Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு பதிந்திருப்பீர்களே!

இல்லைக்கிருபன்

உண்மையாக வேதனையுடன்தான் எழுதினேன்

உண்மையான குற்றவாளிகள் யாரென்பதையும் நீங்கள் ஒழிந்துவிட்டார்கள் என்று சொல்லும் புலிகள்தான் வந்து பிடித்துத்தரவேண்டுமா???

  • Replies 88
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் சளைக்காது தொடாந்தும் வாந்தியெடுக்கவும் ஒரு தில் வேண்டுமு; என்பதை மறுக்க முடியாது.

:D :D

எனது ஈழம் என்னும் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.. எவ்வளோவோ பிச்சல் பிடுங்கள் பிரச்சினைக்கிளையும் முடிஞ்சளவு ட்ரை பண்ணினேன்.. முடியவில்லை. நல்லா களைச்சுபோனேன். இன்னொரு முறை முயற்சி செய்வதில்லை எண்டு முடிவும் எடுத்துவிட்டேன்...

அடித்தால் எழும்ப முடியாத மாதிரி ... சும்மா சொட்டிப் போட்டு?? ... <_<

அடி வாங்கியது யார் கேபியோ???????????? ... இங்கு கேபிக்கள் பாரிய தாக்குதல்களுக்கு தயாராகிறார்களாம்????????????? ...தம்மை விமர்சிக்கும் நபர்களது கார்களை உடைப்பது முதல் திட்டமாம்????????? :lol:

  • தொடங்கியவர்

அப்படியான ஜென்மங்கள் ஒன்றில் மக்களை தொந்தரவு செய்யாமல் தானும் தன்ர குடும்பமும் என்று வாழனும். இல்ல மக்களின் கோபத்தை தூண்டி.. வேடிக்கை பார்க்க நினைத்தால் விளைவு இதாகத்தான் இருக்கும். குற்றம் செய்யுறவனை விட செய்யத் துண்டுறவைக்கு தான் தண்டனை அதிகம்.

அந்த காடையள் மக்கள் தான். 83ம் ஆண்டு கலவரத்திலை தமிழரை அழிச்சதும் உங்கடை மொழியிலை சொல்லப் போனா 'சிங்கள மக்கள்' தானுங்கோ. உங்கடை கோபத்தையும் உந்த வீரத்தையும் கொஞ்சம் முள்ளிவாய்க்காலிலை காட்டியிருந்தியள் எண்டா இண்டைக்கி தமிழீழம் உங்கடை கையிலை. காடையளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இனவெறி அரசின் போர்க்குற்றங்களையும் விமர்சிப்பது நல்ல முரண்நகை.

  • தொடங்கியவர்

ஆரம்பத்திலேயே களையெடுக்கவேண்டும்.இரண்டு பேருக்கு இப்படி போட்டால் யாரும் வாய் திறக்கமாட்டினம். எங்கட பெடியங்கள் பேய்காய்கள்.

உண்மை தான் இப்பிடியே எல்லாரையும் வாய்மூட வைத்து நாம் இப்போ அடைந்திருக்கும் வெற்றிகள் சொல்லிமாளாதப்பா...

உந்த தீபம் தொலைகாட்சிக்கு ஏன் உந்த தேவையில்லாத வேலை. .....

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு அங்கீகாரம் பெற பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியக் கொடி என்பது அந்தந்த நாட்டு மக்களின் தேசத் தாயின் அடையாளம். அதனை எந்த நாட்டு மக்களும் இழிவு படுத்த அனுமதிக்க மாட்டார்கள். சிறீலங்கா தேசியக் கொடியை எரித்தற்காக சிறை சென்று உயிர்விட்ட தமிழர்களும் உண்டு.

அன்றைய தீபம் தொலைக்காட்சி (அது இப்போ இலவசமாக விடப்பட்டுள்ளது பார்க்க.) நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பேச வரும் விடயத்தை விட்டு ஒரு மாற்றுக் கருத்து மாயாவி.. தேசியக் கொடியை பிடிச்சதால தான்.. முள்ளிவாய்க்கால் அழிவே வந்தது. அது எமக்கு அவசியமா என்று வேறு கேட்குது. எனக்கே அந்த மாயாவியை செருப்பால அடிக்கனும் போல இருந்திச்சு. ஒரு அடிப்படை அரசியல் சர்வதேச ஆராய்தல் இன்றி வெறும் புலி காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுவது எல்லாம் கருத்தாகாது. அப்படியான ஜென்மங்கள் ஒன்றில் மக்களை தொந்தரவு செய்யாமல் தானும் தன்ர குடும்பமும் என்று வாழனும். இல்ல மக்களின் கோபத்தை தூண்டி.. வேடிக்கை பார்க்க நினைத்தால் விளைவு இதாகத்தான் இருக்கும். குற்றம் செய்யுறவனை விட செய்யத் துண்டுறவைக்கு தான் தண்டனை அதிகம்.

அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்.மாற்றுக்கருத்து என்பது புலி எதிர்ப்பு மட்டுமே.கதைக்க வந்த விடயம் விட்டு தேசியக் கொடி பற்றிக் கதைத்து விவாதத்தைத் திசை திருப்பினார்.தேசியத்திற்கு ஆதரவாகக் கதைத்தவர்களுக்கு வாய் வல்லமை போதாது.அவர்களும் ஆமா போட்டார்கள்.தேசியக் கொடி என்பது புலிகளின் கொடி அல்ல.அது தமிழர்களின் கொடி.தமிழர்களின் அடையாளம்.அது இன்றி நடைபெறும் போராட்டமானது எந்த இனத்தவர் நடத்தும் போராடம் என்பதை மற்றைய இனத்தவர்களுக்குப் புரிய வைக்காது.பாகிஸ்தானியரோ இந்தியர்களோ அல்லது வேறு எந்த ஆசிய இனத்தைச்சார்ந்தவர்களோ ஏதோ ஓர கோரிக்கையை வைத்து போராடுகிறார்கள் என்றே விளங்கிக் கொள்ளப்படும். மெனனமாகப் புலிக்கொடியைப் பிடித்துப் போராட்டம் நடத்தினாலே அது இது தமிழர்களால் நடத்தப்படும் போராடட்டம்.அவர்கள் தங்கள் இழந்து போன தேசத்திற்காக போராடுகிறார்கள் என்பதை பல் வேறு மொழிகளைக் கடந்து அனைத்து இனங்களுக்கும் புரிய வைக்கும்.கொடி இல்லாமல் போராட்டம் நடத்தினால் பாகிஸ்தானியர்கள் பின்லாடன் கொல்லப்பட்டதிற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஏன் விளங்கிக் கொள்ள முடியாது.துpபம் தொலைக் காட்சி அண்மைக் காலமாக தடம் மாறிப் பயணிக்கிறது போல் தெரிகிறது.

விவாதத்தின் கருப்பொருளே கொடி சம்பந்தமானதாக இருக்கும் போது கருத்து வைப்பவர்கள் வேறு எதைப் பற்றி கதைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

எமது போராட்டங்களில் நாம் வைக்கும் கோஷங்கள் எம்மை அடையாளம் காட்டும். எமது எல்லா போராட்டங்களிலும் நாம் புலிக் கொடியையும் பிரபாகரன் படத்தையும் பிடிக்கும் படியே தமிழ் அமைப்புகள் ஊக்குவித்து வந்தன. இதனால் நாம் எந்த மக்களது கவனத்தையும் பெருமளவில் ஈர்க்கவில்லை என்பதே உண்மை.

தன்னைச் சுற்றி துப்பாக்கி ரவைகளால் அலங்காரம் செய்தபடி புலி பொறித்த கொடி தான் பிடிப்போம் என்பவர்களின் உரிமையை மறுக்க முடியாது. ஆனால் அதுவே ஒட்டு மொத்த தமிழரின் அடையாளம் என்றும் இன்னும் புலிகள் தான் தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களுடன் உடன்பட முடியாது. கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப் பழகுவோம்.

இந்திரா காந்தி கொல்லப் பட்டதற்கு பழிவாங்குமுகமாக ஆயிரக் கணக்கான் சீக்கியர்கள் காடையர்களால் படுகொலை செய்யப் பட்டனர். இதனை 83ம் கலவரத்துடன் ஒப்பிட்ட அன்றைய ஜனாதிபதி ஜேஆர், சிங்கள காடையர்களின் செயலை நியாயப் படுத்தும் முகமாக யாழ் திருநெல்வேலியில் நடந்த தாக்குதல் சம்பவம் 'மக்களை' ஆத்திரம் அடையச் செய்து விட்டதென்றார்.

வன்முறைக் கலாச்சாரத்தால் நாம் இழந்தது போதுமைய்யா...

... இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்!!!!!!!! ... இனி இப்படி வந்து சொல்ல வைக்கக்கூடாது .... ஒரே .... :lol:

எனது ஈழம் என்னும் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.. எவ்வளோவோ பிச்சல் பிடுங்கள் பிரச்சினைக்கிளையும் முடிஞ்சளவு ட்ரை பண்ணினேன்.. முடியவில்லை. நல்லா களைச்சுபோனேன். இன்னொரு முறை முயற்சி செய்வதில்லை எண்டு முடிவும் எடுத்துவிட்டேன்...

நீங்கள்தான் வெளிநாட்டிலை செட்டில் ஆயிட்டியலே..பிறகென்னத்துக்கு உந்தக்கோதாரியள்...??? உதப்பற்றி யோசிக்க வேண்டியது ஓடிவரத்தெரியாத அங்க உள்ள விசர்ச்சனங்கள்... சும்மா தேவை இல்லாததுவளைப்பற்றி யோசிச்சு மண்டையக்குழப்பாம வாழ்க்கையைப்பாருங்கோ....

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்தான் வெளிநாட்டிலை செட்டில் ஆயிட்டியலே..பிறகென்னத்துக்கு உந்தக்கோதாரியள்...??? உதப்பற்றி யோசிக்க வேண்டியது ஓடிவரத்தெரியாத அங்க உள்ள விசர்ச்சனங்கள்... சும்மா தேவை இல்லாததுவளைப்பற்றி யோசிச்சு மண்டையக்குழப்பாம வாழ்க்கையைப்பாருங்கோ....

அங்குள்ள சனங்களும் தங்களுடைய தனித் தமிழீழம் என்ற பயணத்தை முடித்து வேறு இடத்திற்குப் போகலாம் என்பதைத் தீர்மானித்துக் கன காலம் ஆகிவிட்டது.

நோகாமல் நொங்கு சாப்பிட வேண்டும் என்பவர்கள்தான் வன்முறைப் போராட்டம் மூலம் தமிழீழம் எடுக்கலாம் என்று இன்றும் சொல்லித் திரிகின்றார்கள்.

உண்மையான அக்கறை உள்ளவர்கள் தமிழர்களின் மனிதவுரிமைகளைக் கையில் எடுத்து ஒரு நியாயமான தீர்வைப் பெறலாம் என்று நம்பிச் செயற்படுகின்றார்கள். ஆனால் அவர்களையும் இந்த நொங்கு நோண்டிச் சாப்பிடுவர்கள் குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

அங்குள்ளவர்கள் வேறு இடம் போக முடிவெடுத்து விட்டார்கள் என்றால் தீர்வு யாருக்கு...? :(

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்தின் கருப்பொருளே கொடி சம்பந்தமானதாக இருக்கும் போது கருத்து வைப்பவர்கள் வேறு எதைப் பற்றி கதைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

எமது போராட்டங்களில் நாம் வைக்கும் கோஷங்கள் எம்மை அடையாளம் காட்டும். எமது எல்லா போராட்டங்களிலும் நாம் புலிக் கொடியையும் பிரபாகரன் படத்தையும் பிடிக்கும் படியே தமிழ் அமைப்புகள் ஊக்குவித்து வந்தன. இதனால் நாம் எந்த மக்களது கவனத்தையும் பெருமளவில் ஈர்க்கவில்லை என்பதே உண்மை.

தன்னைச் சுற்றி துப்பாக்கி ரவைகளால் அலங்காரம் செய்தபடி புலி பொறித்த கொடி தான் பிடிப்போம் என்பவர்களின் உரிமையை மறுக்க முடியாது. ஆனால் அதுவே ஒட்டு மொத்த தமிழரின் அடையாளம் என்றும் இன்னும் புலிகள் தான் தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களுடன் உடன்பட முடியாது. கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப் பழகுவோம்.

இந்திரா காந்தி கொல்லப் பட்டதற்கு பழிவாங்குமுகமாக ஆயிரக் கணக்கான் சீக்கியர்கள் காடையர்களால் படுகொலை செய்யப் பட்டனர். இதனை 83ம் கலவரத்துடன் ஒப்பிட்ட அன்றைய ஜனாதிபதி ஜேஆர், சிங்கள காடையர்களின் செயலை நியாயப் படுத்தும் முகமாக யாழ் திருநெல்வேலியில் நடந்த தாக்குதல் சம்பவம் 'மக்களை' ஆத்திரம் அடையச் செய்து விட்டதென்றார்.

வன்முறைக் கலாச்சாரத்தால் நாம் இழந்தது போதுமைய்யா...

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ளவர்கள் வேறு இடம் போக முடிவெடுத்து விட்டார்கள் என்றால் தீர்வு யாருக்கு...? :(

நிச்சயமாக தீர்வு அங்குள்ளவர்களுக்குத்தான். அதற்காக அவர்களின் பாதையை நாங்கள் தீர்மானிக்கலாம் என்று செயற்படக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள சனங்களும் தங்களுடைய தனித் தமிழீழம் என்ற பயணத்தை முடித்து வேறு இடத்திற்குப் போகலாம் என்பதைத் தீர்மானித்துக் கன காலம் ஆகிவிட்டது.

நோகாமல் நொங்கு சாப்பிட வேண்டும் என்பவர்கள்தான் வன்முறைப் போராட்டம் மூலம் தமிழீழம் எடுக்கலாம் என்று இன்றும் சொல்லித் திரிகின்றார்கள்.

எப்ப முதல் அவை உந்தத் தீர்மானம் எடுத்தவை ? அவைக்காக நாங்கள் போராடுறம் அவையெப்பிடி எங்களைக் கேக்காமல் வேறையிடங்களுக்கப் போக முடிவெடுக்கலாம்....?

இணைப்பிற்கு நன்றி.

உறவுகள் அனைவரும் இதனை கேட்க வேண்டும்.

ஹம்சா போன்ற தூதுவர்களின் பொய்யுரைகளை உடைக்க தேவையான பரப்புரைகளை செய்பவர்கள் தமிழர்களில் தேவை. இப்படியான ஒளிபரப்புகள் இலகுவாக ஆங்கிலேயர்களை சென்றடையும். தமிழர்களுக்கு மாத்திரம் காது குத்துபவர்கள் அல்ல. இனியாவது தமிழர் இணையங்களின் பரப்புரைகள் மற்றைய இனங்களையும் நோக்கி நகரட்டும்.

' சனல் 4 ' மாத்திரம் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அவலம்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ளவர்கள் வேறு இடம் போக முடிவெடுத்து விட்டார்கள் என்றால் தீர்வு யாருக்கு...? :(

அதுதானே ????

நிச்சயமாக தீர்வு அங்குள்ளவர்களுக்குத்தான். அதற்காக அவர்களின் பாதையை நாங்கள் தீர்மானிக்கலாம் என்று செயற்படக்கூடாது.

அதெப்பிடி அவைக்கு நாங்கள் தானே பாதைகாட்ட வேணும். அப்பதானே எங்களுக்காக அவைவை மொட்டை போட வைக்கலாம் ???

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப முதல் அவை உந்தத் தீர்மானம் எடுத்தவை ? அவைக்காக நாங்கள் போராடுறம் அவையெப்பிடி எங்களைக் கேக்காமல் வேறையிடங்களுக்கப் போக முடிவெடுக்கலாம்....?

அவை தளமாநாடு நடாத்தித் தீர்மானம் முன்மொழிந்து, வழிமொழிந்து செய்யேல்லை. அதனாடி இங்குள்ளவர்கள் சொல்லுறமாதிரி செல்லாது என்றுதான் நினைக்கிறன்! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

அவை தளமாநாடு நடாத்தித் தீர்மானம் முன்மொழிந்து, வழிமொழிந்து செய்யேல்லை. அதனாடி இங்குள்ளவர்கள் சொல்லுறமாதிரி செல்லாது என்றுதான் நினைக்கிறன்! ^_^

அப்ப புலம்பெயர்ந்த நாங்கள் செல்லாத காலாவதியான...... :mellow:

உங்களுக்கு இரண்டு பச்சை குத்தியிருக்கிறேன்.

அங்குள்ள சனங்களும் தங்களுடைய தனித் தமிழீழம் என்ற பயணத்தை முடித்து வேறு இடத்திற்குப் போகலாம் என்பதைத் தீர்மானித்துக் கன காலம் ஆகிவிட்டது.

நாங்கள் உப்பிடி ஒரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

நாட்டை விட்டு ஓடியதுமில்லாமல், வேறு வேலை வெட்டியில்லாமல், நோகாமல் நொங்கு சாப்பிட்டு, எங்கள் சார்பாக தீர்மானங்கள் எடுப்பவர்களில் ஒருவர் யார் என்பதுவும், "மனிதாபிமானம்" என்ற பெயரில் சிங்கள பயங்கரவாதிகளை பலப்படுத்த முயற்சிப்பவர்கள் யார் என்பதும் புரிகிறது.

  • தொடங்கியவர்

காடை ராம் குழுவின் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாகவும் எமது சமூகத்தில் புற்று நோய் போல் பரவியுள்ள வன்முறைக் கலாச்சாரத்திற்கெதிராகவும் இன்று ராஜ் தாக்கப் பட்ட இடத்தில் கணடனப் பேரணி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

"நாங்கள்" என்று நீங்கள் சொல்லுவது தனிய உங்களை மட்டும் குறிக்கும் என்றால் நீங்கள் சொல்லுவது சரி.

உங்களுக்கு ஒத்தூதாதவர்களுக்கு தமிழர்களின் பெயரில் அதிகம் கொடுக்கப்படும் "துரோகி" / "ஒட்டுக்குழு" போன்ற பட்டங்களில் ஒன்றைத் வெளிப்படையாக வழங்கலாமே. அந்த அதிகாரம் இப்போது எல்லாத் "தேசியத் தூண்" களிடம் உள்ளதுதானே.

காடை ராம் குழுவின் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாகவும் எமது சமூகத்தில் புற்று நோய் போல் பரவியுள்ள வன்முறைக் கலாச்சாரத்திற்கெதிராகவும் இன்று ராஜ் தாக்கப் பட்ட இடத்தில் கணடனப் பேரணி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

இது ஒரு சின்னப்பிரச்சனை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.யாரோ ஒரு உறவு தனது மனதில் எழுந்த கருத்தை சொன்னதற்காக தாக்கப்பட்டு விட்டார் என்று எண்ணி கவலைப்பட்டேன் இப்பதான் தெரியுது ஒரு கூட்டமே இதுக்காக வேலை செய்யுது என்று. ஏற்கனவே கண்டனப்பேரணியை ஒழுங்கு செய்து விட்டுத்தான் தொலைக்காட்சியில் கருத்து சொல்ல வந்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. பேரணியில் 'ஹம்சா ' போன்றவர்கள் வந்து சிறப்புரை ஆற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.