Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சிக் கடலில் யாழ் மீனவர்களால் 90 இந்திய மீனவர்கள் சுற்றிவளைப்பு

Featured Replies

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகுகளும் அவற்றிலிருந்த 90 மீனவர்களும் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு வடமராட்சி கரைக்கு கொண்வரப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தப் படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இம்மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வடமராட்சிக் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள இந்திய மீன்பிடிப் படகுகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய தினம் உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவப் படகுகளை சுற்றிவளைத்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/16568--90-.html

  • தொடங்கியவர்

Eezham fishermen seize trawlers with 100 Indian fishermen in the seas off Jaffna

from Naakappaddinam of Tamil Nadu state of India, destroying the livelihood of Eezham fishermen by bottom-trawling, have been seized by the local fishermen in the seas off Point Pedro Tuesday afternoon. The trawlers are being towed to Munai in Point Pedro by the fishermen, a fishing society representative told TamilNet. The latest development comes following repeated complaints by the local fishermen over a long period of time about the fishing trawlers destroying the fishing tools and the resources in the sea. The fishermen representatives further said around 100 Tamil Nadu fishermen were in their custody and they were being looked after well.

The fishermen representatives complained of lack of progress despite their repeated complaints. They referred to a meeting with the Indian envoy in Jaffna this week and said they wanted to demonstrate the seriousness of the issue by seizing the fishing trawlers.

When Eezham Tamils had their own naval power, the Sea Tigers, Indian trawlers did not engage in such aggressive acts, the representatives of the fishermen further said blaming Colombo and New Delhi for setting Eezham Tamils against the fishermen of Tamil Nadu.

"There was a clear understanding between the communities on both the sides," the representatives further said, urging Tamil Nadu political leaders to visit and witness the plight of Eezham Tamil fishermen who are threatened by the occupation of Sri Lankan military on one hand and by the invading fishing trawlers from Tamil Nadu, causing serious destruction to their livelihood.

The Indian fishermen being kept captives by Vadamaraadchi fishermen are from Naakappaddinam in Tamil Nadu, the representatives of fishermen society in Point Pedro told TamilNet.

Two fishing trawlers were seized in the seas of Vadamaraadchi East and were being towed to Munai in Vadamaraadchi North.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33552

கொலை செய்யாமல் அவர்களை விட்டது தப்பு.

மோட்டுச் சிங்களவன் ... என்ன மாதிரி பிரட்டினான் பாருங்கள்! ... நேற்று மட்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொண்ற சிங்கள அரசும் அதன் படைகளும், இனி தமிழக மீனவர்களின் நண்பர்களாக போகிறார்கள்?????? ....... இது முன்பு நாமும் , மோட்டுச் சிங்களவனும் அடிபட பின்னுக்கு நிண்ட இந்தியாக்காரனை முன்னுக்கிழுத்த மோட்டுச் சிங்களவன் எங்களுடன் அடிபட விட்டுட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .... அதேபோல், இதுவும் ....

... ஆனால் நாம் விசிலடித்துப் பழகியவர்கள்!!!!!!! .... தொடர்ந்தடிப்போம்!!!!!!!!!!! .... `பாவம் மோட்டுச் சிங்களவன் ... <_<

மோட்டுச் சிங்களவன் ... என்ன மாதிரி பிரட்டினான் பாருங்கள்! ... நேற்று மட்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொண்ற சிங்கள அரசும் அதன் படைகளும், இனி தமிழக மீனவர்களின் நண்பர்களாக போகிறார்கள்?????? ....... இது முன்பு நாமும் , மோட்டுச் சிங்களவனும் அடிபட பின்னுக்கு நிண்ட இந்தியாக்காரனை முன்னுக்கிழுத்த மோட்டுச் சிங்களவன் எங்களுடன் அடிபட விட்டுட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .... அதேபோல், இதுவும் ....

... ஆனால் நாம் விசிலடித்துப் பழகியவர்கள்!!!!!!! .... தொடர்ந்தடிப்போம்!!!!!!!!!!! .... `பாவம் மோட்டுச் சிங்களவன் ... <_<

சிங்களவன் மோடன் அல்ல நாம்தான் மோடர், முதலில் அதைப்புரிந்துகொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் மோடன் அல்ல நாம்தான் மோடர், முதலில் அதைப்புரிந்துகொள்ளவேண்டும்.

அதை பதிவுகளே சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலை செய்யாமல் அவர்களை விட்டது தப்பு.

புலி எதிர்ப்பு என்ற ஒரு அடிப்படைக்குள் எப்படி ஒவ்வொரு விடயத்திலுமே வித்தியாசங்களில் துருவங்களாக விளங்குகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களம் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு விடயமாக இருக்கும் என்பதில் வியப்பில்லை. நடக்கக்கூடாத சம்பவம்.ஆனாலும் நடந்து விட்டது. சிங்கள ஆக்கிரமிப்பில் நலிவுற்றிருக்கும் ஈழ மீனவனை தமிழக மீனவன் மேலும் நலிவடையச் செய்வது தவறு. அதேவேளை அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தல் என்பதும் தவறுதான். பேசித் தீர்க்கவேண்டிய சகோதரப் பிரச்சனை இது. :( இங்கே கருத்தெழுதும் பலரும், வெட்டுவோம், புடுங்குவோம், கொல்லுவோம் என்று எழுதுவதன் நோக்கம் புரியவில்லை. அவர்களுடனும் சண்டை பிடித்தால் இனி யாருடன் தான் சேர்ந்து போராடப்போகிறோம்??

இந்தப் பிணக்கின் மூலம் தமிழகத்திலிருக்கும் எமக்காதரவான சக்திகளை நாம் இன்னும் கஷ்ட்டப்படுத்தாமலிருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது ஒரு கருணாநிதியின் சூழ்ச்சி போல்தான் தெரிகிறது

அண்மையில் கூட அவர் சொல்லியிருந்தார் இவர்கள் ஏன் அங்கு மீன் பிடிக்கப்போகின்றார்கள் என்று. அதன் அடுத்த கட்டமாக தான் சொன்னது சரி என்று நிரூபிக்க எமது மீனவர்களை பயன்படுத்தியிருக்கலாம்.

நெடுக்ஸ் சொன்னதுபோல் எவ்வளவோ பயத்துடன் வாழும் எமது மீனவர்கள் சுத்தி வளைத்து இத்தனை மீனவர்களைக்கைது செய்வது என்பது வேறு எவரினதும் பக்கபலமின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

கொலை செய்யாமல் அவர்களை விட்டது தப்பு.

சிங்களவன் மோடன் அல்ல நாம்தான் மோடர், முதலில் அதைப்புரிந்துகொள்ளவேண்டும்.

36_19_2.gif

வேறு எவரினதும் பக்கபலமின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

உண்மைதான்...

90 பேரை புடிக்க எதனை பேர் போனர்கள்?

ஆயுதம் இல்லாமல் இதை செய்திருக்க முடியாது..

... இன்று கடலுக்கு மீன் பிடிக்க போகும் மீனவர்களுக்கு, மீண்டும் பாஸ் முறை வந்து விட்டதாகவோ, வரப்போவதாகவோ கூறுகிறார்கள் , அப்படியாயின் அங்குள்ள மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினரால் இருக்கும் அழுத்தத்தை நாம் உணரலாம்!

... இவை இப்படி இருக்க .... வீறு கொண்டெழுந்த வடமரட்ட்சி மீனவர்கள் ... 15 வள்ளங்களுடன், 100 பேரை சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்களாம்!!! .... உந்த தாக்குதலை தமிழ்நெட்டும் உலகறியச்செய்கிறது!!!

அங்குள்ள மீனவர்கள் ... இராணுவ கெடுபிடியின் மத்தியில் ... பெருந்திரளாக கடலுக்குள் போய், தமிழக மீனவர்களின் வள்ளங்களை வளைத்து, ஆட்களையும் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்களாம்??????????????

சிங்களவன் ... ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கிறான் ... நாமோ விசிலடிக்கிறோம்!!!!!

... நாமோ யூதனுக்கு அடுத்த மூளையுள்ள இனம்???????? அவன் என்ன மோட்டுச் சிங்களவனோ?????????? <_<

கடைசியாய் எல்லா தமிழக மீனவர்களையும் கொன்றது ஈழத்து தமிழன் என்று சிங்களவன் கதையை முடிக்கப் போறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்படும் சில கருத்துக்கள்.. குறிப்பாக தமிழக மீனவர்கள் மீது வன்மப் பாராட்டும் வகையில் எழுதப்படும் கருத்துக்கள்.. கண்ணை மூடிக்கொண்டு ஏதோ தேவைக்காக எழுதப்படுவது போன்றுள்ளது.

வடக்குக் கிழக்கு கரை எங்கும் சிங்களக் குடியேற்றங்களோடு சிங்களவர்கள் மீன்பிடிக்கு ஊக்குவிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு மீன் வளம் சிங்களவர்களால் திட்டமிட்டு சூறையாடப்படுவது.. பிரச்சனைக்கு உரிய ஒன்றல்ல..??????! 10 - 20 தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகள் ஏற்படுத்தும் தாக்கம் பெரியதாம். தமிழக மீனவர்கள் இன்று நேற்றல்ல கச்சதீவை கையளிக்க முதலும் பரந்த எல்லையில் மீன் பிடித்தனர். கச்சதீவைக் கையளித்து இன்று வேதனைகளை அனுபவிப்பவர்களும் அவர்களே.

வடக்குக் கிழக்கு மீனவர்கள் தென்பகுதியில் போய் மீன் பிடிக்கட்டும் பார்க்கலாம். அல்லது நீர்கொழும்பில் போய் மீன் பிடிக்கட்டும் பார்க்கலாம். இன ஒருமைப்பாடு சிங்கள சகோதரத்துவம் பேசுறவை.. அதையும் செய்ய வேண்டும்..???!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவது இன்று நேற்றல்ல. அது பல காலமாக நடந்தாலும்.. பேசித் தீர்க்கக் கூடிய விடயம் இது.

யாழ் குடா பவளப் பாறைகள் சிதைவடைவது சிங்களவன் வெட்டி அகற்றும் சுண்ணாம்புப் பாறைகளால் மிக அதிகமாகும். அவன் அவற்றை அகற்றி காலிக்கு கொண்டு சென்று அங்கு சீமெந்தை உற்பத்தி செய்கிறான். இதன் மூலம் யாழ் குடா கடலரிப்புக்கு இலக்காகி கடல் நீர் நிலத்தை விழுங்கி வருவதுடன்.. நன்னீரும் உவர் நீராகி வருகிறது.

அதுமட்டுமன்றி சிங்கள கடற்படை பயன்படுத்தும் கப்பல்கள்.. ஆழ் கடல் கலங்களால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை இட்டு எந்தக் கரிசணையும் காட்டாதவர்கள்.. இன்று தமிழக மீனவர்களின் சிறிய ரக றோலர்களின் தாக்கம் அளவுக்கு மிஞ்சியது என்று விம்பி அழக் காரணம் என்ன..???!

சரி அளவுக்கு மிஞ்சிய சேதம் என்றால்.. அதை இட்டு தமிழக மீனவ சங்கங்களுக்கு அறிவித்து அவர்களின் பிரதிநிதிகளோடு பேசி.. இதற்கு ஒரு சுமூக முடிவை கட்ட வேண்டியதுதானே. அப்படி விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர் தானே. அதையேன் இப்போ தொடர முடியாதுள்ளது..??!

ஏன் இந்தப் பிரச்சனை கடந்த 35 ஆண்டுகளாக இருக்கவில்லை. இப்போ திடீர் என்று முளைத்ததும் இன்றி.. தீர்வுக்கு சிங்கள அமைச்சரின் உதவியை நாடுவதும்... மீனவர்களை சுற்றிவளைப்பதும் என்று வேடிக்கை காட்டுவது சரியா..??!

உண்மையில் அந்த மீனவர்கள் கரைக்கு அண்மித்து நின்று மீன்பிடிக்கப்படும் போது சுற்றிவளைக்கப்பட்டார்களா.. அல்லது நடுக்கடலில் வைத்து சிங்கள மீனவர்களாலும் சிவில் உடை சிங்கள கடற்படையாலும் சுற்றி வளைக்கப்பட்டு பழி தமிழ் மீனவர்கள் மீது போடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இதில் ஆராய வேண்டும்.

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் தமிழகத்தை தாயகத்தை கூறுபோடும் பெரும் சதி நடந்து கொண்டிருக்கிறது. இதை சிங்களம் பல முனை நன்மை கருதி அரங்கேற்றி வருவதுடன் வடக்குக் கிழக்கு கடலெங்கும் சிங்கள ஆதிக்கத்தை விரிவாக்கி வருகிறது. அதற்கு உதவியாக இதனை பயன்படுத்துகிறது. இதற்கு துணைபோவர்கள் நிச்சயம்.. அதனால் தேசத்துக்கும் எமது மக்களுக்கும்.. தமிழக மீனவர்களுடான எங்களின் உறவுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கும் உடந்தையாவார்கள்.

தயவுசெய்து... தமிழக மற்றும் தாயக மீனவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சிங்களத்தாலும் இந்திய ஆளும் வர்க்கத்தாலும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த பின்னப்படும் இந்தச் சதியில் சிக்கி இருந்தால் அதை.. நன்கறிந்து கொண்டு அச்சதியை முறியடிக்கும் வகையில் சிநேகிதபூர்வ முறையில் மீன்பிடி தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இணக்கமின்மைகள் இருந்தால் அவற்றை தீர்த்துக் கொள்வதோடு சிங்களத்தின் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவிகளை இதில் பெறுவதை நிறுத்திக் கொள்வது நன்று.

Edited by nedukkalapoovan

சிங்களவன் வந்து கிழக்கிலையும் வடக்கிலையும் மீன் திருடுவது தப்பே இல்லை... மீனவர்கள் கெம்பி எல்லாம் எழும்பவும் இல்லை... ஆனால் தமிழக தமிழர்கள் வந்ததும் கெம்பி எழும்பி பிடிச்சு இலங்கை கடற்படையிட்ட குடுக்கினமாம்... அதுக்கை டக்கிளஸ் சமாதானம் வேறை பேசுறாராம்...!

செயற்பாடு அங்கை.. ஆப்பு சீமான் அண்ணைக்கோ...??? <_<

கலைஞரும் காங்கிரசும் வெண்டால் சரி...

.... இறுதியாக தமிழ்நெட்டும் ...??????????!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் இலங்கை தூதரகத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டம் செய்யாத திமுக.. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் ஒரு ஆர்ப்பாட்டம் செய்யாத திமுக.. இன்று.. தமிழக சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில்.. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறது.

ஆக இது திமுக.. ராஜபக்ச.. சோனியா.. டக்கிளஸ்.. கூட்டுச் சதியின் செயலாகும்..! இதனை அனைத்து தமிழ் மீனவர்களும் புரிந்து கொண்டு.. சிங்களத்தின் திமுகவின் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தக் கூட்டுச் சதியை முறியடிக்க ஒற்றுமையோடு.. கலந்து பேசி.. எதிர்காலத்தில் செயற்படுவதே நன்று.

-----------------

இலங்கை தூதரகம் முன் திமுக நாளை ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறியுள்ளனர்.

நாகப்பட்டினத்திலிருந்து மாலை மீன்பிடிக்க சென்ற மீனவர்களை நடுக்கடலில் சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் 16 படகுகளை சிறைப்பிடித்தனர்.

படகுகளில் இருந்த 106 மீனவர்களை கைது செய்து, இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். படித்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை கண்டித்து நாகை,காரைக்கால் மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இலங்கை தூதரகம் முன் திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவருகிறது. மீனவர்களை விடுவிக்கக்கோரி துறைமுகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48660

Edited by nedukkalapoovan

.... இறுதியாக தமிழ்நெட்டும் ...??????????!!!!!!!!!!!!

நானும் நினைத்தேன்....

  • கருத்துக்கள உறவுகள்

.... இறுதியாக தமிழ்நெட்டும் ...??????????!!!!!!!!!!!!

Eezham fishermen seize trawlers with 100 Indian fishermen in the seas off Jaffna

[TamilNet, Tuesday, 15 February 2011, 11:56 GMT]

Around 15 fishing trawlers operated by more than 100 fishermen from Naakappaddinam of Tamil Nadu state of India, destroying the livelihood of Eezham fishermen by bottom-trawling, have been seized by the local fishermen in the seas off Point Pedro Tuesday afternoon. The trawlers are being towed to Munai in Point Pedro by the fishermen, a fishing society representative told TamilNet. The latest development comes following repeated complaints by the local fishermen over a long period of time about the fishing trawlers destroying the fishing tools and the resources in the sea. The fishermen representatives further said around 100 Tamil Nadu fishermen were in their custody and they were being looked after well.

When Eezham Tamils had their own naval power, the Sea Tigers, Indian trawlers did not engage in such aggressive acts, the representatives of the fishermen further said blaming Colombo and New Delhi for setting Eezham Tamils against the fishermen of Tamil Nadu.

"There was a clear understanding between the communities on both the sides," the representatives further said, urging Tamil Nadu political leaders to visit and witness the plight of Eezham Tamil fishermen who are threatened by the occupation of Sri Lankan military on one hand and by the invading fishing trawlers from Tamil Nadu, causing serious destruction to their livelihood.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33552

தமிழ்நெட்டின் செய்திப்படி இது ஒரு அடையாளமான சுற்றிவளைப்பு என்பது போலவும்.. தமிழக மீனவர்கள் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள் என்றும்.. இவர்களின் இந்தக் கைது தொடர்பில் உடனடியாக இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டும் உள்ளது என்றும் செய்தி கூறுகிறது.

அதே நேரம் செய்தி.. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கக் கூடிய சதிகள் குறித்தும் எச்சரிக்கிறது.

ஆக.. கடலில் இரு தரப்புக்கும் இடையில் மீன்பிடி தொடர்பில் சிக்கல்கள் இருக்கின்றன என்பது உண்மை. இருந்தாலும்.. இது ஒரு அடையாளக் கைது அவ்வளவே. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க இரு தரப்பும் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதோடு நெருக்கமான கிரமமான தொடர்பாடல்வதிகளையும் செய்து கொண்டால்.. பல பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். தமிழக மீனவர்கள் வேறு யாருமல்ல.. எமது சகோதர்கள் என்பதை எல்லோரும் நினைவிருத்துவது முக்கியம்.

Edited by nedukkalapoovan

இதற்குமொரு தமிழன் தான் சிங்களவனுக்கு ஜடியா எடுத்துக்குடுத்திருப்பான்..

  • தொடங்கியவர்

வரலாற்றில் முதல் முறையாக புதுடெல்லி தமிழக உயிர்களை கொல்லும் சிங்கள இனவாத அரசு மீது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கத்தொடங்கியிருந்தது. உண்மையாக அப்படி செய்ததா இல்லை நடித்துள்ளதா என்பதை காலம் சொல்லும்.

ஆனால், சில அரசியல் நாடகங்கள் தமிழ் உறவுகளை வைத்து பின்னப்படுகின்றன போலுள்ளது. இந்த அரசியல் வலைக்குள் தமிழ் உறவுகள் சிக்கக்கூடாது.

இந்த தமிழக உறவுகளை போய் சென்னையில் தேடப்படும் அமைச்சர் சந்தித்துள்ளது மேலும் சந்தேகத்தை தருவதாக உள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/16578-2011-02-15-23-00-14.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தமிழன் ஒரு ஏமாந்த சோணகிரி என்ட படியால் தான் தமிழ்நாட்டுக்காரன் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறான்...கேட்பதற்கு யாரும் இல்லை முந்தியாவது புலி இருந்திருந்த காரணத்தால் எல்லை மீறாமல் இருந்தார்கள் தற்போது அவர்கள் இல்லாத படியால் வேலி பாய்கிறார்கள்...சிங்கள ஆமி தமிழக மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள் என்டு சுட்டால் அது ஒரு இனத்திற்கு எதிரான பிரச்சனையாக முடிந்து விடும்...பிரச்சனையை தீர்க்க இது தான் சிறந்த வழி...ஏதோ இவ்வளவு காலமும் தமிழ்நாட்டுக்காரர் எங்கள் இனத்திற்கு பெரிய உதவி செய்து கிழித்து விட்டார்கள் போலவும் மேலும் உதவி செய்வார்கள் எதிர்பார்த்து கொஞ்சப் பேர் காத்துக் கிடப்பது தான் வேடிக்கை.

ஈழத்து தமிழன் ஒரு ஏமாந்த சோணகிரி என்ட படியால் தான் தமிழ்நாட்டுக்காரன் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறான்...கேட்பதற்கு யாரும் இல்லை முந்தியாவது புலி இருந்திருந்த காரணத்தால் எல்லை மீறாமல் இருந்தார்கள் தற்போது அவர்கள் இல்லாத படியால் வேலி பாய்கிறார்கள்...சிங்கள ஆமி தமிழக மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள் என்டு சுட்டால் அது ஒரு இனத்திற்கு எதிரான பிரச்சனையாக முடிந்து விடும்...பிரச்சனையை தீர்க்க இது தான் சிறந்த வழி...ஏதோ இவ்வளவு காலமும் தமிழ்நாட்டுக்காரர் எங்கள் இனத்திற்கு பெரிய உதவி செய்து கிழித்து விட்டார்கள் போலவும் மேலும் உதவி செய்வார்கள் எதிர்பார்த்து கொஞ்சப் பேர் காத்துக் கிடப்பது தான் வேடிக்கை.

அடடா என்ன ஒரு உணர்வு...

எங்கட ஊருக்க சிங்களவன் வந்து குடிசை போட்டு விட்டுகளுக்கை இருந்து தமிழர்களை துரத்தி விடும் போது இப்படி ஒரு உரையை ஆற்றி இருந்தீங்கள்... அண்டே தமிழீழம் பிறந்து இருக்கும்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தமிழன் ஒரு ஏமாந்த சோணகிரி என்ட படியால் தான் தமிழ்நாட்டுக்காரன் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறான்...கேட்பதற்கு யாரும் இல்லை முந்தியாவது புலி இருந்திருந்த காரணத்தால் எல்லை மீறாமல் இருந்தார்கள் தற்போது அவர்கள் இல்லாத படியால் வேலி பாய்கிறார்கள்...சிங்கள ஆமி தமிழக மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள் என்டு சுட்டால் அது ஒரு இனத்திற்கு எதிரான பிரச்சனையாக முடிந்து விடும்...பிரச்சனையை தீர்க்க இது தான் சிறந்த வழி...ஏதோ இவ்வளவு காலமும் தமிழ்நாட்டுக்காரர் எங்கள் இனத்திற்கு பெரிய உதவி செய்து கிழித்து விட்டார்கள் போலவும் மேலும் உதவி செய்வார்கள் எதிர்பார்த்து கொஞ்சப் பேர் காத்துக் கிடப்பது தான் வேடிக்கை.

தேசிய தலைவர் உட்பட உங்கட போராட்ட தலைவர்கள் போராளிகள் மக்கள் நாடு விட்டு நாடு மாற உதவி நின்றவர்களும்.. மருந்துகள் உட்பட்ட அத்திவாசிய பொருட்களை சிங்களம் தடை செய்த போது அவற்றை கொணர்ந்தவர்களும்.. அதுவும் இதே தமிழக உறவுகள் என்பதை நன்றி கெட்ட தனமா மறந்திட்டீர்களே.

தமிழக மீனவ சமூகத்திலும்.. திமுக.. காங்கிரஸ்.. அதிமுக என்று ஆதரவு வழங்குவோர் இருந்தாலும்.. தமிழின உணர்வுள்ள தமிழீழ மக்கள் மீது அக்கறையுள்ள.. தமிழக மக்கள் தமிழக கரையோடங்களில் தான் அதிகம் வாழ்கின்றனர் என்ற உண்மையையும் நீங்கள் தெரிஞ்சுக்கனும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.