Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். புனித பத்திரிசியர் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட திடல் (காணொளி படங்கள் இணைப்பு)

Featured Replies

யாழ். புனித புத்திரிசியர் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு புதிய கூடைப்பந்தாட்ட திடல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா கல்லூரி அதிபர் வண பிதா ஜெறேம் செல்வநயகம் தலைமையில் நடைபெற்றது.

DSC_0843.JPG

DSC_0830.JPG

DSC_0792.JPG

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பிரிகேடியர் சு. டேவிட் , திருமதி பேர்ல்லி டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவை தொடர்ந்து கூடைப்பந்தாட்ட காட்சிப் போட்டி நடைபெற்றது. காட்சி கூடைப்பந்தாட்டப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியுடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பணக்கல்லூரி அணி மோதியதில் 25-16 என்ற புள்ளி அடிப்படையில் பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

புதிய கூடைப்பந்தாட்டத் திடலை அமைப்பதற்காகன பிரதான பங்களிப்பினை திறப்பு விழா நிகழ்வின் பிரதம விருந்தினரான பிரிகேடியர் சு. டேவிட் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

THX

http://www.newjaffna.com

  • Replies 112
  • Views 6.4k
  • Created
  • Last Reply

இதைப் பார்த்தால் புலம் பெயர்ந்தவர்களுக்கு புண்ணில் புளிவிட்ட மாதிரி இருக்குமே?

நாடு இருக்கின்ற நிலமையில் குண்டைகட்டிக்கொண்டு பாயமல் பாஸ்கெட்பால் இவர்களுக்கு ஒரு கேடு.

சிங்கள உளவியல் யுத்தத்தின் இன்னுமொரு முயற்சி:

  • இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பிரிகேடியர் சு. டேவிட் , திருமதி பேர்ல்லி டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்
  • புதிய கூடைப்பந்தாட்டத் திடலை அமைப்பதற்காகன பிரதான பங்களிப்பினை திறப்பு விழா நிகழ்வின் பிரதம விருந்தினரான பிரிகேடியர் சு. டேவிட் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்

இந்த பிரிகேடியரும் மாணவர்களிடம், அவர்கள் குடும்பத்திடம் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியை கொடுத்திருக்கலாம் :)

அந்த பிள்ளைகளை பார்க்க உங்களுக்கு சந்தோசமாக இல்லையா? அதுவும் நிலத்தில் யுனிபோம் உடன் இருந்து கை தட்டும் சிறுவர்களை பார்க்க.

நாடும் விடுதலையும் எமக்கு தேவைதான் அதற்கு நாம் இங்கிருந்து அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அந்த குழந்தைகளை விடுதலை என்றபேரில் திரும்பவும் திரும்பவும் பலியிட உங்கள் மனம் ஏன் துடிக்குது.

இன அழிப்பாளர்கள் இப்படித்தான் செய்வார்கள். பலரை அழிப்பார்கள், ஒருவரை வாழ வைப்பார்கள், அதைப்பார்த்து நாம் ஆனந்தகண்ணீர் வடிக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

ஒரு பாடசாலையில் நடந்த ஒரு நல்ல விடயத்தை, அந்த மாணவர்கள் முகங்களை, அதில் தவழும் புன்னகையை எல்லாத்தமிழனும் விரும்புகிறான். ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்களை படுகொலை செய்தபொழுது எங்கள் மனம் துடித்தது. இன்றும் இந்த போலி நாடகத்தை பார்த்து ஆனந்தபடுவதை விட ஒட்டுமொத்த தாயக மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி கவலைதான் கூடுதலாக கொள்ளமுடிகின்றது.

  • இன்று தாயகத்தில் எத்தனை மாணவர்கள் உள்ளார்கள்?

  • அவர்களில் எத்தனை பேருக்கு பாடசாலை உள்ளது?

  • எத்தனை பேருக்கு பாடசாலைக்கு செல்லும் வசதி உள்ளது?

  • எத்தனை பள்ளிக்கூடங்களில் படிக்க மேசை - கதிரைகள் உள்ளன?

  • படிப்பிக்க ஆசிரியர்கள் உள்ளனர்?

தராதரப்படுத்தல் தொடக்கம் வேலைவாய்ப்பு வரை பரந்துபட்ட அளவில் எமது மாணவர்களின் வருங்காலத்தை சிங்களம் சிதைத்து வருவது எமது அறுபது வருட சரித்திரம்.

எல்லா மாணவர்கள் மத்தியிலும் இந்த புன்னகை வரும்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து மகிழுவோம். அதுவரை ஏமாறாமல் இருப்போம்.

தராதரப்படுத்தல் தொடக்கம் வேலைவாய்ப்பு வரை பரந்துபட்ட அளவில் எமது மாணவர்களின் வருங்காலத்தை சிங்களம் சிதைத்து வருவது எமது அறுபது வருட சரித்திரம்.

நாங்கள் 60 வருடங்களுக்கு முதல் புலி உருவாகுதற்கு காரணமாவர்களைப்பற்றி பேச மாட்டோம்.....30 வருடமாக புலி செய்ததைப்பற்றித்தான் பேசுவோம் இது என்Tகு இலட்சியம் :lol:

பிரிகேடியர் டேவிட் நம்ம ஆளோ(டமிழரோ)இல்லை சும்மா கேட்டனான்....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிள்ளைகளை பார்க்க உங்களுக்கு சந்தோசமாக இல்லையா? அதுவும் நிலத்தில் யுனிபோம் உடன் இருந்து கை தட்டும் சிறுவர்களை பார்க்க.

நாடும் விடுதலையும் எமக்கு தேவைதான் அதற்கு நாம் இங்கிருந்து அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அந்த குழந்தைகளை விடுதலை என்றபேரில் திரும்பவும் திரும்பவும் பலியிட உங்கள் மனம் ஏன் துடிக்குது.

எஜமானியின் கால்களின் கீழே தமிழர்கள் மகிழ்சியாக உள்ளார்கள் என்ற படப்பிடிப்புக்கு போஸ் கொடுக்கும் சிறுவர்களை பார்த்தால் சிங்களவனோடு கூடிநின்று உழைத்த உங்களை போன்றவர்களுக்கு புல்லரிக்கத்தான் செய்யும். அதை எங்களுக்கு எழுதி காட்ட தேவையில்லை.

யாழில் தமிழன் தனது சொந்த காலில் நிற்க வேண்டும் அதுதான் எமது துடிப்பு. அது மானத்தோடு சம்மந்தபட்டது............. மனிதர்களுக்கானது. உங்களுக்கு புரியாததில் வியக்க ஏதுமில்லை.

உங்களின் வியாக்கினங்களை.............. வாந்திகளாக எடுத்துவிட்டுகொண்டே இருக்கலாம்.

பிழைச்சு போங்க.....

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் டேவிட் நம்ம ஆளோ(டமிழரோ)இல்லை சும்மா கேட்டனான்....

அறிந்தவர் ஒருவர் சொன்னது:

பிரிகேடியர் டேவிட் தமிழர், இந்த கல்லூரியின் பழைய மாணவர். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முற்பட்ட காலத்திலேயே சிலோன் இராணுவத்தில் இணைந்து கொண்ட டேவிட், தமிழர் என்பதால் போருடன் சம்பந்தப்படாத நிருவாக சேவைகளில் பொறுப்பாக அமர்த்தப்பட்டிருந்தார். ஆயினும், பலருக்கும் தன்னாலான உதவிகளை செய்து வந்தார். கல்லூரி நிருவாகமும், மாணவர்கள் குடும்பங்களும் இவரது உதவிகளால் பெற்ற நன்மைகளுக்கு நன்றியாக அவரை இந்த நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள்.

தகவலுக்கு நன்றிகள் jude....இது நம்ம ஆளு என்று சந்தோசப்படுவோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் பார்த்தால் புலம் பெயர்ந்தவர்களுக்கு புண்ணில் புளிவிட்ட மாதிரி இருக்குமே?

நாடு இருக்கின்ற நிலமையில் குண்டைகட்டிக்கொண்டு பாயமல் பாஸ்கெட்பால் இவர்களுக்கு ஒரு கேடு.

அவனவன் முன்னேறி மேலைமேலை போய்க்கொண்டிருக்கிறாங்கள்.

இவர் ஒருத்தர் இப்பவும் இருந்த இடத்திலையே சப்பாணிகட்டி இருந்துகொண்டு..........

அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார்.

அர்ஜுன் ... நல்ல செயல்!!! ஆனால் அங்கு அழிக்கப்பட்ட மக்கள், அவர் வாழ்வாதாரங்கள் என்பவற்றுக்கு மேல் எத்தனை பாடசாலைகள் நிர்மூலமாக்கப்பட்டன தெரியுமோ? எத்தனை பாடசாலைகளின் எத்தனை சொத்துக்கள்/கட்டடங்கள் அழிக்கப்பட்டவைகள் தெரியுமோ?? அவைகள் கட்டியோ அல்லது திருத்தப்பட்டடோ பிலிம் காட்டியிருந்தால் .... சந்தோசப்பட்டிருக்கலாம்!

சிங்கள இராணுவ அதிகாரிகள், பொலிசாரை பாடசாலை நிகழ்வுக்கு அழைத்தல்

... நான் பிறந்த ஊரிலுள்ள என் வீட்டுக்கு முன்னேயே பெரிய பாடசாலை ... நான் அங்கு படிக்கவில்லை ... ஊரில் உழாதது வன்னியில் உழும் என்று ... வேறு பாடசாலைக்கு அனுப்பி விட்டார்கள்!. .. அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இங்கு ... அதன் தலைவர் கூறினார் ... "நாங்கள் அங்கு(பாடசாலைக்கு) இங்கிருந்து போன் எடுக்கும் போது, அவங்கள்(சிங்கள ஆமி) நிற்கிறாங்கள், அங்குள்ளவர்கள் எம்முடன் சகஜமாக கதைக்க முடியாதுள்ளது! அதுக்கு மேல் அங்கு பாடசாலை நிர்வாகத்துக்கு அவங்களின்(சிங்கள ஆமி) ஓடராம் மாதத்துக்கு மூன்று நிகழ்வாவது நடத்த வேண்டும்!! அந்நிகழ்வுகளுக்கு சிங்கள இராணுவ/பொலிஸ் அதிகாரிகள் கண்டிப்பாக அழைக்கப்பட வேண்டுமாம்!! பெரிய நிகழ்வுகளாயின் சிங்கள கவர்ணரும்/மாண்புமிகு குத்தியரும் அழைக்கப்பட வேண்டுமாம்!!! ..." ...

இந்த எழுதாத சட்டம் அங்குள்ள ஏனைய பாடசாலைகளுக்கும்!!!

இதில் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் ... அங்குள்ள பாடசாலைகளின் ஏதாவது கட்டடங்களோ அல்லது ஏதாவது வசதிகளோ ... உதவி வழங்கும் நிறுவனங்களோ அல்லது பாடசாலை பழைய மாணவர் சங்கங்களினால் அல்லது மேற்குலக நாட்டு நிதியுதவியினால் அமைக்கப்படுபவைகள் கூட ... ஏதோ சிங்கள அரசின் நன்கொடை போல ... சிங்கள கவர்ணரும்/ குத்தியருமோ அல்லது லோக்கல் சிங்கள ஆமி/பொலிஸ் அதிகாரிகள் தான் திறந்து வைப்பார்களாம்!!

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தால் புலம் பெயர்ந்தவர்களுக்கு புண்ணில் புளிவிட்ட மாதிரி இருக்குமே?

நாடு இருக்கின்ற நிலமையில் குண்டைகட்டிக்கொண்டு பாயமல் பாஸ்கெட்பால் இவர்களுக்கு ஒரு கேடு.

உங்கட கதையப் பார்த்தால் 1990 இல் இருந்து 1995 வரை புலிகள் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த போது யாரும் ஒரு விளையாட்டும் விளையாடல்ல.. எல்லோரும் குண்டைக் கட்டிக் கொண்டு பாய்ஞ்சு கொண்டிருந்தவை என்ற கணக்கா எல்லோ இருக்குது.

அண்ணைக்கு உதுகள் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை... புலிகள் போர் மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை. மக்களை அவர்கள் வற்புறுத்தி எதையும் செய்யச் சொல்லவும் இல்லை. மக்கள் அநாவசியமா முரண்டு பிடித்த இடங்கள் சிலவற்றில் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். மற்றும்படி அவர்கள் எமது அண்ணாமார்தான். அக்காமார்தான்.

நாங்கள் எல்லாம் அப்போதும் கூடைப்பந்து.. கால்பந்து.. கிரிக்கெட் என்று எல்லாம் விளையாடினோம். அதுவும் தமிழீழ விளையாட்டுத் துறை எல்லோரையும் அதில் ஊக்குவித்தும் வந்தது.

தனியார் கால்பந்துப் போட்டிகள்.. போத்தல்.. கத்தி.. சண்டைகள் இன்றி மிகவும் சிநேகித பூர்வமாக நடந்த காலங்கள் அவை. அதுவே இந்திய இராணுவ காலத்தில் அடிபிடி வெட்டுக் குத்து என்றும் நடந்தது.

இன்றைய சூழலில் வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்களின் உதவியோடு பாடசாலைகள் நவீன மயப்படுத்தப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. 1990 களில் சீமேந்து இல்லாத காலத்திலும் சக்கரையும் சுண்ணாம்பும் கலந்து கட்டிய யாழ் மத்திய கல்லூரி ஸ்கோர்போட் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. சீமெந்தை தடை செய்தது சிங்களம். மருந்தை தடை செய்தது சிங்களம். மின்சார நிலையம் மீது குண்டு வீசி அழித்தது சிங்களம். பண்ணை தொலைத்தொடர்பு நிலையத்தை சக்கை போட்டு அழித்ததும் சிங்களம் தான். ஆனால் பழி முழுக்க புலி மேல..!

என்று தீருமோ.. இந்தப் புலிக்காய்ச்சல்... புலிகள் அழிஞ்ச பின்னும்.. இன்னும் குலப்பன் அடிக்குது பலருக்கு. :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையப் பார்த்தால் 1990 இல் இருந்து 1995 வரை புலிகள் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த போது யாரும் ஒரு விளையாட்டும் விளையாடல்ல.. எல்லோரும் குண்டைக் கட்டிக் கொண்டு பாய்ஞ்சு கொண்டிருந்தவை என்ற கணக்கா எல்லோ இருக்குது.

அண்ணைக்கு உதுகள் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை... புலிகள் போர் மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை. மக்களை அவர்கள் வற்புறுத்தி எதையும் செய்யச் சொல்லவும் இல்லை. மக்கள் அநாவசியமா முரண்டு பிடித்த இடங்கள் சிலவற்றில் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். மற்றும்படி அவர்கள் எமது அண்ணாமார்தான். அக்காமார்தான்.

நாங்கள் எல்லாம் அப்போதும் கூடைப்பந்து.. கால்பந்து.. கிரிக்கெட் என்று எல்லாம் விளையாடினோம். அதுவும் தமிழீழ விளையாட்டுத் துறை எல்லோரையும் அதில் ஊக்குவித்தும் வந்தது.

தனியார் கால்பந்துப் போட்டிகள்.. போத்தல்.. கத்தி.. சண்டைகள் இன்றி மிகவும் சிநேகித பூர்வமாக நடந்த காலங்கள் அவை. அதுவே இந்திய இராணுவ காலத்தில் அடிபிடி வெட்டுக் குத்து என்றும் நடந்தது.

இன்றைய சூழலில் வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்களின் உதவியோடு பாடசாலைகள் நவீன மயப்படுத்தப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. 1990 களில் சீமேந்து இல்லாத காலத்திலும் சக்கரையும் சுண்ணாம்பும் கலந்து கட்டிய யாழ் மத்திய கல்லூரி ஸ்கோர்போட் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. சீமெந்தை தடை செய்தது சிங்களம். மருந்தை தடை செய்தது சிங்களம். மின்சார நிலையம் மீது குண்டு வீசி அழித்தது சிங்களம். பண்ணை தொலைத்தொடர்பு நிலையத்தை சக்கை போட்டு அழித்ததும் சிங்களம் தான். ஆனால் பழி முழுக்க புலி மேல..!

என்று தீருமோ.. இந்தப் புலிக்காய்ச்சல்... புலிகள் அழிஞ்ச பின்னும்.. இன்னும் குலப்பன் அடிக்குது பலருக்கு. :rolleyes::)

நெடுக்ண்ணா..............

இதுகள் இரண்டு தசாப்தகாலம் சிங்களவனின் மலசல கூடத்திற்குள்ளேயே வாழ்ந்துவிட்டார்கள். இனி எஜமானி புலியில்லை என்றாலும் இதுகள் வெளியில வராதுகள். வந்தாலும் பிழைப்பிற்கு ஏதாவது வேலைவெட்டி வேண்டும். நக்கிறதை தவிர தெரிந்தது வேறேதும் இல்லை. என்ன செய்யவது. பாவம் விடுங்கள் ஏதோ பிழைச்சு போகட்டும்.

நெடுக்ண்ணா..............

இதுகள் இரண்டு தசாப்தகாலம் சிங்களவனின் மலசல கூடத்திற்குள்ளேயே வாழ்ந்துவிட்டார்கள். இனி எஜமானி புலியில்லை என்றாலும் இதுகள் வெளியில வராதுகள். வந்தாலும் பிழைப்பிற்கு ஏதாவது வேலைவெட்டி வேண்டும். நக்கிறதை தவிர தெரிந்தது வேறேதும் இல்லை. என்ன செய்யவது. பாவம் விடுங்கள் ஏதோ பிழைச்சு போகட்டும்.

"நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல விட்டாலும் நாய் நாய்தான்" என்றொரு முதுமொழி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி கொஞ்சநாளைக்கு அர்சுனனை காணேலாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் கொஞ்சம் விஷயம் தெரிந்த ஆள் என்று நினைத்தேன்.

தமிழ்ப்பகுதிகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அவலங்கள் அவருக்கு தெரிவதில்லை.

இப்படியான கொண்டாட்டம் என்றால்... அவரின் பதிவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

<_< நான் இந்தக் கல்லூரியின் ஒரு பழைய மாணவன். இது அரசாங்கப் பாடசாலை கிடையாது. கத்தோலிக்கப் பாதிரிமாரால் நடத்தப்படும் தனியார் பாடசாலை. பாடசாலை நிர்வாகம் முதல் ஆசிரியர்க்கான சம்பளம் வரை மாணவர் பாடசாலைக் கட்டணத்திலிருந்துதான் செலுத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவான பாடசாலை என்று பெயர் பெற்றது. 1980 களில் நடைபெற்ற தமிழீழ வளத்துறையினால் நடத்தப்பட்ட பிரபல கண்காட்சியும் இங்குதான் நடைபெற்றது. இந்திய ஆக்கிரமிப்பின்போது அர்ஜுன் சார்ந்த ஒட்டுக்குழுக்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பாடசால் இருக்குமென்றால் அது இதுவாகத்தான் இருக்க வேண்டும். இந்திய ராணுவம் வெளியே காவல் காக்க அர்ஜுன் சார்ந்த கூலிப்படைகளும் ஏவல் நாய்களும் இப்பாடசாலைக்குள் புகுந்து பாதிரிமார், ஆசிரியர்கள் என்று தாக்கிக் காயப்படித்துயதோடு மட்டுமல்லாமல் ஏராளமான பாடசாலை மாணவர்களையும் கடத்திக்கொண்டு போய் இந்திய ஆக்கிரமிப்புப் படையிடன் கட்டாய ராணுவமான தமிழ் தேசிய ராணுவத்துக்குக் கொடுத்தவர்கள்.

இப்போது கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் முதல், பாடசாலை விளையாட்டு மைதானம் அடங்கலாக வெளிநாடுகளிலிருக்கும் இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கங்களின் அன்பளிப்பால் உருவாக்கப்பட்டவை. இதற்காக இங்கும், கண்டா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் வருடம் தோறும் நடத்தும் ஒன்றுகூடல்கள் போன்றவற்றின் மூலமே பணம் சேகரித்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்பாடசாலை என்பதற்காகவும், தனியார் பாடசாலை என்பதற்காகவும் சிங்கள அரசுகளால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் இந்தப் பாடசாலையின் மொத்தச் செலவுகளும் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களினால் கொடுக்கப்படுகிறதே ஒழிய, அர்ஜுன் நினைப்பது போல அவரது எசமானர்களான சிங்களப் பயங்கரவாத அரசோ அல்லது இந்திய அரசோ வழங்குபவை அல்ல.

ஆகவே இந்த மாணவர்கள் குதுகலிப்பது கண்டு மனதுக்குள் புலம்புவதும், காழ்ப்புணர்வால் அல்லல்ப்படுவதும் இனவழிப்பிற்குத்துணைபோய்க்கொண்டிருக்கும் அர்ஜுன் போன்ற கோடரிக் காம்புகள்தான். அவர்கள் 1988 - 1989 இல் கட்டாயப் பிள்ளை பிடிப்பால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவ்ர்கள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் செய்தது அவரது எசமானர்கள்தானே.

ரகுநாதன் உங்கள் எழுத்தைப் பார்த்தால் பள்ளிக்கூடம் போனவர் மாதிரியே இல்லை.நானும் சாமிடமும் ஞானத்திடமும் டியுசன் எடுத்தேன்.பற்றிக்ஸ் மைதானத்தில் ஒffஇல் சிக்ஸ் வேறுஅடித்தேன்.

இதை தொடக்கியவர் நெடுக்ஸ் தான் .நான் புலத்தில் என்ன கடந்த 20 வருடமாக என்ன நடந்தது என எழுதவில்லை.இப்போ அங்கு நடப்பதுகள் பற்றி புலம் பெயர்ந்தவர்கள் அலட்டிக்கொள்வது பற்றித்தான் எழுதினேன்.

அந்த விளக்கம் கூட உங்கள் யாருக்கும் இல்லை.உங்களுக்குள்ளேயே உங்களை புழுகி சுய இன்பம் காணுவதில் நான் குறுக்கே நிற்பதால் ஒருவாறு என்னை வராமல் விரட்டி அடிக்க முடிந்த மட்டும் முயற்சிக்கின்றீர்கள்.

புலத்தில் மக்கள் சந்தோசமாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை அதுதான் உண்மை.அங்கு ஒரு தீர்வும்வரவில்லை அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கடந்த 30 வருடங்கள் இருந்ததைவிட மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

ஆனால் நீங்களும் உங்கள் ஊடகங்களும் அங்கு நடக்கும் அவலங்களை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பெருக்கி புலி இல்லாததால் எவ்வளவு பிரச்சனை எனகாட்ட முனைக்கின்றீர்கள்.இதைத்தான் மனப்பால் குடிப்பதென்பது.

இன்றைய உலகத்தமிழர்பத்திரிகை தலையங்கம்.வடக்கின் கடல்வளம் சிங்களவர்களால் சூறையாடப்படுகின்றது,கொக்கிளாயில் சிங்கள குடியேற்றம் .பாவங்கள் இப்ப ஒருத்தரும் இவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

அதே போல் தான் நீங்களும், நீங்கள் யாழில் என்ன வந்து கத்தினாலும் யதார்த்தம் அதுவல்ல.ஒருமுறை நாட்டுக்கு போட்டுவாங்கோ.

ஒருமுறை நாட்டுக்கு போட்டுவாங்கோ.

நெருப்பு சுடும் என்று தொட்டுத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை.

பொதுவாக தமிழில் ஒரு பழ மொழி உள்ளது: "கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய் ஆனால், தீர விசாரித்து அறிந்ததே மெய்".

  • கருத்துக்கள உறவுகள்

--------

அதே போல் தான் நீங்களும், நீங்கள் யாழில் என்ன வந்து கத்தினாலும் யதார்த்தம் அதுவல்ல.ஒருமுறை நாட்டுக்கு போட்டுவாங்கோ.

அர்ஜூன், நீங்க றீல் விடுவதற்கு அளவே....................... இல்லையா???????

உங்களது, மாமி இறந்த போதே.... போகாத நீங்கள், மற்றவரை நாட்டுக்குப் போகச் சொல்றீங்களே....

  • கருத்துக்கள உறவுகள்

<_< செய்திலிலுள்ளதைப் பார்த்துவீட்டு குமுறுபவர்கள் புலத்து தமிழர் என்று அழுது வடிந்தது நாங்களில்லை, நீங்கள்தான். எமது பணத்தில் நடக்கும் நல்ல விடயங்களைப் பார்த்து நாங்களே ஏன் குமுறவேண்டும் என்பதை அறிவாளிதான் விளங்கப்படுத்த வேண்டும்.

என்னைப் பாட்சாலைக்கே போகவில்லை என்கிறீர்களா அல்லது பத்திரிசியார் கல்லூரிக்குப் போகவில்லை என்கிறீர்களா?? பாடசாலைக்கே போயிருக்கவிட்டால் நான் இன்றிருக்கும் நிலமையில் இருக்க முடியாது. நான் பத்திரிசியார் கல்லூரிக்குப் போகவில்லை என்று நீங்கள் சொன்னால் நான் கேட்கவேண்டுமென்பதில்லை. 1982 இலிருந்து 1989 வரை, உங்களின் இந்திய ராணுவம் வந்து கட்டாயப்படுத்தும்வரை அங்குதான் கல்விகற்றேன். இன்னும் மேலதிக ஆதாரம் வேண்டுமென்றால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

பற்றிக்ஸில் ஓபில சிஸ் அடிச்சமாதிரி இங்கையும் அடிக்கப் பாக்கிறியள், ஆனால் கஷ்ட்டகாலம் பிடிகொடுத்து ஆட்டமிழக்கிறியள்.

ஊருக்குப் போய் உங்கட எசமானர்கள் செய்யிற வேலைகளை பார்க்க நாங்கள் வேண்டும் எண்டு நல்லாத்தான் ஆசைப்படுறியள். ஆனால் நாங்கள் அங்க இறங்கின உடனே உள்ளுக்க போட்டுருவாங்கள், அந்த லட்சணத்தில உங்கட எசமானற்றை விலாசங்களை எப்பிடிப் பாக்கிறது.

இண்டைக்கு வரைக்கும் கிழக்கிலையோ அல்லது வடக்கிலையோ சனத்துக்கு உதவுறது புலத்துச் சொந்தங்களே ஒழிய உங்கட எசமானர்களில்லை என்கிறது எப்பத்தான் உங்களுக்கு விளங்கப்போகுது??

சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கிறதெண்டே முடிவெடுத்திட்டியள், அதை இப்ப விரும்பினாலும் உங்களாலேயே மாத்த ஏலாது எண்டதும் எங்களுக்கு நல்லாத் தெரியும். உங்கலைப்போல எத்தினையப் பாத்தாச்சுது. ஏதோ கத்துமட்டும் கத்திப்போடுச் செத்துப்போங்கோ.....

அண்ணை நீங்கள் அல்ல உங்களது எழுத்து பாடசாலைக்கு போன மாதிரி இல்லை.

தமிழ்சிறி,

எனது மாமியாரின் இறுதிகிரியைகளுக்கு கனடாவில் இருந்து இரண்டு மைத்துனர்களும் ஜேர்மனியில் இருந்து ஒருவரும் போனார்கள் நான் எனது இரு மகன்களையும் கூட்டிகொண்டோ விட்டுவிட்டோ போகும் நிலையில் இருக்கவில்லை.

கொழும்பில் இருக்கும் எனது நண்பர் வானில் போய் மூவரையும் கூட்டிக்கொண்டு விமானநிலையத்தில் இருந்து நேர யாழ்ப்பாணம் போனார்.திரும்ப வந்து கொழும்பில் ஒரு கிழமை நின்றுதான் வந்தார்கள்.

"பனைமரக்காடு" பட பூஜை நாச்சிமார் கோவிலில் நடைபெற்ற இணைப்பு யாழில்போடப்பட்டுஇருந்தது.செவ்வேள் லண்டனில் இருந்து போய் தான் அந்தபடம் எடுக்கின்றார்.

பிரச்சனையில்லை என யார் சொன்னது நீங்கள் காட்டும் பூச்சாண்டிதானில்லை.புலிகள் இருக்கும் போது மக்கள் பயந்ததைவிட இப்போ பயமில்லாமல் இருக்கின்றர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரென்ஷ்னாகப் படாது..... அர்ஜுன்..be_cool.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தால் புலம் பெயர்ந்தவர்களுக்கு புண்ணில் புளிவிட்ட மாதிரி இருக்குமே?

நாடு இருக்கின்ற நிலமையில் குண்டைகட்டிக்கொண்டு பாயமல் பாஸ்கெட்பால் இவர்களுக்கு ஒரு கேடு.

இதுக்குள்ளை நீங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள் என விளங்கவில்லை. போர் முடிந்து 2 வருடமாகி விட்டது. ஏன் இன்னும் உயர்பாதுகாப்பு வலயம்? அந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் வீடு, வாசல் இல்லாமல் அலைகிறார்கள்.ஏன் மற்றப்பக்கத்தை சிந்திக்க உங்களால் முடிவதில்லை?

  • டிசம்பர் 11 அன்று ஒரு ஆயுதக் கும்பலொன்று முருகமூர்த்தி கோயிலின் பிரதான பூசகர் நித்தியாநந்த சர்மாவை, 56, சங்கானை கோயிலில் வைத்து சுட்டுக் கொன்றதோடு அவரது மகன்கள் இருவரையும் காயப்படுத்தியது. அவரைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கி, இராணுவத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கியின் வகையைச் சேர்ந்ததாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுறுசிங்க இராணுவத்தின் தொடர்பை மறுத்த போதிலும், ஒரு இராணுவக் கோப்ரல் சம்பந்தப்பட்டிருப்பதை பின்னர் ஏற்றுக்கொண்டார்.

  • டிசம்பர் 26 அன்று, ஒரு ஆயுதக் கும்பலால் வலிகாமம் வலய துணை கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் யாழ்ப்பாணத்தில் உரும்பிராயில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பொலிசார் எவரையும் கைதுசெய்யவில்லை. 2004ல் தாக்கிய சுனாமியை நினைவுகூற யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வின்போது, தமிழ் பாடசாலை மாணவர்களை தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுமாறு நெருக்கியதை சிவலிங்கம் எதிர்த்ததாலேயே அவர் உயிரிழந்தார் என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ. சரவணபவன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • கடந்த மாதம் மஹேந்திரன் செல்வம், 28, மீசாலையில் சடலமாகக் கிடந்தார். அவர் காணாமல் போன பின்னர் 85 இலட்சம் ரூபா (76,000 அமெரிக்க டொலர்) கப்பம் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இராசையா சந்திரசிறி, 42, யாழ்ப்பாணத்தில் காணாமல் போய் மூன்று நாட்களின் பின்னர் டிசம்பர் 30 அன்று தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

  • புத்தாண்டு தினத்தில், தபால் ஊழியரும் சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டியவருமான கேதீஸ்வரன் தவராஜா, 28, யாழ்ப்பாண குடாநாட்டில் வடமராட்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆயுதக் கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார். ஜனவரி 3, ஐந்து பிள்ளைகளின் தந்தையான மஹாலிங்கம் அமிர்தராசா, 35, உரும்பிராயில் காணாமல் போனார்.

  • ஜனவரி 6, வெள்ளை வானில் வந்த ஒரு கும்பலால் ஆறு பேர் கடத்தப்பட்டனர். ஏனையவர்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் ஆகாயத்தில் சுட்டு அவர்களை அச்சுறுத்தினர். இராணுவச் சோதனைச்சாவடியொன்றில் சோதனைக்குட்படுத்தாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அந்த வாகனத்தை பலர் பின்தொடர்ந்து சென்றனர். ஆறுபேரில் ஐந்து பேர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் காலை பொலிசாரினால் அவர்களது குடும்பத்தாரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர்.

  • ஜனவரி 20, மன்னாரில் ஒரு அடையாளந்தெரியாத கும்பல் இரு மாணவர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்கியதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்தது. கடத்திச் சென்றவர்கள் ஒரு மாணவனின் தந்தையைப் பற்றி விசாரித்தனர். அவரது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்ட ஒரு வியாபாரியாவார். பின்னர் அந்த மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

  • யாழ்ப்பாண குடாநாடு இறுக்கமான இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 40,000 பேரைக் கொண்ட படை நிலைகொண்டுள்ளது. ஒவ்வொரு சந்தியிலும் துருப்புக்கள் காவலில் நிற்பதோடு வாகனங்களில் ரோந்தும் செல்கின்றன.

  • அரசாங்கத்தின் கூட்டணிப் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பீ.டி.பீ.) துணைப்படை குழு, இராணுவத்துடன் செயற்படுகின்றது. வன்னி மாவட்டத்தில் பத்தாயிரக்கணக்கான சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அறிவுக்கெட்டாமல் இந்த கொலைகளும் கடத்தல்களும் இடம்பெறுவது சாத்தியமற்றதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.