Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்கியது டைம்ஸ்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்கியது டைம்ஸ்: இறுதி நேரத்தில் முகாமைத்துவம் அதிரடி நடவடிக்கை

[Friday, 2011-04-22 03:59:06]

டைமிஸ் சஞ்சிகையினால் நடாத்தப்படும் உலகின் பிரசித்த பெற்ற 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இணையத்தின் மூலமான வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை அதிலிருந்து அகற்ற சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 4ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டிருந்தார். 3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினை நிறைவு செய்து உலகில் அதிக பிரசித்த பெற்ற நபர்களின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இடம்பிடித்துள்ளதாக டைம்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட உலகின் பிரசித்த பெற்ற 100 பேர் இந்த வாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இறுதி பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்க டைம்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இதுவரை இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் சிலரை இறுதி வாக்கெடுப்பிற்கான டைம்ஸ் சஞ்சிகை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Apr 22, 2011 / பகுதி: செய்தி /

'போர்க் குற்றவாளி' யின் பெயரை நீக்கியது டைம்!!

உலகின் மிகுந்த சக்திவாய்ந்த 100 விவிஐபிகளில் ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பெயர், இப்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்த காரணத்தாலும், ரஷ்யா, சீனா, இந்தியா தவிர பிற சர்வதேச நாடுகள் ஒருமுகமாக ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டிவருவதாலும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

உலகின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 நபர்களை ஆண்டுதோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது டைம் பத்திரிகையின் வழக்கம். இந்தப் பட்டியலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவருக்கு நான்காவது இடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு மொத்தம் 238908 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 44428 வாக்குகள் மகிந்தவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்தப் பட்டியலிலேயே எதிர்வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தவர் ராஜபக்சே ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இப்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ராஜபக்சே பெயர் இல்லை!!

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் ராஜபக்சே அரசு மற்றும் படையினரின் போர்க்குற்றங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருந்தன. உலகில் அத்தனை மோசமான ரசாயண குண்டுகளையும் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள் என ராஜபக்சே அரசு மீது அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் மட்டும் 40000 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இத்துடன், ஐநாவிடம் அறிவித்த பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த தமிழர் தலைவர்களை எரித்துக் கொன்றதற்கான சாட்சியங்களும், புலிகளின் பெண் போராளிகளை கொடூரமாக ராணுவம் சிதைத்ததற்கான ஆதாரங்களையும் சேனல் 4 மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சிகள் அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் சேனல் 4, பார்ப்பவரின் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இலங்கை ராணுவத்தின் கொடிய செயல்களுக்கு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் ராஜபக்சே பெயர் டைம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஐநா நிபுணர் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்போது, இலங்கை அதிபர் என்ற பட்டியலிலிருந்தே ராஜபக்சே பெயர் நீக்கப்படுமோ!

sankathi.com

  • கருத்துக்கள உறவுகள்

ரைம் முகாமைத்துவத்துக்கு நன்றி தெரிவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜிங்கு... ஜக்கா......, ஜிங்கு ஜாக்ககால்ல்ல்ல்......easter_egg083.gif

எனக்கு, சந்தோசத்தில், கையும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை....easter_bunny018.gif

இண்டைக்கு பெரிய கொண்டாட்டம்.easter_bunny035.gif

ஈஸ்டர் வெள்ளியில் கிடைத்த பரிசு,easter_egg075.gif

மேலும்... இந்தச் செய்தியை வேறோரு பதிவில் முகிலும், ஹரியும் இணைத்திருதார்கள். அதனை ஒன்று சேருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இப்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ராஜபக்சே பெயர் இல்லை!!

நல்ல செய்தி.இந்த முடிவை டைம்ஸ் நிர்வாகம் எடுத்ததில் யாழ் கள உறவுகளின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.இந்த முடிவை டைம்ஸ் நிர்வாகம் எடுத்ததில் யாழ் கள உறவுகளின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது!!!

உண்மை புங்கையூரான். :)

அதிலும்...கந்தப்பு அங்கிள், ஹரி, அகோதா போன்றவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது. :wub:thanksgiving058.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை புங்கையூரான்.

அதிலும் ஹரி, அகோதா போன்றவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது. :wub:

நான் அவதானித்த வரையில் ஹரி.. அகோதா அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்கள் மட்டுமன்றி பிற உறவுகள் பலர் ரைம் இணையத்தில் சிங்கள கொலைகாரப் படைகளுக்கு எதிராக சிங்களவர்களின் கொடும் வார்த்தைகள் அடங்கிய பதிவுகள் மத்தியிலும் பொறுமையோடு பெரும் பிரச்சார பணியை செய்தனர். ஆதாரங்களோடு பார்வையாளர்களுக்கு போர்குற்றவாளியை இனங்காட்டிக் கொண்டிருந்தனர். நிச்சயம் அவை ரைம்சின் கவனத்தைப் பெற்றிருக்கும்.

மேலும் உறவுகள் குறித்த வாக்குப்பதிவு தொடர்பிலும் அது நடத்தப்படும் முறை தொடர்பிலும் பதிவிட்டிருந்தனர். அவற்றையும் ரைம் கவனத்தில் எடுத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

எதுஎப்படியோ.. காசுக்கு விலைபோகாது நடந்து கொண்ட ரைம் முகாமைத்துவத்தை பாராட்டுவதே இவ்வேளையில் நம் நன்றிக்கடன் செலுத்தலாக இருக்கும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவதானித்த வரையில் ஹரி.. அகோதா அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்கள் மட்டுமன்றி பிற உறவுகள் பலர் ரைம் இணையத்தில் சிங்கள கொலைகாரப் படைகளுக்கு எதிராக சிங்களவர்களின் கொடும் வார்த்தைகள் அடங்கிய பதிவுகள் மத்தியிலும் பொறுமையோடு பெரும் பிரச்சார பணியை செய்தனர். ஆதாரங்களோடு பார்வையாளர்களுக்கு போர்குற்றவாளியை இனங்காட்டிக் கொண்டிருந்தனர். நிச்சயம் அவை ரைம்சின் கவனத்தைப் பெற்றிருக்கும்.

மேலும் உறவுகள் குறித்த வாக்குப்பதிவு தொடர்பிலும் அது நடத்தப்படும் முறை தொடர்பிலும் பதிவிட்டிருந்தனர். அவற்றையும் ரைம் கவனத்தில் எடுத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

எதுஎப்படியோ.. காசுக்கு விலைபோகாது நடந்து கொண்ட ரைம் முகாமைத்துவத்தை பாராட்டுவதே இவ்வேளையில் நம் நன்றிக்கடன் செலுத்தலாக இருக்கும்.

உண்மை நெடுக்ஸ்,

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வழியில் செயற்படக்கூடிய வீரியத்தை ஆண்டவன் தந்துள்ளான்.

அதனை நாம் பிரயோசனப் படுத்தாமல், அல்லது தெரியாமல் இருக்கின்றோம்.

உண்மையில் எனக்கு இன்று, யாழ் கள உறவுகளை நினைத்து பெருமைப் படுகின்றேன். :wub:

தமிழன்ட ஒற்றுமைகு கிடைச்ச பரிசு இது..

2011 ஈழத் தமிழனுக்கு நல்ல ஒரு ஆண்டு என்று யாரோ போன வருடம் சொன்னவை..அப்படியே எல்லாம் நல்ல மாரி நடக்குது..

நல்லா காலம் பிறந்திருக்கு..... :)

உண்மை புங்கையூரான். :)

அதிலும்...கந்தப்பு அங்கிள், ஹரி, அகோதா போன்றவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது. :wub:thanksgiving058.gif

தோழர் புரச்சிக்கர தமிழ் தேசியனை விட்டு விட்டிங்கள்

ஈழத் தமிழர் எங்கள் ரத்தம் :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்ட ஒற்றுமைகு கிடைச்ச பரிசு இது..

2011 ஈழத் தமிழனுக்கு நல்ல ஒரு ஆண்டு என்று யாரோ போன வருடம் சொன்னவை..அப்படியே எல்லாம் நல்ல மாரி நடக்குது..

நல்லா காலம் பிறந்திருக்கு..... :)

தோழர் புரச்சிக்கர தமிழ் தேசியனை விட்டு விட்டிங்கள்

ஈழத் தமிழர் எங்கள் ரத்தம் :(

புயல்,புரட்சிகரச்தேசிகனை, விட்டது எனது தவறு, இந்தப் கணனிப் போராட்டம் வெற்றி பெற உழைத்த தமிழக உறவுகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். இந்த வாக்கெடுப்பின் ஆரம்பத்தின் போது.... ஹரி ஒரு சொல்லு சொன்னார்.."யாழ் கருத்தாளர்கள் முடிவை மாற்றலாம்" என்று. அதன் படியே... நடந்தது. :D

நல்ல செய்தி செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்க பாடுபட்ட அணைத்து உறவுகளுக்கும் எனது நன்றிகள்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

அய்யன் வள்ளுவன்.

செயல்வீரரின் செயல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு நாமே பாராட்டிக் கொண்டிருந்தால் மட்டும் எப்படி.

இந்த முடிவை எடுத்த Time ஆசிரியர் குழுவுக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பலாமே... எங்கப்பா தோழர் அகூதா,

வாக்கெடுப்பில் உள்ள தவறான முறையைச் சுட்டிக் காட்டியதும் பாரம்பரிய டைம் இதழின் டாப் 100 பட்டியலில் ஒரு போர்க் குற்றவாளியா என அதன் ஆசிரியர்குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் நிச்சயம் டைம் இதழாசிரியர் குழுவை சிந்திக்க வைத்திருக்கும். இதனோடு நாம் செய்ய வேண்டிய பணி தமிழ் இனப்படுகொலை குறித்தும் , தமிழர்கள் சிங்களர்களோடு ஏன் இணைந்து வாழ முடியாது என்பதற்கான காரணங்களையும் அதற்கு வலுச் சேர்க்கும் ஆதாரங்களையும் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நியாயத்தின் குரலை சார்பற்று எடுத்துச் சொல்ல ஊடகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். தமிழர் தரப்பு இதில் பலவீனமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு நாமே பாராட்டிக் கொண்டிருந்தால் மட்டும் எப்படி.

இந்த முடிவை எடுத்த Time ஆசிரியர் குழுவுக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பலாமே... எங்கப்பா தோழர் அகூதா,

வாக்கெடுப்பில் உள்ள தவறான முறையைச் சுட்டிக் காட்டியதும் பாரம்பரிய டைம் இதழின் டாப் 100 பட்டியலில் ஒரு போர்க் குற்றவாளியா என அதன் ஆசிரியர்குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் நிச்சயம் டைம் இதழாசிரியர் குழுவை சிந்திக்க வைத்திருக்கும். இதனோடு நாம் செய்ய வேண்டிய பணி தமிழ் இனப்படுகொலை குறித்தும் , தமிழர்கள் சிங்களர்களோடு ஏன் இணைந்து வாழ முடியாது என்பதற்கான காரணங்களையும் அதற்கு வலுச் சேர்க்கும் ஆதாரங்களையும் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நியாயத்தின் குரலை சார்பற்று எடுத்துச் சொல்ல ஊடகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். தமிழர் தரப்பு இதில் பலவீனமாக இருக்கிறது.

எனது தமிழக நண்பர் புலேந்திரனின் வேண்டுகோளை செவி மடுத்து,

அகூதா அவர்களை மேடைக்கு வரும்படி, அன்புடன் அழைக்கின்றோம்.

ஒருவேளை டைம்ஸ் இணையத்தளம் மகிந்தாவை அவமானப் படுத்த வேண்டும் என்று 'பிளான் பண்ணி' பண்ணி இருப்பார்களோ?

எதுவாக இருப்பினும் இங்கே பலர் தமது கருத்துக்களை முன்வைத்ததினால் ஏனையோரும் அதனை செயல்படக் கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே.............! மனோ பலம் கொள்வோம்!! தடைகளை உடைப்போம்!!!

பாராட்டுக்கள் எல்லோருக்கும் உரித்தானவை. நாம் ஒற்றுமையாக பயணம் செய்யவேண்டிய காலமும் தேவையும் இன்றுள்ளது. தாயக மக்களின் சுதந்திரம் கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிப்போம்.

நிச்சயம் ஒருவரி 'நன்றி' தெரிவித்தல் அவர்களுக்கு ஊக்கம் தரும். அதேவேளை சிங்கள ஆதரவாளர்களும் டைம்ஸ் இதழின் இந்த முடிவை எதிர்ப்பார்கள், ஆகவே நாம் சிலவரிகள் எழுதுவது வருங்காலத்திலும் உதவும்.

to : letters@time.com

Subject: The 2011 TIME 100 Poll

Dear Editor,

I am delighted to witness that justice has prevailed where Mahinda Rajabakse did not make into the list. UN has accused his regime for committing serious crimes against humanity. And Time has helped to send a strong message to those who violate basic human rights. And thanks for this!

Sincerely,

=====================================

to : letters@time.com

Subject: The 2011 TIME 100 Poll

Dear Editor,

Thank you very much for removing one of the worst war criminal of modern time!

Sincerely,

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசியத்தின் துயரத்தைத் துடைப்பதில் நேரமொதுக்கிக் காலத்தே பணியாற்றும் அனைவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக் கொள்வதைத் தவிர வெறு மொழியில்லை.

மேலும் பலருக்கும் கடிதம் இல்லை வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்பியவர்கள் இவற்றை cc or bcc செய்யலாம் :

1. http://timemediakit.com/contacts.html

2. ( கள உறவு முத்தமிழ் வேந்தனிடம் இருந்து பெறப்பட்டது )

john_griffin@timeinc.com

kim_kelleher@timeinc.com

steve_cambron@timeinc.com

michael_safran@timeinc.com

justin_oborne@timeinc.com

letters@time.com

time-fmg-pr@timeinc.com

john_helmer@timeinc.com

craig_johnson@timeinc.com

rusty_gundrum@timeinc.com

peter_britton@timeinc.com

nina_fletcher@timeinc.com

tom_petersen@timeinc.com

annemette_bontaites@timeinc.com

mark_isik@timeinc.com

tim_schlax@timeinc.com

carrie_damon@timeinc.com

leah_viands@timeinc.com

alexis_schwartz@timeinc.com

maggie_kemsley@timeinc.com

barbara_oram@timeinc.com

jody_reiss@timeinc.com

bill_ridenour@timeinc.com

katie_simony@timeinc.com

jim_medd@timeinc.com

joe_giacalone@timeinc.com

pam_carlsen@timeinc.com

john_mcclain@timeinc.com

janet_haire@timeinc.com

raymond_farmer@timeinc.com

meredithr_long@timeinc.com

alisa_beeli@timeinc.com

nancy_cooper@timeinc.com

farhad_fozounmayeh@timeinc.com

andy_bush@timeandfortune.com

irina_hartmann@timemagazine.com

ryan_afshar@timemagazine.com

clare_bowen@timemagazine.com

tim_hodges@timemagazine.com

tim_howat@timemagazine.com

claudia_mancini@timemagazine.com

magali_bois@fortunemail.com

bernadette_anthierens@timemagazine.com

thomas_stickelmaier@timemagazine.com

andreas_fraessdorf@timemagazine.com

andrew_butcher@timeandfortune.com

khoon-fong_ang@timeandfortune.com

yoojin_ahn@timeandfortune.com

tim_hodges@timeandfortune.com

karen_mong@timeandfortune.com

kotaro_aikawa@timeinc.com

yosuke_kawashima@timeinc.com

rowena.ohalloran@publicitas.com

chloe.jones@publicitas.com

catherine.cowan@publicitas.com

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் இவ்வளவு தூசணவார்த்தைகளை கேட்கவேண்டிய நிர்ப்பந்தம் என்று நினைத்து மனம் வருந்தினேன்.எனது பங்களிப்பும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி.அதிலும் மகிந்தவின் பேரை எடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்களுக்கு ஒரு பச்சை.

பாராட்டுகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள ஓட்டு... ராஜபக்ஷே பெயரை நீக்கியது 'டைம்'!

மிகப் பெரிய அளவில் கள்ள ஓட்டுகள் 'திட்டமிட்டு' குத்தப்பட்டதன் விளைவாக, 'டைம்' இதழின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே இடம்பெறவில்லை.

உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை, பிரபல 'டைம்' இதழ் வெளியிடுவது வழக்கம். இதன் பகுதியாக, ஆன்லைன் மூலம் தனது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

2011-ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்கவர்களுக்கான தெரிவிப் பட்டியலில் ராஜபக்ஷேவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வாக்கெடுப்பில் 6-வது இடத்துக்கு முந்தியிருந்தார் ராஜப்க்ஷே. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அவர் 4-ம் இடத்தில் இருந்தார்.

இதனிடையே, ராஜபக்ஷேவுக்காக ஆன்லைனில் கள்ள ஓட்டுகள் குத்தப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்தன. இலங்கை அதிபர் செயலகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவருக்காக ஆன்லைனில் வாக்குகள் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோல், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையும் அண்மையில் வெளியானது.

இந்தச் சூழலில், 2011-ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க முதல் 100 பேர் பட்டியலை இன்று டைம் இதழ் வெளியிட்டது. அதில், ராஜபக்ஷேவின் பெயர் இடம்பெறவில்லை. மோசடி வாக்குகள் காரணமாகவே அவர் தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

http://new.vikatan.com/news.php?nid=1753

  • கருத்துக்கள உறவுகள்

ரைம்ஸ் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்குமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மகிந்த சொந்தக் காசில் சூனியம் வைச்சிட்டார்.சும்மா பின்னால்(கடைசி வரிசையில் இருப்பவரை) நீக்கினால் ஒருத்தருக்கும் தெரியாது. 4வது வரையும் வந்து விட்டு உச்சாணிக் கொப்பில் இருந்து விழுந்த மாதிரி விழுந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆண்டு மேயிற்குப் பிறகு எங்களின் பிரச்சாரம், வன்னியில் சிறைக்கம்பியினுள் மாட்டுப்பட்டிருந்த மக்கள் பற்றியதாகவே இருந்தது. அது பற்றி ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்தன. அதன் பின்னர் அம்மக்களை விடுதலை செய்வதாகச் சிங்கள அரசு வெளியுலகிற்குக் காட்டியது. எம் புலம்பெயர் போராட்டங்களும் அத்தோடு நிறைவு பெற்றன. ஏனென்றால் அடுத்த நிலை மற்றும், அனைத்துப் பிரச்சனைகளுக்குமான ஒரு தெளிவான போராட்டத்தை நாங்கள் சிந்தித்திருக்கவில்லை. அதனால் மக்களையும் அதற்கேற்ப திரட்டவுட் முடியவில்லை.

இன்றைக்கு யுத்தக் குற்றவாளி ராஜபக்சா என்று நாங்கள் செய்தாலும், தூரநோக்கில் அவனோ அவனது குடும்பமோ இல்லாது போனால், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதி பற்றிய எண்ணப்பாடு நிறைவு பெற்று விடுமா?? எங்களது செயற்பாடும் நிறைவாகுமா?? எனவே எந்தவொரு போராட்டமும் ராஜபக்சாவை முன்னிலைப்படுத்தினாலும் ஒட்டுமொத்த சிங்களப் பயங்கரவாத அரசு என்ற பாணியில் தான் கொண்டு செல்லப்பட வேண்டும். அதன் தான் தூரநோக்கத்தைக் கொண்டிருக்கிருக்கும் என்பது என் எண்ணப்பாடாகும்.

எம்மைப் பயங்கரவாதி என்று சொல்லும்போது உலகம் எம்மை ஒதுக்கியது. படுகொலைகளைக் கண்டிருந்தபோதும் எம்மைக் காப்பாற்றத் துணியவில்லை. இன்றைக்கு சிங்கள அரசு போர்க்குற்றவாளி என்ற பிரச்சாரம் கொண்டு செல்லும்போது, அதை ஒதுக்கத் துணிகின்றது. எனவே சிங்கள அரச பயங்கரவாதத்தையும், அதன் போர்க்குற்றங்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவனூடாகவே நாம் அதை ஒதுக்கி வைக்க ஏதுநிலையாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் அகூதா அண்ணன்!

யாழில் உங்களோடு சேர்ந்து கருத்துக்களை உடனடியாக பதிய முடிவதில்லை போதிய நேரமின்மையே அதற்கு காரணம்.............

தவிர வேலையில் இருந்துதான் இணையம் சம்மந்தமான அனைத்து வேலைகளையும் செய்வதுண்டு அங்கே இருந்து கொண்டு யாழை தமிழில் எழுதிகொண்டிருந்தால் யாராவது சந்தேகமாக பார்ப்பார்கள் என்பதனாலேயே யாழில் எழுதுவது குறைவு....... தவிர நீங்கள் எழுதும் கடிதங்களை எல்லாம் எல்லா இடங்களிற்கும் அனுப்பிகொண்டே இருக்கிறேன்...........

பலபேரும் அதை செய்வார்கள் என்றே நான் நினைக்கிறேன். உங்களுடைய கடின உழைப்பிற்கு நன்றிகள்!

உழைப்புகள் வீண்போகாது என்றே நான் நாம்புகிறேன்............

2009 வருட தொடக்க காலங்களில் நிழலிஅண்ணாவும் இப்படிதான்............. கொஞ்சம் உணர்சிவசபட்டு கெண்டிருந்தார் எல்லா இணையத்திலும் அதை இணையுங்கள் இதை இணையுங்கள் என்று எழுதிகொண்டேயிருப்பார்.............. தோல்விகள் எங்களை நெருங்கிகொண்டிருந்த நேரம் அது எல்லோருடை மனங்களும் உடைந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்திலும் அவரோடு யாழிலே கைகோர்தத்துகொண்டிருக்க முடியவில்லை....... ஆனால் முடிந்ததை செய்துகொண்டேயிருந்தேன்.

உங்களுடைய கருத்துக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துகொண்டே இருக்கிறேன்! அனைத்தும் ஆக்கபூர்வமானவை......... இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையானவை. தமிழர்களுக்கு தற்புகழ்சி அதிகமாகவும் அறிவு சிறியதாகவும் இருப்பதாக நான் உணருகிறேன் அதனால்தான் அழுக்குகளை உடனேயே பற்றுகிறார்கள் காலம்தாழ்திய பிரதிபலன்களை பற்றி சிறிதும் சிந்திக்கிறார்கள் இல்லை.................. அந்த மாற்றத்தை நாம் கொண்டுவரவேண்டும். அது எளிதான ஒன்றல்ல........... உங்களை போன்றவர்களின் உழைப்பு வீணாக கூடாது என்பதால்தான் எனது சிந்தனை அந்த கோணத்தில் செல்கிறது.............

மீண்டும் நன்றிகள்! தொடருங்கள் உங்கள் பயணத்தை நிற்சயமாக நாம் பின்தொடர்கிறோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.