்ததைத் தவிர வேறெதுவும் செய்யாத டக்கிளஸ் போன்ற துரோகிகளை புலிகளுக்கு சரி நிகராக பேசுவதை நிறுத்துங்கோ.

எனிமேல் நீங்கள் புலிகள் மீது கருத்துச் சொல்வதானால் மேலே கேட்பட்ட வினாக்களுக்கு பதிலளிச்சிட்டு சொல்லுங்கோ. அல்லது பொத்திக்கிட்டு இருங்கோ.

இதை நான் 100 வீதம்ஆமோதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஏன் போராடுகின்றோம் என்ற அடிப்படையையே மறந்துவிட்டு கதைசொல்லாக்கூடாது.இப்போ ராஜபக்சா செய்வது எல்லாம் சரியென்பவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.அதே போல்தால் புலிகள் செய்வது எல்லாம் சரியென்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் யாரையாவது வாய் திறக்கவிட்டார்களா? சமாதானகாலத்தில் இவர்களும் இவர்களது ஆதரவார்களும் ஆடிய ஆட்டங்கள் உலகம் அறியும்.உங்களுக்கு அவைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாது ஏனெனில் புலி எது செய்தாலும் உங்களுக்கு சரி.அதேதான் இன்று டக்கிளசும் செய்கின்றார் தான் மந்திரியாக இருக்கும் அரசு எது செய்தாலும் அவர் கண்ணுக்கு பிழையாக படுகுதில்லை.

முதல் நேர்மையான மனிதர்களாகுங்கள் பின்னர் விடுதலை பற்றி பேசுங்கள்.

ஏன் பாருங்கோ நீங்கள் விட்ட பிழைகளையும் ஒருக்கால் சுயவிமர்சனம் செயயலாம் தானே. பெரிய பிஸ்தா போல் மற்றவர்கள் விட்ட பிழைகளை விமர்சிக்க தெரிந்த நீங்கள் உங்கள் கூட்டத்தை விமர்சிக்க மட்டும் கோழையாகிறீர்கள்.உங்களில் எத்தனை பேர் நாட்டுக்காக உயிரை விட்டீர்கள் என கூறமுடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.