Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகவன் பரஞ்சோதி: ஓர் கனேடிய தமிழ் ஊடகத்துறை கலைஞர் பற்றிய எனது சில எண்ணக்கருக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

எனக்கு பிரச்சனை இல்லை. ராகவன் இந்த தேர்தலில் வென்றாலோ அல்லது தோற்றாலோ நான் மகிழ்ச்சியோ துக்கமோ அடையப்போவது இல்லை. ஆனால்.. ராகவன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. மற்றும்படி, உங்கள் உள்வீட்டு புடுங்குப்பாடுகள் எனக்குத்தெரியாது என்பது உண்மை. நல்லகாலம் இந்த கனேடிய தமிழர் அமைப்புக்களில் தலையைக்கொடுத்து நானும் என்னைக் கெடுக்கவில்லை என்பதை நினைத்து நிம்மதி அடைகின்றேன். ஆயினும்..

நாங்கள் வெளியில் நின்று நடப்பவற்றை அவதானிக்கின்றோம். என்ன இருந்தாலும்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் நம்மவர் மீது உள்ள அக்கறை காரணமாக எனது சில சிந்தனைகளை பகிர்ந்துகொண்டேன். இதற்குமேல் நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் குத்துப்படுவது, மற்றவனை இழிவுபடுத்துவதாக நினைத்து எல்லோரும் இழிவடைந்து கொள்வது, தனிநபர்களிடையேயான நானா நீயா பாணி தலைமைத்துவப்போட்டிகள்.. இத்தியாதிகள்.. இவற்றின் இறுதியில்.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்று கூறுவார்கள். உங்கள் முடிவுரைகளை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.

  • Replies 120
  • Views 12.5k
  • Created
  • Last Reply

சுகன். இவரை வளர்த்துவிட்ட ஒரு அமைப்பிற்கே இவர் வளர்ந்தபின்பு காட்டிய வேலைகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அதனைக் குறிப்பிட்டேன். நீங்கள் கூறுவதுபோல், இவரை வெற்றிபெற வைப்பதற்காகத்தான் அந்தத் தொகுதியில் நிறுத்தியது உண்மையெனில், தேர்தலுக்குப் பின்னர், இவரை அந்தக் கட்சி எந்த நிலையில் வைத்திருக்கப் போகிறது என்பதைப் பார்த்தபின்னர் புரிந்து கொள்ளுங்கள். இவரைத் தொடர்ந்தும் அந்தக் கட்சிக்குள் வைத்திருப்பதே கேள்விக்குறி. பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த விடயத்தில் நான் கவனத்தில் கொள்வது ஒன்றுதான். தமிழர்கள் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதை உணர்த்துவது. தமிழர்களிடமும் கொஞ்ச வாக்குகள் இருக்கின்றது அவைகள் ஒருமுகப்படுத்தும் தகுதி தமிழர்களிடம் இருக்கின்றது என்பதை உணர்த்துவது. ஒரு அடிப்படை புரிதலை வாக்களிப்பதன் மூலம் கனேடிய அரசியலில் தமிழர் என்ற இன அடயாளம் சார்ந்து ஏற்படுத்த முனைவது. மற்றபடி ராதிகாவோ ராகவனோ வென்றபின்னர் தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியாது. அவ்வாறு நாம் எதிர்பார்க்கவும் முடியாது. நிற்கும் வேட்பாளர்களின் நோக்கம் குறித்து நான் கவலைப்படவில்லை. இத்தேர்தலில் தமிழர்களின் வெற்றி என்பது இரண்டு தமிழர்களை வெல்லவைப்பது அவ்வளவுதான். அதற்கப்பால் என்ன நடந்தாலும் அவர்கள் எப்படி நடந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்படத்தேவையில்லை. தமிழர்களிடம் சிறிதளவேனும் வாக்குகள் இருக்கின்றது என்ற செய்தியை சொல்வதற்கு அப்பால் தற்போதைக்கு எதுவும் இல்லை.

இவரை வளர்த்துவிட்ட ஒரு அமைப்பிற்கே இவர் வளர்ந்தபின்பு காட்டிய வேலைகளைச்

நாங்கள் தமிழர் என்று ஒரு கணம் நினையுங்கள் அதன்பிறகு இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியாது.

இந்த விடயத்தில் நான் கவனத்தில் கொள்வது ஒன்றுதான். தமிழர்கள் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதை உணர்த்துவது. தமிழர்களிடமும் கொஞ்ச வாக்குகள் இருக்கின்றது அவைகள் ஒருமுகப்படுத்தும் தகுதி தமிழர்களிடம் இருக்கின்றது என்பதை உணர்த்துவது. ஒரு அடிப்படை புரிதலை வாக்களிப்பதன் மூலம் கனேடிய அரசியலில் தமிழர் என்ற இன அடயாளம் சார்ந்து ஏற்படுத்த முனைவது. மற்றபடி ராதிகாவோ ராகவனோ வென்றபின்னர் தமிழர்களுக்காக எதையும் செய்யமுடியாது. அவ்வாறு நாம் எதிர்பார்க்கவும் முடியாது. நிற்கும் வேட்பாளர்களின் நோக்கம் குறித்து நான் கவலைப்படவில்லை. இத்தேர்தலில் தமிழர்களின் வெற்றி என்பது இரண்டு தமிழர்களை வெல்லவைப்பது அவ்வளவுதான். அதற்கப்பால் என்ன நடந்தாலும் அவர்கள் எப்படி நடந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்படத்தேவையில்லை. தமிழர்களிடம் சிறிதளவேனும் வாக்குகள் இருக்கின்றது என்ற செய்தியை சொல்வதற்கு அப்பால் தற்போதைக்கு எதுவும் இல்லை.

இது தான் கனடிய தமிழர்கள் தம் இனம் சார்ந்து சிந்திக்க வேண்டிய யதார்த்தத்துக்கு சரியான முறை..... !!

ஆனால், ஆரம்பத்திலிருந்தே அவர் நிற்கும் தொகுதியில் அவர் வெல்லக்கூடிய சாத்தியமே இல்லை. லிபரலின் முக்கியமானதொரு தொகுதியில் போட்டியிட்டால் எப்படி வெல்ல வைக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

* கொன்சவேட்டிவ் கட்சி ராகவனை தனது கட்சியில் இணைத்தது அவரை தோல்வி அடையச்செய்யத்தான் என்பது நகைப்புக்கு இடமானது.

* இரு தமிழர்களும் வெவ்வேறு கட்சியாயினும் வெவ்வேறு தொகுதிகளில் நிற்பதால் அவர்களை வெல்ல வைக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது.

* இனவாத , தமிழர்களுக்கு எதிரான பத்திரிகைகளின் கருத்துக்களை எடுகோள்களாக எடுத்து தமிழர் ஏன் செயற்பட வேண்டும்??

Edited by nunavilan

நாம் விரும்பிய யாருக்கும் வாக்கு போடலாம் அதே போல் யாரும் தான் விரும்பும் கட்சியில் தேர்த்தலில் நிற்கலாம்.இது தான் ஜனநாயகம்.

தமிழர்களாகிய நாம் யாருக்கு வாக்கு போடுவது என்று வரும் போது, தேர்தலில் தமிழன் நின்றால் அவருக்கு வாக்கு போடவேண்டும் என்பது நகைப்பிற்கிடமானது.எந்த கட்சி எமக்கு நல்லது செய்யும் என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும்.சரி எமது நாட்டில் எமக்கு பிரச்சனையிருப்பதால் இங்கு எமது சில குரல்கள் ஒலிக்கவேண்டும் என நினத்தால் தமிழனுக்கு வாக்கு போடுவது அவசியம்,ஆனால் இம்முறை அவர்கள் எம்மை பாவிக்கின்றார்கள் போலத்தான் தெரிகின்றது.அவர்களது விளம்பரங்களில் 300,000 தமிழர்கள் இருக்கும் கனடாவில் லிபரல் ஒரு தொகுதியும் கொடுக்கவில்லை தாம் 2 தொகுதிகள் கொடுத்துள்ளொம் என சொல்வதே எமக்கு பெருத்த அவமானம்,எதோ தமிழ்நாட்டு தேர்தல் மாதிரி இங்குவந்தும் சீற்றுக்கு தான் இவர்கள் அடிபடுகின்றார்கள்,கொள்கை என்பது இல்லை என்பது போல்(உண்மையும் அதுதான்)

இரண்டாவது முன்னரும் எழுதியிருந்தேன் விஜயகாந் காங்கிரசில் சேருவதற்கும் சீமான் காங்கிரசில் சேருவதற்கும் வித்தியாசம் உண்டு என்று.அதே போல்த்தான் இவரும் .யாரும் ஒருவர் கொன்சவேட்டிவில் நின்றிருந்தால் அது இசூவேயில்லை,இவர் நிற்பதுதான் இங்கு பிரச்சனை.இப்படியானவர்கள் நாளைக்கு அங்கு நாட்டில் ஒருபிரச்னையுமில்லை ,சிறீலங்கா போர்குற்றம் புரியவுமில்லை என கொன்சவேட்டிவுடன் நின்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடுத்தது இவர் இங்கு வெல்லப்போவதில்லை என்றும் கொன்சவேட்டிவிற்கு 100% தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் இரு தமிழர்கள் இருவேறு கட்சியில் போட்டியிடுகிறார்கள்.அத்தோடு எந்தவொரு கட்சியும் முற்று முழுதாக தமிழர்களுக்கு உதவும் என்பதுமில்லை.ஆக எந்தக்கட்சியாயினும் அதில் போட்டியும் தமிழர்கள் வெல்லுமிடத்து அவர்கள் தமிழகளுக்கான பிரச்சனைகளை கட்சியின் மேல்மட்டம் வரை சென்று பேச வாய்ப்புண்டு.அதற்காக தம்ழர்களின் நலன்களில் அக்கறை உள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.

  • தொடங்கியவர்

ராகவன் போட்டியிடும் Scarborough Southwest தொகுதியில் Conservative கட்சிக்கு உள்ள வெற்றிவாய்ப்பு ராதிகா சிற்சபேசன் போட்டியிடும் Scarborough Rouge River தொகுதியில் என் டீ பீயிற்கு உள்ள வெற்றி வாய்ப்பைவிட குறைவானதா? தற்போது Scarborough Rouge River தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் புதிய வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருப்பினும் புள்ளிவிபரத்தை பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை.

68262370.png58668710.png

700_nanos_poll_110501.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறைத் தேர்தல்களம் தமிழர்கள் விடயத்தில் சற்று சலசலத்துப் போயிருக்கிறது. தமிழரின் வாக்குப்பலத்தை துண்டாடுவதற்கும் திசை திருப்புவதற்கும் பல்வேறு ஊடகப் பிரச்சாரங்கள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டுவருவதை அனைவரும் அறிவோம். நீங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் வாக்குப்பதிவில் தமிழரின் எண்ணிக்கை என்பது மிகைப்படுத்தப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

தமிழர்களாகிய நாம் யாருக்கு வாக்கு போடுவது என்று வரும் போது, தேர்தலில் தமிழன் நின்றால் அவருக்கு வாக்கு போடவேண்டும் என்பது நகைப்பிற்கிடமானது. இரண்டாவது முன்னரும் எழுதியிருந்தேன் விஜயகாந் காங்கிரசில் சேருவதற்கும் சீமான் காங்கிரசில் சேருவதற்கும் வித்தியாசம் உண்டு என்று.அதே போல்த்தான் இவரும் .யாரும் ஒருவர் கொன்சவேட்டிவில் நின்றிருந்தால் அது இசூவேயில்லை,இவர் நிற்பதுதான் இங்கு பிரச்சனை.இப்படியானவர்கள் நாளைக்கு அங்கு நாட்டில் ஒருபிரச்னையுமில்லை ,சிறீலங்கா போர்குற்றம் புரியவுமில்லை என கொன்சவேட்டிவுடன் நின்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்தது இவர் இங்கு வெல்லப்போவதில்லை என்றும் கொன்சவேட்டிவிற்கு 100% தெரியும்.

தமிழர் என்றால் தமிழருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது எவ்வாறு நகைப்பிற்கிடமானதோ அவ்வாறே கனடாவில் ஓர் கட்சியில் அங்கம் வகிக்கக்கூடிய தேசிய பாராளுமன்ற உறுப்பினர் எதேச்சையாக தனது தனிப்பட்ட கருத்துக்களை கட்சியின் கருத்துக்கு எதிராக கூறுவார் என்று எதிர்பார்ப்பதும் நகைப்பிற்கிடமானது.

ராதிகா சிற்சபேசன் 100% வெற்றி பெறுவார் என்று அறிந்தா அவர் என் டீ பி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தாலும் அவர்கள் புலிகளே! கனேடிய அரசு திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011 10:04

எம்.வீ சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுமானால், பயங்கரவாத அமைப்பு என தீர்ப்பளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்று கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வு சபை தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனச் சந்தேககிக்கப்படும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தொடர்பான வழக்கு நேற்று இடம்பெற்றது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர் விவசாயியாக காணப்பட்டதாகவும், இவரிம் இருந்து விடுதலைப்புலிகள் நெல் மூடைகளை கொள்வனவு செய்துள்ளனர்.

அத்துடன் உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் குறித்த நபர் விடுதலைப்புலிகளின் ஹோட்டலில் சேவகராக பணிபுரிந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்காக செயற்பட்டவர் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இதேவேளை தான் கட்டாயப்படுத்தப்பட்டே அங்கு வேலையில் இணைந்தாகவும் சுயவிருப்பின் பேரில் செயற்படவில்லை என்றும் குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இவர் சார்பில் கனேடிய குடிவரவு சபையின் வழக்கறிஞர் மார்க் டெஸ்லர் வாதிட்டார். இறுதியில், குறித்த புகலிடக் கோரிக்கையாளர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் அல்ல எனவும், இவருக்கு அகதி அந்தஸ்து வழங்க அனுமதிக்கும்படியும் மார்க் டெஸ்லர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் இணைந்து விவசாயம் முதல் கராஜ் தொழில் செய்தாலும் அவர்கள் விடுதலைப்புலிகளின் ஒரு பகுதியே ஆவர்.

விடுதலைப்புலிகள் அமைப்பானது கனடாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமாகும் என கனேடிய பெடரல் அரசாங்கம் வாதிட்டுள்ளது.

சன் சீ கப்பலில் பயணித்த விடுதலைப்புலிகள் எனச்சந்தேகிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து தாம் கனேடிய அரசிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர்.

எனினும் இந்தக் கூற்றிற்கு டெஸ்லர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது இந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் அசாதாரணமாகும்.

இவ்வாறு இவர்கள் விண்ணப்பித்தாலும் விடுதலைப்புலிகள் என்றே குற்றம் சாட்டப்பட்டால் மீண்டும் நாடு கடத்தப்படுவார்கள் என்று டெஸ்லர் தெரிவித்துள்ளார்.

சன் சீ கப்பலில் பயணம் செய்த 492 தமிழ் அகதிகளில் 45 பேர் மீது சட்டவிரோத ஆட்கடத்தல், போர்க்குற்றம், விடுதலைப்புலிகளுடன் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கராஜில் வேலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான வழக்கும் கடந்த மாதம் இடம்பெற்றது.

இதன்போதும் அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை டெஸ்லர் நிராகரித்திருந்தார்.

இந்த மக்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள். எனவே விடுதலைப்புலிகளுடனான தொடர்பு தவிர்க்க முடியாததாகும்.

விடுதலைப்புலிகள் பஸ் சேவை முதல் சிறுவர்களுக்கு கல்வி போதிக்கும் பாடசாலைகளையும் உருவாக்கியுள்ளது என்று டெஸ்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சன் சீ கப்பலில் பயணித்தவர்களில் இருவருக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilenn

இதுதான் கனடாவின் நிலைப்பாடு மாற்றத்தை நாம்தான் உருவாக்க உழைக்கவேண்டும். நேர்வழியும் இருக்கிறது குறுக்குவழியும் இருக்கிறது. புத்திசாலி இனம் இரண்டையும் பயன்படுத்தும். :rolleyes:

நாம் விரும்பிய யாருக்கும் வாக்கு போடலாம் அதே போல் யாரும் தான் விரும்பும் கட்சியில் தேர்த்தலில் நிற்கலாம்.இது தான் ஜனநாயகம்.

தமிழர்களாகிய நாம் யாருக்கு வாக்கு போடுவது என்று வரும் போது, தேர்தலில் தமிழன் நின்றால் அவருக்கு வாக்கு போடவேண்டும் என்பது நகைப்பிற்கிடமானது.எந்த கட்சி எமக்கு நல்லது செய்யும் என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும்.சரி எமது நாட்டில் எமக்கு பிரச்சனையிருப்பதால் இங்கு எமது சில குரல்கள் ஒலிக்கவேண்டும் என நினத்தால் தமிழனுக்கு வாக்கு போடுவது அவசியம்,ஆனால் இம்முறை அவர்கள் எம்மை பாவிக்கின்றார்கள் போலத்தான் தெரிகின்றது.அவர்களது விளம்பரங்களில் 300,000 தமிழர்கள் இருக்கும் கனடாவில் லிபரல் ஒரு தொகுதியும் கொடுக்கவில்லை தாம் 2 தொகுதிகள் கொடுத்துள்ளொம் என சொல்வதே எமக்கு பெருத்த அவமானம்,எதோ தமிழ்நாட்டு தேர்தல் மாதிரி இங்குவந்தும் சீற்றுக்கு தான் இவர்கள் அடிபடுகின்றார்கள்,கொள்கை என்பது இல்லை என்பது போல்(உண்மையும் அதுதான்)

இங்கே ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்துகொள்ளும்படி கருத்துக்கூறவில்லை.

எமக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அவசியம் எந்தக் கட்சிக்காவது இருக்கின்றதா? ஏன் எமக்கு நல்லதை செய்யவேண்டும்? தமிழர்களுக்கு நல்லதை செய்யும் கட்சி என்று எந்த கட்சியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. எமக்கு நல்லதை செய்யவேண்டாம் எமது துயரங்களை மதிக்கவோ எமது குரல்களை கேட்கவோ கூட இங்கே எந்தக் கட்சியும் இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலைக்கு கட்சிகள் காரணம் என்பதை விட தமிழர்களே காரணம் என்றே சொல்ல முடியும்.

பொதுவாக யார் கனேடியர்களுக்கு நல்லதை செய்கின்றனர் எவருடைய கொள்கை கனேடியர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கின்றது என்ற அடிப்படையில் உங்கள் கருத்து இருக்கின்றது. ஒரு கனேடியனாக இந்தக் கருத்து அமைகின்றது. அதில் தவறேதும் இல்லை. எம்மிடம் கனேடிய பிரஜாவுரிமை இருக்கின்றது ஆனால் நாம் தமிழர். கணனியில் ஒரு மென்பொருளை அழித்துவிட்டு என்னுமொரு மென்பொருளை எழுதுவதுபோல் தமிழன் கனேடியனாக ஆகமுடியாது அந்த வகையில் தேர்தலில் இனம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதும் ஜனநாயக உரிமைதான்.

தேர்தல் என்றொரு சந்தர்ப்த்தை இனம் சார்ந்த ஒற்றுமையின் வெளிப்பாடாக பதிவுசெய்வதை வலியுறுத்தியே கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. தவிர இங்கே எந்த நிர்பந்தமும் திணிப்புகளும் இல்லை. வாக்களிக்கும் உங்கள் உரிமையில் எந்தக் குறுக்கீடும் இல்லை.

300 000 தமிழர்கள் இருக்கும் போதும் லிபரல் ஒருதொகுதியும் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் லிபரல்கட்சியில்லை மாறக தமிழர்களே, இவ்வளவு தமிழர்கள் இருக்கும்போது கப்பல் அகதிகள் பற்றிய விளம்பரத்தை பழமைவாதக் கட்சி போடுகின்றது என்றால் அதற்கு காரணமும் தமிழர்களே, தமிழர்களின் வாக்குகள் பலவீனமானவை. இனரீதியான ஒரு முகப்படுத்தல் இல்லை என்பதற்கேற்ப தமிழர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் மோசமாக தமிழர்கள் பலியிடப்படுவார்கள். பலவீனமான நிலை தொடர்ந்தால் பல்வேறு காரணங்களுக்காக பலியிடப்படுவதற்கு தமிழினமே தெரிவுசெய்யப்படும்.

NDP Statement on UN Panel Report on Accountability for War Crimes in Sri Lanka

Today, New Democratic Leader Jack Layton issued this statement on the United Nation’s report on Sri Lanka:

“The New Democratic Party fully supports the recommendations made in the recently released independent UN Panel Report on accountability during and after the war in Sri Lanka.

“The UN Report reveals that “there are credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian and human rights law were committed both by the government of Sri Lanka and the LTTE, some of which amount to war crimes and crimes against humanity.”

“We believe those responsible must be prosecuted and urges the UN to launch an immediate and independent investigation.

“The NDP has proposed a motion in the House of Commons to form an all-party committee to support an independent inquiry into human rights violations in Sri Lanka. Unfortunately the motion was defeated by the Conservative Party.

“Our motion demanded the Government of Sri Lanka and the United Nations to work together with the international community to establish an international investigative body.”

New Democrat candidate Rathika Sitsabaiesan (Scarborough-Rouge River) and special advisor on Tamil issues, added:

“During this war atrocities took place while media and international bodies were not allowed in, or to report out. The NDP has always supported an independent inquiry into human rights violations in Sri Lanka and will continue to work towards this. We will work toward a Parliamentary study on the human rights violations in Sri Lanka.”

http://www.ndp.ca/press/ndp-statement-on-un-panel-report-on-accountability-for-war-crimes-in-sri-lanka

  • தொடங்கியவர்

எமக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அவசியம் எந்தக் கட்சிக்காவது இருக்கின்றதா? ஏன் எமக்கு நல்லதை செய்யவேண்டும்? தமிழர்களுக்கு நல்லதை செய்யும் கட்சி என்று எந்த கட்சியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. எமக்கு நல்லதை செய்யவேண்டாம் எமது துயரங்களை மதிக்கவோ எமது குரல்களை கேட்கவோ கூட இங்கே எந்தக் கட்சியும் இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலைக்கு கட்சிகள் காரணம் என்பதை விட தமிழர்களே காரணம் என்றே சொல்ல முடியும்.

கனடாவில் பிரதான கட்சிகளில் சீக்கியர்கள் மூன்று வகை அரசுகளிலும் முக்கிய நிலைகளில் உள்ளார்கள். அவர்கள் எவ்வாறு கனேடிய அரசியலில் வெற்றி பெற்று உள்ளார்கள் என்று சிந்தித்து பார்த்தீர்களா? கனடாவில் சீக்கியர்களின் வெற்றியின் காரணங்களை சீர்தூக்கி பார்த்தால் கனடாவில் தமிழர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்களவு கால்பதிக்க முடியாமைக்கு.... எவ்வாறான தவறுகள் புரிந்துள்ளார்கள் என்பதை ஊகிக்கக்கூடியதாக அமையும். கனேடிய அரசியலில் சீக்கியர்களிற்கு உள்ள மரியாதை ஏன் தமிழருக்கு இல்லை என்று சிந்தித்து பாருங்கள். கனேடிய மேடையில் ஆடுகின்ற கூத்தையெல்லாம் ஆடிவிட்டு இப்போது Conservative கட்சி காரணமாகவே மூச்சிழுத்துவிடுவது சிரமமாக உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

இதுதான் கனடாவின் நிலைப்பாடு மாற்றத்தை நாம்தான் உருவாக்க உழைக்கவேண்டும். நேர்வழியும் இருக்கிறது குறுக்குவழியும் இருக்கிறது. புத்திசாலி இனம் இரண்டையும் பயன்படுத்தும். :rolleyes:

இங்கு பிரச்சனை என்ன என்றால்.. கனேடிய அரசாங்கத்தின் அனைத்து கனேடியர்களிற்கும் பொதுவான, அனைத்து கனேடியர்களையும் பாதிக்கும் விடயங்களை பல கனேடிய தமிழ் ஊடகங்களில் அது கனேடிய தமிழருக்காக, கனேடிய தமிழரை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக பிரச்சாரம் செய்வது அல்லது விளங்கிக்கொள்வது. சிறீ லங்கா அரசாங்கமே தனது குடிவரவுக் கொள்கைகள், நடைமுறைகளில் பல்வேறுவிதமான கெடுபிடிகளை செய்யும்போது கனடா நாடு மட்டும் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி அனைவருக்கும் திறந்துவைக்கும் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு மடமை. கனடாவில் தமிழர் என்பதற்காக நாம் சிறப்புச்சலுகையை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் கனேடிய கொள்கை வகுப்பாளர்கள், கனேடிய அரச நிறுவனங்களின் பல்வேறு விதமான ஆய்வுகளையும், கனேடிய அரசாங்கத்திற்கு அவர்கள் வழங்கும் பிரேரணைகளையும் பார்த்தால் நடைமுறைகளின் மூலங்களை காணலாம்.

  • தொடங்கியவர்

* இனவாத , தமிழர்களுக்கு எதிரான பத்திரிகைகளின் கருத்துக்களை எடுகோள்களாக எடுத்து தமிழர் ஏன் செயற்பட வேண்டும்??

அனுபவம் வாய்ந்த ஆங்கில ஊடகத்தின் பந்துவீச்சிற்கு தமிழ் ஊடகங்கள் clean bowled. தமிழ் ஊடகங்களின் அனுபவ முதிர்ச்சியின்மை, அவசரபுத்தி, நிதானம் இன்மை, வடிகட்டிய முட்டாள்தனம் இவை எல்லாவற்றையும் இது பிரதிபலிக்கின்றது. தவிர, ஒருவருக்கு மேல் இன்னொருவர் புரண்டு எழும்புவது நீங்கலாக தமிழரினால் செய்யக்கூடிய வேறு செயற்பாடுகளும் இல்லை என்பதுதானே யதார்த்தம்?

இங்கு பிரச்சனை என்ன என்றால்.. கனேடிய அரசாங்கத்தின் அனைத்து கனேடியர்களிற்கும் பொதுவான, அனைத்து கனேடியர்களையும் பாதிக்கும் விடயங்களை பல கனேடிய தமிழ் ஊடகங்களில் அது கனேடிய தமிழருக்காக, கனேடிய தமிழரை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக பிரச்சாரம் செய்வது அல்லது விளங்கிக்கொள்வது. சிறீ லங்கா அரசாங்கமே தனது குடிவரவுக் கொள்கைகள், நடைமுறைகளில் பல்வேறுவிதமான கெடுபிடிகளை செய்யும்போது கனடா நாடு மட்டும் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி அனைவருக்கும் திறந்துவைக்கும் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு மடமை. கனடாவில் தமிழர் என்பதற்காக நாம் சிறப்புச்சலுகையை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் கனேடிய கொள்கை வகுப்பாளர்கள், கனேடிய அரச நிறுவனங்களின் பல்வேறு விதமான ஆய்வுகளையும், கனேடிய அரசாங்கத்திற்கு அவர்கள் வழங்கும் பிரேரணைகளையும் பார்த்தால் நடைமுறைகளின் மூலங்களை காணலாம்.

மிகவும் தெளிவான கருத்துகள் கலைஞன் !!

அனுபவம் வாய்ந்த ஆங்கில ஊடகத்தின் பந்துவீச்சிற்கு தமிழ் ஊடகங்கள் clean bowled. தமிழ் ஊடகங்களின் அனுபவ முதிர்ச்சியின்மை, அவசரபுத்தி, நிதானம் இன்மை, வடிகட்டிய முட்டாள்தனம் இவை எல்லாவற்றையும் இது பிரதிபலிக்கின்றது. தவிர, ஒருவருக்கு மேல் இன்னொருவர் புரண்டு எழும்புவது நீங்கலாக தமிழரினால் செய்யக்கூடிய வேறு செயற்பாடுகளும் இல்லை என்பதுதானே யதார்த்தம்?

பொதுவாகவே ஈழத் தமிழரால் நடாத்தப்படும் தமிழ் ஊடகங்களுக்கு இது பொருந்தும். அழிவுகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

(இந்த தலைப்பில் உள்ள விடயங்களைப் பற்றி தெரியாததால் கருத்துக் கூற விரும்பவில்லை.)

கலைஞன் ராகவன் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.

இந்த கருத்தை வாழும் புலம் பகுதியில் ராகவன் பற்றி ஆரம்பிக்கப்பட்ட திரியில் எழுதியிருந்தேன். அதை பிரதியிடுகிறேன்

வாக்களிக்கும் தகுதி பெற்ற கனேடிய தமிழர்கள் அனைவரும் வாக்களிப்பது முக்கியம். வாக்களிப்பதன் மூலம் எமது அரசியல் பலத்தை சொல்ல முடியும். சிறி லங்கா வை போல் இல்லது கனடாவில் உள்ள வாக்களிப்பு முறையில் அதிக வாக்கு பெற்றவருக்கு அதாவது ஒரு கட்சி உறுப்பினர் 12000 வைக்கும் மறு கட்சி உறுப்பினர் 12010 வாக்கும் பெற்றால் 12010 வாக்கு பெற்றவரே வெற்றியாளர். எனவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழர்களது வாக்கு நிச்சயம் யார் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

என்னை பொறுத்தவரை யாருக்கு அல்லது எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தமிழர் ஒருவர் போட்டியிட்டால் பிரிந்து நின்று மல்லுகட்டுவதிலும் போட்டியிடும் தமிழருக்கு ஒருமித்து வாக்களித்து இம்முறை எமது வாக்கு பலத்தை நிருபித்தால், (தற்போது எமக்கு போட்டியிடுபவர் பற்றி சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ) எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளும் தமிழர் ஒருவரை தேர்தலில் நிறுத்த முன்வருவார்கள். அதன் மூலம் துரநோக்கில் எமக்கு, எமது சமூகத்தின் நலன்களையும் பிரதி பலிக்கும் ஒரு வேட்பாளர் கிடைக்க சந்தர்ப்பம் இருக்கும். ஆனால் கனடாவில் கனடாவின் அரசியல், பொருளாதார நலன், கனேடிய வெளிநாட்டு கொள்கை என்பவை தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். எந்த கனேடிய அரசியல் கட்சியும் ஈழப் பிரச்சினையை முன்னுக்கு வைத்து தமிழரை அணுகும் என எதிர்பார்த்தால் அது பகல் கனவாக தான் முடியும். ஆனால் எம்முடைய வாக்குகளும் வேட்பாளர்களை தீர்மானிக்க தேவை என நிருபித்தால் குறைந்தது சிறி லங்கா அரசுக்கும், அதன் வேண்டுகோளுக்கும் ஆமாம் போட முதல் சற்று சிந்திப்பார்கள்.

முன்னர் சீக்கியர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த பொது கனேடிய அரசியலில் அவர்களது அரசியல் பங்களிப்பை இந்திய அரசு தடுக்க முயன்றது பற்றியும், தற்போது சிறி லங்கா அரசு கனேடிய தமிழர்களது அரசியல் முளையிலேயே கிள்ளி விட வேண்டிய தேவையையும், கனடாவில் ஓரளவு பொருளாதார செல்வாக்குடன் இருக்கும் தமிழார், அரசியலில் கால் பதித்தால், சிறி லங்கா அரசின் எதிர்கால தமிழர் அழிப்பில் ஏற்பட கூடிய தடங்கல்களையும் தவிர்க்க கனேடிய ஊடகங்கள் ஊடக செய்யும் பிரச்சாரம் நன்கு வேலை செய்கிறது என்பது சிலரது கருத்தில் இருந்து தெரிகிறது.

கிழே உள்ள இணைப்பில் உள்ள ஆய்வு ௨ மாதத்துக்கு முன் வந்தது.

Are foreign entities interfering, influencing Canadian politics?

http://www.digitaljournal.com/article/304249#ixzz1FahW8BUj

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் வாய்ந்த ஆங்கில ஊடகத்தின் பந்துவீச்சிற்கு தமிழ் ஊடகங்கள் clean bowled. தமிழ் ஊடகங்களின் அனுபவ முதிர்ச்சியின்மை, அவசரபுத்தி, நிதானம் இன்மை, வடிகட்டிய முட்டாள்தனம் இவை எல்லாவற்றையும் இது பிரதிபலிக்கின்றது. தவிர, ஒருவருக்கு மேல் இன்னொருவர் புரண்டு எழும்புவது நீங்கலாக தமிழரினால் செய்யக்கூடிய வேறு செயற்பாடுகளும் இல்லை என்பதுதானே யதார்த்தம்?

குளோபல் தளத்தையோ, ஏசியன் ரியூபூனையோ தவிர வேறு ஆங்கில ஊடகங்கள் எடுகோளாக எடுத்து கதைக்கக் கூடிய அளவில் இல்லையோ என்பதே எனது ஆதங்கம்.தமிழருக்கு ஆதரவாக அல்லது நடுநிலையாக இவர்கள் கட்டுரை எழுதியதில்லை என்றே கூறுமளவுக்கு இவர்களின் நச்சுக்கருத்துக்களை பல தடவைகள் வாசித்துள்ளேன். எந்த விதத்தில் இவர்கள் தரமானவர்கள் என்றும் விளங்கவில்லை.ஒரு சிறுபான்மை இனத்தை ஓரம் கட்டுவதால் இவர்கள் தரம் வாய்ந்தவர்களாகி விட முடியுமா?

தமிழர்களின் குரலை நசுக்க சிங்கள இனவாத அரசு கொலை செய்து ,சிறை வைத்து உலகம் போற்றும் ஊடகவியலாளர்களை இல்லாமல் அல்லது எழுத முடியாமல் செய்ததால் தமிழ் உலகம் ஆங்கில ஊடகமளவுக்கு வளரமுடியாமல் போனதும் யதார்த்தம் தான்.உதாரணமாக ஊடகவியலாளர்கள் சிவராம்,திசநாயகம்போன்றவர்களை குறிப்பிடலாம். ஏன் இன்றும் இலங்கையில் இருந்து உண்மைகளை உள்ள படி எத்தனை பத்திரிகையாளர்களால் எழுத முடியும்? மூலகாரணங்களை அறியாமல் குற்றம் சாட்டுவதால் ஏதும் நடைபெறப் போவதில்லை!!

குளோப் அண்ட் மெயில் என்றைக்குமே தமிழர்களை ஆதரித்து எழுதியது கிடையாது. தமிழருக்கு எதிராக ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கிவிடும். அதில் வரும் கட்டுரைகளை வைத்து முடிவெடுப்பவர்கள் சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள் என்றே கூறுவேன்.

இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். இத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கனடாவில் இருந்தும் ஏன் யாரும் ஒரு கனேடிய ஊடகவியலாளராக வர முயற்சிக்கவில்லை? யாழ் களத்திலேயே பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ஒரு ஊடகவயிலாளராக வர முயற்சிக்கவில்லை? இத்தனை தரமாகக் கட்டுரை வடிக்கும் கலைஞன் போன்றவர்கள் வர முயற்சித்திருக்கலாமே? எல்லாம் ஊருக்குத் தான் உபதேசமே தவிர தனக்கல்ல.

  • தொடங்கியவர்

முன்னர் சீக்கியர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த பொது கனேடிய அரசியலில் அவர்களது அரசியல் பங்களிப்பை இந்திய அரசு தடுக்க முயன்றது பற்றியும், தற்போது சிறி லங்கா அரசு கனேடிய தமிழர்களது அரசியல் முளையிலேயே கிள்ளி விட வேண்டிய தேவையையும், கனடாவில் ஓரளவு பொருளாதார செல்வாக்குடன் இருக்கும் தமிழார், அரசியலில் கால் பதித்தால், சிறி லங்கா அரசின் எதிர்கால தமிழர் அழிப்பில் ஏற்பட கூடிய தடங்கல்களையும் தவிர்க்க கனேடிய ஊடகங்கள் ஊடக செய்யும் பிரச்சாரம் நன்கு வேலை செய்கிறது என்பது சிலரது கருத்தில் இருந்து தெரிகிறது.

நீங்கள் எத்தனைபேர் தமிழர்கள் சில நூறுபேர் கடந்தவருடம் கனடாவிற்கு கப்பலில் வந்தபோது கனேடிய ஊடகங்கள் குறிப்பிட்ட செய்தியை எவ்வாறு கையாண்டன என்பதை அறிந்தீர்களோ தெரியாது. நான் பெரும்பாலான முக்கிய கனேடிய ஊடகங்களிற்கு சென்று குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான செய்திகளை பார்வையிட்டதோடு மட்டும் அல்லாது அவற்றுக்கு எழுதப்பட்ட பின்னூட்டல்களையும் கவனித்தேன். அங்கு தமிழர் பற்றி மிகக்கடுமையாகவும், கேவலமாகவும் எழுதப்பட்டது. அதாவது.. குறிப்பிட்ட இந்தவிடயத்தை பொறுத்தளவில் கனேடிய ஊடகங்களும் கனேடிய மக்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமது வெறுப்பை காட்டினார்கள். சீ.பீ.சி வலைத்தளத்தில் பின்னூட்டல்களின் கேவலத்தன்மை காரணமாக ஓர் கட்டத்தில் குறிப்பிட்ட செய்தி சம்பந்தமாக பின்னூட்டல்கள் இடப்படுவதையே அங்கு அந்தத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால்..

நம்மவர்களின் இதுபற்றிய கண்டுபிடிப்பு என்ன? Conservative கட்சியே அகதித் தமிழர்களை நன்றாக நடாத்தவில்லை/வெறுக்கின்றது என்பது…! பெருன்பான்மை கனேடிய மக்கள் ஓர் விடயத்தை வெறுக்கும்போது அதற்கான பொறுப்பை Conservative தலையில் சுமக்க வைப்பதே எமக்கு தெரிந்த அரசியல்.

இவ்வாறே.. 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்கள் பல்வேறுவிதமான போராட்டங்களை செய்து பெருன்பான்மை கனேடியர்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள். உலகெங்கும் போராட்டங்கள் நடந்தன. டொரோன்டோவில் இருந்து சிக்காகோவிற்கு நடைபயணம் மேற்கொண்டபோதும் ஆனானப்பட்ட அந்த ஒபாரா அம்மையாரே மனம் இரங்கவில்லை. ஓபாமாவும் கைவிரித்தார். சர்வதேசமே கைவிரித்தது. ஆனால்.. நம்மவர்களின் இதுபற்றிய கண்டுபிடிப்பு என்ன? Conservative கட்சி எமது போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்பது.

ஆகமொத்தத்தில் எமக்கு தெரிந்த அரசியல் என்னவென்றால் சண்டித்தனமாக அமையட்டும்.. சட்டவிரோதமாக அமையட்டும்.. நாம் செய்கின்ற எதுவும் செய்வோம், அதைப்பார்த்துக்கொண்டு கனேடிய அரசாங்கம் அமைதியாக இருப்பதோடு மட்டும் அல்லாது எமக்கு ஆதரவும் தரவேண்டும் என்பது.

கடந்த 2008ம் ஆண்டு கனேடிய தேர்தலில் பெருவாரியான கனேடிய தமிழர்கள் விழுந்தடித்து Liberal கட்சிக்கு வாக்களித்ததும், Conservative கட்சியை வெறுத்ததும் இவற்றின் பின்னணியிலேயே நடைபெற்றது. குறிப்பிட்ட இந்த நிலைப்பாட்டை தமிழர்கள் எடுக்கவேண்டும் என்பதில் கனேடிய தமிழ் ஊடகங்கள் அப்போது குறியாக இருந்தன.

கிட்டத்தட்ட இதேமாதிரியான நிலமையையே தற்போதைய தேர்தலிலும் உருவாக்குவதில் முயற்சிகள் நடந்துள்ளன. இம்முறை சற்று வித்தியாசமாக என்டீபி கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று உரத்து கத்தப்படுகின்றது. மீண்டும் அதே தவறு இழைக்கப்படப்போகின்றது.

அடிப்படையில் நாங்கள் திருந்திக் கொள்ளாதவரை, எமது குருட்டுப் பார்வைகள் சரிசெய்யப்படாதவரை கனேடிய தமிழருக்கு அரசியல் விமோசனம் கிடைக்கப்போவது இல்லை என்பதே உண்மை.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். இத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கனடாவில் இருந்தும் ஏன் யாரும் ஒரு கனேடிய ஊடகவியலாளராக வர முயற்சிக்கவில்லை? யாழ் களத்திலேயே பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ஒரு ஊடகவியிலாளராக வர முயற்சிக்கவில்லை?

கீழுள்ள படத்தில் ஆற்றல்மிக்க ஓர் தமிழ் ஊடகவியலாளருக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்படுகின்றது என்பதை பாருங்கள். இதை நீலப்பறவை யாழில் இணைத்த ஓர் செய்தியின் இணைப்பு மூலத்தில் கண்ணுற்றேன்.

ragavanposter.jpg

இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். இத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கனடாவில் இருந்தும் ஏன் யாரும் ஒரு கனேடிய ஊடகவியலாளராக வர முயற்சிக்கவில்லை? யாழ் களத்திலேயே பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ஒரு ஊடகவயிலாளராக வர முயற்சிக்கவில்லை? இத்தனை தரமாகக் கட்டுரை வடிக்கும் கலைஞன் போன்றவர்கள் வர முயற்சித்திருக்கலாமே? எல்லாம் ஊருக்குத் தான் உபதேசமே தவிர தனக்கல்ல.

தமிழ் வேட்பாளர்களிடம் உங்கள் அரசியல் அறிவை மட்டும் கொண்டு ஆயிரத்தெட்டு குறை பிடிக்கும் நீங்கள் ஏன் ஒரு கட்சியில் இணைந்து கனடிய தமிழ் வேட்பாளர்களுக்கு எல்லாம் முன் மாதிரியா சாதித்து / வாழ்ந்து காட்டக் கூடாது?

கனடிய யாழ் கள எழுதுபவர்களுக்கு மட்டுமா உபதேசம், உங்களுக்கு இல்லையா?

Edited by நிழலி

கீழுள்ள படத்தில் ஆற்றல்மிக்க ஓர் தமிழ் ஊடகவியலாளருக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்படுகின்றது என்பதை பாருங்கள். இதை நீலப்பறவை யாழில் இணைத்த ஓர் செய்தியின் இணைப்பு மூலத்தில் கண்ணுற்றேன்.

ragavanposter.jpg

இப்படியும் பிரச்சார படங்கள்(கடவுட்) வைக்கலமா?

கனேடிய அரசு அனுமதிக்குமா?

இங்கை எல்லாம் இப்படி கட்டவுட் வைக்க முடியாது( முடியாது என்பதை விட எதிரணியினர் கூட விரும்புவது இல்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.