Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, 30 April 2011 02:21

வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் !

ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ரெஜி அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என்றும், உண்மையில் இது தொடர்பாக ஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில் எதிர்கொள்ளவே விரும்புகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக் கட்டங்களில் பொதுமக்களை அனைத்துலகப் பாதுகாப்புடன் ஒப்படைக்க அல்லது அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல விடுதலைப்புலிகள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத்தின் உறுதிமொழி ஒன்றினைக் கேட்டிருந்தார்கள். ஆனால் அனைத்துலகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. சிங்கள அரசிடம் பொதுமக்களைச் செல்ல அனுமதிப்பதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை விடுதலைப்புலிகள் முன்பே அறிந்திருந்தார்கள். அவர்கள் நினைத்தது போலத்தான் இறுதியில் எல்லாம் நடந்தது.

விடுதலைப்புலிகள் ஏன் மக்களைச் சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கத் தயக்கம் காட்டினார்கள் என்பதற்கான காரணத்திற்கும் நியாயத்திற்கும் அதன் பின்னர் சிங்கள அரசு அவர்களைக் கொடூரமாக நடத்திய விதம் சாட்சியாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

sankathi

இலண்டன்,

29/04/2011 23:30:02

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக

ஐக்கிய நாடுகள் சபை தமிழர் தாயகத்தில் நடந்த கொடுமைகள் பதிவாக்கி வெளியிட்டமை பாராட்டத்தக்கது. தமிழ் மக்கள் மத்தியில் தமக்காக நீதி கிடைக்கும் அவையாக அனைத்துலக சமூகம்இருக்கின்றது என்ற

நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளது. அதே வேளை ஐக்கிய நாடுகளும் அனைத்துல சமூகமும் தாம் ஏற்கனவே விட்ட தவறுகளை

மீண்டும் விடக்கூடாது என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஐ. நா மற்றும் அனைத்துலக சமூகம் மீண்டும் கடந்தகாலத் தவறுகளைச் செய்யக்கூடாது

போரின் இறுதிக்கட்டங்களில் தமிழர் தரப்பிற்குப் பெரும் அழுத்தங்களை ஐக்கிய நாடுகளும் அனைத்துலக சமூகமும் இந்தியாவும் செலுத்தின. மேலும், சிறிலங்கா அரசின் இனவாதப்பரப்புரைகளைச் செவி மடுத்தன. இதனால் பொதுமக்களின் உயிர் இழப்புக்களைத் தடுக்கமுடியாதநிலையில் ஐக்கிய நாடுகள் சபை இருந்தது. இதனால் பெருந்தொகையான மக்கள்

கொல்லப்பட்டனர். இதனை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதிக்கட்டங்களிலும் அதன் பின்னரும் அனைத்துலகம், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபைபக்கசார்பாக நடந்து கொண்டது

போலத் தற்போதும் நடந்து கொள்ள மாட்டாது என எதிர்பார்க்கிறோம். சுதந்திரமானதும் பக்க சார்பில்லாததுமான அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றின் மூலம்விசாரணைகள் தொடங்கப்பட வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் தமிழர்களுக்கான நீதி கிடைப்பதுடன் எதிர்காலத்தில் தமிழர் தாயகத்தின் பாதுகாப்பிற்கும் வழிபிறக்கும்.

விடுதலைப்புலிகள் அனைத்துலக விசாரணைக்கு முகம் கொடுக்க அணியமாக உள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையில் இது தொடர்பாகஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான

தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில்எதிர்கொள்ளவே

விரும்புகின்றார்கள்.

போரின் இறுதிக் கட்டங்களில் பொதுமக்களை அனைத்துலகப் பாதுகாப்புடன் ஒப்படைக்க அல்லதுஅவர்கள் விரும்பும் இடங்களுக்குச்

செல்ல விடுதலைப்புலிகள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.அவர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத்தின் உறுதிமொழி ஒன்றினைக்

கேட்டிருந்தார்கள். ஆனால்அனைத்துலகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சிங்கள அரசிடம் பொதுமக்களைச்செல்ல அனுமதிப்பதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை விடுதலைப்புலிகள் முன்பே அறிந்திருந்தார்கள். அவர்கள் நினைத்தது போலத்தான் இறுதியில் எல்லாம் நடந்தது.விடுதலைப்புலிகள் ஏன் மக்களைச் சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கத் தயக்கம் காட்டினார்கள் என்பதற்கான காரணத்திற்கும் நியாயத்திற்கும் அதன் பின்னர் சிங்கள அரசு அவர்களைக் கொடூரமாக நடத்திய விதம் சாட்சியாக இருக்கின்றது.

தமிழர் தாயகத்தைப புலம்பெயர் மக்களால் கட்டி எழுப்ப முடியும்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கவும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்யும் இயல்பு நிலை தோற்றுவிக்கப்படவேண்டும். அனைத்துலக சமூகத்தின் ஈடுபாட்டோடு இயல்பு நிலை தோற்றுவிக்கப் படவேண்டும். அதன் பின்னர்புலம்பெயர்மக்களும் தாயக மக்களும் தமது பிரதேசங்களைத் தாமாகவே கட்டி எழுப்புவார்கள்.அப்படியான சூழலில் சனநாயக

முறையில் தமக்கு என்ன தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிப்பார்கள். இதனை அடைய அனைத்துலக சமூகம் வழிசமைக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்

சிறிலங்கா அரசிடம் இருந்து எந்தவொரு சூழலிலும் தமிழ் மக்களிற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.இப்போது இலட்சக்கணக்கான

உயிர்களைக் கொடுத்த தமிழ் இனம் அனைத்லுகத்திடம் நீதியை வேண்டிநிற்கின்றது. பாரபட்சம் அற்ற சுதந்திரமான ஓர் அனைத்துலக

விசாரணையினைக் கேட்டு நிற்கின்றது.வடக்கு கிழக்கில் சிங்கள அரசின் இராணுவ ஆட்சியினை நீக்கி அங்கு அனைத்துலக கண்காணிப்பின் கீழ்

ஓர் இயல்பு நிலையினை உருவாக்குவதற்கு உதவுமாறு அழைப்பு விடுக்கிறது. தமது பிரதேசத்தைத்தாமே கட்டி எழுப்பக் கூடிய வாய்ப்பு

ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றது. தமக்கு எவ்வகையான தீர்வுதேவை என்பதனைத் தமிழ் மக்கள் தீர்மானிப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்தித்

தரப்படவேண்டும்.

இவற்றை அனைத்துலகம் செய்து கொடுக்கத் தவறுமேயானால் அல்லது அசட்டையாகஇருக்குமேயானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின்

எதிர்காலம் பேரிழப்புக்கு உள்ளாகிவிடும். இதனையே 2008 இலும் 2009 இலும் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்

தெரிவித்திருந்தோம்.

தமிழ் நாட்டு உறவுகளின் பங்களிப்பு முழுமையாகத் தேவை

நிபுணர் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த உலகத் தமிழர்களின் அழுத்தங்கள் அவசியம். குறிப்பாகதமிழ் நாட்டு உறவுகளின் பங்களிப்பே

இப்போது அதிகம் தேவைப்படுகின்றது. தமிழ் நாட்டு மக்கள், இந்தியா மற்றும் உருசிய நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவர்களைச்

சம்மதிக்க வைக்க முடியும்.எட்டுக் கோடி மக்களின் ஒருமித்த குரலை எந்தவொரு அரசும் இலகுவாகப் புறக்கணிக்க முடியாது.

ஆகவே தமிழகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் பங்களிப்பும்அழுத்தங்களும் இந்தியாவின் தீர்மானத்தினை நிபுணர் குழுவிற்குச் சாதகமாக எடுக்க வைக்க வேண்டும்.இந்திய அரசு மென்மேலும் ஈழத்தமிழர்களுக்குத் கடும்துன்பம் விளைவிப்பதனை நிறுத்தி

நேர்மையுடன்செயற்படவேண்டும்.

புலம்பெயர் வாழ் மக்களே

எமது இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும், எமது இனம் இன அழிப்பிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கும்

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையே சாட்சி. இந்த அறிக்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகவே பார்க்க முடியும்.

ஆகவே இந்த ஆவணத்தை மையமாக வைத்து எம் இனத்திற்கு நீதியும் விடுதலையும் வேண்டி அனைத்துலக ரீதியாக வெகுசன எழுச்சியை

உருவாக்க வேண்டும் அதன் மூலம் சம்பந்தப்பட்டோர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும்.

நன்றி

கே.பி.றெஜி

சுனாமியை வைத்து காசு சேர்க்க தலைவரால் அனுப்பப்பட்டவர் தான் தற்போதைய தலைவர் கனவில் வாழும் ரெஜி.

இவர் தனது குடும்பத்தில் பலர் சுனாமியில் இறந்து விட்டார்கள் என்பதை காரணமாக சொல்லி வன்னிக்கு போக விருப்பம் இல்லை என்று தலைவருக்கு தனிமடல் அனுப்பியவர்.

இனி இவர் புலிகளை சொந்தம் கொண்டாடுவர் தானே?

தமிழர்புனர்வாழ்வு கழகத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் என்ன சமந்தம்? விசாரனையை முகம் கொடுக்க விடுதலைப் புலிகள் தயார் என்று சொல்ல முன்னாள் புனர்வாழ்வுக் கழகத்துக்கு என்ன உரிமை இருக்கு?

ஐ.நா. வால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருதரப்புக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்று தனது மக்களை பாதுகாக்க, அதன் விடுதலைக்கு போராடிய, ஒரு நிழல் அரசை கொண்டிருந்த, ஒரு அமைப்பு. மற்றையது, ஒரு ஐ.நா. சாசனங்களில் கைச்சாத்திட்ட அரசு.

இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளை அழிப்பது என்ற பெயரில், அதன் சகல உப அமைப்புக்கள், அதன் ஆளுமையுள்ள நிர்வாக அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் என சகல தரப்பையும் சரணடைந்த நிலையில் அரசு படுகொலைசெய்துள்ளது. ( படுகொலை செய்யப்பட்ட TECH அதிகாரி http://tamilnet.com/art.html?catid=13&artid=33881). இவர் ஆழிப்பேரலை அழிவின் பின்னர் புலிகளின் ஆழுமைத்திறமைக்கு பலம் சேர்ந்தவர், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் அவர்களை கொழும்பில் சந்தித்து அவரிடம் புகழாரம் வேண்டியவர். கிடைத்தால் திரு. ரெஜி அவர்களையும் சிங்களம் இன்றே கொலைசெய்ய தயாராக உள்ளது.

கிடைத்த அறிக்கையை வைத்து தமிழர் சமூகம் அடுத்து என்ன செய்வது?, எப்படி செய்வது?, யார் செய்வது? என ஆராயும் வேளையில், ஐ.நா.வால் குற்றம்சாட்டப்பட்ட ஒரு தரப்பின் முன்னைநாள் மனிதாபிமான அதிகாரி தாம் "விசாரணைக்கு தயார்" என்பது தொடர்ந்தும் அறிக்கையை நிராகரித்துவரும் தரப்பான சிங்களத்தை மேலும் நெருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ரெஜி பற்றி பழி சுமத்த உங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வெளியிடவுபாம், அத்தோடு விடுதலைப் புலிகள் சார்பாக யார் இப்போது அறிக்கை விட முடியும் என்பதையும் அதனைச் சொல்வதற்க்கு உங்களுக்கு இருக்கும் தகுதியையும் சொல்லவும்.என்னைப் பொறுத்தவரை இப்படியான அறிக்கை வரவேற்க்கத்தக்கத் .அனைத்துல விசாரணைக்கு உடன் படுவதன் மூலம் பல பழிகளின் பின்னால் இருக்கும் சதிகள் வெளிவரச் சாத்தியம் உண்ட்டு யார் யார் எவரின் சார்பாக உட் சதிகளில் ஈடுபட்டனர் என்பது வெளிவரும்.

சுனாமியை வைத்து காசு சேர்க்க தலைவரால் அனுப்பப்பட்டவர் தான் தற்போதைய தலைவர் கனவில் வாழும் ரெஜி.

இவர் தனது குடும்பத்தில் பலர் சுனாமியில் இறந்து விட்டார்கள் என்பதை காரணமாக சொல்லி வன்னிக்கு போக விருப்பம் இல்லை என்று தலைவருக்கு தனிமடல் அனுப்பியவர்.

இனி இவர் புலிகளை சொந்தம் கொண்டாடுவர் தானே?

தமிழர்புனர்வாழ்வு கழகத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் என்ன சமந்தம்? விசாரனையை முகம் கொடுக்க விடுதலைப் புலிகள் தயார் என்று சொல்ல முன்னாள் புனர்வாழ்வுக் கழகத்துக்கு என்ன உரிமை இருக்கு?

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையில் இது தொடர்பாகஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான

தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில்எதிர்கொள்ளவே

விரும்புகின்றார்கள்.

ரெஜி அவர்கள் கூறவில்லை. விடுதலைப்புலிகள் கூறியுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது.

The LTTE is prepared to face an international inquiry.

The LTTE has declared its willingness to cooperate with an international inquiry. In fact, they have already informed the Panel of Experts by letter their willingness to cooperate. The LTTE is desirous to face the accusations against them in a just manner.

During the final stages of the war the LTTE had expressed its willingness to let the people go wherever they desired or to hand over the people with international protection. It sought international guarantee for their protection. But the IC failed to take proper actions. The LTTE was well aware of the consequences of letting the people move to the custody of the Sinhala government. What the LTTE envisaged is precisely what happened to them later. The harrowing treatment meted out to the Tamils who moved to the government side later offer the reason and justification for the reluctance of the LTTE to hand over the people to the government.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை விரும்பும் எவரும் விடுதலைப்புலிகளே. தமிழ்மக்களது ஒரேயொரு தேசிய இனமான ஒரு பேரியக்கத்தினை நீதியின்முன் விசாரணைசெய்யும்போது ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுத்துக்கொள்வதே சிறப்பாகும். அந்தவகையில் தமிழீழ விடுதலைக்காக நான் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாதுவிடினும் விசாரணை என்றுவரும்போது எனது தேசியத்தைக்காக்க வேண்டுமாகவிருந்தால் அதற்கு எமது வதையை அடமானம் வைக்கத் தயாராக இருத்தல்வேண்டும். இதுவரை எமது தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கு எங்கும் சந்தர்ப்பங்கள் தரப்படவில்லை இதுவே நல்லதொரு சந்தர்ப்பம் விசாரணைக்கு உடன்படுவோம் உலகில்வாழும் ஈழத்தமிழன் அனைவரும் நீதிவிசாரணைநடக்கும் வேளை என்னையும் விசாரணைசெய் என நிரரில் முந்துவோம். ஒரு விடுதலைப்போராளி என்பவன் விடுதலைவரை தொடர்ந்து போராடவேண்டும் அது களங்கள் வேறாகவிருக்கலாம்.

ரெஜி பற்றி பழி சுமத்த உங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வெளியிடவுபாம், அத்தோடு விடுதலைப் புலிகள் சார்பாக யார் இப்போது அறிக்கை விட முடியும் என்பதையும் அதனைச் சொல்வதற்க்கு உங்களுக்கு இருக்கும் தகுதியையும் சொல்லவும்.என்னைப் பொறுத்தவரை இப்படியான அறிக்கை வரவேற்க்கத்தக்கத் .அனைத்துல விசாரணைக்கு உடன் படுவதன் மூலம் பல பழிகளின் பின்னால் இருக்கும் சதிகள் வெளிவரச் சாத்தியம் உண்ட்டு யார் யார் எவரின் சார்பாக உட் சதிகளில் ஈடுபட்டனர் என்பது வெளிவரும்.

எனக்கு இருக்கும் ஒரே தகுதி நான் தலைவரையோ இல்லை வன்னியில் மக்களையோ நம்பவைத்து கழுத்தறுக்கவில்லை.

சுற்றிலாவில்ல சென்ற பெண்ணை காதலித்து நோர்வைக்கு ஓடி வந்த தற்போதைய தலைவரும் நான் இல்லை. வெளிநாட்டை பார்த்து ஊருக்கு போக மாட்டேன் என்ற சுயநலவாதியும் நான் இல்லை.

ஆகா மொத்தம் சதியின் மூலம் தான் போராட்டம் அழிக்கப்பட்டதா?

போராட்டம் சதியின் மூலம் அழிக்கப்படவில்லை ஆனால் மாறாக சரணடைந்த தளபதிகளையும் முக்கிய போராளிகளையும் சதிசெய்து சரணடையை வைத்தார்கள்.

ஆனால் அதிலும் பாருங்கோ இருக்கிற சுயநல வாதிகள் தலைவர் மேலே பழியஒ போட்டுவிட்டு தப்பிவிடுவார்கள் அல்லது பழிச்சொல்லை தலைவர் மேல போடுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள். உண்மையில் இது தொடர்பாகஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான

தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில்எதிர்கொள்ளவே

விரும்புகின்றார்கள்.

ரெஜி அவர்கள் கூறவில்லை. விடுதலைப்புலிகள் கூறியுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது.

The LTTE is prepared to face an international inquiry.

The LTTE has declared its willingness to cooperate with an international inquiry. In fact, they have already informed the Panel of Experts by letter their willingness to cooperate. The LTTE is desirous to face the accusations against them in a just manner.

During the final stages of the war the LTTE had expressed its willingness to let the people go wherever they desired or to hand over the people with international protection. It sought international guarantee for their protection. But the IC failed to take proper actions. The LTTE was well aware of the consequences of letting the people move to the custody of the Sinhala government. What the LTTE envisaged is precisely what happened to them later. The harrowing treatment meted out to the Tamils who moved to the government side later offer the reason and justification for the reluctance of the LTTE to hand over the people to the government.

நாடுகடந்த அரசை விட அறிக்கையிலாவது வாழவேண்டும் என்று நினைக்கும் கூட்டத்தின் அறிக்கை இது.

இதை எல்லாம் கனக்கில் எடுத்து ஜ நாவின் அறிக்கையை கேவலப்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் அலைகிறார்கள்.

Edited by I.V.Sasi

எனக்கு இருக்கும் ஒரே தகுதி நான் தலைவரையோ இல்லை வன்னியில் மக்களையோ நம்பவைத்து கழுத்தறுக்கவில்லை.

சுற்றிலாவில்ல சென்ற பெண்ணை காதலித்து நோர்வைக்கு ஓடி வந்த தற்போதைய தலைவரும் நான் இல்லை. வெளிநாட்டை பார்த்து ஊருக்கு போக மாட்டேன் என்ற சுயநலவாதியும் நான் இல்லை.

ஆகா மொத்தம் சதியின் மூலம் தான் போராட்டம் அழிக்கப்பட்டதா?

போராட்டம் சதியின் மூலம் அழிக்கப்படவில்லை ஆனால் மாறாக சரணடைந்த தளபதிகளையும் முக்கிய போராளிகளையும் சதிசெய்து சரணடையை வைத்தார்கள்.

ஆனால் அதிலும் பாருங்கோ இருக்கிற சுயநல வாதிகள் தலைவர் மேலே பழியஒ போட்டுவிட்டு தப்பிவிடுவார்கள் அல்லது பழிச்சொல்லை தலைவர் மேல போடுவார்கள்.

நாடுகடந்த அரசை விட அறிக்கையிலாவது வாழவேண்டும் என்று நினைக்கும் கூட்டத்தின் அறிக்கை இது.

இதை எல்லாம் கனக்கில் எடுத்து ஜ நாவின் அறிக்கையை கேவலப்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் அலைகிறார்கள்.

இப்படியான அறிக்கைவிட்டு எப்படி வாழலாம் என நினைக்கின்றீர்கள். சொல்லப்பட்ட கருத்து ஏன் சொல்லப்படகூடாது ? ஏன் சொல்லப்படவேண்டும் என்பது பற்றி எழுதுவதே நல்லது.

நீங்கள் நிபுணர் குழு அறிக்கை வந்த பின்னர் பல்வேறு ஊடகங்களில் வெளியான கருத்துக்களையும் கொமன்ஸ் ஆகியவற்றையும் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

அதில் விடுதலைப்புலிகள் போன்று பல கருத்துக்கள் எழுதப்படுகின்றன. வோல் ஸ்ரிற் ஜேனல் விடுதலைப்புலிகள் சார்பாக போர்க்குற்ற விசாரணையினை எதிர்த்து கருத்துக்கள் வந்ததாகவும் தெரிவித்திருந்தது.

ஆக தமிழர் தரப்பும் விடுதலைப்புலிகளும் கூட போர்க்குற்ற விசாரணையினை எதிர்ப்பது போன்ற தோற்றப்பாட்டினை சிங்கள இந்திய அரசுகளே செய்யலாம்.

அடுத்ததாக இதுவரை தமிழர் தரப்பு போர்க்குற்ற விசாரணையினை வரவேற்கின்றோம் என மடும் சிலர் கூறியுள்ளனர். அதில் கூறப்பட்ட விடுதலைப்புலிகள், மற்றும் டயஸ்போராவின் கருத்துக்கள் பற்றி யாரும் தெரிவிக்க முன்வரவில்லை.

உலக தமிழர் பேரவை விடுதலைப்புலிகளையும் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது. நாடு கடந்த அரசின் பிரதமர் போரை டயஸ்போரா நடத்தவில்லை என பிபிசி க்கு கூறியுள்ளார்.

மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கு ஆதரவாகவே ரெஜிஅவர்களின் கருத்து உள்ளது.

Edited by உமை

சுனாமியை வைத்து காசு சேர்க்க தலைவரால் அனுப்பப்பட்டவர் தான் தற்போதைய தலைவர் கனவில் வாழும் ரெஜி.

இவர் தனது குடும்பத்தில் பலர் சுனாமியில் இறந்து விட்டார்கள் என்பதை காரணமாக சொல்லி வன்னிக்கு போக விருப்பம் இல்லை என்று தலைவருக்கு தனிமடல் அனுப்பியவர்.

இனி இவர் புலிகளை சொந்தம் கொண்டாடுவர் தானே?

தமிழர்புனர்வாழ்வு கழகத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் என்ன சமந்தம்? விசாரனையை முகம் கொடுக்க விடுதலைப் புலிகள் தயார் என்று சொல்ல முன்னாள் புனர்வாழ்வுக் கழகத்துக்கு என்ன உரிமை இருக்கு?

நீர் ஏன் இப்படி சொல்கிறீர். த.பு.வா கழகம் கொழும்பில் ஒரு அறக்கட்டளையாக பதிய பெற்று சட்டரீதியாக தாயகத்தில் வேலை செய்ய போர் நிறுத்த காலத்தில் ஏற்பாடு செய்ய பட்டது. அப்போ அதன் தலைவர் அல்லது பொறுப்பாளர் விடுதலி புலிகலுடன் தொடர்புகள் இருக்க கூடாது போன்ற சில சர்வதேச தேவைகளுக்காக ரெஜி அவர்கள் நியமிக்கப்பட்டு வேலைகள் நடந்தன்.

மற்றும்படி அங்கொன்றும் எதிர் வேலைகள் நடக்கவில்லை.

கற்பனையை கட்டி விட்டு எதிரி இணையங்கள் எழுதுவதை வாசியுங்கள் கண் மூக்கு வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரையே குற்றம் சொல்பவர்கள் நாம். ரெஜி எம்மாத்திரம்

ஆனால் ஒன்று அவர் எம்மினத்துக்காக உழைத்த நேரத்தில் 0.000000001 பங்கு கூட நாம் செய்திருக்கமாட்டோம் நம்மினத்துக்காக.

எந்நேரமும் மக்கள் மக்கள் மக்கள்....................... என்று சொல்லும் சிந்திக்கும் ஒரு உன்னத போராளி அவர்.

நான் யாழுக்கு வாரது விசுகு அண்ணாவின் கருத்துக்கு பச்சை குத்த,,,

இண்டைக்கு தமிழன் கொஞ்சம் தன்னும் ஒற்றுமையாய் இருக்கிறான் என்ரா அது விசுகு அண்ணா போன்ர அன்பானா ஆக்கள்ளாள் தான் :)

ரெஜி பற்றி பழி சுமத்த உங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வெளியிடவுபாம், அத்தோடு விடுதலைப் புலிகள் சார்பாக யார் இப்போது அறிக்கை விட முடியும் என்பதையும் அதனைச் சொல்வதற்க்கு உங்களுக்கு இருக்கும் தகுதியையும் சொல்லவும்.என்னைப் பொறுத்தவரை இப்படியான அறிக்கை வரவேற்க்கத்தக்கத் .அனைத்துல விசாரணைக்கு உடன் படுவதன் மூலம் பல பழிகளின் பின்னால் இருக்கும் சதிகள் வெளிவரச் சாத்தியம் உண்ட்டு யார் யார் எவரின் சார்பாக உட் சதிகளில் ஈடுபட்டனர் என்பது வெளிவரும்.

நாரதரின் கருத்து வரவேற்கத்தக்கது. இதுவே சர்வதேச அரசியலின் போக்கை அறிந்த எவரின் நிலைப்பாடாகவும் இருக்கமுடியும்.

ஏற்கனவே TRO மூல்மாக சர்வதேச மட்டங்களின் ஒரளவு பரிச்சயமான றெஜி போன்றவர்களின் அறிக்கையின் வீச்சு சாதாரணமானவர்கள் விடுவதை விட அதிகமாகும். றெஜியின் அறிக்கை குறிப்பிட்ட சில சர்வதேச பிரமுகர்களின் ஆலோசனைக்கு அமையவே விடப்பட்டது என்றே நான் நம்புகிறேன்.

ஆத்திரத்தை குறைத்து அரசியல் அறிவை வளர்த்து கொள்வது இன்றைய மிகப் பெரிய தேவையாகும்.

இதை விட எதையும் தற்போதைக்கு விலாவரியாக எழுதுவது நமது இலட்சியங்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யப்போவதில்லை.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

றெஜி இன்டர்போலால் தேடப்பட்டு வருகின்றார் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அத்துடன், அவர் இப்படி எல்லாம் அறிக்கை விடுவதன் மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தில் லண்டனில் உள்ள தேவாலயங்களையும், எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் வாங்குவதனை மறைத்துவிடலாம் என கனவு காண்கின்றார்.

கே.பி.யிடம் பின்கதவு வழியாக பேசி தன்னிடம் இருக்கின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தினைத் தந்தால் இன்டர்போல் லிஸ்டில் இருந்து தனது பெயரை நீக்க முடியுமா எனவுவும் கேட்டவர்தான் இந்த றெஜி. (கே.பி.யிடம் றெஜி உரையாடிய விடயம் சிறிலங்கா ஊடகங்களில் வெளிவந்தது என்பதனை நினைவில் வைத்திருங்கள்)

என்னைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் என்பதனை விட தற்போது நாடு கடந்த தமிழீழ அரசே யாவற்றுக்கும் நல்லது. அவர்களும் அறிக்கைகளை விடுவதனை நிறுத்தி செயலில் இறங்கும் வரை...

Edited by nirmalan

... கடந்த காலங்களில், குறிப்பாக வன்னியில் புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் குற்றச்சாட்டுக்கு ...

* வன்னியில் சிறுவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ..

* பல பொதுமக்கள் புலிகளினாலேயே கொல்லப்பட்டமை ...

* போன்றன ...

.... இனி நாம் பதிலளிக்க முற்படுவது, இனி அதற்கான பதில்களை தேடுவது ... காலத்தை விரயமாக்கும் செயலும், சிங்களம் அதனுள் மறைய நாமே வழி கோலுவதுமாகவே அமையும்.

கடந்த வன்னிப்போர் இறுதிக்காலங்களில் புலிகளினால் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையா??????? ... நாம் இல்லை என்பது, நாம் எம்மை ஏமாற்றுவது மட்டுமல்ல, அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களின் உறவினர்கள், நண்பர்களையும் எதிரியின் முகாமில் தொடர்ந்திருக்க, நாமே கொண்டு சென்று விடுவதாக அமையும்.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து, .... எதிரி பலவற்றை ஆதாரங்கள் என எம்மை நோக்கி கொட்டிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட பலரும் கதை கதையாக சொல்லவும் .. இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதில்களை/உண்மைகளை நாம் தேட முற்படவில்லை, மறுத்தோம், துரோகத்தனம் என்றோம்!!!

ஏன்? எதற்காக? எப்படி? இவர்கள் செய்தார்கள்?????????

முள்ளிவாய்க்கால் இறுதிக்காலங்களில் புலிகளினால் நடத்தப்பட்டதாக இன்று குற்றச்சாட்டப்படும் மனித உரிமை மீறல்களை புரிந்தது புலிகளின் அரசியல் பிரிவு என்று அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். இவ்வரசியல் அமைப்பை சார்ந்த தங்கன், எளிலன், இளம்பருதி, தமிழினி, பாப்பா போன்றவர்கள் தான் இவைகளை முன்னின்று செயற்படுத்தினர்.

அறிந்தவரை ... முதன் முதலில் தன் பிள்ளையை கட்டாய ஆட்சேர்ப்புக்கு விட மறுத்த தகப்பனாரை பிள்ளையின் முன் சுட்டுக் கொன்றதே தங்கன் என்று கூறுகிறார்கள். சிறுமிகளை கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்து அவர்களுக்கு மொட்டை அடித்தது(இனம் காண்பதற்கு) போன்றவற்றில் எளிலன் ஈடுபட்டாராம், இறுதி நாட்களிலும் பல பெற்றொர்கள் தாக்கப்பட்டு பிள்ளைகளை இழுத்துச் சென்ற செயல்களில் பாப்பா முதலிடத்திலாம், தப்பிச் செல்லும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யச்சொல்லி காவலரன் போராளிகளுக்கு உத்தரவு இட்டது இளம்பருதியாம், இவர்களுக்கு போட்டி போட்டு தமிழினி செயற்பட்டாராம்!

இப்படியாக இறுதிக்காலங்களில் அட்டகாசம் புரிந்த பலர், யுத்தம் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னமே சரனடைந்தரராம், தங்கன் உட்பட சிலருக்கு மாலை கூட போட்டு அழைத்துச் சென்றதாக கூறுகிறார்கள். இன்று அவர்களில் பலர் சிறிலங்கா புலனாய்வுத்துறையில் இணைந்து செயற்படுகின்றனராம். கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று வந்த பலர் பாப்பா அங்கிருந்து செயற்படுவதாக கூறுகிறார்கள். வவுனியா அகதி முகாங்களில் மறைந்திருந்த பல போராளிகளை பிடித்துச் சென்றது இளம்பருதி, தமிழினி என்கிறார்கள்.

.... சர்வதேச வல்லரசுகளினால் கூட மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்ட ஓர் சிறிய அமைப்பு ... அவர்களின் பாஷையில் ஓர் பாரிய பயங்கரவாத அமைப்பு! ... நீண்ட கால யுதத நிறுத்தத்தில் ... உள்ளில் இருந்த கட்டமைப்புகளுக்குள் அதிகாரப்போட்டிகள் ... பலரின், பல முக்கியஸ்தகர்களின், அதுவும் இறுதிக்காலங்களில் கண்காணிப்பில்லாத, எல்லோரையும் கண்காணிக்க முடியாத தென்னிலங்கை பயணங்களும், மேற்குலக பயணங்களும் ... பலர் பல விதமாக விரிக்கப்பட்ட வலைகளில், பலவிதமாக வீழ்ந்தனர்.

ஒரு புறம் உள்ளிருந்தே காட்டிக்கொடுப்புகள், விலைபோன தளபதிகளினால் யுத்தத்தை சரியாக வழி நடத்தாமை, போன்றன நடைபெற்றுக் கொண்டிருக்கையில், .... புலத்தில் இருந்து இக்காலங்களில் உள்நுளைக்கப்பட்ட மர்ம மனிதர்கள் தங்கள் கைவரிசைகளை சிறப்பாக காட்டிக் கொண்டிருந்தனராம் ...

... விலை போகாத ஒரு அமைப்பை, யுத்த நிறுத்த காலங்களில், புலத்தில் கூறு போட்டு சந்தையில் விற்றார்கள். புலத்தில் ஆயிரம் பவுண்கள் கொடுத்தால் கொடுத்தவர் தேசியத்தின் விசுவாசி என்றார்கள், ஐயாயிரம் கொடுத்தால் புலத்து தலைப் பூசாரியும் அவரை தொடர்பு கொன்டு, நாடு செல்லுங்கள், நாங்கள் சொல்கிறோம், உங்களை வடிவாக கவணிப்பார்கள் என்றார்கள். மாறாக ஐம்பதினாயிரம் கொடுத்தால் அங்கெ செங்கம்பள வரவேற்கழிப்பட்டு, தலைவரையும் சென்று சந்திக்க வாய்ப்பழித்தார்கள்!! ... என்ன பல மில்லியன்கள் கொடுத்து எதிரி வாங்கிய ஆயுதங்கள் செய்ய்த்தவறியதை, சில ஆயிரங்களின் ஊடு புலத்திலிருந்து இவர்களினூடே உள்நுளைந்து செய்தான் எதிரி!!! ..

... அதுவும் இறுதிக்காலங்களில் கட்டமைப்புகள் உடைந்து போக, எல்லாவற்றையும் கவனிக்க முடியாத சூழ்நிலையில் தலைமை!!! ... இன்னும் இரண்டாம் நிலை தலைமைகள் இவர்களினால் தந்திரமாக ஏமாற்றப்பட்டனரோ??? அல்லது இவர்களின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலைமை???... அங்கு எல்லாம் முடியும் தறுவாயில் இதை இறுதியாக செய்து பார்ப்போம் என்ற நிலைமையோ???? அங்கு அடைபட்டிருக்கும் மக்கள் நாள் தோறும் கொத்துக்கொத்தாக சிங்களத்தினால் பலி எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்களின் கோபங்களை/வெறுப்பை புலிகள் மீது திருப்ப எதிரி இவர்களை பாவித்தான்.

ஆனால் இவ்வாறு எதிரின் வலையில் வீழ்ந்து, அவனால் பாவிக்கப்பட்ட பலர், அவனாலேயே பின் படுகொலை செய்யப்பட்டோ அல்லது எங்கு என்று அறிய முடியாத நிலைக்கு சென்று விட்டார்கள்.

இன்று நாமும் சிலுவை சுமக்க வேண்டிய நிலையில் ... அச்சிலுவை அங்குள்ள எம்மக்களின் விடிவிற்கு ....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84392&st=0

இதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நிச்சயமாக வரவேற்க வேண்டும்!! ... பல உண்மைகள் வெளீவரும் ... குறிப்பாக இறுதிக்காலங்களில் புலத்திலுள்ள கேபிக்களின் பங்கு இந்த இனப்படுகொலையில் ... !!! ... இன்று நா.க.த.அ இன் பின்னணியில் நிற்கும் கேபிக்களின் பங்குகள் .. முள்ளிவாய்க்கால் படுகொலையில் ... எல்லாம் வெளிவரும்!!!

Edited by Nellaiyan

றெஜி இன்டர்போலால் தேடப்பட்டு வருகின்றார் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

நிருமலன் ... உது ஆர் கேபியோ சொன்னவர்?????????? ... அவன் பாவி லண்டனில் இருக்கிறான் ... விலாசம் வேணுமோ??? இன்ரபோலும் லண்டனிலிருந்தான்!!! ...... சும்மா எழுதுக்ற்ரதோ???? ... இப்பதான் தெரிகிறது கேபிக்கு பின்னால் நிற்கிற நீர் போன்றதுகள் அரை குறைகளோ அல்லது அதுக்குள்ளும் தட்டிச் சுற்றலாம் என்று சேர்ந்ததுகளோ என்று!! ... நான் அறிந்தவரை ... முன்பு புலி அமைப்புக்களுக்குள்ளும் சுருட்டியதுகள், இன்று கேபிக்கு பின்னுக்கு!! ... சரிதானே??? :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைகருதி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதை

அழைக்கின்றீர்கள்.... மதிப்பளிக்கிறோம்....

மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்

இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி....

மென்மேலும் எங்களுக்குள்

இன்னல்களைச் சுமந்தபடி....

கரங்களோடு எங்கள்...

கண்ணீரையும் கட்டுப்படுத்தி...

இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

எம் உறவு...

எம் வீடு...

எம் ஊர்...

எம் தேசம்..

எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க

ஆவன செய்ய உங்களால் இயலுமா?

எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை

பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்!

நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்

அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?

உயிர்வலி எங்களுக்கு...

உணர்வுகளைத் தூக்கிலிட்டு...

எங்கள் சாவிற்கு...

எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?

மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்

மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.

கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?

உலக நாடுகளே!

உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?

தடை போட்டீர்கள்..

காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.

அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்பூரென

எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்

அவை உங்களுக்குப் புரிகிறதா?

வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்

கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்

புனர் வாழ்வும் முடக்கப்படும் பூமியிலே

ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்

புரிகிறதா?......

அல்லது புரியாமலே இன்னும்

உண்மையொளி காணாக் குகையில்

இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?

கிழக்கு முகம் கறுப்பதில்லை

காலதேவன் கிறுக்கலிலே

சூரியன் இருண்டதில்லை.

கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..

கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்

கொண்டெழுந்ததே எமது வாழ்வு.

திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது

எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.

உயிரெடுத்து உரம் தொடுத்த

எங்களின் தாயகத்து மண்மீட்பை...

ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்

பாதிக்க முடியாது

ஆதலால்....

இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

உயிர் வலிகளை எடுத்துரைக்க...,

உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..

மென்மேலும் எங்களுக்குள்

இன்னல்களைச் சுமந்தபடி....

கரங்களோடு எங்கள்...

கண்ணீரையும் கட்டுப்படுத்தி...

இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

நாங்கள்தான் விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்திக் கொள்வதற்கு யார் முன்வரப் போகின்றார்கள்.?

ரெஜி இன்ரபோலால் தேடப்படும் ஒருவர்! யாழ் இணையத்திற்கும் இதனால் ஆபத்து வரலாம்!

Interpol wanted List - Red Notice click here

Edited by மொட்டை மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்

Ithoda

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்மார்களே, ஒரு சின்னக் கேள்வி.

ஏற்கனவே இன்டர்போலின் பட்டியலில் இருந்த ஒருவரது படத்தை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடத்தினோம். சர்வதேசம் எங்களை ஒதுக்க அதுவும் ஒரு காரணம் என்று ஒரு கதை இருக்கிறது. இப்போது அறிக்கையை விட அதே பட்டியலில் இருக்கும் ஒருத்தர்தானா கிடைத்தார் என்று குழப்பமாக இருக்கிறதே?

அது சரி. உங்களுக்குத் தெரியாத விஷயமா? இதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பீர்கள். எங்கே ஒவ்வொருத்தரா வந்து சொல்லுங்கோ பாப்பம்...

நிமலன் அவர்களே?

ரெஜி அவர்களின் அறிக்கையினை சரியாக வாசித்தீரா?

அதில் விடுதலைப்புலிகள் விசாரணைக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்கள் என்றும் அவர்கள் இது தொடர்பாக நிபுணர் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தான் தெரிவித்துள்ளார்.

தான் தான் விடுதலைப்புலிகளின் பிரதி நிதி என அதில் ஒன்றும் கூறப்படவில்லையே. அடுத்ததாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பொறுப்பா|ளர் என்ர வகையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் மிகப்பெரிய பொறுப்பும் உள்ளது.

நிபுணர் குழு அறிக்கைக்கு ரெஜி அவர்களும் முள்ளிவாய்க்காலில் பணியாற்றிய உறுப்பினர்களும் பல்வேறு சாட்சியங்கள் அடங்கிய ஆவனத்தை அனுப்பியுள்ளனர். அங்கு இறுதி வரை நின்ற தொண்டு அமைப்பு என்ற வகையில் கருத்துக்கூறவேண்டும். நிபுணர் குழு அறிக்கை உட்பட பல்வேறு ஊடகங்கள் புனர்வாழ்வுக்கழகத்தின் அறிக்கையினையும் சாட்சியங்க|ளையும் கணிசமான அளவு மேற்கோள்காட்டியுள்ளது.

நிபுணர் குழு அறிக்கையில் அத்தியாவசியப்பொருட்களை தடுத்தமை, சனத்தொகை எண்ணிக்கையினை குறைத்துக்காட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு புனர்வாழ்வுக்கழகத்தின் அப்போதைய நிலபர அறிக்கைகளும் சாட்சியாக எடுக்கபப்ட்டுள்ளன.

இன்றும் ரெஜியிடம் பல்வேறு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் சாட்சியங்களிற்காக தொடர்பில்தான் இருக்கின்றார்கள். இன்ரபோலிடம் பெயர் உள்ளது என்பதற்காக ரெஜி தனது பணிகளை விட்டு ஒதுங்கவில்லை.

அடுத்ததாக இலண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள், தேவாலையங்கள் என்று ஒன்றும் இல்லை. புனர்வாழ்வுக்கழகத்தின் காசை தனி நபர் அடிப்பதற்கு அப்படி அங்கு எந்த ஏற்பாடுகளும் இருக்கவில்லை.

உம்மிடம் உள்ள வலுவான ஆதாரங்கள், ஐயங்கள் இருப்பின் ரெஜியிடம் வந்து நேரடியாக கேட்கலாம். வேணும் என்றால் 10 பேரை சாட்சிக்கு கூட்டிக்கொண்டு வாரும் நான் அதற்கான ஏற்பாட்டை செய்கின்றேன்.

இறுதியாக..

கேபி அவர்கள் தான் புனர்வாழ்வுக்கழக காசை தமக்கு அனுப்பினால் இன்ரபோல் உட்பட பல பிரச்சினைகளை தீர்க்கலாம் என தூது விட்டார் ஆனால் ரெஜி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இவரையும்தான் தேடுகிறார்கள், http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp , அவரோ தேடப்படும் நாட்டிலையே உலாவிவருகின்றார், போர்குற்றவாளிகள் உதவியுடன்.

அதேவேளை திரு.ரெஜி அவர்கள் மேற்குலக நாடு ஒன்றில் அந்த நாட்டு அரசுக்கு தெரியவே உள்ளார். அவரின் துணிவும் கருத்தும் தாயக மக்களின் நிரந்தர விடிவை விரைவுபடுத்துவதாக உள்ளது. ஐ.நா. அறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உள்ளது.

இந்தக்கலகட்டத்தில் நாம் எல்லோரும் எவ்வாறு இந்த அறிக்கையை வைத்து இலட்சக்கணக்கான எமது மக்களை காப்பாற்ற முயலுவோம்.

நான் நினைக்கிறேன் யாழ் இணையத்தில் வந்து செய்தி பார்கிறவை இரவில் தூங்கமாட்டினம். அப்பாடா எவ்வளவு கருத்துக்கள்.

பாவம் எங்களுக்காய் மரணித்தவர்கள்.

8 மணி நேரம் வேலை,8 மணி நேரம் ஓய்வு,8 மணி நேரம் தூக்கம் என்ற அற்புத வாழ்க்கையை தந்தவர்களுக்காக வாதல் நன்றியுடன் இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

உமை!

றெஜிதான் கே.பி.யிடம் தூது சென்றிருந்தார் என்பதனை நினைவில் வைத்திருங்கள். அவ்வாறு அவர் சென்றிருக்காது விடின் ஏன் நெடியவன் குழு சார்பானவர்கள் அவரைத் துரோகி என்று கறுப்பு உள்ளிட்ட அவர்கள் சார்பு ஊடகங்களில் அவரை வசை பாடினர் என்பதனை விளக்குவீர்களா?

இன்டர்போலால் தேடப்படும் நபர் லண்டனில் இருக்கலாம் என்று இல்லை எங்கும் இருக்கலாம். அவர் அந்த நாட்டில் ஏதாவது தவறுகள் செய்து இருப்பின் அல்லது ஏதாவது ஒரு வகையில் கைது செய்யப்படுவாராயின் பின்னர் அவர் யார் என்கிற விபரம் அவர்களுக்குத் தெரியவரும் போது அவர் ஒரு தேடப்படும் நபர் என்பதனை உறுதி எந்த நாடு அவரை தேடப்படும் நபராக அறிவித்ததோ அவர்ககளிடம் ஒப்படைப்பார்கள்.

என்னதான், நீங்கள் றெஜியை நல்லவர் என்று வாதாடினாலும் அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும் அவர் எந்தளவு தில்லு-முல்லுகள் செய்தவர் என்பது.

காலம் ஒருநாள் யாவருக்கும் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.