Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ராதிகாவிற்கு வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராதிகா சிற்சபை ஈசன் .............உங்களால் முடிந்தவரை

தமிழர்களுக்காக் குரல் கொடுப்பீர்கள் என் நம்புகிறோம்.

  • Replies 79
  • Views 9.9k
  • Created
  • Last Reply

சென்றுவா மகளே வென்று வா.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்றுவா மகளே வென்று வா.

பாராட்டுக்கள்.

இப்படித்தான் "அண்ணன்" அமிர்தலிங்கத்தையும் 1977 இல் தமிழீழத்தை உச்சரித்தற்காக வாக்குப் போட்டு இரத்தத் திலகமிட்டு சிறீலங்கா சிங்கள பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைச்சவை.

சென்று வா மகனே வென்று வா என்று. அந்தக் கதி அதே ஈழத்தில் இருந்து.. கனடாவிற்கு அகதிகளாகப் போய் குந்தி இருக்கும் தமிழர்களுக்கும் இவாவால வராது என்று நம்புவோம் ஆக..!

எனக்கு எம்மவர்களின் ஜனநாயக நடவடிக்கைகளில் 0.000000000001% கூட நம்பிக்கை இல்லை..! எம்மவர்கள் அதிகம் செய்வது சன நாய் அகமே..! அதிலிருந்து இவர் மாறிபட்டிருந்தால் நலமே..! அல்லது குறைந்தது வாக்குப் போட்ட கனடியர்களுக்காகவாவது விசுவாசமாக இருக்கட்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த ............. நினைப்பது போல் தமிழ்நாட்டு அரசியல் செய்ய அவர்கள் தெரிவுசெய்யப்படவும் இல்லை,செய்யவும் கூடாது.

நீங்கள் நாலு பேர் நினைப்பதை செய்யாவிட்டால் உடன் துரோகி ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கு?

அப்போ "அண்ணன்" அமிர்தலிங்கத்துக்கு வாக்குப் போட்ட மக்கள் நாலு பேரோ..???! மக்கள் நினைப்பதை செய்யாவிடத்து எதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்று வாக்குக் கேட்டுப் போறீங்க..??! இதுதான் நீங்கள் செய்யும் ஜனநாயகமா....???!

மக்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றத்தான் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களே தவிர அந்தப் பிரதிநிதி தான் நினைச்சதை செய்வதற்கு அல்ல மக்கள் அவரை தெரிவு செய்வது. அப்படி நடந்து கொள்வது ஜனநாயகமும் அல்ல..! இன்றைய உலகில் பலர் தேர்தலில் தெரிவு செய்யப்படும் வரை தான் மக்கள் குரலை செவிமடுக்கின்றனர். தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பின் மக்கள் குரல் நசுக்கப்பட்டு விடுகிறது.

தேர்தலில் வென்ற பின் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிடும் நிலையே இருக்கிறது. தேர்தல்கள் நடத்தப்படும் முறைகளில் பல இராஜதந்திரங்கள். மக்கள் வெளிப்படையாக தமது வாக்கை தங்கள் விருப்புக்கு ஏற்ப செலுத்த முடியாத நிலை. மக்களை குழப்பி அடிக்கும் வகையில் வாக்குகளை பிரிக்கும் வகையில் பலரை களம் இறக்குவது. இதன் மூலம் மக்களின் எண்ணங்களை சிதறடிப்பது. இவை மக்கள் விருப்பை பிரதிபலிக்கும் ஜனநாயகமாக தெரியவில்லை.

இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல.. உலகம் பூரா ஜனநாயகத்தின் பெயரால் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலை. ஜனநாயகம் மறுசீரமைக்கப்பட வேண்டும். மக்களின் விருப்புக்கு எதிராக அவர்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் செயற்படும் போது அடுத்த தேர்தலை வரை காத்திருக்காது.. அவர்களைத் தூக்கி எறியும் அதிகாரமும் மக்களுக்கு வழங்கப்படும் போது.. பல தலைவர்கள் என்போர் என்றோ காணாமல் போயிருப்பர்.

ஜனநாயகம் இன்று கேலிக் கூத்தாகிக் கொண்டிருக்கிறது. எல்லா விடயங்களிலும் மாறுதல்களும் மறுமலர்சிகளும் வந்து கொண்டிருக்கும் போது ஜனநாயகம் மட்டும் மாறாமல் அப்படியே கிடந்து இழுபடுது..! அதனையும் மறு சீரமைக்க வேண்டும். மக்களின் கைக்கு வாக்குகளுக்கு அதிக பலம் சேர்க்க வேண்டும். மக்களின் விருப்புக்களை அவர்களின் பிரதிநிதிகள்.. மற்றும் ஆட்சியாளர்கள் பிரதிபலிக்கக் கூடிய வகைக்கு மக்கள் மயமாக வேண்டும் சனநாயகம்.

வாக்குப் போட்ட மக்களின் விருப்பை நாலு பேரின் விருப்பம் என்று தட்டிக்கழிக்கும் நிலை உருவாகாமல் இருக்க வேண்டின்.. நிச்சயம் ஜனநாயக முறைமைகளில் மாற்றம் கொண்டு வரப்படுவதோடு மக்களின் கைகளுக்கு அதிக பலம் சேர்க்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ், ராதிகா விடயத்தில் தவறான கோணத்தில் செல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். ராதிகா வெற்றி பெறுவதற்கு தமிழர்களின் வாக்குகள் நிச்சயம் உதவி இருக்கும். ஆனால்.. தமிழர் வாக்குகள் மட்டுமே ராதிகாவின் வெற்றியை உறுதிப்படுத்தின என்று கூறமுடியாது. ராதிகாவிற்கு வாக்களிக்காத தமிழர்களும் இருந்தனர். அதேசமயம் ராதிகாவிற்காக பிரச்சாரம் செய்த வேற்றின கனேடியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வேற்றின கனேடியர்கள் ராதிகா ஓர் என் டீ பி என்பதற்காகவே வாக்களித்தார்கள். கனேடிய தமிழர்களின் வீடுகளில் வைக்கப்படாத ராதிகாவிற்கான ஆதரவு பிரச்சார விளம்பர மட்டை என்டீபி ஆதரவு வேற்றினத்தவர்களின் இல்லங்களில் வைக்கப்பட்டன. இந்தவகையில், ராதிகா என் டி பி கட்சியின் சித்தாந்தங்கள், கொள்கைகளிற்கு இணங்க செயற்படுவதே சரியானதும், முதன்மையானதும் ஆகும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் "அண்ணன்" அமிர்தலிங்கத்தையும் 1977 இல் தமிழீழத்தை உச்சரித்தற்காக வாக்குப் போட்டு இரத்தத் திலகமிட்டு சிறீலங்கா சிங்கள பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைச்சவை.

சென்று வா மகனே வென்று வா என்று. அந்தக் கதி அதே ஈழத்தில் இருந்து.. கனடாவிற்கு அகதிகளாகப் போய் குந்தி இருக்கும் தமிழர்களுக்கும் இவாவால வராது என்று நம்புவோம் ஆக..!

எனக்கு எம்மவர்களின் ஜனநாயக நடவடிக்கைகளில் 0.000000000001% கூட நம்பிக்கை இல்லை..! எம்மவர்கள் அதிகம் செய்வது சன நாய் அகமே..! அதிலிருந்து இவர் மாறிபட்டிருந்தால் நலமே..! அல்லது குறைந்தது வாக்குப் போட்ட கனடியர்களுக்காகவாவது விசுவாசமாக இருக்கட்டும்.

மேலைத்தேய அரசியல், உண்மையான 'மக்கள்-விருப்பங்களை' பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. ஆனால்,. இந்திய, இலங்கை அரசியல் ஊழலர் அரசியல். இங்கே ஒன்று இரண்டு பசு இருந்தாலும் பன்றியாகத்தான் மாறுவார்கள் அரசியல்-வாழ்வை வேண்டின். இங்கே அதிகார சக்தியின் தாளங்களாக அரசியலாளர் இருபப்துவே இந்த நாடுகளின் ஜனனாயக இயல்பு ஆகவும் இருக்கின்றது. இவர்கள் உண்மையான 'மக்கள்-விருப்பங்களால்' தெரிவு செய்யப்படுவதும் இல்லை. எனவே அதற்க்கு உண்மையான அக்கறை காட்ட வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ "அண்ணன்" அமிர்தலிங்கத்துக்கு வாக்குப் போட்ட மக்கள் நாலு பேரோ..???! மக்கள் நினைப்பதை செய்யாவிடத்து எதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்று வாக்குக் கேட்டுப் போறீங்க..??! இதுதான் நீங்கள் செய்யும் ஜனநாயகமா....???!

மக்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றத்தான் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களே தவிர அந்தப் பிரதிநிதி தான் நினைச்சதை செய்வதற்கு அல்ல மக்கள் அவரை தெரிவு செய்வது. அப்படி நடந்து கொள்வது ஜனநாயகமும் அல்ல..! இன்றைய உலகில் பலர் தேர்தலில் தெரிவு செய்யப்படும் வரை தான் மக்கள் குரலை செவிமடுக்கின்றனர். தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பின் மக்கள் குரல் நசுக்கப்பட்டு விடுகிறது.

தேர்தலில் வென்ற பின் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிடும் நிலையே இருக்கிறது. தேர்தல்கள் நடத்தப்படும் முறைகளில் பல இராஜதந்திரங்கள். மக்கள் வெளிப்படையாக தமது வாக்கை தங்கள் விருப்புக்கு ஏற்ப செலுத்த முடியாத நிலை. மக்களை குழப்பி அடிக்கும் வகையில் வாக்குகளை பிரிக்கும் வகையில் பலரை களம் இறக்குவது. இதன் மூலம் மக்களின் எண்ணங்களை சிதறடிப்பது. இவை மக்கள் விருப்பை பிரதிபலிக்கும் ஜனநாயகமாக தெரியவில்லை.

இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல.. உலகம் பூரா ஜனநாயகத்தின் பெயரால் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலை. ஜனநாயகம் மறுசீரமைக்கப்பட வேண்டும். மக்களின் விருப்புக்கு எதிராக அவர்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் செயற்படும் போது அடுத்த தேர்தலை வரை காத்திருக்காது.. அவர்களைத் தூக்கி எறியும் அதிகாரமும் மக்களுக்கு வழங்கப்படும் போது.. பல தலைவர்கள் என்போர் என்றோ காணாமல் போயிருப்பர்.

ஜனநாயகம் இன்று கேலிக் கூத்தாகிக் கொண்டிருக்கிறது. எல்லா விடயங்களிலும் மாறுதல்களும் மறுமலர்சிகளும் வந்து கொண்டிருக்கும் போது ஜனநாயகம் மட்டும் மாறாமல் அப்படியே கிடந்து இழுபடுது..! அதனையும் மறு சீரமைக்க வேண்டும். மக்களின் கைக்கு வாக்குகளுக்கு அதிக பலம் சேர்க்க வேண்டும். மக்களின் விருப்புக்களை அவர்களின் பிரதிநிதிகள்.. மற்றும் ஆட்சியாளர்கள் பிரதிபலிக்கக் கூடிய வகைக்கு மக்கள் மயமாக வேண்டும் சனநாயகம்.

வாக்குப் போட்ட மக்களின் விருப்பை நாலு பேரின் விருப்பம் என்று தட்டிக்கழிக்கும் நிலை உருவாகாமல் இருக்க வேண்டின்.. நிச்சயம் ஜனநாயக முறைமைகளில் மாற்றம் கொண்டு வரப்படுவதோடு மக்களின் கைகளுக்கு அதிக பலம் சேர்க்க வேண்டும்.

மேலைத்தேயத்தின் ஜனனாயகம், மக்கள் தேவைகளை என்ன விலையில் கவனிக்க வேண்டுமோ அதை அப்படியே செய்கின்றன. ஆனால் வெளியுறவு அரசியல் பிறமக்களின் உணர்வுகளையும் அதே விலையில் செவிமடுபப்துதான் இல்லை. ஆக அந்த மக்களின் விருப்பங்களே அவர்களின் இருப்பைத் தீர்மானிக்கின்ற நிலையே இதற்கு அடிப்படை. இங்கே மிக எழியவனுக்கு கூட தன் கருத்தை எவர் காதுக்குள்ளும் ஒலித்து சொல்லக்கூடிய கருத்துச் சுதந்திரம் இருப்பது போல், இந்தியாவில் எந்த அம்பானிக்காவது இந்த சுதந்திரம் இருக்கின்றதா? இந்த நிலையே இரண்டு வகைக்குரியதாக இந்த ஜனனாயகத்தைப் பிரிக்கின்றது. எனவே இந்திய ஜனனாயகம், மேலைத்தேய ஜனனாயகத்துடன் முடிச்சுப் போட முடியாதது!

ராதிகாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

ராதிகா ஒரு கனடிய எம்பி. நான் வாழும் பிரதேசமான பல் இன மக்கள் வாழும் (சீனர்கள், கனடியர்கள், கறுப்பு இனத்தவர்கள், தமிழர்கள், இந்தியர்கள்) பிரதேசம் ஒன்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். வயதில் இளையவராக இருப்பதால் கனடிய இளம் சமூகம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து, அரசின் பல நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து சிறந்த எதிர்க் கட்சி எம்பியாக தொழிற்பட வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தமிழ் மக்களின் இனம் சார்ந்த ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த கனடிய பாராளுமன்றத்தில் தமிழ் இளைய சமுதாயத்தில் இருந்து இவர் தெரிவானது நிச்சயம் பல தமிழ் / தென் ஆசிய இளையவர்களை ஊக்கப்படுத்தி, பொதுவான கனடிய தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வழிவகுக்கும்.

ராதிகா, முக்கியமாக புலிகளின் பெயரைச் சொல்லி, மட்டமான குழு நிலை அரசியல் செய்யும், எந்த வித தூர நோக்கற்ற தமிழ் வியாபர அமைப்புகளிடம் இருந்தும், தமிழ் தேசிய வியாபாரம் செய்யும் பல தமிழ் ஊடகங்களிடம் இருந்தும் தன்னை விலத்தி வைத்தால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும். மிக முக்கியமாக, புலிக்கு ஆதரவா இல்லையா என்ற போன்ற கேள்விகளுடன் மொய்க்க இருக்கும் தமிழ் தேசிய வியாபாரிகளிடம் இருந்தும் ராதிகா விலகி நிற்பதே மிகவும் ஆரோக்கியமானது

தமிழ் இனம் சார்ந்த ஏதாவது ஒரு விடயம் ராதிகா உடனடியாக செய்ய விரும்பின் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கும், ஐ நாவின் நிபுணர் குழு அறிக்கைக்கும் ஆதரவாக (இது NDP யின் கொள்கையுடன் ஒத்து போகும் விடயமும் கூட) செயல் பட்டால் போதும்

Edited by நிழலி

- முதலில் இரு வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.இராதிகா அவர்களுக்கு இன்னும் பல காலம் மக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள். கனேடிய அரசியலில் ஒரு முதல் பதிவாகி உள்ளார்.

- கனேடிய தேசியஊடகம் ஒன்றால் சேறு பூசப்பட்டதாலேயே இராகவன் தோற்றார். இதில் கே.பி. யின் பங்கும் இருந்தது கவலைக்குரியது.

- இராதிகா அவர்களின் வெற்றி ஒரு நீண்ட, ஆரோக்கியமான தமிழர் அரசியலுக்கு ஒரு ஆரம்ப முதலீடு. இதன் மூலம் பல இளையவர்கள் அரசியலில் ஈடுபட தூண்டப்படுவார்கள்.

அடுத்த நான்கு வருடத்திற்கு கனடாவில் தேர்தல் இல்லை.

அதேவளை எவ்வாறு கனேடிய பொருளாதாரம் இருக்கும், எவ்வாறு 56பில்லியன் டாலர் வரவுசெலவு விழுக்காடு இல்லாமல் போகும் என்பதிலேயே யார் அடுத்த தேர்தல் வெல்வார்கள் என்பது தங்கியுள்ளது.

இந்த தேர்தலின் பின்னர் கனேடிய பாராளுமன்றம் இரு துருவங்களாக பிரிந்துள்ளன என பார்க்கலாம். ஒரு பக்கம் வலதுசார் கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை அரசு. மறுபக்கம் தீவிர இடதுசார் கொள்கை கொண்ட என்.டி.பி.

லிபரல் கட்சி மீண்டும் தழைக்குமா இல்லை என்.டி.பி. உடன் சேருமா என பலராலும் அலசப்படுகின்றது. கனேடிய அரசியலில் இரு பெரும் கட்சிகள் என்ற நிலை பலராலும் விரும்பப்படுகின்றது. அதன் மூலம் கொள்கை விளக்கம் கூடுதல் தெளிவாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

படுதோல்வியை சந்தித்த லிபரல் கட்சிக்கு தமிழர்கள் உட்பட பல குடிபெயர்ந்த மக்களின் ஆதரவு, அனுதாபம் உண்டு. காரணம் இவர்கள் காலத்தில் குடிவரவு கதவுகள் அகலமாக திறக்கப்பட்டு இருந்தன. முன்பு இன்று பெரும்பான்மை ஆட்சி அமைத்துள்ள பழமைவாத கட்சி கூட ஒரு சில ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்தது. எனவே, லிபரல் கட்சிக்கு மரணசாசனம் எழுதிவிட முடியாது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

ராதிகா ஒரு கனடிய எம்பி. நான் வாழும் பிரதேசமான பல் இன மக்கள் வாழும் (சீனர்கள், கனடியர்கள், கறுப்பு இனத்தவர்கள், தமிழர்கள், இந்தியர்கள்) பிரதேசம் ஒன்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். வயதில் இளையவராக இருப்பதால் கனடிய இளம் சமூகம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து, அரசின் பல நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து சிறந்த எதிர்க் கட்சி எம்பியாக தொழிற்பட வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தமிழ் மக்களின் இனம் சார்ந்த ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த கனடிய பாராளுமன்றத்தில் தமிழ் இளைய சமுதாயத்தில் இருந்து இவர் தெரிவானது நிச்சயம் பல தமிழ் / தென் ஆசிய இளையவர்களை ஊக்கப்படுத்தி, பொதுவான கனடிய தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வழிவகுக்கும்.

ராதிகா, முக்கியமாக புலிகளின் பெயரைச் சொல்லி, மட்டமான குழு நிலை அரசியல் செய்யும், எந்த வித தூர நோக்கற்ற தமிழ் வியாபர அமைப்புகளிடம் இருந்தும், தமிழ் தேசிய வியாபாரம் செய்யும் பல தமிழ் ஊடகங்களிடம் இருந்தும் தன்னை விலத்தி வைத்தால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும். மிக முக்கியமாக, புலிக்கு ஆதரவா இல்லையா என்ற போன்ற கேள்விகளுடன் மொய்க்க இருக்கும் தமிழ் தேசிய வியாபாரிகளிடம் இருந்தும் ராதிகா விலகி நிற்பதே மிகவும் ஆரோக்கியமானது

தமிழ் இனம் சார்ந்த ஏதாவது ஒரு விடயம் ராதிகா உடனடியாக செய்ய விரும்பின் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கும், ஐ நாவின் நிபுணர் குழு அறிக்கைக்கும் ஆதரவாக (இது NDP யின் கொள்கையுடன் ஒத்து போகும் விடயமும் கூட) செயல் பட்டால் போதும்

குடியேற்றக் கார தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது நான் ஒரு தமிழிச்சி.. என்பதுடன் தங்கள் திட்டங்கள் தொடர்பிலும் பிரச்சாரம் செய்வார்கள்.. இதர கனேடிய குடியேற்றக்காரர்களிடம் பிரச்சாரம் செய்யும் போது தங்கள் கட்சி சார்ந்த திட்டங்களை கொள்கைகளை மட்டும் முன் வைத்து பிரச்சாரம் செய்வார்கள்.

அந்த தமிழிச்சி என்ற உச்சரிப்பு தமிழ் தேசியம் சார்ந்து வரும் ஒன்று என்பதை மிக வசதியாக பலர் மறந்து விடுகிறார்கள். தமிழிச்சி என்ற பதம் கனடிய தேசியம் சார்ந்த ஒன்றாக இருக்க கனடாவில் சட்ட அனுமதி இருக்கா என்று தெரியவில்லை..??! கனடிய குடி உரிமை பெற்றவர்கள் கனடிய தேசிய மக்களாகவே தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை இரட்டைக் குடியுரிமை போல.. இட்டை தேசிய அடையாளம்.. கனடிய குடியேற்றக்கார தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர். அவர்களின் தடைக்கு எதிராக இதுவரை எந்த குடியேற்றக்கார தமிழர்களும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் 29 வயதான இளம் பெண் எம் பியான இவர் விடுதலைப்புலிகள் என்ற பதத்தை உச்சரிப்பார் என்று எதிர்பார்ப்பது அல்லது எதிர்பார்க்கத் தூண்டுவது மிக மோசமான சந்தர்ப்பவாதம்.

இவர் உண்மையில் கனடிய நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர். ஒரு தேசிய கட்சியின் அங்கத்துவராக அந்தக் கட்சியின் உறுப்பினராக அவரின் சொந்த தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த தேசியக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் தான் செயற்பட முடியும். அதை மீறிச் செயற்பட முடியாது. இவர் தனது செயற்திட்டங்களை கொள்கைகளை கட்சி அனுமதியுடன் தனது தொகுதியில் நடைமுறைப்படுத்தலாம். ஆனால் ஆளும் கட்சி அதற்கு எந்தளவுக்கு இவருக்கு இடமளிக்கும் அதன் கொள்கைகள் எந்தளவிற்கு இவரின் உறுதிமொழிகளை காக்க உதவும் ஆளும் கட்சியிடம் இவர் எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்து தனது தொகுதிக்கு நன்மை தேடித் தருவார் என்பது கூட இவரைப் பொறுத்தவரை சவாலான விடயங்களே.

அப்படி இருக்க தமிழிச்சி.. அல்லது தமிழ் பெயரை வைத்துக் கொண்டதற்காக.. இவர் தமிழ் மக்களுக்கு... கனடாவுக்கு உள்ளும் வெளியிலும்.. (இவரது தொகுதி தவிர) எதை செய்வார் என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருக்க.. இவருக்கு.. தமிழர்கள் அதாவது கனடிய தேசியத்துக்கு உட்படாத தமிழர்கள் எதற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். தமிழ் தேசியத்தை ஒட்டியதாகத்தானே அது இருக்க முடியும்.

தமிழர்கள் ஒரு தேசிய இனம். அந்த வகையில் தமிழர்களின் தேசியமாக தமிழ் தேசியம் இருக்கிறது. அதை உச்சரிக்கப்படாது என்றால் இந்தப் பெண்மணி தமிழர்கள் மத்தியில் தமிழிச்சி என்றும் உச்சரிப்பது சரியல்ல. மற்ற கனடியர்கள் முன்னாள் உச்சரிப்பது போல.. தன்னை குடியேற்றக்காரி என்று உச்சரிப்பதே மிகப் பொருந்தும் அல்லவா..??!

யூதர்கள் கனடிய குடியேற்றக்காரர்களாக இருந்தாலும்.. இஸ்ரேல் நாட்டு குடிமக்களாக இருந்தாலும்.. யூதர்கள் என்ற தேசிய இன அடையாளத்தை மறந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் ஒரு கனடிய பாராளுமன்றப் பதவியை தக்க வைக்க தமிழ் தேசியத்தை கூட மறக்க பரிந்துரைக்கும் இழிவானவர்களாக வெட்கக் கேடானவர்களாக இருப்பதை இக்களத்தில் இக்கருத்து அப்பட்டமாக இனங்காட்டி நிற்கிறது.

இதுதான் யூதர்கள் நாட்டை அடையவும் தமிழர்கள் நாடோடியாக அலையவும் காரணம்..!

ஒரு எதிர்க்கட்சியின் பிரதிநிதி என்ற வகையில் ஒரு கருத்துக்கூறும் பதவி (opposition critic) இராதிகாவுக்கு கிடைத்தால் அதன்மூலம் இவர் தனது ஆளுமையை வளர்க்க உதவும். இல்லாவிடிலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் செல்வாக்கை ஒட்டாவாவில் இவர் வளர்க்கவேண்டும்.

கனடாவை தளமாக கொண்டு இயங்கும் ஒரு சிங்கள ஊடகம், வெற்றிபெற்ற இராதிகாவை சிங்கள நாட்டில் பிறந்த முதலாவது கனேடியர் என கூறியுள்ளது. http://lankareporter.com/lr/2011/05/02/rathika-sitsabaiesan-elected-to-canadian-parliament/

சிங்களவர்கள் தமக்குள்ள அரசியல் செல்வாக்கை பாவித்து இராதிகாவை தமக்கு எதிராக இல்லை தமிழர் சார்பாக உண்மைகளை கதைக்கவிடாமல் செய்யக்கூடும். எமது தாயக மக்கள் உரிமைகள் சார்பில் இராதிகா அவர்கள் ஏதும் செய்யவிரும்பின் அதை ஒரு அமைதியான முறையில் செய்வதே இலகுவாக இருக்கும்.

ஆளும் கட்சியில் உள்ள தீபக் ஓபராய் என்பவர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக உள்ளார் ( http://www.international.gc.ca/ministers-ministres/deepak_obhrai.aspx) . அவருக்கு கீழே மொஹான் சமரசிங்க என்பவர், இவர் முன்னைநாள் சிங்கள தூதுவராக ஊழியர், வேலை செய்கிறார்

(http://www.deepakobhrai.com/media/news/2007/June01IndiaSudanCanada.pdf). எமது விடுதலை அமைப்பு தடை செய்யப்பட்ட காலத்தில் தூதுவராக இருந்த கீதா டி சில்வா மூலம் இந்த உறவு ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இவருக்கும் சிங்கள அரசுக்கும் தொடர்புகள் உண்டு. எமது உரிமைகளை நசுக்க, கனடாவில் எம்மை எதிர்க்க இவர் பல பணிகளை அமைதியான முறையில் ஆற்றிவருகின்றார் (http://www.lankasolidarity.org/news/tags/mohan-samarasinghe).

மொத்தத்தில் சிங்களம் இராதிகாவை குறிவைத்தே இருக்கும். அத்துடன் மேலும் தமிழர்கள் கனடா உட்பட சர்வதேச அரசியலில் செல்வாக்குகளை வளர்ப்பதை சிங்களம் தொடர்ந்தும் மறுக்கும். இதை முறியடிக்க ஒற்றுமையும் அரசியல் சாணக்கியமும் எமக்கு தேவை.

Edited by akootha

குடியேற்றக் கார தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது நான் ஒரு தமிழிச்சி.. என்பதுடன் தங்கள் திட்டங்கள் தொடர்பிலும் பிரச்சாரம் செய்வார்கள்.. இதர கனேடிய குடியேற்றக்காரர்களிடம் பிரச்சாரம் செய்யும் போது தங்கள் கட்சி சார்ந்த திட்டங்களை கொள்கைகளை மட்டும் முன் வைத்து பிரச்சாரம் செய்வார்கள்.

அந்த தமிழிச்சி என்ற உச்சரிப்பு தமிழ் தேசியம் சார்ந்து வரும் ஒன்று என்பதை மிக வசதியாக பலர் மறந்து விடுகிறார்கள். தமிழிச்சி என்ற பதம் கனடிய தேசியம் சார்ந்த ஒன்றாக இருக்க கனடாவில் சட்ட அனுமதி இருக்கா என்று தெரியவில்லை..??! கனடிய குடி உரிமை பெற்றவர்கள் கனடிய தேசிய மக்களாகவே தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை இரட்டைக் குடியுரிமை போல.. இட்டை தேசிய அடையாளம்.. கனடிய குடியேற்றக்கார தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

கனடாவில் இருக்கும் பிற இனத்தவர்கள் தம்மை கனடிய தேசியம் சார்ந்த இனத்தவர்களாகத் தான் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். கனடியன் தமிழர்கள், கனடியன் சீனர்கள், கறுப்புக் கனடியர்கள் (black Canadians ), கனடியன் ஜப்பானிஸ், canadian sikh என்றவாறே தம்மை அடையாள படுத்துகின்றனர். எனவே தனிப்பட்ட இனம் சார்ந்த அடையாளத்தினை கனடிய தேசியத்துடன் சார்ந்து அடையாளப்படுத்துவதில் கனடாவில் பிரச்சனை இல்லை. இவர்கள் அனைவரினதும் இனங்கள் மாறுபடினும் தேசிய அடையாளம் என வரும் போது அவர்கள் கனடியர்களாகவே தம்மை அடையாளம் கொள்கின்றனர். இரட்டைக் குடியுரிமை என்றதுக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இரண்டும் முற்றிலும் வேறான விடயங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர். அவர்களின் தடைக்கு எதிராக இதுவரை எந்த குடியேற்றக்கார தமிழர்களும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் 29 வயதான இளம் பெண் எம் பியான இவர் விடுதலைப்புலிகள் என்ற பதத்தை உச்சரிப்பார் என்று எதிர்பார்ப்பது அல்லது எதிர்பார்க்கத் தூண்டுவது மிக மோசமான சந்தர்ப்பவாதம்.

இவர் உண்மையில் கனடிய நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர். ஒரு தேசிய கட்சியின் அங்கத்துவராக அந்தக் கட்சியின் உறுப்பினராக அவரின் சொந்த தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த தேசியக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் தான் செயற்பட முடியும். அதை மீறிச் செயற்பட முடியாது. இவர் தனது செயற்திட்டங்களை கொள்கைகளை கட்சி அனுமதியுடன் தனது தொகுதியில் நடைமுறைப்படுத்தலாம். ஆனால் ஆளும் கட்சி அதற்கு எந்தளவுக்கு இவருக்கு இடமளிக்கும் அதன் கொள்கைகள் எந்தளவிற்கு இவரின் உறுதிமொழிகளை காக்க உதவும் ஆளும் கட்சியிடம் இவர் எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்து தனது தொகுதிக்கு நன்மை தேடித் தருவார் என்பது கூட இவரைப் பொறுத்தவரை சவாலான விடயங்களே.

நீங்கள் என்னுடைய பதிலை quote பண்ணி கேட்டுள்ளீர்கள். நான் எந்த இடத்தில் ராதிகாவிடம் இருந்து மேலே நீங்கள் சொன்னவற்றை எதிர்பார்த்து எழுதியுள்ளேன் என காட்டவும். நான் ராதிகாவிடம் இவ்வாறு எதிர்பார்க்கும் அளவுக்கு அரசியல் அறியாமல் இங்கு வந்து எழுதவில்லை

தமிழர்கள் ஒரு தேசிய இனம். அந்த வகையில் தமிழர்களின் தேசியமாக தமிழ் தேசியம் இருக்கிறது. அதை உச்சரிக்கப்படாது என்றால் இந்தப் பெண்மணி தமிழர்கள் மத்தியில் தமிழிச்சி என்றும் உச்சரிப்பது சரியல்ல. மற்ற கனடியர்கள் முன்னாள் உச்சரிப்பது போல.. தன்னை குடியேற்றக்காரி என்று உச்சரிப்பதே மிகப் பொருந்தும் அல்லவா..??!

நான் மேலே கேட்டது போலத்தான் இதுவும். ராதிகா தமிழச்சி என்று உச்சரிக்கப் படக்கூடாது என்று எங்கு குறிப்பிட்டு உள்ளேன்? ராதிகா ஒரு கனடிய தமிழ் பெண், அவர் தன்னை தமிழர்கள் முன் தமிழச்சியாக அடையாள படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒன்டாரியோவில் Brampton போன்ற பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழும் கனடிய சீக்கிய இனத்தவர்கள் கூட சீக்கிய சமூகத்துடன் தம்மை சீக்கியராகவும் கனடிய தேசிய அரசியலில் தம்மை கனடிய சீக்கியராகவும் தான் அடையாள படுத்துகின்றனர். குடியேற்றவாசிகளாக வந்த இனங்களின் புது தலைமுறைகள் தம்மை இத்தகைய அடையாளங்களுக்குள் தான் நிலை நிறுத்தும்

யூதர்கள் கனடிய குடியேற்றக்காரர்களாக இருந்தாலும்.. இஸ்ரேல் நாட்டு குடிமக்களாக இருந்தாலும்.. யூதர்கள் என்ற தேசிய இன அடையாளத்தை மறந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் ஒரு கனடிய பாராளுமன்றப் பதவியை தக்க வைக்க தமிழ் தேசியத்தை கூட மறக்க பரிந்துரைக்கும் இழிவானவர்களாக வெட்கக் கேடானவர்களாக இருப்பதை இக்களத்தில் இக்கருத்து அப்பட்டமாக இனங்காட்டி நிற்கிறது.

இதுதான் யூதர்கள் நாட்டை அடையவும் தமிழர்கள் நாடோடியாக அலையவும் காரணம்..!

கனடாவில் வாழும் யூதர்களும் கனடா சார்ந்த தம் இனத்தினை Canadian jews என்றவாறுதான் அழைகின்றனர். தாம் Jews இனத்தினை சார்ந்த கனடியர்கள் என்றுதான் அவர்கள் தம்மை குறிப்பிடுகின்றனர்.

பாராளுமன்ற பதவியை தக்க வைக்க தமிழ் தேசியத்தின மறக்க சொல்லி யாரவது இங்கு கூறியுள்ளார்களா? அவ்வாறு கூறியுள்ள வரிகளைக் காட்டவும். வழக்கம் போல ஒருவர் சொல்லாத ஒன்றை தூக்கி பிடித்து வெறும் உணர்ச்சிவசப்பட்டும் கருத்துகளை கொட்டும் உங்கள் பாணியில் இருந்து இன்னும் மாறவில்லை என்று மட்டும்தான் தெரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருக்கும் பிற இனத்தவர்கள் தம்மை கனடிய தேசியம் சார்ந்த இனத்தவர்களாகத் தான் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். கனடியன் தமிழர்கள், கனடியன் சீனர்கள், கறுப்புக் கனடியர்கள் (black Canadians ), கனடியன் ஜப்பானிஸ், canadian sikh என்றவாறே தம்மை அடையாள படுத்துகின்றனர். எனவே தனிப்பட்ட இனம் சார்ந்த அடையாளத்தினை கனடிய தேசியத்துடன் சார்ந்து அடையாளப்படுத்துவதில் கனடாவில் பிரச்சனை இல்லை. இவர்கள் அனைவரினதும் இனங்கள் மாறுபடினும் தேசிய அடையாளம் என வரும் போது அவர்கள் கனடியர்களாகவே தம்மை அடையாளம் கொள்கின்றனர். இரட்டைக் குடியுரிமை என்றதுக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இரண்டும் முற்றிலும் வேறான விடயங்கள்.

நீங்கள் என்னுடைய பதிலை quote பண்ணி கேட்டுள்ளீர்கள். நான் எந்த இடத்தில் ராதிகாவிடம் இருந்து மேலே நீங்கள் சொன்னவற்றை எதிர்பார்த்து எழுதியுள்ளேன் என காட்டவும். நான் ராதிகாவிடம் இவ்வாறு எதிர்பார்க்கும் அளவுக்கு அரசியல் அறியாமல் இங்கு வந்து எழுதவில்லை .

நான் மேலே கேட்டது போலத்தான் இதுவும். ராதிகா தமிழச்சி என்று உச்சரிக்கப் படக்கூடாது என்று எங்கு குறிப்பிட்டு உள்ளேன்? ராதிகா ஒரு கனடிய தமிழ் பெண், அவர் தன்னை தமிழர்கள் முன் தமிழச்சியாக அடையாள படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒன்டாரியோவில் Brampton போன்ற பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழும் கனடிய சீக்கிய இனத்தவர்கள் கூட சீக்கிய சமூகத்துடன் தம்மை சீக்கியராகவும் கனடிய தேசிய அரசியலில் தம்மை கனடிய சீக்கியராகவும் தான் அடையாள படுத்துகின்றனர். குடியேற்றவாசிகளாக வந்த இனங்களின் புது தலைமுறைகள் தம்மை இத்தகைய அடையாளங்களுக்குள் தான் நிலை நிறுத்தும்

கனடாவில் வாழும் யூதர்களும் கனடா சார்ந்த தம் இனத்தினை Canadian jews என்றவாறுதான் அழைகின்றனர். தாம் Jews இனத்தினை சார்ந்த கனடியர்கள் என்றுதான் அவர்கள் தம்மை குறிப்பிடுகின்றனர்.

பாராளுமன்ற பதவியை தக்க வைக்க தமிழ் தேசியத்தின மறக்க சொல்லி யாரவது இங்கு கூறியுள்ளார்களா? அவ்வாறு கூறியுள்ள வரிகளைக் காட்டவும். வழக்கம் போல ஒருவர் சொல்லாத ஒன்றை தூக்கி பிடித்து வெறும் உணர்ச்சிவசப்பட்டும் கருத்துகளை கொட்டும் உங்கள் பாணியில் இருந்து இன்னும் மாறவில்லை என்று மட்டும்தான் தெரிகின்றது

ராதிகா, முக்கியமாக புலிகளின் பெயரைச் சொல்லி, மட்டமான குழு நிலை அரசியல் செய்யும், எந்த வித தூர நோக்கற்ற தமிழ் வியாபர அமைப்புகளிடம் இருந்தும், தமிழ் தேசிய வியாபாரம் செய்யும் பல தமிழ் ஊடகங்களிடம் இருந்தும் தன்னை விலத்தி வைத்தால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும். மிக முக்கியமாக, புலிக்கு ஆதரவா இல்லையா என்ற போன்ற கேள்விகளுடன் மொய்க்க இருக்கும் தமிழ் தேசிய வியாபாரிகளிடம் இருந்தும் ராதிகா விலகி நிற்பதே மிகவும் ஆரோக்கியமானது

தமிழ் இனம் சார்ந்த ஏதாவது ஒரு விடயம் ராதிகா உடனடியாக செய்ய விரும்பின் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கும், ஐ நாவின் நிபுணர் குழு அறிக்கைக்கும் ஆதரவாக (இது NDP யின் கொள்கையுடன் ஒத்து போகும் விடயமும் கூட) செயல் பட்டால் போதும்.

முதலில் உங்கள் கருத்துத் தொடர்பில் உணர்ச்சிக் கருத்தாடல் செய்யப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ் தேசிய வியாபாரம் என்ற பதம்.. புலிகளுக்கு ஆதரவா இல்லையா போன்ற கேள்விகளோடு வரும் தமிழ் தேசிய வியாபாரிகள்... இப்படியான பதங்களின் பின்னால் நீங்கள் அடக்கி இருக்கும் ஆட்களை அல்லது தமிழர்களை வரையறுக்க முடியுமா..??!

ஏனெனில் தமிழ் தேசியம் பேசிறவர்களை எல்லாம் இப்போ இந்த வகைக்குள் தான் அடக்கிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த கனடியே குடியேற்றக்கார எம் பி எந்த வகையான தமிழ் தேசிய வியாபாரங்களை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். தமிழ் தேசியத்தை தவிர்க்கச் சொல்வதும்.. அதில் வியாபாரம் என்ற அடைமொழியோடு செய்யப்பட்டு வரும் சூழலில்.. வேற்று நாட்டு தேசியத்தால் தன்னை அடையாளப்படுத்தி அதன் நாடாளுமன்றுக்கு பிரதிநிதித்துவம் கோரும் ஒருவர்.. தமிழ் தேசிய அடையாளத்தின் வழி தன்னை தமிழிச்சியாக அடையாளப்படுத்துவது கூட தேர்தல் அரசியல் வியாபாரம் நோக்கமாகவும் கருதப்படவும் முடியும்... அதேவேளை இன பற்றின் அறிகுறியாகவும் கொள்ளப்பட முடியும். அந்த வகையில் உங்கள் தமிழ் தேசிய வியாபாரம் என்ற மொழிக் கையாடலுக்கு சரியான வரைவிலக்கணம் அல்லது வரையறை அவசியமாகிறது.

ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்பட்டாலும்.. சிறீலங்கா சிங்கள தேசிய பாராளுமன்ற அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக ஈழத்தில் வாழ்ந்த போதும் தமிழர்கள் தங்களை சிறீலங்கன் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள முன் வரவில்லை. மாறாக தமிழ் தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாக காட்டி நிற்க முயன்றனர். ஆனால் குடியேற்றக் கார நாடுகளில் மட்டும் குடியேற்ற நாடுகளின் தேசிய அடையாளங்களோடு தமிழர்கள் என்பதையும் இணைத்துக் கொள்கின்றனர். ஒருவேளை சிறீலங்கா பணக்கார நாடா இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களோ என்னவோ..??! தமிழீழக் கோரிக்கையை கூட எழுப்பி இருப்பார்களோ தெரியாது..???! :unsure::o

அதுபோக.. தமிழிச்சி என்று அழைப்பதற்கும் நான் ஒரு கனடியத் தமிழர் என்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு. தமிழிச்சி பூர்வீக ரீதியிலும் தற்போதும் தூயதாக தமிழ் தேசிய இனத்தைச் சார்ந்து நிற்பவள். என்றும் அடையாளப்படுத்தும். கனடியத் தமிழிச்சி என்பது கனடா நாட்டுக்குள் குடியேறி அதன் தேசியத்தை ஏற்றுக் கொண்டு அங்கு தமிழையும் பேசி சீவிக்கும் தமிழிச்சி.. அப்படி என்று சொல்லலாம். இரண்டுக்கும் இடையில் வேறுபாடுண்டு.

நான் தமிழிச்சி என்று கனடிய தமிழ் குடியேற்றக்காரர்களின் முன்னிலையில் சொல்வதிலும் நான் கனடிய தமிழிச்சி என்று சொல்வது தான் சரியானதாக அமைய முடியும். ஏனெனில் அவர் தமிழர்களுக்கு கனடாவுக்கு வெளியில் எதனையும் செய்ய முடியாது. கனடாவுக்கு உள் அதுவும் தனது தொகுதிக்குள் தான் செய்ய முடியும். அவர்களிடம் தான் வாக்கும் கோர முடியும். இப்போ சிறீலங்கா பாராளுமன்றில் இருக்கும் 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கனடிய தேசியத்துக்குள் செல்வாக்குச் செய்ய முடியாது. அதேபோன்ற ஒரு நிலைதான் இவருக்கும்.

ஆனால் இவர் அங்கு தமிழ் தேசிய இனம் சார்ந்து தன்னை தமிழிச்சி என்று அடையாளப்படுத்திக் கொண்டு கனடிய தேசிய அடையாளத்தின் பால் அமையும் நாடாளுமன்றுக்கு வாக்குச் சேகரிக்கும் போது.. அது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.. அதுவும் நீங்கள் அவருக்கு தமிழ் தேசிய வியாபாரத்தை விலகி இருக்கச் சொல்லி.. அறிவுரை வேறு சொல்லுறீங்க. அவர் கனடிய பாராளுமன்றத்துக்கான கனடிய குடியேற்றக்காரர்களின் பிரதிநிதி. அவர் தமிழ் தேசிய இனம் சார்ந்து தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அல்ல. அவர் அறிவுரை கூறாமலே அதில் இருந்து விலகித்தான் இருப்பார்... அதுதான் அவரின் கனடிய தேசிய கட்சியின் கொள்கையாகக் கூட இருக்கும். புதிய ஜனநாயகக் கட்சி கனடியருக்கானதே அன்றி.. தமிழ் தேசிய இனத்துக்கான கட்சியல்ல..!

ஆனால் தன்னை இன்னும் தமிழ் தேசி இனத்தின் பிரதிநிதியாகவும் அவர் இனங்கண்டு கொண்டால் அவர்கள் கனடிய தேசியத்துக்குள் இருந்து கொண்டு தமிழ் தேசிய இனத்திற்காகவும் செயற்பட முடியும். அதை விலக்கச் சொல்வதற்கு என்ன தேவை இருக்குது என்பதை சொல்வது நன்றாக இருக்கும்..??!

ஐ நா விசாரணைக் கமிஷன் அறிக்கை தொடர்பில் ஏலவே கனடிய லிபரல் கட்சி எந்த அழுத்தங்களுக்கும் அப்பால் தனது நிலைப்பாட்டை அறிவித்திருப்பதோடு அதனை வரவேற்பதாகக் கூறியுள்ளது. அந்த நிலையில் இவர் கேட்டுத்தான் இவரின் கட்சி ஒரு அறிவிப்பை விட வேண்டும் என்பதும்.. அது இவரின் தமிழர்கள் மீதான பற்றின் காரணம் என்று இனங்காட்ட முனையின்.. அதுதான் சுத்த அரசியல் வியாபாரமாக இருக்க முடியும்.

ஒரு தமிழ் தேசிய இனப் பெண்ணாக தன்னை இவர் இனங்கண்டு கொண்டால்.. அந்த இனத்தின் துன்பத்தினை அடையாளப்படுத்தும் அறிக்கை தொடர்பில் தான் சார்ந்த கட்சியிடம் மட்டுமல்ல.. கனடிய தேசிய பாராளுமன்றிலும் ஒரு அறிவிப்பை வெளியிட பிரேரணை கொண்டு வர வேண்டும். அதனை கனடிய அரசும் மற்றும் கட்சிகளும் நடைமுறைப்படுத்தக் கோர வேண்டும். வெறுமனவே அந்தக் கட்சி அறிக்கை விடுவதால்.. இவருக்கு தான் அரசியல் வியாபாரம் நடக்குமே அன்றி.. தமிழ் தேசிய இனத்தின் துயர் தீராது.

யூதர்களுக்கு ஒரு நாடு இஸ்ரேல் என்று இருந்தும்.. அவர்கள்.. இன்னும் யூதர்கள் என்ற தேசிய இன அடையாளத்தை கைவிடவில்லை. தங்கள் தேசிய இனக் குறியூட்டை வியாபாரம் என்று சொல்வதில்லை. ஆனால் நீங்கள் தமிழர்கள் உங்களை கனடியர்கள் என்று பூரணமாக அழைக்க முடியாத சூழலில் தமிழர்கள் என்பதை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்த பாவிக்க முற்படுகிறீர்களே ஒழிய அங்கு உண்மையான தமிழ் தேசிய இன உணர்வு எழுந்திருப்பதாக உங்களின் கருத்தின் மூலம் அடையாளம் காண முடியவில்லை. அதுதான் கவலை அளிக்கிறது.

இவை உணர்ச்சிக் கருத்துக்களாகவோ... உலகின் மிகப் பெரிய அரசியல் சாணக்கிய சக்திகளான விளங்கும் குடியேற்றக் காரத் தமிழர்களுக்கு தொலைநோக்கற்ற கருத்தாகவோ தெரியலாம். தெரிந்தால் என்னென்ன காரணங்களின் பால்.. இது உணர்ச்சிக் கருத்து.. தொலைநோக்கற்ற கருத்து என்று வரையறுக்கிறீர்கள் என்று சொல்வது அவசியம். இல்லை எனில் எனக்கு உங்களின் தொலைநோக்கு அரசியலில் சந்தேகம் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

குர்ஸ்தானில் பிறந்த ஒருவன்.. பிரான்ஸில் குடியேறி.. பயங்கரவாதப்பட்டியலில் உள்ள தனது போராட்ட அமைப்பை அதில் இருந்து நீக்க நீதிமன்றம் செல்ல முடியும் என்றால்.. ஈழத்தில் பிறந்து.. கனடாவில் குடியேறிய ஒரு பெண்.. தான் பிறந்த மண்ணின் விடிவுக்காக போராடிய அமைப்பை தடைசெய்ததை விலக்க அல்லது நீதி கேட்டு ஏன் நீதிமன்றம் செல்ல முடியாது. ஏனெனில் நாம் எனி புலி அடையாளம்.. புலி சார்பு.. எதிர்ப்பு.. தமிழ் தேசிய அடையாளம்.. சார்பு.. எதிர்ப்பு.. காட்டாது.. எமது சொந்த அரசியலை வாழும் நாடுகளின் தேசியக் கட்சிகளுக்கு எடுபிடிகளாக இருந்து செய்து கொள்ள வேண்டியதுதான். அதன் மூலம் இன்னும் 100,000,000 வருடங்களின் பின் தமிழீழம் அமைக்க கோர முடியும். இதுவே எங்கள் தொலைநோக்கு அரசியலாகும்.. என்றால் நான் அதனை ஏற்றுக் கொள்கின்றேன். :D:)

Edited by nedukkalapoovan

ராதிகாவிற்கு வாழ்த்துக்கள். ராதிகா நடுநிலைமையாக இருந்ததனால் இவ்வாறான வெற்றியை ஈட்ட முடிந்தது. அவர் என்றுமே புலிகளுக்கு ஆதரவாகவும் கதைத்ததில்லை. எதிராகவும் கதைத்ததில்லை. அவர் ஒரு கனேடியத்தமிழராகவே இதுவரை காலமும் வாழ்ந்து வந்திருக்கிறார். அதோடு, அவரின் கட்சித்தலைமையும் ஈழத்தமிழர்களுக்கெதிராகக் கதைத்ததில்லை. அவரிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கமுடியாவிட்டாலும், எமக்கெதிரான கருத்துக்களை முன்வைக்கமாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம்.

தமிழ் தேசிய வியாபாரம் என்ற பதம்.. புலிகளுக்கு ஆதரவா இல்லையா போன்ற கேள்விகளோடு வரும் தமிழ் தேசிய வியாபாரிகள்... இப்படியான பதங்களின் பின்னால் நீங்கள் அடக்கி இருக்கும் ஆட்களை அல்லது தமிழர்களை வரையறுக்க முடியுமா..??!

இந்தக் கேள்வியை முதலில் கேட்டு விட்டு பின்பு எழுதியிருக்கலாம் :D

நிச்சயம் வரையறுக்க முடியும்

உண்மையான அக்கறையுடன் புலிகளுக்காகவும், தமிழீழ போராட்டதுக்காவும் நேர்மையுடன் ஈடுபட்டவர்கள்/ஈடுபடுபவர்கள் நீங்கலாக, ஈழ ஆதரவு என்ற பெயரில் வெறும் கோஷ்டி பிரிந்து ஒன்றை ஒன்று காட்டிக் கொடுத்து கொண்டு, நான் பெரியவனா நீ பெரியவனா என்று போட்டியில் மற்ற எல்லாரையும் துரோகிகளாக இனம் காணும் கூட்டம். கால காலமாக புலிகளின் பெயரைச் சொல்லி பிழைத்து விட்டு இன்று அதே அமைப்புக்குள் இருப்பவர்களை இரண்டாக மூன்றாக பிரித்து ஒன்றுக்கு மட்டுமே ஆதரவு கொடுத்து மற்றவர்களை கைவிட்ட கூட்டம். இந்தக் கூட்டம் இங்கு கனடாவில் மட்டும் அல்ல, புலம் பெயர் தேசம் எங்கும் இருக்கின்றது.

அரசியல் அரங்கில் இருப்பவரிடம் கேட்க வேண்டிய காத்திரமான எத்தனையோ கேள்விகள் இருக்க, நீ புலிக்கு ஆதரவா இல்லையா கேட்டு பிரச்சனையில் மாட்டி விட்டு (ஓம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் நிச்சயம் பாதிப்பு என்று தெரிந்தும்) தாம் ஆதரிக்கும் நபரை தூக்கிப் பிடிக்க முயலும் ஊடக பேர்வழிகளையும் குறிப்பிட்டு இருந்தேன் (ஆனால் இதே பேர்வழிகள் தொழில் படும் தமிழ் ஊடகங்களில் இலங்கை விமான சேவைக்கு விளம்பரம் போகும் :D )

இன்றும் ஏதேனும் ஒரு வழியில் இலங்கை தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுத் தர முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டு வரும் உண்மையான நேர்மையான பிரிவினர் நிச்சயம் இந்த வரைவிலக்கணத்தில் அடங்க மாட்டார்

வேற்று நாட்டு தேசியத்தால் தன்னை அடையாளப்படுத்தி அதன் நாடாளுமன்றுக்கு பிரதிநிதித்துவம் கோரும் ஒருவர்.. தமிழ் தேசிய அடையாளத்தின் வழி தன்னை தமிழிச்சியாக அடையாளப்படுத்துவது கூட தேர்தல் அரசியல் வியாபாரம் நோக்கமாகவும் கருதப்பட முடியும்... அதேவேளை இன பற்றின் அறிகுறியாகவும் கொள்ளப்பட முடியும். அந்த வகையில் உங்கள் தமிழ் தேசிய வியாபாரம் என்ற மொழிக்கையாடலுக்கு சரியான வரைவிலக்கணம் வரையறை அவசியமாகிறது.

முதலில் ஒருவர் அல்லது ஒரு இனத்தவர் ஒரு நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கோருவது என்பதே அந்த நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதுக்கும் அதன் மூலம் தான் சார்ந்த இனத்திக்கான / பிரிவுக்கான அல்லது தொகுதிக்கான முன்னேற்றத்தினை ஊக்குவிக்கவும் தான் (நான் கூறுவது இலங்கை இந்திய போன்ற நாடுகளில் அல்ல). இங்கு கனடாவில் மிகச் சிறிய அளவில் இருக்கும் தமிழ் இன மக்களுக்கு என்று ஒரு நாடாளுமன்ற பிரதிநித்துவம் கிடைக்கும் போது, அந்த இனம் பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் இனம் சார்ந்த உணர்வு முன்னிலை படுத்தப்படுகின்றது. ராதிகா அல்லது அவரைப் போன்ற எந்த கனடிய தமிழரும் போட்டியிடும் போது, அவர்கள் இனம் சார்ந்த உணர்வு தான் முன்னிலைபடுத்தப் படுகின்றது. இந்தப் போக்கு பெரும்பான்மை இனமான வெள்ளை இனத்தவர் போட்டியிடும் போது எழுவதில்லை. இப்படி முன்னிலைப் படுத்தப் படுவது நிச்சயம் வியாபாரமாக மாட்டாது

ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்பட்டாலும்.. சிறீலங்கா சிங்கள தேசிய பாராளுமன்ற அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக ஈழத்தில் வாழ்ந்த போதும் தமிழர்கள் தங்களை சிறீலங்கன் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள முன் வரவில்லை. மாறாக தமிழ் தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாக காட்டி நிற்க முயன்றனர். ஆனால் குடியேற்றக் கார மட்டும் குடியேற்ற நாடுகளின் தேசிய அடையாளங்களோடு தமிழர்கள் என்பதையும் இணைத்துக் கொள்கின்றனர். ஒருவேளை சிறீலங்கா பணக்கார நாடா இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களோ என்னவோ..??! தமிழீழக் கோரிக்கையை கூட எழுப்பி இருப்பார்களோ தெரியாது..???!

இதுதானே எம் போராட்டத்தின் அடிப்படைக் காரணம்

சிறிலங்காவை எமது சொந்த நாடாக உணர விடாமல் செய்தது சிங்களமும் அதன் பேரினவாத சிந்தனையும் செயல்பாடுகளும் தான். எம்மை சிறிலங்கனாக பார்க்க விடாது எம்மை இன ரீதியாக வேறு படுத்தி உரிமைகள் தர மறுத்தமையால் தானே ஈழம் கேட்க வேண்டி வந்தது . சிங்களம் எம்மை சக மனிதர்களாக மதித்து எம் சொந்த மண்ணில் சகல உரிமைகளுடனும் வாழ முற்ற்பட்டு இருந்தால் நிச்சயம் ஈழக் கோரிக்கைக்கு தேவை வந்திருக்காது, நாமும் எம்மை சிறிலங்கன் தமிழர் அழைத்து இருப்போம் (நீங்கள் சிங்கள தேசிய பாராளுமன்ற அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக ஈழத்தில் வாழ்ந்த போதும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், அது தவறு அப்படி வாழ நிர்பந்திக்கப் பட்டவர்களாக இருந்தோம்)

அதுபோக.. தமிழிச்சி என்று அழைப்பதற்கும் நான் ஒரு கனடியத் தமிழிச்சி என்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு. தமிழிச்சி பூர்வீக ரீதியிலும் தற்போதும் தூயதாக தமிழ் தேசிய இனத்தைச் சார்ந்து நிற்பவள். கனடியத் தமிழிச்சி என்பது கனடா நாட்டுக்குள் குடியேறி அதன் தேசியத்தை ஏற்றுக் கொண்டு அங்கு தமிழையும் பேசி சீவிக்கும் தமிழிச்சி.. அப்படி என்று சொல்லலாம். இரண்டுக்கும் இடையில் வேறுபாடுண்டு.

என்ன சொல்ல வருகின்றீர்கள்?

ஒரு கனடிய தமிழ் பெண் அல்லது பிற நாடுகளில் பிறந்து வாழும் எம் இன பெண் (அல்லது ஆண்) தூய தமிழ் தேசிய இனம் சார்ந்தவர்கள் அல்லாமல் தூய்மை அற்ற தேசிய உணர்வாளர்கள் என்கின்றீர்களா? தன் இனம் சார்ந்த தூய்மையை காட்ட தான் கனடிய தமிழ் அல்ல வெறும் தமிழர் என்று சொல்லவேண்டுமா? அப்படியாயின் வருங்காலத்தில் புலம் பெயர் தேசம் எங்கும் தமிழ் இனத்தில் வளர்ந்து நிற்கப் போகும் சந்ததிகள் எப்படிப்பட்டவை?

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கூட அன்றும் இன்றும் தம்மை 'தமிழர்களாக' மட்டும் அடையாள படுத்தவில்லை. தம்மை 'ஈழ" தமிழர்களாகத் தான் அடையாள படுத்துகின்றனர் என்பதை என்ன என்று சொல்கின்றீர்கள்?

ஆனால் இவர் அங்கு தமிழ் தேசிய இனம் சார்ந்து தன்னை தமிழிச்சி என்று அடையாளப்படுத்திக் கொண்டு கனடிய தேசிய அடையாளத்தின் பால் அமையும் நாடாளுமன்றுக்கு வாக்குச் சேகரிக்கும் போது.. அது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.. அதுவும் நீங்கள் அவருக்கு தமிழ் தேசிய வியாபாரத்தை விலகி இருக்கச் சொல்லி.. அறிவுரை வேறு சொல்லுறீங்க. அவர் கனடிய பாராளுமன்றத்துக்கான கனடிய குடியேற்றக்காரர்களின் பிரதிநிதி. அவர் தமிழ் தேசிய இனம் சார்ந்து தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அல்ல. அவர் அறிவுரை கூறாமலே அதில் இருந்து விலகித்தான் இருப்பார்.

வார்த்தைகளை சரியாக கவனிக்கவும். நான் தமிழ் தேசிய வியாபாரிகள் இடம் இருந்து விலகி நிற்கவே சொல்லி இருந்தேன்.

எமது தாயக நிலைமைகளை விளக்க / நியாயம் கேட்க நாம் வாழும் நாடுகளில் எமது தொகுதி பிரதிநிகள் அனைவரையும் நாம் அணுகலாம், அணுகவேண்டும். இது எமது உரிமை. நாமும் அரசியல் ரீதியாக பல கட்சிகளில் சார்ந்து வேலைசெய்யும் பொழுது அந்த உரிமைக்குரல் பலம் பெறுகின்றது.

உதாரணத்திற்கு நாம் ஒரு சிறு குழுவாக, இரண்டு பேர் என்றாலும், எமது பிரதிநிதியை சந்திக்க ஒரு நேரத்தை கேட்கலாம். அப்பொழுது ஐ.நா. அறிக்கையை பிரதி எடுத்து கொடுத்து அவரின் ஆதரவை கோரலாம்.

நாம் எல்லோரும் நிலைமையை எமது கைகளில் எடுத்து வேலை செய்வதே சிறப்பான அணுகுமுறை. அவர் செய்யவேண்டும் இல்லை இவர் செய்வார் என எதிர்பார்ப்பது ஆபத்தே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை முதலில் கேட்டு விட்டு பின்பு எழுதியிருக்கலாம் :D

முதலில் ஒருவர் அல்லது ஒரு இனத்தவர் ஒரு நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கோருவது என்பதே அந்த நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதுக்கும் அதன் மூலம் தான் சார்ந்த இனத்திக்கான / பிரிவுக்கான அல்லது தொகுதிக்கான முன்னேற்றத்தினை ஊக்குவிக்கவும் தான் (நான் கூறுவது இலங்கை இந்திய போன்ற நாடுகளில் அல்ல). இங்கு கனடாவில் மிகச் சிறிய அளவில் இருக்கும் தமிழ் இன மக்களுக்கு என்று ஒரு நாடாளுமன்ற பிரதிநித்துவம் கிடைக்கும் போது, அந்த இனம் பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. இதில் இனம் சார்ந்த உணர்வு முன்னிலை படுத்தப்படுகின்றது. ராதிகா அல்லது அவரைப் போன்ற எந்த கனடிய தமிழரும் போட்டியிடும் போது, அவர்கள் இனம் சார்ந்த உணர்வு தான் முன்னிலைபடுத்தப் படுகின்றது. இந்தப் போக்கு பெரும்பான்மை இனமான வெள்ளை இனத்தவர் போட்டியிடும் போது எழுவதில்லை. இப்படி முன்னிலைப் படுத்தப் படுவது நிச்சயம் வியாபாரமாக மாட்டாது .

இதுதானே எம் போராட்டத்தின் அடிப்படைக் காரணம்

சிறிலங்காவை எமது சொந்த நாடாக உணர விடாமல் செய்தது சிங்களமும் அதன் பேரினவாத சிந்தனையும் செயல்பாடுகளும் தான். எம்மை சிறிலங்கனாக பார்க்க விடாது எம்மை இன ரீதியாக வேறு படுத்தி உரிமைகள் தர மறுத்தமையால் தானே ஈழம் கேட்க வேண்டி வந்தது . சிங்களம் எம்மை சக மனிதர்களாக மதித்து எம் சொந்த மண்ணில் சகல உரிமைகளுடனும் வாழ முற்ற்பட்டு இருந்தால் நிச்சயம் ஈழக் கோரிக்கைக்கு தேவை வந்திருக்காது, நாமும் எம்மை சிறிலங்கன் தமிழர் அழைத்து இருப்போம் (நீங்கள் சிங்கள தேசிய பாராளுமன்ற அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக ஈழத்தில் வாழ்ந்த போதும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், அது தவறு அப்படி வாழ நிர்பந்திக்கப் பட்டவர்களாக இருந்தோம்)

என்ன சொல்ல வருகின்றீர்கள்?

ஒரு கனடிய தமிழ் பெண் அல்லது பிற நாடுகளில் பிறந்து வாழும் எம் இன பெண் (அல்லது ஆண்) தூய தமிழ் தேசிய இனம் சார்ந்தவர்கள் அல்லாமல் தூய்மை அற்ற தேசிய உணர்வாளர்கள் என்கின்றீர்களா? தன் இனம் சார்ந்த தூய்மையை காட்ட தான் கனடிய தமிழ் அல்ல வெறும் தமிழர் என்று சொல்லவேண்டுமா? அப்படியாயின் வருங்காலத்தில் புலம் பெயர் தேசம் எங்கும் தமிழ் இனத்தில் வளர்ந்து நிற்கப் போகும் சந்ததிகள் எப்படிப்பட்டவை?

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கூட அன்றும் இன்றும் தம்மை 'தமிழர்களாக' மட்டும் அடையாள படுத்தவில்லை. தம்மை 'ஈழ" தமிழர்களாகத் தான் அடையாள படுத்துகின்றனர் என்பதை என்ன என்று சொல்கின்றீர்கள்?

வார்த்தைகளை சரியாக கவனிக்கவும். நான் தமிழ் தேசிய வியாபாரிகள் இடம் இருந்து விலகி நிற்கவே சொல்லி இருந்தேன்.

நாடாளுமன்ற தேர்தல்களில் அது சிறீலங்காவாக இருக்கட்டும்.. மேற்கு நாடுகளாக இருக்கட்டும் தேசியக் கட்சிகள் சார்ந்து தேர்தலில் நிற்போர் அந்தக் கட்சிகளின் கொள்கைக்கு ஏற்பத்தான் வேலை செய்ய முடியும். அந்தப் பிரதிநிதியிடம் தனிப்பட்ட ஆற்றல்கள் இருப்பின் அது கட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டு கட்சித் தலைமை அதை சரியென அங்கீகரித்தால் தான் அதை அவர் நடைமுறைப்படுத்த முடியும்.

இந்த கனடிய குடியேற்றக்கார பெண் எம் பி மட்டுமல்ல.. கனடாவில் முன்னரும் குடியேற்றக்காரர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். பல இன மக்கள் குடியேறி வாழும் நாடுகளில் இது வழமை.

கனடாவில் எல்லோருக்கும் சம உரிமை அளிக்கப்படுகிறது என்றால் அது முற்றாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அங்கும் குடியேற்றவாதக் கருத்துக்களை வெறுக்கும் ஆதரிக்கும்.. சுமக்கும் அரசியல்வாதிகள் மக்கள் இருக்கின்றனர். எங்களுக்கு கனடாவில் அனைத்து தேசிய இன உரிமைகளும் கிடைத்து வாழ்கிறோம் என்றால் அது இல்லை என்பதே கருத்தாக அமைய முடியும். கனடா குடியேற்றக்காரர்களுக்குரிய அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அது போதும் என்று அவர்கள் திருப்திப்பட்டு வாழ்கின்றனர். இதுதான் நடைமுறை உண்மை.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்.. என்பது முழு இனத்துக்குமான ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுமா.. அல்லது குறித்த பிரதேசத்தில் குறித்த கட்சியின் இருப்பை தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுமா என்பதுதான் கேள்வியே..??!

ஐரோப்பிய குடியேற்ற நாடுகளிலும் இந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள் என்று குடியேற்றக்காரர்கள் நாடாளுமன்றம் நுழைகின்ற போதும்.. அவர்கள் அந்தந்த நாட்டு பூர்வீக வழி வந்த மக்களின் வாக்குகளை கவரப் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர இனத்துவப் பிரதிநிதித்துவம் பெற அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. காரணம்.. பல்லின மக்கள் வாழும் குடியேற்ற நாடுகள் குடியேற்றக்காரர்கள் தங்கள் நாடுகளின் தேசிய நீரோட்டத்தில் முழுமையாக கலக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

இந்தப் பெண்மணியை கனடியர்கள் பாவிப்பதும் அதற்காகத்தான். ஆனால் நாம் அதற்கு இனத்துவ அடையாளம் கொடுத்து... அவர் தமிழர்களுக்காக பாடப்படப் போறார் என்று ஒரு கற்பிதத்தை வழங்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் கனடிய பூர்வீகத்தினருக்காக வேலை செய்யும் அரசியல் ஏஜெண்ட் அவ்வளவே. அவர் ஒரு வரையறைக்கு மேல் அங்கு செல்வாக்குச் செய்ய முடியாது.

மேலும்..

தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வந்து குடியேற முதல் இந்தியர்களும் பிற நாட்டினரும் வந்து பல தலைமுறைகளாக குடியேறி விட்ட நிலையிலும்.. அவர்கள் தாங்கள் தங்கள் அடையாளங்களை தொலைத்து வாழ முனைந்ததாகத் தெரியவில்லை. யூதர்கள் எவ்வளவோ ஆண்டுகளாக வாழ்கின்றனர்.. இன்னும் தாங்கள் யூதர்கள் என்ற அடையாளத்தை உணர்விக்கின்றனர். முஸ்லீம்கள் அப்படி. சீக்கியர்கள் அப்படி. அதேன் தமிழர்களுக்கு பிறந்த பிள்ளைகளை இட்டு மட்டும் தமிழர்களுக்கு ஒரே பயம். நாங்கள் சிங்கள நிர்வாகத்துக்குள் பிறந்ததற்காக.. தமிழீழத்தைக் கோரி நிற்கவில்லையா..??! பிறந்த இடத்தால் காலத்தால் எல்லாவற்றையும் மறந்து நின்றோமா இல்லையே. அதேன்.. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும்.. இங்க பிறந்த பிள்ளைகள்.. எப்படி போகுங்களோ.. என்ன ஆகுமோ என்று இன்னொரு தளத்தை அவர்களுக்கு என்று வரையறுக்கின்றனர். இங்கு பிறந்த பிள்ளைகள் இங்கே உள்ள நடைமுறைகளுக்கு பழக்கப்பட்டு விடுவதால்.. தமது பூர்வீக தேசிய இன அடையாளத்தை இழந்து விடும் என்பது பொருத்தமான ஒன்றல்ல. அது எமது இனத்துவப் பற்றினை அவர்களுக்கு ஊட்டும் பாங்கில் உள்ளதே அன்றி... தாயகத் தொடர்பு பேணலில் உள்ளதே அன்றி... பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் அல்ல..!

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குடியேறி ஒரு பத்தாண்டுகள் வாழ்ந்து கழித்தவர்களும் மேற்கு நாடுகளில் பெற்றுள்ளனர். தங்கள் இன மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அரசியல் வேலை செய்துள்ளனர். இவை அனைத்தும் மேலை நாடுகளின் தேசிய நீரோட்டத்தில் குடியேற்றக்காரர்களை கலக்க வைக்கும் நடவடிக்கைகளே அன்றி.. அவர்களின் தனிப்பட்ட இனத்துவக் காப்பு பற்றிய அக்கறையின் பாலானதன்று.

சிறீலங்காவிலும் எம்மவர்கள் ஆண்டாண்டா பாராளுமன்றம் போகின்றனர். பாராளுமன்றம் போவதன் மூலம் எமது உரிமைகள் பெறப்படுகின்றன.. அல்லது காக்கப்படுகின்றன என்றால்.. ஏன் நாங்கள் போராடி இருக்க வேண்டும்..???! தேவை இல்லைத் தானே. ஜனநாயகம் தேர்தல் என்று வரும் போது கனடாவும் சிறீலங்காவும் ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளாகவே உலகால் பார்க்கப்படுகின்றன. ஆனால் அங்குள்ள வேறுபாட்டை அவை இனங்காண்பதில்லை. நாமும் காட்ட முற்படுவதில்லை. நாங்கள் சிறீலங்கா சிங்களப் பாராளமன்றத்துக்கு அதன் அரசியல் அமைப்பை ஏற்று போவதே உண்மையில் தவறு. அப்படி ஏற்பதன் மூலம்.. நாம் அந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புகிறோம் என்பதையே காட்டி நிற்கிறோம். அதாவது கனடாவில் தமிழர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இன்று செய்ய விரும்பி நிற்பது போல.

ஆனால் கனடாவில் நாம் குடியேறிகள்... எமது பிரச்சனைகளை கவனிக்க யாரும் இல்லை அல்லது இருக்கிற வெள்ளையள் ஒழுங்கா கவனிக்கிறதில்ல.. அல்லது எம்மோடு கலப்பதில்லை. இந்த நிலையில் எமது சொந்த இனப் கனடியக் குடியேறியை நாடாளுமன்றம் அனுப்பினால் ஏதேனும் விடிவு வரும் என்று நினைக்கிறோம். கனடிய தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்.. அதனால் பயன்கிடைக்கும் என்று செயற்படுகிறோம். ஆனால் அதையே தமிழினத்தின் விடிவுக்கான முயற்சி என்பது போல.. இனங்காட்டுவதும்... அரசியல் செய்வதும் தான் ஏன்..??! அது அரசியல் வியாபாரம் இல்லையா..???! :) :)

Edited by nedukkalapoovan

புதிய அமைச்சருடன் தமிழர் தரப்பு உறவுகளை பலப்படுத்தவேண்டும்.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் தனது தொகுதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த அத்துறைக்கு நியமிக்கப்படுபவர் எமக்கு தேவையானவர் எனக்கருதி நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இராதிகா சிற்சபேசனுக்கு வாழ்த்துகள்

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்.. என்பது முழு இனத்துக்குமான ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுமா.. அல்லது குறித்த பிரதேசத்தில் குறித்த கட்சியின் இருப்பை தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுமா என்பதுதான் கேள்வியே..??!

ஐரோப்பிய குடியேற்ற நாடுகளிலும் இந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள் என்று குடியேற்றக்காரர்கள் நாடாளுமன்றம் நுழைகின்ற போதும்.. அவர்கள் அந்தந்த நாட்டு பூர்வீக வழி வந்த மக்களின் வாக்குகளை கவரப் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர இனத்துவப் பிரதிநிதித்துவம் பெற அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. காரணம்.. பல்லின மக்கள் வாழும் குடியேற்ற நாடுகள் குடியேற்றக்காரர்கள் தங்கள் நாடுகளின் தேசிய நீரோட்டத்தில் முழுமையாக கலக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

இந்தப் பெண்மணியை கனடியர்கள் பாவிப்பதும் அதற்காகத்தான். ஆனால் நாம் அதற்கு இனத்துவ அடையாளம் கொடுத்து... அவர் தமிழர்களுக்காக பாடப்படப் போறார் என்று ஒரு கற்பிதத்தை வழங்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் கனடிய பூர்வீகத்தினருக்காக வேலை செய்யும் அரசியல் ஏஜெண்ட் அவ்வளவே. அவர் ஒரு வரையறைக்கு மேல் அங்கு செல்வாக்குச் செய்ய முடியாது.

மிக சிறியளவில் இருக்கும் ஒரு இனத்துக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மிக தேவையான என்ற ஒன்றைக் கூட நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றீர்கள். குறிப்பிட்ட இன மக்கள் செறிந்து வாழும் பகுதியில் தான் அந்த இனத்துக்குரிய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி வைப்பதுக்கு அரசியல் கட்சிகள் முன் நிற்கின்றன. அப்படி நிறுத்தி அவர் வெல்லும் போது அந்த இனத்துக்கான அடையாளம் பாராளுமன்றத்தில் கிடைக்கின்றது. இதன் அடையாளம் அந்த இனத்துக்காக அவர் கட்சி கட்டுப்பாடுகளை கடந்து அவர் போராடவேண்டும் என்றல்ல. தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஓரளவுக்கேனும் சிறந்த கொள்கைகளைக் கொண்ட ஒரு கட்சியால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் தோல்வி அடைவாராயின், நிச்சயம் அது அந்த பகுதியில் செறிந்து வாழும் தமிழர்களுக்கு நிச்சயம் பாதகமாகவே அமையும். இன்னொரு தடவை ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த அனைத்து கட்சிகளும் தயங்கும். இதே போலத்தான் சீக்கியர்களுக்கும், சீனர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகின்றது

தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வந்து குடியேற முதல் இந்தியர்களும் பிற நாட்டினரும் வந்து பல தலைமுறைகளாக குடியேறி விட்ட நிலையிலும்.. அவர்கள் தாங்கள் தங்கள் அடையாளங்களை தொலைத்து வாழ முனைந்ததாகத் தெரியவில்லை. யூதர்கள் எவ்வளவோ ஆண்டுகளாக வாழ்கின்றனர்.. இன்னும் தாங்கள் யூதர்கள் என்ற அடையாளத்தை உணர்விக்கின்றனர். முஸ்லீம்கள் அப்படி. சீக்கியர்கள் அப்படி. அதேன் தமிழர்களுக்கு பிறந்த பிள்ளைகளை இட்டு மட்டும் தமிழர்களுக்கு ஒரே பயம். நாங்கள் சிங்கள நிர்வாகத்துக்குள் பிறந்ததற்காக.. தமிழீழத்தைக் கோரி நிற்கவில்லையா..??! பிறந்த இடத்தால் காலத்தால் எல்லாவற்றையும் மறந்து நின்றோமா இல்லையே. அதேன்.. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும்.. இங்க பிறந்த பிள்ளைகள்.. எப்படி போகுங்களோ.. என்ன ஆகுமோ என்று இன்னொரு தளத்தை அவர்களுக்கு என்று வரையறுக்கின்றனர். இங்கு பிறந்த பிள்ளைகள் இங்கே உள்ள நடைமுறைகளுக்கு பழக்கப்பட்டு விடுவதால்..

அடிப்படை தவறு விடுகின்றீர்கள் இங்கும்

எந்த இனத்திலும் பல தலைமுறைகளாக வாழும் மக்கள் கூட்டத்தில் உருவாகும் சந்ததிகள் முன்னைய சந்ததிகள் போன்றே இருப்பதில்லை. அவை தமது இன அடையாளத்தினை பேணுகின்ற அதேவேளை தாம் வாழும் சூழலுக்கு, நாட்டுக்கு, சமூகத்துக்கு ஏற்ற மாதிரி தம்மை மாற்றி அமைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. சீனாவில் வாழும் சீனர்களுக்கும் இங்கு மூன்று தலைமுறையாக வாழும் சீனர்களுக்கும் பாரிய கலாசார வேறுபாடுகள் இருக்கின்றனர். யூதர்களுக்கும் இதே வேறுபாடுகள் இருக்கு.

எந்த இனம் சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி அமைத்து தன அடையாளங்களை பேணுகின்றதோ அந்த இனம் தான்

தாக்கு பிடிக்கும்

தமிழ் சந்ததியும் இதே போன்றது தான். உண்மையில் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறுவதில் தமிழ் சமூகமும் சந்ததிகளும் பின்னுக்கு நிற்பதைத் தான் காண முடிகின்றது. இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றி தன் அடையாளங்களை பேண முற்படுகின்றது.

நீங்கள் இந்த மாற்றத்தினை குறை காணுகின்றீர்கள். அப்படி தம்மை மாற்றி அமைக்க முற்படும் சந்ததிகளை தூய்மையற்ற தேசிய உணர்வு கொண்டவர்கள் என்கின்றீர்கள். இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கும் உங்கள் சிந்தனைக்கும் பெரிய வேறுபாடு இல்லை

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குடியேறி ஒரு பத்தாண்டுகள் வாழ்ந்து கழித்தவர்களும் மேற்கு நாடுகளில் பெற்றுள்ளனர். தங்கள் இன மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அரசியல் வேலை செய்துள்ளனர். இவை அனைத்தும் மேலை நாடுகளின் தேசிய நீரோட்டத்தில் குடியேற்றக்காரர்களை கலக்க வைக்கும் நடவடிக்கைகளே அன்றி.. அவர்களின் தனிப்பட்ட இனத்துவக் காப்பு பற்றிய அக்கறையின் பாலானதன்று.

உங்களின் கருத்துக்கு மாறான கருத்தே என்னிடம் உள்ளது

ஒரு தேசத்தின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்பது மிகச் சரியான முடிவு. இதை அனைத்து நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈடுபட்டு தம் அரசியல் பலத்தினை அதிகரிக்க வேண்டும் என்பது என் அவா. கனடாவை பல மாறுபட்ட குழு அரசியல் நிலைபட்டால் தாமதமாக நடந்துள்ளதாகவே உணருகின்றேன்

சிறீலங்காவிலும் எம்மவர்கள் ஆண்டாண்டா பாராளுமன்றம் போகின்றனர். பாராளுமன்றம் போவதன் மூலம் எமது உரிமைகள் பெறப்படுகின்றன.. அல்லது காக்கப்படுகின்றன என்றால்.. ஏன் நாங்கள் போராடி இருக்க வேண்டும்..???! தேவை இல்லைத் தானே. ஜனநாயகம் தேர்தல் என்று வரும் போது கனடாவும் சிறீலங்காவும் ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளாகவே உலகால் பார்க்கப்படுகின்றன. ஆனால் அங்குள்ள வேறுபாட்டை அவை இனங்காண்பதில்லை. நாமும் காட்ட முற்படுவதில்லை.

இங்கே யாரு சிறி லங்காவின் பாராளுமன்ற பிரதிநித்துவம் பற்றியும் அது பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் கூறுவது? யாரும் இல்லையே..அப்படி கூறும் அளவுக்கு அரசியல் அரிச்சுவடி படிக்காதவர்கள் இல்லை. இதை நீங்கள் இங்கே எழுதும் தேவை ஏன் வந்தது ?

நாங்கள் சிறீலங்கா சிங்களப் பாராளமன்றத்துக்கு அதன் அரசியல் அமைப்பை ஏற்று போவதே உண்மையில் தவறு. அப்படி ஏற்பதன் மூலம்.. நாம் அந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புகிறோம் என்பதையே காட்டி நிற்கிறோம். அதாவது கனடாவில் தமிழர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இன்று செய்ய விரும்பி நிற்பது போல.

சிறி லங்கா பாரளுமன்றத்திட்கு உறுப்பினராக போவதையும் கனடா பாராளுமன்றத்துக்கு உறுப்பினராக போவதையும் மீண்டும் மீண்டும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் உங்களை என்னவென்று சொல்வது.

என்னைப் பொறுத்தவரைக்கும் கனடா அரசியல் அமைப்பை ஏற்று கனடா பாராளுமன்றம் போவது சரியான முடிவுதான். அதில் எந்த தவறும் இல்லை

ஆனால் கனடாவில் நாம் குடியேறிகள்... எமது பிரச்சனைகளை கவனிக்க யாரும் இல்லை அல்லது இருக்கிற வெள்ளையள் ஒழுங்கா கவனிக்கிறதில்ல.. அல்லது எம்மோடு கலப்பதில்லை. இந்த நிலையில் எமது சொந்த இனப் கனடியக் குடியேறியை நாடாளுமன்றம் அனுப்பினால் ஏதேனும் விடிவு வரும் என்று நினைக்கிறோம். கனடிய தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்.. அதனால் பயன்கிடைக்கும் என்று செயற்படுகிறோம். ஆனால் அதையே தமிழினத்தின் விடிவுக்கான முயற்சி என்பது போல.. இனங்காட்டுவதும்... அரசியல் செய்வதும் தான் ஏன்..??! அது அரசியல் வியாபாரம் இல்லையா..???! :) :)

பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருப்பதும், அதை தீர்க்க அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப பாராளுமன்ற அரசியலை ஏற்பதும் சரியான செயல் தான். அது தவறு என்றால், அது வெறும் வியாபாரம் என்றால் மாற்று வழி என்ன? தெரிந்தால் சொல்லுங்கள்.

கனடாவில் அனேகமாக ஒவ்வொரு இனத்துக்கும் பிரதிநிதிகள் இருக்கும் போது, தமிழ் மக்களுக்கும் ஒன்றல்ல பல இருக்க வேண்டும் என சிந்திப்பது எனக்கு சரியாக இருக்கின்றது. இது கனடா வாழ் தமிழ் மக்களுக்கான அரசியல் பலத்தினை அதிகரிக்க செய்யும் என்பது என் திடமான நம்பிக்கை. இதே போல் கனடாவில் மட்டுமன்றி பிரித்தானியா, நோர்வே, ஆசி போன்ற நாடுகளிலும் தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்பது என் அவா. அது தவறு என்றால் அதற்கான மாற்று வழி என்ன என்று சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களால் சாதிக்க முடியாததை ஒரு பெண்ணாக நின்று சாதித்தமைக்காக ராதிகாவுக்கு எனது பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறியளவில் இருக்கும் ஒரு இனத்துக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மிக தேவையான என்ற ஒன்றைக் கூட நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றீர்கள். குறிப்பிட்ட இன மக்கள் செறிந்து வாழும் பகுதியில் தான் அந்த இனத்துக்குரிய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி வைப்பதுக்கு அரசியல் கட்சிகள் முன் நிற்கின்றன. அப்படி நிறுத்தி அவர் வெல்லும் போது அந்த இனத்துக்கான அடையாளம் பாராளுமன்றத்தில் கிடைக்கின்றது. இதன் அடையாளம் அந்த இனத்துக்காக அவர் கட்சி கட்டுப்பாடுகளை கடந்து அவர் போராடவேண்டும் என்றல்ல. தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஓரளவுக்கேனும் சிறந்த கொள்கைகளைக் கொண்ட ஒரு கட்சியால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் தோல்வி அடைவாராயின், நிச்சயம் அது அந்த பகுதியில் செறிந்து வாழும் தமிழர்களுக்கு நிச்சயம் பாதகமாகவே அமையும். இன்னொரு தடவை ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த அனைத்து கட்சிகளும் தயங்கும். இதே போலத்தான் சீக்கியர்களுக்கும், சீனர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகின்றது.

அடிப்படை தவறு விடுகின்றீர்கள் இங்கும்

எந்த இனத்திலும் பல தலைமுறைகளாக வாழும் மக்கள் கூட்டத்தில் உருவாகும் சந்ததிகள் முன்னைய சந்ததிகள் போன்றே இருப்பதில்லை. அவை தமது இன அடையாளத்தினை பேணுகின்ற அதேவேளை தாம் வாழும் சூழலுக்கு, நாட்டுக்கு, சமூகத்துக்கு ஏற்ற மாதிரி தம்மை மாற்றி அமைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. சீனாவில் வாழும் சீனர்களுக்கும் இங்கு மூன்று தலைமுறையாக வாழும் சீனர்களுக்கும் பாரிய கலாசார வேறுபாடுகள் இருக்கின்றனர். யூதர்களுக்கும் இதே வேறுபாடுகள் இருக்கு.

எந்த இனம் சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி அமைத்து தன அடையாளங்களை பேணுகின்றதோ அந்த இனம் தான்

தாக்கு பிடிக்கும.

தமிழ் சந்ததியும் இதே போன்றது தான். உண்மையில் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறுவதில் தமிழ் சமூகமும் சந்ததிகளும் பின்னுக்கு நிற்பதைத் தான் காண முடிகின்றது. இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றி தன் அடையாளங்களை பேண முற்படுகின்றது.

நீங்கள் இந்த மாற்றத்தினை குறை காணுகின்றீர்கள். அப்படி தம்மை மாற்றி அமைக்க முற்படும் சந்ததிகளை தூய்மையற்ற தேசிய உணர்வு கொண்டவர்கள் என்கின்றீர்கள். இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கும் உங்கள் சிந்தனைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

உங்களின் கருத்துக்கு மாறான கருத்தே என்னிடம் உள்ளது

ஒரு தேசத்தின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்பது மிகச் சரியான முடிவு. இதை அனைத்து நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈடுபட்டு தம் அரசியல் பலத்தினை அதிகரிக்க வேண்டும் என்பது என் அவா. கனடாவை பல மாறுபட்ட குழு அரசியல் நிலைபட்டால் தாமதமாக நடந்துள்ளதாகவே உணருகின்றேன்.

இங்கே யாரு சிறி லங்காவின் பாராளுமன்ற பிரதிநித்துவம் பற்றியும் அது பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் கூறுவது? யாரும் இல்லையே..அப்படி கூறும் அளவுக்கு அரசியல் அரிச்சுவடி படிக்காதவர்கள் இல்லை. இதை நீங்கள் இங்கே எழுதும் தேவை ஏன் வந்தது ?

சிறி லங்கா பாரளுமன்றத்திட்கு உறுப்பினராக போவதையும் கனடா பாராளுமன்றத்துக்கு உறுப்பினராக போவதையும் மீண்டும் மீண்டும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் உங்களை என்னவென்று சொல்வது.

என்னைப் பொறுத்தவரைக்கும் கனடா அரசியல் அமைப்பை ஏற்று கனடா பாராளுமன்றம் போவது சரியான முடிவுதான். அதில் எந்த தவறும் இல்லை.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருப்பதும், அதை தீர்க்க அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப பாராளுமன்ற அரசியலை ஏற்பதும் சரியான செயல் தான். அது தவறு என்றால், அது வெறும் வியாபாரம் என்றால் மாற்று வழி என்ன? தெரிந்தால் சொல்லுங்கள்.

கனடாவில் அனேகமாக ஒவ்வொரு இனத்துக்கும் பிரதிநிதிகள் இருக்கும் போது, தமிழ் மக்களுக்கும் ஒன்றல்ல பல இருக்க வேண்டும் என சிந்திப்பது எனக்கு சரியாக இருக்கின்றது. இது கனடா வாழ் தமிழ் மக்களுக்கான அரசியல் பலத்தினை அதிகரிக்க செய்யும் என்பது என் திடமான நம்பிக்கை. இதே போல் கனடாவில் மட்டுமன்றி பிரித்தானியா, நோர்வே, ஆசி போன்ற நாடுகளிலும் தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்பது என் அவா. அது தவறு என்றால் அதற்கான மாற்று வழி என்ன என்று சொல்லுங்கள்

உங்கள் கருத்தில் சுய முரண்பாட்டை சுட்டிக்காட்டுகிறேன்..

தேசிய ரீதியாக நீங்கள் கனடிய தேசியத்தை பிரதிபலிக்க விரும்புகிறீர்கள். இனத்துவ ரீதியாக தமிழர்களாக இனங்காட்ட விரும்புகிறீர்கள். ஆனால் இடையில் சந்ததி கனடியராக வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள்..! இல்லேல் தக்கன பிழைக்கும் அல்லன மாளும் என்றும் சொல்கிறீர்கள்.

இடையில் என்னை அடிப்படைவாதிகளோடும் ஒப்பிடுகிறீர்கள்...??!

அடிப்படையில் உங்களுக்கு கனடிய தேசிய அரசியல் வேண்டும். வாக்கு வாங்க.. மற்றவர்களில் இருந்து பிரிந்துக் காட்ட.. தமிழர் என்ற இனத்துவம் வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு கனடியராக வாழ்வு வேண்டும். இதில் எந்த அடிப்படைவாதத்தையும் நீங்கள் காணவில்லை என்றும் மறுக்கிறீர்கள்.

சிறீலங்காவில் இருக்கும் உங்கள் பூர்வீக நிலத்தை விட்டு இன்னொரு தேசத்தில் அடைக்கலம் பெற்றிருக்கும் நீங்களே... அந்த நாட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று விரும்பும் போது.. பல்லின மக்களை உள்வாங்கும் கனடா நிச்சயம் உங்களை கனடியர்களாக முற்று முழுதாக மாற்றுவதில் தான் அக்கறை செய்யும். கனடிய தமிழர்கள் என்று நீங்கள் உச்சரிப்பதில் இருக்கும் தமிழ் அடிப்படைவாதம் உங்களுக்குப் புரியவில்லை. கனடாவில் கனடியர்களுக்கு தமிழர்களின் மொழியோ.. கலாசாரமோ.. பண்பாடோ.. விழுமியமோ அவசியமில்லை. அவை அவர்களின் தேசியத்தை பிரதிபலிக்கவும் போறதில்லை. அப்படி இருக்க எதற்கு உங்களை கனடிய தமிழர்கள் என்று தமிழ் அடிப்படைவாதத்தால் அழைக்கிறீர்கள் என்ற கேள்வியை என்னாலும் முன் வைக்க முடியும்.

யார் அடிப்படைவாதிகள்.. ஏன் அவர்களை அடிப்படைவாதிகள் எங்கிறோம்...???!

கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பிறந்த பிள்ளைகளால் தமிழர்களாக வாழ முடியாது எனும் போது மாற்றம் வேண்டும் எனும் போது சிங்கள தேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் பிறந்த தமிழர்கள் மட்டும் தமிழீழம் அமைக்க போராடனும் என்ற உங்கள் எதிர்பார்ப்பும்... ஒரு வகையில் அடிப்படைவாதமாக இனங்காட்டப்படலாம். ஏன் தமிழ் தேசியம் கூட ஒரு அடிப்படைவாதமாக இனங்காட்டப்படலாம்.

அடிப்படைவாதம் என்ற கருதுகோளுக்கு அப்பால்... யூதர்கள் தமிழர்களை விட பல தலைமுறைகளாக மேற்கு நாடுகளில் வாழ்கின்ற போதும் இப்போது கூட யூதக் குழந்தைகளை இலகுவான இனங்காண முடிகிறது. அவர்கள் அந்தந்த நாட்டு தேசிய அடையாளங்களோடு இணங்கி வாழ்கின்ற போதும்.. தமது இனத்துவ அடையாளத்தை கைவிடவில்லை. தமிழர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் அதைக் கைவிடுவதன் மூலமே அந்தந்த நாட்டு தேசியத்துக்குள் பூரணமாக கலந்து தக்கன பிழைக்க முடியும் என்கிறீர்கள்.

இது அறியாமை. தமிழர்கள் நிறந்தால்.. கனடியப் பூர்வீகம் அடைய முடியாது. கனடிய கறுப்பர்கள்.. கறுப்பர்களாகத்தான் இனங்காணப்படுகின்றனர். கனடிய ஆசியர்கள் ஆசியர்களாகத்தான் இனங்காணப்படுகின்றனர். கனடிய வெள்ளையர் பூர்வ குடிகளாக இருக்கின்றனர். எல்லோரையும் கனடியர்கள் என்ற ஒரு வகைக்குள் வைக்கவில்லை. அப்படி இருக்க தமிழர்கள் மட்டும்... பூரணத்துவமான கனடியர்களாக மாறினால் தான் தப்பிப் பிழைக்க முடியும் என்கிறீர்கள். இதையே தான் சிங்கள பேரினவாதமும் சொல்கிறது. இப்போ சொல்லுங்கள் எது அடிப்படைவாதம்.

அந்தந்த மக்கள் கூட்டம் அவர்களாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பும் வடிவில்.. அந்தந்த நாடுகளில் வாழ அனுமதிக்கப்படும் போதுதான் உண்மையான பல்லினத்துவம் பிரதிபலிக்க முடியும். அதைவிடுத்து.. பல்லின நாடுகள் என்று கூறிக் கொண்டு மக்களை ஒரு தேசிய நீரோட்டத்துக்குள் அடங்கச் செய்வது ஒரு வகை அடக்குமுறையே ஆகும். அங்கு தக்கன பிழைப்பது நடக்கிறதோ இல்லையோ.. இனத்துவம் சிறுகச் சிறுக இழக்கச் செய்யப்படுகிறதே. இருந்தாலும்.. பிறப்புரிமை இயல்புகள்.. அதனை தடுத்து நிறுத்தி விடுகின்றன.

கனடாவில் வாழும் தமிழர்களிடம் ஒரு அறிவிப்பை செய்யுங்கள். ஒரு ஊசியைப் போட்டால் வெள்ளையர் ஆகலாம் என்று. அத்தனை தமிழர்களும் வெள்ளையாக முண்டி அடிப்பார்கள். இதில் தக்கன பிழைப்புக்கான வழி இருக்கிறதோ இல்லையோ.. தங்களுக்கு வெள்ளையர் போன்ற உரிமை வேண்டும் என்பதில் அவர்களுக்கு உள்ளூர ஒரு தேவை அல்லது ஏக்கம் இருக்கிறது. இதற்கு இயற்கை தடையாக இருக்கிறது. வெள்ளையர் மத்தியில் தமிழர்களை இனங்காணக் கூடிய இயற்கை கூட தக்கன பிழைத்தலை தடுக்கிறது. அப்போ உங்களின் கருத்துப் படி.. இயற்கையும் நிற அடிப்படைவாதி..!

என்னுடைய கருத்து.. கனடாவிலோ.. எங்குமோ.. முதலில் நாங்கள் அங்கு சிறுபான்மை இனத்தை பிரதிபலிக்கும் மக்கள் என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் எங்கு பிறந்தாலும்.. எந்தக் கடவுச் சீட்டை கொண்டிருந்தாலும் எங்கள் பிறப்புரிமை எங்களுக்கான தனித்துவ அடையாளத்தை அளிக்கிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

பல்லின சமூகத்தை மதிக்கும் தேசங்களில் சம உரிமை அளிக்கப்பட்டால் நாம் மற்றவர்களோடு கலந்து வாழ வேண்டும் என்ற நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அரசியலுக்காக தமிழர்கள் என்று உச்சரிப்பதும் மற்றவற்றுக்கு கனடியர்கள் என்று வெட்டி பந்தா காட்டுவதும்.. எமது உண்மை நிலையை நாம் உணர முடியாமல் செய்கிறது என்பதை உணரத் தலைப்பட வேண்டும்.

பிறந்த இடத்தால் அன்றி.. எவரும் எங்கும் தனது இனத்துவத்துக்கான அடையாளத்தை கொண்டு வாழ முடியும் என்ற பல்லினத்துவ உண்மைக்கு தமிழர்கள் இசைவாக வேண்டும்.

கனடா என்ற தேசம்.. பல்லின மக்கள் வாழும் தேசமாக அடையாளப்படுத்தப்படுகின்றதே அன்றி.. அதன் அரசியல் கனடிய தேசியம் சார்ந்து இருந்தாலும்.. அது பல்லின மக்களும் தமது இனத் தேசியத்தை அடையாளங்களை மதிக்க கடைப்பிடிக்க அனுமதிக்கிறது. அதை தமிழர்கள் சரியாக விளங்கிக் கொண்டு.. வாழ முனைய வேண்டும்.

கனடிய தேசிய அரசியலில் கலப்பதால்.. தமிழர்களின் தேசிய அடையாளங்களை கைவிட வேண்டும் என்றோ அல்லது அதை வெளிக்காட்டக் கூடாது என்றோ.. அல்லது மறந்து விட வேண்டும் என்றோ நினைக்கக் கூடாது. சந்ததிகளுக்கு அவை அவசியம் இல்லை என்று தீர்மானிக்கக் கூடாது.

கனடாவில் பிறந்தால் என்ன விண்வெளியில் பிறந்தால் என்ன தமிழரின் குழந்தையை அதன் பிறப்புரிமை இனங்காட்டும் என்பதை முதலில் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏதோ கனடாவில் ஐரோப்பாவில் பிறந்து விட்டதற்காக அவர்கள் தெய்வக்குழந்தைகள் கிடையாது. இன்று உலகம் கிராமமாகி பல்லின கலாசாரமும் உள்வாங்கப்பட்டு மக்கள் எங்கும் கிட்டத்தட்ட ஒரே வாழ்கை முறைக்கு அமைய வாழும் நிலை ஏற்பட்டுள்ள இன்றைய உலக மயமாக்கல் காலத்தில் கனடா பிள்ளை அப்படி வளருது.. இது இப்படி வளரது என்ற சமூக மாற்றங்களை சரியாக இனங்காண விரும்பாத கருத்துக்களால் எம்மவர்கள் ஒரு புதிய மூட நம்பிக்கைக்குள் நுழைவது அவசியமற்றது. கனடாவில் பிறந்தால் என்ன எங்கு பிறந்தால் என்ன அடிப்படையில் எல்லோரும் மனிதர்கள். தேவைகள் பல பொதுவானவை. அதை உணர தமிழர்கள் முதலில் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் இந்தப் பூமிப் பந்தில் வாழும் தகவையே அடைய முடியும். வெட்டி அரசியல் பந்தா எமக்கு அவசியமில்லை.

காத்திரமான அரசியலே இனத்துவம் பிரதிபலிக்கும் அரசியலே எமக்கு அவசியம். இனத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல் எமக்கு அவசியமில்லை. அது பல்லினத்துவத்துக்கும் உதவாது.. தமிழ் தேசிய இனத்துக்கும் உதவாது. அது குடியேற்றக்காரர்களை வைத்து கொள்கை வரையும்.. அடிப்படை வாதிகளுக்கே உதவி நிற்கும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற நாமத்தை உச்சரித்து போராடியதில்..........அங்கும் விடிவில்லை...இங்கும் விடிவில்லை!

இனிமேலாவது சம்பத்தப்பட்டவர்கள் தயவுசெய்து ஒழுங்குசெய்யுங்கள் அல்லது ஒதுங்கி நில்லுங்கள்.

வெளிப்படையாக முன்னுக்கு நிற்பவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள்!

ஈழத்தமிழனுக்கு நாடு வேண்டும். அதற்காகவாவது ஒன்றிணையுங்கள்.

இன்னும் குறுகியகாலத்திற்குள் தமிழ்ப்பிரதேசம் முழுவதும் அரைகுறை சிங்களமயமாகி விடும்?

எந்தவொரு சிறிய சுய உரிமையையும் சாதாரண சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி வெல்லமுடியாத அளவிற்கு தமிழனை சிங்களவன் அடக்குவான்?

கொஞ்சம் சிந்தியுங்கள்...விதண்டாவாதங்களை விடுத்து முன்னுக்கு வாருங்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கனெடியத் தேர்தலில் முதன்முறையாகப் பாராளுமன்றிற்கு செல்வதற்குத் தெரிவான ராதிகா சிற்சபேசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். புலம்பெயர்ந்த தமிழரின் வரலாற்றிலேயே இதுவே முதலாவது தெரிவாகும். பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் ராதிகா எம்மினத்திற்கு பெருமைதேடித்தந்தும் அதே நேரம் மற்றைய சமூகங்களின் மதிப்பிற்கு உரியவராகவும் உயர்வு கண்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.