Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

Posted

தூய்ஸ் அதென்ன இன்பம் நம்மப புவனம் அக்காவையும் ராதியையும் வாரிறியள் நெடுகலும் நல்லாய் இல்லைச்சொல்லிப்போட்டன்...

முருகனை வளர்த்த கதை நல்லாய்த்தான் இருக்கு.. :wink: :P

;) சும்மாதான்...போக போக ராஜனை வாறலாம் ;)

நீங்கள் பிள்ளையாரை வளர்க்கலையா? ;) இங்க ஒரு பிள்ளையார் கோவிலும் வருது....பிள்ளையாரை யார் வளர்க்கினமோ

  • Replies 244
  • Created
  • Last Reply
Posted

உங்கட புலம்பல் நன்றாக இருக்கிறது. உங்கட புலம்பல் போல நகைச்சுவையான சிட்னிமக்களின் அன்றாட வாழ்க்கையில் வரும் சம்பவங்களினைத் தொகுத்து ஜெயமோகன் அவர்களின் நெறியாற்றலில் தாயரிக்கப்பட்ட மனிதனேயத்தின் லவின்கோ லவிங் நாடகங்களினை நேற்று பார்த்தேன். நன்றாக வயிறு குழுங்கச்சிரித்து ரசித்தேன். நீங்கள் பார்த்தனீங்களா?. பாக்கவிட்டால் வருகிற சனிக்கிழமையிலும் பாக்கலாம். நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் பணம் ஈழத்தில் உள்ள அகதிகளுக்கு செலவிடப்படுகிறது.

இல்லை கந்தப்பு நான் போகவில்லை. போன வருடமும் இப்படி ஒரு நாடகம் அரங்கேறியதாக கேள்விபட்டுள்ளேன்.

பாராட்டுக்கு நன்றி :lol:

Posted

ஸ்ஸ்ஸ் யப்பா....இப்பவே கண்ணக்கட்டுதே....

கானா பிரபா

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Posted

//ராதிகா: ம்ம்ம் சரி தான் இப்படியே விட்டால் முருகனுக்கு வீடிங்போத்தலில் பால் குடுத்தது நான், நப்பி மாத்தினது நான் என்றும் சொல்லுவினம் போல!!! //

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Posted

நல்லா புலம்பிறியள் தூயா

"இதை எல்லாம் கேட்கிறதா? கோவிலுக்கு முன்னுக்கு வாகனத்தை தரிக்க நெருக்கமானவையை தானே முருகன் அனுமதிப்பார்" :-)

Posted

நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள் ம்...தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் பிள்ளையாரை வளர்க்கலையா? ;) இங்க ஒரு பிள்ளையார் கோவிலும் வருது....பிள்ளையாரை யார் வளர்க்கினமோ.நீங்கள் பிள்ளையாரை வளர்க்கலையா?  இங்க ஒரு பிள்ளையார் கோவிலும் வருது....பிள்ளையாரை யார் வளர்க்கினமோ

சிட்னி பிளமிங்டன் பகுதியில் உள்ள காணி ஒன்றினை அட்சகர் ஒருவர் பிள்ளையார் கோவில் கட்ட வாங்கவுள்ளார். ஈழத்தைச் சேர்ந்த அட்சகரின் சகோதரி கத்தோலிக்கத்தமிழரினை மணமுடித்து கத்தொலிக்க மதத்தில் இருக்கிறார். இவரது மகனுக்கு அட்சகர் தனது மகளினை மணம் முடித்து வைத்துள்ளார். மருமகனும் அட்சகரின் மகள் கத்தொலிக்க மதத்துக்கு மாறவேண்டும் என்ற நிபந்தனை விதிக்க அட்சகரிடம் பணமின்மை காரணமாகவே இக்கல்யாணத்தினை முடித்து வைத்துள்ளார். இப்பொழுது அட்சகரின் மகளும் மருமகனும் சிட்னியில் நடைபெறும் கத்தொலிக்க நிகழ்ச்சிகள், தேவாலயங்களில் ஜேசு பிரானைக்கும்பிட்டு பாடல்கள் பாடி வருகிறார்கள். அட்சகருக்கு பணமில்லாத காரணத்தினால் மருமகன் கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்கப் பணவுதவி செய்தார். தேவாலயம் கட்டினால் உழைக்க முடியாது என்பதினால் கோவில் கட்டுவதினால் அதில் அதிகப் பணம் கிடைக்கும் என்பதினால் மருமகன் பின்புலத்தில் நிற்கிறார் என்றும் ஒரு கதை அடிபடுகிறது.

Posted

நீங்கள் உண்டியலுக்க காசு போடுவதால் தானே அவர்கள் கட்டுகிறார்கள்? எப்ப காசு பொடுறதை நிப்பாட்டி அதை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற நிறுவனங்களுக்கு வளங்குகிறீர்களோ அப்போது தான் இந்தப் பிழைப்பு நிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் உண்டியலுக்க காசு போடுவதால் தானே அவர்கள் கட்டுகிறார்கள்?

நாரதர் எழுதியது

உண்டியலில காசு போடாட்டி அது சாமி குற்றம் ஆகிடும்.......

தமிழன் இருக்கும் வரை உண்டியலுக்கு பஞ்சமில்லை.ஈழதமிழன் ஆயுதம் வைத்திருக்கான் ஆனால் புலதமிழன் உண்டியல் வைத்து குழுக்கி கொண்டு இருக்கிறான்.

Posted

தூயா அழகான கற்பனையை நல்ல நகைச்சுவையோடு எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Posted

நன்றி ரமா :lol: :lol: :lol:

  • 4 weeks later...
Posted

புலத்தில் இருந்து ஓர் புலம்பல் - கன்பேரா எழுச்சி போராட்டம் - பகுதி 1

28-05-06, ஞாயிற்று கிழமை காலையில் ராஜன் வீடு, என்ன தான் நடக்கின்றது?? உள்ளே சென்று தான் பார்ப்போமே!!

(புலத்தில் இருக்கும் சில வேலையில்லாத நம்மவர்கள் போல, பக்கத்துவிட்டு புதினம் பார்க்காவிடில் தூக்கம் தான் வருமா?)

காலை 7 மணி ராஜன் சமையல் அறையில் எதையோ போட்டு உருட்டும் போது, தன் அறையைவிட்டு வெளியேறிய புவனேஸ்வரி;

"அப்பு என்னனை செய்கிறாய்?"

ராஜன்: "என்னவோ? ரெண்டு பேரும் சேர்ந்து பப்படம் பொறிக்கிறேன், மீன் பொறிக்கிறேன், கட்லட்ஸ் பொறிக்கிறேன் என்பியள் பிறகு இவன் ரியல் எஸ்டேட்காரனுக்கு நானல்லோ யார் பதில் சொல்வது?! எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? எண்ணெய் அதிகம் பாவிச்சால் சீலிங்கில மஞ்சலா பிடிக்கிது என்று"

புவனேஸ்வரி ராஜனை முறைத்து பார்க்க, ராதியின் குரல் கேட்கின்றது.

ராதிகா: "மாமி என்ன சொல்லுறார்?? மீன் பொறியல் இல்லாமல் சாப்பிட கஸ்டபடுறது நாங்களோ? அவரோ? கேளுங்கோ மாமி"

புவனேஸ்வரி: "ம்ம்ம் இப்ப பதில் சொல்லுடா பார்க்கலாம் உன் பெண்டாட்டிக்கு"

ராஜன்: "ஆ எழும்பிட்டாவோ இந்த வீட்டு மகாராணி? தெரிந்து இருந்தால் சத்தம் போடாமல் கதைச்சு இருப்பன்"

ராதி உங்கட அப்பா உங்களை வக்கீலுக்கு படிக்க வைத்து இருக்கலாம் என்ன?"

ராதிகா: "என்ன?"

ராஜன்: "நான் என்ன சொன்னனான்?, எனை இந்த துணியை எடுத்து தானை"

புவனேஸ்வரி: "எனக்கு என்ன ஆட்டம் காட்டினது, இப்ப பாறன் ஒரு குரலுக்கு அடங்குவதை"

ராதி குளித்து வெளியே வந்து அப்போது தான் சாமி கும்பிட்டு வந்த புவனேஸ்வரியை பார்த்து,

ராதிகா: " மாமி தேத்தண்ணி போடுறன். குடியுங்க."

புவனேஸ்வரி: "பிள்ளை உனக்கு என்ன விசரே, இண்டைக்கு ஞாயிறு, தேத்தண்ணி போடுறவை போடட்டும் நீ இஞ்சால வா பிள்ளை. இதில வந்து இரு பிள்ளை குளிர்காலத்தில தலைக்கு தோய வேணாம் என்றால் கேட்கிறிங்களா. சரியா துடைக்க வேணும் இல்லாட்டி குளிர் பிடிச்சு போடும்"

ராஜன்: (மனதிற்குள்) என்னடா இது கூத்து??!!! விடிஞ்சதும் மனிசருக்கு அதிர்ச்சியாவே கிடக்கிது??

"ஓம் ஓம் போய் சிகரத்தை போட்டு பாருங்கோ சமையல் குறிப்பு போகும், நான் தேத்தண்ணி போட்டுவாறன். சமையல் குறிப்பு பார்ப்பதோடு சரி. அதை வீட்டில செய்தா என்ன?? யாழில பப்படம் பொறிப்பது எப்படி என்று வேற போட்டு இருக்கு. ஆனால் எனக்கு மைக்ரோவேவ் பப்படம் தான்.

ராதிகா: சும்மா நிறைய கதைக்காதிங்க, மாமிக்கு இன்னும் தேத்தண்ணி குடுக்காம இங்க நின்று புசத்திறியள்!!

ராஜன்: ம்ம்ம் பக்கத்து இலைக்கு பாயசம்.. சரி சரி

ராஜன் சமையல் அறையில் தேனீர் தயாரிக்கும் நேரத்தில் தொலை பேசி மணி ஒலிக்கின்றது.

ராதிகா: போனை எடுங்கோவன். எங்களுக்கு டீவி பார்க்க சத்தம் குளப்புது

ராஜன்: ம்ம்ம் குளப்பும் குளப்பும், சிகரம் எடுத்து குடுத்ததும் போதும், வீட்டில நான் படுற பாடும் போதும்.

தொலைபேசியை எடுத்து;

"அலோ?..ஓம் ராஜன் தான். வணக்கம் யார் கந்தப்பு அண்ணையோ? சொல்லுங்கோ. ஓம் ஓம் பின்னேரம் போல தானே. சரி வாறன்"

ராதிகா: என்னவாம் கந்தப்பர்?

ராஜன்: பின்னேரம் போல சின்ன சமையல் வேலை கிடக்கு போல. நாளைக்கு பஸ்ஸில வாற சனத்திற்கு மதியம் சாப்பிட குடுக்க வேணும் தானே

புவனேஸ்வரி: அப்பு நீ இப்பவே போய் முன்னுக்கு செய்கின்ற வேலை ஏதும் இருந்தா போன் பண்ணு பிள்ளை. நாங்களும், இவ கந்தப்பரின்ட மனிசியும் சேர்ந்து ஏதாவது செய்து குடுக்கலாம் தானே

ராஜன்: இங்ச கந்தப்பரண்ணையிண்ட மனிசிய அவர் வீட்டிலயே வேலை செய்ய விடுவதில்லை. நீங்கள் என்ன் என்றால்??

ராதிகா: ம்ம்ம் குடுத்து வைத்தவ

ராஜன்: ராதி என்ன முனு முனுக்கிறியள்?

ராதிகா: இல்லை கெதியா போய் வேலை இருக்குதோ என்று பாருங்கோ. ஏதோ எங்களால ஆன உதவியை செய்வமே

ராஜன்: சரி சரி நாளைக்கு சனத்திற்கு சாப்பாடு சமைப்பது இருக்கட்டும். இன்று மதியத்திற்கு ஏதாவது செய்யுங்கோ. நான் போய்ட்டுவாறன்.

மாலை 6 மணி, குளிர் காற்று அதிகம் தான். சிட்னியில் ஒரு வீட்டில் அடுத்த நாள் கன்பேராவில் நடக்கவிருக்கும் எழுச்சி போராட்டத்திற்கான வேலைகளில் ஆண்களும் பெண்களும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்கள்.

ராஜன்: இஞ்ச சுரேஸ் அண்ணா, இதை விடுங்கோ. நான் வீட்டில கொண்டு போய் மிகுதியை செய்து முடிக்கிறேன். அம்மாவும் ராதிகாவும் தாங்கள் கொஞ்சமா புளிச்சாதம் செவதாக சொன்னவை.

அங்கு ஒரு கதிரையில் இருந்து பஸ்ஸில் வருபவர்களை தொடர்பு கொண்டிருந்த கந்தப்பு,

"எட தம்பி இந்த புளிச்சாத செய்முறை யாழில போட்டதா எனக்கு நினைவு இல்லையே?"

ராஜன்: " அண்ணே இதுகள வீட்டில கேட்டா பிரச்சனை தான் வரும். சாப்பாடு வந்ததா சாப்பிட்டதா என்று இருக்க வேண்டும்.

கந்தப்பு: "தம்பி நீ சொல்லுறது மெத்த சரி... அலோ ? ஓம் ஓம் நான் தான். நாளைக்கு 2 பேரும் வாறியள் தானே? கோம்புஸ்ஸில இருந்து வாற பஸ்ஸில தானே? ஓம் 5.30 போல கோம்புஸ் பாடசாலை வீதியில் தான். ஓம் ஓம் சாப்பாடு இருக்கு. அது பிரச்சனை இல்லை"

ராஜன்: "என்னவாம் அண்ணே?"

கந்தப்பு: "மனிசிக்கு கொலஸ்ரோலாம். மனிசன் அக்கரையா சாப்பாட்டை பற்றி கேட்கிது...ம்ம் எங்களுக்கும்..."

ராஜன்: "இஞ்ச இதில என்னை சேர்க்காதிங்க.."

கந்தப்பு: "அனுபவ பட்டவன் சொல்கிறேன்.கேளப்பு, சரி இந்த சின்ன பெடியன் சுண்டல் எங்க?

ராஜன்: "யார் யாழ் சுண்டலோ? பெடி இளையோர் பஸ்ஸில போக முதலாவதா பெயர் குடுத்தது. ஆனால் வேலைக்கு காணவில்லை.

கந்தப்பு: "நாளைக்கு முதியோர் போற பஸ்ஸில தான் சுண்டலை ஏற்றுவது. பெடி பாய்ஞ்சு பாய்ஞ்சு கொப்பி பேஸ்ட் பண்ணுவான் யாழில. இப்ப சத்தத்தை காணவில்லை.

ராஜன்: "சரி சரி நான் கிளம்புறேன். நாளைக்கு காலையில சந்திக்கலாம்"

கந்தப்பு: "சரியடா தம்பி நானும் கிளம்புறேன்"

புலத்தில் இருந்து ஓர் புலம்பல் விரைவில் கன்பெரா எழுச்சியோடு தொடரும்....

தூயா

Posted

நடைமுறை விடயங்களோடு சேர்த்து நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

Posted

ஆகா தூயா சமகாலக் களத்தோட புலம்பல் எழுதுறீங்க, அடுத்த பகுதியையும் ஆவலோட எதிர்பாக்கிறம் எழுதுங்கோ!

Posted

நல்லா இருக்கு தூயா களத்தில் நடப்பதையும் புகுத்தி நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். அடுத்தபாகம் வாசிக்க ஆவலாய் உள்ளோம்.

Posted

நல்லாக இருக்கு தூயா பபா அடுத்த பகுதியையும் எதிர்பார்க்கிறம்

பாவம் சுண்டலின் தலையை உருட்டுறீங்க போல தொடருங்க

Posted

சரி பிள்ளையாரும் ஜேசுவும் என்னவாப்போச்சு

Posted

இதென்னடா புலம்பல்னு இன்றுதான் சகல புலம்பல்களையும் வாசித்தேன்.. அருமையான புல(ப)ம்பல்கள் நல்ல விடயங்களை போட்டுடைக்கின்றன. வாழ்த்துக்கள்.!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோம்புஸ் உணவகத்தினைப்பற்றி எழுதப்போறிர்கள் என்று நினைச்சேன். கன்பரா எழுச்சிப்போராட்டம் பகுதி 1 என்ற தலைப்பில் சமகாலபுலம்பலினை வேலையில் இருந்து வாசித்து சிரிக்க, பக்கத்திலிருந்த வெள்ளை விபரம்புரியாமல் என்னைப்பார்த்து ஒரு மாதிரிச் சிரித்தார். நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்களில் என்னையும் சேர்த்து விட்டீர்கள். தொடர்ந்து சிட்னி சம்பவங்களினைத்தரும் தூயாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம் எழிச்சிப்போராட்டம் மிகுதியை எதிர்பார்த்தபடி.. அதென்ன சுண்டலோட காய்ச்சல் நங்கிக்கு..?? பாவம் சுண்டல் கொப்பி பேஸ்ட் பண்ணிறதை இப்படியா சொல்லிச்சங்கடப்படுத்திறது ஆஆஆஅ.. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது உண்மை தானே!

Posted

சுண்டல் சும்மா இருந்தாலும், நீங்கள் ஆள கிளப்பிவிட்டிடுவிங்க போல இருக்கே!!!

அடுத்த பகுதி எழுதிகொண்டிருக்கின்றேன். பரீட்சை காரணமாக தாமதமாகின்றது.

பதிலளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Posted

ம்ம்ம் இப்ப பாருங்க. சின்ன பெடியனை அழ வைத்த பாவம் எனக்கு வந்து சேருகின்றது :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் ..
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.