Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிஸ்டம் அழைக்குமா?

Featured Replies

புலம் பெயர் நாடுகளில் பலவகையான லொத்தர் முறைகள் நடைமுறையில் உள்ளன

6/49,லொட்டோ மக்ஸ், ஸ்போட்ஸ் பூல்,அதைவிட பல ஸ்கிறச் டிக்கெட்டுகள்,கசினோ போன்றவை.எனது நண்பர்கள் பலர் வாராவாரம் குறிப்பிட்டதொகையை அதற்காக செலவழிக்கின்றார்கள்.சிலர் இவை எல்லாம் ஒருவகை மோசடி என்று விளையாடுவதே இல்லை.

கனடாவில் லக்கிராஜா என்பவர் 12 மில்லியன் வென்றார்.எனக்கு தெரிந்த ஒரு வயோதிபர் ஸ்கிறச்சில் 1 மில்லியன் வென்றார்.

நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்டதொகை வென்றேன்.நீங்கள் யாராவது ஏதாவது லொத்தர் விளையாடுபவர்களா?

யாராவது ஏதும் பரிசு வென்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்வந்து உந்த அதிஸ்டங்களை நம்புறவன் இல்லை?எடுபாடும் இல்லை :D

ஏதோ....முடிஞ்சளவுக்கு....என்னாலை ஏலூமனவரைக்கும் உழைச்சுசாப்பிடோணும் எண்டு நினைக்கிறவன் :)

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஒரு லொத்தரில் ஒரு லட்சம் வெல்வதற்கான நிகழ் தகவானது, நாளை நாங்கள் மண்டையைப் போடப் போகும் நிகழ் தகவிலும் பார்க்கக் குறைந்ததே!

மிச்சத்தை நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்!!!

ஒவ்வொரு கிழமையும் ஒரு டிக்கெட் எடுப்பேன். National Lottery இல் எனக்கு மூன்று முறை 5 இலக்கங்கள் விழுந்துள்ளது. 6 இலக்கங்கள் விழுந்திருந்தால் (ஜாக்பாட்) இன்று நானும் ஒரு பிரபல தொழிலதிபராக இருந்திருப்பேன்.

இதில் வினோதம் என்னவென்றால், ஒருமுறை அந்தக் கிழமைக்கான லொட்டரி ரிக்கற் எடுத்ததை மறந்து அதே இலக்கத்தில் மீண்டும் ஒரு ரிக்கற்றை தவறுதலாக எடுத்து விட்டேன். அந்த இரு ரிக்கற் இற்கும் பரிசு விழுந்தன. (5 இலக்கங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

lottoschein.jpg

தொடர்ந்து பல வருடங்களாக லொத்தர் போட்டும் 4 இலக்கத்துக்கு மேல் விழவில்லை. 150 € மட்டும் ஒருமுறை விழுந்தது.

அதற்குப் பின் இப்போது லொத்தர் போடுவதில்லை. ஆறுமாதத்திற்கு ஒரு முறை அதிர்ஷ்டத்தை சோதிப்பதற்காக 10€க்கு எப்பவாவது போடுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்டால் ஒருக்காலும் விழுந்ததில்லை ^_^ ஆனால் நான் இது வரை 4.5 தரம் தான் லொட்டரி எடுத்திருக்கேன் :lol: :lol: :lol:

எனக்கும் அதிர்ஸ்டத்திற்கும் வெகுதூரம். இருந்தாலும் நான் முன்னர் 649 விளையாடுவதுண்டு. பின்னர் சுப்பர் 7, இப்போது மக்ஸ். பரிசுத்தொகை அதிகமாக இருந்தால் 649ம் வாங்குவதுண்டு. ஒவ்வொரு கிழமையும் ஒரு மக்ஸ் வாங்குவேன். அவர்கள் தரும் டிக்கட்தான் வாங்குவேன். அதிர்ஸ்டம் இருந்தால் அந்த ஒரு ரிக்கட்டிலேயே வரும் என்பது எனது நம்பிக்கை. அதனால் அதிக ரிக்கட்டுகள் வாங்குவதில்லை. வேலைத்தளத்திலும் குறூப்பாக மக்ஸ் விளையாடுகிறோம். தனியாக விளையாடியதில் அதிகம் கிடைத்தது 20 டொலர்கள் மட்டுமே. அதுவும் இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே வென்றிருக்கிறேன். :(:(:(:(:(

  • தொடங்கியவர்

எனக்கு சில வருடங்களுக்கு முதல் 12.5 மில்லியன் விழுந்தது.

பெரிய சோகம் அதை 60 ஆக பிரிக்கவேண்டிவந்தது.

நான்வந்து உந்த அதிஸ்டங்களை நம்புறவன் இல்லை?எடுபாடும் இல்லை :D

ஏதோ....முடிஞ்சளவுக்கு....என்னாலை ஏலூமனவரைக்கும் உழைச்சுசாப்பிடோணும் எண்டு நினைக்கிறவன் :)

கு.சா. எனக்கு உழைக்காமல் சொகுசாக வாழவேண்டுமென்பதே விருப்பம். அதுவும் இந்த 8-5 வேலை இருக்கிறதே. எப்போது வேலையை விட்டு ஒரு தொழிலைத் தொடங்குவேன் என்றிருக்கிறது. :mellow::mellow::mellow:

  • தொடங்கியவர்

56 பேர் விளையாடிய சுப்பெர் செவெனை 60 ஆகப் பிரித்தது வேறுகதை.

எனக்கு சில வருடங்களுக்கு முதல் 12.5 மில்லியன் விழுந்தது.

பெரிய சோகம் அதை 60 ஆக பிரிக்கவேண்டிவந்தது.

56 பேர் விளையாடிய சுப்பெர் செவெனை 60 ஆகப் பிரித்தது வேறுகதை.

ஐயோ!! :o ஆராவது இந்த மில்லியன் கதையைக் கேளுங்கப்பா... ^_^:lol: இல்லாட்டி இந்தாளுக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்கு... :lol::D தன்ர பாட்டில கதை போய்க்கொண்டு இருக்கு... :lol: :lol: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சில வருடங்களுக்கு முதல் 12.5 மில்லியன் விழுந்தது.

பெரிய சோகம் அதை 60 ஆக பிரிக்கவேண்டிவந்தது.

இப்ப நீங்கள் அவங்களைப்பத்தித்தானே சொல்ல வாறியள்?

எனக்கு பல தடவை வழுந்தது அதில 4 பெரிய வீடும் வாங்கீட்டன்

4 வித்தியாசமான நாட்டில.....................

ஏனப்பா லொத்தர் எல்லாம் போட்டு காசை கரியாக்கிறியள்

ஒரு பெரிய தொகையில சீட்டு போடுங்கோ முதல் சீட்டை எடுத்துக் கொண்டு

இடத்தை மாத்துங்கோ................பேந்து பாருங்கோ நீங்க தான் லட்சாதி பதி!!!!!!!

நல்லதை சொல்லுறன் கேட்டு செய்யுங்கப்பா.........................

இந்த லொத்தர் செவில்லாத லொத்தர் கட்டாயம் விழும்.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 10% கேவலார் மாதா க்கு,40%கஸ்டப்பட்ட சனத்துக்கு 50% எனக்கு என்று கண்க்கு போட்டு கொஞ்ச காலம் புதன்,சனிக்கிழமையிலை 6 / 49 லொத்தர் வெட்டுறனான் விழாது விட்டுட்டேன். ப்ரியா வை கூட கேட்டிருக்கிறேன் உனக்கு பிடிச்ச 6 நம்பர் சொல்லு என்று. அப்படியும் விழுவது இல்லை. எப்பவாச்சும் 8.35€ 21€ விழுந்து இருக்குது. இப்ப வெட்டுறதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய தொகையில சீட்டு போடுங்கோ முதல் சீட்டை எடுத்துக் கொண்டு

இடத்தை மாத்துங்கோ...........

.....பேந்து பாருங்கோ நீங்க தான் லட்சாதி பதி!!!!!!!

நல்லதை சொல்லுறன் கேட்டு செய்யுங்கப்பா.........................

இந்த லொத்தர் செவில்லாத லொத்தர் கட்டாயம் விழும்.........................

பிரான்சில் தேடப்படும் நபரா தாங்கள்...............??? :lol::D:D:D

விசுகு காட்டிக் கொடுத்து விடாதீர்கள்

பின் நீங்களும் ஒறியினல் தமிழர் ஆகிப் போடுவியள்

நான் இதுவரைக்கும் ஒரு Ticket கூட வாங்கியது இல்லை. என் அப்பா வாழும்காலம் முழுதும் வாராவாரம் வாங்கி ஒன்றுமே கிடைக்காமல் போனதைப் பார்த்ததால் மனதுள் உருவான வெறுப்போ தெரியாது, ஒரு போதும் எடுத்ததில்லை. அத்துடன் என் ராசி பற்றியும் எனக்கு நாளா தெரியும். எல்லாருக்கும் இலகுவாக கிடைக்கின்ற விடயத்துக்கே நான் இரண்டு மடங்கு முயன்றால் தான் எனக்கு கிடைக்கும். அப்படி இருக்கா நிச்சயம் அதிஷ்ட லாப சீட்டில் ஒன்றும் கிடைக்காது

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை செய்த இடத்துக்கு முன் கடை இது சம்பந்தமானது

ஒரு குறிப்பிட்ட 6 இலக்கங்களை கிட்டத்தட்ட 20 வருடங்களாக போட்டுவந்தேன்(ஆகக்குறைந்த பணத்துக்கு). சிறு சிறு தொகை விழுந்ததுண்டு. தற்போது அதையும் நிறுத்திவிட்டேன். காரணம் அதில் பணம் வந்தால் நாட்டுக்கு கொடுப்பது என்றுதான் போட்டுவந்தேன் தற்போது மனத்தில் வெறுமை அத்துடன் அதில் போய் நின்று போட நேரமுமில்லை.

சிலவேளை அந்த இலக்கங்கள் விழுவதை நான் எப்போதாவது பார்க்க நேர்ந்தால்......?

அதனால் தற்போது அந்த முடிவுகளையும் பார்ப்பதில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில வருடங்களுக்கு முதல் 12.5 மில்லியன் விழுந்தது.

பெரிய சோகம் அதை 60 ஆக பிரிக்கவேண்டிவந்தது.

என் அண்ணா 60 பேர் சேர்ந்தா ரிக்கட் வாங்கினீங்கள்?...அப்படி என்டால் வெற்றி உங்களுக்கு மட்டும் எப்படிச் சொந்தமாகும் :unsure:

  • தொடங்கியவர்

வேலை செய்யுமிடத்தில் குறூப்பாக விளையாடினோம்.56 பேர்தான் விளையாடியது.ஒரு கறுப்பின பெண்மணி காசு சேர்த்து ரிக்கெட் வாங்கி எல்லோருக்கும் ஒரு கொப்பி வேறு கொடுத்தா.ஒரு நபர் ஒரு பங்குக்கு மேல் விளையாடமுடியாதெனத்தான் முடிவு செய்திருந்தோம்.

முடிவு வந்த அடுத்த நாள் எமது பொஸ் எல்லோரையும் கூப்பிட்டு 60 பேர் விளையாடிருக்கின்றோம்.யாரவது பிரச்சனை கொடுத்தாலோ,அந்தபெண்ணிடம் கேள்வி ஏது கேட்டாலோ வேலையிலும் இருந்தும் தூக்கி,பணமும் தராமல் விட்டுவிடுவேன் என மிரட்டி 60 ஆகத்தான் பிரிக்கப்பட்டது.

கறுப்பின பெண்மணிக்கு இரு பங்குதருவதாக ஆசை காட்டிமேலதிகமாக இன்னமும் 3 பெயர்களை அதில் இணைத்து விட்டார்கள்.பொஸ் உட்பட, அவன் ஏற்கனவே மல்றிமில்லியனர்.

ஏதோ அகப்பட்டவரை காணும் என எல்லோரும் வாயைபொத்திவிட்டார்கள்.தலா $210,000.00 கிடைத்தது.

அதுதான் எப்பவும் பொஸ்ஸாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை புரியிறமாதிரி இல்லை

இது சீட்டுப்போட்டது போலுள்ளது.

லாட்டரியில் பரிசு எமக்குத்தான் என்று திட்டமிட்டு, 60 பேரை இணைத்து, அதிலும் எல்லோருக்கும் பிரதிகொடுத்து,,,,,,,,,,,,,,,,,,,,..............................????????????????????????????????

கதை புரியிறமாதிரி இல்லை :(:(:(

கதை புரியிறமாதிரி இல்லை

இது சீட்டுப்போட்டது போலுள்ளது.

லாட்டரியில் பரிசு எமக்குத்தான் என்று திட்டமிட்டு, 60 பேரை இணைத்து, அதிலும் எல்லோருக்கும் பிரதிகொடுத்து,,,,,,,,,,,,,,,,,,,,..............................????????????????????????????????

கதை புரியிறமாதிரி இல்லை :(:(:(

விசுகு,

இங்கு லாட்டரி குரூப் ஆக விழையாடுவதுதான் வழமை. அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் குரூப் ஆக சேர்ந்து தமக்கு விருப்பான இலக்கங்களை தெரிவுசெய்வர். 60 பேர் எனில் 60 நம்பர்கள். அதில் ஒன்று சரியாக வந்தாலும் அறுபது பேரும் பங்கிட வேண்டும். அப்படி வெல்லப்படும் போது, குரூப்பில் இல்லாத மற்ற வேலையாட்களும் கூட தமக்கும் பங்கிருக்கு என்று வழக்கு போடுவதும் வழமை. இந்த பிரச்சனை வராமல் இருக்க டிக்கெட் இற்கு காசு கொடுத்த அனைவரினதும் கையொப்பம் ஒவ்வொரு தடவையும் வாங்குவர். அண்மையில் டொரோண்டோ வில் விழுந்த பெரிய ஜாக்போர்ட் அனைத்தும் குரூப்பாக விளையாடி வெல்லப்பட்டது தான்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விளக்கத்துக்கு நிழலி

(இங்கு பிரான்சில் இப்படி இல்லை)

மன்னிக்கவும் தவறான புரிதலுக்காக அர்ஜீன்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உலகம் முழுக்க லொட்டோ சட்டம் ஒன்றுதான்.

நாம் ஒன்று சேர்ந்து எமது பொஸ்சை எதிர்க்கும் திராணியில்லாமல் போய்விட்டது.எல்லோரும் சேர்ந்திருந்தால் அவர் சிறைக்கு கூட போயிருக்கலாம்.பின்னர் சில மாதங்களின் பின் வாய் திறந்து இரண்டுபேர் வேலை இழந்தார்கள்.

எங்கும் ஒற்றுமையே பலம்.

உலகம் முழுக்க லொட்டோ சட்டம் ஒன்றுதான்.

நாம் ஒன்று சேர்ந்து எமது பொஸ்சை எதிர்க்கும் திராணியில்லாமல் போய்விட்டது.எல்லோரும் சேர்ந்திருந்தால் அவர் சிறைக்கு கூட போயிருக்கலாம்.பின்னர் சில மாதங்களின் பின் வாய் திறந்து இரண்டுபேர் வேலை இழந்தார்கள்.

எங்கும் ஒற்றுமையே பலம்.

கனடாவில் ஒருவரை தனிப்பட்ட கோபத்தின் காரணமாக வேலையை விட்டு நீக்குவது அப்படி ஒன்றும் இலகுவான விடயம் இல்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.