Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறது பழமொழி. அந்த திருமணபந்தத்தில் இணைந்து விட்ட இரு உடல்கள் விதி வசத்தால் இளவயதிலேயே உயிர் பறிக்கப்படுகிற போது அங்கு சமூக நீதி தடம் மாறிப்போகிறது.

கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் பெண் பல இம்சைகளிற்கு ஆளாகிறாள். தனித்தே காலத்தை கடத்துபவளாக செத்து மடிகிறாள்.

உணர்வுகள் ;சமூகம் என்கின்ற பார்வைகளுள் சின்னாபின்னப்பட்டு பல துன்பங்களிற்கு ஆளாகி செத்து மடிய வேண்டிய ரணம் நிறைந்த வாழ்க்கை.

இது சமூகத்தின் ஓர வஞ்சக சிந்தனை. ஆண் மனைவியை இழக்கும் போது அந்த ஆணிற்கு மறு திருமணத்தை செய்ய முண்டியடிக்கும் இந்த சமூகம் பெண்ணின் விடயத்தில் பின்னிற்பது வேதனை தான்.

ஆனாலும் கணவனை இழந்த பெண்ணின் உணர்வுகளை இந்த சமூகம் புரிவதே கிடையாது. வெள்ளைச்சேலையைக்கொடுத்து அவளின் உணர்வை அதற்குள் மறைத்து விட்டு ஜாலம் காட்டுகிறது . பெண்கள் விழிப்பு பெற்று கலர் புடவையை உடுத்தாலும் அதற்கு அப்பால் உணர்வு என்பதை யாரும் பார்க்க மறந்து போகிறோம்.

ஆண்களிற்கு ஏதும் உடையில் மாற்றம் கிடையவே கிடையாது. புதுமாப்பிளைக் கோலம் பரிசாக. ஆண்களுக்கு ஒரு நீதி என்றும் பெண்களுக்கு ஒரு நீதியென்றும். எதையும் சமூக நோக்கோடும் மனிதாபிமான நோக்கோடும் நாம் இன்னமும் பார்க்க தொடங்கவில்லை.

எமது பண்பாட்டு விழுமியங்கள் சிலதை காலத்துக்கு ஏற்றவாறு புதிய நல்ல சிந்தனைக்கு ஏற்றவாறு தீயிட்டு கொழுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.அந்த தீயிடலுள் கணவனை இழந்த பெண்ணின் கொடுமை அடங்குகிறது. இது பற்றிய விழிப்புணர்வும் தேவையாகிறது. சமூக எழுச்சி தேவையாக உள்ளது அத்தனை சமூக மனங்களிலும் மாற்றம் உருவாக்கப்படல் வேண்டும்.

மனைவியை இழந்த ஆணுக்கு முண்டியடித்து திருமணத்தை செய்து வைக்கும் சமூகம் பெண்ணிற்கு மட்டும் தயக்கம் காண்பித்து வருகிறது. மனைவியை இழந்த ஆணால் குழந்தைகளை வளர்க்க முடியாது என காரணம் கூறி ஒருவாறாக திருமணத்தை செய்த வைத்துவிடுகிறது.

பெண் என்றதும் கடவுளாக பார்த்து ஒரு குழந்தையை கொடுத்தானே!! அந்த குழந்தையின் சந்தோசத்தில் வாழ்ந்து விடலாம் என தைரியம் கூறும் இந்த சமூகம் அதே தைரியத்தை ஏன் ஆணிற்கு கூற மறுக்கிறது.

அங்கே ஆணின் உணர்வுகள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு சமூகம் தைரியமாக மறு திருமணத்தை செய்து வைத்துவிடுகிறது. அதே போல பெண்ணிற்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லை என கூறுவது எத்தனை மடமை.

எமது சமூகத்தில் மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய முன்வரும் பெண்களைப்போல் கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்யவரும் ஆண்கள் மிக குறைவே. அங்கொன்றும் இங்கொன்றுமாக கைவிட்டு எண்ணிவிட முடியுமே அன்றி புள்ளி விபரத்தரவுகளை எடுத்து விட முடியாது.

எமது சமூகத்தில் கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்ய ஆண்கள் பின்ணிற்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கலாம்.

1) சீதனம்.

2) கற்பு என்பதை தனித்து பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற பிடிவாத கொள்கை.

3) ஆணின் வயதை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற கொள்கை.

4) முதல் கணவனின் நினைவு தொல்லை தரலாம் என்கின்ற பயம். ஆண்களிற்கு .

நினைவுகள் இருக்கும் தான் அதனை அனுசரித்து அத்தனைக்கும் ஆறுதலாக இருந்து விட்டால் எத்தனை உயர்வாய் அவளின் மனதில். !!

இந்த நான்கு காரணங்களாலும் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் என்பது கானல் நீராகிறது.

கணவனை இழந்த ஆணை திருமணம் செய்த பெண்கள் எத்தனை இன்பமாக வாழ்கிறார்கள். எப்படி?!! அந்த ஆணின் மனதை புரிந்து அத்தனை துன்ப துயரத்திலும் பங்கெடுத்து எத்தனை சாதுரியமாக வாழ்கிறாள்.

சில பெண்களிடம் இருந்து படிப்பதற்கு நிறைய உள்ளது இந்த சமூகத்திற்கு.

ஒரு பெண் மனைவியை இழந்த ஆணை திருமணம் செய்ய முன்வருகிறாள் என்றால் இங்கு சீதனம் என்கின்ற பிடியில் இருந்து தன்னை காக்கும் முயற்சியே. சில நல்ல உள்ளங்கள் அந்த ஆணின் உணர்வுகளை புரிந்து திருமணம் செய்ய முன்வந்திருப்பதும் கண் கூடே.

எது எப்படியோ நாம் மனித மனங்கள் உணர்வுகள் உணர்ச்சிகள் என பரந்து பட்டு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மறு மணம் என்பது எத்தனை தேவை என ஒரு மாத கணவன் மனைவி பிரிவு கூறியும் கூட எமது சமூகம் பாராமுகமாக இருப்பது தான் புரியவில்லை. அத்தனையும் ஆணாதிக்க சமூகத்தின் எச்சமாய்.

இங்கு பிள்ளைகளின் மனநிலை என்பது அடுத்த ஒரு காரணமாக மனக்கண்முன் எழுந்து நிக்கிறது. பிள்ளைகளிற்கு ஆசுவாசமாக எடுத்துரைத்தால் நிச்சயமாக புரியும் பக்குவம் அவர்களிற்கு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் நிதர்சன வாழ்வில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

ஆனாலும் மனைவியை இழந்த ஆண் மறுமணத்திற்கு தயாராகும் போது பிள்ளைகளின் மனநிலையை பார்த்தா மணம் முடிக்கிறார் என்பதும் இங்கு பெரியதொரு கேள்விக்கணையாக மனதில் எழுகிறது.

காலப்போக்கில் குழந்தைகளிற்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறபோது புரிதல் என்பது சாத்தியமே.

ஆகையால் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் என்பது அத்தியாவசியமாகிறது. தாராளமாக கணவனை இழந்த பெண்கள் ஆண்கள் முன்வரும் பட்சத்தில் விரும்பின் மறுமணத்தை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.

என்ன பாவம் நாம் செய்தோம்?

மானிடராய் பிறந்தோர்க்கு

மரணம் அது நிச்சயம்.

சிரிக்கும் பூக்களாய்

திரிந்த எமை

சிறையில் பூட்டுவது தகுமோ?

கணவனின்

இழப்பை விட

சமூகம் செய்யும்

கொடுமை

அதைவிட பெரிதெமக்கு.

கோவிலில் கூட

வெள்ளைப்பூவை

வைத்துத்தான்

அதிஸ்டம் பார்ப்பர்.

வீதியில் நாம்

நடந்து போகையில்

தெருநாயாய்

பார்வையால் உதைப்பர்.

வெள்ளைப்பூக்களை

அர்ச்சனைக்கு எடுக்கும்

பார்ப்பணியரால்

வந்த கொடுமை இது

பள்ளிச்சிறுவர்க்கு

வெள்ளை உடையை

கொடுத்துவிட்டு

அப்பளுக்கற்ற

உள்ளம் அதற்குள் என

கவி பாடுவர்.

எம்மை மட்டும்

முளுவியளம்

சரியில்லை என

எப்படித்தான் ஆக்கினரோ?

போர்க்கொடுமையை

பூகம்ப அதிர்வுகளை

புயலை

வெள்ளப்பெருக்கை

அத்தனை அழிவுகளையும்

எம்மை வைத்தே

வர்ணனை செய்வர்.

இத்தனை கவிஞர்

இத்தரையிருப்பினும் எம்

உணர்வைப்புரியாமல

முற்றும்.

நளாயினி தாமரைச்செல்வன்.

nalayini.blogspot.com

  • Replies 69
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரையை இணைத்திருக்கிறீர்கள் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த நிலை இருக்கா... ???! இன்று பெண்கள் பல தார மணம்.. பல தாரக் காதல்.... கள்ளக் காதல்.. என்று பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க.. இந்தக் காலத்தில போய் இப்படி ஒரு கட்டுரையா...????! வேடிக்கையாக இருக்குது. :):D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த நிலை இருக்கா... ???! இன்று பெண்கள் பல தார மணம்.. பல தாரக் காதல்.... கள்ளக் காதல்.. என்று பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க.. இந்தக் காலத்தில போய் இப்படி ஒரு கட்டுரையா...????! வேடிக்கையாக இருக்குது. :):D

நானும் இதைத்தான் எழுத இருந்தேன். கேட்க இருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த நிலை இருக்கா... ???! இன்று பெண்கள் பல தார மணம்.. பல தாரக் காதல்.... கள்ளக் காதல்.. என்று பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க.. இந்தக் காலத்தில போய் இப்படி ஒரு கட்டுரையா...????! வேடிக்கையாக இருக்குது. :):D

இது பெண்களை மெகாசீரியல் பாணியில் கண்கலங்க வைப்பதற்கான ஒரு கட்டுரை.. :rolleyes: நீங்கள் ரென்சன் ஆகாதீங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது பெண்களை மெகாசீரியல் பாணியில் கண்கலங்க வைப்பதற்கான ஒரு கட்டுரை.. :rolleyes: நீங்கள் ரென்சன் ஆகாதீங்கோ..! :lol:

உண்மைதான் இசை

பெண்கள் எங்கோ போய்விட்டார்கள். ஆனால் ஆண்கள் இன்னும் 19ம் நூற்றாண்டில் இருந்தபடி பெண்களை அதே கண்ணோடு கணக்கு பார்த்தபடி....? :(

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் வேறு பட்டாலும் திருமணம் " மனசு " சார்ந்த விடயம்.

அவரவர் மனதை பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மறுமணம் என்பதில் எனக்கொரு கேள்வியுண்டு ரீச்சர்

எமது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பது அவர்களுக்கு ஒரு ஆணின் துணை இருக்க என்று சாதாரண வழக்கில் பேசிக்கொள்கின்றோம். அது அவரது இறப்புடன் முடிவுக்கு வரும்போது இவரது பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிவிடும். அப்படியாயின் திரும்பவும் பாதுகாப்புத்தேடிக்கொள்வதில் என்ன தப்பு....?

  • கருத்துக்கள உறவுகள்

மறுமணம் செய்து கொள்ளலாம் என்பது எனது தனிபட்ட் கருத்து .........முதல் திருமணத்தில் இருக்கும் குழந்தைகள் , வருபவரின் மன நிலை . என்ப்தை பொறுத்தது . என குழந்தை களும் உன் குழந்தைகளும் நம்ம குழந்தை கலாக் வளரனும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஓரிரு தசாப்தங்களில் இதே மாதிரி கட்டுரைகள் ஆண்களுக்காக எழுதப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....?

எல்லாமே 50 க்கு 50 தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த நிலை இருக்கா... ???! இன்று பெண்கள் பல தார மணம்.. பல தாரக் காதல்.... கள்ளக் காதல்.. என்று பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க.. இந்தக் காலத்தில போய் இப்படி ஒரு கட்டுரையா...????! வேடிக்கையாக இருக்குது. :):D

நெடுக்குத் தம்பி உங்களைச் சுற்றி இருக்கிற சனமே சரியில்லையோ? அல்லது நீங்கள் பழகும் பெண்கள் பிழையானவர்களோ? எப்ப பார்த்தாலும் லொடா லொடா என்று பெண்களுக்கு எதிராக கதைக்கிறது. கிழடு கட்டைகள்தான் பீத்தல் சீலை பிரியிறமாதிரி புறுபுறுத்துக் கொண்டு இருப்பார்கள். நான் கேள்விப்பட்டவரை நீங்கள் என்னைவிட இருவயது குறைந்தவர்தான். அப்படி என்னதான் இந்தப் பெண்கள் உங்களுக்குக் கொடுமை செய்துவிட்டார்கள்?

நெடுக்குத் தம்பி பெண்களில் மறுமணம் செய்தவர்களில் 5 வீத்த்திற்கு உட்பட்டவர்கள்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பலர் தோல்விகண்டு மீள முடியாதபடுகுழிக்குள் வீழ்ந்து கிடக்கிறார்கள். நீங்கள் ஆண்கள் பெண்ணுலகம் உங்களுக்குப் புரியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் தேவை வேறு பெண்ணின் தேவை வேறு

ஆணுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புத் தேவையில்லை ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல,

ஆண் தனிய வாழ்ந்தால் எந்தப் பெண்ணும் அவனை சல்லாபநோக்கோடு அணுகுவதில்லை. ஆனால் கிழவியாக இருந்தாற்கூட ஆணின் பார்வையும் படிவும் தனித்த பெண்ணில் பொல்லா நோக்கோடே இருக்கிறது. தனிமை என்பது பெண்ணுக்குப் பலவீனம். இது அவளின் உடல் ரீதியானது. எதிர்பாலரின் ஆதிக்கத்திற்கு முன்னால் போராடும் வலுவற்றது. அப்படியே போராடினாலும் கேலிக்குரியதாகப் பரிகாசப்படுத்தப்படும். வாழ்வு மாய்ந்து போகுமே தவிர வரம் கிடைக்காது. எத்தனை பெண்களுக்குள் எத்தனை கதைகள் இருக்கின்றன. சொல்லமுடியாது. சொன்னாலும் இந்தச் சமூகத்திற்குப் புரியாது. மானங்கெட்ட பிறவிகள.... அல்லது எதற்கோ அலைகிறாள் என்பதான கதை கட்டல்கள் அவர்களை கொன்றுவிடும். இது நெடுக்காலபோவானுக்கான எழுத்து.

Edited by valvaizagara

கட்டுரைக்கும், சகாரா அக்காவின் கருத்துகளுக்கும் பச்சைப் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

இன்று இந்த நிலை இருக்கா... ???! இன்று பெண்கள் பல தார மணம்.. பல தாரக் காதல்.... கள்ளக் காதல்.. என்று பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க.. இந்தக் காலத்தில போய் இப்படி ஒரு கட்டுரையா...????! வேடிக்கையாக இருக்குது. :):D

உங்கள் கேள்வி நியாயமானது, நீங்கள் குறிப்பிட்டது போல் சில பெண்கள் இருக்கிறார்கள், அதே நேரம் கட்டுரையாளர் குறிப்பிட்டது போலும் சில பெண்கள் இருக்கிறார்கள். எல்லா மனிதரையும் ஒரே வரையறைக்குள் உட்படுத்த முடியாது/ உட்படுத்தவும் கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் தேவை வேறு பெண்ணின் தேவை வேறு

ஆணுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புத் தேவையில்லை ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல,

ஆண் தனிய வாழ்ந்தால் எந்தப் பெண்ணும் அவனை சல்லாபநோக்கோடு அணுகுவதில்லை. ஆனால் கிழவியாக இருந்தாற்கூட ஆணின் பார்வையும் படிவும் தனித்த பெண்ணில் பொல்லா நோக்கோடே இருக்கிறது. தனிமை என்பது பெண்ணுக்குப் பலவீனம். இது அவளின் உடல் ரீதியானது. எதிர்பாலரின் ஆதிக்கத்திற்கு முன்னால் போராடும் வலுவற்றது. அப்படியே போராடினாலும் கேலிக்குரியதாகப் பரிகாசப்படுத்தப்படும். வாழ்வு மாய்ந்து போகுமே தவிர வரம் கிடைக்காது. எத்தனை பெண்களுக்குள் எத்தனை கதைகள் இருக்கின்றன. சொல்லமுடியாது. சொன்னாலும் இந்தச் சமூகத்திற்குப் புரியாது. மானங்கெட்ட பிறவிகள.... அல்லது எதற்கோ அலைகிறாள் என்பதான கதை கட்டல்கள் அவர்களை கொன்றுவிடும். இது நெடுக்காலபோவானுக்கான எழுத்து.

ஆண்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டமும் மகா தவறு. கிழவியை கூட அசிங்கமா பார்க்கிறான் என்பது ஒரு சில ஆண்களுக்கு பொருந்தலாம். எல்லா ஆண்களும் அப்படியல்ல. அதேனோ தெரியல்ல.. நீங்கள் ஆண்களை பற்றி யதார்த்தத்திற்கு மாறாக எத்துணை கீழ்த்தரமாகவும் எழுதி பெண்களுக்கு அதில் இருந்து பாதுகாப்பு வேணும் என்று கூக்குரல் இடமுடிகிறது.. ஆனால் ஆண்கள் கண் முன்னால் நடக்கும் உண்மைகளை இட்டு பெண்கள் மீது குற்றச்சாட்ட அனுமதிக்கிறீர்கள் இல்லை.

பெரியவர்கள் பீத்தல் சேலை போல பேசுகிறார்கள் என்கிறீர்கள்.. எப்போவாவது அவர்களின் பேச்சை கவனம் கொடுத்து கேட்டிருக்கிறீர்களா..??! அவர்கள் சொல்ல வருவதை பொறுமையோடு கேக்கும் பக்குவம் எம்மிடம் இல்லை.. உடனே அவர்கள் பீத்தல் சேலை போல என்று பழமொழியை அடைமொழியாக்கிவிட்டு நாம் அவர்கள் சொல்ல வருவதை வெகு சாதாரணமாக புறக்கணித்து விடுகிறோம். அல்லது சந்தர்ப்பத்தில் இருந்து.. தப்பி விடுகிறோம். அப்படித்தான்.. இங்கும்.. பெண்களில் இன்று அநேகர் மறுமணம்.. பல ஆண்களை காதலித்தல்.. பலரை திருமணம் செய்தல்.. திருமணத்திற்கு முன் பலரோடு கூடி வாழ்தல்.. திருமணத்திற்குப் பின் கணவரல்லாதவரோடு கூட இன்று கள்ளக்காதல் என்ற பெயரில் வாழ்கின்றனர். இதனை கண் முன்னால் காண முடிகிறது. தினமும் செய்திகளில் படிக்க முடிகிறது. இது ஒரு சமூகத்தில் என்று மட்டுமல்ல.. உலகம் பூராவும் நடக்கிறது. அப்படி இருக்க பெண்கள்.. மறுமணம் இன்றி.. மறுவாழ்வின்றி.. தவிக்கிறாங்க.. பருதவிக்கிறாங்க... என்று அவர்களை எப்போதும் போல அப்பாவியாக ஆண்களின் முன் காட்ட நினைப்பது தான் முற்றிலும் ஒரு போலித்தனமாக தெரிகிறது.

பெண்கள் அடப்பாவிகள் என்ற நிலைக்கு இன்று வாழ்ந்து கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் ஆறுமாத சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலாசார நகரம் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் இன்று களுசடை நகரமாக மாறி இருப்பதற்கு எதிரி மட்டுமல்ல.. தறிகெட்டு போயுள்ள பெண்களும் ஆண்களும் தான் காரணம். வெறுமனவே ஆண்கள் மீது மட்டும் அப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்த முடியாது. பெண்களே வலிய ஆண்களை தவறான செயல்களுக்கு அழைப்பதும் இன்று அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் என்றல்ல.. உலகம் பூராவும் இது நடக்கிறது. இந்த நிலையில்.. பெண்கள்.. மறுமணம் இன்றி தவிக்கினம்.. பாதுகாப்பின்றி.. பருதவிக்கினம் என்பதெல்லாம்.. கொஞ்சம் காலங்கடந்த யதார்த்தத்திற்கு ஒவ்வாத வகையில் இருப்பதாகவே தெரிகிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பி ஆண்களுக்கு இல்லாத அளவு அழுத்தம் பெண்களுக்கு இருக்கிறது. அதற்கு உங்கள் எழுத்தே சிறந்த உதாரணம். ஒழுக்கம் கெட்ட ஆண்களால் பாதிக்கப்படுவது எப்போதும் பெண்கள்தான். பாதிப்பைக் கொடுக்கும் ஆணை யாருக்கும் தெரிவதில்லை இருவரின் தவறில் ஒருவரே முழுமையான பாதிப்பைப் பெறுகிறார். இங்கு இதைப்பற்றிப் பேச வரவில்லை. மறுமணம் பற்றியே பேசுகிறோம். மறுமணம் என்பது பெண்ணுக்கான ஒரு பாதுகாப்பு வேலி. ஒரு பெண்ணின் நெறி தவறாத வாழ்க்கைக்கான வழிகாட்டி. அதை விட்டுவிட்டு 20 வயதில் விதவையாகவோ அல்லது கணவானால் கைவிடப்பட்டோ அல்லது வேறு ஏதோ வகையில் தனித்துவிடப்பட்ட நிலையிலேயோ ஒரு பெண் இருந்தால்..... அவளுக்கான தேவைகளை யார் தீர்ப்பது? சகோதரர்கள் அல்லது பெற்றோர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுடைய மட்டுப்படுத்தப்பட்ட அன்பு மட்டும் அவளுக்குப் போதுமானது என்று அவளை முடக்குதல் பாவமாகாதா? எப்போது பெண்ணின் வாழ்க்கையில் தவறுகள் உருவாகின்றன என்று அடிப்படைக் கேள்வியை ஒரு முறை உங்களிடம் கேட்டுப் பாருங்கள். ஏன் ஆணுக்கு மட்டுந்தான் உணர்வு இருக்கிறதா? பெண்ணுக்கு உணர்ச்சியே இருக்கக்கூடாதா? ஆண்களுக்கு சேற்றைக் கண்ட இடத்தில் மிதித்து குளத்தைக் கண்ட இடத்தில் கழுவும் சாமர்த்தியம் இருக்கிறது. ஆனால் பெண்கள் நிலை அப்படியல்ல. குட்டையில் விழுந்தால் விழுந்ததுதான் விமோசனமோ கிடைக்காது அதற்காகத்தான் சொல்கிறேன். பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் வீட்டில் இருக்கும் பழம் சீலைகள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்துங்கள். அவர்களுக்கான அழுத்தம் குறையும்போது நெறியான வாழ்வை அவர்கள் வாழ்வார்கள் அதைவிட்டுவிட்டு அவர்களுக்கான முடிவை வீட்டில் உள்ளவர்கள் தமக்குள்ளே முடிவெடுத்து அவர்களுக்குத் திணிக்கும் போது அதாவது வீட்டில் உள்ளவர்கள் அதை திணிப்பாகக் கருதுவதில்லை அவளுக்கு நல்லதைச் செய்கிறோம் என்றுதான் சொல்வார்கள்..... அவளின் தவறான பாதைக்கு தாங்களே அடிகோலிவிட்டிருக்கும் கதைகள் பல உண்டு. ஆக ஒரு சமுதாயச் சீர்கேடு இடம்பெறாமல் தடுக்கும் வழியைவிட்டுவிட்டு அது பிழை இது பிழை என்ற கையாலாகாத கதைகளையும் பெண்கள் பற்றிய உங்கள் எண்ணங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள் நெடுக்குத் தம்பி :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு ஒரு பச்சை குத்தியிருக்கிறேன்..! :D தவிர்க்க முடியவில்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு ஒரு பச்சை குத்தியிருக்கிறேன்..! :D தவிர்க்க முடியவில்லை ..! :lol:

புரிகிறது இசை

பாதிக்கப்பட்டவர்பக்கம்தான் தாங்களும் என்பது.... :lol::D:D

ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் பட்சத்தில் மறுமணம் செய்வது இன்று எங்கள் சமூகத்தில் சாதாரணமாக உள்ளது. ஒரு தரம் மணம் முடித்து துணையை இழந்தால் அல்லது மணமுறிவு ஏற்பட்டால் மறுமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பெட்டி கலாச்சார மன நிலை சென்ற நூற்றாண்டிலேயே தொலைந்து போயிற்று.

இன்று மறுமணம் செய்வதென்பது அவரவர் மனநிலையும் தேவைகளையும் பொறுத்தது. மறுமணத்தை தடுக்கும் மனநிலையிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலையிலோ ஈழத்தமிழர் சமூகம் இன்று இல்லை என்பதே உண்மை.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலிக்கும் பச்சை குத்தியிருக்கிறேன்..! :rolleyes: மறுபடியும் தவிர்க்க முடியவில்லை..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் பட்சத்தில் மறுமணம் செய்வது இன்று எங்கள் சமூகத்தில் சாதாரணமாக உள்ளது. ஒரு தரம் மணம் முடித்து துணையை இழந்தால் அல்லது மணமுறிவு ஏற்பட்டால் மறுமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பெட்டி கலாச்சார மன நிலை சென்ற நூற்றாண்டிலேயே தொலைந்து போயிற்று. இன்று மறுமணம் செய்வதென்பது அவரவர் மனநிலையும் தேவைகளையும் பொறுத்தது.

மறுமணத்தை தடுக்கும் மனநிலையிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடன் நோக்கும் நிலையிலோ ஈழத்தமிழர் சமூகம் இன்று இல்லை என்பதே உண்மை.

உங்களது கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகின்றேன் தப்பிலி

அதேநேரம்

இங்கு கருத்தெழுதிய நிலாமதியக்கா மற்றும் சகாரா அக்கா ஆகிய இரு பெண்களும் பெண்களுக்கு சில மன உலைச்சல்கள் ஆண்களைவிட அதிகம் என்று சொல்வதையும் ஏற்கத்தானே வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பி ஆண்களுக்கு இல்லாத அளவு அழுத்தம் பெண்களுக்கு இருக்கிறது. அதற்கு உங்கள் எழுத்தே சிறந்த உதாரணம். ஒழுக்கம் கெட்ட ஆண்களால் பாதிக்கப்படுவது எப்போதும் பெண்கள்தான். பாதிப்பைக் கொடுக்கும் ஆணை யாருக்கும் தெரிவதில்லை இருவரின் தவறில் ஒருவரே முழுமையான பாதிப்பைப் பெறுகிறார். இங்கு இதைப்பற்றிப் பேச வரவில்லை. மறுமணம் பற்றியே பேசுகிறோம். மறுமணம் என்பது பெண்ணுக்கான ஒரு பாதுகாப்பு வேலி. ஒரு பெண்ணின் நெறி தவறாத வாழ்க்கைக்கான வழிகாட்டி. அதை விட்டுவிட்டு 20 வயதில் விதவையாகவோ அல்லது கணவானால் கைவிடப்பட்டோ அல்லது வேறு ஏதோ வகையில் தனித்துவிடப்பட்ட நிலையிலேயோ ஒரு பெண் இருந்தால்..... அவளுக்கான தேவைகளை யார் தீர்ப்பது? சகோதரர்கள் அல்லது பெற்றோர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுடைய மட்டுப்படுத்தப்பட்ட அன்பு மட்டும் அவளுக்குப் போதுமானது என்று அவளை முடக்குதல் பாவமாகாதா? எப்போது பெண்ணின் வாழ்க்கையில் தவறுகள் உருவாகின்றன என்று அடிப்படைக் கேள்வியை ஒரு முறை உங்களிடம் கேட்டுப் பாருங்கள். ஏன் ஆணுக்கு மட்டுந்தான் உணர்வு இருக்கிறதா? பெண்ணுக்கு உணர்ச்சியே இருக்கக்கூடாதா? ஆண்களுக்கு சேற்றைக் கண்ட இடத்தில் மிதித்து குளத்தைக் கண்ட இடத்தில் கழுவும் சாமர்த்தியம் இருக்கிறது. ஆனால் பெண்கள் நிலை அப்படியல்ல. குட்டையில் விழுந்தால் விழுந்ததுதான் விமோசனமோ கிடைக்காது அதற்காகத்தான் சொல்கிறேன். பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் வீட்டில் இருக்கும் பழம் சீலைகள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்துங்கள். அவர்களுக்கான அழுத்தம் குறையும்போது நெறியான வாழ்வை அவர்கள் வாழ்வார்கள் அதைவிட்டுவிட்டு அவர்களுக்கான முடிவை வீட்டில் உள்ளவர்கள் தமக்குள்ளே முடிவெடுத்து அவர்களுக்குத் திணிக்கும் போது அதாவது வீட்டில் உள்ளவர்கள் அதை திணிப்பாகக் கருதுவதில்லை அவளுக்கு நல்லதைச் செய்கிறோம் என்றுதான் சொல்வார்கள்..... அவளின் தவறான பாதைக்கு தாங்களே அடிகோலிவிட்டிருக்கும் கதைகள் பல உண்டு. ஆக ஒரு சமுதாயச் சீர்கேடு இடம்பெறாமல் தடுக்கும் வழியைவிட்டுவிட்டு அது பிழை இது பிழை என்ற கையாலாகாத கதைகளையும் பெண்கள் பற்றிய உங்கள் எண்ணங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள் நெடுக்குத் தம்பி :)

மறுமணம் என்பது அவரவரின் விருப்பு. அங்கு ஆண் பெண் என்ற பிரிவினையும் வியாக்கியாணமும் அவசியமில்லை. மறுமணம் செய்யாமல்.. மனைவியை இழந்த ஆண்கள் பலர் வாழவில்லையா..???! ஏன் காதலில் தோற்றதற்காக திருமணமே செய்யாமல் ஆண்கள் வாழவில்லையா..???! ஏன் திருமணமே செய்யாமல் தனிமனித ஒழுக்கத்தை கட்டிக்காத்து ஆண்கள் பெண்கள் என்று இன்றும் பலர் வாழ்கின்றனர். அன்னை தெராசா போன்ற பெண்மணிகள்.. உணர்ச்சிக்கு வடிகால் தேடாமல்... சமூகத்தின் தேவை கருதி வாழவில்லையா. அவங்க பெண்ணில்லையா..????! எங்கள் சகோதரிகள்.. பலர் உந்த சில்லறை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி போர்க்களத்தில் போராடி கரும்புலிகளாக பெண் புலிகளாக மடியவில்லையா..???!

உங்க சில பெண்களுக்கு உணர்ச்சிப் பெருக்கெடுத்தால்.. அதற்கு போய் வடிகால் தேடிக் கொள்வது. அதைவிட்டிட்டு எதற்கு ஆண்கள் மீது பழிபோடுகிறீர்கள். தனிய இருந்தா கையைப் பிடிச்சு இழுப்பான் என்று நீங்களே ஒரு ஐடியாவை உருவாக்கி விடுறது. பிறகு அதனை காரணம் காட்டி இன்னொரு கலியாணம்.. சாந்தி முகூர்த்தம்.. பிள்ளை குட்டி பெத்துக்கிறது. இதைத்தானே செய்யப் போறியள். இதுக்கேன் இவ்வளவு.. உணர்ச்சி.. கிணர்ச்சி.. பாதுகாப்பின்மை.. என்று பெரிய.. கூப்பாடுகள்.

எனக்கு ஆணின் உறவு இல்லாமல் வாழ முடியல்ல.. என்று நினைக்கிற பெண்கள்.. எனக்கு பெண்ணின் உறவு இல்லாமல் வாழ முடியல்ல என்று நினைக்கிற ஆண்களை கட்டிக் கொண்டு கிடக்க வேண்டியது தானே. அதைவிட்டிட்டு.. சமுதாயத்தில் பாதுகாப்பில்ல.. பெண் என்றால் அவள் வலிமை இல்லாதவள்.. ஆண்களின் வலிமை அவளை தனிய இருக்க விடுகுதில்ல.. அதனால ஆபத்து...ஆண்கள் பார்வை சரியில்லை... (ஏதோ இவை ஆண்களின் பார்வையை ஆராய்ச்சி செய்து கண்டாக்கள் போல.. ஒரு கதை அளப்பு.) அதில இருந்து தப்ப இன்னொரு கலியாணம் வேண்டும்..... இப்படி எத்தனை கதை அளக்கிறீங்க...! காலம் காலமா இதையே சொல்லிச் சொல்லி.. ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிவதிலும்...

என்னால் ஆண் துணை இன்றி வாழ முடியல்ல. பால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியல்ல.. எனக்கு ஒரு ஆண் வேணும் என்று கேட்டு அதற்கு ஒத்துவாறவனை கட்டிக் கிட்டு போய்க்கிட்டு இருக்கிறதை விட்டிட்டு.. உங்களின் உணர்ச்சி வடிகாலுக்கு ஒட்டு மொத்த ஆண்களையும் சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயலை செய்யாதேங்கோ.

20 வயதில் திருமணம் ஆகாத பெண் சுயமா தொழில் செய்து திருமணம் ஆகும் வரை பாதுகாப்பாக வாழ முடிகிறது.. ஆனால் 20 வயதில் கலியாணம் கட்டி கணவனை இழந்த பெண் வாழ முடியுதில்லையாமில்ல..??! யாருக்கு அளக்கிறீங்க கதை. 20 வயதில கலியாணம் முடிச்சு.. கணவனை இழந்த பெண்ணால ஆணின் அருகிருப்பின்றி.. தனிய இருக்க முடியல்ல என்று சொல்லுங்க.. அவளின் இயலாமை அப்படி என்று ஒத்துக் கொண்டு அவளுக்கு ஒரு ஆண் பிடிச்சுக் கொடுங்கோ என்று வெட்கத்தை விட்டு கேட்டு வாழுறது. அதைவிட்டிட்டு...

அதுவும் இன்று பெண்களுக்கு நல்ல சட்டரீதியான பாதுகாப்பும்.. சமூகப் பாதுகாப்பும் அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறீலங்காவில் இல்லாமல் இருக்கலாம். அங்கும் கூட பெண்கள் தான் அதிகார மேசைகளை அழங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவா முடியாது. அங்கும் ஆண்கள் வந்து குறுக்கவா நிக்கினம்..!

சும்மா ஆண்களை குற்றம்சாட்டிச் சாட்டி உங்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யும் இழிநிலையை களைந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை சொந்த முயற்சியால சமூகப் பாதிப்புக்கு இடம் வைக்காம.. செய்து தொலையுங்கோ. யார் வேணாம் எண்டா..??! உங்களை வந்து மறுமணம் செய்யாத என்று எவர் தடுக்கினம்..???! தடுக்கிறதாப் போல நீங்க ஒரு போலித் தோற்றத்தை வரைஞ்சு உங்க (பெண்களின்) உணர்ச்சி வடிகாலின் தேவைகளை சொல்லிக்கிறீங்க. அவ்வளவும் தான். அதற்கு ஆண்களை பகடைக்காய்களா தந்திரமா பாவிச்சுக்கிறீங்க. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நெடுக்சின் இந்த கருத்துக்களை பார்க்கும் போது சிரிப்புத் தான் வருகிறது...இப்ப தான் எனக்குப் புரிந்தது ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும் அவரது படிப்பிற்கும்,சமூக அறிவுக்கும் எவ்வளது தூரம் என்று அதற்கு அவர் சமூகத்தோடு ஒட்டி வாழ்ந்தாலன்றி எப்படி சமூகத்தைப் பற்றி அவருக்கு தெரிய வரும்.

ஒரு பெண் திருமணம் செய்யாமல் படிப்பையோ,பதவியையோ காரணம் காட்டி தனித்து இருக்கலாம் இந்த சமூகம் ஒன்றும் சொல்லாது ஆனால் ஒரு பெண் கணவனை இழந்தோ அல்லது விவாகரத்து ஆகியோ தனித்து வாழ முடியாது...அவர்கள் தனித்து மறுமணம் செய்ய நினைத்தாலும் இந்த சமூகம் அவர்களை வாழ விடாது...இந்தப் பெண் எங்கே பிழை விடுவாள்,அவளை யாரோடு சேர்த்து கதை கட்டலாம் என நினைப்பார்கள்[கட்டி விடுவார்கள்]...ஒரு பெண் படுப்பதற்காகத் தான்[உடம்பு சுகத்திற்காகத்] தான் மறுமணம் செய்கிறார்கள் என்பது உங்கள் அறியாமை நெடுக்ஸ்....உடம்பு சுகம் தேவையானால் மறுமணம் செய்ய வேண்டிய தேவை இல்லை நாங்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கிறோம் ஆண்கள் மாதிரி பெண்களும் வேலைக்குப் போகிறார்கள் அங்கே யாருடனாவது படுக்கப் போகலாம் அல்லது காசு கொடுத்தாவது படுக்கலாம்.

இங்கு முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்ய நினைப்பது பாதுகாப்பு காரணமாகத் தான்...ஒரு பெண் கணவனை இழந்து தனித்து இருந்தால் எம்மவர்களே அப் பெண்ணை படுக்க கூப்பிடுவார்கள் அப் பெண் எதாவது எதிர் நடவடிக்கை எடுத்தால்[சட்ட ரீதியான]உடனே அந்த பெண் தன்னை படுக்க கூப்பிட்டாள் என கதையை மாற்றி சொல்லுவார்கள் உடனே இந்த சமூகமும் ஆண் சொல்வதைத் தான் நம்பும்[இவள் தனிய இருக்கிறாள் படுக்க கூப்பிட்டு இருப்பாள் என்பார்கள்]...அதை விட 24 மணி நேரமும் காவல்துறையை நம்பி இருக்க இயலாது.

அதைத் தவிர எங்கட சமூகத்தில் கணவனோட இருந்தால் தான் மதிப்பு எதாவது விழாக்கள் என்டால் கணவனோட இருப்பவர்களைத் தான் மேடைக்கு கூப்பிடுவார்கள்...கணவன் இல்லாத பெண்ணை எப்பவும் விலக்கியே வைத்திருப்பார்கள்...பெண்களுக்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு ஆனால் ஆண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை ஆனாலும் பெண்களை காட்டிலும் ஆண்களே மறுமணம் செய்வதில் முன் நிற்கின்றனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி......

உங்கை நாய்,பூனை,ஆடுமாடுகள்,பறவையள் எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டே குடும்பம் நடத்துதுகள்?

அதுகள் சந்தோசமாய் ஓடிஆடி திரியேல்லை?இனவிருத்தி செய்யேல்லை?

கலியாணமும் கத்தரிக்காயும்.........மண்ணாங்கட்டி கலாச்சாரமும்...........

சிங்கிளாய் இருந்து சிங்கிள் சிங்கிளாய் பாத்து என்ஜோய் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெ.கா அண்ணா...

நட்பு என்ற ஒன்றைத் தாண்டி விவாதம் என்று ஒன்று வந்து விட்டால் தவிர்க்க முடியாத காரணங்களால் நானும் பெண் என்ற வகையில் என் கருத்தையும் முன் வைக்கலாம் என்று வந்து இருக்கிறேன்...அங்கேயும் உங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது மன்னிச்சு கொள்ளுங்கோ. .பின்பு இதற்கும் வந்து எழுதி விடாதீர்கள் யாயினி தனக்கு ஏற்பட்ட சில்லறை உணர்ச்சியினால் ஏதோ வந்து புலம்பிட்டு போறாள் என்று...அப்படி இல்லை எல்லாரும் மனிதப் பிறப்புக்கள் எல்லாருக்குள்ளும் எல்லா விதமான உணர்வுகளும் இருக்கத் தான் செய்கிறது,செய்யும்.

சில்லறை உணர்வு என்பதே எவ்வளவு பெரிய வேதனையை தரக் கூடிய சொற் பிரயோகம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ...அப்படி ஒரு விதமான உணர்வுகளும் இல்லை என்றால் அவர்களை மரம்,செடி, கொடிக்கு உவமையாகத் தான் ஒப்பிட முடியும்...ஒரு மண் புழுவைப் பாருங்கள் உலகத்தில் கண் தெரியாத உயிரினம் எது என்று கேட்டால் மண் புளு என்பார்கள்..ஆனால் அதற்குள்ளும் ஒரு வித உணர்வு நிலை இருக்கின்ற காரணத்தினால் தான் எறும்பு கடித்தாலே இல்லை ஏதாச்சும் நடந்தால் உடலை பல பக்கங்களாலும் போட்டு அடிக்கிறது ..ஐந்து அறிவு ஜீவன்களே அப்படி என்றால் ஆறு அறிவு படைத்த மனிதன் எவ்வளவு எல்லாம் செய்வான்....

உங்களுக்கு தினம்,தினம் பெண்களைப் பற்றி வசனம் எழுதுவது ஒரு பொழுது போக்காக கூட இருக்கலாம்..ஆனால் அதுவே ஒட்டு மொத்தமான பெண் இனத்தின் மேலான கருத்தாடலாகவோ,இல்லை தாக்குதலாகவோ அமையக் கூடாது..ஒரு முறை, இரு முறை செய்தால் ஏதோ ஒரு ஆதங்கத்தில் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்தில் இப்படி எழுதுகிறார் என்று எடுத்து கொள்ளலாம்..ஆனால் அதுவே வேலையாக இருக்க கூடாது... ஒரு பிளையை ஒரு ஆணோ இல்லை பெண்ணோ விடுகிறார் என்றால் அதை நாங்கள் நன்றாக ஆரய வேண்டும் இந்தப் பிளை யாரால் ஏற்பட்டது...?எப்படி ஏற்பட்டது...ஏதற்காக ஏற்பட்து...இதற்கு யாரு காரணம்.....ஆணா இல்லை பெண்ணா...?என்பனவற்றை சரி வரப் புரிந்து கொண்டால் அவற்றை நிவர்வத்தி செய்ய தெரிந்து கொண்டால் யாரும் யார் மீதும் குற்றம் காண முடியாது..அப்படி காண்பதும் தப்பு...முதலில் இந்த தலைப்பை பாருங்கள்...மறு மணம்.....ஆனால் அதற்குள் மட்டும் தான் நின்று பேசுகின்றீர்களா...காதல்,ஏமாற்றம் இப்படி எத்தனை விடையங்களை தொட்டு செல்கிறது உங்கள் கருத்தாடால்.

ஒரு பெண் பிளை விட்டுட்டார் ஒருவரை ஏமாற்றி விட்டு இன்னுமொருவரை பார்த்துக் கொண்டு போய் விட்டார் என்றால் அதற்கு ஒட்டு மொத்த பெண்களுமே காரணமாக முடியாது.யார் மனதும் புண் படனும் என்பதற்காக இந்த கருத்தை எழுத இல்லை..எனக்கு அப்படி மற்றவர் மனதை கஸ்ரப்படுத்தி பார்த்தும் பளக்கம் இல்லை...அல்லது நான் பல தரப்பட்ட ரணங்களை உடல் ரீதியாக ,உள ரீதியாக தினம்,தினம் சுமக்காதவளும் இல்லை .பெண்கள் என்றாலலே ஏமாற்றுப் பேர்வளிகள் தான் என்ற பொருள் பட பேசாதீர்கள்..அந்த நேரத்தில் அந்த பிள்ளையின் மனோ நிலை அப்படி ஒரு தடுமாற்றத்தை கொடுத்து இருக்கிறது என்றால் அதற்குள் ஏதோ காரணம் இருக்க வேண்டும்...அது போலவே ஆண்களும் செய்யாமலா இருக்கிறார்கள்...இன்றும் நடக்கிறது தான்...ஒரு மனிதன் பல விதமான படிப்புக்கள் படித்திருக்கலாம் பட்டங்கள் பெற்று இருக்கலாம்..ஆனால் சக மனிதர்களை,அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது விட்டால் என்னய்யா படிப்பு படிச்சு இருக்கிறீங்கள்....?குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டப் பளகாதீர்கள்...சமுகத்தோடு ஒன்றி வாழப் பளகுங்கள்..

மனைவியை இளந்த சில ஆண்கள் இன்னும் மறு மணம் செய்யாமல் இருக்கிறார்கள் தான் இல்லை என்று சொல்ல இல்லை அதற்கு அவர்களுக்குள் பல காரணங்கள் இருக்கலாம்...அவரை மனைவி கவனித்து கொண்ட விதம்,அவர்கள் தங்கள் முன்னைய திருமணத்திபோது வாழ்ந்த விதம்,பிள்ளைகளின் எதிர்காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வேறு திருமணத்தை விரும்பாமலே வாழலாம்...ஆனால் ஒரு பெண் அப்படி வாழ முடியாது..இது ஒன்றும் ஊர் அல்லவே வெள்ளை சேலையைக் கொடுத்து இந்தா கட்டு,மூலையில் இரு என்று விடுதவற்கு.ஊரை எடுத்து கொண்டீர்கள் எண்டால் நூற்றுக்கு இருபத்து ஐந்து ,இல்லை முப்பது வீதம் தான் பெண்கள் வேலைக்கு செல்வார்கள் ஆனால் மேலைத் தேய நாடுகளைப் பொறுத்த மட்டில் பெண்கள் ஆண்களோடு ஒத்தே ஓடுகிறார்கள்..

இங்கே எல்லாம் மாறித் தான் நடக்கிறது..ஆகவே அவர்களுக்கு என்று கண்டிப்பாக ஒரு துணை தேவை தான்..அப்படி ஆண் பெண் என்ற உறவுகள் வாழ்வில் இணைந்து இருக்காது விட்டால் இன்று நானோ இல்லை நீங்களோ இந்தக் கருத்துக்களை எழுத முடியாது...அதற்கு ஆண்டவன் வளி விட்டும் இருக்க மாட்டான்.அதற்காக நான் சொல்ல வர இல்லை...சட்டை மாற்றுவது போல் மாற்றிக் கொள்ளுங்கள் என்று..அதற்கும் ஒரு வரை முறை இருக்கு..அதற்கு ஏற்ப நடந்தால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...ஒரு திருமணம் செய்த பெண் விழாக்களில் முன் நிற்பதற்கும் கணவன் இல்லாத ஒரு பெண்ணுக்கும் நம்மவர்கள் எவ்வளவு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று...இவற்றைக் கூடவா புரிந்து கொள்ள முடியாதுள்ளது உங்களால்...கணவர் இல்லாத பெண்களைப் பார்த்து இப்பவும் நளினம் பண்ணுறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்...

அடுத்து:அன்னை தெரேசாவை பற்றி எழுதி இருந்தீர்கள் அவர் திருமணம் செய்தா வாழ்ந்தார்..... திருமணம் ஆகாமலே பொது வாழ்வில் ஈடுபட இல்லையா என்று வேறு சொல்லி இருக்கிறீங்கள்.நமக்குத் தெரியுமா அவருக்குள்ளும் என்ன சோகம் ஏற்பட்டு பொது வாழ்வில் ஈடுபட்டார் என்று....யாரும் இலகுவாக சொல்லலாம்.

அப்புறம்:தூய்மையான போராட்டதில் இணைத்துக் கொண்டவர்களைப் பற்றி விமர்சனம் பண்ணுறதுக்குகோ இல்லை அவர்களைப் பற்றி எழுதுவற்கோ எனக்கு அறவே விருப்பம் இல்லை..ஆனாலும் நீங்கள் எழுதி இருக்கிறீங்கள் கேக்கிறன்...ஏன் போராட்டத்தில் இணைந்த வீர காவியமான எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்ய இல்லையா...?பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ள இல்லையா....?மீண்டும் சொல்கிறேன் இன்னும் நீங்கள் எங்கள் சமூகத்தில் புரை ஓடிக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளை சரி வரப் புரிந்து கொள்ள இல்லை...காலப் போக்கில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு அன்பு வேண்டு கோளுடன் விடை பெறுகிறேன்.நன்றி.

இப்படியே நான் புலம்பிக் கொண்டு இருந்தால் கடசியில் மட்டுமார் கத்தரிக்கோலுடன் தான் வருவார்கள்.... :lol:

எனது கருத்து நிர்வாகத்துக்கு பிடிக்காத இடத்து நீக்கி விடுவற்கு அனுமதி அளிக்கிறேன்..

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.