Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

52 நிமிடம்

Featured Replies

வசந்தத்திற்கும் கோடைக்கிற்கும் இடைப்பட்ட குழப்பகரமான காலநிலை. கருக்கற் பொழுதின் குறைந்த ஒளி, இரைச்சல்கள் இல்லை, புத்துணர்ச்சி நிறைந்த மனநிலை. ஆங்காங்கே சில பனித்துளிகளும் விழுந்தவண்ணம் காத்து நின்ற இரயில் நிலையத்தில் இரயில் வந்து நின்றது. வழக்கமான இருக்கை, வழக்கமான முகபாவங்கள், பழகிப்போன செயற்கைத் தனம். மூடிக்கொண்ட கதவுகளைத் தொடர்ந்து அடுத்த நிலையம் நோக்கிய இரயிலின் நகர்வு. கண்கள் இரயில் பெட்டிக்குள் உலாவிக்கொண்டிருந்தன. பிற கண்களைக் காண்பதைச் சாலைவிபத்துக்கள் போல்த் தவிர்த்;து, தாழ்த்தியும் உயர்த்தியும் முகங்கள் கண்களை உருட்டிக்கொணடிருந்தன. நடனம் தெரியாத முகங்கள் உறங்கின. சில உறங்குவதாய்ப் பாசாங்கு செய்தன. உண்மையில் உறங்கும் முகங்களில் எத்தனை அமைதி. ஓவ்வொரு மனிதனிலும் பிறப்பு முதல் இறப்பு வரை அளவில் மாறாத ஒரே உறுப்பு கண்கள். இருப்பினும், ஒவ்வொரு மனிதனிற்குள்ளும்; ஒளிந்து கொண்டிருக்கும் அப்பழுக்கற்ற, வஞ்சகம் மறந்த குழந்தையினைக் காண்பது அம்மனிதனின் கண்கள் மூடிக்கொள்கையில் தான் சாத்தியமாவது விந்தையாய் இருக்கிறது. இரயில் அடுத்த நிலையயத்தில் கதவு திறந்தது.

ஏறுபவர்கள் இருப்பவர்களையும் இருப்பவர்கள் ஏறுபவர்களையும் காணாததுபோல் காட்டிக்கொள்ளினும் பலர் பலரைக் கண்டனர். இருக்கைகள் நிறைந்து விட்ட நிலையில், இருபுறக் கதவுகளிற்கும் சரி நடுவில் அவள் நின்றாள். ஒருவேளை அவளும் தமிழாய் இருக்கலாம். நாங்கள் எல்லாம் அனுமதிச்சீட்டுப்பெற்று அரங்கத்தில் உட்கார்ந்திருக்க அவள் கலைநிகழ்ச்சி செய்வதற்காய் மேடையில் நிற்பது போல் அவள் நின்றிருந்தாள். அவளது கண்களும் எனது கண்களும் மோதிக்கொண்டன. பெட்டிக்குள் மற்றையவர்கள் செத்துப்போனார்கள். மோதிய கண்கள் லாவகமாய் விலத்திக் கொண்டன. ஆனால் நொடிக்குள் மீண்டும் மோதற் சத்தம். இரயில் இப்போது சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது.

முப்பதுகளில் நானும் இருபதுகளில் அவளும் இருக்கக்கூடும். நம் கண்கள் நாம் பிறந்தபோது இருந்தபடியே, சந்தித்ததை ஒத்துக் கொள்ளாது சந்தித்துக்கொண்டிருந்தன. ஒரு தசாப்தத்தின் அதிகரித்த அனுபவம் என்னுள் அவளிற்குத் தெரிந்திருக்கும். ஒரு தசாப்தம் இளையவள் இளமை அவளுள் எனக்குத் தெரிந்தது. உடற்பயிற்சி, உடைகள், உணவு வாழ்வு முறை என வயதின் வடுவை மறைத்துக் கொள்ளினும் அனுபவம் ஏற்படுத்தும் பக்குவம் வெளிப்பட்டே தீருகின்றது. பலசமயங்களில் வி;த்தியாசங்களும் கவர்ச்சிக்குக் காரணமாகின்றன.

இருவருமே ஒத்துக்கொள்ளாத கண்களின் சந்திப்பு இப்போது இருவரிற்கும் பழக்கமாகிப் போகின்றது. ஆசையின் ஆக்கிரமிப்பில் அடுத்தபடி நகர்வுகள் உள்ளுக்குள் ஆரம்பமாகின்றன. இடங்கள் மாறாது, நடப்பதை ஒத்துக்கொள்ளாது, பத்தடி பௌதீத தூரம் சொட்டும் குறையாது, தொட்டுப் பேசாது, ஐம்புலன்களின் ஏகபிரதிநிதித்துவம் கண்களிடம் தரப்பட்டு அடுத்தகட்ட நகர்வுகள் ஆரம்பிக்கின்றன. அனுபவவங்கள் சார்ந்து தான் கற்பனை கைப்படும். பதப்பட்ட, அனுபவம் ஏறிய திராட்சை ரசத்தை அழகிய இளையவள் இசையோடும், ஆடம்பர உடையோடும் நளினமாய் நடந்தபடி விருந்துபசார மண்டபத்தில் பருகுகையில் திராட்சை ரசத்தின் பக்குவம் இளைவளிற்குள்ளும் அதிர்வினை ஏற்படுத்தும். நூறுவருடம் பழமை வாய்ந்த ஒலிவ் எண்ணை போத்தல் ஆயிரம் டொலர்களிற்கு விற்பனையாகிறது. சென்றவருடம் வடிக்கப்பட்ட திராட்சை ரசத்தைக் காட்டிலும் பதப்பட்ட பக்குவமான ரசத்திற்கு, பக்குவத்தைச் சுவைத்தவர்கள்; மத்தியில் எப்போதும் போட்டியுண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் புட்டையும் முட்டைப்பொரியலையும் கொடும்பசியில் முளுங்குவதைப் போல் அல்லாது, குவளையின் விளிம்பினை முகர்ந்து, குடுவைக்குள் ரசத்தினை வட்டமாய் ஆட்டி, அனுபவத்தையும் பக்குவத்தையும் அவைகூறும் கதைகளையும் முகர்ந்தபடி இரசத்தினை அவள் பருகத் தொடங்கியிருந்தமை என் கற்கனைக்குள் கைப்பட்டது.

மழை துளித்ததும் குடைவிரிக்கும் நிலை துறந்து, றாட்டினத்தில் ஏறும் குழந்தை ஒப்ப, அனுபவம் ஏற்படுத்தும் பாதுகாப்புணர்வுகளைக் கழைந்து மழைக்குள் நனைந்தபடி ஐஸ்கிறீம் உண்ணத் தொடங்கும் மனநிலை எனக்குள்ளும் முழைத்தது. போல்க்கா, ராங்கோ, வோல்ற்ஸ் என்று மரபிற்குப் பிசகாது, உடைகள் நலுங்காது. மற்றையவர்கள் குறைகூறாது சபைக்கேற்றபடி போல்றூம் நடமாடும் முப்பதுகளின் பக்குவம் உதறி, உள்ளிற்குள் உருவெடுக்கும் உணர்வுப் பிரவாகத்தைப் பிளமிங்கோவிற் தொடங்கி, சாம்பா மாம்போ சல்சா இடைக்கிடை வேணுமாயின் கான்கானும் சேர்த்து கட்டுப்பாடுகளை உடைத்த மரபுகள் எதற்குள்ளும் சிக்காத முப்பதுகளின் இருபதுகள் முன்னான கூத்துக் கண்கள் கவ்வியபடி முனைப்பேறியது.

தொடுகையின் உணர்வு எவ்வாறானது என்பதனை இருவரும் அறிவோம். தொடுகையின் உணர்வினை உணர்வதற்குத் தொடுகை இப்போது அங்கு தேவைப் படவில்லை. ஸ்பரிசத்தை மனதால் சிருஸ்ட்டிக்க முடிந்தது. எமது உடலை நாம் அறிவோம். ஆடைகளைக் கழையாது பௌதீகங்களை எமக்கேற்ப மற்றையவரில் கண்டுகொண்டோம். கண்கள் மட்டுமே கவ்வியபடி உள்ளுரப் பிரவகிக்கும் உணர்வுகளை அவையவைக்கான உச்சஸ்தாயிகளில் அவளும் நானும் உசுப்பேற்றிக் கொண்டிருந்தோம். நாம் தொட்டுக்கொள்ளவில்லை என்பதைக் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யினும் எம்மனங்கள் நம்பாது என்ற அளவிற்குக் கற்பனை நிஜமாகச் சுவாசித்துக் கொண்டிருந்து. அவள் நெற்றியில் வியர்வைத்துளியினை நான் கண்டேன்.

52 நிமிடங்கள் கடந்துவிட்டன என்பதனைக் கடைசித்தரிப்பினை ரெயில் அடைந்த அறிவிப்பு உரத்துக் கூறி நம் கற்பனை கலைத்து நினைவிற்கு மீட்டது. ஏதுமே நடவாததாய், அறிமுகமே இல்லாதவராய் இரயில் ஏறியதைப் போன்றே நாம் இருவரும் எம்வழிகளில் இறங்கிச் சென்றோம். அவள் விரலிலும் திருமண மோதிரம் இருந்ததனை இறுதியாய் என் கண்கள் பதிவுசெய்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இருபதுகளில் நடந்த பழைய அனுபவங்களைக் கிளறியது மாதிரி இருந்தது. ஆனால் முப்பதுகளில் தனியே காரில் பயணிப்பதால் இப்படியான நிகழ்வுகள் தற்போது எனக்கு சந்திப்பதில்லை! முப்பதுகளில் கள்ளத்தனமாக பார்ப்பதைவிட ஓரிண்டு நிமிடங்களில் சென்று அறிமுகம் செய்துகொள்ளும் பக்குவமும் துணிவும் எல்லோருக்கும் வந்துவிடும் என்று நம்பினேன்!

  • தொடங்கியவர்

கருத்திற்கு நன்றி கிருபன். முதலில் பதிவு கதைகதையாம் பகுதியில் உள்ளது. எனவே அனைத்தையும் இவ்வாறு தான் நடந்ததாய்க் கருதத்தேவையில்லை :D . எனினும் உங்கள் கேள்விக்கு வரின், நேரடியாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் பக்குவம் பதின்மத்திலேயே வந்துவிட்டது (எத்தினை பெயரிடம் தான் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் :o ). ஆனால் நேரடியான அறிமுகமும் மற்றும் பௌதீக தொடுதல்களும் அவசியம் தானா என்பது பற்றிய கோணமே அணுகப்பட்டுள்ளது. அதாவது குழந்தையாய்ப் பிறக்கையில் எந்த சுவையும் அறியாத வெற்றுத் தாளான மனதில் அனுபவங்களே சுவைகளாகச் சிக்கிக்கொள்கின்றன. உடல் சார்ந்த தேடல் என்பது கூட மிகப்பெரும்பான்மைத் தருணங்கள் மனம் சார்ந்து தான் அமைகிறது என்றே நம்பத் தோன்றுகின்றது. தொட்டால் ஏற்பூசி போட வேண்டிய அளவிற்குப் பழைய காரில் பயணதித்தபடி மாசராட்டி ஓட்டிக்கொண்டிருப்பதாய் எம்மை நாமே நம்பப் பண்ணமுடியும். பலரது வாழ்க்கைகள் ஏதோதோ தேவைகள் சார்ந்து சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அந்த அடிப்படையில் பாதுகாப்பான அத்துமீறல் தொடர்பில் செயற்கைத் தனங்களிற்குள் மறைக்கக்கூடிய இயற்கை உந்துதல்கள் பற்றிய, சமூகத்திற்குக் கட்டுப்பட்ட மீறல்கள் பாசாங்குகளிற்கு மத்தியிலான பதைபதைப்புக்கள் பற்றி எழுந்த ஒரு சிந்தனை மட்டுமே இது.

Edited by Innumoruvan

கற்பனை கன்னா பின்னாக ஓடினாலும் வாசிக்க இனிமையாக இருந்தது.

20 வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவன் சொன்ன ஒருவசனம் ஏனோ சிலரைப்பார்க்கும் போது எனக்குள் ஒரு சிரிப்பை வரவழைக்கும்.அந்த வசனத்தை உங்கள் கதையும் மீண்டும் நினைவூட்டியது.நன்றி.

  • தொடங்கியவர்

கருத்திற்கு நன்றி அர்யுன். அந்த வசனம் என்னவென்று சொன்னால் நாங்களும் சிரிக்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னால முடியல எப்படி உங்களால் இப்படியெல்லாம் எழுத முடிகிறது...யாழ் களத்து ஆண்கள் சிலர் அப் பெண்ணை நடத்தை கெட்டவள் எனக் கூறப் போகிறார்கள்

  • தொடங்கியவர்

ரதி,

இப்பதிவினைப் பதிவிட முன்னர் பலத்த தயக்கம் நிச்சயமாக இருந்தது. எனினும், எமது சமூகத்திற்குள் இருக்கின்ற பேசாப்பொருட்களுள் மிக வலியது பாலியல் சார்ந்தது. பல புனிதப்போர்கள் நாளாந்தம் இம்முனையில் எம் சமூகத்துள் நடக்கின்றன. எடுத்த எடுப்பில் இந்நிலை மாறாது. இது மாறவேண்டுமா என்பதும் நியாயமான கேள்வியாக இருக்கமுடியும். ஆனால் புனிதப்போர்கள் தங்கி நிற்கும் அத்திவாரம் இம்முனை என்ற வiயில் பேசுவதில் கெடுதல் இல்லை என்றே படுகின்றது. நிச்சயமாக பேசவந்த அனைத்து விடயங்களையும் இந்த கதைக்குள் பேசிவிடவில்லை. எழுந்த ஒரு எண்ணத்தின் இயலுமான வரையான பகிர்வு மட்டுமே இது.

இதை யாழ்களத்தில் கதைகதையாம் பகுதியில் இடப்பட்ட ஒரு தலைப்பாகப் பார்ப்பதை விடுத்து, ஒரு கணம், ஒரு திரைப்படவிழாவில் நீங்கள் பார்த்த 25நிமிட திரைப்படமாக எண்ணிக்கொள்ளுங்கள். இக்கதை எவ்வாறு படமாக்கப்படமுடியம் என்ற திரைக்கதையினை உங்கள் மனதில் ஓடவிடுங்கள். படத்தின் முடிவில் உங்களிற்குள் அருவருப்பு எழும் என்று நினைக்கின்றீர்களா?

யுhழ்களத்தின் "புனிதத்தை" இத்தலைப்புக் கெடுத்திருந்தால், யாரிற்கேனும் அசௌகரியம் ஏற்படுதியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நான் ஒன்றும் இந்த கதையைப் பற்றி தப்பாக நினைக்கவில்லை...உண்மையாகவே இந்தக் கருவை மையமாக வைத்து எழுதிய உங்கள் துணிச்சலுக்கு எனது பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திற்கு நன்றி கிருபன். முதலில் பதிவு கதைகதையாம் பகுதியில் உள்ளது. எனவே அனைத்தையும் இவ்வாறு தான் நடந்ததாய்க் கருதத்தேவையில்லை :D . எனினும் உங்கள் கேள்விக்கு வரின், நேரடியாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் பக்குவம் பதின்மத்திலேயே வந்துவிட்டது (எத்தினை பெயரிடம் தான் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் :o ). ஆனால் நேரடியான அறிமுகமும் மற்றும் பௌதீக தொடுதல்களும் அவசியம் தானா என்பது பற்றிய கோணமே அணுகப்பட்டுள்ளது. அதாவது குழந்தையாய்ப் பிறக்கையில் எந்த சுவையும் அறியாத வெற்றுத் தாளான மனதில் அனுபவங்களே சுவைகளாகச் சிக்கிக்கொள்கின்றன. உடல் சார்ந்த தேடல் என்பது கூட மிகப்பெரும்பான்மைத் தருணங்கள் மனம் சார்ந்து தான் அமைகிறது என்றே நம்பத் தோன்றுகின்றது. தொட்டால் ஏற்பூசி போட வேண்டிய அளவிற்குப் பழைய காரில் பயணதித்தபடி மாசராட்டி ஓட்டிக்கொண்டிருப்பதாய் எம்மை நாமே நம்பப் பண்ணமுடியும். பலரது வாழ்க்கைகள் ஏதோதோ தேவைகள் சார்ந்து சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அந்த அடிப்படையில் பாதுகாப்பான அத்துமீறல் தொடர்பில் செயற்கைத் தனங்களிற்குள் மறைக்கக்கூடிய இயற்கை உந்துதல்கள் பற்றிய, சமூகத்திற்குக் கட்டுப்பட்ட மீறல்கள் பாசாங்குகளிற்கு மத்தியிலான பதைபதைப்புக்கள் பற்றி எழுந்த ஒரு சிந்தனை மட்டுமே இது.

கதை கதையாம் பகுதியில் இருந்தாலும், பலரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வாகத்தான் இருக்கின்றது. தொடுகையின்றி ஒருவரை ஒருவர் ஆகர்சிப்பதால் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. ரயில் பிரயாணங்களில் பொழுதுபோக்காக "எறிந்து" கொண்டு போவது போரடிக்காமல் இருக்க உதவும் :wub:

ஆனால் தொடர்ந்து ஒருவரையே தினமும் "எறிந்து" கொண்டிருந்தால், கடைசியில் "ஸ்ரோக்கிங்"இல் போய்முடியலாம்!

  • தொடங்கியவர்

நன்றி ரதி.

உண்மைதான் கிருபன். கலையை இரசிக்கிறன் என்று சொல்லி வெருட்டிப் பயப்பிடுத்திற பார்வையளும் இருக்கவே செய்கின்றன :D

  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் ஏற்பட்ட மனதின் ஆக்கிரமிப்பை அழகாய் தந்தவிதம் அருமை.

52 நிமிடங்கள் கடந்துவிட்டன என்பதனைக் கடைசித்தரிப்பினை ரெயில் அடைந்த அறிவிப்பு உரத்துக் கூறி நம் கற்பனை கலைத்து நினைவிற்கு மீட்டது. ஏதுமே நடவாததாய், அறிமுகமே இல்லாதவராய் இரயில் ஏறியதைப் போன்றே நாம் இருவரும் எம்வழிகளில் இறங்கிச் சென்றோம். அவள் விரலிலும் திருமண மோதிரம் இருந்ததனை இறுதியாய் என் கண்கள் பதிவுசெய்தன.

மனம் அலைபாய்ந்து ஓய்ந்து விட்டு போயிருக்கின்றது.

நல்ல எழுத்துவளம். படிக்கும்போது சுவையாக இருந்தது. தொடர்ந்த எழுதுங்கள்.

இது ஒரு அனுபவப் பதிவாகினும் அல்லது கற்பனையாகினும் அனேகமாக எல்லோருக்குள்ளும் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான்.

இந்த விடயத்தில் எமக்குள் ஒரு பெரும் மன இறுக்கம் பல்வேறு காரணிகளால் விழைந்து நிலையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் எழுதிய கதையின் தலைப்பு 52 நிமிடம்...!

அதுவே... 53 நிமிடமாகியிருந்தால்..., பல மாற்றம் நிகழ்திருக்கும்.

சில நிமிடங்களால் ஏமாற்றமாகவும், சில விடயங்களில் நன்மையும் கிடைக்கும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அழகான எழுத்து நடை . நினைவுகளுக்கு மட்டும் எந்தவித தடையுமில்லை. ஒருசாராசரி வழிபயனத்தில் கண்டதும் மனம் செல்லும் வேகம் கண்ணியமாக் சொல்லபட்டு இருக்கிறது. காற்றுக்கு தடையில்லை என்பது போல் .52.....நிமிடங்கள் மனம் அலை பாயந்து இருக்கிறது. பாராட்டுக்கள மேலும் தொடர்க.

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்கள் எனக்குத்தான் இரயில் பஸ் பயணங்கள் மிக மிக அரிது .கவலையாகத்தான் இருக்கு :lol:

யாருக்குத்தான் மனம் அலைபாயாது?? ஆனால் அதனை ஓரளவு கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியம்/ ஆரோக்கியம். முன்பெல்லாம் தினமும் ரயிலில் போகும் போது அடிக்கடி ரயிலில் நீங்கள் கூறிய 'சாலைவிபத்துகளை' தூண்டும் சம்பவங்கள் நடக்கும்... :lol: அதனால் இப்போது பத்திரிக்கை ஒன்றை புரட்டியபடி இருந்துவிடுவேன் அல்லது போனில் அலாரம் வைத்து விட்டு கண்களை மூடிவிடுவேன், வம்பு எதுக்கு??

அழகாக உருவாக்கம் கொடுத்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குத்தான் மனம் அலைபாயாது?? ஆனால் அதனை ஓரளவு கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியம்/ ஆரோக்கியம். முன்பெல்லாம் தினமும் ரயிலில் போகும் போது அடிக்கடி ரயிலில் நீங்கள் கூறிய 'சாலைவிபத்துகளை' தூண்டும் சம்பவங்கள் நடக்கும்... :lol: அதனால் இப்போது பத்திரிக்கை ஒன்றை புரட்டியபடி இருந்துவிடுவேன் அல்லது போனில் அலாரம் வைத்து விட்டு கண்களை மூடிவிடுவேன், வம்பு எதுக்கு??

அழகாக உருவாக்கம் கொடுத்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் :)

இதென்ன.... கோதாரி குட்டி, தண்டவாளத்தில் ஓடும் ரயில் ஏன்.... சாலையில் ஓடுது? :unsure:

  • தொடங்கியவர்

கறுப்பி, சுகன், நிலாமதி, தமிழ்சிறி,குட்டி,சாத்திரியார் அனைவரின் கருத்துக்களிற்கும் மிக்க நன்றிகள். தமிழ்சிறி முன்வைக்கும் எச்சரிக்கையுணர்வும் உள்வாங்கப்பட வேண்டியதே. உண்மையில் இப்பதிவினை இடுவதில் எனக்கிருந்த பலத்த தயக்கம் பக்குவப்பட்ட யாழ்கள வாசகர்களின் பி;ன்னூட்டங்களில் தகர்ந்துபோயுள்ளது. புத்துணர்வளிக்கின்றது. அனைவரிற்கும் மீண்டும் ஒருமுறை மிக்கநன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, சுகன், நிலாமதி, தமிழ்சிறி,குட்டி,சாத்திரியார் அனைவரின் கருத்துக்களிற்கும் மிக்க நன்றிகள். தமிழ்சிறி முன்வைக்கும் எச்சரிக்கையுணர்வும் உள்வாங்கப்பட வேண்டியதே. உண்மையில் இப்பதிவினை இடுவதில் எனக்கிருந்த பலத்த தயக்கம் பக்குவப்பட்ட யாழ்கள வாசகர்களின் பி;ன்னூட்டங்களில் தகர்ந்துபோயுள்ளது. புத்துணர்வளிக்கின்றது. அனைவரிற்கும் மீண்டும் ஒருமுறை மிக்கநன்றிகள்.

இன்னுமொருவன், நீங்களும் மனதை தளரவிடலாமா? ப்ளீஸ் வேண்டாம்..

வார்த்தைகளின் கோர்வையும் சொன்ன விதமும் நன்றாக உள்ளது. சில வேளைகளில் இரயில் பயணங்களில் ஏற்படும் தொடுதல் இல்லா புரிதலுடன் கூடிய உணர்வுகளின் சங்கமங்களும் இனிமையானவை. பலருக்கு சொந்த அனுபவத்தை வாசித்ததுபோலிருக்கும்.

ஆனால் தொடர்ந்து ஒருவரையே தினமும் "எறிந்து" கொண்டிருந்தால், கடைசியில் "ஸ்ரோக்கிங்"இல் போய்முடியலாம்!

அப்ப இந்த விடயத்தில் தாராள மனத்துடன் சமத்துவமாக எல்லோருக்கும் எறிய வேண்டுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த விடயத்தில் தாராள மனத்துடன் சமத்துவமாக எல்லோருக்கும் எறிய வேண்டுமா? :D

பயணத்தில் தாராள மனதுடன் நடந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் பொழுதுபோகாது!

பக்குவமான ரசத்திற்கு, பக்குவத்தைச் சுவைத்தவர்கள்; மத்தியில் எப்போதும் போட்டியுண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் புட்டையும் முட்டைப்பொரியலையும் கொடும்பசியில் முளுங்குவதைப் போல் அல்லாது, குவளையின் விளிம்பினை முகர்ந்து, குடுவைக்குள் ரசத்தினை வட்டமாய் ஆட்டி, அனுபவத்தையும் பக்குவத்தையும் அவைகூறும் கதைகளையும் முகர்ந்தபடி இரசத்தினை அவள் பருகத் தொடங்கியிருந்தமை என் கற்கனைக்குள் கைப்பட்டது.

இது உங்களது கற்பனை மட்டுமே

இதென்ன.... கோதாரி குட்டி, தண்டவாளத்தில் ஓடும் ரயில் ஏன்.... சாலையில் ஓடுது? :unsure:

இந்தப் பாடலில் 5 .18இலிருந்து 5 .40வரை கவனிக்கவும் இது தரையில... :D

சில வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களால் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது... ^_^

  • தொடங்கியவர்

தப்பிலி மற்றும் காரணிகன் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி

காரணிகன்,

கதைகதையாம் பகுதியில் ஒரு தலைப்பைத் தொடங்கி விட்டு இதில் கற்பனை இல்லை இவை இப்படித் தான் நடந்தன என்று நான் அடம் பிடித்து விடமுடியாது. அந்தவகையில் உங்கள் கருத்தில் எனக்கு முரண்பாடில்லை. இருப்பினும், உங்கள் கருத்து ஏற்படுத்தித் தந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஒரு விடயஙத்தைக் கூற விரும்புகிறேன்.

நாம் காணும் விடயங்கள் நாம் அவற்றை உள்வாங்கிக் கொண்டவகையில் தான் உண்மையில் இருக்கின்றனவா அல்லது எமது அனுபவங்கள் சார்ந்து அவற்றை நாம் குறித்த விதத்தில் புரிந்துகொள்ளுகின்றோமோ என்பது தத்துவவியலில் மிகச்சுவாரசியமான ஒரு சிந்தனை முனை. இமானுவேல் கான்ற் இதனை திங் இன் இற்செல்வ் (the thing-in-itself (das Ding an sich) )மற்றும் phenomena என்ற இரு வகைக்குள் அடக்கியிருந்தார்.

பச்சை இலை பச்சை நிறம் என்று நானும் நீங்களும் தர்க்கமின்றி ஏற்றுக்கொள்ளுவோம். ஆனால் நான் பச்சை என்று கருதுவதும் நீங்கள் பச்சை என்று கருதுவதும் ஒன்று தானா என்று நிறுவதற்கு உலகில் வழி இல்லை. நீங்கள் காண்பதை நீங்கள் காணும்படி நான் காண்பதற்கோ நான் காண்பதை நான் காணும் படி நீங்கள் காண்பதற்கோ வழி இல்லை. ஒரு சுவை உங்களிற்கும் எனக்கும் பிடித்திருக்கலாம், அதற்கு ஒரு பெயர் வைத்து நானும் நீங்களும் அழைத்துக் கொள்ளலாம், ஆனால் அச்சுவை எங்களிற்குள் எவ்வாறு பதிவாகியிருக்கின்றது, ஏன் பிடிக்கின்றது என்பது ஒருவாறு இருக்கத்தேவையில்லை—ஒருவேளை வௌ;வேறு காரணங்களிற்காய் அவை எனக்கும் உங்களிற்கும் பிடிக்கலாம். ஆனால் நானும் நீங்களும் எங்கள் புரிதல்களிற்கு அப்பால் அச்சுவையின் அடிப்படைசார்ந்து அது எவ்வகையினது என்று சரிபார்த்துக் கொள்வதற்கு உலகில் வழி இல்லை. பச்சை இலை உண்மையில் எவ்வகையினது என்று நாம் இருவருமே என்றுமே அறியமுடியாது. காரணம், நாம் பிறந்த நாள் தொட்டு (அல்லது கருத்தரித்த நாள் தொட்டு) அனுபவங்கள் ஒவ்வொரு விதத்தில் எம்முள் பதிவாகி வருகின்றன. எமது புதிய அறிதல்கள் பழையன சார்ந்து தான் தொடர்கின்றன. ஒரு பொருளில் ஒளி பட்டுத்தெறிந்து எமது கண்களை அடைந்த மாத்திரத்தில் எம்மூளை அக்காட்சியினை எமது அனுபங்கள் சார்ந்து எமக்கு உணர்த்தத் தொடங்கி விடும். மூளையின் உணர்த்தலைத் தாண்டி ஒரு காட்சியை, தொடுகையை, சுவையை, மணத்தை, ஒலியை எம்மால் அவற்றின் அடிப்படைத்தன்னையில் உள்வாங்க முடியாது. இது ஒரு விரிந்த நீண்ட முனை. சமயங்களில் “மாயை” என்று வழங்கப்படும் பதமும் ஏறத்தாள இம்முனையில் அமைந்த சிநதனை என்றே படுகிறது.

சரி கதைக்குள் தத்துவியலை நுழைகை;காது கதை பற்றி மட்டும் பார்ப்பின்,; இக்கiதியில் நீங்கள் மேற்கோள்காட்டிய வரிகள் தனது கற்பனைக்குக் கைப்பட்டது என்று அப்பாத்திரம் கூறியதும், அதை வாசித்த உங்களிற்கு இது கற்பனை மட்டுமே என்று மீண்டும் ஒரு முறை அடித்துக் கூறத் தோன்றுகின்றது. அவ்வாறு தோன்றியமைக்கு, மணமான தமிழ் பெண்களின் உணர்வு இப்படித்தான் இருக்கமுடியும் என்ற உங்களது அனுபவம் சார்ந்த அல்லது எதிர்பார்;ப்புச் சார்ந்த காரணிகளும் காரணமாய் இருக்கமுடியும். ஒரு வேளை மணமான பெண்களிற்கு இதர ஆண்களில் கவர்ச்சி வருவது சாத்தியமில்லை என்பது உங்கள் கருத்து நிலையாய் இருக்கலாம். அல்லது இருபதுகளிற்கு முப்பதுகளின் மீது கவர்ச்சி வராது என்று நீங்கள் நம்பலாம். உங்கள் அனுபவப்படி அது சரியாய் இருக்கலாம். இதனால் தான் இக்கதையில் பல இடங்களில் “அனுபவம் சார்ந்து தான் கற்பனை கைப்படும்” என்ற வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்திற்கு நன்றி காரணிகன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் 5 .18இலிருந்து 5 .40வரை கவனிக்கவும் இது தரையில... :D

சில வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களால் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது... ^_^

சுகமான விபத்து. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.