Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

என்ன கோமகன் அண்ணா தொடர் முடின்சிடுத்தா? ஒவ்வொருமுறையும் படிச்சு விட்டு கண்களில் கண்ணீருடன்

தான் போவன் ஏதும் கருத்து எழுதுவதில்லை முடிய எழுதுவம் எண்டு எழுதாமல் போய்டுவன் ..

நன்றி அண்ணா மண் வாசனையுடன் அருமையான தொடர் ஒன்றினை தந்ததுக்கு சில கதா பாத்திரம்கள் மனசில இருந்து

மறைய நீண்டநாள்கள் எடுக்கும். ரோனியன் எல்லார் வீட்டிலுமே இப்பிடி ஒரு உறவு அனேகமாக இருந்து இருக்கும் ...

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்று தான் இந்தத் தலைப்பைப் பார்த்தேன். முதல் தொட்டு இறுதிவரை இடைவிடாது வாசித்து முடித்தேன். அருமையான பதிவு. நெருடல் என்பதை விட மனம் கடுக்கிறது என்றே சொல்லலாம். நெருஞ்சி குத்தினால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது.

கடுக்கச் செய்யும் நெருஞ்சிக்கும் மஞ்சளும் பச்சையும் கூடிய அழகும் உண்டு.

அந்தப் புறாவும் குஞ்சுகளும் படம்...ஏற்கனவே எல்லோரும் சொன்னதைப் போல என்னமோ செய்கிறது. பாமினியின் கதை வெயில் படம் பார்த்தது போல் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலால் இந்தத் தலைப்பை பலபடிகள் மேலே கொண்டு சென்றது றொனியன் பாத்திரம். அற்புதமாக உள்நுழைத்துள்ளீர்கள். எத்தனையோ பரிமாணத்தில் இந்த றொனியன் பாத்திரமும் அது கொலைசெய்யப்பட்டதோடான உங்கள் பயணத்தொடரின் முடிவும் வெளிப்படுகின்றன. அம்மாவின் ஞாபகங்கள் ஊரின் பிணைப்பு இறந்தகாலம் பற்றிய பரிதவிப்பு இழந்ததைத் காணத்துடிக்கும் ஏக்கம் முலான இன்னோரன்ன உணர்வுகளின் கோர்வையாகச் சென்று பலதைக் காட்டி றொனியனின் கொலையைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தமிழனின் புலம் மீள்கைக்கைக்கான பஸ் ஏறதல் ஆழ்ந்து வாசிக்கப்படக்கூடியதாக அருமையாக வெளிப்ட்டுள்ளது.

மனம் கடுக்கிறது

பாராட்டுக்கள்

நன்றி , நன்றிகள் பல இன்னுமொருவன் . உங்களையும் குத்தியிருக்குதென்றால் யோசிக்க வேண்டிய விடையம் :) :) :) .

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் , சுண்டல் , உடையார் , புங்கையூரான், இன்மொருவன் , சஜீவன் , சுவீ , மற்ரும் , வீணா . வாசகர்களாகிய உங்கள் எல்லோரிடம் முதலில் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் . நான் , வல்வை சகாராவிற்கு இட்ட பின்னூட்டத்தில் வந்த பொருள் மயக்கத்தினால் , நீங்கள் எல்லோருமே குளம்பிப் போயுள்ளீர்கள் என்பதை என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது . நான் இன்னும் சில விடையங்களை இந்தத் தொடர்மூலம் தொடவேண்டியிருப்பதால் , இன்னும் 3 அல்லது 4 தொடராக கொண்டு வந்து நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . நான் வல்லவை சகாராவிற்க்கு எழுதியமாதிரி இந்தத் தொடர் முடிவடைந்தவுடன் , புதிய கள உறவுகளுக்காகவும் , இதனை முற்ருமுழுதாக வாசிக்கத் தவறியவர்கழுக்குமாக , நிர்வாகம் அனுமதிக்கும் பட்ச்சத்தில் ஒரே பதிப்பாக வெளிவிடுவேன் என்று உங்கள் எல்லோருக்கும் உறுதிமொழி தருகின்றேன் . மீண்டும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் .

அன்புடன் கோமகன்

தேன்கூடுபோல் தான் சேர்ந்து வாழ்ந்தோம், கல்லெறி பட்டதால் கண்ட துண்டமாய் பல கண்டங்களிலும் சிதறுண்டு போனோம் !

நன்றி கோமகன்! நெருஞ்சி சும்மா குத்தினால் குதியை தரையில் தேய்த்து விட்டு போகலாம், இது கொஞ்சம் கூட மனசுவரை குத்தீட்டுது! :huh:

அருமை ........... அருமையான கருத்து சுவி :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

கோமன் அண்ணா நேற்றைக்கே ஏற்பட்ட குளப்பத்தை.......நீங்கள் கவனிக்க தவறியதை சுட்டிக் காட்டி இருந்தனான் அல்லவா....???

  • தொடங்கியவர்

கோமன் அண்ணா நேற்றைக்கே ஏற்பட்ட குளப்பத்தை.......நீங்கள் கவனிக்க தவறியதை சுட்டிக் காட்டி இருந்தனான் அல்லவா....???

ஒரு பின்னூட்டம் எப்படிப் போடவேண்டும் என்று சொல்லித் தந்த யாயினிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் :) :) .

கோமகன் உங்களின் பயண ப்பதிவை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் தற்போது ..அழகான படங்கள் ...அருமையான நடை நன்றாக இருக்கிறது.. இதை அச்சு வடிவில் புத்தகமாக போட்டால் என்ன? வடலி பதிப்பகத்தின் மூலம் போடலாமே...வடலி பதிப்பகத்துடன் தொடர்புடைய யாழ் கள நணபர்கள் பலர் இருக்கிறார்கள் ...அவர்களுடன் தொடர்பு கொண்டு முயற்சி செய்து பார்க்கலாமே ..ஆனால் ஒன்று சப்பென்று முடிச்சு விட்டியள்,,,இன்னும் உங்களால் அதிகம் எழுத முடியுமெனில் எழுதி அச்சு வடிவில் வரி முயற்சி செய்யுங்கோ ..கட்டாயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறன்

வடலி பதிப்பகத்தின் மூலம்

மாற்று கருத்து என்ற பெயரில் தன்னுடைய இனத்தையே புத்தகமடித்து கேவலப்படுத்தும் பதிப்பகம் , எழுத்தாளர்கள் ,கொண்ட கூட்டம்...

அது மட்டும் தான் இருக்குதோ வேற பதிப்பகம்கள் இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின்கால் பாம்பறியும்..... :(

யாழ் கள நண்பர்கள் தூயா ,கான பிரபா சயந்தன் கே.எஸ் பாலச்சந்திரன் போன்றவர்கள் அந்த பதிப்பகத்தின் மூலம் தான் குறைந்த செலவில் புத்தகம் அடித்ததாக அறிந்தேன் ....தூயகருத்து மாணிக்கங்களான் உங்களுக்கில்லையே பத்து விதமான மாற்றுகருத்து மாணிக்கங்களாய் நிற்கிறியள் ..பிறுகு மாற்று கருத்து மண்ணாக்கட்டி கருத்து என்று மற்றக்காளை குற்றம் சாட்டிறியள்...வடலை பதிப்பக நிர்வாகி அகிலன் கூட யாழ் கள உறுப்பினர் என்று நினைக்கிறன்...நல்ல கருத்து மாற்று கருத்து எது என்று அறியிறதுக்கு இந்த நிலைமையிலை இப்ப ஒரு ஸ்கான் பண்ற மிசினும் இல்லை பாருங்கோ

  • தொடங்கியவர்

யாழ் கள நண்பர்கள் தூயா ,கான பிரபா சயந்தன் கே.எஸ் பாலச்சந்திரன் போன்றவர்கள் அந்த பதிப்பகத்தின் மூலம் தான் குறைந்த செலவில் புத்தகம் அடித்ததாக அறிந்தேன் ....தூயகருத்து மாணிக்கங்களான் உங்களுக்கில்லையே பத்து விதமான மாற்றுகருத்து மாணிக்கங்களாய் நிற்கிறியள் ..பிறுகு மாற்று கருத்து மண்ணாக்கட்டி கருத்து என்று மற்றக்காளை குற்றம் சாட்டிறியள்...வடலை பதிப்பக நிர்வாகி அகிலன் கூட யாழ் கள உறுப்பினர் என்று நினைக்கிறன்...நல்ல கருத்து மாற்று கருத்து எது என்று அறியிறதுக்கு இந்த நிலைமையிலை இப்ப ஒரு ஸ்கான் பண்ற மிசினும் இல்லை பாருங்கோ

மிக்க நன்றிகள் நாகேஸ் , உங்கள் பின்னூட்டத்திற்கு :) . :D

Edited by komagan

நச்சென்று நாலுவரி சொன்ன நாகேசுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நச்சென்று நாலுவரி சொன்ன நாகேசுக்கு நன்றி.

ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை

வாடியிருக்குமாம் கொக்கு கொக்கு கொக்கு..........

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா..?

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் பாலச்சந்திரனிண்ட மச்சினரா நீங்கள்? நெருங்கிட்டியள் நல்லா! மனிதர் சுகமாக இருக்கிறாரா? நீங்கள் அவரைப் பற்றிச் சொன்ன அவ்வளவும் உண்மை. பணிப்பாளராக இருந்த போது தமிழ் மிருகவைத்தியர்களுக்கும் பல உதவிகள் செய்த ஒருவர் அவர். அவரது மகனும் எனது நல்ல நண்பர்!

  • தொடங்கியவர்

டாக்டர் பாலச்சந்திரனிண்ட மச்சினரா நீங்கள்? நெருங்கிட்டியள் நல்லா! மனிதர் சுகமாக இருக்கிறாரா? நீங்கள் அவரைப் பற்றிச் சொன்ன அவ்வளவும் உண்மை. பணிப்பாளராக இருந்த போது தமிழ் மிருகவைத்தியர்களுக்கும் பல உதவிகள் செய்த ஒருவர் அவர். அவரது மகனும் எனது நல்ல நண்பர்!

ஓம் ஜஸ்ரின் . எனது அப்பாவின் ஒருஅக்காவின் மகன் . அவர்களில் 3 ஆண்பிள்ளைகள் . மூத்தவர் பாலச்சந்திரன் , இரண்டாமவர் டொக்ரர் குகதாசன் , இலங்கையின் மிகச்சிறந்த கண்வைத்திய நிபுணர் . மூன்றாமவர் சிவநேசன் , வடக்கு கிழக்கு உதவி விவசாயப் பணிப்பாளராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ரு விட்டார் . இந்த மூவருமே எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்கு தம்மை வளப்படுத்தப் புலம் பெயராதவர்கள் . தாம் பிறந்த மண்ணுக்கே சேவையாற்ரியவர்கள் . இது என்னை மிகவும் குத்திய விடையம் . பாலச்சந்திரன் மிகவும் நலமே உள்ளார் . அவர் மகன் குமரன் பற்றிக்ஸ்சில் படித்ததாக ஞாபகம் , அவர் உங்கு ரெக்சாசில் உள்ளார் நன்றிகள் ஜஸ்ரின் . :) :) :)

  • தொடங்கியவர்

ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை

வாடியிருக்குமாம் கொக்கு கொக்கு கொக்கு..........

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா..?

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கு...ஆறப்போடாமல் அடுத்ததைப்போடுங்கோவன் கோமகன் வாசிச்சு முடிப்பம்...

முழுக்க வாசித்து முடிய விமர்சனம் வைக்கலாம் என நினைக்கின்றேன்,மிக நன்றாக போகின்றது தொடருங்கள்.

அந்த மூவரில் ஒருவரை எனக்கும் தெரியும்.

  • தொடங்கியவர்

முழுக்க வாசித்து முடிய விமர்சனம் வைக்கலாம் என நினைக்கின்றேன்,மிக நன்றாக போகின்றது தொடருங்கள்.

அந்த மூவரில் ஒருவரை எனக்கும் தெரியும்.

மிக்க நன்றிகள் அர்ஜுன் . அனேகமாக எனது கடைசி மச்சானைத்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என நினைக்கின்றேன் :) :) :) .

கோமகன் - உங்களுக்கு லீவு என்றும், பதிவுகளை சீக்கிரம் தொடருவீர்கள் என்றும் நினைத்தேன்!

:rolleyes:

கோமகன் - உங்களுக்கு லீவு என்றும், பதிவுகளை சீக்கிரம் தொடருவீர்கள் என்றும் நினைத்தேன்!

:rolleyes:

கோமகன் நெடுகத் திண்ணையில் :) எழுத நேரமிருந்தால் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நெடுகத் திண்ணையில் :) எழுத நேரமிருந்தால் தானே :D

இதைப் பார்க்க வில்லை போலும். :o

  • தொடங்கியவர்

31669210150325135703118.jpg

அன்று ஞாயிற்ருக்கிழமை ஆகையால் பஸ் தூங்கி வழிந்தது . நானும் மனைவியும் பஸ்சின் முன்னே சென்று முன்பகுதி சீற்ரில் இருந்தோம் . எனது மச்சினிச்சியும் பிள்ளைகளும் எமக்கு அடுத்த சீற்ரில் இருந்தார்கள் . பஸ் ஆளில்லாத பரித்தித்துறை வீதியில் தனிக்காட்டு றாஜாவாக மூசிப் பாய்ந்தது . வழக்கம் போலவே தேர்ந்த பாடல்கள் பஸ்சை நிரவின . எனக்கு என்றும் இல்லாதவாறு மனமும் உடலும் களைத்து , நித்திரையைக் கடன் கேட்டுக் கொண்டு இருந்தது . நான் மெது மெதுவாக நித்திரையிடம் மண்டியிட்டேன் . பலவிதமான கனவுகள் சம்பந்தமில்லாமல் மெதுவாக எட்டிப்பார்த்தன . மூசிக்கொண்டு சென்ற பஸ் திடீரென தனது வேகத்தைக் குறைத்து தன்னை நிறுத்தியதும் , கனவில் மிதந்த எனது மனது நிஜத்தில் தொப்பென்று விழுந்தது . நேரம் மாலை 4 மணியைக் கடந்து இருந்தது . பஸ்சில் வந்தவர்கள் எல்லோரும் இறங்குவதில் கிளித்தட்டு விளையாடினார்கள் . நாங்கள் எல்லோரும் இறங்கும்வரை காத்திருந்து விட்டு இறங்கினோம் . என்முகத்தில் கடல் காத்து பட்டு வெக்கையைக் குறைக்க முயன்றது . பரித்தித்துறை பஸ்நிலையம் அன்று அமைதியாகவே இருந்தது . நாங்கள் எல்லோரும் அம்மன் கோயிலடி றோட்டால் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம் . எனது பெறாமகன் எனது கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தான் . நாங்கள் இருவரும் முன்னே நடக்க , மற்ரயவர்கள் எமக்குப் பின்னே வந்தார்கள் . வீதியில் தோசை அப்பம் வியாபாரம் சூடுபிடித்திருந்தது . அப்பம் , தோசையின் வாசம் வீதியெங்கும் நிறைந்திருந்தது . கல்லூரி வீதி கழிய வந்த ஒழங்கைக்கு றோட்டுப்போட சல்லிக்கல்லுகள் பரவியிருந்தார்கள் . யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான அவசரக்கோலங்களாக அவை இருந்தன . எங்களுக்குச் சல்லிக் கல்லின் ஊடாக நடப்பது சிரமமாக இருந்தது . ஓடக்கரை தாண்டச் சாதாரண ஒழுங்கை வந்தது . வீட்டு வாசல்களில் பெண்கள் முகத்திற்குப் பவுடர் பூசிப் பூராயம் பேசிக் கொண்டிருந்தார்கள் . நாங்கள் எல்லோரும் வியர்த்து ஒழுக , ஒழுக வீட்டை அடைந்தோம் . எங்களைக் கண்ட புழுகத்தில் எங்கள் வீட்டு நாய் பிள்ளைகளின் மீது புரண்டு விளையாடியது . நான் முகத்தைக்கழுவி உடுப்பை மாற்ரிக்கொண்டு எங்கள் வீட்டின் முன்னால் இருந்து கொண்டேன் . அன்ரியும் , மாமாவும் நிலத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள் . அன்ரி பாக்கு உரலில் வெத்திலை , பாக்கைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தா . மாமி நான் கேட்காமலேயே பிளேன் ரீயும் , பரித்தித்துறை வடையும் கொண்டு வந்து தந்தா . எனக்கு இருந்த தலையிடிக்குப் பிளேன் ரீ இதமாகவே இருந்தது . இரவுச் சமையலுக்கான அடுக்குகள் மாலின் ஊடே வந்த புகையில் தெரிந்தது . நான் பிளேன் ரீ ஐ அனுபவித்துக் குடித்தேன் பறுக்கும் ரீ புகையினூடே எனது மன வெக்கையும் சிறிது சிறிதாகக் கரைந்து என் மனது இயல்பு நிலைக்குத் திரும்பியது . அன்ரி வெத்திலையை இடித்து முடிந்து குழைவான வெத்திலையை இரு சகோதரங்களுக்கும் கொடுத்து தானும் போட்டுக் கொண்டிருந்தா . மாமா தொண்டையைச் செருமிக் கொண்டே ,

"ஏன் தம்பி போன கையோட திரும்பீட்டிங்கள் , நிண்டு ஆறுதலா வரலாம் தானே " ?

"இல்லை மாமா நீங்கள் இங்கை மூண்டுபேரும் தனிய , எனக்கு அங்கை அம்மா இல்லாத வீட்டைப் பாக்கேலாமல் கிடக்கு ".

" நீங்கள் அப்பிடிச் சொல்லக்கூடாது , அவைக்கு நீங்கள் தானே ஆறுதல் ".

"ஏன் மாமா இந்த சுப்பர்மடம் சுனாமி வீடமைப்பு திட்டம் வீடுகள் எல்லாம் ஒடக்கரைக்கை கிடக்கு ? கடல் அங்கை வர வந்ததோ ? எனக்கு தெரிஞ்சு சுப்பர்மடம் கரையில அல்லோ கிடக்கு ".

நான் பேச்சை மாற்ரினேன்

"ஓ...... ஓ...... அது பெரய கதை உங்களுக்குத் தெரியாது . முந்தித் தம்பசிட்டியார் கரைப்பக்கத்தில போய் கெஸ்ற் கவுஸ் கட்டியிருந்தவை . இப்ப மாறி சுப்பர் மடத்தாக்கள் சுனாமியைச் சாட்டி இங்கை கெஸ்ற் கவுஸ் கட்டீட்டினம் ".

என்றார் சிரித்தவாறே ,

" அப்ப தண்ணி சுபர்மடம் மட்டுமே வந்தது ? ஓ........ ஒ...........அதிலையும் , விடுப்புப் பாக்கப் போனதுகள் தான் அல்லாதுப் பட்டதுகள் . அது கனகதையள் சொல்லியடங்காது ".

59029161781764279211568.jpg

மாமாவுடன் பகிடியாகக் பம்பல் அடித்ததும் , அவரின் விகற்பமில்லாத கதையளும் எனது மனதைப் பஞ்சாக்கின . மாலின் ஊடாக வந்த புகையின் ஊடாக உப்புமா வாசம் மூக்கைத் துளைத்தது . இந்தியா மச்சினிச்சி தன்ரை வித்தையைக் காட்டுறா என்று ஊகித்துக் கொண்டேன் . பிள்ளைகள் தகப்பனுடன் சுட்டி ரீவீ க்குக் கட்டிப் புரண்டார்கள் . முழு நிலவு தங்கத் தாம்பாளமாக வானை நிறைத்தது . பக்கத்து வீடுகளில் லைற்ருகள் மினுக்கின . எங்கள் வீட்டு நாய் நாங்கள் கதைப்பதை குந்தி இருந்து காதை மடக்கி கேட்டுக் கொண்டருந்தது . எனக்கு றொனியனின் நினைவு வந்து தொலைத்தது .மாமாவின் வீட்டைப் பார்த்தேன் , செல் அடியில் சிவர்கள் பாழாகி இருந்தன . அவர் அவைகளை தனியாளாகத் திருத்திய கைவண்ணமும் அதில் தெரிந்தது . நேரம் 9 மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது .

" அப்ப மாமா , நீங்கள் ஒரு இடமும் இடம்பேரேரைலையோ "?

எனது அப்பாவித்தனமான கேள்வி மாமாக்குச் சிரிப்பைக் கொடுத்திருக்க வேண்டும் . கெக்கட்டம் விட்டுச் சிரித்தார் . நான் ஒரு புன்சிரிப்பை பொதுவாக வைத்தேன் . எனக்கு அவரின் சிரிப்பு ஐமிச்சமாக இருந்தது . இது நக்ஸ் சிரிப்பா ? இல்லை , வில்லண்டமான சிரிப்பா ? என்று . அன்ரி தன் வெற்ரிலையைத் துப்பி விட்டு இடையில் புகுந்தா ,

" அண்ணை உந்த பே சிரிப்பை நிப்பாட்டு . அவர் தெரியாமைத் தானே கேக்கிறார் ? அவர் இங்கை வந்து எவ்வளவு காலம் "?

எனக்குப் பக்கத்தில் இருந்த எனது கைத்தொலைபேசி சிணுங்கியது . அதில் அண்ணையின் பெயர் தெரிந்தது . அழைப்பை அழுத்தினேன் .

" எப்படியடா இருக்கறாய் ? சுகமாய் வந்து சேந்தியே "?

அண்ணை என்னை இன்னும் சின்னப்பிள்ளையாகப் பாவிக்கும் முறை எனக்கு சிறிது எரிச்சலை மூட்டியது .

" சொல்லண்ணை ".

" நான் இங்கை ஏழாலைக்கு வந்திட்டன்ரா . தோட்டத்துக்கு தண்ணி மாறிப் போட்டு வந்து உன்னோட கதைப்பம் எண்டு எடுத்தன் . மற்ரது , நீ எப்ப இங்கை வாறாய் ? நான் லீவு எடுக்கவேணும் ."

" நாளைக்கு இங்கை ரெண்டு மூண்டு வீட்டை போகக் கிடக்கு . பேந்து பின்னேரம் முனைக்குப் போறம் . நான் நாளையிண்டைக்கு உங்கை வாறன் ".

" வரேக்கை ஓட்டோ பிடிச்சுக் கொண்டு வா . பஸ்சிலை கஸ்ரப்படாதை ."

" சரி அண்ணை நீ லீவை எடு ".

எனக்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது . வெளிநாட்டு யூரோக்களும் டொலர்களும் இவர்களையும் அல்லவா புரட்டிப் போட்டு விட்டன . எங்கள் கமத்து ஒவ்வொரு போகத்து முதல் புது நெல்லுடன் சிறு வயதில் அப்பா அம்மாவுடன் , வில்லுப் பூட்டின திருக்கை மாட்டு வண்டில்லை சன்னதி கோயிலுக்கு வந்து மடத்தில அன்னதானம் குடுத்தது இப்பொழுதும் பசுமையாக மனதில் பசுமையாக ஓடியது . சிங்கத்தின் பிடியில் சன்னிதியானும் ஒட்டாண்டியாகப் போய் விட்டான் . நாங்கள் குளிரில் விறைத்து உளைக்கும் யூரோக்களின் பெறுமதியும் , வலியும் , இவர்களுக்கு உண்ணமையிலேயே விளங்கவில்லையா ? எனது மனம் வலித்தது . குறிப்பால் உணர்ந்த மாமா என்னைத் திருப்ப ,

14850816135175702191004.jpg

" நீங்கள் உதைக்கேக்கிறியள் , ஒப்பறேசன் லிபறேசனைக்கையே நாங்கள் மூண்டுபேரும் , என்ர அம்மாவும் இங்கை இருந்து அரக்கேல . செல் அடி அனல் பறத்துது . எங்கடை பெடியளும் நெம்பிக் கொண்டு நிக்கினம் . சனம் எல்லாம் அங்கை இங்கை எண்டு அல்லாது படுதுகள் . ஆமிக்காறன் கிட்ட வந்திட்டான் . எங்கடை ஒழுங்கைக்கால கொஞ்ச ஆமிக்கறார் வந்தாங்கள் . அதில ஒருத்தன் , இப்பவும் என்ர கண்ணுக்கை நிக்குது . நல்ல நெடுவல் சிவலையா வாட்டசாட்டமா இருந்தான் . எங்கடை இந்த வீட்டில இருக்கப்போறம் எண்டு சொன்னான் . நான் வாங்கோ எண்டு சொன்னன் . அண்டு இரவு எங்கழுக்கு மற்ர ஆமிப்பிள்ளையள் எல்லாம் ராச மரியாதை . பிசுக்கோத்து , பால் பைக்கற் , எல்லாம் தந்து சமைச்சு தந்தீச்சினம். தங்கைச்சி ஆக்களை சமைக்க விடேல . நெடுவல் ஆமி சொன்னான் நாங்கள் தன்ர ஐயா , அம்மே மாரிக் கிடக்கெண்டு . நான் அவரை ஒரு சமசியத்தில கேட்டன் , மாத்தையா நீங்கள் ஆரெண்டு . அப்ப சொன்னான் , தான் தான் டென்சில் கொப்பைக்கடுவா எண்டு . எனக்கு ஐஞ்சுங் கெட்டு அறிவுங் கெட்டுப் போச்சுது . இதுக்குள்ள , எங்கடை வீரவானுகள் தங்கடை சாமானுகளை பொலித்தீன் பையால சுத்தி , உர பாக்குக்கிள்ளை போட்டுக் கண்ட கண்ட கிணறுகளுக்குள்ளை போட்டுத் தகடு குடுத்திட்டீனம் ."

14917916135172102101004w.jpg

மாமா கிராமியப் பாணியில் சொல்லச் சொல்ல என் மனதில் காட்சிகள் படமாய் விரிந்தது . எவ்வளவு தூரத்திற்குத் துன்பப் பட்டிருப்பார்கள் ? ஆனால் , வந்த துன்பங்களைத் துன்பங்களாக எண்ணாது , அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று எடுக்கும் அவர்களது உளப்பாங்கு என்னை மிகவும் ஈர்த்தது . மாலின் உள்ளே இருந்து வந்த மனைவியின் கையில் உப்புமா தட்டு இருந்தது . நான் மனைவியிடம் ,

"எல்லாரும் மாலுக்குள் இருந்து சாப்பிடுவம்".

" மால் எல்லாருக்கும் இடம் காணது ".

" நான் அங்கை தான் சாப்பிடப் போறன் ".

" சரி வாங்கோ ".

14917916135172102101004w.jpg

நான் மாலுக்குள் நுளைந்தேன் . நான் மாலுக்குள் நிலத்தில் இருந்தேன் . உப்புமாவும் , செத்தல் மிளகாய்ச் சம்பலும் இருமுறை சாப்பிடத் தூண்டியது . ஆனால் , எனது கட்டுப்பாடு தடுத்தது . சப்பிட்டு விட்டு எல்லோரும் சிறிது நேரம் கதைத்து விட்டுப் படுத்து விட்டோம் . பண்டாரி அம்மன் கோயில் மணியோசை என்னை அதிகாலையிலேயே எழுப்பி விட்டது . மச்சான் பால்போத்திலை எடுத்துக்கொண்டு சைக்கிளில் , மந்திகைச் சந்தி கிட்ட உள்ள பால் கூட்டுறவுப் பண்ணைக்குப் போனார் . நான் அன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசிச்சுக்கொண்டிருந்தேன் . மனைவி எழும்ப முதல் விளக்கு மாத்தால் முத்தத்தை கூட்டினேன் . நான் மோட்டரைப் போட்டுத் தண்ணித் தொட்டியை நிரப்பிய சத்தம் கேட்டு மனைவி எழும்பி வந்த பொழுது , நான் வியர்வையில் குளித்திருந்தேன் .

14984016135171302081004.jpg

தொட்டியில் நிரம்பிய தண்ணியை வாளியில் அள்ளி முத்தம் எல்லாம் தெளித்தேன் . முத்தத்தில் தண்ணி பட்டதும் புழுதி வாசம் மூக்கைத் தொட்டது . நீண்டகாலம் இதுகளை நான் செய்யாததால் எனக்குப் பெரிய புதினமாக இருந்தது . வீட்டு வாசலுக்கும் தண்ணியைத் தெளித்தேன் . தண்ணீரில் குளித்த குறோட்டன்களில் சூரிய வெளிச்சம் பட்டு வர்ணஜாலம் காட்டியது . எனக்கு அதைக் காணப் புத்துணர்சியாக இருந்தது . மச்சான் பால்போத்திலும் உதயன் பேப்பருடன் வந்து இறங்கினார் . மச்சினிச்சி கோப்பி போடப் பால்போத்திலுடன் மாலுக்குள்ப் போய்விட்டா . நான் உதயன் பேப்பரை மேய்ந்தேன் . அது தேர்தல் செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தது . மச்சாள் சுடச்சுடக் கோப்பியுடன் வந்தா . நான் கோப்பியை விரைவாக் குடித்து முடித்து விட்டு குளித்து வெளிக்கிட்டேன் . மாமாவிடம் நான் பொழுது போக பம்பலடிக்க போனேன் . மச்சான் எங்கள் பம்பலை புன்சிரிப்புடன் பாத்துக்கொண்டிருந்தார் . நாங்கள் மனைவியின் உறவுகள் இரண்டு வீட்டுக்குப் போனோம் . பின்பு , எல்லோரும் மத்தியானம் வந்து வீட்டில் சாப்பிட்டோம் . நாங்கள் பின்னேரம் போல முனைக்கு வெளிக்கிட்டோம் . நாங்கள் கல்லூரி வீதிவழியாக வந்து பொழுது , யுத்தத்தின் கோரவடுவாக கட்டிடங்களின் சாட்சியங்கள் கட்டியங் கூறிக்கொண்டிருந்தன . முன்பு இந்த இடங்கள் ஆளரவம் அற்ர சூனியப் பகுதிகள் . இப்பொழுது தான் மக்கள் பாவனைக்கு திறந்து விட்டுள்ளார்கள் . நாங்கள் காட்லிக் கல்லூரியையும் , மெதடிஸ் சேர்ச்ஐயும் தாண்ட , முனைக் கடல் அகண்டு விரிந்தது .

img0672zv.jpg

தொடரும்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தாயக நினைவுகள் இரை மீட்கிறது . கோர்த்து சொல்லும் விதம் அழகு ஒரு சில எழுத்துப் பிழை தவிர

அட நம்ம ஊர் ...... நான் படித்த ஹாட்லி! பழைய ஞாபகங்களை கிளறுறீங்கள் கோ!

ஓடக்கரை அப்பம்,தோசை என்ன ருசி!!! இப்பவும் வாய் ஊறுது!!!

இதமான நினைவுகள் என்றாலும்........... சில சமயங்களில் அவை கூட மனதினை நெருடும் நெருஞ்சிகள்தான்!:(

நன்றி கோ! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காறன் கிட்ட வந்திட்டான் . எங்கடை ஒழுங்கைக்கால கொஞ்ச ஆமிக்கறார் வந்தாங்கள் . அதில ஒருத்தன் , இப்பவும் என்ர கண்ணுக்கை நிக்குது . நல்ல நெடுவல் சிவலையா வாட்டசாட்டமா இருந்தான் . எங்கடை இந்த வீட்டில இருக்கப்போறம் எண்டு சொன்னான் . நான் வாங்கோ எண்டு சொன்னன் . அண்டு இரவு எங்கழுக்கு மற்ர ஆமிப்பிள்ளையள் எல்லாம் ராச மரியாதை . பிசுக்கோத்து , பால் பைக்கற் , எல்லாம் தந்து சமைச்சு தந்தீச்சினம். தங்கைச்சி ஆக்களை சமைக்க விடேல . நெடுவல் ஆமி சொன்னான் நாங்கள் தன்ர ஐயா , அம்மே மாரிக் கிடக்கெண்டு . நான் அவரை ஒரு சமசியத்தில கேட்டன் , மாத்தையா நீங்கள் ஆரெண்டு . அப்ப சொன்னான் , தான் தான் டென்சில் கொப்பைக்கடுவா எண்டு . எனக்கு ஐஞ்சுங் கெட்டு அறிவுங் கெட்டுப் போச்சுது . இதுக்குள்ள , எங்கடை வீரவானுகள் தங்கடை சாமானுகளை பொலித்தீன் பையால சுத்தி , உர பாக்குக்கிள்ளை போட்டுக் கண்ட கண்ட கிணறுகளுக்குள்ளை போட்டுத் தகடு குடுத்திட்டீனம் ."

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.