Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

Featured Replies

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

(பகுதி 2)-டீ.பி.எஸ்.ஜெயராஜ்

சுவிட்ஸலாந்து தசாப்தங்களுக்கு முன்னர் மிகச் சிறிய அளவிலான தமிழர்களையே கொண்டிருந்தது .ஸ்ரீலங்காவில் இனமோதல்கள் விரிவடையத் தொடங்கியதும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது 1979ல் யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டதும் அச்சமயத்தில் இன்பம் போன்ற தமிழ் இளைஞர்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் சிறையிலடைக்கப் பட்டதன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரினர். பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டதுடன் இந்த வெளியேற்றம் இன்னும் மோசமாக அதிகரித்தது.

1981 மே – ஜூன் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த கலவரங்களின்போது காவல்துறையின் ஒழுக்கமற்ற ஒரு பிரிவினரால் யாழ்ப்பாண பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயம், யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு என்பன தீயிட்டு கொளுத்தப் பட்ட நிகழ்ச்சிகள் புகலிடம் கோருவதை பொங்கி வழியச்செய்ததை காணக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து வந்த 1983 தமிழருக்கு எதிரான கலவரத்தின் விளைவாக மிகப் பெருந்தொகையான தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறினர்.

சனப்பரம்பல்

இப்படியாக தமிழர்களின் சனத்தொகை சுவிட்ஸலாந்தில் அதிகரிக்கத் தொடங்கியதுடன் 1979,1981.மற்றும் 1983 களில் அது உச்ச நிலையிலிருந்தது. அதன் பிறகு சுவிட்ஸலாந்துக்கு தமிழர்களின் வருகை ஒரு நிலையான ஓட்.டத்திலிருந்த அதேவேளை சில தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டுமிருந்தார்கள். சமீப காலத்தில் ஸ்ரீலங்காவைச் சோந்த சில ஊடகவியலாளர்கள் சுவிட்ஸலாந்தில் அடைக்கலம் கோரியிருந்தார்கள். இப்போது 2200 அகதி விண்ணப்பதாரிகள் சுவிட்ஸலாந்தில் உள்ளார்கள்.

ஐக்கிய ராச்சியம் அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களைப் போல சுவிஸ் தமிழர்கள் பெரியளவில் உயர்கல்வி கற்கவில்லை. அதேபோல உயர்ந்த வெள்ளைச் சட்டை வேலைகளையும் அவர்கள் பிரதிநிதிப் படுத்தவில்லை .பெரும்பாலான தமிழர்கள் நீலச்சட்டையணிந்த வேலைகளை தொழிற்சாலைகள், உணவு விடுதிகள், போக்குவரத்து, நகர பராமரிப்பு வயதானவர்களின் பராமரிப்பு,சுத்திகரிப்பு போன்ற இடங்களில் செய்கிறார்கள்.

பொதுவாக அவர்கள் கடினமான வேலைகளிலீடுபட்டு மாதமொன்றுக்கு 2 – 4,000 பிராங்குகளைச் சம்பாதிக்கிறார்கள். (ஒரு சுவிஸ் பிராங் 1.06 அமெரிக்க டொலர்களுக்கும் 117 இலங்கை ரூபாக்களுக்கும் சமமானது) பெரும்பாலான தமிழர்கள் சுவிட்ஸலாந்தில் நன்கு சம்பாதித்துக் கொண்டு பின்பு பிரித்தானியாவிலோ அல்லது கனடாவிலோ மீள் குடியேறுகிறார்கள்.

சுவிட்ஸலாந்தில் உள்ள ஸ்ரீலங்காத் தமிழர்களின் தொகை 40 – 42,000 என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தத் தமிழர்கள் தமிழ் அரசியற் கட்சி மற்றும் போராளி இயக்கங்களினதும் ஆதரவாளர்களாவார்கள். படிப்படியாக எல்.ரீ.ரீ.ஈ அங்கு தலைமைத்துவத்தை அடையத் தொடங்கியது. ஸ்ரீலங்காவில் ஆயுதப் போராட்டத்தை நடத்தும் தனி ஒரு இயக்கமாக அது பரிமளித்தது அதன் சிறப்பம்சமாக இருந்தது. தீவிரமான பரப்புரைகளின் தாக்கமும் பல கடினமான ஆயுத தந்திர வேலைகளும் சுவிட்ஸலாந்தில் வாழும் தமிழர்களிடையே கிட்டத்தட்ட ஒரு ஏகப் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கு எல்.ரீ.ரீ.ஈக்கு உதவியாக இருந்தது. எல்.ரீ.ரீ.ஈக்கு சுவிட்ஸலாந்தில் ஒரு வலுவான தடையை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பது சொக்கலிங்கம் ஞானலிங்கம் அல்லது ரஞ்சன் என்பவர் தலைமையிலுள்ள தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் எனப்படும் புளொட் இயக்கம் மட்டுமே.

சுவிட்ஸலாந்தில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ ஒரு மிகப்பெரிய கிளர்ச்சியை எதிர்கொண்டது கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் 1991ல் லண்டனிலிருந்து அங்கு இடம் பெயர்ந்த பொழுதுதான். பரவலாகப் புகழ் பெற்றிருந்த கிட்டு 1984 – 1987 வரை புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்திருந்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ க்காக லண்டனில் ஒரு சர்வதேச செயலகத்தை அமைத்திருந்தார். பிரித்தானியாவில் கைது செய்யப்படக் கூடிய சாத்தியத்தை தவிர்ப்பதற்காக அவர் சுவிட்ஸலாந்துக்கு கட்டாயமாக நகர வேண்டிய தேவை ஏற்பட்டது.

கிட்டுவின் குறுகிய கால சுவிட்ஸலாந்து வாசம் அங்குள்ள எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களை புதிய மெருகேற்றியது. ஒரு நம்பகமான கட்டமைப்பு உருவாக்கப் பட்டது.கவர்ச்சியும் செல்வாக்குமுள்ள கிட்டுவினால் அங்குள்ள பெருந்தொகையான தமிழர்களை எல்.ரீ.ரீ.ஈயின் பக்கமாக கவர முடிந்தது. கிட்டுவின் சொற்பகால சுவிட்ஸலாந்து வாசத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் நடராஜா முரளீதரன் என்றழைக்கப்படும் முரளியின கரங்களைப் பலப்படுத்த முடிந்தது.

சுவிஸ் முரளி

a_swissMurali.jpg

கிட்டுவினால் அடித்தளமிடப்பட்டு கட்டப்பட்டதை புது மெருகிட்டு எல்.ரீ.ரீ.ஈயினை சுவிட்ஸலாந்தில் விருத்தியாக்க முரளியினால் இயலுமாகவிருந்தது. 1991 முதல் 1997 வரையான முரளியின் பதவிக் காலத்தில் சுவிட்ஸலாந்தில் எல்.ரீ.ரீ.ஈ பலமாக வளர்ச்சி பெற்றது. முரளி சுவிட்ஸலாந்தில் தமிழ் பாடசாலைகளின் ஒரு வலையமைப்பையே உருவாக்கினார்.அதேபோல மக்கள் கடைகள் எனப்படும் ஒரு மளிகைக்கடை சங்கிலியையும் அமைத்தார். மாறுபட்ட தோற்றப்பாடுடைய முரளியின் சுவிஸ் தலைமை வன்முறை எதிர்ப்புகளை அடக்கிவைத்து மாறுபட்ட கருத்துள்ளவர்களை அடக்கி அல்லது வற்புறுத்தி தன்பக்கமிழுக்க உதவியாக இருந்தது.

முரளி அல்லது சுவிஸ் முரளியினால் பயன்படுத்தப்பட்ட வழிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றதினால் சுவிட்ஸலாந்தில் எல்.ரீ.ரீ.ஈயினர் தங்களை நன்கு நிலை நிறுத்திக் கொண்டனர். சூரிச், பேர்ண், மற்றும் ஜெனிவா போன்ற இடங்களில் நடைபெற்ற எல்.ரீ.ரீ.ஈ ஊhவலங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலைமோதினர். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற ஒன்றுகூடல்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க சுவிட்ஸலாந்து தமிழர்கள் பெரிதும் உதவியாயிருந்தனர். சுவிட்ஸலாந்து தமிழர்கள் தலைக்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் பெருந்தொகையினை எல்.ரீ.ரீ.ஈக்கு பங்களிப்புச் செய்தார்கள்.

சுவிட்ஸலாந்து தமிழர்களின் செயற்பாடுகளின் விளைவாக முரளி எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின்; பிரியத்துக்குரியவராக மாறினார். முன்பு ஒரு சமயம் பிரபாகரன் பி.பி.சி.தமிழ் சேவையின் நன்கு பிரபலமான ஒரு அறிவிப்பாளரிடம் சுவிட்ஸலாந்து முரளீதரன் தான் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டுக் கிளைகளின் தலைவர்களிலேயே மிகவும் திறமையானவர் எனக் கூறியிருந்தார். ஆனால் முரளீதரன், ஹம்ரி – டம்ரி எனும் சிறுவர் பாடலில் வருவதைப் போல ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது.

1966ல் வன்முறை,அச்சுறுத்தல், கப்பம் கோரல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் முரளியும் மற்றும் பதினான்கு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களும் சுவிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப் பட்டார்கள். அதைத் தொடர்ந்து முரளி எட்டு மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார், அதேநேரம் மற்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். தவறான கைது மற்றும் தடுப்புக்கு எதிராக தனது பங்குக்கு முரளி சுவிஸ் அதிகாரிகளிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்தார். இதேவேளை முரளிக்கு எதிராக சாட்சிகள் வழங்கும்படி தமிழ்சாட்சியாளர்களை அச்சுறித்திச் சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன.

முரளி சிறையில் இருந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ க்குள் இருந்து கொண்டே அவரைத் தூற்றுபவர்கள், இயக்கத்தின் நன்மைக்கு வேண்டி அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என எல்.ரீ.ரீ.ஈயின் உயர்மட்டத்தை நம்பவைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார்கள். 1997ல் முரளி குற்றவாளி இல்லை என விடுவிக்கப்பட்ட போது அவரது பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். வன்னிக்குத் திரும்பும்படி அவருக்கு கட்டளையிடப்பட்டது. அவ்வாறு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்த முன்னாள் சுவிஸ் புலித் தலைவர் தனது குடும்பத்துடன் புதிய இருப்பிடம் தேடி கனடா சென்றார். அவர் இப்போது கனடாவில் வாழ்ந்து வந்தாலும் இன்னமும் சுவிஸ் முரளி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். ஆச்சரியப்படத் தக்க வகையில் தவறான கைதுக்காக நட்டஈடு கோரித் தொடரப்பட்ட வழக்கில் முரளி வெற்றி பெற்று கனடாவில் வாழ்ந்தாலும் சுவிட்ஸலாந்திடமிருந்து மிகப் பெரிய தொகையினை நட்டஈடாகப் பெற்றுக் கொண்டார்.

அவ்ரோ குலம்

a_Swisskulam.jpg

சுவிஸ் முரளியின் வீழ்ச்சிக்கும் அவரது வெளியேற்றத்திற்கும் மாறாக சுவிட்ஸலாந்தில் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்தும் செழித்துக் கொண்டேயிருந்தது. பல கூட்டுத் தலைமைகளுக்கப் பின்னர் அவ்ரோ குலம் என அழைக்கப்படும் செல்லையா குலசேகரம் அல்லது குலம் சுவிஸின் புலித் தலைவராக நியமிக்கப்பட்டார். குலம் எல்.ரீ.ரீ.ஈயின் ஆரம்பகால அங்கத்தவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகாவும் ஆவார். 1978 செப்டம்பரில் இரத்மலானையில் நிகழ்ந்த எயார் சிலோன் விமானக் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதின் பின்னர் அவர் அவ்ரோ குலம் என அழைக்கப் படலானார்.

2002ல் கேபி நிர்ப்பந்தமாக வெளியேற்றப் பட்டதின் பின்னர் குலத்தின் நிலை நெருகடிக்கு உள்ளாகியது. கஸ்ட்ரோ என்றழைக்கப்படும் மணிவண்ணன் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் புதிய தலைவராகியதும் குலத்தை கேபிக்கு விசுவாசமானவர் எனக் கணித்து அவரை ஓரங்கட்டத் தொடங்கினார். நீண்ட அனுபவமுள்ள குலம் பிரபாகரனுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவினைக் கொண்டிருந்ததால் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற கஸ்ட்ரோவினால் முடியவில்லை. எனவே கஸ்ட்ரோ குலத்துக்கு குழி பறிக்கத் தொடங்கி அப்துல்லா என்கிற இயக்கப் பெயரினைக் கொண்ட மற்றொருவருக்கு முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் வழங்கத்தொடங்கினார்.

அப்துல்லாவின் இயற்பெயர் செல்லையா ஜெயபாலன். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். சுவிஸ் புலிகளின் நிதித் தலைவராக இவர் நியமிக்கப்பட்டு செல்லுபடக்கூடியதாக அதைக் கொண்டு நடத்தும் உண்மையான அதிகாரம் இவருக்கு வழங்கப் பட்டது. குலம் படிப்படியாக மதிப்பிழந்து அடக்கியாளப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது சக்தியற்ற தன்மை அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் அந்தோ குலம் தனது பெயரளவில் இருந்த தலைமைப் பதவியிலிருந்து பலவந்தமாக வெளியே தள்ளப் படும் அந்த நேரமும் வந்து சேர்ந்தது.

இது நடந்தது மார்ச் 2009ல். அவரை வெளியேற்றியதற்கான சூழ்நிலைகள்தான் சுவிஸில் எல்.ரீ.ரீ.ஈ இப்போது உறையிடப்பட்டிருக்கும் சகல பிரச்சனைகளுக்கும் காரணம்.

என்ன நடந்தது என்றால் 2007 – 2008 ல் எல்.ரீ.ரீ.ஈ இறுதி யுத்தம் என்ற பெயரில் வெளிநாடுகளில் பாரிய நிதி சேகரிப்பு பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு தடவை சுவிட்ஸலாந்து முன்னணியில் நினறது. பொதுச் சேகரிப்பு மற்றும் விசேட சேகரிப்பு ஆகியவற்றின் மூலம் மிகப் பெருந்தொகையான பணம் திரட்டப்பட்டது.

ஆனால் 2009ன் தொடக்கத்தில் ஆயுதம் வாங்க மற்றொரு விசேட சேகரிப்பினை மேற்கொள்ளும் படி கஸ்ட்ரோ சுவிஸ் புலிகளுக்கு கட்டளை பிறப்பித்தார். எல்.ரீ.ரீ.ஈயின் வெற்றிகரமான நிதி சேகரிப்பாளர்கள் என்கிற மதிப்பினைக் கொண்ட சுவிஸ் புலிகள் மீண்டும் அதில் முன்னணி நிலையினைப் பெறுவார்கள் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் சுவிஸ் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் குலம் அதில் விருப்பம் கொண்டிருக்கவில்லை அத்துடன் அவர் இந்த விடயத்தில் கஸ்ட்ரோவை உறுதியாக எதிர்த்து நின்றார். முந்தைய விசேட சேகரிப்பில் பெறப்பட்ட கடன்கள் இன்னமும் திருப்பிச் செலுத்தப் படாத நிலையில் மற்றொரு விசேட சேகரிப்பினை மேற்கொள்வது மக்களுக்கு தாங்க முடியாத அதிகப்படியான சுமையை ஏற்படுத்தும் என குலம் சுட்டிக்காட்டினார்.

அப்துல்லா

யுத்தம் தீவிரமடைந்தபடியால் குலம் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கிடையிலான நேரடித் தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்தபடியால் கஸ்ட்ரோவுக்கும் அவரது மதிப்புக்குரிய பணிப் பையனான ஐரோப்பாவில் வசிக்கும் நெடியவன் என அழைக்கப்படும் சிவபரன் பேரின்பநாயகத்துக்கும் குலத்தை தலைமைப் பதவியிலிருந்து அகற்றுவது சுலபமாக இருந்தது. மீண்டும் ஒரு தடவை கூடடுத் தலைமை ஏற்படுத்தப்பட்டு புதிய நிதி சேகரிப்பு பிரச்சாரம் அப்துல்லா என்றழைக்கப்படும் ஜெயபாலன் தலைமையில்; தொடங்கியது. இதன் விளைவாக சுவிஸ் புலிக் கட்டமைப்புக்குள் பிளவு உண்டானது, குலமும் அவரது விசுவாசிகளும் பிணைப்பு அறுக்கப்பட்டு அந்நியப் படுத்தப் பட்டார்கள்.

அவசர ஆயுதக் கொள்வனவு என்கிற வெளிப்படையான தோற்றத்தில் நிதி சேகரிப்பதற்காக விசேட சேகரிப்பை மேற்கொள்வது அப்போது நிலவும் சூழ்நிலையில் பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசிகள் மத்தியிலும் ஒரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தியது.

முல்லைத்ததீவு கரையோரப் பகுதியில் உள்ள காரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குள்ளான ஒரு துண்டுப் பகுதிக்குள் எல்.ரீ.ரீ.ஈ விரைவாக அடைபட்டுக் கொண்டிருக்கும் போது வெளிநாட்டுப் புலிகள், பதில் தாக்குதலை நடத்தி எதிரிகளை நிர்மூலமாக்க ஆயுதங்கள் அவசரமாகப் பெறவேண்டும் எனக்கூறிக் கொண்டு நிதி சேகரிப்பை ஆரம்பித்தார்கள். உணர்ச்சி வேகத்தால் உந்தப்பட்ட புலம் பெயர் சமூகம் திரும்பவும் புலிகளின் பணப்பேழைகளை நிறைக்க ஆரம்பித்தார்கள். இது போன்ற நிகழ்வு சுவிட்ஸலாந்தில் மட்டும் நடைபெறவில்லை அநேகமாக அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் எல்லா நாடுகளிலுமே நடைபெற்றது. வெளிநாடுகளிலுள்ள

எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புக்கள் பரந்த அளவில் விசேட சேகரிப்புத் திட்டத்தின் கீழ் நிதி திரட்டும் பிரச்சாரத்தை நடத்த ஆரம்பித்தார்கள் அதிக எண்ணிக்கையிலான எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் தங்கள் பெயர்களில் வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றை ஆயுதம் வாங்குவதற்காக எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு மாற்றினார்கள். சில சந்தர்ப்பங்களில் எல்.ரீ.ரீ.ஈயினரும் இந்தத் பணத்துக்கு ஊக்கத் தொகையாக வட்டி வழங்குவதாக வாக்குறுதியளித்தார்கள். இது வங்கிகளுக் கொடுக்க வேண்டிய கடனுக்கான வட்டியைத் திருப்பித் தருவதுடன் மேலதிகமாக வழங்கப்படும் தொகையாகும்.

கொந்தளிப்பு

இப்படியாக மார்ச் 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் உலகம் பூராவும் விசேட சேகரிப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன்கள் மூலமாக பெருமளவு நிதி திரட்டப் பட்டது. வழக்கம்போல மீண்டும் ஒரு தடவை நிதி சேகரிப்பில் முன்னணியில் நின்று சுவிட்ஸலாந்து பட்டியலில் முதலிடம் பெற்றது. நான்கு அல்லது ஐந்து மாத கால இடைவெளிக்குள் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினர்; மிக மிகப் பெரிய தொகையினை திரட்டுவதில் வெற்றி பெற்றனர்.

கடைசி நிமிடத்தில் ஒரு வித வெறியுடன் நிதி சேகரிக்கப் பட்ட போதிலும் அதில் கசப்பான உண்மை என்னவென்றால் அதிலிருந்து ஒரு சதம் கூட ஆயுதம் வாங்கி வன்னிக்கு அனுப்புவதற்குப் பயன்படவில்லை. ஆயுதக் கொள்வனவு என்கிற பெயரில் ஒப்புக்கொண்டு நிதி சேகரித்து வெறுமே பயன்படுத்தப்படாமல் வெளிநாடுகளில் விடப்பட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈயும் இராணுவத் தோல்வியை எதிர்கொண்டு முள்ளிவாய்க்காலில் துடைத்தழிக்கப் பட்டுவிட்டது. ஒரு இறுதி வீச்சில் இராணுவச் சமன்பாடு மாற்றியமைக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையில் தற்போதைய நெருக்கடிக்கான விதைகள் புலம் பெயர் புலிகள் மற்றும் புலிகள் சார்பான மூலகங்களுக்கிடையில் விதைக்கப்பட்டு விட்டது. வங்கிக் கடன்கள் மூலம் திரட்டப்பட்ட பணம் எல்.ரீ.ரீ.ஈயினால் உரிமையளிக்கப்பட்டவர்களது பைகளுக்குள் போய்விட்டது. தங்கள் பெயர்களில் வங்கிகளில் கடன்வாங்கிய ஆர்வமுள்ள ஆதரவாளர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இடர்ப்படுகிறார்கள். கடன்களைத் திருப்பித் தருவதாக உத்தரவாதம் நல்கிய புலிகளின் பெருந்தலைகளை அணுகமுடியவில்லை ஓடி ஒளிந்து விளையாடுகிறார்கள்.

எல்.ரீ.ரீ.ஈயின் உண்மையான ஆதரவாளர்களான வெளிநாட்டுத் தமிழர்களின் இதயங்களிலும் மனங்களிலும் கடுஞ்சினத்தாலும் கோபத்தினாலும் பெரும் கொந்தளிப்பே உருவாகியுள்ளது. இதைத்தான் சுவிட்ஸலாந்து இப்போது நமக்கு சாட்சி பகர்கிறது, அங்கு எல்.ரீ.ரீ.ஈயின் பப்படம் உடைந்து நொறுங்க ஆரம்பித்துள்ளது. வேறு எங்கு வாழும் தமிழர்களைக் காட்டிலும் சுவிஸ் தமிழர்கள் இது தொடர்பில் அதிகம் துன்பப் படுகிறார்கள் ஏனெனில் அவர்கள் தங்கள் சக்தியையும் மீறி எல்.ரீ.ரீ.ஈயினருக்கு நிதி சேகரித்துக் கொடுத்து இன்று எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர்களினால் மிக மோசமாக வஞ்சிக்கப் பட்டுள்ளார்கள்.

தமிழில் எஸ்.குமார்

2002ல் கேபி நிர்ப்பந்தமாக வெளியேற்றப் பட்டதின் பின்னர் குலத்தின் நிலை நெருகடிக்கு உள்ளாகியது. கஸ்ட்ரோ என்றழைக்கப்படும் மணிவண்ணன் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் புதிய தலைவராகியதும் குலத்தை கேபிக்கு விசுவாசமானவர் எனக் கணித்து அவரை ஓரங்கட்டத் தொடங்கினார். நீண்ட அனுபவமுள்ள குலம் பிரபாகரனுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவினைக் கொண்டிருந்ததால் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற கஸ்ட்ரோவினால் முடியவில்லை. எனவே கஸ்ட்ரோ குலத்துக்கு குழி பறிக்கத் தொடங்கி அப்துல்லா என்கிற இயக்கப் பெயரினைக் கொண்ட மற்றொருவருக்கு முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் வழங்கத்தொடங்கினார்.

இறுதி நேரம் தலைவர் கஸ்ட்ரோ மீது கோபப்பட்டார் என்கிறார்கள்?

உண்மைகளை சிறிது சேர்த்து எழுதினால் புனை கதைகள் கூட உண்மை வரலாகிவிடுகிறது... !

உண்மைகளை சிறிது சேர்த்து எழுதினால் புனை கதைகள் கூட உண்மை வரலாகிவிடுகிறது... !

விடுதலை புலிகளை பற்றி அனைத்தும் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர் போல். :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான்

ஆனால்இதை எழுதியவர் எதற்காக இதைக்கையில்எடுக்கின்றார் என்பதே ஆராய்வுக்குரியது.

விடுதலை புலிகளை பற்றி அனைத்தும் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர் போல். :D

பொய்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு போதுமான அறிவு இருக்கு...! அதுக்கு புலிகளை பற்றி முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும் எண்டு இல்லை... !

இங்கு உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான்

ஆனால்இதை எழுதியவர் எதற்காக இதைக்கையில்எடுக்கின்றார் என்பதே ஆராய்வுக்குரியது.

உப்பிடி கேள்விகளை கேக்கும் அறிவு எங்கட சனத்துக்கு இருந்தால் ஏன் இந்த நிலை.... சிங்களவன் இணையத்தில் என்ன போட்டாலும் அதை கொண்டு வந்து போட்டு அவனின் நோக்கத்தை பிரச்சினை இல்லாமல் முடிச்சு வைக்கிற ஆக்கள் இருக்கும் மட்டும் என்னத்தை சாதிக்க போறியள்... குறைஞ்சது நோக்கம் என்ன எண்டதை கூட தெரிஞ்சு கொள்ள மாட்டமலே வாழுதுகள்...

... தடை ... என்பது மேற்குலகெங்கும்!!!! ... அத்தடையை எடுப்பிக்கவோ அல்லது சட்ட ரீதியாக அதனை எடுக்கவோ ... இன்று வரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை, எந்தப்புலம்பெயர் தேசத்திலும்!!!!!! .... அப்படி இருக்க ... அடக்கி வாசிப்பதற்கு பதில் .... ???????????

.... இது ... இந்த சுவிஸ் விவகாரம் ... ஓர் புற்றுநோய் போன்றது ... இது மேற்குலகெங்கும் தொடரப் போகிறது ....

இத்தனை அழிவிற்குப்பின்னமும் ... எம்மை அழித்தவர்கள் ஊர்/உலகவலம் வருகிறார்கள் ... யாரையாவது உள் தள்ள எம்மால் முடிந்ததா??? ... நாம் இன்று புலத்தில் எதனை செய்ய வேண்டுமோ அதனை செய்யாது ... எம் கதிரைகளுக்கும், கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் சொத்துகள்/பணங்களுக்குமாக .... எல்லாவற்றையும் கோட்டை விடப் போகிறோம்!!!!!!!!! ... கோட்டை விடுவதையும் வெகு சீக்கரமே விட போட்டி போட்டு செய்து கொண்டிருக்கிறார்கள் .... புலத்து தண்டச்சோறுகள்!!!!!!!!!!!!

ஒத்துக்கொள்கிறன்... செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை.... ஆனால் குறைகளை பிடிச்சு கொண்டு நான் சரி, நீ சரி எண்டு சண்டை பிடிக்கும் காலமா இது....??

குறைஞ்சது எவ்வளவு சாதிக்க முடியும் எண்டுறீயள்...??

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

(பகுதி 2)-டீ.பி.எஸ்.ஜெயராஜ்

1

சனப்பரம்பல்

சுவிஸ் முரளி

a_swissMurali.jpg

1966ல் வன்முறை,அச்சுறுத்தல், கப்பம் கோரல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் முரளியும் மற்றும் பதினான்கு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களும் சுவிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப் பட்டார்கள். அதைத் தொடர்ந்து முரளி எட்டு மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார், அதேநேரம் மற்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். தவறான கைது மற்றும் தடுப்புக்கு எதிராக தனது பங்குக்கு முரளி சுவிஸ் அதிகாரிகளிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்தார். இதேவேளை முரளிக்கு எதிராக சாட்சிகள் வழங்கும்படி தமிழ்சாட்சியாளர்களை அச்சுறித்திச் சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன.

எழுதியவர் ஆண்டை மாற்றினவரோ அல்லது மொழி பெயர்த்தவர் அவசரத்தில் மாத்திப் போட்டு விட்டவரா :unsure:

ஒத்துக்கொள்கிறன்... செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை.... ஆனால் குறைகளை பிடிச்சு கொண்டு நான் சரி, நீ சரி எண்டு சண்டை பிடிக்கும் காலமா இது....??

குறைஞ்சது எவ்வளவு சாதிக்க முடியும் எண்டுறீயள்...??

... குறைந்த பட்சம், மே18 இற்குப் பின்னர், ஏறக்குறைய ஒவ்வொரு நாட்களும் ... நெடியமானின் ஏவலில் ... அதியமானாகவும், சேரமானாகவும், அகஸ்தியர்களாகவும் வந்து சேறள்ளி எறிந்து/வதந்திகளை பரப்ப்பி/குட்டையை குழப்பிய தண்டச்சோறுகளை ... ஓரளவாவது கட்டுப்படுத்தியிருக்கிறோம்!!!!!!!

அதை விட அதிகமான ஆக்களை குழப்பத்துக்கை தள்ளி இருக்கிறீயள்... ! இவ்வளவு காலமாக ஒரு தெளிவான முடிவுக்கு மக்கள் வராமல் இருப்பதுக்கும் காரணமும் அதுதான்... ! இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு அவர்களை அடக்கி வைக்கிறது மட்டும் தான் நீங்கள் செய்ய போவது எண்டால் நீங்கள் செய்வது தான் சரி...

பதறாத காரியம் சிதறாது எனும் பழமொழியை கேள்விப்பட்டு இருக்கிறீயளோ....??

கருணாவின் பிரிவை புலிகள் எப்படி கையாண்டார்கள் எண்டதை பாருங்கள்... கருணாவுக்கு ஆதரவாக பல ஊடகங்கள் பலவாறான அவதூறுகளை புலிகளை நோக்கி அள்ளி வீசிக்கொண்டு இருந்தன... ஆனால் புலிகள் அவைகளுக்கு எப்போது பதில் அழித்து அவற்றுக்கு முக்கியத்துவம் குடுத்தது கிடையாது... அதே நேரம் கிழக்கில் நடக்கும் வன் செய்திகள் மக்களுக்கு வந்து சேர்ந்து கொண்டு இருந்தது... !

மக்களை தெளிவான முடிவெடுக்க தூண்டி விட்டுத்தான் புலிகள் கிழக்கின் மீது வெளிப்படையாக போர் தொடுத்தனர்... அதனால் தான் கிழக்கில் கருணாவுடன் இருந்த போராளிகள் போராடாமல் தவிர்த்தனர்... இழப்புக்களை குறைத்து கருணாவின் வெளியேற்றம் சாத்தியமானது...

இப்ப நான் சொல்ல வாறது இதுதான்... அவர்கள் சேறடிக்கிறார்கள் எண்டு நீங்களும் திருப்பி சேறடித்தால் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்... ???

கடந்த மாவீரர் நாளில் புலிகளின் தலைமை செயலகம் வெளியிட்ட உரைக்கு போட்டியாக ஒரு அறிக்கையை தாங்களும் வெளியிட்டு அவர்களாக தங்களை வெளிக்காட்டி இருக்கிறார்கள் தாங்கள் புலிகள் இல்லை எண்டு ... இதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் அவர்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை எண்டு ... மக்கள் ஆதரவு கொடுப்பது புலிகளின் பெயருக்கு தான் இவர்களுக்கு இல்லை... !

நிலமை இப்படி இருக்க நாங்கள் இராசதந்திரம் பற்றி கதைக்க தகுதியான ஆக்களோ....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு ஒரு தமிழன் யார் யார் என்ன பொறுப்பில் உள்ளார்கள் என விளாவாரியாக எழுதி இலங்கை அரசுக்கு தனது அடிவருடி தனத்தை காட்டுகிறார்.இதன் மூலம் தனது வருமானத்தை பெற்றுக்கொள்கிறார்.இவரால் சிங்கள புலனாய்வாளர்கள்,அரசியல்வாதிகள் பற்றி ஒரு வரி எழுதமாட்டார்.அதே நேரம் ஒரு சிங்களவனாவது வன்னியில் சிங்கள இராணுவத்தின் தமிழ் மக்கள் மீதான படு கொலை பற்றியோ அல்லது சரணடைந்த போராளிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றியோ இற்றை வரை யாரும் எழுதவில்லை.இனி எழுதவும் மாட்டார்கள்.

ஜெயராஜுக்கு புலிகள் மட்டுமல்ல தமிழர்களும் எதிரிகள் தான். அந்த வகையில் தான் அவரது எழுத்துக்கள் உள்ளன.

டி . எஸ. பீ யரும் பப்படம் பொரிக்கிறாரே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் நோக்கம் தமிழர்களின் உளவியலை உடைத்து தமிழீழம் என்ற கோட்பாட்டின் மீதுள்ள பற்றுதியை தகர்ப்பதே.மற்றும்படி பங்களித்தவர்கள் தங்களால் செழிப்பாக வளர்க்கப்பட்ட விடுதலை இயக்கம் அழிந்து விட்டதே என்று கவலைப்படுகிறார்களே ஒழிய பணம் போய்விட்டதே என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

உன் எதிரியை அழிக்க வேண்டும் என்றால் அவன் இமாஜை முதலில் அழியுங்கள் - இஸ்ரவேலர்

உன் எதிரியை அழிக்க வேண்டும் என்றால் அவன் சித்தாந்தத்தை நீங்கள் முதலில் அழியுங்கள் - லெனின்

உன் எதிரியை நீங்கள் அழிக்க வேண்டும் என்றால் அவனை நண்பனாக்கி கொள்ளுங்கள் - ஆபிரகாம் லிங்கன்

உன் எதிரியை நீங்கள் அழிக்க வேண்டுமெனில் அவனுடன் அன்பாக இருங்கள் - காந்தி

இது எல்லாவற்றையும் சிங்களவன் சரியாக செய்கின்றான். ஆனால் நாமோ மேற்கூறபப்ட்டவை எல்லாவற்றையும் எம்மவர்க்கே பாவிக்கின்றோமே அதுதான் பிரச்சினையே

இவற்றை சிங்களவனுக்கு எதிராக திட்டமிட்டு பல்வேறு கோனங்களில் செய்தால் சிங்களவன் அழிவான்.

ஓர் உதாரணம்.. இன்று மஹிந்த ராஜபக்‌ஷ பற்றி தேடுதளத்தில் போனால் அவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று வருகின்றது. விக்கிபீடியாவிலும் அப்படித்தான். இது எம்மவரால் மேற்கொள்ளப்பட்ட

உன் எதிரியை அழிக்க வேண்டும் என்றால் அவன் இமாஜை முதலில் அழியுங்கள் - இஸ்ரவேலர் . என்ற திட்டத்தினுள் அடங்கும்.. அதுபோலவே நாம் எதை செய்தாலும் சிங்களவனை நோக்கி அடிக்க வேண்டும்.

தமிழர்களிடையேயான பிரச்சினைகளை தீர்க்க வேறு யுக்திகளை கையாளவேண்டும்

Edited by உமை

... சிங்களவன் எம்மை குறுகிய காலத்தில் அழிக்க வேண்டுமாயின் .... கொஞ்சக்காலம் எட்ட இருந்தால் போதும் ... நாமே அடிபட்டு அழிந்து விடுவோம்!!!!!!!!!

... இன்றுவரை.........புலத்தில் எம்மக்களின் பிரதிநிதிகள்/எம்மை வழி நடத்துபவர்கள்/... என்றெல்லாம் இருந்தவர்கள்/சொல்லி எம்மிடம் இருந்தவற்றை பிடுங்கியவர்கள் ... ... மே18இற்குப் பின்னர் ..... அங்கு ஆணிவேரே அறுபட்டு விருட்சம் சாய்ந்த பின் கூட ..... இன்றுவரை ...

* சாதாரண புலம்வாழ் தமிழ் மக்களிடம் மட்டுமல்ல

* புலிகளின் பின்னால் உறுதியாக நின்றவர்களிடம் மட்டுமல்ல

* தமிழ் தேசிய அரசியல் கட்டிகளிடம் மட்டுமல்ல

* மாற்றுக்கருத்து கொள்கை உள்ளவர்களோடும் மட்டுமல்ல

..... புலத்தில் கடந்த காலங்களில் புலிகளின் பல்வேறு அமைப்புகளுக்காக செயற்பட்டவர்களோடு, கூடி ஆராய்ந்து, ஒரு பொது வேலை திட்டத்தின் கீழ் செயற்பட எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை!!!!!!!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச்சொல்லமுடியாது நெல்லையன்

முயற்சிகள் நடந்தன

ஆனால் நாம் சந்தேகப்பட்டோம் என்பது தான் உண்மை

... சிங்களவன் எம்மை குறுகிய காலத்தில் அழிக்க வேண்டுமாயின் .... கொஞ்சக்காலம் எட்ட இருந்தால் போதும் ... நாமே அடிபட்டு அழிந்து விடுவோம்!!!!!!!!!

... இன்றுவரை.........புலத்தில் எம்மக்களின் பிரதிநிதிகள்/எம்மை வழி நடத்துபவர்கள்/... என்றெல்லாம் இருந்தவர்கள்/சொல்லி எம்மிடம் இருந்தவற்றை பிடுங்கியவர்கள் ... ... மே18இற்குப் பின்னர் ..... அங்கு ஆணிவேரே அறுபட்டு விருட்சம் சாய்ந்த பின் கூட ..... இன்றுவரை ...

* சாதாரண புலம்வாழ் தமிழ் மக்களிடம் மட்டுமல்ல

* புலிகளின் பின்னால் உறுதியாக நின்றவர்களிடம் மட்டுமல்ல

* தமிழ் தேசிய அரசியல் கட்டிகளிடம் மட்டுமல்ல

* மாற்றுக்கருத்து கொள்கை உள்ளவர்களோடும் மட்டுமல்ல

..... புலத்தில் கடந்த காலங்களில் புலிகளின் பல்வேறு அமைப்புகளுக்காக செயற்பட்டவர்களோடு, கூடி ஆராய்ந்து, ஒரு பொது வேலை திட்டத்தின் கீழ் செயற்பட எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை!!!!!!!!! ...

மாத்தையாவை கைது செய்ய போன போராளிகளுக்கு சொல்ல சொல்லி தலைவர் ஒரு செய்தியை சொல்லி விட்டு இருந்தார்... மாத்தையா பிழை விட்டு இருந்து இருக்கலாம், ஆனால் அவருடன் நிக்கும் போராளிகள் எங்களை நம்பி வந்தவர்கள், நாங்கள் தான் அவர்களை அங்கே விட்டனாங்கள்... அவர்கள் உண்மை தெரியாமல் அங்கை நிக்கிறவர்கள்... ஒருவேளை மாத்தையாவில் விசுவாசமாக கூட அவர்கள் இருக்கலாம்... ஒருவேளை எங்களோடை அவர்கள் முதலில் இருந்து நிண்டு இருந்தால் எங்களுக்கு விசுவாசமாக இருந்து இருப்பார்கள்... ஆகவே சண்டை எண்ட ஒண்டு வந்தால் இளப்பு என்பது எங்களுக்கு மட்டும் தான்.... காரணம் அவர்களும் எங்கட போராளிகள் தான்... !

இதை தான் இங்கை நான் சொல்ல வாறது... அங்கை பொறுப்பிலை நிக்கிறவை பிழையாக இருக்கலாம்... அதுக்காக ஒட்டு மொத்தமானவர்கள் மீதும் போர் தொடுக்கிறது எங்களுக்கு தான் இளப்பை குடுக்கும்...

இதுக்கு மேலை உங்களிட்டை இல்லாத தந்திரம், இராசதந்திரம் பற்றி எல்லாம் இங்கை தயவு செய்து பேசாதீர்கள்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம்மும் இந்திய நாய்களிடமும் நக்கி வாழும் நாய்களுக்கு புலியை பற்றி ஏதாவது எழுதினாலே சோறு.

சோறு உண்ண நக்கிபிழைக்கும் ஒரு கூட்டம் இப்போது இணையத்தில் தமிழை தட்டச்சு செய்ய கூடிய எல்லா இடத்திலும் இருந்து கொண்டு எதையாவது தட்டி எழுதிகொணடிருக்கும். அதற்கு கூலி கொடுக்க ஒரு மனிதவடிவ மிருக கூட்டம் இருக்கின்றது.

மற்றைய ஒரு கூட்டம் சும்ம இருந்தவரெல்லாம் பதவியிலே இருக்கிறார் நானும் ஒரு பெரும்புள்ளி ஆகிவிடலாம் என்ற ஆவலுடன் புலிவாலை பிடிக்க போய் மூக்குடைந்து நிற்கின்றது. அவர்களுக்கு புலிகளின் போராட்டதிதை தவறாக எழுதாவிட்டாலும் சில புலி உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்களையும் பற்றி எதையாவது வாந்தியெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு வயிற்றுளைவு.

இன்னொரு கூட்டம் எல்லா வாந்திகளையும் அள்ளி குடித்துவிட்டு உண்மையெது பொய்எது என்று தெரியாதுபோனாலும் தமக்கு தெரிந்ததே 100வீதம் உண்மை என்றெண்ணி தாம்மை ஒரு அறிவானவர்களாக உள்ளார எண்ணிகொண்டு குடித்த வாந்திகளை தமது சொந்த தயாரிப்பாக மாத்தி கொஞ்சம் வித்தியாசமாக அதே வாந்தியை திரும்ப திரும்ப எடுத்துகொண்டிருக்pன்றது.

என்ன விதியோ பிறந்தபலனோ என்னவோ உச்சத்தில நிற்பதால் எதோ கொஞ்ச தழிழனின் வரலாறு தெரிந்த காரணத்தால் இப்படி பாராண்டி தமிழன் வீழ கூடாது என்ற தமிழ் உணர்வால் உந்தபட்டு இந்த பாயாய்போன நாய்களின் கருத்துகளை எல்லாம் வாசிக்க வேண்டிய பரிதாப நிலையில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

பிரபாகரன் என்ற தமிழ் இளைஞனுக்கு இருந்த அத்தனை கடமைகுளும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தது. அப்போதுதான் எல்லாவற்றையும் அவனுடைய தலையில் கட்டிவிட்டு போற்றுவோர் ஒரு புறமும் தூற்றுவோர் மறுபுறமுமாக காலத்தை கழித்தார்கள் என்றால்.

இப்போதும் அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்பதை கிளறுவதுதான் சிலருக்கு பொழுதுபோக்கு. அவரும் இவரும் என்ன செய்தால் உனக்கு என்ன? நீ என்ன செய்தாய்? நான் என்ன செய்தேன்? என்று நீயும் நானும் எழுத என்ன இருக்கின்றது?

அவர் காசை கழவாடினால் என்ன நானும் நீயும் அந்த பொறுப்பில் அப்போது இருந்திருந்தால் அது நடந்திருக்காதே? அப்போதுதான் இல்லை இனியும்............??? அவர் களவாடினார். அது இறந்தகாலம் அது முடிந்துவிட்டது. இது நிகழ்காலம் அப்போதும் அதே குப்பையை கிழறிகொண்டிருக்கின்றாயே உனக்கு தமிழானக இல்லாவிடினும் மனிதனாக சிறிது வெட்கமில்லையா?

மாத்தையாவை கைது செய்ய போன போராளிகளுக்கு சொல்ல சொல்லி தலைவர் ஒரு செய்தியை சொல்லி விட்டு இருந்தார்... மாத்தையா பிழை விட்டு இருந்து இருக்கலாம், ஆனால் அவருடன் நிக்கும் போராளிகள் எங்களை நம்பி வந்தவர்கள், நாங்கள் தான் அவர்களை அங்கே விட்டனாங்கள்... அவர்கள் உண்மை தெரியாமல் அங்கை நிக்கிறவர்கள்... ஒருவேளை மாத்தையாவில் விசுவாசமாக கூட அவர்கள் இருக்கலாம்... ஒருவேளை எங்களோடை அவர்கள் முதலில் இருந்து நிண்டு இருந்தால் எங்களுக்கு விசுவாசமாக இருந்து இருப்பார்கள்... ஆகவே சண்டை எண்ட ஒண்டு வந்தால் இளப்பு என்பது எங்களுக்கு மட்டும் தான்.... காரணம் அவர்களும் எங்கட போராளிகள் தான்... !

இதை தான் இங்கை நான் சொல்ல வாறது... அங்கை பொறுப்பிலை நிக்கிறவை பிழையாக இருக்கலாம்... அதுக்காக ஒட்டு மொத்தமானவர்கள் மீதும் போர் தொடுக்கிறது எங்களுக்கு தான் இளப்பை குடுக்கும்...

இதுக்கு மேலை உங்களிட்டை இல்லாத தந்திரம், இராசதந்திரம் பற்றி எல்லாம் இங்கை தயவு செய்து பேசாதீர்கள்...!

:D:D:D

:D:D:D

பல்லு நல்ல வெள்ளையா இருக்கு... என்ன கட்டுப்பல்லோ....?? :unsure: :unsure:

பல்லு நல்ல வெள்ளையா இருக்கு... என்ன கட்டுப்பல்லோ....?? :unsure: :unsure:

:D :D :D

:D :D :D

உங்கட புண்ணியத்திலை யாழிலை கருத்துக்களின் எண்ணிக்கையை கூட்டுவம் எண்டு இருக்கிறன்... ஆனால் முகக்குறி போட்டு இல்லை....! <_< <_< <_<

உங்கட புண்ணியத்திலை யாழிலை கருத்துக்களின் எண்ணிக்கையை கூட்டுவம் எண்டு இருக்கிறன்... ஆனால் முகக்குறி போட்டு இல்லை....! <_< <_< <_<

:D :D :D

:D :D :D

இது மூண்டாவது... <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.