Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசை குழப்ப முயலும் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையை ஆற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது.

நாகதஅ க்கு தேர்தலில் போட்டி போட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் முதலில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.

நிறைவேற்றாத யாப்புக்கு எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்பது விதண்டாவாதம். சரி பாதிக்கு மேலான உறுப்பினர்கள் உறுதிமொழி

எடுத்துவிட்டார்கள்.

நடந்தது என்னவென்றால் நாகதஅ உருவாகுவதை ஒரு சாரார் விரும்பவில்லை. அதை முளையில் கிள்ளி எறிய முயற்சித்தார்கள்.

ஒரு புறம் ஆதரவு என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் முட்டுக்கட்டை போட்டார்கள். இவர்களை நோர்வேயில் இருந்து கொண்டு இரண்டொருவர் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

பலவிதத்திலும் முயன்று தோல்வி கண்ட பின்னர் எங்கே வண்டியைத் தவறவிடப் போகிறோமோ என்ற அச்சத்தில் அதில் ஏறிக் கொண்டார்கள்.

யாப்புக் குழுவில் இருந்தவர்கள் உருத்திரகுமாரனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதத்தில் எந்த நாட்டிலும் இல்லாத மாதிரி 3 துணை தலைமை அமைச்சர் பதவிகளை உருவாக்கினார்கள். அதுவும் அவர்கள் அரசவையினால் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற விதிகளை திட்டமிட்டுப் புகுத்தினார்கள். அமைச்சர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அரசவையிடம் விடப்பட்டது.

நாகதஅ பேரவை கூடிய போது இந்தக் குழு முக்கிய பதவிகளுக்கு யார் யார் தெரிவு செய்யப்பட வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்து அதற்கான வாக்கு வேட்டையில் இறங்கியது. பேராளர்களிடம் நேரிலும் தொலைபேசி மூலமும் வாக்குப் பிச்சை கேட்கப்பட்டது.

ஆனால் இந்தக் குழு எதிர்பார்த்தது போன்று அரசவையில் பெரும்பான்மை இருக்கவில்லை. பலர் தங்கள் மனச் சாட்சியின்படி நடந்து கொண்டதால் இந்தக் குழுவின் வாக்குப் பலம குறைந்து போயிற்று!

எனவே பதவி ஆசையும் (அது குற்றமன்று) அதிகாரமும் தங்கள் கையில் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே உறுதிமொழி எடுப்பது இல்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.

எமக்குள் கருத்து வேற்றுமை இருந்தால், அப்படி இருப்பது இயல்பு, அதனை அரசவையில் பேசித் தீர்க்க வேண்டும். இப்படிக் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. அது அழகுமல்ல. அறிவுமல்ல.

இணைய தளத்தில் உருத்திரகுமாரன் மீது சேறு வாரி இறைப்பதும் அவர் கே.பி. இன் கட்டுப்பாட்டில் இருக்கிறார் எனப் பச்சை பொய் சொல்வதும் மிகவும் கீழ்த்தரமான மலிவான பரப்புரை ஆகும். உருத்திரகுமாரன் தேசியத் தலைவரது நம்பிக்கைக்கு ஆளான ஒருவர். படித்த கூட்டம் வி.புலிகள் என்றால் பதுங்கிய போது அவர் வி.புரிகளின் சட்ட மதியுரைஞராக திறம்படச் செயற்பட்டவர். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை திட்டத்தை (ISGA) பல்துறை அறிஞர்களது பங்களிப்போடு உருவாக்கியவர். அவர் மீது சேறு பூசுவோர் தேசியத் தலைவரையே அவமதிக்கிறார்கள்!

வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல் மடை திறந்த வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது. எமது மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து சிங்கள இராணுவத்தின் வல்வளைப்புக்கு ஆளாகி அல்லல்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாரோ ஒருவரது அழுகிய உடல் கிணற்றில் இருந்தோ புதை குழியில் இருந்தோ எடுக்கப்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் ஏதிலிகளாய் விடப்பட்டுள்ளார்கள். சிங்கள கொடுங்கோல் அரசு, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வடக்கிலும் கிழக்கிலும் தொண்டாற்ற தடை விதித்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் ஆகிய இடங்களில் இயங்கிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைகள் மூடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் கடந்த 21 ஆண்டுகளாக செஞ்சிலுவைச் சங்கம் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தியா கொடுத்து உதவிய 400 உழவு இயந்திரங்களில் 100 மரமுந்திரி வாரியத்துக்கும் 100 தெங்கு மேம்பாட்டு வாரியத்துக்கும் திசை திருப்பப்பட்டன. யாழ்ப்பாண கமக்காரர்களுக்கு 38 ம் முல்லைத்தீவு கமக்காரர்களுக்கு 38 ம் கொடுக்கப்பட்டன. மீதி 124 உழவு இயந்திரங்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. சிங்கள அரசின் இந்த மோசடியைக் கண்டித்து ததேகூ நா.உ. எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். அதற்கு முன்னர் கடந்த 2010 ஒக்தோபர் மாதம் செஞ்சிலுவை சங்கம் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி விவசாயிகளுக்கு கொடுத்த 800 உழவு இயந்திரங்களில் சரி பாதியை நாமல் இராசபக்சே அடாவடித்தனமாகக் கைப்பற்றி வெலி ஓயா சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்ற வாசிகளுக்கும் கொடுத்தார். அதைப் பார்த்து சகிக்காத வவுனியா செஞ்சிலுவை கிளை மேலதிகாரி மேரிஸ் லிமோனோர் ஒரமாக நின்று தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்த காட்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. மேலும் தாம் தெரிவு செய்தவர்களுக்கே உழவு இயந்திரங்களை வழங்க வேண்டுமென அமைச்சர் றிஷாத் பதியுதீனும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் அழுத்தம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.

திருமலை எமது தலைநகர் என்று பேசப்பட்ட திருகோணமலையில் தமிழ்ப் பெண்கள் சேலை உடுத்து பொட்டுப் போட்டு வீதியில் செல்ல அஞ்சுகிறார்கள். சிங்கள இராணுவத்தின் கெடுபிடி அந்தளவுக்கு இருக்கிறது.

திருகோணமலையின் இன்றைய அவல நிலை பற்றி, அது எப்படியெல்லாம் சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படுகிறது என்பதை நேரில் கண்டு குளோபல் தமிழ் செய்திகளுக்காக திருகோணமலையில் இருந்து நவராஜ் எழுதிய கட்டுரையை கீழே தந்துள்ளேன். அதனை எழுத்துக் கூட்டிப் படிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நிறைவேற்றப்படாத யாப்புக்கு எப்படி உறுதிமொழி எடுப்பது என்று சண்டித்தனம் செய்பவர்கள் இந்தக் கட்டுரையை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

இப்படிப் பட்டவர்கள் தமிழர்களை கூறுபோட்டு அழிக்க வேண்டும் என்ற சிங்கள அரசின் விருப்பத்தை அறிந்தோ அறியாமலோ நிறைவேற்றுபவர்களாக இருக்கிறார்கள். அதனை அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் விரும்ப மாட்டார்கள்.

எனவே பலமான எமது எதிரியை ஒற்றுமையுடன் எதிர்க்க வேண்டிய நாங்கள் எங்களுக்குள் முட்டி மோதி எதிரியின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். எதிரி இன்று நாகதஅ இன் தோற்றத்தைக் கண்டுதான் பயப்படுகிறான். அதனை அழிக்க எங்களுக்குள் இருக்கும் இரண்டகர்களுக்கு பட்டம் பதவி கொடுத்து அவர்களைப் பயன்படுத்துகிறான்.

புவிசார் அரசியல் மடடத்தில் எங்களுக்கு ஆதரவான சில அசைவுகள் தென்படுகின்றன. அதனை நாம் தக்க முறையில் சாணக்கியத்தோடு பயன்படுத்த வேண்டும்.

இந்த இடத்தில் பொதுப் பணிக்கு வருபவர்களுக்கு வள்ளுவரின் அறிவுரையை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம்

மடிசெய்து மானம் கருதக் கெடும்.

இதன் பொருள், “தான் பிறந்த குடியை உயர்த்த நினைப்பார்க்கு நல்லகாலம் என்பது இல்லை.

காலத்தையும் பார்த்துச் சோம்பல்கொண்டு மானத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தால் பிறந்தகுடி அடியோடு கெட்டு அழியும்” என்பதாகும்.

குடிக்குச் சொன்னது இனத்துக்கும் பொருந்தும்.

அன்புடன்

நக்கீரன்

நன்றி நெருடல் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் நா.க.அரசு மட்டும்தான்.அதனையும் இழந்துவிட்டு அம்மணமாக நிற்கப்போகிறாயா தமிழா!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாளை பிரான்சில் அனைவரையும் சேர்க்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் : 12, Anenue Julles Ferry, 93140 Bondy (RER : D > Bondy)

காலம் : 05-03-2011

நேரம் பிற்பகல் 03 . 00 மணி

தொடர்புகளுக்கு : ரமேஸ் பத்மநாதன்

தொலைபேசி இலக்கம் : 06 99 90 06 08

இன்றைய நிலையில் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் நா.க.அரசு மட்டும்தான்.அதனையும் இழந்துவிட்டு அம்மணமாக நிற்கப்போகிறாயா தமிழா!!!!!!!!!!!

????????????????????...........................

நாடு கடந்த தமிழீழ அரசை அழிக்க வேண்டும் சிங்களம் பயில வேண்டும் என்று விரும்புவர்கள் பதிவு எனும் இணைய தளத்தை ஒவ்வொரு நாளும் தவறாது பார்வையிடவும்...... 'பதிவு' நான் விரும்பிய ஒரு தமிழ்த்தேசிய ஊடகமாகத் தான் இருந்தது.... அந்த domain name ஐ விற்று சரியாக 17 மாதங்கள் ஆகின்றன.... விலை எவ்வளவு தெரியவில்லை.... ஆனால் அது இப்பொழுது தமிழ்தேசியத்தின் எதிரிகளின் கைகளில் இருக்கிறது... பதவி அதிகாரத்திட்க்காக ஏங்குபவர்களின் கைகளில் சிக்குண்டுள்ளது .... பதவிக்கு அதிகாரத்திற்கு ஆசைப் பட்டு இன்று தமிழர்க்கான ஒரு அரசையே அழிக்கப் பார்க்கிறது இந்த சேர மானின் 'பதிவு'..... புலம் பெயர் நாடாயிருந்தாலென்ன எந்த இடமாயிருந்தாலென்ன "பச்சைப் பயிர் வாழ மண்ணில் களையெடுத்தால் தவறில்லை" எனும் எம் தலைவனின் கூற்றை மீண்டும் அரங்கேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நாம்- அது தலைவனின் வழி நடப்பவர்களின் கடமை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இமெயிலில் வந்த செய்தியை இதில் இணைப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

----

நண்பர்களே ,

நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களை இப்படியான குழுமங்களில் போட்டு விவாதித்தல் சரியன்று , domainproxy.com இனூடாக பதியப்பட்டு யார் உரிமையாளர் என்று தெரியாமலே இயக்கப்படும் தமிழ்கதிரில் வரும் இணைப்புகளை போட்டு அதற்கு விளமபரம் தேடி கொடுக்கும் அன்பர்கள் ஏன் இதை தகுந்தவர்களிடம் கூறி விளக்கம் கேட்க கூடாது ?

நாடுகடந்த அரசாங்க உறுபினர்களோடு இணைந்து எமது உரிமைக்கான போரை தொடர்ந்து முன்னெடுக்கும் பொழுது சில மினஞ்சல் குழுமங்களில் போடப்படும் செய்திகள் எம்மை போன்ற வேலை செய்ய முன்வரும் அடுத்த சந்ததியினரை பாதிக்கின்றது . இங்கே இடப்படும் செய்திகள் முற்றும் முழுதான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளே . உண்மையில் யாப்பு நிறைவு செயபட்டுவிட்டதாகவே அறிகிறேன். அங்கே சிலர் மேலும் திருத்தங்கள் வேண்டும் என்று கேட்பதனால் அதை முழுமை பெறவில்லை என்கிறார்கள் என்பதே உண்மை . இதை பற்றி விவாதிக்க விரும்பும் பெரியோர்களுக்கு நாடகடந்த அரசின் பிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க என்னால் முடியும்.

நாடு கடந்த அரசில் இணைந்து பாராளுமன்றில் உறுப்பினர்களுக்கு இடையில் விவாதிக்க படும் விடயங்கள் இங்கே நாங்கள் விவாதிப்பது முறையன்று . முதலில் இந்த அமைப்பை தனிப்பட்ட நபர்களை தாண்டி வளர்க்க வேண்டிய கடமை எமக்கு உண்டு . யாப்பை ஜனநாயக முறையில் மாற்ற எப்பொழுதும் முடியும் . ஆனால் இங்கே தேவை இல்லாமல் பகிரங்கமாக மக்களை நோக்கி எழுதப்படும் விடயங்கள் இன்னும் இன்னும் மக்களை நாடு கடந்த அரசை பற்றி சலிப்படைய செய்து அதை இல்லாமல் செய்து வருகிறது .

நன்கு தீர்கதரிசனதொடு பார்க்க கூடிய அறிவியலாளர்கள் , பெரியோர் , உண்மையாக உரிமைக்காக போராடும் நண்பர்கள் , இந்த அமைப்பை ஒரு அரசியல் பலம் மிக்க , செல்வாக்கு மிக்க அரசாக மாற்றவேண்டிய உடனடி தேவை எம் முன்னால் விரிந்து கிடக்கும் பொது , தயவு செய்து இந்த அமைப்பை பற்றி எழுதி சிங்கள ஊடகவியலாளர்களுக்கு சீனி போட வேண்டாம் .

பதவிகளை வரையறுக்க யாப்பு சீர்திருத்தம் வேண்டி நிற்கும் சிலரின் கருத்தகள் பாராளுமன்றில் விவாதிக்க படவேண்டியவை . இவற்றை பற்றி கேள்வி உள்ளோர் இப்படி அரங்குகளில் கேட்பதை விடுத்து , நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளிடம் கேட்க விழி செய்து தருவோம் . உங்களால் முடியுமானால் இங்கே வெளிநடப்பு செய்வோரை முதலில் உறுப்பினர்கள் ஆகி தங்கள் பிரச்சினைகளை அரசின் உள்ளே விவாதிக்கும் பழக்கத்தை கொண்டு வர பலரும் இணைந்து செயற்பட வேண்டுகிறேன் .

தேசிய பயணத்துக்கான நெடும் தூர பயணம் காத்து இருக்கு பொது நாங்கள் தொடக்கத்திலே நின்று யார் முன்னே போவது யார் பின்னால் போவது என்று விவாதித்து கொண்டு இருக்கிறோம் . இப்படி விவாதித்து இரண்டு வருடம் ஆன நிலையில் , இனி பயணத்தை இருப்பவர்களை வைதுகொண்டாவது தொடர வேண்டிய நிலையில் எங்களை போன்ற தொண்டர்கள் உள்ளோம் .

தயவு செய்து என்னை நோக்கி கேள்வி எழுப்பாமல் , எனக்கு தனிப்பட்ட முறையில் மினஞ்சல் அனுப்பின் , உங்களை அழைத்து விளக்க நாடு கடந்த அரசின் பிரதிநிதகள் என்றும் தயாராகவே உள்ளனர்.

அதை விட பிற நாட்டு சமூகங்களில் செல்வாக்கு செலுத்த கூடிய பொறியியலாளர்கள் , மருத்துவர்கள் தொடக்கம் , உரிமை போரில் உண்மையாக செயற்ற்படவல்ல இளையோர் வரை அனைவரையும் நாட கடந்த அரசில் என்னை போல தொண்டர்களாக இணைந்து பயணத்துக்கு வலு சேர்க்க வேண்டுகிறேன்.

இது எங்கள் போரில் அடுத்த வடிவம் , நாடு கடந்து ஒரு சக்தியாக எழுந்து எமது மண்ணில் எமது வாழ்வுரிமையை கேட்கும் நேரம் . யாருக்கும் அஞ்ச தேவை இல்லை . இது ஒரு ஜனநாயக கண்கூடு அமைப்பு . சகல நாட்டு அரசுகளுக்கும் நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை வெளிப்படையாக செய்ய அனுமதித்துள்ளது. அனைவரும் இணைவோம் . தலைகளை நிமிர்துவோம் . தாயகம் வெல்வோம்.

நன்றி

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

“நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? ஏன் வெளியேறினோம்?”

என்னும் தலைப்பில் “மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கை” எனக் குறிப்பிடும் ஒரு அறிக்கை ரொறன்ரோவில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகளில் இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய அதிசயத்தை எமது உடன்பிறப்புகளாகிய தமிழ் மக்கள் யாவரும் அறிவர்.

குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ் மக்களுக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு வழியாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதியவர்களே இந்த அமைப்பிலும் தங்களுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்து செலுத்தலாம் என எண்ணியிருந்த திட்டம் தடம்புரண்டதால் இந்தப் புனிதமான அமைப்பை கொச்சைப்படுத்தி அதனை முற்றாக அழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கையே இது எனக் குறிப்பிடலாம். இந்த மடலைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தமிழ் மக்களாகிய நீங்கள் இந்த நாடகத்தின் பின்னணி, அதன் சூத்திரதாரிகள், அவர்களின் திட்டம், இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் ஆகிய விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயம் அதனை ஆதரிக்காத மக்களின் பணத்துடன் தலைமறைவாகிய உலகத் தமிழர் இயக்கத்தினர், இந்தத் திட்டத்திற்கு மக்கள் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிப்பதை அவதானித்த பின்னர் அந்தத் திட்டத்தை ஆதரிப்பதைப் போலப் பாசாங்கு செய்து அதனை முற்றுமுழுதாகக் கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டனர். இந்த அரசாங்கப் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு 15 வேட்பாளர்களை உலகத் தமிழர் இயக்கத்தின் மும்மூர்த்திகளான தமிழும், கமலும், அருமையும் தெரிவு செய்தனர். இந்தப் 15 வேட்பாளர்களின் கட்டுப்பணமான 45,000 டொலர்களையும் இவர்கள் மக்களுடைய பணத்தில் இருந்து சுரேன் என்பவர் மூலம் செலுத்தினர். இப்படியாகக் கடமைப் பட்டவர்கள் யாருடைய கைப்பொம்மையாகச் செயற்படுவார்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அந்த விடயத்திற்கு பின்னர் வருவோம்.

நடைபெற்ற ஆரம்பக் கூட்டங்களில் இந்தத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதவேண்டிய தேவை எழுந்தது. இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவிற்குத் தலைமைதாங்கி அந்த யாப்பை எழுதியவர்கள் யார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் வேறு யாருமல்ல. இடம்பெற்ற வெளிநடப்பிற்குத் தலைமைதாங்கிய திருச்செல்வமும் நோர்வே பிரதிநிதியான முரளி என்பவருமே அவர்கள். இவர்களுடைய திருகுதாழங்களைப் பின்னர் பார்ப்போம்.

உருத்திரகுமாரனை அசைக்க முடியாதென்பதை உணர்ந்த உலகத் தமிழர் இயக்கத் தலைவர்கள் சபாநாயகர் பதவியையும், பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளையும், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் கைப்பற்றினால் தாம் நினைத்தவாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கலாம் எனத் திட்டமிட்டனர். தமிழும், கமலும், அருமை என்பவரும் சகல கனடியப் பிரதிநிதிகளையும் அழைத்தார்கள். சகலரையும் அழைத்தது ஒரே நேரத்தில் அல்ல, ஒவ்வொருதரையும் தனித்தனியாக அழைத்து சபாநாயகர் பதவிக்கு திருச்செல்வத்தையும், அமெரிக்கக் கண்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரிதிப் பிரதம மந்திரிப் பதவிக்கு பாலன் இரத்தினம் என்பவரையும் ஆதரிக்குமாறு குறினர். இந்த பாலன் இரத்தினம் என்பவர் அருமை என்பவருடைய சகலன். இவ்வாறு அழைக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவர் இந்த இரண்டு பேருக்கும் மக்கள் மத்தியில் அதரவில்லை எனக் குறிப்பிட்டு ஈசனுக்கு சபாநாயகர் பதவியைக் கொடுக்குமாற்று கேட்டதற்குக் கமல், “படிப்பறிவில்லாதவருக்கு எப்படி அந்தப் பதவியைக் கொடுப்பது” எனச் சொன்னதற்கு அந்தப் பிரதிநிதி அப்படியானால் தனக்கு அந்தப் பதவியைத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கமல், “கவலைப்பட வேண்டாம். நாங்கள் சொல்பவர்களை ஆதரியுங்கள். உங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி தருகின்றோம்” எனக் கூறியுள்ளார். தாம் நிலைத்தவர்களுக்கு தாம் விரும்பும் பதவியை வழங்கமுடியும் என்னும் இறுமாப்பில் இந்த மும்மூர்த்திகளும் அப்போது இருந்தனர். ஆனால் அவர்களுடைய திட்டம் பலிக்கவே இல்லை. அதன் விளைவாக இவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளையும் கேலிக்கூத்துகளையும் பின்னர் பார்க்கலாம்.

மூன்று பிரதிப் பிரதம மந்திரிகளை நியமிக்க வேண்டும் என்னும் பிரேரணை சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சபைத் தலைவருக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருந்த முரளி என்பவர் தாம் தயாரித்த யாப்பில் குறிப்பிடப் பட்டிருந்த கட்டுப்பாடுகளை எடுத்து விளக்கி பிரேரணைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவையும் குறிப்பிட்டு அந்தத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெற்ற பிரேரணைகள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதையும் ஆணித்தரமாக அறிவித்திருந்தார். இப்படிக் கூறிய அதே முரளி பின்னர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தப் போகின்றது.

இந்த வெளிநடப்புச் செய்த குழுவினர் பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகள் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அதைப் போலவே அமைச்சர்களும் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்னும் பிரேரணைகளை முன்வைத்தனர். இந்தப் பிரேரணைகள் சட்டத்திற்கு மாத்திரமல்ல, முரளி என்பவர் முன்னர் கூறியதற்கும் முரணானதாக இருந்த விடயம் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது. நாடாளுமன்றத்தினால் அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவதாக நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?உஊலகத்தில் எங்குமே நடைபெறாத ஒன்றை இவர்கள் சபையில் திணிக்கப்பார்த்தார்கள். அதற்கு புதிய பிரேரணை ஒன்றையும் சமர்ப்பிப்பதற்கு முயற்சி செய்தனர். யார் அப்படிச் செய்தார்கள்? வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென அடித்துக் கூறிய முரளி என்பவரே இந்தக் குழுவினருக்குத் தலைவரைப் போலச் செயற்பட்டார் என்பதுதான் விந்தையிலும் விந்தை.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் ஆதிக்க நாடுகள் பலவற்றின் சதியால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்து அதன் மூலம் எமது உரிமைகளுக்காகப் போராடுவதைவிட வேறு வழிகள் எதுவுமே தமிழ் மக்களுக்கு இல்லை என்பது சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். அதனைக் கொச்சப்படுத்தி அழித்து ஒழிப்பதற்குத் திட்டமிட்டுள்ள இந்தக் குழுவினர் பழியை மற்றவர்கள் மீது போடும் முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளனர். “தனி ஒரு மனிதனின் கையில் அதிகாரத்தைக் கொடுத்ததால் கருணா மூலம் கிழக்கை இழந்தோம்” எனக் குறிப்பிட்டதான் மூலம் அவர்கள் தேசியத்தை மாத்திரமல்ல எமது தேசியத் தலைவரையே கொச்சைப்படுத்தியதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகத் தமிழர் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்த வசனங்கள்தானா உங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என வெளிநடப்புச் செய்த இந்தக் குழுவினரை நாம் கேட்டுக் கொள்ளும் அதே நேரம் புனிதமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நீங்கள் முற்றுமுழுதாகக் கைகழுவி விட்டுவிட்டீர்களா என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்குமாறும் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவர்களை மாத்திரமல்ல, இவர்களைப் போன்ற சகலரையும் இனங்கண்டு களையெடுக்க வேண்டிய கடமை இப்பொழுது தமிழ் மக்களாகிய உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவர்களை நாம் வெளிப்படையாகவே சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். அது சரி, நீங்கள் வெளிநடப்புச் செய்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதற்கு உத்தேசம்?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கப் போகின்றீர்களா அல்லது இல்லையா? உங்களுக்கு மிரட்டல்களும் கொலை அச்சுறுத்ல்களும் விடப்பட்டதால் வெளிநடப்புச் செய்ததாகக் குறிப்பிட்ட உங்களுடைய ஆதரவாளர்கள் ஒரே வரிசையில் வீற்றிருந்த பின்னர் ஒன்றாகவே எழுந்து வெளிநடப்புச் செய்தார்களே.

இந்தத் தீர்மானத்தை நீங்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்கனைவே எடுத்திருந்ததை இது எடுத்துக் காட்டவில்லையா? எமக்காகவே போராடி உயிர்த்தியாகங்களைச் செய்த எமது 39,000த்திற்கும் மேற்பட்ட போராளிகளுக்கும் சிங்களப் படையினரால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான எமது உடன்பிறப்புகளுக்கும் நீங்கள் செய்யும் நன்றிக்கடன் இதுதானா?

மக்கள கொடுத்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதும் அல்லாமல் அந்தப் பணத்தை வழங்கிய மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களுடைய பணத்தையே செலவு செய்கின்றனர் இந்தக் குழுவினர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவையாகின்றது. மக்களின் பணத்தைக் கொண்டு செய்யப்பட்ட முலலீடுகளின் விபரங்களும் அவற்றை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுடைய பெயர்ப் பட்டியலும் வெகுவிரைவில் வெளிவரும் என்பதை இந்தத் தருணத்தில் அறிவிக்கும் அதே நேரம் தயவு செய்து உங்களுடைய பித்தலாட்டங்களைக் கைவிட்டு இனிமேலாவது உங்களுடைய கையிருப்பில் இருக்கும் மக்களுடைய பணத்தை வாடிவதங்கிக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கு வழங்கி போகுமிடத்திற்காவது புண்ணியத்தைத் தேடுங்கள்.

- நிசாந்தன்-

sankthi.com

இனி தேசியம் பேசிக்கொண்டு வீட்டுபக்கம் வரட்டும் பொலிஸ் நிலையம் தான் போவர்hகள்.

விசுகு அண்ணை நல்ல விடயம். நேற்று இங்கும் ஒரு கூட்டம் நடந்தது, தலமைச் செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்டது.அனைவரையும் ஒன்றினைக்கும் முயற்ச்சியில் போராளிகள் இறங்கி இருப்பது நல்ல முயற்ச்சி.களத்தில் இறுதிவரை நின்ற ஒரு போராளியைச் சந்தித்தேன்.எனக்கிருந்த பல நம்பிக்கையீனங்களுக்கு இடையே ஒரு ஒளி தெரிந்தது.அங்கு நடைபெறும் கூட்டமும் அவ்வாறானதாக இருந்தால் நல்லம்.போராளிகளுக்கே அனைவரையும் ஒன்றிணைக்கும் தார்மீகப் பலம் இருக்கிறது.

இவர்களில் பலர் மலையை முழுங்கி ஏவறை விட்டவர்கள்.இவர்களுக்கு பின்னாலும் ஒரு கூட்டம்.

பிறகு நீங்கள் கருணாநிதியை குறை கூறுவதைப் பார்க்க சிரிப்பாக இருக்கின்றது. இவர்கள் பின்னணியை தயவு செய்து ஆராய்ந்து பாருங்கள்.நான் எழுதினால் நம்பமாட்டீர்கள்.இவர்களுக்கு பின்னால் போவதைவிட அரசாங்கத்துடன் சேருவது எவ்வளோ மேல்.

குழப்பத்தை உண்டு பண்ணுபவர்கள் வேறு வேலை வெட்டியில்லாத தமிழின விரோதிகள்.

கூரைமேல நிற்கும் கோழி பிடிக்கமுடியாதவர்கள்.

வானம் ஏறி வைகுண்டம் போவார்களாம்?

நாடு கடந்த அரசுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கமுடியாதவர்கள்.

தமிழரின் தாயகத்தை மீட்டுத்தருவார்களாம்?

புலம் பெயர்தலைமையைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டு செயற்படுபவர்களின் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை மக்கள் இனம் கண்டு துரத்தி துரத்தி அடிக்காத வரை இந்த மேய்ப்பர்கள் பழைய கனவில் ஒளித்திருந்து விளையாடும் விளையாட்டை நிறுத்தப்போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இதுவரை உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்கட்கு வேண்டுகோள்! - அரசவைத்தலைவர் பொன்.பாலராஜன்.

மதிப்பிற்குரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்கட்கு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதவி ஏற்று 4 மாதங்கள் முடிவடைகின்றன. தமிழீழ தாயகத்தை மீள உருவாக்குவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பல பணிகளைத் துரிதமாகச் செய்ய வேண்டி இருக்கின்றது.

எமக்கு முன்னால் இருக்கக் கூடிய பாரிய கடமைகளும் பொறுப்புக்களும் எமக்கு வாக்களித்து மக்கள் எமக்குத் தந்த பொறுப்புக்களும் எமக்கு முன்னே இருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசியல் யாப்பினை உருவாக்கி அதை நிறைவேற்றி அந்த யாப்பினை ஏற்று 68 உறுப்பினர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

இதில் மொத்த்ம் 102 உறுப்பினர் கொண்ட அவையில் 67% அங்கீகாரத்தினை இவ் யாப்பு பெற்றுள்ளது. பெரும்பான்மை மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் உறுதியெடுத்து கையெழுத்தும் இட்டுள்ளார்கள்.

இதுவரையில் 34 உறுப்பினர்கள் மாத்திரம் இவ் யாப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரியப் படுத்துகின்றேன்.

2009 மே மாதம் பிலடெல்பியாவில் கூடி அரசியல் நிர்ணய சபையும் இடைக்கால நிர்வாக சபையும் உருவாக்கப்பட்ட்து. அந்த அரசியல் நிர்ணய சபைக்கு விசுவாசம் தெரிவித்து எங்களில் பலர் முன்னர் உறுதி மொழி எடுத்திருந்தோம்.

2010 ஒக்டோபரில் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு முதல் யாப்பும் பாராளுமன்றமும் உருவாக்கப் பட்டு பிரதமர் அவைத் தலைவர், துணை அவைத்தலைவர், மந்திரிசபையினர் என்போர் தெரிவு செய்யப்பட்டனர்.

அரசியல் யாப்பு பாராளுமன்றத்தின் அச்சாணியாக இருப்பது ஒரு மக்களாட்சி விதி. பாராளுமன்றத்தினை உருவாக்கிய யாப்பினை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அந்த யாப்பினால் உருவாக்கப்பட்ட பிரதமர், அவைத்தலைவர், மந்திரி சபை என்பவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.

ஒற்றுமை பற்றிப் பேசும் எங்களுக்கு அதைச் செயலில் காட்ட வாய்ப்பாக கருதிக் கொண்டு, இச் சந்தர்ப்பத்தில் செயற்படவேண்டும். கருத்து முரன்பாடுகளை பாரளுமன்றத்தில் பேசி, விவாதித்து முடிவு செய்யும் பணியில் நாங்கள் யாவரும் முனைப்புடன் ஈடுபடல் வேண்டும்.

அதற்கு ஏற்ப இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாதவர்கள் தங்களது உறுதிமொழிப் பத்திரத்தைக் கையொப்பமிட்டு பதிவுத் தபால் மூலம்

Pon. Balarajan

Speaker of TGTE

886 Sheppard Avenue

Pickering, Ontario

L1V 1G6

CANADA

என்னும் விலாசத்திற்கு மார்ச் மாதம் 5ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாகவும் அதன் பிரதியினை மின்னஞ்சல் மூலம் Pon.balarajan@tgte.org அல்லது Speaker@tgte.org என்னும் மின்ன்ஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.

இவ் வாக்குப் பத்திரங்கள் அவைத்தலைவருக்கு கிடைக்கவில்லை எனின் நீங்களாக உங்கள் நாடு கடந்த தமிழ்ழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்திலிருந்து விலகுவதாகக் கருத்திற் கொண்டு அப்பதவி வெற்றிடங்களை நிர்ப்புவதற்கான விபரங்கள் தேர்தல் ஆணையகத்திற்கு மார்ச் மாதம் 6ம் நாள் அனுப்பி வைக்கப்படும் என்பதனை பணிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

இப்படிக்கு

அவைத்தலைவர்

நா.க.த.அ

பொன். பாலராஜன்.

இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாதவர்கள்

Australia

Sanchayan, Kulasegaram

Sribalan, Seran

Shanmuganathakumar, Thuraisingam

Canada

Balan Ratnarajah

Esan Theivendran Kulasekaram

Mariampillai Anjalo Yogendran

Sureshananth Ratnabalan

Thiru S. Thiruchelvam

Vanitha Rajendram

France

Saravanamuthu Sasikumar

Sivaguru Balachandran

Tharmendran Krishanth

Germany

Nadarajah Thiruchelvam

Dr. Sandrapala Ganesaratnam

Mughunthan Indralingam

Paramu Ananthasingam

Rasiah Thanabalasundaram

Renuka Logeswaran

Vithiya Jeyasangar

Italy

Mylvaganam Baskaranarayanan

Denmark

Ponnampalam Maheswaran

Remmon Rajiv

Sukenthini Nirmalanathan

Norway

Jeyasri Balasubramaniam

Sivakaneshan Thilaiyampalam

Sivananthan Murali

Sweden

R.Sivaneshan

UK

Arththy Arumugam

Jeyavani Atchuthan

Karthikeshan Paramasivam

Maheswaran Sasithar

Senathirajah Jeyananthamoorthy

Shanmuganathan Kaviraj

Vasuky Somaskanda

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி - அறிக்கை

தமிழ் இணையங்களில் ஆங்காங்கே வெளியாகும் குழப்பமான வதந்திகளால் அவதூறுப்
பரப்புரைகளில் இருந்து உண்மையான சவால்களை மக்கள் பிரித்தறிய முடியாத நிலை
தோன்றியிருக்கிறது. உடனடியாக சில சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளியிட்டு நன்நோக்கோடு எம்மை
நாமே புடமிட்டு முன்செல்லும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசவைக்குத் தேர்தலில்
தெரிவுசெய்யப்பட்ட நாம் சில முக்கியமான முடிவுகளை மேற்கொண்டு அவற்றை எமது
மக்களுக்கும் இதர அரசவைப் பிரதிநிதிகளுக்கும் இத்தால் அறியத்தருகிறோம்.

1.1 நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி மார்ச் 2011ம் ஆண்டு 4ம் திகதிமுதல்
அதிகாரப+ர்வமாக உதயமாகியுள்ளது. இதற்கான தோற்றுவாய்ப் பின்னணியும் சூழலும் இந்த
ஆவணத்தில் விளக்கப்படுகிறது.

1.2 மூவர் கொண்ட ஓராண்டுக்கொருமுறை தெரிவாகும் நிறைவேற்று மையமும் ஒன்பது பேர்
கொண்ட ஈராண்டுக்கொருமுறை தெரிவாகும் ஆணை மையத்தையும் கொண்டு ஜனநாயக
அணி செயற்படும். ஆணை மையத்தால் நிறைவேற்று மையத்தின் உறுப்பினர்கள்
தெரிவுசெய்யப்படுவர். ஆணை மையம் நா.க.த.அ வின் அரசவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்படும்.

1.3 எமது அணியில் அங்கத்துவம் பெறும் தகைமை நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தலில்
போட்டியிட்டவர்களில் ஜனநாயக அணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு
உண்டு. இதற்குரிய வகையில் எமது கொள்கைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு
எழுத்துருவில் பிரகடனப்படுத்தப்படும்.
ஜனநாயக அணி முழுமையானதொரு சுயாதீனமான அணியாகும். இதற்கு ஏதுவாக இரண்டாம்
தலைமுறை இளையோரே நிறைவேற்று மையத்தில் தெரிவாகியுள்ளனர்.
முதலாவது நிறைவேற்று மையத்தின் முடிவுகள் வருமாறு:

1.4 இன்று முதல் எமது முடிவுகள் நிறைவேற்று மையத்தின் மூவரினாலும் கையெழுத்திடப்பட்டு
வெளியிடப்படும். அவதூறுகளும் ஆதாரமற்ற வதந்திகளும் எழுந்தமானமான
குற்றச்சாட்டுக்களும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முற்றுக்கு வரவேண்டும். ஜனநாயக
அணியில் அங்கம் வகிப்போரிடம் இருந்து இவ்வாறான கடிதங்களோ அறிக்கைகளோ எமது
அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரமாட்டாது.

1.5 தற்போது உருவாகியிருக்கும் அரசாங்கக் கட்டமைப்பை யாப்புரீதியாக
அங்கீகரிக்காவிட்டாலும், அடுத்த அரசவைக்கான தேர்தல் நடைபெறும் வரை அவர்களின்
செயற்பாட்டுக்கு நாம் குந்தகமாக இருக்கப்போவதில்லை. சகல அரசவை அமர்வுகளிலும்
நாம் பங்குகொள்வோம். அதேவேளை, சரியான யாப்பொன்றை உருவாக்குவதற்கான எமது
மாதிரி யாப்பையும் நாம் முன்வைப்போம்.

1.6 மாதிரி யாப்பு தொடர்ந்தும் தனியான அமர்வுகளில் விவாதிக்கப்பட்டு, தரமான நாடு கடந்த
கோட்பாட்டுக்கு இயைவான யாப்பாக அது முழுமையாக்கப்பட்டு அதன் அடிப்படையில்
அடுத்த தேர்தல் நடைபெறக்கூடிய வகையில் எல்லோரும் சேர்ந்து அதை உருவாக்குவோம்.

தெரிவாகியிருக்கும் நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியான திசையில் தொடரவேண்டும்
என்று நாம் விரும்பும் அதேவேளை அரசாங்கத்தில் பதவிநிலைகளை வகிப்போர் குழப்பகரமான
அறிக்கைகளை வெளியிடாதவாறு பேணும் பெரும்பொறுப்பு திரு. ருத்ரகுமாரன் அவர்களுக்குரியது
என்பதையும் இத்தால் உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம். நாமும் நாடுகடந்த அரசவையின்
அதிகாரப+ர்வமான பிரதிநிதிகளே என்ற ஆணையோடு எமது செயற்பாடு அமைந்திருக்கும்.

2) பின்னணி

இறைமையும் ப+ரண சுதந்திரமும் பொருந்திய தமிழீழத் தனியரசு அமைப்பதற்கு நாடு கடந்த
சூழலில் இருந்து செயலாற்றும் நோக்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்
என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அதைச் சரியான பாதையில் நெறிப்படுத்தும் நோக்கில் எம்மில்
பலர் (ஜனநாயக அணிக்கு அப்பாற்பட்ட பலரும் உள்ளடங்கலாக) தேர்தலுக்கு முன்பிருந்தே
செயற்பட்டு வந்திருக்கிறோம்.

நா.க.த.அரசவைக்கான நாடுகள் தழுவிய தேர்தல் முன்னெடுப்பின்போது, சிறிலங்கா அரசின்
கைகளுக்குள் சிக்கியிருப்போரின் நண்பர்களும் ஆதரவாளர்களும், அவர்களை நம்பியவர்களும், நாடு
கடந்த அரசவைக்கான தேர்தல் ஆணையங்கள் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும்
ஒருபக்கச் சார்பான முறையில் கையகப்படுத்தியிருந்தனர். இந்த நிலை எவ்வாறு உருவாகியது
என்பதற்கான பின்னணியை நாம் விளக்க வேண்டிய தேவை இன்று இல்லை.

ஆயினும், சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை மீளுறுதி செய்யும்
வாக்கெடுப்புக்கு எதிராக இவர்களிற் பலர் வெளிப்படையாகச் செயற்பட விழைந்தமையே நா.க.த.அ 
வேலைத்திட்டத்தில் இவர்களுக்கு இருக்கும் உண்மை நோக்கம் என்ன என்ற ஐயப்பாட்டை பரந்த
அளவில் தர்க்கீகமான முறையில் எழுப்பியிருந்தது.

இவர்களை ஆதரித்தோரில் பலர் தமது அறியாமை காரணத்தாலோ, கொள்கைக்கு அப்பாற்பட்ட
 நடைமுறைசார்ந்த உணர்வுரீதியான கோபதாபங்களின் நிமித்தமோ, தோல்விநிலை வசப்பட்டோ,
 அல்லது உண்மையிலேயே சிறிலங்காவின் புலனாய்வு வலைக்குள்ளிருந்து இயக்கியோரால்
 தூண்டப்பட்டோ நா.க.த.அ உருவாக்கத்திற்கான வேலைத்திட்டத்தைத் திசைதிருப்பும் போக்கில்
செயற்படலாகினர்.

இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து பெயர் குறிப்பிடப்படாத ஓர் ‘உருவாக்கக்குழு’ இயக்கியது.

இந்த உருவாக்கக்குழுவே பல நாடுகளில் ஒரு தலைப்பட்சமான தேர்தல் ஆணையங்களையும்
 செயற்குழுக்களையும் நிறுவி பிளவுநிலையைத் தோற்றுவித்தது என்பதும் யாவரும் அறிந்ததே.

இதன் அபாயத்தை உணர்ந்தநிலையில் முற்கூட்டியே இந்த வேலைத்திட்டத்தின் பகிரங்க
இணைப்பாளராகச் செயற்பட்ட திரு ருத்ரகுமாரன் அவர்களிடம் 2009 நவம்பர் 06 அன்று பல
அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்று கூடித் தமது கரிசனைகளைத் தெளிவாகவே 
வெளிப்படுத்தியிருந்தனர்.

விளைவாக, பல நாட்களின் பின், தேர்தல் அண்மித்த வேளையில் திரு. ருத்ரகுமாரன் அவர்கள்
தான் ஒருவரே உருவாக்கக்குழு என்று பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இச் சூழலில் வெளியான நா.க.த.அ வின் ஆலோசனைக்குழுவின் வழிகாட்டிக் கோட்பாடுகள்
பற்றியும் காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து, குறித்த கோட்பாடுகளில் முக்கியமான
மாற்றங்கள் சிலவற்றை மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் கொண்டுவந்து, நாடு கடந்த தமிழீழ
அரசு என்ற கோட்பாடு சரியான திசையில் பயணிக்கச் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே பலரும்
செயலாற்றினர்.

தமிழீழத்தின் இறைமை என்ற உச்சரிப்போடு இன்றிருக்கும் நாடு கடந்த அரசாங்கத்தின்
கொள்கைக்குப் பின்னால் தமிழீழத் தேசியம் குறித்த சரியான பார்வை கொண்ட பலரின் அழுத்தம்
நிறைந்த செயற்பாடு பொதிந்துகிடக்கிறது என்பது தான் உண்மை.

தவிரவும், தேர்தல் ஆணையங்கள் நாட்டுக்கு நாடு வேறு வேறு விதமான நடைமுறைகளைக்
 கையாண்டதும், தேர்தல் முடிவில் பெருமளவு வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகள் பலர் பின்வாங்கச்
செய்யபபட்டதும், இன்றுவரை வெளியிடப்படாது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற தேர்தல்
முடிவுகளும், தேர்தல் நடாத்த முடியாத நாடுகளுக்கான பிரதிநிதிகள் வழிகாட்டிக்
கோட்பாடுகளுக்கிணங்கத் தெரிவுசெய்யப்படாத நிலையிலும், அவரச அவசரமாக நடாத்தப்பட்ட
இரண்டாவது அமர்வை, யாப்பு குறித்த விவாதத்திற்கான அமர்வாக மாத்திரம் கொள்ளாது
முழுமையான யாப்பை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அமர்வாக நாம் கொள்ளமுடியுமா என்பது
கேள்விக்குரியது.

எனினும், இந்த விடயத்திலும் நாம் பொறுமையோடும் விட்டுக்கொடுப்புக்களுடனும் 
செயற்பட்டிருந்தோம்.

3) நாடு கடந்த தமிழீழ அரசவையின் அமர்வுகள்:

முதலாவது அமர்வின் மூன்றாம் நாளன்று அமர்விற் பங்கேற்ற அனைத்துப் பிரதிநிதிகளும் அரசியல்
நிர்ணய அவைக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுவிட்டனர்.

இரண்டாவது அமர்வில், யாப்புக்கான மாதிரி குறித்த விவாதத்தின்போது, மூன்றில் இரண்டு
பெரும்பான்மையோடு எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தேர்தலில் தெரிவான அனைவரிலும்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகரிக்கும் வகையில் யாப்பு விவாதிக்கப்பட்டு ஜனநாயக
முறையில் முழுமைப்படுத்தப்படுவதே பொது மரபு.

மாதிரி யாப்பில் திருத்தத்தைக் கோருவதற்காக சில உறுப்பினர்கள் முன்வைத்த மூன்று
திருத்தக்கோரிக்கைகள் மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. ஆனால், யாப்பு வாக்கெடுப்புக்கு
விடப்படவில்லை.

ஒவ்வொருவராலும் யாப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதை அறுதியாக
முடிவெடுப்பதற்கு ‘ஆம்’, ‘இல்லை’இ ‘கலந்துகொள்ளவில்லை’ என்று தமது ஒப்புதலையோ,
 மறுப்பையோ தெரிவிக்கும் வகையிலான இறுதி வாக்கெடுப்பும் நடைபெறவேயில்லை.
 சிலர் குறிப்பிடுவதுபோல ஏகமனதாக எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

யாப்புச் சார்ந்த சில முக்கியமான முடிவுகள் நடைமுறை மீறல்கள் மத்தியில், மூன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மை இல்லாமல், நேரடியாக சமுகமளிக்க முடியாதிருந்த பிரதிவாக்கு
வழங்கியோரின் வாக்குகளையும் முன்னுக்குப் பின் முரணாக நிராகரித்து, முடிவுகள் எல்லாம் ஓரிரு
வாக்கு வித்தியாசஙகளில் ஒரு தலைப்பட்சமாக நிறைவேற்றப்பட்டன. இது குறித்த விளக்கங்களை
மக்களுக்கு நாம் ஏற்கனவே முன்வைத்திருக்கிறோம்.

இந்த முரண்பாடுகளை, தொடர்ந்தும் வளர்த்துக்கொண்டிருப்பது எமது நோக்கமல்ல.
புவிசார் அரசியலில் ஒரு சர்வதேச சக்தியோடு மட்டும் அடையாளப்படுத்தும் வகையில்
அமைந்துவிடாமல், எவரின் அழுத்தங்களுக்கும் பிடிகளுக்குள்ளும் அகப்படாதவாறு 
செயற்படுவதுதான் உண்மையிலேயே நாடு கடந்த கோட்பாட்டுக்கு மகிமை தருவதாகும்.

இவ்வாறான கட்டமைப்பு ரீதியான முடிவுகளில் எம்மால் இயன்ற அளவு விட்டுக்கொடுத்திருந்த
போதும், அளவுக்கதிகமான அதிகாரங்களை ஒருவரின் கையில் மையப்படுத்தும் வகையில் அமர்வு
நெறிப்படுத்தப்பட்டது.

4) மாதிரி யாப்பு குறித்த எமது நிலைப்பாடு

ஆரம்பத்தில் இருந்தே மாதிரி யாப்பு ஒன்றை அமைத்து, அதன் அடிப்படையிலேயே முதலாவது
அரசவைக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும் என்ற முறைமையை உருவாக்கக்குழுவும்,
 ஆலோசனைக்குழுவும் முற்றாக நிராகரித்துவந்திருந்தன.

இவ்வாறான மாதிரி யாப்பு ஒன்று முதலே வரையப்பட்டிருப்பின், குறித்த அடிப்படைகளை
ஏற்றுக்கொண்டு தேர்தலில் தெரிவுசெய்யப்படுவோர் பின்னாளில் தாம் தெரிவுசெய்யப்பட்ட
அடிப்படைகளை நிராகரிக்குமிடத்து, அதாவது எந்த ஆணையை வைத்து மக்களால்
 தெரிவு செய்யப்பட்டார்களோ அந்த ஆணையை அவர்கள் நிராகரித்தால், குறித்த அவையிலிருந்து
 அவர்கள் விலக்கப்படலாம்.

ஆனால், யாப்பை உருவாக்குவதே முதலாவது அரசவை தான் என்றும் அதை அமைப்பதற்கானதே
 முதலாவது அரசவைக்கான தேர்தல் என்றும் தெளிவாகத் தெரிவித்த அடிப்படையிலேயே
 தேர்தல்கள் நடைபெற்றன.

இதற்கேற்பத் தெரிவுசெய்யப்பட்டவர்களை சட்டவாக்க அவையில் இருந்தே விலக்கும் உரிமை எந்த
ஒரு அரசியல் அமைப்புச் சபைக்கும் இருக்கமுடியாது.

அதாவது, குறித்த ஒரு விடயத்தை உருவாக்குவதற்கென மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகளில் ஒரு
சாரார் – தாங்கள் பெரும்பான்மையாக இருந்தாற்கூட – தாம் உருவாக்கிய முறையே சரியென்றும்
 மற்றவர்கள் சிறுபான்மையென்றும், சிறுபான்மையாய் இருப்பவர்கள் அவையில் இனிமேல் அங்கம்
வகிக்கவே முடியாதென்றும் வாதிடுவது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அபத்தமானதும் ஜனநாயக
விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதும் ஆகும்.

அமைக்கப்படும் அரசாங்கத்தில் வேண்டுமானால் அவர்கள் தெரிவுசெய்யப்படாமல் விடப்படலாம்.
ஆனால், அவர்களை அவையில் இருந்தே வெளியேற்ற முயற்சிப்பது விநோதமானது.

அமர்வில் தான் யாப்பு நிறைவேற்றப்படலாமே அன்றி, தனிப்பட்ட ரீதியி;ல் தொடர்புகொண்டு
கையெழுத்து வாங்கும் முயற்சியூடாக யாப்பை அங்கீகரிக்க முயற்சிப்பதும் சட்ட அரசவைக்கும்
ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானது.

ஆக, சுமுகமான முறையில் மீண்டும் கருத்துப் பகிர்வுக்கு இடமளித்து, ஓர் அமர்வைச் செய்வதற்கு
ஏன் பின் நிற்கவேண்டும் என்ற கேள்வி நியாயமானதே.

தேர்தலில் அதிக வாக்குகளால் மக்களின் அபிமானத்தோடு வெற்றிபெற்றும் இடைநிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும் அரசவைப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் முடிவுகளை இனியும் காலதாமதம்
செய்யாது அங்கீகரிக்குமாறும், அடுத்த அமர்வை விரைவில் நடாத்தி யாப்பை நியாயப+ர்வமான
முறையில் முழுமைப்படுத்துவதற்கு ஒழுங்கு செய்யுமாறும் எழுத்து மூலமாக

எமது பிரதிநிதிகள் திரு
ருத்ரகுமாரன் அவர்களை வேண்ட நேரிட்டது.
எமது பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்காது,
அவையில் எமது உறுப்புரிமையையே இரத்துச் செய்யும் நோக்கில், யாப்பு நிறைவேற்றப்பட்டது
போலவும், அதற்கேற்ப சத்தியப்பிரமாணம் செய்யுமாறும் காலக்கெடு விதித்து அச்சுறுத்தியிருக்கிறார்
திரு. பொன். பாலராஜன். இது குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

அதேவேளை, இந்தச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள விழையும் எமது
அணியின் உறுப்பினர்களையும் நாம் பொறுமை காக்குமாறு வேண்டியிருக்கிறோம்.

இந்தச் சூழலே நாம் ஓர் அணியாகச் செயற்படவேண்டிய தேவையை ஜனநாயக ரீதியாக எம்முன்
தோற்றுவித்திருக்கிறது. இதனால், கருத்திசைந்த அனைவரும் ஜனநாயக அணியாக
ஒன்றிணைந்துள்ளோம்.

தவிரவும், ஒருவரே முதல்வர் என்றும், அவரிடமே முழு நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கும்
வகையில், அவ்வொருவரே மூன்று துணைப் பிரதமர்களையும் சகல அமைச்சுக்களையும்
தெரிந்தெடுப்பார் என்றும், நாடு கடந்த கோட்பாட்டுக்கே முரணாக, மரபு வழிக் கட்சி அரசியல்
பாணியில் அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நாடு கடந்த அரசாங்கத்தின் முழுமையான அதிகாரங்களையும் ஒரு நாட்டின்
எல்லைக்குட்பட்டிருக்கும் பிரஜை ஒருவரிடம் கையளித்துவிடல் என்பது அடிப்படையில் நாடு கடந்த
கோட்பாட்டிற்கே விரோதமானது.

50 வீதத்தோடு ஒரு வாக்கு சேர்ந்து வரும் சாதாரண பெரும்பான்மையோடு ஒரு பிரதமர்
தேர்ந்தெடுக்கப்படலாம், ஆனால் அதே சாதாரண பெரும்பான்மைக்கு குறித்த பிரதமரில்
நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டாலும் அவர் பதவி வகிக்கும் வண்ணம் யாப்பு எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு சாதாரண பெரும்பான்மையோடு தெரிவாகுபவர், மூன்றில் ஒரு மடங்கு பிரதிநிதிகளுடன்
ஆதரவுடன் மட்டும் அரசவையில் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்றும் கூட மாதிரி யாப்பு
பிரஸ்தாபிக்கிறது. இந்த மூன்றில் ஒரு மடங்கு கூட, மக்களால் வாக்களித்து தெரிவுசெய்யப்படாத
பிரதிநிதிகளாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

தற்போது பல முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் நேரடியாக மக்களால்
தெரிவுசெய்யப்படாதவர்களாயிருப்பதும், அதேவேளை அதிக வாக்குளைப் பெற்றவர்கள் கூட
அவைக்கு வெளியிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் இந்த யாப்பின் பலவீனங்களை
எடுத்துக்காட்டுகிறது.

பிரதம அமைச்சரே தனது மந்திரிசபையை முழுமையாகத் தெரிவுசெய்யும் முறை அமைவதென்றால்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வடிவமும் ஒருசேர அமைந்திருக்கவேண்டும். இதுவே ஜனநாயக அரச
வடிவங்களின் நடைமுறை.

ஆனால், சம அதிகாரங்களுடனான நிறைவேற்றுக் கூட்டுத் தலைமையையும், அமைச்சுக்களையும்
அரசவை உறுப்பினர்கள் நேரடியாக, இரகசிய வாக்கெடுப்பின்மூலம் தெரிவுசெய்ய
முடியுமாயிருந்தால், எதிர்க்கட்சி வடிவத்திற்கான தேவை இருக்காது. இதையே நாம் விரும்பினோம்.
இதுவே நாடு கடந்த தன்மைக்கும் பொருத்தமானது என்பதே எமது கருத்தாகும்.

தயை கூர்ந்து அனைவரையும் யாப்பு மாதிரியை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பார்க்குமாறு
மீண்டும் வேண்டுகிறோம்.

5) சுமுகமான தீர்வுக்கான வழிமுறை

எமக்கு எவரிலும் எதுவித தனிப்பட்ட கோபதாபங்களும் இல்லை.

ஆனால், நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளாகிய நாம் அதிகாரங்களையும் மக்களின்
ஆணையையும் ஒரு சிலரின் கைகளில் மையப்படுத்த முயற்சிக்கும் சாமானிய அரசியலில் ஈடுபட
முடியாது.

ஒரு தேசத்தின் விடுதலைக்கான கடமையைச் சுமக்கும் பணியாளர்கள் என்ற உணர்வும் பொறுப்பும்
இந்தக் கட்டமைப்புக்கு மிகவும் அடிப்படையானது.

இந்தவகையில் நாமெல்லோரும் விரும்புவது நாடு கடந்த நிலையில் அனைவரும் தெரிவு செய்கின்ற,
எந்த ஒரு வல்லாதிக்க சக்தியின் கைகளுக்குள்ளும் தனித்து அகப்பட்டுவிட முடியாத, புவிசார்
அரசியலில் அனைத்துச் சக்திகளுடனும் பேரம் பேசவல்ல ஒரு கூட்டுத் தலைமையையே. இரண்டாம்
தலைமுறையின் பங்கு இதில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும்.

இதனால், நாம் ஒரு ஏகமனதான முடிவுக்கு வந்திருக்கிறோம்.

தற்போது அரசாங்கத்திற்குத் தெரிவாகியிருப்போர் அங்கீகாரமில்லாத ஒரு யாப்பின் அடிப்படையில்
தெரிவாகியிருந்தாலும், எமது நோக்கம் எதிர்வரும் தேர்தலில் சரியானதொரு யாப்பின் அடிப்படையில்
தெரிவுகளும் கட்டமைப்பும் உருவாகவேண்டும் என்பதே. அதுவரை, அரசாங்கத்தின்
செயற்பாட்டுக்கும் நாம் குந்தகமாக இருக்கப்போவதில்லை. ஆனால், முடிவுகள் எடுக்கும் போது
எமது ஜனநாயக அணியுடனும் கலந்தாலோசித்து, ஒற்றுமையை வெளிப்படுத்தி நல்லெண்ணத்துடன்
செயற்படுமாறு இத்தால் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

மக்கள் மத்தியிலும் இதர அரசவைப் பிரதிநிதிகள் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பற்றிய யாப்புக் குறித்த கருத்துருவாக்கத்தில் நாம் ஈடுபடுவோம்.

சரியானதொரு யாப்பை அதற்குரிய முறையில், தனியான அமர்வுகளில் விவாதித்து, தரமானதொரு
நாடு கடந்த கோட்பாட்டுக்கு இயைவான வடிவம் கொடுத்து அதன் அடிப்படையில் அடுத்த தேர்தல்
நடைபெறும் வகையில் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம்.

இதற்கான நடைமுறைகளைத் தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம்.

அதேவேளை, அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பாரபட்சமற்ற முறையில், குழுவாதம்
பாராட்டாது எமது இந்த நன் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும்
வேண்டிக்கொள்கிறோம்.

வாழ்க தமிழ், வெல்க தமிழீழீம். நாடு கடந்த தமிழீழ அரச கோட்பாடு மேலும் வளர்க!

இவ்வண்ணம்,

ஜெ. வித்தியா, சசி ,ச. கிருசசாந்தி

6) நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியின் கட்டமைப்பு

6.1) நிறைவேற்று மைய உறுப்பினர்கள்

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்) சசிதர் மகேஸ்வரன் (பிரித்தானியா) வித்தியா ஜெயசங்கர் (ஜேர்மனி)

6.2) ஆணை மைய உறுப்பினர்கள்

ஜெயவாணி அச்சுதன் (பிரித்தானியா)

கார்த்திகேசன் பரமசிவன் (பிரித்தானியா)

மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன் (கனடா)

எஸ் திருச்செல்வம் (கனடா)

முரளி சிவானந்தன் (நோர்வே)

சிவகுரு பாலச்சந்திரன் (பிரான்ஸ்)

சேரன் சிறீபாலன் (அவுஸ்ரேலியா)

ரேணுகா லோகேஸ்வரன் (ஜேர்மனி)

மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் (இத்தாலி)

6.3) ஜனநாயக அணியின் ஆரம்ப அங்கத்தவர்கள்:

(தேர்தலில் தெரிவானதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வாக்குரிமை கொண்டிருப்பவர்களும், தேர்தலில் வெற்றிபெற்றும் அறிவிப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டோ அல்லது முடிவுகளே இதுவரை அறிவிக்கப்படாது வாக்குரிமை அற்றவர்களும் உள்ளடங்கலாக)

தெய்வேந்திரன் குலசேகரம்

மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன்

வனிதா இராஜேந்திரம்

எஸ். திருச்செல்வம்

சுரேசானந்த் ரத்னபாலன்

பாலன் ரத்னராஜா

சிவகுரு பாலச்சந்திரன்

சசிகுமார் சரவணமுத்து

கிரிஸாந்த் தர்மந்திரன்

திருச்சோதி திருக்குலசிங்கம்

கிருசாந்தி சக்திதாசன்

சேரன் சிறிபாலன்

பரமு ஆனந்தசிங்கம்

வித்தியா ஜெயசங்கர்

ரேணுகா லோகேஸ்வரன்

நடராஜா திருச்செல்வம்

இராசையா தனபாலசுந்தரம்

முகுந்தன் இந்திரலிங்கம்

கணேசரட்ணம் சந்திரபாலன்

மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்

ஜெயசிறி பாலசுப்ரமணியம்

சிவானந்தன் முரளி

சிவகணேசன் தில்லையம்பலம்

ஜெயவாணி அச்சுதன்

கார்த்திகேசன் பரமசிவன்

மகேஸ்வரன் சசிதர்

சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி

வாசுகி சோமஸ்கந்தா

சண்முகநாதன் கவிராஜ்

சின்னத்துரை சிறிரஞ்சன்

ஆறுமுகம் விவேகானந்தராஜா

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=6008:2011-03-06-14-07-40&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்! ஜனநாயகம் எண்டால் என்னங்கோ?

எங்களை தவிர ஒருதரும் தேர்தல்லை நிக்கக் கூடாது எண்டு மிரட்டுறது.

அப்படி போட்டியிடுறவனை துரோகி எண்டுறது

நாங்கள் சொல்லுற ஆக்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பினம். நீங்கள் அவயட்டை போய் பிரச்சாரம் எல்லாம் செய்யேலாது எண்டு சொல்லுறது

நான் பெரிய எலித் பரம்பரையிலை வந்தவள் உங்கடை கருத்தை எல்லாம் ஏற்றுக் கொள்ளமாட்டன் எண்டு திமிரா சொல்லுறது.

மூத்த போராளியள் கூட்டம் வைக்கிற போது எனக்கு உங்கடை அணுகுமுறை பிடிக்கேல்லை என்று சொல்லிவிட்டு வெளியேறுவதற்கு பதிலாக கதவை பலமாக அடித்துச் சாத்திவிட்டு செல்லுறது.அப்படி செல்லறதை வீணி வடிச்சுக்கொண்டு நியாயப்படுத்துறது

15 அல்லது 20 கூட்டமா போய் ஆக்களை சுத்தி வழைச்சு மிரட்டுறது.

புத்திரிகையை எரிக்காமலே எரிச்சனாங்கள் எண்டு பீலா விடுறது. அதைவிட பத்திரிகை எரிப்பம் வெட்டுவம் கொத்துவம் எண்டு சவுண்டுவிடுறது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு அடிப்படையான காரணங்கள் அல்லது தேவைகள் (ஐரோப்பிய குடிமகனது அடிப்படை உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பது,கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தை மறுப்பது) எதுவோ அதை நிறைவேற்றிக் கொடுப்பது.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படாத நிலையில் நாடுகடந்த அரசுக்குள் போய் நாங்கள் தான் உண்மையான புலிகள் மற்றவை எல்லாம் காகிதப்புலிகள் நாங்கள் அடிப்பம் முறிப்பும் வெட்டுவம் டேய் நீங்கள் எல்லாம் கேபியின்ரை ஆக்கள் துரோகிகள் நாங்கள் சொல்லுறைதான்டா நீங்கள் கேட்க வேணும.; கனக்க கதைச்சியள் எண்டால் உங்கடை படங்களைப் போட்டு கறுப்பு வெள்ளை சிவப்பிலை எழுதுவம் எண்டு சவண்டா பீலா விட்டு அதையும் அதாவது நாடுகடந்த அரசையும் தடைசெய்விப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி குடுப்பம்

இதுதானே ஜனநாயகம்

Edited by navam

சனநாயகம் தொடர்பாக உருத்திரகுமாரன் ஒரு வகுப்பு எடுத்திருக்கலாம்.

உருத்திரகுமாருக்கு ஓர் வேண்டுகோள் ....

.... இந்த நாடு கடந்த தமிழீழ அரசில் ... இன்று ஜனநாயக வேடமணிந்து வந்திருப்பவர்கள் ... வேறு யாருமல்லர்! காலாகாலமாக புலத்தில் தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்ற நிலை கொண்ட கும்பல், இதுவரை அனுபவித்த பதவி/பணம்/ராஜ வாழ்க்கையை விட்டு விட்டு போக மனமில்லாது, இனிவரும் காலங்களிலும் கையில் அகப்பட்ட பணத்தில் தண்டச்சோறுகளாக வாழ வெளிக்கிட்ட கூட்டத்தின் அடியாட்களும்/கூலியாட்களுமே! இவர்கள் இதற்குள் இருக்கும் மட்டும் ஒன்றையும் செய்ய விடப்போவதில்லை! மாறாக சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட போகிறார்கள்!!! ... இவர்களை அரவணைத்து போக முடியுமென நினைக்கிறீர்களா????

... இங்கு ஓர் முக்கிய ஊடகம் .... அது சில காலங்களுக்கு முன் இதே தண்டச்சோறுகளினால் பலாத்காரமாக அபகரிக்கப்படும் நிலையில் இருந்து தப்பியது! மே 18இற்கு பின்னம் அதற்கு நிதியுதவி செய்த பலர் நிறுத்தி விட, மிக இக்கட்டான நிலையில் இருந்தது. அதற்கு நிதியுதவி தொடர்ந்து செய்யும்படி சிலரிடம், அதன் நிர்வாகம் கேட்டுக் கொண்டது! அதன் கோரிக்கையை ஏற்று உதவி செய்ய முன் வந்தாலும், இவ்வூடகத்தின் ... தொடர்ச்சியான நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான குழப்பகரமான நிலை தொடர்பில் .... இதற்கு உதவுவதை சிலர் மீளாய்வு செய்ய வேண்டியும் ஏற்படும்!

Edited by Nellaiyan

அரிசந்திரன்கள் தான் உருத்திராவிற்குப்பின்னால் மறைந்து இருக்கின்றார்கள் என்கிறியல்.

இதைத்தான் நாங்கள் காலகாலமாகச் சொல்லுகின்றோம் நெல்லையன் இப்ப சொல்லுகின்றார்.

தேசியம் யாரினதும் குத்தைகை சொத்தல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அரிசந்திரன்கள் தான் உருத்திராவிற்குப்பின்னால் மறைந்து இருக்கின்றார்கள் என்கிறியல்.

பல அலிபாபாக்களை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.அவர்கள் முன்பு புலிகளை திட்டி வயிறு வளர்த்தவர்கள் இன்றும் யாரிலாவது ஏதாவது பிழை பிடிக்கலாம் என நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், கேபி கைது செய்யப்பட்டாரா? அல்லது சரனடைந்தாரா? என்பதே, ஏனென்றால் உருத்திரகுமாரனை ஒருதலைபட்சமாக நியமித்தவர் கேபியே, கேபி தானாக சரனடைந்து இருந்தால், அவர் தனக்கு சாதகமான, தான் நினைப்பதை செய்யகூடியவரை, அதாவது தனக்கு சாதகமான ஒருவரையே நியமித்து இருப்பார், கைது செய்யப்பட்டு இருந்தால் அவரது தற்போதய செயல்களுக்கும், முன்பு அவர் எடுத்த முடிவுகளுக்கும் சமந்தம் இருக்க வாய்பில்லை, அந்த நிலையில் உருத்திரகுமாரன் தமிழர் நலன் சார்ந்து செயற்பட கூடியவராக இருப்பார், இதில் இவர் எதற்குள் வருகிறார் என்பது, உருத்திர குமாருக்கும், கேபிக்கும் மட்டுமே தெரிந்த விடயம், இந்த விடயத்தில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்,

ஒருவரை நம்பி முழு விடயத்தையும் விட்டு விட முடியாது, ஒருபாதை அடைபட்டாலும் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும், எம்மிடம் இருக்கும் அனைத்து அமைப்புகளையும் பலப்படுத்த வேண்டும், தமிழர் நலன்சார்ந்து நடப்பவர்கள் அனைவரையும், பலப்படுத்த வேண்டும். விலை போகிறவர்கள் ஒதுக்கபட வேண்டும், உண்மையாக பாடுபடுபவர் கைகளை இறுகபற்றி எமது செயற்பாடுகளை முன்நகர்த்துதல் வேண்டும்.

ஒரு தலைமை, ஒருஇயக்கம் என்பது எமது தேசிய தலைவருடன் முடிந்து விட்டது, ஏன் என்றால் அவர் அப்படியே இருந்தார் ,அப்படியேயே வாழ்ந்து காட்டினார், தனது ஒட்டுமொத்த குடுப்பத்தையும் அதற்காகவே இழந்தார், அவர்தன் குடும்பத்தை இழந்து வளர்த்த இந்த போராட்டதை நாம் எவருக்காகவும் முடக்கி விடுதலகாது.

கேபி யை சர்வதேச பொறுப்பாளராக இறுதிநாட்களில் நியமித்தவர் தேசியதலைவர். அந்த அதிகாரத்தில் தான் கேபி உருத்திரகுமாரை நியமித்தார். உருத்திரகுமாரனை தமது சட்ட ஆலோசகராக நியமித்தவர் தேசியதலைவரே. நீங்கள் தேசிய தலைவரின் முடிவை இங்கு சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் அல்லவா?

ஒருவரை நம்பி முழு விடயத்தையும் விட்டு விட முடியாது, ஒருபாதை அடைபட்டாலும் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும், எம்மிடம் இருக்கும் அனைத்து அமைப்புகளையும் பலப்படுத்த வேண்டும், தமிழர் நலன்சார்ந்து நடப்பவர்கள் அனைவரையும், பலப்படுத்த வேண்டும். விலை போகிறவர்கள் ஒதுக்கபட வேண்டும், உண்மையாக பாடுபடுபவர் கைகளை இறுகபற்றி எமது செயற்பாடுகளை முன்நகர்த்துதல் வேண்டும்.

தேசியதலைவர் ஒருவர் அல்லவா? அவரை நம்பி மக்கள் முழுவிடயத்தையும் ஒப்படைத்தது தவறு என்று சொல்கிறீர்களா? அப்படியானால் ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புகளுடனும் மக்கள் பகுதி பகுதியாக பிரிந்து செயற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

தேசிய தலைவர் காரணங்களுடன் தான் ஒரு தலைமையின் கீழ் விடுதலை போரட்டத்தை ஒழுங்கு படுத்தினார். நாடுகள் ஒரு தலைவனை கொண்டு இயங்குவதற்கும் அதே காரணங்களே காட்டப்படுகின்றன. பல தலைமைகளின் கீழ் எந்த ஒரு வெற்றிகரமான அமைப்போ முயற்சிகளோ இடம் பெறுவதில்லை.

ஒரு தலைமை, ஒருஇயக்கம் என்பது எமது தேசிய தலைவருடன் முடிந்து விட்டது, ஏன் என்றால் அவர் அப்படியே இருந்தார் ,அப்படியேயே வாழ்ந்து காட்டினார், தனது ஒட்டுமொத்த குடுப்பத்தையும் அதற்காகவே இழந்தார், அவர்தன் குடும்பத்தை இழந்து வளர்த்த இந்த போராட்டதை நாம் எவருக்காகவும் முடக்கி விடுதலகாது.

தேசிய தலைவர் இறந்து விட்டார் என்று நீங்கள் நம்பலாம், ஆனால் மற்றவர்களையும் அப்படி நம்புமாறு கேட்பதற்கு என்ன ஆதாரங்களை நீங்கள் தரக்கூடியதாக இருக்கிறது?

இன்று தமிழ் மக்கள் தேர்ந்து கொண்ட தலைமை நாடுகடந்த அரசாக இருக்கிறது. அது தேசிய தலைவரால் உருவாக்கப்பட்டு கேபியால் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதற்காகவே இறுதிநாட்களில் பகிரங்க கடிதம் மூலமாக தேசியதலைவரால் கேபி பொறுப்பாக நியமிக்கப்பட்டார். கேபி இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பும், இன்று ஏற்கனவே தேசிய தலைவருடன் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசு இயங்குகிறது. இறுதிநாட்களில் இனி

எமது மக்களை நாடுகடந்த மக்களே பார்த்து கொள்ள வேண்டும். ஆயுதங்களை கீழே வைத்து எமது மக்களை ஒபாமாவின் கரங்களில் ஒப்படைக்கிறோம்

என்று விடுதலைபுலிகள் அறிவித்தது இதற்கு ஆதாரம். யாருமே எதிர்பார்க்காத விதமாக சிறிலங்கா பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்தது என்றும் ஒபாமா அரசு மன்னிக்க முடியாத ஒன்று என்பதை அமெரிக்க அரசின் உறுதியான நிலைப்பாடு இன்று காட்டுகிறது. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த அரசே அன்று விடுதலைப்புலிகள் அறிவித்தபடியான நாடுகடந்த மக்கள் வழங்கும் தலைமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நாங்கள் காலகாலமாகச் சொல்லுகின்றோம் நெல்லையன் இப்ப சொல்லுகின்றார்.

தேசியம் யாரினதும் குத்தைகை சொத்தல்ல.

காட்டிக் கொடுப்பை மொத்தக் குத்தகைக்கு எடுத்த பின், ஏன் ஐயா தேசியத்தின் குத்தகை பற்றி கவலை படுகின்றீகள்?

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் மற்றும் JUDE

உங்களிடம் ஒரு கேள்வி

நாடு கடந்த அரசின் பிறப்பிலிருந்து அதனை ஆதரிப்பவன் என்பதை முதலில் சொல்லிக்கொண்டு,

எனக்கு சில சந்தேகங்கள் உண்டு

அதனை இங்கு விவாதத்துக்காக அல்ல விளக்கத்துக்காக முன் வைக்கின்றேன்.

நாடு கடந்த அரசின் முன் பல செயற்பாடுகள் தேங்கிக்கிடந்தும் பல வேலைகளைச்செய்ய வேண்டியும் உள்ளநிலையில்..........

அவர்கள் புலம் பெயர் தேசங்களிலுள்ள மற்றய சங்கங்கள் அவைகள் விளையாட்டுக்கழகங்கள்............... போன்றவற்றை தங்களுக்குள் கொண்டுவர ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் . அத்துடன் புலிகளிலிருந்து விலகி செயற்படவிரும்புவதாக கூறிக்கொண்டு மாவீரர்கள் மற்றும் மாவீரர்தினம் போன்றவற்றை தமது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கின்றார்கள். அவை முன்புபோல் செயற்பட அனுமதித்துவிட்டு தமது ஏனைய வேலைகளைக்கவனிக்கலாம் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.