Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை அகற்ற வேண்டியது அவசியம்.

சிங்கள இராணுவ மேலதிக்கத்தை எப்படி தமிழர் பகுதிகளில் இருந்து அகற்றுவது..?! 33 members have voted

  1. 1. சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை அகற்ற என்ன வழி..?!

    • மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம்
    • இந்தியாவிடம் சரணடைவதன் மூலம்
    • சீனாவை முதன்மைப் படுத்திய சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் மூலம்
    • மேற்குலகிடம் இரஞ்சி கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம்
    • ஐநா போர்க்குற்ற அறிக்கையை மையமாக வைத்து சரியான பிரச்சாரங்கள் மூலம்
    • நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கொள்கை அரசியலை பலப்படுத்துவதன் மூலம்
    • ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு உதவுவதன் மூலம்
    • தமிழர் கட்சிகள், ஐநா, சர்வதேசம், இந்தியா சீனா என்று எல்லோரோடும் உறவாடி வளர்க்கும் இராஜதந்திரம் மூலம்
    • சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை எனி ஒன்றுமே செய்ய முடியாது. சிங்களவன் சொற்படி நடப்பதன் மூலம்
    • தமிழகத்தில் இருந்து ஈழப்போராட்டத்தை தீவிரமாக்குவதன் மூலம்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசு மாவிலாறில் இருந்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவும் இறுதிப் போரை ஆரம்பித்த போது அவரும் உலக நாடுகளும் இந்தியாவும் உச்சரித்த வார்த்தைகள் இவை...

"பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை எட்டுதல்". "போர் முடிவடைந்ததும் அது சாத்தியப்படும்" என்பது தான்.

மே 2009 இல் சிறீலங்காவும் சர்வதேசமும் இந்தியாவும் விரும்பிய படி போர் தமிழர் தரப்பில் பேரழிவுகளுடன் ஒரு இனப்படுகொலையுடன் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் சிறீலங்காவோ... சர்வதேசமோ.. இந்தியாவோ மேற்கொள்ளவில்லை.

மாறாக ஐக்கிய இலங்கை.. இன நல்லிணக்கம் பற்றிய பழைய பல்லவிகளையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறீலங்கா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்கள் விரும்பாத போதும் ஐக்கிய இலங்கைக்குள் இன நல்லிணக்கம் சகோதரத்துவம் போன்ற வார்த்தைகளை போலியாகப் பாவித்து இலங்கைத் தீவுக்குள் இரண்டாம் தரப் பிரஜைகளாக அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். இதனை சிங்களம் செய்து முடிக்க அதற்கு பெரிதும் உதவுவது அதன் இராணுவ மேலாதிக்கமே.

தமிழர் நிலப் பகுதிகள் எங்கனும் சிங்களப் படைகளை நிறுத்தி தமிழர்களின் அரசியல் உரிமை கோரல்களை கட்டுப்படுத்துவது என்பது முள்ளிவாய்க்காலோடு வந்த ஒன்றல்ல. அது பண்டா - செல்வா காலம் தொடங்கி நடந்து வருகிறது.

இன்றும் அது தொடர்கிறது. இன்று அது உச்சம் பெற்றுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இன்னொரு பகுதி மக்கள் மற்றப் பகுதி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதில்லை. அந்தப் பகுதி மக்களே தமக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்றனர். ஆனால் சிறீலங்காவைப் பொறுத்தவரை தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கத்தின் விருப்பு வெறுப்புக்கு அமையவே வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் வாழ வேண்டி உள்ளது. இதனை சர்வதேசமும் பாரா முகத்தோடு அங்கீகரித்து வந்திருக்கிறது.

இன்று கிளிநொச்சியில் கொக்காவிலில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தை திறந்து வைத்து பேசிய சிங்கள மேலாதிக்க சிங்கள ஜனாதிபதி போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச.. முன்னர் பிரபாகரன் - விடுதலைப்புலிகள் கேட்டதை இன்று பலரும் கேட்கின்றனர்.. அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது.. அவர்கள் கேட்பது எதுவும் நடக்காது தென்னிலங்கை மக்களின் விருப்பத்துக்கு அமையவே வடக்கு மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று.

இந்தப் பேச்சில் இருந்து சிங்கள இராணுவ மேலாதிக்க வெறித்தனம் மட்டுமல்ல.. சிங்களப் பேரினவாத வெறியும்.. சிங்களவர்களின் விருப்பத்துக்கு அமையவே தமிழர்கள் சிறீலங்காவில் வாழ வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிப்பதாகிறது. இந்த நிலையில் சிறீலங்காவில் தமிழர்கள் நிச்சயம் தாம் விரும்பும் வடிவில் சிங்களத்திடம் இருந்து அரசியல் உரிமை பெற்று வாழ எந்த வழியும் இல்லை.

இவ்வாறான ஒரு சூழலில்.. சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை தமிழர் பகுதிகளில் இருந்து கருவறுக்காமல்.. எனி தமிழர்கள் தங்களின் அடிப்படை அரசியல் அபிலாசையைக் கூட அவர்களின் அரசியல் ரீதியான ஜனநாயக வழிச் செயற்பாடுகளால் கூட நிலை நிறுத்த முடியாத நிலையே தோன்றியுள்ளது. தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி அதை சர்வதேசமும் இந்தியாவும் சீனாவும் இணைந்து சிங்களத்துக்கு பரிசாக அளித்துள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்கள் பிராந்திய செல்வாக்கை உயர்த்திக் கொள்ள விளைகின்றனர்.

ஆனால் தமிழர்களோ தங்கள் சொந்த நில இருப்பை.. உரிமை இருப்பை ஏன்.. இன இருப்பையே இலங்கைத் தீவில் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்த அடிப்படைக் காரணங்களில் இருந்து தான் முன்னரும் ஒரு ஆயுதப் போராட்டம் முளை விட்டது. இன்றும் அதற்கான காரணிகளை அகற்ற சிங்களம் முன் வருவதாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் சர்வதேசத்தின் பயங்கரவாதம் என்ற நிலைப்பாட்டோடு இன விடுதலைக்காக பாதுகாப்பிற்காக தூக்கப்பட்ட ஆயுதங்களும் உள்வாங்கப்பட்டதே..!

அந்த வகையில்.. தமிழர்களுக்கு இன்று இரட்டைச் சவால் எழுந்துள்ளது. ஒரு பக்கம் சிங்கள இராணுவ மேலாதிக்கம் அசுரத்தனமாக தமிழர் நிலங்களை அபகரித்து நிற்பது. இரண்டாவது தமிழர்களின் இராணுவ பலமோ சர்வதேசத்தால் பயங்கரவாதம் என்பதன் கீழ் சிதைக்கப்பட்டு கிடப்பது. இது சிங்களத்தின் இராணுவ மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்லற்ற விரிவாக்கத்திற்கு உதவி நிற்பதோடு.. சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவு எங்கனும் இலகுவாக அமுல்படுத்தவும் வகை செய்கிறது. இதன் அடிப்படையில் அமைந்ததே கொக்காவிலில் நின்று கொக்கரித்த மகிந்தவின் கருத்து.

அடிப்படையில் சிங்கள இராணுவ மேலாதிக்கம் தமிழர் நிலப்பகுதிகளில் இருக்கும் வரை தமிழர்களுக்கு நீதியான எந்த அரசியல் தீர்வும் கிடக்கப் போவதில்லை என்பது திண்ணம். அந்த வகையில் சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை எவ்வாறு தமிழர்கள் சமாளித்து.. அல்லது கருவறுத்து.. தமது உரிமைகளை நிலைநாட்டப் போகின்றனர்..??! இது தொடர்பான சாத்தியக் கூறுகள் என்ன என்பதைப் பற்றி உங்களுக்குள் எழும் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்வதோடு உங்களின் எண்ணங்களை எழுத்துருவில் தர சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பின் அல்லது அச்சம் இருப்பின் மேலே உள்ள சில தெரிவுகளுக்குள் உங்கள் எண்ணம் அடங்கின் உங்கள் வாக்கை அதற்கு இடுவதன் மூலமும் வெளிப்படுத்தலாம்.

இந்தத் தலைப்பு தமிழர்களின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்க விளையும் தமிழ் மக்களுக்கு தமிழ் அமைப்புக்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு பயனுள்ளதாக அமையின் அது வரவேற்கத்தக்கது.

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் சாத்தியமானவை.

தமிழகத்தில் இருந்து மேற்கொள்ளும் போராட்டம் மட்டுமே மகிந்த போன்ற இனவாதிகளை ஆட்டம் காணச்செய்யும்.

இருந்த போதும் உலகோடு ஒத்த இராஜதந்திரம் அதாவது சிறிலங்காவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை கொடுக்க மகிந்த போன்ற சிங்கள இனவாத தலைவர்களை உந்தும்.

ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை அகற்ற வேண்டியது அவசியம்
இதற்காகத்தான் நாம் 30 வருடங்களிற்கு மேல் போராடிக்கொண்டிருக்கிறோம்

பலம் பலவீனங்களை வைத்தே காய்களை நகர்த்தாலாம், இது யாவருக்கும் பொருந்தும். எம்மைபொறுத்தவரையில் மே 2009 அளவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தோம். அன்று மிகவும் பலமான நிலையில் இருந்த அடக்குமுறையாளர்கள் இன்று அன்றைய நிலையை விட பலம் குறைந்த நிலையில் உள்ளனர். அதைவிட சிங்கள மக்களின் எதிர்ப்பும் உள்ளது.

மக்களின் விருப்பங்களை வல்லரசுகள் விரும்பினால், வல்லரசுகளே இல்லாமல் போய்விடும். இன்று அவர்களின் கவனம் மாசகு எண்ணெய் வள நாடுகள், உலக பொருளாதார நலன்களை உள்ளடக்கியே உள்ளது. இவை பற்றி இந்த கட்டுரையில் உள்ளது : http://tamilnet.com/art.html?catid=79&artid=34035 வரும் காலத்தில் ஆசியாவின் முக்கியத்துவம் பற்றி இதில் கூறப்பட்டுள்ளது: http://www.southasiaanalysis.org/%5Cpapers46%5Cpaper4532.html

பிராந்திய வல்லரசான இந்தியா, ஆசியாவின் வல்லரசான சீனா, உலக வல்லரசான அமெரிக்கா - இவற்றின் விருப்பு வெறுப்புக்கள் ஊடாக நேரம் காலம் வரும்பொழுது எமது காய்களை எமது தலைமைகள் நகர்த்த வேண்டும், விடுதலை சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமத்துவம் அற்ற மேலாதிக்கத்தால் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளில் இருந்து விடுபடத்தான் இவ்வளவு காலமாக போராட்டம் அகிம்சை, ஆயுத வழியில் நடைபெற்றது. இவ்விருவகையான போராட்டங்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தாலும், பிராந்திய சுயநலமிகளாலும் மற்றும் வல்லரசு முனைப்புகளாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு தீராத வேதனைக்குள் அமிழ்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் திணிக்கப்பட்ட அடக்குமுறை வலயம் விலகவில்லை இன்னும் மேலாதிக்கத்தின் சின்னங்களும் பல்லாயிரக்கணக்கான விடுதலையில் வேணவாக் கொண்ட மக்களின் அழிப்புகளில் ஏற்றப்படும் வெற்றிச் சின்னங்களும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் மீதான பழிவாங்கலாக இடம்பெறத்தான் போகின்றன. இதனைச் சர்வதேசம் கைகட்டி நின்றே வேடிக்கை பார்க்கும். தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்காதே என்று எந்த உலக அமைப்பும் சிங்களத்தை அச்சுறுத்தப்போவதில்லை. மாறாக ஒற்றுமையாக வாழுங்கள் என்று நிரந்தர சீக்காளியாக ஆக்கப்பட்ட இனத்திடம் சில தந்திரத்தனமான வேண்டுகைகளை முன்வைக்கும். மானுடம் செத்துக் கிடக்கும் உலகிடம் கையேந்தி வாயடைத்து நிற்கும் இனம் வலியின் உச்சத்தைத் தொட்டு விரக்தியில் வைரம் பாயும். எவ்வளவு தூரம் எவ்வளவு போராட்டம் உயிர்கள் செத்துக்கொண்டிருக்கையில் உதவவோ உயிர்காக்கவோ வராத மானுடமா இனிமேல் உயிர்த்து வரப்போகிறது?

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துப்படி

1, ஐநா போர்க்குற்ற அறிக்கையை மையமாக வைத்து சரியான பிரச்சாரங்கள் மூலம.

2, மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம்.

இந்த சமத்துவம் அற்ற மேலாதிக்கத்தால் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளில் இருந்து விடுபடத்தான் இவ்வளவு காலமாக போராட்டம் அகிம்சை, ஆயுத வழியில் நடைபெற்றது. இவ்விருவகையான போராட்டங்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தாலும், பிராந்திய சுயநலமிகளாலும் மற்றும் வல்லரசு முனைப்புகளாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு தீராத வேதனைக்குள் அமிழ்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் திணிக்கப்பட்ட அடக்குமுறை வலயம் விலகவில்லை இன்னும் மேலாதிக்கத்தின் சின்னங்களும் பல்லாயிரக்கணக்கான விடுதலையில் வேணவாக் கொண்ட மக்களின் அழிப்புகளில் ஏற்றப்படும் வெற்றிச் சின்னங்களும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் மீதான பழிவாங்கலாக இடம்பெறத்தான் போகின்றன. இதனைச் சர்வதேசம் கைகட்டி நின்றே வேடிக்கை பார்க்கும். தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்காதே என்று எந்த உலக அமைப்பும் சிங்களத்தை அச்சுறுத்தப்போவதில்லை. மாறாக ஒற்றுமையாக வாழுங்கள் என்று நிரந்தர சீக்காளியாக ஆக்கப்பட்ட இனத்திடம் சில தந்திரத்தனமான வேண்டுகைகளை முன்வைக்கும். மனுநீதி செத்துக் கிடக்கும் உலகிடம் கைண்யுந்தி வாயடைத்து நிற்கும் இனம் வலியின் உச்சத்தைத் தொட்டு விரக்தியில் வைரம் பாயும். எவ்வளவு தூரம் எவ்வளவு போராட்டம் உயிர்கள் செத்துக்கொண்டிருக்கையில் உதவவோ உயிர்காக்கவோ வராத மானுடமா இனிமேல் உயிர்த்து வரப்போகிறது
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் கூடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் .............................................

எனது கருத்துப்படி

1, ஐநா போர்க்குற்ற அறிக்கையை மையமாக வைத்து சரியான பிரச்சாரங்கள் மூலம.

2, மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம்.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம் - அமெரிக்கா, இந்தியா என்பன தடைகளை நீக்கி, எமது ஆயுதப்போரட்டத்தை அங்கீகரித்தால் மட்டுமே தமிழர் தரப்பு மீண்டு ஆயுத ரீதியாக போராடவேண்டும் ( இன்றைய லிபிய கிளர்ச்சியாளர்கள் போன்று ).

  • கருத்துக்கள உறவுகள்

2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசு மாவிலாறில் இருந்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவும் இறுதிப் போரை ஆரம்பித்த போது அவரும் உலக நாடுகளும் இந்தியாவும் உச்சரித்த வார்த்தைகள் இவை...

"பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை எட்டுதல்". "போர் முடிவடைந்ததும் அது சாத்தியப்படும்" என்பது தான்.

ஆனால் சிறீலங்காவும் சர்வதேசமும் இந்தியாவும் விரும்பிய படி போர் தமிழர் தரப்பில் பேரழிவுகளுடன் ஒரு இனப்படுகொலையுடன் முடிந்து ஆண்டுகள் இரண்டு ஓடிவிட்டன. ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் சிறீலங்காவோ... சர்வதேசமோ.. இந்தியாவோ மேற்கொள்ளவில்லை.

இன்று கிளிநொச்சியில் கொக்காவிலில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தை திறந்து வைத்து பேசிய சிங்கள மேலாதிக்க சிங்கள ஜனாதிபதி போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச.. முன்னர் பிரபாகரன் - விடுதலைப்புலிகள் கேட்டதை இன்று பலரும் கேட்கின்றனர்.. அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது.. அவர்கள் கேட்பது எதுவும் நடக்காது தென்னிலங்கை மக்களின் விருப்பத்துக்கு அமையவே வடக்கு மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று.

இந்தப் பேச்சில் இருந்து சிங்கள இராணுவ மேலாதிக்க வெறித்தனம் மட்டுமல்ல.. சிங்களப் பேரினவாத வெறியும்.. சிங்களவர்களின் விருப்பத்துக்கு அமையவே தமிழர்கள் சிறீலங்காவில் வாழ வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிப்பதாகிறது. இந்த நிலையில் சிறீலங்காவில் தமிழர்கள் நிச்சயம் தாம் விரும்பும் வடிவில் சிங்களத்திடம் இருந்து அரசியல் உரிமை பெற்று வாழ எந்த வழியும் இல்லை.

இவ்வாறான ஒரு சூழலில்.. சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை தமிழர் பகுதிகளில் இருந்து கருவறுக்காமல்.. எனி தமிழர்கள் தங்களின் அடிப்படை அரசியல் அபிலாசையைக் கூட அவர்களின் அரசியல் ரீதியான ஜனநாயக வழிச் செயற்பாடுகளால் கூட நிலை நிறுத்த முடியாத நிலையே தோன்றியுள்ளது. தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி அதை சர்வதேசமும் இந்தியாவும் சீனாவும் இணைந்து சிங்களத்துக்கு பரிசாக அளித்துள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்கள் பிராந்திய செல்வாக்கை உயர்த்திக் கொள்ள விளைகின்றனர்.

இது தான் நிதர்சனம், நெடுக்கு!

சிங்களமும், இந்தியாவும் எங்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது ஒரு மாயை! இந்தியா, ஒரு நந்தியாக, நடுவில் குந்தியிருந்து சிங்களத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்!

சர்வதேசத்தின் மனச்சாட்சி அதைக் குடையும் போது அது தலையிடும்! அப்போது அதை இந்தியா, தான் கவனித்துக் கொள்வதாகக் கூறி அதைத் தடுக்கும்!

இந்த நிலையில், இந்தியாவை நிர்வாணப் படுத்துதலே, நாம் செய்ய வேண்டியது! உண்மையான இந்தியாவை சர்வதேசத்திற்குக் காட்ட வேண்டும்! இந்தியாவே ஒரு போர்க்குற்றவாளி என்பது வெளிவரும் போது இந்தியா ஒதுங்கும்!

எமது கையில் தற்போது உள்ளது 'போர்க்குற்ற அறிக்கை". இது தான் எமக்குத் தற்போதுள்ள ஆயுதம். இதைச் சரியான முறையில் பயன்படுத்தினால்,சர்வ தேசத்தின் மனச்சாட்சியை எம்மால் அசைக்க முடியும்!

அது அசையும் போது, எமது தீர்வு தானாக வரும்!

இந்தியாவும்,சீனாவும், சிங்களமும் சர்வ தேச சமுகத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்!

ஏனெனில் இவை மூன்றுமே, பல எலும்புக் கூடுகளைத் தங்கள் வீடுகளில் மறைத்து வைத்துள்ளன!

இவை அனைத்துக்கும் எமது தேவை, எமது ஒற்றுமை மட்டும் தான்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே பதினேழு இயக்க செயலாளர் திருமுருகனின் உரையில் பல விடைகள் அடங்கி உள்ளது. கேளுங்கள்!

http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo&feature=player_embedded#at=1261

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்

கருத்தரங்கம் - திருமுருகன் உரை

தலைப்பு : சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை-

Thirumurgan Gandhi's speech for Tamil Genocide rememebrance to British Tamils on request of TGTE -UK

Edited by Queen

போர்க் குற்றம் அடிப்படையிலான விசாரணை, அதன் மூலமான தமிழர்கள் சார்பான சர்வதேச ஆதரவு, அதனூடான ஒரு குறைந்த பட்ச தீர்வுத் திட்டம் மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியம்; அதுவும் மற்ற நாடுகளுடன், சர்வதேச சக்திகளுடன், மனித உரிமை அமைப்புகளுடன் தமிழர் தரப்பு பேணுகின்ற ராஜ தந்திர உறவுகளை பொறுத்தே அமையும்.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இன்னும் ஒரு சில நூறு வருடங்களுக்கு சாத்தியம் இல்லை. இந்த சில நூறு வருடங்களில் தமிழ் பிரதேசம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிங்கள மயமாகினால் சில நூறு வருடங்களிலும் சாத்தியம் இல்லை. அதற்கான மனித வளமும், இளைய சமூகத்தின் எண்ணிக்கையும், தமிழ் மக்களின் சனத்தொகையும், பரம்பலும் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியப்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்கின்றன.

மீண்டும் ஒரு அரசியல் ரீதியான போராட்டம் என்றால், உலக ஒழுக்கு மாறும் போது, தென்னிலங்கையில் அரசியல் சக்திகள் மாற்றம் அடையும் போது, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிங்கள தேசம் இனம் காணப்படின், ஒரு மக்கள் போராட்டம் ஒன்றின் மூலம் தனி நாடு தவிர்ந்த வேறு உச்ச தீர்வு சாத்தியமாகலாம். அப்படியான ஒரு சாத்தியம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் சிங்களம் இன்று அனைத்து தமிழ் பிரதேசங்களினையும் கூறு போட்டு தொடர்ச்சியான நிலப் பரம்பலை கட்டுபடுத்த மிகவும் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை துரிதப் படுத்துகின்றது. இதனை சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல, கேள்வி கேட்க எந்த ஒரு நட்பு சக்தியையும் நாம் வளர்க்காத தீர்க்க தரிசனமற்ற எம் அரசியல் வங்குரோத்து தனம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நாளைய எழுச்சியை கூட கானல் நீராக்குகின்றது

. மனுநீதி செத்துக் கிடக்கும் உலகிடம் கைNயுந்தி

சகாரா,

மனு நீதி என்றால் என்ன என்று சரியாக உணர்ந்து தானா இங்கு பயன்படுத்துகின்றீர்கள்? மனு நீதி என்றால் என்ன என்று இந்த திரி செல்வதை விரும்பவில்லை, ஆனால் உங்களை போன்ற எழுதக் கூடியவர்கள் கூட எம் இனம் சார்பான அரசியல் உரையாடல் ஒன்றில் இப்படியான மிகவும் பக்கச் சார்பான ஒரு நீதி முறையை பற்றி எழுதியதை காண சகிக்க வில்லை.

தவறினைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி நிழலி

திருத்தம் செய்துவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா,

மனு நீதி என்றால் என்ன என்று சரியாக உணர்ந்து தானா இங்கு பயன்படுத்துகின்றீர்கள்? மனு நீதி என்றால் என்ன என்று இந்த திரி செல்வதை விரும்பவில்லை, ஆனால் உங்களை போன்ற எழுதக் கூடியவர்கள் கூட எம் இனம் சார்பான அரசியல் உரையாடல் ஒன்றில் இப்படியான மிகவும் பக்கச் சார்பான ஒரு நீதி முறையை பற்றி எழுதியதை காண சகிக்க வில்லை.

பெட்டிஷன் போட்டு நீதி கேட்கிறதை (மனுநீதி) மீன் பண்ணியிருப்பாவோ??!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனு நீதி என்பதை மனித நீதி அல்லது மானுட நீதி என்று எழுதியிருக்கவேன்டும்

குறிப்பு மனுநீதி என்பது மானுட அநீதி என்று பொருள்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனு நீதி என்பதை மனித நீதி அல்லது மானுட நீதி என்று எழுதியிருக்கவேன்டும்

குறிப்பு மனுநீதி என்பது மானுட அநீதி என்று பொருள்படும்.

சகாரா அக்கா, நாங்கள் எங்கள் பாடசாலைகளில் படிக்கும் போது, மனுநீதிச் சோழன் என்பவன் பற்றி ஒரு கதை சொல்லித்தருவார்கள்! இந்த மன்னன் ஒரு தடவை ஒரு பசுக் கன்றைத் தேரில் வரும்போது கவனிக்காமல் நெரித்துக் கொன்று விட்டான்! அதையறிந்த பசு இவனது ஆராய்ச்சி மணியை அடித்து, நீதி கேட்டது! திகிலடைந்த மன்னன், பசு எவ்வாறு தனது கன்றை இழந்து துயருருகின்றதோ, அதே போலத் தானும் துயரடைவதே நீதி என்று நினைத்துத், தனது வாரிசான ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டு நசித்துக் கொன்றான்!

இதைத்தான் மனுநீதி என்று அழைப்பர். இதைத்தான் நீங்கள் கருதியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்!

இந்த மனு நீதி, மனு தர்மத்தைக் குறிக்கவில்லை.

மனு தர்மம், சாதிகளை நியாயப் படுத்துகின்றது!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றம் அடிப்படையிலான விசாரணை, அதன் மூலமான தமிழர்கள் சார்பான சர்வதேச ஆதரவு, அதனூடான ஒரு குறைந்த பட்ச தீர்வுத் திட்டம் மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியம்; அதுவும் மற்ற நாடுகளுடன், சர்வதேச சக்திகளுடன், மனித உரிமை அமைப்புகளுடன் தமிழர் தரப்பு பேணுகின்ற ராஜ தந்திர உறவுகளை பொறுத்தே அமையும்.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இன்னும் ஒரு சில நூறு வருடங்களுக்கு சாத்தியம் இல்லை. இந்த சில நூறு வருடங்களில் தமிழ் பிரதேசம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிங்கள மயமாகினால் சில நூறு வருடங்களிலும் சாத்தியம் இல்லை. அதற்கான மனித வளமும், இளைய சமூகத்தின் எண்ணிக்கையும், தமிழ் மக்களின் சனத்தொகையும், பரம்பலும் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியப்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்கின்றன.

மீண்டும் ஒரு அரசியல் ரீதியான போராட்டம் என்றால், உலக ஒழுக்கு மாறும் போது, தென்னிலங்கையில் அரசியல் சக்திகள் மாற்றம் அடையும் போது, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிங்கள தேசம் இனம் காணப்படின், ஒரு மக்கள் போராட்டம் ஒன்றின் மூலம் தனி நாடு தவிர்ந்த வேறு உச்ச தீர்வு சாத்தியமாகலாம். அப்படியான ஒரு சாத்தியம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் சிங்களம் இன்று அனைத்து தமிழ் பிரதேசங்களினையும் கூறு போட்டு தொடர்ச்சியான நிலப் பரம்பலை கட்டுபடுத்த மிகவும் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை துரிதப் படுத்துகின்றது. இதனை சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல, கேள்வி கேட்க எந்த ஒரு நட்பு சக்தியையும் நாம் வளர்க்காத தீர்க்க தரிசனமற்ற எம் அரசியல் வங்குரோத்து தனம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நாளைய எழுச்சியை கூட கானல் நீராக்குகின்றது

நான் இங்கு இரண்டு பதங்களை முதன்மைப் படுத்தி பாவித்திருக்கிறேன்.

1. சிங்கள இராணுவ மேலாதிக்கம். (இது சிங்கள இராணுவ பிரசன்னம் மற்றும் அதன் வலிமை சார்ந்தது)

2. சிங்கள மேலாதிக்கம். (இது இனம், குடித்தொகை, பரம்பல், அரசியல் ஆட்சி அதிகாரம்.... மற்றும் அடிப்படை உரிமைகள் மீதானதாக அமைகிறது.)

சிங்கள இராணுவ மேலாதிக்கம் என்பது தான் தமிழர் நிலத்தில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுவதை இலகு செய்கிறது. சிங்கள இராணுவத்தை தமிழர் பகுதிகளில் நிறுத்தி வைத்துக் கொண்டு சர்வதேசம் என்ன இந்தியா என்ன எவரும் எதுவும் செய்ய முடியாது. இதுதான் உண்மை. இந்திய இராணுவம் வந்து நின்று கூட சிங்கள குடியேற்றத்தை முற்றாக தடுத்து நிறுத்தி விட வில்லை. மாறாக அது தமிழர்களோடு போர் செய்து சிங்கள மேலாதிக்கத்துக்கு வலிமை சேர்த்துக் கொண்டிருந்தது. இந்தியா நினைத்திருந்தால் புலிகளோடான போரை முற்றாக தவிர்த்து தமிழ் மக்களின் நன்மதிப்பை எப்போதோ தக்க வைத்திருக்க முடியும். ஆனால் இந்தியா சிங்கள மேலாதிக்கத்தை பாதுகாப்பதிலேயே அதிகம் ஈடுபாடு காட்டியது. பின்னர் அவர்களிடமே அவமானமும் பட்டுக் கொண்டது. இப்போதும் அதையே செய்கிறது.

40,000 தமிழர்களை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க எத்தனையோ பொய்களை.. நகர்வுகளைச் செய்து கொன்றது சிங்கள பேரினவாதமும் அதன் இராணுவமும். இந்த நிலையில்.. இன்று வரை ஐநா போர் குற்ற அறிக்கை கூட தமிழர் நிலங்களில் சிங்களப் படைகளின் இருப்பு தமிழர்களின் நிம்மதியான சுதந்திர வாழ்வுக்கு தடை என்பதை எடுத்துச் சொல்ல மறந்துவிட்டது அல்லது மறைத்துவிட்டது.

ஐநா போர்க்குற்ற அறிக்கை என்பது அந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட ஓர் பகுதியில் நடந்ததை மட்டும் கருத்தில் கொண்ட ஒன்றல்ல. ஏனெனில் விடுதலைப்புலிகளின் தென்னிலங்கை தாக்குதல்கள் பற்றி கருத்தில் எடுத்திருக்கும் ஐநா.. தமிழர் பகுதிகளில் ஏனைய இடங்களில் சிங்கள இராணுவப் பிடியில் நடந்த படுகொலைகள்.. ஆட்கடத்தல்கள்.. பணப்பறிப்புக்களை கருத்தில் கொள்ளவில்லை. இவை திட்டமிட்டு கைவிடப்பட்டுள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது.

ஐநா அறிக்கையின் பிரகாரம் சிங்களப் படைகளால் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக சிங்களப் படைகள் போர் நடவடிக்கையின் போது போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்று தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கெயிட்டியில்.. அங்கோலாவில்.. சியரலியோனில்.. கொசவோவில்.. சோமாலியாவில் அரசுப் படைகள் மற்றும் போராளிகள் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டத்தை இனங்காட்டி அங்கு ஐநா படைகளின் பிரசன்னத்தை நிறுவியது சர்வதேசம். ஏன் அப்படியான ஒரு பரிந்துரையை ஐநா அறிக்கை தரவில்லை என்பதுதான் இங்கு தொக்கு நிற்கும் ஒரு கேள்வியே..??! அந்த வகையில் இந்த ஐநா போர்க்குற்ற விசாரணை பரிந்துரை அறிக்கை முழுமையான ஒன்றல்ல..! சிங்களத்தின் ஆண்டாண்டு கால இன அழிப்பில்.. அது செய்த பல போர்களில்.. இனக்கலவரங்களில்.. அடக்குமுறை அராஜகங்களில் அட்டூழியங்களில்.. ஒரு போர் நடவடிக்கையில் அது செய்த போர் குற்ற விசாரணைக்கான ஒரு நல்ல அடிப்படை அவ்வளவும் தான்.

இந்த நிலையில் சர்வதேசமோ.. இந்தியாவோ.. தாம் தமிழர்களுக்கு தர விரும்பும் தீர்வைக் கூட சிங்கள இராணுவ மேலாதிக்கம் மற்றும் சிங்கள மேலாதிக்கத்தை விரும்பும் சிங்கள தரப்பிடமிருந்து தமிழர் பகுதிகளில் அமுல்படுத்தக் கூடிய வகையில் பெற்றுத் தர வழி இருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

சிங்களம் இன்று இரட்டைப் பலத்தோடு இருக்கிறது. ஒன்று அதன் சிங்கள இராணுவ மேலாதிக்க வலிமை. இரண்டு சிங்கள மக்களிடம் இருக்கும் தாம் பெரும்பான்மை இனம்.. என்ற சிங்கள மேலாதிக்க உணர்வு. இது இரண்டையும் சரிக்கட்டி.. சர்வதேசமும் சரி இந்தியாவும் சரி அல்லது பிற எந்த நாடாவதும் சரி தமிழர்களுக்கு ஒரு நீதியான நியாயமான குறைந்த பட்ச தீர்வைப் பெற்றுத் தர முடியுமா..??!

ஏனெனில் 1998 சந்திரிக்கா அம்மையார் இன்றைய பிரித்தானிய பாதுகாப்பமைச்சர் இயன் பொக்ஸ் போன்றவர்களோடு ஆலோசித்து உருவாக்கிய அரைகுறை தீர்வுப் பொதியைக் கூட சிங்கள மேலாதிக்கத்தை விரும்பும் பேரினவாதக் கட்சிகள் (ஐ தே க உட்பட) கிழித்தெறிந்தன. அதுமட்டுமன்றி.. பண்டா - செல்வா.. டட்லி - செல்வா, இலங்கை - இந்திய ஒப்பந்தம்.. சந்திரிக்கா - பிரபா உடன்பாடு.. ரணில் - பிரபா உடன்பாடு.. என்று எவையுமே சிங்கள மேலாதிக்கத்தின் முன் நின்று தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இப்படியான ஒரு சூழலில்... நீங்கள் சொல்லும் வழிமுறையில் எப்படி ஒரு தீர்வை தமிழ் மக்கள் சாத்தியப்படுத்த முடியும்..??! அதற்குத் தேவையான நகர்வுகள்.. இராஜதந்திர வழிமுறைகள் என்ன..??! சிங்கள மேலாதிக்க உணர்வில் இருந்து சிங்கள மக்களும் சிங்கள இராணுவ மேலாதிக்க உணர்வில் இருந்து சிங்கள ஆட்சியாளர்களும் விடுபடுவார்களா..??! அவர்களை எப்படி அவற்றில் இருந்து விடுவிப்பது. இது இன்றைய நேற்றைய பிரச்சனை அல்ல. இலங்கையில் சுதந்திர காலத்தில் இருந்து தொடரும் பிரச்சனை..! இது முள்ளிவாய்க்காலின் பின் வந்த ஒன்றல்ல. அப்படி சிலர் கற்பிதம் செய்ய விளைகின்றனர்.. அது புலிகள் மீதான வெறிப்பில் அமையாலமே ஒழிய.. உண்மை.. எங்கேயோ இருக்கிறது.

சிங்கள இராணுவ.. மற்றும் இன மேலாதிக்க உணர்வை தகர்க்காமல்.. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா.. இதுதான் கேள்வியே..??! அப்படி கிடைக்க வேண்டின் இரண்டு பெரிய மாற்றங்கள் நிகழ வேண்டும்..

1. சிங்கள இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து முற்றாக அகற்றிக் கொள்வதோடு அதன் ரகசிய இனவழிப்புச் செயற்பாடடுகளுக்கு பயன்படுத்தப்படும் உதிரிக் கூலிக் கும்பல்களை இல்லாது செய்ய வேண்டும். சிங்கள படை வலிமை 75% தால் குறைப்புச் செய்யப்பட வேண்டும். பிராந்தியத்தில் போர் அல்லது ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் அற்ற ஒரு நாட்டுக்கு ஏன் இவ்வளவு படை வலிமை..???!

2. சிங்கள மக்களிடம் இந்த நாடு அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது. நாம் பெரும்பான்மை அவர்கள் சிறுபான்மை என்ற நிலை இல்லை. அந்தத்தப் பகுதி மக்களுக்கு அவரவர் விருப்புக்கு ஏற்ப ஆட்சி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். அதனை சிங்கள மக்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை அந்தந்தப் பகுதி மக்களே தீர்மானிக்க தகுதியுடையவர்கள் என்ற நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.

இதனை சிங்களம் இதய சுத்தியோடு செய்யுமா...??! அல்லது இதனைச் செய்விக்க சர்வதேசத்தால்.. இந்தியாவால் முடியுமா...??! அங்கும் கேள்விக்குறியே தொக்கு நிற்கிறது..??! அப்படி இருக்க.. எப்படி நீங்கள் குறிப்பிடும் வழியில் தீர்வு பிறக்கும்..??!

Edited by nedukkalapoovan

தமிழ்நாட்டின் சார்புடன் ஈழப்போராட்டத்தை முந்நிறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் ஒரே சிறந்த வழி. அதற்கு தமிழக மக்கள்தான் ஆதரவை வழங்க வேண்டும். ஈழப்பிரச்சனையின் வடிகாலாக தமிழகமே செயற்பட வேண்டுமென முன்பொருமுறை திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார். அது மெய்யானது. தமிழகம் சாராத எந்த ஆதரவும் வேற்று நலன் கொண்டதாகத்தானிருக்கும். தமிழகத்தால் மட்டுமே இந்தியாவை வழிக்குக் கொண்டுவரும் தடத்தை ஏற்படுத்த முடியும். அதனால்தான் ஈழ ஆதரவுக் குரல்களை நசுக்குவதற்கு பல நகர்வுகள் தமிழகத்திலேயே உருவாக்கப்படுகின்றன.

அதில் ஒன்று பிரமணிய ஆதிக்கம் என்ற மாயை. தமிழகத்தின் உள்ளீட்டு அரசியலில் ஈழப் பேச்சு என்பது வெற்று வேட்டுத்தான். அது உரத்து ஒலித்து அரசியலில் பெருத்த ஆதரவைப் பெறும்போது சிங்கள மேலாதிக்கம் விலக்கிக் கொள்ளப்படுவது மிகவும் இலகுவானதாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு உதவுவதன் மூலமும்,

ஈழத்தில் தமிழர் பகுதியிலுள்ள, சிங்கள மேலாதிக்கத்தை அகற்றமுடியும் என்று ஒருவர் வாக்களித்துள்ளதை..... நினைத்து,

தலையை எங்கு கொண்டு போய்... முட்டுவது என்று தெரியவில்லை. e136.gif

குத்தியர்.. சித்தார்த்தார்.. எல்லாரும் தமிழீழம் கேட்டவை தானே. இடையில் குத்தியர் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியும் கேட்டவர் தானே. அதெல்லாம் பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் இருக்கேக்க கேட்டது... அவை இருக்கினம் என்ற துணிவில. இப்ப அண்ணாச்சிகளுக்கு சொந்த வியாபாரத்தைக் கவனிக்கவே ஆமிக்காரனக் கவனிக்க வேண்டி இருக்குது. இப்படியே எவ்வளவு காலத்துக்குத்தான் காலம் தள்ளப் போகினம். ஆமிக்காரனுக்கும் சிங்கள அமைச்சர்களுக்கும் இவையைப் போல கொள்ளை இலாபம் அடிக்க ஆசை வரத்தானே செய்யும். அப்ப பூசல் கிளம்பும் தானே. அப்பவாவது குத்தியர்.. குதுக்குகரணம் அடிக்கலாம்.. அப்படி என்ற நப்பாசைகளோடும் நம் மத்தியில் ஆக்கள் இருக்கினம்..!

பாவம் அவையின் எண்ணங்களுக்கும் ஒரு தெரிவு விடத்தானே வேணும். பிறகு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று கொண்டு அவை ஒப்பாரி வைப்பினம் எல்லோ. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதில் 4 விடயங்களுக்கு வாக்களித்துள்ளேன்

அதில் குறுகிய தற்காலிக நடவடிக்கையாக

போர்க்குற்ற அறிக்கையை தொடர்ந்து நகர்த்துதலும்

ஐனநாயகவழியில் நா.க.அரசு போன்றவற்றை பலப்படுத்துதல்

அதேநேரம் நீண்டகாலப்போக்கில்

ஆயுதப்போராட்டமும்

தமிழக உறவுகளின் எழுச்சியும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை அகற்ற என்ன வழி..?!

இலங்கையில் வதியும் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களாக மாறுவதுதான் சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை அகற்றும். <_<

இத்தனை அழிவுகளுக்கும் பிறகும், இத்தனை உயிரிழப்புகளுக்கும் பிறகும் தாயகத்தில் போராட்டம் நடக்கும் போது சேர்ந்து போராடாமல் அல்லது எம் பிள்ளைகளைத் தானும் போருக்கு அனுப்பாமல் வெளிநாடு வந்த எம்மில் பலர் மீண்டும் ஆயுதப் போராட்டம் தான் நீண்டகாலத்தில் பயனளிக்கும் என்று சொல்வதை பார்க்க என்ன சொல்வதென்று தெரியவில்லை

இதற்கு நானே பதில் சொல்கின்றேன் நிழலி

இன்று உள்ள நிலை தொடர்ந்தால்............................???

அங்குள்ளவர்கள் போராட வேண்டிவரும் என்பது எனது கணிப்பு மட்டுமே.

காலம் நிச்சயம் பதில் சொல்லும் ஒரு நாள் தங்களுக்கு........

அத்துடன்

இதைத்தான் அவர்கள் செய்யவேண்டும் என்றோ

அதைத்தூண்டும் விதமாகவோ நான் என்றும் ஈடுபட்டதில்லை

ஈடுபடப்போவதுமில்லை

அதை அவர்களே தீர்மானிக்கணும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கட்சிகள், ஐநா, சர்வதேசம், இந்தியா சீனா என்று எல்லோரோடும் உறவாடி வளர்க்கும் இராஜதந்திரம் மூலமும் அதே நேரத்தில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் நடக்க கூடிய சூழ்நிலை அமையும்

பி;கு:நல்ல காலம் இன்னும் ஒருத்தரும் இந்தியாவிடம் சரணடைவதன் மூலம் என வாக்குப் போடவில்லை :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.