Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • தொடங்கியவர்

img0660p.jpg

ஒட்டோ நின்ற சத்தத்தைக் கேட்டதும் பெறாமக்கள் துள்ளிக்குதித்து ஓடி வந்தார்கள். அங்கிள் என்று கட்டிப்பிடிச்சுத் தொங்கினார்கள். அவர்களது "பம்மல்" ஏன் என்று தெரிந்தாலும் அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தேன். ஒழுங்கையின் இரண்டுபக்கமும் எங்கள் வீடு இருந்தது. என்னைக் கண்ட சந்தோசத்தில் மாமாவும் அன்ரியும் கதைகாது இருந்தார்கள். நானும் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டாது இயல்பாகவே பழகினேன். இவர்கள் இருவரும் என்னை பாதித்த மனிதர்கள். எனது மனைவிக்கு 3 சகோதரிகளும் 1 சகோதரனும் இருந்தர்கள். ஆனால், இவர்களது சிறுவயதில் தந்தையை இனக்கலவரத்தில் பறிகொடுத்தார்கள். சகோதரன் நாடு காக்கப் போய்விட்டார். தகப்பன் இல்லாத பிள்ளைகளை இன்றுவரை தாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் பேணிப்பாதுகாத்தவர்கள் தான், நான் முதலே சொன்ன மாமாவும் அன்ரியும். இப்படியான மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு அவர்களது வடமராட்சி வட்டாரப் பேச்சு சில சொற்கள் விளங்கவில்லை, மனைவியிடம் தனிய கேட்கவேண்டியிருந்தது. உதாரணமாக நெம்பல், தகடுகுடுத்தல், கசளி குடுத்தல், என்பன சுவாரசியமானவை. பின்பு அவர்களிடம் அவர்களது பாணியிலேயே கதைத்தேன். மாமி எனது அம்மாவின் உயிர்பிரியும் போது தான் அம்மாவிடம் கதைத்தவற்றை சொல்லத் தொடங்கினா. கலங்கிய எனது கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பி வீட்டு வழவுகளை பாக்க பெறாமக்களுடன் போனேன். மனைவி எனது அம்மாவைப் பற்றி அவருடன் கதைத்து உள்ள கவலையைக் கூட்டவேண்டாம் என்று தாயிடம் சொல்வது எனது காதகளில் விழுந்தது. வீட்டு வளவில் தென்னைகளும், கமுகமரங்களும், மாதுளை மரங்களும் நிறைந்து இருந்தன. வெய்யிலின் அகோரத்திற்கு அவற்றின் நிழல் இதமாக இருந்தன. கமுகுவிலும், மாதாளை மரத்திலும் அணில்பிள்ளைகள் துள்ளிளையாடின. வீட்டின் அருகே சமைக்க தென்னை ஓலையால் வேய்ந்து மால் கட்டியிருந்தார்கள். எனக்கு மாலைப் பர்க்கப் புதினமாக இருந்தது. மாலின் உள்ளே மட்டுச்சாணகத்தால் மெழுகியிருந்தார்கள். மூக்கை அரிக்கின்ற அமில நெடி இல்லாத குளர்சியைத் தரும் இயற்கைக் கிரிமிநாசினி. சிறுவயதில் கோண்டாவிலில் அப்பாச்சியிடம் போகும்பொழுது பார்த்ததிற்குப் பிறகு இப்போழுது தான் மாலைப் பார்த்ததால் எனக்குப் பெரிய புழுகமாக இருந்தது. ஆனால் கவலையான விடையம் இந்த மால்களின புழக்கம் இப்பொழுது ஒருசில வீடுகளைத் தவிர இல்லை என்பது மனதை நெருடியது. வீட்டல் இருந்த நாயும் முதல் என்னை எதிரியாகவே பார்த்து என்னிடம் ஒடி விழையாடியது. வீட்டுக் கிணற்றில் கப்பி கட்டி கயிற்றில் இரண்டு பக்கமும் வாளி கட்டியிருந்தார்கள். கிணற்றில் ஆசை தீர அள்ளி அள்ளி குளித்தேன். கப்பியும் ஆரம்பத்தில் எனக்கு இடைஞ்சலையே தந்தது பேந்து பழகிவிட்டது. கிணற்றடியில் துலாக்கால் இருந்ததிற்கான அடையளம் இருந்தது. சாப்பிட்டுவிட்டு மத்தியானம் நல்ல நித்தரை அடித்தேன். மனைவி பரித்தித்துறை வடையும் பிளேன் ரீ யும் தந்தா. ரீயைக் குடித்துவிட்டு தங்கைச்சிக்குப் போன் பண்ண தொலைபேசியை எடுத்தேன். நாளை கோப்பாய்க்கு வருவதாகச் சொல்லி விட்டு போனை வைத்தேன். நானும் மச்சானும் வெளிக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தோம். வெய்யில் குறைந்து காத்து வந்தது.

"எங்கை ரெண்டுபேரும் போறியள்"?

" உதிலை பளைய ரவுனுக்குப்போட்டு வாறம்"

" ஏன்"?

"சும்மா இடம் பாக்க".

நமுட்டுச் சிரிப்புடன் மனைவிக்குச் சொன்னேன்.எனது கள்ளச்சிரிப்பைப் புரிந்தவளாக,

" பேந்து உங்கை வைத்தால அடில கிடவுங்கோ செய்யிறன் வேலை".

"ஏனப்பா இந்த எறிசொறி கதையளை நிப்பாட்ட மாட்டீரே"?

"வெள்ளென வாங்கோ".

சரி என்றவாறே இருவரும் ஒழுங்கையால் நடக்கத்தொடங்கினோம். எனது மச்சான் என்னை விட உள்ள ஊரி சந்து பொந்துகள் எல்லாம் தெரிஞ்சு வைத்திருந்தார். அவருக்கு இது இரண்டாது முறை பயணம். ஒரு சில நட்புகளையும் பிடிச்சு வைத்திருந்தார். அவருக்கு பியர் குடிக்க வேணும். எனக்கு சொட்டைத்தீனும் பிளேன்ரீயும் வேணும், பஸ்ராண்டையும் பாக்கவேணும். இருவரும் பல கதைகளை கதைத்துக் கொண்டு பளையரவுணை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். ஒழுங்கையில் ஆடுகள் மேஞ்சு கொண்டு குட்டிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. ஆவோலைப்பிள்ளையார் கோயிலடி தாண்ட ஒரு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பெயர்பலகையுடன் இருந்தது. அதில், "சுப்பர்மடம் சுனாமி மீள்வீடமைப்புத்திட்டம் உதவி யூனிசெப்" என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து சுப்பர்மடம் கரைக்குக் கிட்ட வருகின்றது. அங்கு தானே, அந்தமக்களுக்கு புனர்நிர்மாணம் செய்யேண்டும்? என்ற இயல்பான கேள்வி எழுந்தது. மாமவிடம் கேக்கவேணும் என்று நினைத்தேன். இரண்டு பக்கமும் வீட்டு மதில்களில் மயில்கொன்றை பூக்களும், தேமா, அலரி, குறோட்ன்களால் நிறைந்திருந்தன. நாங்கள் கல்லூரி சந்தியையும், வீ எம் றோட் சந்தியையும், கடந்து வந்த வீதியில் நடந்தோம். அப்பத் தட்டிகளில் அப்பமும் தோசையும் சுட்டு மணம் வீதி எங்கும் பரவியிருந்தது. நிண்டு அப்பத்தட்டியை வடிவாகப் பார்த்தேன் எரியும் நெருப்பையும் தோசைக்கல்லையும் தான் பாக்க முடிந்தது.தோசை சுட்ட "செப்" ஐ பாக்கமுடியவில்லை. எனக்கு அப்பம் சாப்பிடவேணும் போல இருந்தாலும், இன்று றோல்ஸ் உம் பிளேன் ரீ யும் குடிக்க முடிவு செய்தால் மனதை மாற்றிக் கொண்டேன். இருவரும் அம்மன் கோயிலடியால் பஸ்ராண்ட் வாசலைத் தொட்டோம்.மாலைவேளையில் பஸ்ராண்டும் கலகலத்தது. மினிபஸ்கள் ஒருபக்கமாகவும், உள்ளூர் இ போ சா பஸ் நடுவாகவும், வெளியூர் செல்லும் பஸ் அருகேயும் நின்றிருந்தன. பயணிகள் அவசரம்காட்டினர் வீடு செல்ல. அந்த இடம் பஸ் கோர்ண் ஒலிகளால் இரைச்சலாக இருந்தது. ராஜன் சைக்கிள் வேக்ஸ் கடை இப்பொழுதும் இருந்தது. பஸ்ராண்டை சுற்றியிருந்த கட்டிடங்களில் சிங்கத்தின் பற்கள் பதிந்திருந்தன. முன்பு இந்த இடங்கள் ஆள்நடமாட்டமற்ற சூனியப் பகுதி. இப்பொழுது தான் திறந்து விட்டுள்ளார்கள். இலங்கை வங்கி கட்டிடத்திற்கு மேல் ராணுவ சிப்பாய் காவல் இருந்தான். பஸ்ராண்டின் முன்பக்கத்து ஒழுங்கை முகப்பில் மச்சானுக்கு தேவையான தவறணை இருந்தது. கடையின் முன்பக்கம் நான் நின்று விடுப்புப் பார்த்தேன். மச்சான் பியர் வாங்க உள்ளே போய் விட்டார். கடையின் முன்னால் குடிமக்களது வேடிக்கை வினோத நிகள்ச்சி நடந்தது . அவர்களின் தூசணம் அனல் பறந்தது. அருகே ஒரு தேநீர் கடை இருந்தது அதற்குள் நான் போக விரும்பவில்லை. மச்சான் வெளியே வந்தார் கையில் இரண்டு கிங்பிக்ஷர் பியர் போத்தலுடன்.

"நல்லாத்தான் உங்கடை ஆக்கள் இங்கை வியாபாரம் செய்யிறாங்கள்" .

சிரித்தவாறே,

" தேத்தண்ணி கடைக்கு போலாமா"?

இருவரும் முனைக்குப் போகும் றோட்டில் மீன்சந்தைக்கு முன்னால் இருந்த ரீ கடைக்குள் உள்ளட்டோம். கடை துப்பரவாக இருந்தது. கண்ணாடி அலுமாரிக்குள் றோல்ஸ், வடை ,கடலை வடை, சூசியம் போண்டா ,என்று வரிசை கட்டி இருந்தன சோட்டைத் தீன்கள். நான் ஒரு பிளேன் ரீயும் ,ரெண்டு றோல்ஸ் உம் எடுத்துக்கொண்டேன். உள்ளே இருக்க வெக்கையாக இருந்ததால் வெளியில் வந்தோம். வெளியே இருட்டத் தொடங்கியது. றோல்ஸ் நல்ல ருசியாக இருந்தது. பாரிஸ் றோல்ஸ்சை நினைத்தேன், இறைச்சியை தேடிப்பிடிக்கவேணும். நேரம் 7 மணியை நெருங்கியது, காசைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் வெளிச்சம் நன்றா இருந்தது. கல்லூரி வீதிச்சந்தியைத் தாண்டியதும் ஒழுங்கை ஒரே இருட்டாக இருந்தது. நாங்கள் அதில் குறிப்புப் பர்த்துத் தான் நடக்க வேண்டியிருந்தது. வீட்டு வாசலில் மனைவியும், தங்கைச்சியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். இரவு மனைவி சாப்பாட்டிற்கு சப்பாத்தி சுட்டு வைத்திருந்தா. பலகதைகள் கதைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு படுத்து விட்டோம். மனவி உடனேயே உறங்கி விட்டா, எனக்கு நித்திரை வரமறுத்தது. எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, சேவல் கோழியின் குரலால் எனது நித்திரை குளம்பியது. நேரம் விடிய 4 மணியைக் காட்டியது. நான் மெதுவாக எழுந்து கேற் வாசலுக்கு வந்து சிகரட் ஒன்றைப் பற்றவைத்தேன். பக்கத்திலிருந்த பண்டாரி அம்மன் கோவில் ஒலிபெரிக்கி சுப்பிரபாதத்தை மெதுவான ஒலியில் தவழவிட்டது, மனதிற்கு இதமாக இருந்தது. மேலே ஆகாயத்தில் நடசத்திரங்கள் கண்சிமிட்டின. நான் விடியவே குளித்து விட்டேன் காலை கோப்பியைக் குடித்து விட்டு விடிய 7 மணிபோல கோப்பாய் போகத்தயாரானோம். நானும் மனைவியும், மனைவியின் தங்கைச்சி குடும்பமும் பஸ் ஸ்ராண்டை நோக்கி ஒழுங்கையால் நடக்கத் தொடங்கினோம். பஸ்ஸ்ராண்டில் அந்தக்காலை வேளையில் சனம் அதிகம் சேரத்தொடங்கவில்லை. இ. போ . சா 750 பஸ் ஆட்கள் இல்லாமல் வெறும் பஸ்சாக நின்றது. நான் கொண்டக்ரரிடம் "எத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும்" என்று கேட்டேன் அவர் "7.30 வெளிக்கிடும்" என்று சொன்னார் இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன. சிறிது சிறிதாக பஸ்சில் ஆட்கள் சேரத் தொடங்கினார்கள். நான் டறைவருக்குப் பக்கத்தில் இடங்கள் பார்க்க வசதியாக இருந்து கொண்டேன். எங்களை சுமந்து கொண்டு பஸ் புறபடத் தயாரானது.

தொடரும்

Edited by கோமகன்

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

img0660p.th.jpg

img0672zya.th.jpg

img0676ye.th.jpg

img0680kd.th.jpg

ஒட்டோ நின்ற சத்தத்தைக் கேட்டதும் பெறாமக்கள் துள்ளிக்குதித்து ஓடி வந்தார்கள். அங்கிள் என்று கட்டிப்பிடிச்சுத் தொங்கினார்கள். அவர்களது "பம்மல்" ஏன் என்று தெரிந்தாலும் அவர்களைச் சீண்டிக்கொண்டிருந்தேன். ஒழுங்கையின் இரண்டுபக்கமும் எங்கள் வீடு இருந்தது. என்னைக் கண்ட சந்தோசத்தில் மாமாவும் அன்ரியும் கதைகாது இருந்தார்கள். நானும் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டாது இயல்பாகவே பழகினேன். இவர்கள் இருவரும் என்னை பாதித்த மனிதர்கள். எனது மனைவிக்கு 3 சகோதரிகளும் 1 சகோதரனும் இருந்தர்கள். ஆனால், இவர்களது சிறுவயதில் தந்தையை இனக்கலவரத்தில் பறிகொடுத்தார்கள். சகோதரன் நாடு காக்கப் போய்விட்டார். தகப்பன் இல்லாத பிள்ளைகளை இன்றுவரை தாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் பேணிப்பாதுகாத்தவர்கள் தான், நான் முதலே சொன்ன மாமாவும் அன்ரியும். இப்படியான மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என வியப்பாக இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு அவர்களது வடமராட்சி வட்டாரப் பேச்சு சில சொற்கள் விளங்கவில்லை, மனைவியிடம் தனிய கேட்கவேண்டியிருந்தது. உதாரணமாக நெம்பல், தகடுகுடுத்தல், கசளி குடுத்தல், என்பன சுவாரசியமானவை. பின்பு அவர்களிடம் அவர்களது பாணியிலேயே கதைத்தேன். மாமி எனது அம்மாவின் உயிர்பிரியும் போது தான் அம்மாவிடம் கதைத்தவற்றை சொல்லத் தொடங்கினா. கலங்கிய எனது கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விருட்டென்று கிளம்பி வீட்டு வழவுகளை பாக்க பெறாமக்களுடன் போனேன். மனைவி எனது அம்மாவைப் பற்றி அவருடன் கதைத்து உள்ள கவலையைக் கூட்டவேண்டாம் என்று தாயிடம் சொல்வது எனது காதகளில் விழுந்தது. வீட்டு வளவில் தென்னைகளும், கமுகமரங்களும், மாதுளை மரங்களும் நிறைந்து இருந்தன. வெய்யிலின் அகோரத்திற்கு அவற்றின் நிழல் இதமாக இருந்தன. கமுகுவிலும், மாதாளை மரத்திலும் அணில்பிள்ளைகள் துள்ளிளையாடின. வீட்டின் அருகே சமைக்க தென்னை ஓலையால் வேய்ந்து மால் கட்டியிருந்தார்கள். எனக்கு மாலைப் பர்க்கப் புதினமாக இருந்தது. மாலின் உள்ளே மட்டுச்சாணகத்தால் மெழுகியிருந்தார்கள். மூக்கை அரிக்கின்ற அமில நெடி இல்லாத குளர்சியைத் தரும் இயற்கைக் கிரிமிநாசினி. சிறுவயதில் கோண்டாவிலில் அப்பாச்சியிடம் போகும்பொழுது பார்த்ததிற்குப் பிறகு இப்போழுது தான் மாலைப் பார்த்ததால் எனக்குப் பெரிய புழுகமாக இருந்தது. ஆனால் கவலையான விடையம் இந்த மால்களின புழக்கம் இப்பொழுது ஒருசில வீடுகளைத் தவிர இல்லை என்பது மனதை நெருடியது. வீட்டல் இருந்த நாயும் முதல் என்னை எதிரியாகவே பார்த்து என்னிடம் ஒடி விழையாடியது. வீட்டுக் கிணற்றில் கப்பி கட்டி கயிற்றில் இரண்டு பக்கமும் வாளி கட்டியிருந்தார்கள். கிணற்றில் ஆசை தீர அள்ளி அள்ளி குளித்தேன். கப்பியும் ஆரம்பத்தில் எனக்கு இடைஞ்சலையே தந்தது பேந்து பழகிவிட்டது. கிணற்றடியில் துலாக்கால் இருந்ததிற்கான அடையளம் இருந்தது. சாப்பிட்டுவிட்டு மத்தியானம் நல்ல நித்தரை அடித்தேன். மனைவி பரித்தித்துறை வடையும் பிளேன் ரீ யும் தந்தா. ரீயைக் குடித்துவிட்டு தங்கைச்சிக்குப் போன் பண்ண தொலைபேசியை எடுத்தேன். நாளை கோப்பாய்க்கு வருவதாகச் சொல்லி விட்டு போனை வைத்தேன். நானும் மச்சானும் வெளிக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தோம். வெய்யில் குறைந்து காத்து வந்தது. "எங்கை ரெண்டுபேரும் போறியள்"?

" உதிலை பளைய ரவுனுக்குப்போட்டு வாறம்"

" ஏன்"?

"சும்மா இடம் பாக்க".

நமுட்டுச் சிரிப்புடன் மனைவிக்குச் சொன்னேன்.எனது கள்ளச்சிரிப்பைப் புரிந்தவளாக,

" பேந்து உங்கை வைத்தால அடில கிடவுங்கோ செய்யிறன் வேலை".

"ஏனப்பா இந்த எறிசொறி கதையளை நிப்பாட்ட மாட்டீரே"?

"வெள்ளென வாங்கோ".

சரி என்றவாறே இருவரும் ஒழுங்கையால் நடக்கத்தொடங்கினோம். எனது மச்சான் என்னை விட உள்ள ஊரி சந்து பொந்துகள் எல்லாம் தெரிஞ்சு வைத்திருந்தார். அவருக்கு இது இரண்டாது முறை பயணம். ஒரு சில நட்புகளையும் பிடிச்சு வைத்திருந்தார். அவருக்கு பியர் குடிக்க வேணும். எனக்கு சொட்டைத்தீனும் பிளேன்ரீயும் வேணும், பஸ்ராண்டையும் பாக்கவேணும். இருவரும் பல கதைகளை கதைத்துக் கொண்டு பளையரவுணை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். ஒழுங்கையில் ஆடுகள் மேஞ்சு கொண்டு குட்டிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. ஆவோலைப்பிள்ளையார் கோயிலடி தாண்ட ஒரு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பெயர்பலகையுடன் இருந்தது. அதில், "சுப்பர்மடம் சுனாமி மீள்வீடமைப்புத்திட்டம் உதவி யூனிசெப்" என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து சுப்பர்மடம் கரைக்குக் கிட்ட வருகின்றது. அங்கு தானே, அந்தமக்களுக்கு புனர்நிர்மாணம் செய்யேண்டும்? என்ற இயல்பான கேள்வி எழுந்தது. மாமவிடம் கேக்கவேணும் என்று நினைத்தேன். இரண்டு பக்கமும் வீட்டு மதில்களில் மயில்கொன்றை பூக்களும், தேமா, அலரி, குறோட்ன்களால் நிறைந்திருந்தன. நாங்கள் கல்லூரி சந்தியையும், வீ எம் றோட் சந்தியையும், கடந்து வந்த வீதியில் நடந்தோம். அப்பத் தட்டிகளில் அப்பமும் தோசையும் சுட்டு மணம் வீதி எங்கும் பரவியிருந்தது. நிண்டு அப்பத்தட்டியை வடிவாகப் பார்த்தேன் எரியும் நெருப்பையும் தோசைக்கல்லையும் தான் பாக்க முடிந்தது.தோசை சுட்ட "செப்" ஐ பாக்கமுடியவில்லை. எனக்கு அப்பம் சாப்பிடவேணும் போல இருந்தாலும், இன்று றோல்ஸ் உம் பிளேன் ரீ யும் குடிக்க முடிவு செய்தால் மனதை மாற்றிக் கொண்டேன். இருவரும் அம்மன் கோயிலடியால் பஸ்ராண்ட் வாசலைத் தொட்டோம்.மாலைவேளையில் பஸ்ராண்டும் கலகலத்தது. மினிபஸ்கள் ஒருபக்கமாகவும், உள்ளூர் இ போ சா பஸ் நடுவாகவும், வெளியூர் செல்லும் பஸ் அருகேயும் நின்றிருந்தன. பயணிகள் அவசரம்காட்டினர் வீடு செல்ல. அந்த இடம் பஸ் கோர்ண் ஒலிகளால் இரைச்சலாக இருந்தது. ராஜன் சைக்கிள் வேக்ஸ் கடை இப்பொழுதும் இருந்தது. பஸ்ராண்டை சுற்றியிருந்த கட்டிடங்களில் சிங்கத்தின் பற்கள் பதிந்திருந்தன. முன்பு இந்த இடங்கள் ஆள்நடமாட்டமற்ற சூனியப் பகுதி. இப்பொழுது தான் திறந்து விட்டுள்ளார்கள். இலங்கை வங்கி கட்டிடத்திற்கு மேல் ராணுவ சிப்பாய் காவல் இருந்தான். பஸ்ராண்டின் முன்பக்கத்து ஒழுங்கை முகப்பில் மச்சானுக்கு தேவையான தவறணை இருந்தது. கடையின் முன்பக்கம் நான் நின்று விடுப்புப் பார்த்தேன். மச்சான் பியர் வாங்க உள்ளே போய் விட்டார். கடையின் முன்னால் குடிமக்களது வேடிக்கை வினோத நிகள்ச்சி நடந்தது . அவர்களின் தூசணம் அனல் பறந்தது. அருகே ஒரு தேநீர் கடை இருந்தது அதற்குள் நான் போக விரும்பவில்லை. மச்சான் வெளியே வந்தார் கையில் இரண்டு கிங்பிக்ஷர் பியர் போத்தலுடன்.

"நல்லாத்தான் உங்கடை ஆக்கள் இங்கை வியாபாரம் செய்யிறாங்கள்" .

சிரித்தவாறே,

" தேத்தண்ணி கடைக்கு போலாமா"?

இருவரும் முனைக்குப் போகும் றோட்டில் மீன்சந்தைக்கு முன்னால் இருந்த ரீ கடைக்குள் உள்ளட்டோம். கடை துப்பரவாக இருந்தது. கண்ணாடி அலுமாரிக்குள் றோல்ஸ், வடை ,கடலை வடை, சூசியம் போண்டா ,என்று வரிசை கட்டி இருந்தன சோட்டைத் தீன்கள். நான் ஒரு பிளேன் ரீயும் ,ரெண்டு றோல்ஸ் உம் எடுத்துக்கொண்டேன். உள்ளே இருக்க வெக்கையாக இருந்ததால் வெளியில் வந்தோம். வெளியே இருட்டத் தொடங்கியது. றோல்ஸ் நல்ல ருசியாக இருந்தது. பாரிஸ் றோல்ஸ்சை நினைத்தேன், இறைச்சியை தேடிப்பிடிக்கவேணும். நேரம் 7 மணியை நெருங்கியது, காசைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் வெளிச்சம் நன்றா இருந்தது. கல்லூரி வீதிச்சந்தியைத் தாண்டியதும் ஒழுங்கை ஒரே இருட்டாக இருந்தது. நாங்கள் அதில் குறிப்புப் பர்த்துத் தான் நடக்க வேண்டியிருந்தது. வீட்டு வாசலில் மனைவியும், தங்கைச்சியும் பிள்ளைகளும் நின்றிருந்தனர். இரவு மனைவி சாப்பாட்டிற்கு சப்பாத்தி சுட்டு வைத்திருந்தா. பலகதைகள் கதைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு படுத்து விட்டோம். மனவி உடனேயே உறங்கி விட்டா, எனக்கு நித்திரை வரமறுத்தது. எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, சேவல் கோழியின் குரலால் எனது நித்திரை குளம்பியது. நேரம் விடிய 4 மணியைக் காட்டியது. நான் மெதுவாக எழுந்து கேற் வாசலுக்கு வந்து சிகரட் ஒன்றைப் பற்றவைத்தேன். பக்கத்திலிருந்த பண்டாரி அம்மன் கோவில் ஒலிபெரிக்கி சுப்பிரபாதத்தை மெதுவான ஒலியில் தவழவிட்டது, மனதிற்கு இதமாக இருந்தது. மேலே ஆகாயத்தில் நடசத்திரங்கள் கண்சிமிட்டின. நான் விடியவே குளித்து விட்டேன் காலை கோப்பியைக் குடித்து விட்டு விடிய 7 மணிபோல கோப்பாய் போகத்தயாரானோம். நானும் மனைவியும், மனைவியின் தங்கைச்சி குடும்பமும் பஸ் ஸ்ராண்டை நோக்கி ஒழுங்கையால் நடக்கத் தொடங்கினோம். பஸ்ஸ்ராண்டில் அந்தக்காலை வேளையில் சனம் அதிகம் சேரத்தொடங்கவில்லை. இ. போ . சா 750 பஸ் ஆட்கள் இல்லாமல் வெறும் பஸ்சாக நின்றது. நான் கொண்டக்ரரிடம் "எத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும்" என்று கேட்டேன் அவர் "7.30 வெளிக்கிடும்" என்று சொன்னார் இன்னும் 15 நிமிடங்கள் இருந்தன. சிறிது சிறிதாக பஸ்சில் ஆட்கள் சேரத் தொடங்கினார்கள். நான் டறைவருக்குப் பக்கத்தில் இடங்கள் பார்க்க வசதியாக இருந்து கொண்டேன். எங்களை சுமந்து கொண்டு பஸ் புறபடத் தயாரானது.

தொடரும்

திருத்தம் செய்வதில் ஏற்பட்ட தவறிற்கு வருந்துகின்றேன் :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல தொடர் ...

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனக்க எழுதியிருக்கிறார் என்று வாசிக்கத்தொடங்கினால்.......

எமக்கே அல்வா கொடுத்துள்ளார்(2 தரம் ஒன்றையே ஒட்டி) :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனக்க எழுதியிருக்கிறார் என்று வாசிக்கத்தொடங்கினால்.......

எமக்கே அல்வா கொடுத்துள்ளார்(2 தரம் ஒன்றையே ஒட்டி) :lol::D:D:D

அல்வா இல்லை. பொரிவிளாங்காய்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அல்வா இல்லை. பொரிவிளாங்காய்! :D

கோமகனின் கதையை வாசிக்கத்தொடங்கியதிலிருந்து எனது பேச்சு வழக்கு மறந்துவிடும் போலத்தான் உள்ளது.

எத்தனை சொற்கள் புரியவே மறுக்குது.

தமிழ் மெல்ல மெல்ல சாகும் என்பது இதைத்தானோ? :(:(:(

  • தொடங்கியவர்

இன்று கனக்க எழுதியிருக்கிறார் என்று வாசிக்கத்தொடங்கினால்.......

எமக்கே அல்வா கொடுத்துள்ளார்(2 தரம் ஒன்றையே ஒட்டி) :lol::D:D:D

அது தானே மன்னிப்பு கேட்டேன் விசுகர் :):)

  • தொடங்கியவர்

கோமகனின் கதையை வாசிக்கத்தொடங்கியதிலிருந்து எனது பேச்சு வழக்கு மறந்துவிடும் போலத்தான் உள்ளது.

எத்தனை சொற்கள் புரியவே மறுக்குது.

தமிழ் மெல்ல மெல்ல சாகும் என்பது இதைத்தானோ? :(:(:(

எந்தவிதத்தில் தமிழை பிழையாக எழுதினேன் விசுகு மறப்பதற்கு :(:( மேலும் வட்டார வழக்கு சுவாரசியமானது எனக்கே சிலது புதிதாக இருந்தது வடமராட்சி வழக்கு வசேடமானது உதரணம் அல்லாது படல் ஏணாட்டம் உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா ?????:):):)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கள உறவுகளுக்கு தவிர்கமுடியாத சில காரணங்களினால் போன கிழமை என்னால் இந்த தொடரை தொடரமுடியாது போய் விட்டது உங்களை ஏமாற்றவேண்டும் என்பது எனது நோக்கமில்லை மாறாக கோடைகாலத்தில் ஏற்பட்ட அதிக பணிச்சுமை மிக முக்கியமான காரணி அத்துடன் நீங்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக உப்புச்சப்பில்லாமல் பக்கங்களை நிரப்பவதில் எனக்கு உடன்பாடில்லை ஆகவே என்னைதயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் இனி...............

  • தொடங்கியவர்

22377010150252679011496.jpg

18538010150251891671496.jpg

29344610150253312511496.jpg

29526310150251891991496.jpg

கொண்டக்ரர் எங்களுக்குக் கிட்ட வந்தார்.

" தம்பி எங்கை போகவேணும்?

"கோப்பாய் தபால்பெட்டியடிக்கு ரிக்கற் குடுங்கோ".

என்னை வினோதமாகப் பார்த்தார் கொண்டக்ரர்.

"தபால்பெட்டியடியோ?

"ஓம் பூதர்மடம் கழியவாற நிறுத்தம்"

"அங்கை தபால் பெட்டி ஒண்டும் இல்லையே"

அவரின் வாயில் நமுட்டுச் சிரிப்புத் தெரிந்தது.

"இல்லையண்ணை அதுக்குப்பேர் தபால்பெட்டியடி".

பஸ் ஒரு உறுமலுடன் பஸ்ராண்ட்டில் இருந்து புறப்பட்டது. பஸ்ராண்டிலிருந்து முதலாம் கட்டை சந்திவரை பஸ் மெதுவாகவே சென்றது. வீதி அவ்வளவு சின்னதாக இருந்தது. இரண்டுபக்கமும் காயப்பட்ட சிகிச்சை அளிக்காத கட்டிடங்களே காணப்பட்டன. ஒரு சோதனை சாவடி வந்தது. பஸ் வழக்கம்போல வேகத்தைக் குறைத்தது. ஒரு சிப்பாய் இரவுப் பணி முடிந்து ஏறிக்கொண்டான். எனது மனமோ இதில் லயிக்கவில்லை கோப்பாயைச் சுற்றியே வட்டமிட்டது. எனது மன ஓட்டத்திற்கு பஸ் ஓட்டம் குறைவாகவே இருந்தது. முதலாம் கட்டைச் சந்தி தாண்டியதும் பஸ் தனது வேகத்தைக் கூட்டியது. பயணிகளை ஏற்ற பஸ் தன்னை கண்ட இடத்தில் எல்லாம் நிறுத்தி ஏற்றிக்கொண்டது. பயணிகளைக் கவர இப்பட ஒரு திட்டம் என்று கொண்டக்ரர் சொன்னார். எனக்கு எரிச்சலாக வந்தது. ஒழுங்கு முறைக்கும் இவர்களுக்கும் வெகுதூரமோ? எனக்கு இதனால் பதட்டமாக இருந்தது. மனைவி தங்கையின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தா. அவாக்கு இந்தப் பயணம் பழகியது. எனக்குத் தானே எல்லாம் புதிதாக இருந்தன. பஸ் மந்திகைச் சந்தியையும் தாண்டி வேகமெடுத்தது. வீதியின் இரண்டு பக்கமும் ஏழ்மையும் பணமும் மாறிமாறி வந்தன. எமது இரக்ககுணத்தை எப்படி சொந்த ரத்தங்கள் வளப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை, இரண்டு பக்கமும் வந்த ஒரு சில வீடுகள் கட்டியம் கூறின. எனக்கு மனம் கனத்தது. இதில் யார் பேயர்கள்? சொப்பிங் பையுடன் புலம் பெயர்ந்த நாங்களா? அல்லது எமது மனவலிகளை உணர்ந்தும் உணராமல் எம்முடன் கூடப்பிறந்த உறவுகளா? இதிலேயே இரண்டு பகுதிக்குமான இடைவெளி ஆரம்பமாகிவிட்டதா? எனது மனம்பெரிய போராட்டத்தையே நடத்தியது. இந்தப் பாழாய்ப் போன பணம் எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிடுமா? குடிமனைகள் குறைந்து தூரத்தே வல்லைவெளி வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. பஸ் ட்றைவர் ஒருகையை ஸ்ரெயறிங்கிலும் மற்றக் கையை கியறிலுமாக பஸ்சை லாவகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். பஸ் இப்போழுது பயணிகளால் நிரம்பியிருந்தது. வல்லைவெளி அண்மித்து விட்டிருந்தது சேற்று மணமும் உவர் காற்றும் மூக்கில் அடித்தன . காற்றை ஆழமாக உள்ளே இழுத்து விட்டேன், எனது தாய் மண்ணின் காற்று அல்லவா? வீதியின் இரண்டுபக்கமும் திருத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பல சாதனைகளையும் வெற்றிகளையும் கண்ட வெளி. எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த வெளி. இன்று, அன்னியன் பிடியில் பொலிவிழந்து நின்ற காட்சி என்னை விசும்பச்செய்து. முகத்தை மறைக்க சூரியக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டேன். தூரத்தே வெண்மையாக உப்புப் படிந்தும், சில இடங்களில் இறால் வளர்க்கவும், தடுப்புகள் கட்டியிருந்தார்கள். வீதியின் ஒருபுறம் செங்கால் நாரைகள் ஒற்ரைக்காலில் உறுமீன் வரும் வரைக்கும் மோனத்தவம் செய்து கொண்டிருந்தன. எங்கள் நிலமையும் இப்படித்தானோ??????? பஸ்சின் இரைச்சலால் அவைகள் தவங்கலைந்து வானில் எம்பிப் பாய்ந்தன. காலை வேளை இவைகளைப் பார்த்தது மனம் மீண்டும் பழைய உற்சாக நிலைக்கு வந்தது. பஸ் இப்பொழுது நெல்லியடி சென்றல் கல்லூரியை தாண்டி வேகமெடுத்தது. சிங்கத்தின் நாக்கை இழுத்துப்போட்டு அறுத்த இடமல்லவா இந்த இடம். சிங்கம் மட்டுமா முழிபிதுங்கியது? அதன் அடிபொடிகளுக்கும் தானே வயிற்றால் போனது. எமது போர்மரபினை மாற்றியமைத்த இடமல்லவா இந்த இடம். மில்லரின் சிலை உடைத்தெறியப்பட்டிருந்தது. உங்களால் மில்லரின் சிலையை மட்டும் தான் உடைக்கமுடியும் . எங்கள் மனதில் இருந்த அவனின் சிலையை உடைக்கமுடிந்ததா? பஸ் அச்சுவேலியையும் கடந்து சிறிய விவசாயக் கிராமங்களினூடாக வேகமெடுத்தது. நேரம் 8 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் செம்மையான மண்ணை , யாழின் மன்னர்களான தோட்டக்காறர்கள் பச்சையாக்கிக் கொண்டிருந்தார்கள். புகையிலையும், மிளகாயும், வாழையும், போட்டிபோட்டுக் கொண்டு மதாளித்து நின்றன. அவைக்குத் தெளித்த மலத்தியனின் நெடி மூக்கைத் தாக்கியது. சில இடங்களில் மாடுகளையும் ஆடுகளையும் பட்டி கட்டி இருந்தார்கள். இன்றைய காலத்திலும் இயற்கை முறையை இந்த மைந்தர்கள் விடவில்லை. பஸ் சிறுப்பிட்டி புத்தூரையும் கடந்து முன்னேறியது. இரண்டு பக்கமும் வாழைத்தோட்டங்கள் நிரைகட்டி நின்றன. எத்தனை தடைகள் இளப்புகள் வந்தாலும் எமது உழைப்பை உங்களால் தடைசெய்யமுடியாது என்று சொல்லாமல் சொல்லி நின்றன சிறுதோட்டப் பயிர்கள். பஸ் நீர்வேலிக்கந்தசுவாமி கோவிலை நெருங்கியது. எனக்குப் பதட்டமும் கூடவே நெருக்கியது. இன்னும் ஓரிரு நிறுத்தங்கள் கழிய வீடு வந்துவிடும், அழுகையும் வியர்வையும் முகத்தில் போட்டி போட்டன. கைத்துவாயால் முகத்தை அழுத்தத் துடைத்தேன். வியர்வை துடைத்தே துவாய் ஊத்தையாக இருந்தது. அதைப்பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. பஸ்சின் இடதுபக்கத்தால் கோப்பாய் சம்புப்புல் தரவை ஓடிவந்து என்னை நலமா என்று கேட்டது. சூரியக்கண்ணாடி எனது முகமாற்றத்தை வெளியில் காட்டவில்லை. நேரம் 8.15 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ் வில்லுமதவடியை நெருங்கியது. இந்த இடம் என்னால் மறக்கமுடியாதது, சிறுவயதில் 7ஆம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தபொழுது நடந்த முதல் அரசியல் படுகொலை இங்கேதான் ஈனப்பிறவிகளால் அரங்கேறியது. 77 பொதுத்தேர்தல் நடந்த காலகட்டமது இளைஞர்பேரவையும், தமிழர்விடுதலைக்கூட்டணியும் தேன்னிலவு கொண்டாடிய நேரம். கோப்பாய் தொகுதியில் போட்டியிட்ட கதிரவேற்பிள்ளைக்கு, இறுதிப் பிரச்சாரங்களை தேர்தலுக்கு முதல் நாள் முடித்து விட்டு வந்த பரமேஸ்வரனை இலங்கையின் பொலிஸ் நாய்கள் கைது செய்து இதே இடத்தில் சுட்டு வீசிஎறிந்தது. இதை இன்ஸ்பெக்டர் பத்மநாதனே முன்நின்று நடத்தினார். பின்பு அவர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் படுகொலைசெய்யப்பட்டார். அடுத்தநாள் காலை மரண ஓலமாக கோப்பாய்க்கு விடியல் விடிந்தது. அந்தநேரத்தில் ஒரு கொலை என்பது பரபரப்புச் சரித்திரம். எனது அறியா வயதிலும் வயல்வெளிக்கால், ஓடிவந்து இதேபோல் ஒரு காலைப்பொழுதில் அவரது உடலத்தைப் பார்த்தேன். அவர் விழுந்து கடந்த நிலை இப்போதும் கண்ணுக்குள் நிழலாடியது. எனது முகம் பலவித உணர்சிக் கலவையில் மூழ்கிக் காணப்பட்டது. பஸ் தபால்பெட்டியடியில் எங்களை இறக்கியது. கொண்டுவந்த பயணப் பொதிகளை சரிபார்த்தவாறே ஒழுங்கை வாசலில் நின்றோம்.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி கோ அண்ணா..கதை எழுதும் போது இடை வெளி விட்டு,விட்டு எழுதுங்களேன்..வாக்கியங்கள் எல்லாம் தொடராக பார்க்கும் போது முற்றுப் புள்ளி,கமா ஒன்றிலும் நிக்காமல் ஓடுவது போல் இருக்கிறது..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன்.நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. பண்டாரியம்மன் கோயில்ப்பக்கம் நிண்டிருக்கிறியள்..! :rolleyes: எங்கயோ சிக்குப்படுது..! ஆனால் கண்டுபிடிக்க முடியேல்ல..! :wub:

நல்ல பதிவு கோமகன், வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. பண்டாரியம்மன் கோயில்ப்பக்கம் நிண்டிருக்கிறியள்..! :rolleyes: எங்கயோ சிக்குப்படுது..! ஆனால் கண்டுபிடிக்க முடியேல்ல..! :wub:

ஆகா சேம் பிளட். நான் எழுத நினைத்ததை அப்பிடியே சொல்லிப் போட்டீங்கள் இசை அண்ணர் :rolleyes: . கிடுகு கட்டிய வேலி தான் ஏரியாவை கண்டு பிடிக்க உதவிச்சு. ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் முன் ஒழுங்கைக்குள்ளால போகும் போது உவடம் வரும். எனக்கு ஹாட்லியில வகுப்பாசிரியரா இருந்த, சமூகக் கல்வி படிப்பிச்ச ஆறுமுகம் டீச்சரின்ட வீடு பண்டாரி அம்மன் கோயிலுக்கு கிட்டத்தான். அவவை போல ஒரு அருமையான சீவனை வாழ்க்கையில எங்கயுமே காணேல்ல. எங்களுக்கு எல்லாம் அவ ஒரு டீச்சரை விட அம்மா மாதிரி. எங்கே இருந்தாலும் சுக பெலத்துடன் இருக்க வேண்டும்.

கோமகன் அண்ணா, ஒரு சின்ன சந்தேகம் வல்லை வெளி தாண்டின பிறகு நெல்லியடி சென்றல் பற்றி எழுதியிருகிறீங்கள் :unsure: , தட்டச்சிலே ஏற்பட்ட தவறு எண்டு நினைக்கிறன் ஒருமுறை திரும்பவும் பாருங்கள். நான் கோப்பாய்க்கும் கன தரம் போயிருக்கிறேன். இப்போதைய புது பிரதேச சபைக்கு முன்னால போற ஒழுங்கைக்குள்ள எங்களுக்கு தெரிஞ்சவர்களின் வீடு இருக்கு. அதோட கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கும் போட்டிகள் சிலவற்றுக்கு போயிருக்கிறேன்.

நன்றி Komagan பதிவிற்கு, இந்த முறை கனக்க சிக் அடிச்சு அடிச்சு எழுதின மாதிரி இருக்கு, நெடுக்கு அம்பி விடிய எழும்பி முகம் கழுவாமல் பார்க்க முதல், திரும்பி பாருங்கே.

Thumpalayan: சேம் பிளட் - Same Blood or Same Flat?

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை தொடருங்கோ...................................................

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வு நன்றாக் உள்ளது தாயகமும் அதன் மண் வாசனையும் அருமை. படங்கள் இன்னும்...............அருமை .

மீண்டும் நினைவுகளை மீட்டிச் செல்கிறது. அந்த வேலி அடைப்பு ... ..இளம்பெண்கள் உள்ள்வீட்டில்

இன்னும் ஒரு அடி உயரும் அந்தக் காலத்தில் . :D

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

கதைக்கு நன்றி கோ அண்ணா..கதை எழுதும் போது இடை வெளி விட்டு,விட்டு எழுதுங்களேன்..வாக்கியங்கள் எல்லாம் தொடராக பார்க்கும் போது முற்றுப் புள்ளி,கமா ஒன்றிலும் நிக்காமல் ஓடுவது போல் இருக்கிறது..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன்.நன்றி. :)

நன்றி யாயினி . பிழை என்னில தான். நேற்று இதை ஏற்றியே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தால் வந்த வினை. இனி இப்பிடி நடக்காது. :) :)

நல்ல பதிவு கோமகன், வாழ்த்துக்கள் :)

நன்றிகள் அலைமகள் :)

  • தொடங்கியவர்

ம்ம்ம்.. பண்டாரியம்மன் கோயில்ப்பக்கம் நிண்டிருக்கிறியள்..! :rolleyes: எங்கயோ சிக்குப்படுது..! ஆனால் கண்டுபிடிக்க முடியேல்ல..! :wub:

ஆ.................. கிட்ட வந்திட்டியள் டங்குவார் :D :D . ஆறுமுகம் மிஸ் வீட்டுக்குப் பகத்தில தான் எங்கட வீடு. ஏரியா பண்டாரிஅம்மன்கோயிலடி. நீங்கள் ஆயலவராக் கிடைச்சது சந்தோசம் :) :) :) .

ஆகா சேம் பிளட். நான் எழுத நினைத்ததை அப்பிடியே சொல்லிப் போட்டீங்கள் இசை அண்ணர் :rolleyes: . கிடுகு கட்டிய வேலி தான் ஏரியாவை கண்டு பிடிக்க உதவிச்சு. ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் முன் ஒழுங்கைக்குள்ளால போகும் போது உவடம் வரும். எனக்கு ஹாட்லியில வகுப்பாசிரியரா இருந்த, சமூகக் கல்வி படிப்பிச்ச ஆறுமுகம் டீச்சரின்ட வீடு பண்டாரி அம்மன் கோயிலுக்கு கிட்டத்தான். அவவை போல ஒரு அருமையான சீவனை வாழ்க்கையில எங்கயுமே காணேல்ல. எங்களுக்கு எல்லாம் அவ ஒரு டீச்சரை விட அம்மா மாதிரி. எங்கே இருந்தாலும் சுக பெலத்துடன் இருக்க வேண்டும்.

கோமகன் அண்ணா, ஒரு சின்ன சந்தேகம் வல்லை வெளி தாண்டின பிறகு நெல்லியடி சென்றல் பற்றி எழுதியிருகிறீங்கள் :unsure: , தட்டச்சிலே ஏற்பட்ட தவறு எண்டு நினைக்கிறன் ஒருமுறை திரும்பவும் பாருங்கள். நான் கோப்பாய்க்கும் கன தரம் போயிருக்கிறேன். இப்போதைய புது பிரதேச சபைக்கு முன்னால போற ஒழுங்கைக்குள்ள எங்களுக்கு தெரிஞ்சவர்களின் வீடு இருக்கு. அதோட கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கும் போட்டிகள் சிலவற்றுக்கு போயிருக்கிறேன்.

என்னில பிழையில்லை தும்பளையான். மணியண்ணை பஸ்சை எட்டி மிதிச்சதுக்கு நான் என்ன செய்யிறது :D ?

  • தொடங்கியவர்

பகிர்வு நன்றாக் உள்ளது தாயகமும் அதன் மண் வாசனையும் அருமை. படங்கள் இன்னும்...............அருமை .

மீண்டும் நினைவுகளை மீட்டிச் செல்கிறது. அந்த வேலி அடைப்பு ... ..இளம்பெண்கள் உள்ள்வீட்டில்

இன்னும் ஒரு அடி உயரும் அந்தக் காலத்தில் . :D

நன்றிகள் நிலாமதி அக்கா :) . அந்தக்காலத்தில பெட்டை வளர வளரக் கிடுகுவேலியும் உயரும். இதையே செங்கைஆழியான் "கிடுகுவேலிக்கலாச்சாரம்" எனக் குறிப்பிட்டுக் " கிடுகுவேலி " என்று ஒரு நாவல் எழுதினார். இது வீரகேசரிப்பிரசுரமாக வெளியாகியது. நீங்களும் வாசிச்சிருப்பிங்கள் என்று நினைக்கின்றேன் :) .

  • கருத்துக்கள உறவுகள்

கதை சூப்பரா போகுதுண்ணா.....நேக்கும் ஊருக்கு போக ஆசை தான் பட்...சுண்டலுக்கு பிளைட்ல ஏறுறது எண்டா...பயம்..............

  • கருத்துக்கள உறவுகள்

இதையே செங்கைஆழியான் "கிடுகுவேலிக்கலாச்சாரம்" எனக் குறிப்பிட்டுக் " கிடுகுவேலி " என்று ஒரு நாவல் எழுதினார். இது வீரகேசரிப்பிரசுரமாக வெளியாகியது.

வீரகேசரி பிரசுரமா என்று தெரியாது. ஆச்சரியாமான முடிவைத் தரவேண்டும் என்பதற்காக எதையோ செருகிய மாதிரி நினைவில் உள்ளது.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

கதை சூப்பரா போகுதுண்ணா.....நேக்கும் ஊருக்கு போக ஆசை தான் பட்...சுண்டலுக்கு பிளைட்ல ஏறுறது எண்டா...பயம்..............

அப்ப என்னண்டப்பா அங்கை இருந்து ஏறின்னீர் :o :o :o ????????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுண்டல் சின்ன பையன் அதனால பயம் தெரியல்ல இப்ப..இந்த Air Crash Investigation பாத்து பாத்து அதில ஏறுறது என்டாலே பயம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுண்டல் சின்ன பையன் அதனால பயம் தெரியல்ல இப்ப..இந்த Air Crash Investigation பாத்து பாத்து அதில ஏறுறது என்டாலே பயம்...

சுண்டல்.. May Day நானும் தவறாமல் பார்க்கிறனான்.. பார்க்க ஆரம்பிச்சதில இருந்து விமான ரிக்கற் விசயத்தில cost-cutting செய்யிறேல்ல.. நல்ல தரமான நிறுவனங்களின் விமானங்களில் மட்டும்தான் பயணம் போறது..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.