Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • தொடங்கியவர்

எழுதுகிறவனுக்கு ஒரு திறமை வேண்டும்.அதாவது வாசகர்களை கவர வேண்டும்.அதேபோல வாசிப்பவர்களுக்கும் ஒன்றையும் விடாமல் வாசிக்க வேண்டும் என்ற அவா வரவேண்டும்.

அன்பு கோமகனே!

இங்கு அதெல்லாம் இருக்க என்று நீங்களே தேடுங்கள்,கிடைக்காது,ஆனால் நான் உணர்ச்சிவசப்பட்டேன்,கண்கள் பனித்தன.எனக்கு இரக்கம் உண்டு அன்பு உண்டு,பாசமுண்டு.எதுவுமே வெளியில் வராது.ஏனோ தெரியாது.என் மனைவி பிள்ளகள் என்னிடம் கேட்கும் கேள்விகள்.உங்களுக்கு எங்கள் மேல் பாசமுண்டா?ஆனால் என் மூத்த மகன் மட்டும் என்னை புரிந்து வைத்திருக்கிறான் ஏனெனில் அவனும் அப்படித்தான்.ஆகவே இந்த படைப்பின் மூலம் கொஞ்சம் வெளியிலே வருகிறேன்.வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள் நீலப்பறவை , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . நெருடியநெருஞ்சி உங்களில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் சற்ரும் எதிர்பார்கவில்லை . மிக்க நன்றிகள் :) :) :) .

Edited by komagan

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கோ...நெருடிய நெருஞ்சியில், இதுவரை இல்லாத வகையில்... சில முக்கியமான கடந்தகால அரசியல் விடயங்களையும் தைரியமாகத் தொட்டுச் சொல்லி இருக்கின்றீர்கள்!

சொன்ன விடயங்கள் ஏதோ உண்மைதான்! ஆனால்............... சொல்வதற்கு இலகுவாக இருக்கும் விடயங்கள்....... செயற்பாடுகளில்,நடைமுறையில் அவ்வளவு இலகுவானதாகவும் ஏற்புடையதாகவும் அமைந்திருக்கவில்லை என்பதும் உண்மையிலும் உண்மையாக இருந்தது!

"நிரந்தரமான தீர்வு" என்பதில் உறுதியாய் இருந்ததனை தவறு என்று சொல்வதற்கில்லை!!!

சொந்தங்களை பிரிந்து மீண்டும் வதிவிடம் திரும்பும் உங்கள் மனநிலையில் உள்ள சோகத்தினை..... நாங்களும் உணரக் கூடியவாறு

புரியும்படி விளக்கியிருக்கின்றீர்கள்!

பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்! :)

மிக்க நன்றிகள் கவிதை , உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . நான் சந்தித்த மனிதர்களின் மன உணர்வுகளை , கற்பனை என்ற கலப்படங்கள் இல்லாது சொல்லியுள்ளேன் . அவர்களது உணர்வுகள் சமகால , கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பீடு செய்யும் பொழுது , அவர்களது மன உணர்வின் உண்மைத் தன்மை எங்களைக் கோபங் கொள்ளச்செயும் வலியான உண்மைகளே!!

:) :) :) .

  • தொடங்கியவர்

சாவகச்சேரிப் பகுதி குணா அப்பொழுது பொறுப்பாளராக இருந்தவர் அவர்கள் வைத்த கண்ணிவெடியொன்றில்தான் குமார் குழுவினரின் ஜீப் சிக்கி சிதறியதாக நினைக்கிறேன். இந்திய இராணுவம் சுற்றிவழைப்பு நடாத்த முதலே குமார் சனத்திடம் தகவல் சொல்லியனுப்பிவிடுவார். பசங்களை கவனமாயிருக்க சொல்லுங்கோ எண்டு :(

நான் எழுதிய இந்தப்பகுதியைக் கற்பனை இல்லை என்று ஓர் போராளியாக இருந்திருந்தும் , அதனை விபரிப்புடன் உறுதிப்படுத்திய சாத்திரிக்கு நான் என்றுமே கடமைப்பட்டவன் . மிக்க நன்றிகள் சாத்திரி :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 7,8 மாதத்திற்கு முன்பு அவசரமாக ஊருக்குப் போயிட்டு வந்து டக்லஸ் ஏதோ மக்களுக்கு கொஞ்ச நன்மையாவது செய்கிறார் என யாழில் எழுத கொஞ்சப் பேர் என்னைத் திட்டிப் போட்டினம் நீங்கள் எழுத பேசாமல் இருக்கினம்...பத்மநாபா சொன்ன மாதிரி மாநில அரசாங்கமாக இருந்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது,நிலமும் பறி போயிருக்காது என கதை மூலம் சொல்கிறீர்கள் என்ட கேள்வி என்னவென்டால் மாநில அரசுக்குரிய அதிகாரம் என்ன? அதை புலிகள் ஏற்றிருந்தால் அதன் பிறகு எப்படி போராட்டத்தை எப்படி கொண்டு நடத்துவது என சொல்லவில்லையா?...உலகத்தில் உள்ள அத்தனை ஆமி செய்ததை தான் இந்தியன் ஆமியும் செய்தது என எழுதி உள்ளீர்கள்.உலகத்தில் உள்ள அத்தனை ஆமிகளும் போற,போற இடத்தில் உள்ள பெண்களை மானபங்கு படுத்தியதா?...இந்தியன் ஆமியைப் பற்றி தற்போது கதைப்பது ஏன் என புரியவில்லை?...அந்த நேர‌த்தில் "குமார்" என்ட‌ அந்த அதிகாரியும் அந்த வாகனத்தில் வருகிறார் என புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்...மொத்தத்தில் புலிகளின் வெற்றியை பாராட்டும் அதே மக்கள் தான் தோல்வி என்ட‌வுட‌ன் தாங்க மாட்டாமல் விமர்சிக்கவும் செய்கிறார்கள்...கோமகன் கதை எழுகிற விதம் நன்றாக உள்ளது ஆனால் முடிக்க வேண்டும் என அவச‌ர‌ப்படுகிற மாதிரியும் தெரிகிறது

Edited by ரதி

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் சஜீவன் , வாத்தியார் ,உடையார் ,சகாரா அக்கா , நிலாமதி அக்கா உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் பின்னரும் ஒன்றையுமே எட்டமுடியாத நிலையில் இருக்கும்போது டக்ளஸ்கூட தேவதூதனாகத்தான் தெரிவார்.. அதைத்தான் அவரும் விரும்புகின்றார்.

நன்றாக போகின்றது கோமகன் தொடருங்கள் .

நீங்கள் சனங்கள் சொன்னதை தானே எழுதுகின்றீர்கள்.அப்படியே போவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் புலிகளின் வெற்றியை பாராட்டும் அதே மக்கள் தான் தோல்வி என்ட‌வுட‌ன் தாங்க மாட்டாமல் விமர்சிக்கவும் செய்கிறார்கள்

வெற்றியை பங்கு கொள்ள பலர் இருப்பார்கள்.தோல்வி எப்போதுமே அநாதை தான்.

  • தொடங்கியவர்

முப்பது வருட அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் பின்னரும் ஒன்றையுமே எட்டமுடியாத நிலையில் இருக்கும்போது டக்ளஸ்கூட தேவதூதனாகத்தான் தெரிவார்.. அதைத்தான் அவரும் விரும்புகின்றார்.

மிக்க நன்றிகள் கிருபன் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

நன்றாக போகின்றது கோமகன் தொடருங்கள் .

நீங்கள் சனங்கள் சொன்னதை தானே எழுதுகின்றீர்கள்.அப்படியே போவது நல்லது.

மிக்க நன்றிகள் அர்ஜூன் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

வெற்றியை பங்கு கொள்ள பலர் இருப்பார்கள்.தோல்வி எப்போதுமே அநாதை தான்.

நிதர்சனமான , வலியான உண்மை நுணாவிலான் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்று,நன்று,நன்று இதை விட வேறை என்னத்தை சொல்வது.முடிவுக்கு வந்ததும் வசதி ஏற்படின் நல்ல நினைவு தொகுப்பாக்கி அதன் ஊடே வரும் பிரியோசனத்தை படிக்க வசதி குறைவாக இருக்கும் சிறு குழந்தை மாணவர்களுக்கு கொடுத்தால் நன்று என் மனசுக்கு படுகிறது கோமகன் அண்ணா..இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  • தொடங்கியவர்

நானும் 7,8 மாதத்திற்கு முன்பு அவசரமாக ஊருக்குப் போயிட்டு வந்து டக்லஸ் ஏதோ மக்களுக்கு கொஞ்ச நன்மையாவது செய்கிறார் என யாழில் எழுத கொஞ்சப் பேர் என்னைத் திட்டிப் போட்டினம் நீங்கள் எழுத பேசாமல் இருக்கினம்...பத்மநாபா சொன்ன மாதிரி மாநில அரசாங்கமாக இருந்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது,நிலமும் பறி போயிருக்காது என கதை மூலம் சொல்கிறீர்கள் என்ட கேள்வி என்னவென்டால் மாநில அரசுக்குரிய அதிகாரம் என்ன? அதை புலிகள் ஏற்றிருந்தால் அதன் பிறகு எப்படி போராட்டத்தை எப்படி கொண்டு நடத்துவது என சொல்லவில்லையா?...உலகத்தில் உள்ள அத்தனை ஆமி செய்ததை தான் இந்தியன் ஆமியும் செய்தது என எழுதி உள்ளீர்கள்.உலகத்தில் உள்ள அத்தனை ஆமிகளும் போற,போற இடத்தில் உள்ள பெண்களை மானபங்கு படுத்தியதா?...இந்தியன் ஆமியைப் பற்றி தற்போது கதைப்பது ஏன் என புரியவில்லை?...அந்த நேர‌த்தில் "குமார்" என்ட‌ அந்த அதிகாரியும் அந்த வாகனத்தில் வருகிறார் என புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்...மொத்தத்தில் புலிகளின் வெற்றியை பாராட்டும் அதே மக்கள் தான் தோல்வி என்ட‌வுட‌ன் தாங்க மாட்டாமல் விமர்சிக்கவும் செய்கிறார்கள்...கோமகன் கதை எழுகிற விதம் நன்றாக உள்ளது ஆனால் முடிக்க வேண்டும் என அவச‌ர‌ப்படுகிற மாதிரியும் தெரிகிறது

மிக்க நன்றிகள் , ரதியக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . நீங்கள் பல கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளீர்கள் . எனது கதை சிலவேளைகளில் முக்கியமானவர்களின் பார்வையில் படவில்லையோ தெரியாது . அதனால் , அரசியல் ரீதியிலான கருத்துப் பகிர்வுகள் தவிர்கப்பட்டிருக்கலாம் . இராணுவ மொழி எல்லா இடத்திலேயுமே ஒன்றே . படையெடுப்புகளில் முதலில் அவர்கள் கண்களில் படுவது பெண்களே . பல வரலற்றுப் படையெடுப்புகளை என்னால் உதாரணமாகக் காட்டமுடியும் . ஈராக்கலும் , சேர்பியாவிலும் , செச்சினியாவிலும் , ஆர்மேனியாவிலும் , கொங்கோவிலும் , அவர்களின் மொழி ஒன்றாகவே இருந்தது . அதிகாரப்பரவலாக்கம் ஏற்கனவே பல தரப்புகளில் விவாதிக்கப்பட்டவை . அன்றைய சூழலில் எமக்கான இருப்பை தக்கவைப்பதற்கான சந்தர்பமாகவே நாங்கள் எடுக்கவேண்டியருந்து . அதற்கு சில அரசியல் சமசரங்களை செய்யவேண்டியிருந்தது . அதில் அக்கறைப்படவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது . எமக்கு வரலாற்று சாட்சியாக பீ எல் ஓ உம் , ஹமாஸ் உம் பாலஸ்தீனத்து தேசியப்போராட்டத்தில் கைகோக்கவில்லயா ? ஏன் எங்களால் முடியாது இருந்தது ரதியக்கா ? மேலும் இதுபற்றி ஆராய விரும்பவில்லை ரதியக்கா . மிக்க நன்றிகள்

:) :) :) .

  • தொடங்கியவர்

நன்று,நன்று,நன்று இதை விட வேறை என்னத்தை சொல்வது.முடிவுக்கு வந்ததும் வசதி ஏற்படின் நல்ல நினைவு தொகுப்பாக்கி அதன் ஊடே வரும் பிரியோசனத்தை படிக்க வசதி குறைவாக இருக்கும் சிறு குழந்தை மாணவர்களுக்கு கொடுத்தால் நன்று என் மனசுக்கு படுகிறது கோமகன் அண்ணா..இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

மிக்க நன்றிகள் , யாயினி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . சிலவற்றை நான் வெளிச்சம் போடுவதில்லை . மீண்டும் மிக்க நன்றிகள் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் , ரதியக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . நீங்கள் பல கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளீர்கள் . எனது கதை சிலவேளைகளில் முக்கியமானவர்களின் பார்வையில் படவில்லையோ தெரியாது . அதனால் , அரசியல் ரீதியிலான கருத்துப் பகிர்வுகள் தவிர்கப்பட்டிருக்கலாம் . இராணுவ மொழி எல்லா இடத்திலேயுமே ஒன்றே . படையெடுப்புகளில் முதலில் அவர்கள் கண்களில் படுவது பெண்களே . பல வரலற்றுப் படையெடுப்புகளை என்னால் உதாரணமாகக் காட்டமுடியும் . ஈராக்கலும் , சேர்பியாவிலும் , செச்சினியாவிலும் , ஆர்மேனியாவிலும் , கொங்கோவிலும் , அவர்களின் மொழி ஒன்றாகவே இருந்தது . அதிகாரப்பரவலாக்கம் ஏற்கனவே பல தரப்புகளில் விவாதிக்கப்பட்டவை . அன்றைய சூழலில் எமக்கான இருப்பை தக்கவைப்பதற்கான சந்தர்பமாகவே நாங்கள் எடுக்கவேண்டியருந்து . அதற்கு சில அரசியல் சமசரங்களை செய்யவேண்டியிருந்தது . அதில் அக்கறைப்படவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது . எமக்கு வரலாற்று சாட்சியாக பீ எல் ஓ உம் , ஹமாஸ் உம் பாலஸ்தீனத்து தேசியப்போராட்டத்தில் கைகோக்கவில்லயா ? ஏன் எங்களால் முடியாது இருந்தது ரதியக்கா ? மேலும் இதுபற்றி ஆராய விரும்பவில்லை ரதியக்கா . மிக்க நன்றிகள்

:) :) :) .

தொடர்ந்து கதையை எழுதுங்கள் கோமகன்...நீங்கள் கதையை எழுதிப் போட்டு அதற்கு முக்கியமானவர்கள் வந்து பதில் சொல்ல வேண்டும் என்கிறது எந்த விதத்தில் நியாயம்?...மேலும் இதுபற்றி கதைத்து உங்கள் கதையை திசை திருப்ப விருப்பமில்லை நன்றி வணக்கம்

கோமகன் ,

புலிகள் சில விடயங்களை இடைக்கால தன் ஆட்ச்சி அதிகார சபை மூலம் செய்ய முயன்றார்கள்.ஆனால் அதனைக் குழப்பியது சிறிலஙவினூடாக இந்தியா.தற்போதைய நோர்வே அறிக்கையினூடாக இது தெளிவாகி இருக்கிறது.

எமது போராட்டம் இந்திய உபகண்ட அரசியலுடன் பின்னிப் பிணைந்த்தது. நாம் தமிழ் நாட்டு மக்கள் அமைப்புக்களுடனும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான வேற்று மானில மக்களுடனும் உறவுகளைப் பேணவில்லை.இது எமது போராட்டத்தின் அடைப்படைத் தவறுகளில் ஒன்று.தற்போது அந்தத தவறு த்ரிஉத்தப்பட்டுக் கொண்டு வருகிறது.ஆனால் புலிகள் இடைக்கால அதிகார சபையை பலஸ்தீனர்களைப் போல் கோரவில்லை என்பது வரலாற்று ரீதியாகப் பொய்யான செய்தி. புலிகள் வேறு தவறுகளை விட்டிருக்கிறார்கள், இந்தத் தவறை அல்ல.

மேலும் தமிழர் தாயகத்தில் நடந்த்த தேர்த்தல்களில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் எத்தகைய அரசியலுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//நாம் தமிழ் நாட்டு மக்கள் அமைப்புக்களுடனும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான வேற்று மானில மக்களுடனும் உறவுகளைப் பேணவில்லை.இது எமது போராட்டத்தின் அடைப்படைத் தவறுகளில் ஒன்று.//

இந்தியாவில் (புரட்சிகர) அரசியல் மாற்றமின்றி இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள சின்ன சின்ன நாடுகளில் உள்ள இனங்களுக்கு அரசியல் மாற்றம் வருவது மிக மிக கஸ்டம்

மிக்க நன்றிகள் நாதர் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . மேலும் , என்னை நீங்கள் செழுமைப் படுத்தியிருக்கின்றீர்கள் . உங்கள் பொதுக்கருத்துடன் ஒத்துப்போகின்றேன் :) :) :) .

  • தொடங்கியவர்

//நாம் தமிழ் நாட்டு மக்கள் அமைப்புக்களுடனும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான வேற்று மானில மக்களுடனும் உறவுகளைப் பேணவில்லை.இது எமது போராட்டத்தின் அடைப்படைத் தவறுகளில் ஒன்று.//

இந்தியாவில் (புரட்சிகர) அரசியல் மாற்றமின்றி இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள சின்ன சின்ன நாடுகளில் உள்ள இனங்களுக்கு அரசியல் மாற்றம் வருவது மிக மிக கஸ்டம்

மிக்க நன்றிகள் ஸ்ராலின் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . உங்களை நான் 06 அல்லது 07 யாழில் பார்திருக்கின்றேன் . உங்களை மீண்டும் பார்ததில் மகிழ்சி :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

. எனது கதை சிலவேளைகளில் முக்கியமானவர்களின் பார்வையில் படவில்லையோ தெரியாது . அதனால் , அரசியல் ரீதியிலான கருத்துப் பகிர்வுகள் தவிர்கப்பட்டிருக்கலாம் . :) :) :) .

கோமகன்

இது யாருக்காக விடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

நானும் இதற்கு கருத்து எழுதவில்லை. காரணம் இன்றைய மக்களின் மனநிலை தெரியும். அத்துடன் செத்தவீட்டில் வாழ்த்துக்களை எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம். அந்தவகையிலேயே நானும் தங்களது இந்த வரிகளைப்பார்த்தேன்.

ஆனால் நீங்கள் சொன்ன டக்லசை புறந்தள்ளி சோறு அல்ல மானமே பெரிது என்று நீங்கள் கூறும் அதேமக்களே அண்மைய தேர்தல்களில் வாக்களித்து பிரிந்து கிடப்பதாக நினைத்திருந்த தாயக மற்றும் புலத்தினருக்கிடையிலான பாதையை செப்பனிட்டனர்.

மிக்க நன்றிகள் விசுகு , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . மேலும் நீங்கள் சுட்டிக்காட்டிய பகுதி எதுவித உள்நோக்கத்திற்காகவும் என்னால் எழுதப்படவில்லை :) :) :) .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

என் பாசத்துக்கும் , நேசத்துக்கும் , உரிய கள உறவுகளே,

எனது வேலைப்பளு காரணமாகச் சில வாரங்கள் தடைப்பட்டிருந்த நெருடிய நெருஞ்சி ,

மிகவிரைவில் உங்கள் முன் முட் படுக்கையாக விரியும் என உறுதி கூறுகின்றேன் :) :) :) .

அன்புடன் கோமகன்

Edited by komagan

  • தொடங்கியவர்

37631929934618009920410.jpg

கடற்கரையின் கூதல் காற்று அந்த பஸ்ராண்டை நிரவியிருந்தது . சுற்றியிருந்த தேநீர்கடைகளில் இருந்து சுட்ட வடையின் வாசமும் , சீர்காழியின் பக்திப் பாடலுமாகக் கலந்து வந்தன . பஸ் வெளிக்கிடுவதற்கு நேரமிருந்ததால் நானும் மச்சானும் தேநீர்கடைக்குள் உள்ளட்டோம் . எங்களைக் கண்டதும் கடைப் பெடியன் எமது வழமையான இஞ்சித் தேத்தண்ணியையும் , கடலை வடையையும் கொண்டு வைத்தான் . வடையில் சூடு ஆறாது மொறுமொறுப்பாக இருந்தது . எதிரே இருந்த மீன் சந்தைக்கு மீன்கள் முனையிலிருந்து வரத்தொடங்கியிருந்தன . அவற்றைக் கும்பி கும்பியாகக் குவித்து வைத்திருந்தனர் . சிறிது சிறிதாக அந்த இடம் அமைதியை இழந்தது . நாங்கள் இருவரும் தேத்தண்ணியைக் குடித்து விட்டு ஆளுக்கொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு பஸ்சை நோக்கி நடையைக் கட்டினோம் . தூரத்தே மாமா மனைவியுடன் கதைத்துக் கொண்டிருந்தார் . நாங்கள் பஸ்சை அண்மித்தபொழுது ஓரளவு பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது . நான் மாமவிடம் சொல்லி விட்டு பஸ்சினுள் ஏறி அமர்ந்து கொண்டேன் .பஸ் சாரதி தனது இருக்கையில் ஏறி இருந்து கொண்டு இறுதியாக கோர்ணை அடித்து பஸ்சைக் கிளப்பினார் . மாமாவும் மச்சானும் எங்களை விட்டு மெதுவாக மறைந்தார்கள். மனைவியின் கண்கள் கலங்கியிருந்தன . நான் எதுவும் பேசாது ஜன்னாலால் எனது பார்வையைத் திருப்பினேன். பஸ் பருத்தித்துறை வீதியினூடாக வேகமெடுத்து , பருத்தித்துறைக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தது . எனது கண்கள் இவைகளை இனி எப்போது காண்போம் என்ற ஏக்கத்துடன் வழயில் கண்ட மதில்கள் , வேலிகள் , மரஞ் செடி கொடிகளுடன் , மௌனக் கதை பேசியது . இப்பொழுது பஸசினுள் 80 களின் பாடல்களை பஸ் சாரதி ஒலிக்க விட்டார் . மனைவி இயல்பு நிலைக்குத் திரும்பி என்னுடன் கதைக்கத் தொடங்கினா . மனைவியின் தங்கை குடும்பம் மூன்று நாட்கள் கழித்துக் கொழும்பில் இணைவதாக ஏற்பாடு செய்திருந்தோம் . அதனால் மாமா , மாமி , அன்ரிக்கு எமது பிரிவு பெரிதாக தோற்ற வாய்பில்லை என்று மனைவியை ஆறுதல் படுத்தினேன் . பஸ் இப்பொழுது மந்திகைச் சந்தியைக் கடந்து , நெல்லியடி பஸ்ராண்டை நெருங்கிக் கொண்டிருந்தது . பஸ்சும் தன்னை முக்கால்வாசிப் பயணிகளால் நிறைத்திருந்தது .அதில் பாடசாலை மாணவர்களும் , அலுவலகம் போவோருமே நிறைத்திருந்தனர் .நான் அவர்களை வேடிக்கை பார்கத் தொடங்கினேன் . படாசாலை மணவர்களுக்கு இடையே நடந்த குசுகுசுப்புகள் சுவாரசியமாக இருந்தன . இதற்கு எதிர்பாட்டுகள் எதிர்பக்கத்திலும் வந்துதான் கொண்டிருந்தன . எனக்கு அவர்களின் நடவடிக்கைகள் எனது பள்ளிக்காலத்திற்குக் கொண்டு சென்றன. 80களில் நான் கா பொ தா சாதாரணம் படித்துக்கொண்டிருந்த காலமது , கூடவே வெடிவாலும் முளைத்திருந்தது . எனது இயல்பான இலக்கிய ரசனையும் , நகைச்சுவை உணர்வும் , குண்டு றாகினிக்கு என்னால் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது . ஆரம்பத்தில் நான் லெவல் காட்டினாலும் , என்னைச்சுற்றியிருந்த கூட்டுகளின் உசுப்பலினால் நானும் குண்டு றாகினியிடம் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டேன் . பின்பு அவளே எனக்குப் பேரழகியாக எனது கண்களுக்குத் தெரிந்தாள் . நானும் அவளுக்கு லெவல் காட்ட , கா .பொ . தா . சாதாரண பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற்று , கல்லூரியிலேயே முதல் ஆளாக வந்தேன் . இதனால் குண்டு றாகினியும் தன்ர லெவலை மற்றப் பெட்டையளுக்குக் காட்ட என்னுடன் கூட ஒட்டினாள். எங்கடை சரித்திரம் இப்பிடியே ஓடிக்கொண்டிருக்க , ஒரு நாள் மாலைப்பொழுதில் , தனது அப்பாவிற்கு இடமாற்றம் கிடைத்தால் தாங்கள் வவுனியாவிற்கு இடம் மாறப்போவதாகக் குண்டு றாகினி எனக்கு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள் . அவள் போட்ட குண்டால் என் மனம் குண்டும் குளியுமாகப் போனது . எனக்கு விசர்பிடிக்காத குறை . நான் பின்பு அவளைக் கணவில்லை . காலம் என்னுள் பலமாற்றங்களைத் தந்து . ஆனாலும் , அவளின் நினைவு மனதில் ஓரிடத்தில் பசுமையாகவே ஒட்டியிருந்தது . எனது நண்பனுடன் பேச்சுவாக்கில் அவளின் கதை வந்தபொழுது , அவள் இன்று நாவலர் பாடசாலையின் அதிபராக இருப்பது தெரிய வந்தது . எனது மனம் ஏனோ குண்டு றாகினியை சந்திக்க மறுத்தது . அவள் எனது தங்கைச்சியின் நண்பியாக இருந்ததும் ஒரு காரணமோ தெரியாது . நான் என்னையறியாமல் சிரித்துக் கொண்டேன் . எனது மனைவி என்னை வினோதமாகப் பார்த்தா .

38139520406477300731517.jpg

" என்ன நீங்களே சிரிக்கிறியள் . சொன்னால் என்ன குறைஞ்சு போவியளே ?"

" இல்லை குண்டு றாகினியை நினைச்சன் , என்ர சேட்டையளையும் நினைச்சன் , சிரிப்பாய் வந்திது ".

" உங்களுக்கு வேறை வேலையில்லை ".

என்னை முழுமையாகத் தெரிந்த மனைவி . எதையும் எதிர்மறையாக எடுக்காதவா . பஸ் இப்பொழுது குடிமனைகளைக் கடந்து முள்ளி வெளியனூடாகச் சீறிப் பாய்ந்தது.முள்ளிவெளி ஒன்றிரண்டு செல் அடிபட்ட பனைமரங்களுடன் தலைவாரி கோலமாக இருந்தது . ஒடுக்கமான வீதியில் இருமருங்கும் கிடுகுவேலிகளும் கல்லு மதில்களும் போட்டிபோட்டுக் கொண்டு ஓடி மறைந்தன . பஸ் முள்ளிவெளியைக் கடந்து வறணியூடாக ஊடறுத்துப் பாய்ந்தது . நான் சுவாரசியமாக இருபக்கமும் புண்ணாக்குத் தண்ணி குடிக்கும் கண்டுக்குட்டி போல பார்த்துக் கொண்டு வந்தேன் . ஓரிடத்தில் பஸ் நின்றபொழுது எதிரே ஓர் பெரிய கோயில் வளாகமும் ,அதனை ஒட்டிய உயர்ந்த தேர்முட்டியும் ,ராஜகோபுரமும் , வானைமுட்டி நின்றன. அந்த ராஜகோபுரத்தை ஒட்டி ஓர் ஆலமரம் விழுதுகளால் அகலப் பரப்பி நின்று குளிர்சியாக நின்றது . அதன் கீழ் பக்தர்களின் பொங்கல் பானைகள் அணிவகுத்து நின்று பொங்கிப் பிரவாகிக்கத் தயாராக இருந்தன . அவைகளின் பின்னே ஒரு சிறு கூட்டம் பசியுடன் காத்திருந்தது . அந்த மக்கள் கூட்டதைக் கண்டபொழுது என்மனம் அழுதது . அதில் பக்தகோடிகள் பஸ்சில் ஏறினார்கள் . என்னால் அது எந்த இடம் என்று மட்டுக்கட்ட முடியவில்லை . ஆவல் மேலிட எனது தகவல் களஞ்சியத்தை தட்டி எழுப்பினேன் . எனது தோளில் படுத்து இருந்தவாறே , என்ன எனபது போலப் பார்த்தா .

" இது எந்த இடம் இதால நாங்கள் வரேக்கை வரேலையே ".

கையை எடுத்துக் கும்பிட்டவாறே ,

"இது தான் சுட்டிபுரம் கண்ணைகை அம்மன் கோயில்.இது எங்கடை குடும்பக் கோயில் எங்கடை பாட்டா எங்களை சின்னனிலை கூட்டியருவர் . ஒவ்வருவரிசமும் இங்கை பொங்க வருவம் .எனக்குப் பாட்டா தும்பு முட்டாசும் ,தோடம்பழ இனிப்பும், வாங்கித்தருவர் என்ன ரேஸ்ற் அப்பா சாய்......... நாங்கள் இப்ப வறணீக்கால சுத்துப்பாதைல போறம்."

தகவல்களஞ்சியமும் தனது பங்கிற்கு தொடங்கிவிட்டா என்று உள்ளுக்குள் நான் சிரித்ததின் விளைவு , எனது உதட்டில் பளீரென ஓர் குறுநகை ஒளிர்விட்டது . ஆனால் , எனக்கு இங்கு நடந்த சீர்காழியின் இன்னிசைக் கச்சேரி தான் ஞாபகம் வந்தது . அப்போது சீர்காழியின் இன்னிசைக் கச்சேரியை ஒலியிழை நாடாவில் தான் கேட்டிருக்கின்றேன் . அந்தக் கச்சேரியும் , கே பி சுந்தராம்பாளின் , இன்னிசைக் கச்சேரிக்குமே அதிக அளவு சனம் தோட்டம் துரவெல்லாம் பரந்து விரிந்து இரவிரவாக கண்முழித்து பார்த்து ரசித்தார்கள் . அப்படிப்பட்ட எங்கள் சனத்திற்கு இந்தியா செய்த துரோகத்தனத்தை நினைக்க என்மனம் உலைகளமாகியது .

பஸ் கொடிகாமம் பஸ்ராண்டில் தன்னை நிலை நிறுத்தியது .கொடிகாமத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டறைவர் தேத்தண்ணி குடிக்கப்போய்விட்டார் . அருகே இருந்த சந்தை காய்கறி வாங்க வந்தவர்களால் திமிலோகப்பட்டது . பலவழிகளாலும் வந்த வானொலி சத்தங்கள் காதைப் பிளந்தன . எனக்குத் தலை இடிக்கத் தொடங்கியது .

40276156622455256611439.jpg

சந்தைக்கு அருகே தட்டிவான் ஒன்று நின்று கொண்டிருந்தது . அதன் தட்டியில் வாழைக்குலைகளும் , ஒடியல் , புழுக்கொடியல் , பினாட்டுக் கடகங்களும் , ஆரோகணித்து இருந்தன . அந்த தட்டி வானில் கொஞ்ச அப்புமாரும் , ஆச்சிமாருமே இருந்தார்கள் . நான் அதில் இளசுகளை காணவில்லை .சிலவேளைகளில் , தட்டிவானில் போவது கௌவுரவக் குறைச்சலாக அவர்கள் நினைத்தார்களோ தெரியாது . இரண்டு ஆச்சிமார்கள் தங்கள் கொட்டப் பெட்டியில் இருந்து காசை எடுத்து தட்டிவான் பெடியனிடம் ரிக்கற் வாங்கிக் கொண்டிருந்தார்கள் .அவர்களிடம் நகரத்து வாசனைகளைக் காணமுடியவில்லை . கிராமத்தின் மண்வாசம் அவர்களிடம் அப்படியே ஒட்டியிருந்தது . அவர்களது வாஞ்சையான வெகுளியான பேச்சுக்கள் எனது மனதைக் கொள்ளை கொண்டன . உதட்டிலே சிரிப்பையும் அதன் பின்னால் கொடும் விசத்தையும் கொண்ட மக்களிடையே பழகிய எனக்கு , உண்மையில் அந்த சாம்பல் மண் மக்கள் வேற்றுக்கிரக வாசிகளாகவே எனக்குத் தெரிந்தார்கள் . எமது பஸ் சாரதி தேத்தண்ணியைக் குடித்து விட்டு வந்து தனது இருக்கையில் இருந்து நெட்டி முறித்தர் . நடத்துனர் வந்து விசில் அடிக்க தனது இலக்கை நோக்கி பஸ் மூசியது . சாவகச்சேரியில் போகும்பொழுது புகையிரதப்பாதையும் கூட வந்து என்னிடம் நலம் விசாரித்தது . ஒன்றின் பின் ஒன்றாக மனது முட்டிய வலியுடன் எனது மண்ணை இழந்து கொண்டிருந்தேன் .பஸ் இப்பொழுது முகமாலை படைத்தளத்தை நெருங்குவதற்கு அறிகுறியாகத் தனது வேகத்தைக் குறைத்து ஊர்ந்தது . எனக்கு முகம் இறுகி வெறுப்பு மண்டியது . பஸ்சினுள் வந்த சிங்கபாகுக்கள் படைத்தளத்தில் இறங்கப் , புதியவர்கள் ஏறிக்கொண்டார் கள் ஆனையிறவுப் படைத்தளத்திற்குச் செல்ல . பஸ் மீண்டும் தனது குணத்தைக் காட்டியது . நேரம் காலை 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்து .

29891217821621892550417.jpg

சூரியன் செம்ஞ்சள் பூசி நிலம் நன்றாக வெளுத்து இருந்தது . தூரத்தே ஆனையிறவுப் பாலத்தின் தொடக்கத்தில் மந்திகள் வழமை போல் காவல் கோபுரத்திலும் பாதுகாப்பு அணிலும் குந்திக் கொண்டிருந்தன . பாலத்தின் இருபக்கமும் நாரைகள் தங்கள் வேலையில் கண்ணுங் கருத்துமாக இருந்தன .

37802929912927678756110.jpg

38007329912806012101610.jpg

கோடையின் கடுமையால் நீர் வற்றி அங்காங்கே திட்டாக நின்றது . வெள்ளை நிறத்தில் எமது உப்பு சூரிய ஒளியில் மின்னியது . அதன் பின்னால் உள்ள குருதி தோய்ந்த சரித்திரம் பலருக்கு வேப்பங்காயாக இருப்பது வேடிக்கையாக இருந்தது . பலகளங்களை குறைந்த வளங்களுடன் அகலக்கால் பரப்பி சூறாவளியாக வலம் வந்த வேங்கைகளின் அனல்மூச்சு என் நெஞ்சினுள்ப் பாரமாக இறங்கியது .ஆனையிறவு உப்புவெளியின் சேற்று மணம் மூக்கை துளைத்தது .சூரிய வெளிச்சத்தால் எஞ்சியிருந்த தண்ணி தங்கத்தாம்பாளமாகத் தகதகத்தது . பஸ் வேகத்தை கூட்டிப் பரந்தனை நோக்கி விரைந்தது . சிறிது நேரத்தில் சாப்பிட்டிற்கு முன்பு இறங்கிய இடத்தில் தன்னை நிலைப்படுத்தியது . நான் பம் பண்ண கீழே இறங்கினேன் . ஏனோ தெரியவில்லை இன்று பம்பிங்ஸ்ரேசன் துப்பரவாக இருந்தது . நான் எனது அலுவலை முடித்து விட்டு கைகால் கழுவினேன். காலில் இருந்த புளுதி வெளியேறி கழிவு நீர் ஓடையில் கலந்தது . நான் முகம் கைகால் கழுவியதால் புத்துணர்வு பெற்றேன் . நான் பஸ்சினுள் நுளைந்தபொழுது பஸ் வெறுமையாக இருந்தது . மனைவி தனது தங்கைச்சி செய்து குடுத்திருந்த உப்புமா பார்சலை அவிட்டா . அது வாழை இலையில் சுற்றி இருந்ததால் அதன் வாசம் பஸ் எங்கும் பரவியது . அன்பானசமையலால் வந்த உப்புமாவும் சம்பலும் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது . மனைவியிடம் தண்ணிப்போத்தலை வாங்கிக் குடித்தேன் . எனக்கு உறைப்பு என்று காட்டுவதற்காக நான் நடிப்பது அவாவிற்குத் தெரிந்திருந்தாலும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா . நான் சாப்பிட்டு முடிந்தவுடன் சிகரட் பெட்டியை எடுத்துக்கொண்டு , நான் முன்பு தேத்தண்ணி கடித்த கடையை நோக்கி நடையைக் கட்டினேன் . அங்கு காலை வேளையாகையால் கடை பரபரப்பாக இருந்தது . என்னைக் கண்ட அந்த அண்ணை ,

"வாங்கோ தம்பி நானும் உங்களை பாத்துக் கனகாலம்".

என்று வெள்ளைச் சிரிப்புடன் என்னை வரவேற்றார்.

" நீங்கள் எப்படியண்ணை இப்ப இருக்கிறியள் ?"

என்றேன்.

"ஏதோ இருக்கிறன் தம்பி . மனிசிக்காறி இப்ப கொஞ்சம் சுகமாகி கொண்டு வாறா தம்பி ".

என்று முகத்தில் உற்சாகம் பொங்கிப் பிராவிகிக்கச் சொன்னார் .

"சந்தோசம் அண்ணை எனக்கு ஒரு தேத்தண்ணி தாங்கோ".

நான் தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு கடைவாசலுக்கு வந்தேன்.சுடுகின்ற தேத்தண்ணியை மெதுவாக உறுஞ்சியபடியே , எனது கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது ,நான் முன்பு சந்தித்த அக்கா கண்ணில் எத்துப்படுகின்றாவா என்று . ஏனோ எனது மனம் அவாவையே சுற்றி வட்டமிட்டது . கடவுளே அந்த அக்காவை எனக்குக் காட்டு என்று உள்ளர மனம் வேண்டியது . எனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை . அந்த அக்கா தனது மகனுடன் கையில் கூடையுடன் பக்கத்துக் கடையில் இருந்து வந்து கொண்டிருந்தா . என்மனம் மகழ்சியால்த் துள்ளியது . நான் அவாவைக் கூப்பிட்டேன் . நின்று என்னை உற்றுப்பார்த்த அவா , என்னிடம் ஓடி வராத குறையாக என்னிடம் வந்த அவா ,

" தம்பி எப்பிடி இருக்கிறியள் ? என்ர கடவுளே என்னால நம்பேலாமல் கிடக்கு ".

நான் வாயில் ஒரு புன்னகையை தவளவிட்டேன் . ஏனோ தெரியவில்லை கையில் புகைந்த சிகரட் என்னையறியாமல் பின்னால் போனது .

" அக்கா உங்களோட ஒரு விசையம் கதைக்க வேணும்".

" என்ன தம்பி "?

"உங்களுக்கு நிவாரண நிதி வந்திட்டுதே"?

37724629912872012095010.jpg

" ஓம் தம்பி , உங்களை கண்டாப் பிறகு வந்துது .இவர் இப்ப பள்ளிக்கூடம் போறார் . ஒருநேரச்சாப்பாடு தன்னும் சாப்பிடிறம்".

என்று சிரித்தவாறே வெள்ளேந்தியாக எனக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தா அந்த அக்கா . எனது கை தன்னிச்சையாக மாற்றாமல் வைத்திருந்த நூறு யூரோக்களைப் பொக்கற்றினுள் சரிபார்த்தது .

"அக்கா நாங்கள் கொழும்புக்கு போறம் . எங்களிட்டை பெரிய காசு இல்லை . இதை வைச்சு உங்கடை மகனை படிக்க வையங்கோ".

என்று தயாராக வத்திருந்த யூறோவைக் கொடுத்தேன் .

"என்ன விளையாடுறியளே தம்பி ? எங்கை உங்கடை மனிசி ? நான் பாக்கவேணும் ".

என்று சூடாக அந்த அக்கா என்னிடம் கேட்டா . என்னடா இது வில்லண்டத்தை விலைக்கு வாங்கீட்டமோ? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே , எனது மனவியிடம் அந்த அக்காவைக் கூட்டிக் கொண்டு போனேன் . என்மனைவி செய்த சமாதானத்தால் ஒருவாறு சகஜநிலைக்குத் திரும்பிய அவா ,

" சரி தம்பி இவ்வளவு சொல்லுறியள் , தாங்கோ .ஆனா , உங்களுக்கு திருப்பி தருவன் ."

" உங்கடை பேர் என்ன தம்பி "?

நான் எனது பேரைச் சொன்னேன் .அவா எனது மனைவியைப் பாத்து ,

"உங்கடை மனுசன் பேருக்கேத்த ஆள் தான் "

என்றா,சிரித்தவாறே .

நான் அவாவிடம் விடைபெற்றுக் கொண்டு பறப்படத்தயாரான பஸ்சினுள் ஏறினேன் . நேரம் 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . ஊழித்தாண்டவமாடிய அந்தக் கந்கபூமிகள் என் அழுகையினூடாக விடைபெற்றுக் கொண்டிருந்தன . பஸ் கிளிநொச்சி , மாங்குளம் ,என்று எகிறிப் பாய்ந்து ஓமந்தை சோதனைச் சாவடியில் தன்னை மட்டுநிறுத்தியது .

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

"அக்கா நாங்கள் கொழும்புக்கு போறம் . எங்களிட்டை பெரிய காசு இல்லை . இதை வைச்சு உங்கடை மகனை படிக்க வையங்கோ".

என்று தயாராக வத்திருந்த யூறோவைக் கொடுத்தேன் .

"என்ன விளையாடுறியளே தம்பி ? எங்கை உங்கடை மனிசி ? நான் பாக்கவேணும் ".

என்று சூடாக அந்த அக்கா என்னிடம் கேட்டா . என்னடா இது வில்லண்டத்தை விலைக்கு வாங்கீட்டமோ? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே , எனது மனவியிடம் அந்த அக்காவைக் கூட்டிக் கொண்டு போனேன் . என்மனைவி செய்த சமாதானத்தால் ஒருவாறு சகஜநிலைக்குத் திரும்பிய அவா ,

" சரி தம்பி இவ்வளவு சொல்லுறியள் , தாங்கோ .ஆனா , உங்களுக்கு திருப்பி தருவன் ."

" உங்கடை பேர் என்ன தம்பி "?

நான் எனது பேரைச் சொன்னேன் .அவா எனது மனைவியைப் பாத்து ,

"உங்கடை மனுசன் பேருக்கேத்த ஆள் தான் "

தொடர், அருமையாகப் போகின்றது கோமகன்! அதற்குள்ளேயே ஓமந்தை, வந்து விட்டது தான் கவலையாக உள்ளது!

அந்த அக்காவின் பணத்தை உடனே வாங்காத குணம், எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது! அத்துடன் அவ, திருப்பித் தருவன் என்று கூறியதும் பிடித்திருக்கின்றது!

இங்கே தான், குணம் 'பணத்தை வெல்கின்றது' என நினைக்கின்றேன்!

உங்கள் பெயரைத் தெரியாதவர்களுக்கு நீங்கள், உங்கள் பேருக்கேற்ற ஆள் என்பது உடனே விளங்காது!

அவர்களுக்கு ஒரு சின்ன உதவி! உங்கள் பெயர் எனது அவதாரில் மறைந்திருக்கின்றது! :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிவான்களைப் பற்றியே ஒரு தனிக்கதை எழுதலாம்..ஏழை உழைக்கும் மக்களின் தோழன் உந்தத்தட்டிவான்கள்..தொடர் அழகாக உள்ளது..தொடருங்கள்..

அழகான பூவரசம்பூவின் படத்தோடு ஆரம்பித்துள்ளீர்கள். பூவரம்பூவின் அழகு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

மனங்கள் கனத்த உறவுகளின் பிரிவு. இனி எப்போது காண்போமோ என்ற ஏக்கம் சொல்ல முடியாதது.

அந்த அக்காவை கண்டது உங்கள் பயணத்தில் ஒருவித நிம்மதியைக் கொடுத்திருக்கும். நல்ல மனம் வாழ்க!

தொடருங்கள் கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம்போலவே தாயக நினைவுகள் முட்களாய் குத்த .

.........பகிர்வுக்கு நன்றி ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.