Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

Featured Replies

நாற்பதினாயிரம் அப்பாவி மக்களை கொலைசெய்து உள்ளான் எதிரி ( அவர்களோ ஒற்றுமையாக நாம் செய்யவில்லை என்கிறார்கள்). அவனை எவ்வாறு சர்வதேச சட்டத்தின் முன்னால் நிறுத்தலாம் என்பது எமது கைகளில் தங்கி உள்ளது, அதனூடாக அரசியல் தீர்வு (ஒரு வாக்கெடுப்பு மூலம்) தேவை.

  • Replies 142
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் நீங்கள் என்ன நிழலியின் பேச்சலரா.....?

இதற்கு பெயர் வால் பிடித்தல், அவர் மட்டு இல்லையா? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் வாகன விபத்தில் கொல்லபட்டபின்பு.................

இவர் இந்த வீதியால் போயிராது போயிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று தத்துவாந்தம் பேசுவது என்பது சுலபமானது. ஆனால் அன்றாடம் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகாது வீதியை புரணமைத்து பாதுகாத்து விதிமுறைகளை நடைமுறைபடுத்துவதே கடினமானது.

ஈழவிடுதலைபோரை "லிபரேசன் ஓபரேசன்" முடிவுக்கு கொண்டுவரும் என்றுதான் அப்போதைய சிங்கள அரசு நினைத்தது தன்னாலான எல்லா ஏற்பாடுகளையும் செய்து படைநடவடிக்கையை தொடங்கியது. மக்கள் என்றுமே அறிந்திரா செல்கள் விமான குண்டுகள் என்று அள்ளி வீசியபோது மக்கள் சிதறி ஓடினார்கள். புலிகளுக்கும் எல்லாம் புதிதாகவே இருந்தது துணிவு என்ற ஒன்றைவிட வேறேதும் அவர்களிடம் இருக்கவில்லை அந்த படையை எதிர்க்க போதிய போராளிகளோ ஆயுதங்களோ ஏதுமே இருக்கவில்லை. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க புலிகளின் கதை இதோடு முடிந்துவிடும் இனி அடுத்த கட்ட அரசியலுக்கு இறங்கினால் நாம்தான் தமிழரின் தலைவர்கள் என்ற எண்ணத்துடனேயே அமிர்தலிங்கம் இந்தியா சென்று ஓடிய ஈப்பி சாப்பி களை சந்தித்து றோவினுடைய நிகழ்சிநிரலை உருவாக்கி கொண்டிருந்தார்கள்.

இறந்துகொண்டிருந்த மக்களை பற்றியோ ஈழவிடுதலைக்காக தம்மை அர்பணித்து போராடிகொண்டிருந்த புலிகளை பற்றியோ எந்த அக்கறையும் அவர்கள் கொள்ளவில்லை அடுத்த தலைவர் நான் செயலாளர் நீ என்ற சதிவேலைகளே நடந்துகொண்டிருந்தது.

புலிகள் எல்லாவற்றையும் இழந்துகொண்டிருந்தார்கள்...................... அவர்களிடம் இப்போது எஞ்சி இருந்தது அவர்களுடைய உயிர்தான்.

அதை எப்படி ஆயுதம் ஆக்குவது என்ற கேள்விக்கு விடையாகவே உயிராயுதமாக மில்லர் வெடித்தான். அது கொழும்பில் இருந்த இராணுவ தலைமையகம் மட்டும் அதிர்ந்தது. சிங்கள படைக்கும் இப்படியானதொரு படையெடுப்பு என்பது இதுவே முதல் முறை அடுத்து புலிகளின் நகர்வு எதுவாக இருக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லை................... லிபரேசன் ஓபரேசன் ஒரு தளர்வு நிலையை அடைந்தது.

புலிகள் எம்ஜிர் உடன் கொண்டிருந்த உறவு கராணமாக இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கபட்டு அவசர உணவு தேவையை தீர்க்கும்படி எம்ஜிர் வற்புறுத்தவே. உணவுகளை ஏற்றியபடி ஒரு கப்பல் சென்னையில் இருந்து புறபட்டது அதை இடைமறித்து சிங்களபடை திருப்பி அனுப்பியது. அதற்கு பதிலடியாகவே உணவு பொட்டலங்கள் மிக் ரக விமானங்கள் மூலம்போடபட்டது (மிக் முதன்முறை இலங்கை வான்பரப்பில் பறந்தது அப்போதுதான்) அதோடு தொடங்கியது இந்திய இலங்கை பேச்சுகக்கள்.

தலைவர் டில்லிக்கு பேச்சுவார்த்தைக்கு என்று ஒரு நிகழ்சிநிரலை கொடுத்தே அழைத்து செல்லபட்டார் அங்கே சென்றவுடன்தான் மத்திய அரசின் அழுத்தங்களும் றோவின் திருவிளையாடலும் திரைக்குபின்னால் நின்கொண்டிருந்த அமிர்தலிங்கம் நாடக குழுவையும் புலிகளின் தலமை முதன்முறையாக நேரிலே கண்டுகொள்கிறது. நேரடியாகவே ராஜீவ்காந்தி வந்து நடத்திய இராண்டாவது நாள் பேச்சுவார்ததையிலும் தமிழர்களுக்கான எந்த விடயம் பற்றியும் இல்லை அமிர் உங்களுக்கு தலைமைதாங்குவார் போராளி குழுக்களான நீங்கள் ஈப்பி சாப்பி எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமீர் வாழ்க என்று சுவரொட்டிகள் ஒட்டும் தேசிய பணியை தொடர்ந்து செய்து நாட்டுக்காக போராடுங்கள் என்ற தொனியிலே அமைந்தது. இதில் எமக்கு என்ன லாபம் என்ற அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கேள்விக்கு பிரபாகரனுக்கு இலங்கையில் ஒரு முக்கிய பதவி பெற்றுதரலாம் என்று ராஜீவ் உறுதி வழங்கினார். எங்களுக்கு பதவி மக்களுக்கு? என்ற பிரபாகரனின் கேள்வியை பாலசிங்கம் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதுதான் உங்களுக்கு பதவி தருகிறோமே மக்களை பற்றிய விடயங்களை பின்னாளில் பார்ககலாம் என்றார் ராஜீவ். அதற்கு நான் உங்களைபோல அரசியல்வாதியில்லை நான் ஒரு போராளி என்று தலைவர் சொன்னதை மொழிபெயர்க்க பாலசிங்கம் அவர்கள் தயங்கினார் அண்ணே சொல்லுங்கோ என்று திரும்பவும் அவர் சொன்னபோது அதை அவர் மொழிபெயர்த்தார். அதோடு கோபம்கொண்டே ராஜீவ்காந்தி எழுந்துபோய்விட்டார் பின்பு புலிகள் தாம் பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் எம்ஜிர் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் அதில் பங்குபெறவேண்டும் என்றும் ஒருவரை அனுப்பும்படியும் எம்ஜிர் ரை புலிகள் கேட்டனர். பின்பு தமிழக்த்தில் இருந்து ஒருவர் சென்றபின்பு கிட்டதட்ட சிறையடைக்கபட்டதுபொல் இருந்த தலைவரேடு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆயுதங்களை ஒப்படைக்க புலிகளின் தலமை ஒப்புகொண்டது........................... செய்தி ஈழத்திற்கு வந்ததும் போராளிகள் பொங்கி எழுந்துவிட்டனர் ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது அப்படியாயின் நாம் இயக்கத்தை விட்டு விலகுகிறோம் என்று ஒரு புதிய குழு தொடங்கியது அதை கட்டுபடுத்த கிட்டுஅவர்கள் ஒரு பேச்சுவார்த்தையை போராளிகளோடு நடத்திகொண்டிருந்தார்.

ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் தமிழ் ஈழத்தில் ஒரு தேர்தல் நடத்தபடும் என்றும் அதன் முடிவின்படியே புலிகளோ அமீரோ தலமையை ஏற்பது என்றும் சொல்லபட்டது அதற்கும் புலிகள் ஒப்புகொண்டனர். ஆனால் தனது தோல்வியை தெளிவாக தெரிந்த அமீரும் றோவும் பின்பு ஒருபோதும் அந்த தேர்தல்பற்றி எதையுமே பேசவில்லை. டில்லியில் புலிகள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் அமீரை சாட்டியே நிராகரிக்கபட்ன இத்தனைக்கும் கொழும்பில் இருந்து கும்பியடித்ததை தவிர இவர் என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது. (ஆனால் தமிழ் இனத்தையே காத்தாராம் என்று ஒரு புரளியை புலிகாய்ச்சல் பிடித்தவர்கள் சொல்கிறார்களே தவிர எப்படி காத்தார் என்பதற்கு அவர்களிடமும் பதில் இல்லை). கடைசியாக புலிகளை கிட்டதட்ட வற்புறுத்தியே ஒப்பந்தத்தில் கைஎழுத்து வாங்கியது இந்திய அரசு. ( இதற்குள் தலைவருடைய உண்ணாவிரம் எம்ஜிர் அவர்களின் மருத்துவ அமெரிக்க விஜயம் என்று அதற்கான காரணங்களும் இன்னும் பல அமீர் நாடக குழுவின் நாடகங்களும் உண்டு)

அது சரியோ தவறோ என்ற வாதத்திற்கான விடையை காணுவது என்பது போராட்டத்தை சற்றேனும் சுமந்தவர்களுக்கும் அதை வேடிக்கை பாhத்தவர்களுக்கும் இடையில் எப்படியொரு இடைவெளி தோன்றுமோ அதுபோலவே விடைகளும் தோன்றும். ஆதாவது லஞ்சிற்கு பீவ் ஸ்ரேக் சாப்பிட்டுவிட்டு வந்து 3மணி மீட்டிங்கில் மிருகவதை கொடுமையானது என்று மிருகாபிமானம் பேசிவிட்டு செல்வார்களே அவர்களுக்கும் மிருகங்களை கட்டி காப்பவனுக்கும் ஒரு இடைவெளியிருக்குமல்லவா அதுபோலவே இதுவும்.

அமீரை போடவேண்டும் என்ற எண்ணம் புலிகளுக்கு தோன்றிய காலம் அதுதான். அதன்பின்பு அமீரை போடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்துவிட்டார்கள் அந்தளவிற்கு அவர் விடுதலையை தனது பதவிக்காக விலைபேசியிருந்தார். அமீர்ரை போடும் பொறுப்பு பருத்துறையை சேர்ந்த விசுவிடம் ஒப்படைக்கபட்டது பொட்டம்மானுக்கு முன்பு புலிகளின் புலனாய்வு வேலைகளை இவரே நெறிபடுத்தி வந்தார் வன்னியில் வவுனிகுளம் பகுதியில் இவருடைய முகம் அமைந்திருந்தது அங்கிருந்தே புலானாய்வு வேலைகயை செயற்படுத்தி வந்தார்கள். அமீரை போடும் பொறுப்புடன் விசு அவர்கள் கொழும்பு சென்றார்...................

பேசவேண்டும் என்றே விசுவும் கூடி சென்றவரும் அமீர் வீட்டிற்குபோனார்கள் பேச என்று சென்றபடியால்தான் அவர்களை சோதனை இன்றி அவர்கள் உள்ளே அழைத்தார்கள். இவர்கள் மறைத்துவைத்திருந்த பிஸ்டலை எடுத்து சுட்டுவிட்டு ஒட முயன்றார்கள் முடியவில்லை குப்பியையும் கடித்துவிட்டு வைத்திருந்த ஒரு கைகுண்டையும் வெடிக்க வைத்து தற்கொலை செய்தார்கள். அப்போதைய நேரத்தில் விசுவினுடைய இழப்பு புலிகளை பொறுத்தவரை இரு ஈடுகொடுக்க முடியாதது புலானாய்வு துறையை புலிகளுக்கு கட்டமைத்தவர் அவரே. இப்படியொரு திட்டத்தை ஏன் அவர் வகுத்தார் என்பது புலிகளின் தலமைக்கு கூட இன்றுவரை தெரியாது.

அமீரை போடவேண்டும் என்று நினைத்தார்களே தவிர விசுவை கொடுத்து அதை செய்ய நினைக்கவில்லை ஆனால் விசு அப்படியொரு முடிவை தானாகவே எடுத்து செய்திருந்தார்.

அமீரை சுட்ட விதத்திலும் புலிகளின் தலமைக்கும் புலிகளுக்கும் உடன்பாடில்லை பேச அழைத்து சுட்டது என்பதை அவர்கள் தங்களது போர்விதிகளுக்கு மாறாக பாhத்தார்கள்.

அமீர் இறந்து இரண்டாம் நாளே விசுவிற்கு சுவொரொட்டி அடித்து எல்லா இடமும் ஒட்டியிருந்தார்கள். (அதை புலிகள் மறதை;ததாக மாற்று கருத்து மாணிக்கங்கள் இங்கே எழுதுகிறார்கள்) விசுவினுடைய இறுதி நிகழ்வு அவருடைய முகாம் இருந்த வவுனிகுள பகுதியில் அமீர் இறந்து இரண்டாம்நாள் பெரிதாக மக்களால் அனுஸ்டிக்க பட்டிருந்தது.

நான் இரவு ஆறுதலாக இதுபற்றி எழுதலாமென நினைத்திருந்தேன் மருதங்கேணி எழுதிவிட்டார்.அமிரின் கொலை பிறேமரின் முழு ஆதரவுடன் நடந்த ஒரு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

அப்பாவித்தனமாகக் கேள்வி கேட்கக்கூடாது. புலிகள் பயங்கரவாதிகள் என்று உலகில் காட்டப்படுவதற்கான காரணம் நான் சொன்னவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் வேறு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?? இங்கே கொல்லப்பட்டவர்கள் சரியானவர்களா தப்பானவர்களா என்பதற்கப்பால் அனைவருமே "சிவிலியன்கள்" என்கிற பதத்தினுள் வருவதனால் புலிகள் செய்தவை பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது. மற்றும்படி சிங்களம் செய்த , செய்துவருகிற இனக்கொலையை சர்வதேசத்திற்கு பயங்கரவாதமாகப் படாமைக்கான காரணம் சிங்களத்தின் பிரச்சாரமும், சர்வதேசத்தின் சிங்களத்தினூடான நட்பும் ஆகும். எப்போது சிங்களம் தமக்குத் தேவையில்லை என்று சர்வதேசம் எண்ணுகிறதோ அன்றே அவர்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள். இவ்வளவு காலமும் சிங்கலத்தின் பயங்கரவாதத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கிவந்த சர்வதேசம் இப்போது அதனைக் கேள்வி கேட்பது என்ன காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்??

கடாபிக்கும் சிங்களத்துக்குமிடையிலே உள்ள வேறுபாடு தெரியாதவரா நீங்கள்?? கடபிக்கெதிராக கடந்த 30 வருடங்களாக மேற்குலகு தருணம் பார்துக் காத்திருந்தது ( சோனியா கடந்த 20 வருடங்களாகக் காத்திருந்தது போல). இப்போது தருணம் பார்த்து ஆப்படிக்கிறது. ஆனால் சிங்கலத்துடன் மேற்குலகிற்கு எந்தப்பிரச்சனையுமில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்களம் மேற்குலகத்தின் செல்லப்பிள்ளை. 2009 வரை அமஎரிக்கா பிரித்தானியா உற்பட அனைத்து மேற்குலகும் சிங்களத்தை ஆதரித்துத்தான் வந்திருக்கின்றன. இப்போது கடாபீக்கு நடந்தது ஏன் சிங்களத்திற்கு நடக்கவில்லை என்கிற விளக்கம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

அமீர், யோகேஸ்வரன், கதிர்காமர், நீலன் போன்றவர்கள் தமது இறுதிக்காலங்களில் எமக்கெதிராகச் செயற்பட்டிருந்தாலும் கூட அவர்களின் கொலைகளின் மூலம் நாம் சாதித்தது என்ன?? ஏதாவது பலன்கள் இருந்தால் கூறுங்கல்??

ரஜீவைக் கொன்றதன் காரனம் இன்னொருமுறை பதவிக்கு வந்தால் மீண்டும் ராணுவத்தை அனுப்பி புலிகளையும் மக்கலையும் துவசம் செய்துவிடுவார் என்று சொல்லிவந்தோம். ஆனால் நடந்தது என்ன?? அவர் கொல்லப்பட்டதஆற்கான பழிவாங்கல்தானே முள்ளிவாய்க்கால் 2009?? இப்போது சொல்லுங்கள் ரஜீவைக் கொன்றதன் மூலம் நாம் அடைந்த பயன் என்ன??

சிவிலியன்கள் (அவர்கள் எப்படியிருந்தாலும் கூட) கொல்லப்படுவதை நிச்சயம் சர்வதேசம் பார்த்துக்கொன்டிருக்கப்போவதில்லை. 2009 முள்ளிவாய்க்காலிலும் கூட புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தார்கள், தப்பியோட எத்தனித்த மக்களைச் சுட்டார்கள், மக்கள் கூடியிருந்த ராணுவ முகாமைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்தார்கள் என்றுதான் சொல்லப்படுகிரது. ஆகவே பொதுமக்கள் இழப்பென்று வரும்போது நாம் பயங்கரவாதிகளாகத்தான் பார்க்கப்படுகிறோம். அரசாக இருக்கும் பட்சத்தில் சர்வதேசத்தில் அதற்கிருக்கும் அங்கீகாரமும், சர்வதேச நலன்களும், அதன் பிரச்சார பலமும் அவர்கள் செய்யும் படுகொலைகளில் இருந்து அவர்களை இலகுவாகக் காப்பற்றி விடுகிரது. எந்தவித அங்கீகாரமும், பிரச்சார வலுவும் இல்லாத போராளி அமைப்புக்கள் செய்யும் ஒன்றிரண்டு கொலைகள் கூட சர்வதேசத்தில் பெருப்பித்துப் பார்க்கப்படுகிரது. அதுதான் இன்றைய யதார்த்தம்.

புலிகள் மேலுள்ல இன்னொரு குற்றச்சாட்டு தற்கொலைத்தாக்குதலை பொதுமக்கள் இலக்குகள் மீது பாவித்தமை என்பது. அதற்கும் எம்மிடம் பதிலில்லை. ராணுவ இலக்குகளுடன் எமது தாக்குதல்கள் நின்றிருந்தால் எம்மைப் பயங்கரவாதிகள் என்று சர்வதேசம் பார்த்திராது. ஆனால் நாம் அப்படி நிற்கவில்லை. அவ்வப்போது பொதுமக்கலையும் தாக்கினோம். நல்ல உதாரணம், 1996 முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு நடந்து சில நாலைக்கூல் தெகிவலை புகையிரதத்தில் குண்டு வைத்து பலர் கொல்லப்பட்டனர். இதன் அர்த்தம் என்ன??

சில செஅயற்பாடுகலைத் தவறென்றால் அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேன்டும். சரி, பூர்க்குற்ற விசாரனைகளுக்கு ஆம் என்று சொல்லும் நாம் அதில் புலிகள் செய்த செயல்கலையும் சேர்த்தே விசாரியுங்கள் என்றுதானே கேட்கிறோம். புலிகள் செய்யவில்லை என்றால் நாங்களும் சிங்களவன் போல இக்கூற்றச்சாட்டுகளை மரைக்கலாமே, மறுக்கலாமே, ஏன் அப்படிச் செய்யாமல் விசாரனை நடத்துங்கள் என்று கேட்கிறோம்?? முடிந்தால் உங்களில் யாராவது "புலிகள் மக்களைக் கொல்லவில்லை, ஆகவே இந்த விசாரணைகள் தேவையில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!!!! உங்களால் முடியாது, சிங்கலத்தை தூக்கிலேற்ற புலிகள் செய்த கொலைகலையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, அப்படித்தானே??

என்ன மாதிரி யோசிக்கிறாங்க அப்பு, பொதுமக்கள் கொல்லபடவில்லை என்றால், பயங்கரவாதிகளாக சர்வதேசம் சொல்லாதாம், வடை பாயத்துடன் விருந்து வைக்குமாம், போர்குற்றத்தை விசாரிக்கவேண்டாம் என்று சொல்லாட்டாம், கோவாலு கோவாலு என்ன இதுக்குள்ள இருந்து கூட்டீட்டு போ கோவாலு.......... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

பிரபாகரன் என்னும் மனிதர் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தலைவர்தான். புலிகள் உங்களுக்கெப்படியோ எனக்கும் அப்படியே. ஆனால் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படவேண்டும் என்பதுதான் எனது வாதம். ஒரு முள்ளிவாய்க்கால் போதும்.

சித்தன், நக்கல் நைய்யாண்டி எல்லாம் இருக்கட்டும், விடயத்துக்கு வாருங்கள். புலிகள் ஏன் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டார்கள் என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்??

இஸ்ரேல் செய்யாத பயங்கரவாதமா, முன்னர் சதாம் செய்யாத்தா? தாலிபான் கள் செய்யாத்தா? அமெரிக்காவின்ரயும்,ஜரோப்பாவின்ரயும் சொல்லுகேட்காஅத ஆக்கள் குழப்படிகாறர்தானே, அதுவும் பக்கத்து வீட்ட்டு காறன் இந்தயாவின் பேச்சு கேட்காட்டி பெரிய குழப்படி காறந்தானே, அதுதான் எல்லாருமாய் சேந்து அடிச்சு முறிச்சு போட்டாங்கள், இப்ப மகிந்தர் முறுக்கிறார், அட இன்னுமா சர்வதேசத்தை ந்ம்ம்பிக்கிட்டு இருக்காங்க, ரெம்ப நல்லவங்க போல இருக்கே, முள்ளி வாய்காலில சேந்து நின்று அடிச்சாலும் இன்னும் நம்புறாங்க ரொம்ப நல்லவங்க போல இருக்கே. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மீண்டும் மீண்டும் அதே பல்லவியைப் பாடுகிறீர்கள். இங்கே நாம் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டதற்கு நாம் செய்த செயல்களும் ஒரு காரணம். ஆனால் அரசாங்கமோ, இந்தியனோ அல்லது அமெரிக்கா உற்பட வேறு எந்த மேர்குலக நாடோ எமது இனக்கொலையில் வகித்த பாத்திரம் அவரவர் நலன்களுக்கேற்ற முறையில் மறைக்கப்பட்டிருக்கிறது. அது எமது சக்திக்கு அப்பால்ப்பட்டது. நாம் தலகீழாக நின்றால்க்கூட எம்மால் அதை நிரூபிக்க முடியாது.

அண்மையில் வெளிவந்த தி கேஜ் எனும் நூலில்க் கூட புலிகள் செய்த கொலைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். இவை சர்வ்தேசத்தின் முன்னால் எம்மை நல்லவர்களாகக் காட்டப்போவதில்லை. இதைப்போல் எத்தனையோ புத்தகங்கள், செய்திகள் வந்தாயிற்று. நீங்கள் ஏற்றுக்கொண்டாலென்ன இல்லாவிட்டலென்ன நாம் செய்த படுகொலைகள்தான் எம்மைப் பயங்கரவாதிகளாகக் காட்டியிருக்கின்றன.

அப்படியில்லை, நாம் எதுவுமே செய்யவில்லை, அவர்கள் சகட்டுமேணிக்கு எம்மைப் பயங்கரவாதிகளாகக் காட்டுகிறார்கள் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் சொல்வதற்கு இனி எதுவு,ஏயில்லை.

அமெரிக்க செய்றான், ஐரோப்பிய காரன் செய்றான் எனவே நாம் செய்தால் தப்பா என்று கேட்கும் அரசியல் மேதைகளுடன் எங்கள் சிற்றறிவை வைத்துக் கொண்டு விவாதித்து பயன் இல்லை, ரகு. வீணாக நேரத்தினை விரயம் செய்வதில் தான் முடியும்

அமிர்தலிங்கத்தைக் கொன்றது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இல்லை.

மாவை தம்முடன் இணைக்க நினைக்கும் வரதராஜப்பெருமாளை இயக்கும் பயங்கரவாதிகளுக்கும், சிங்கள பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினருக்கும் தான் அதில் முக்கியபங்கு உண்டு.

விசுவின் பங்கு பற்றி இங்கு குறிப்பிட்டவை பிரபலமான செவிவழிக் கதைகளே ஒழிய, உண்மையல்ல என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

1980களில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இறுதி முடிவை தழுவியிருக்கிறது. எல்.டி.டி.ஈ, ப்ளாட், டெலோ, ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப். போன்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன.

ஒவ்வொரு இயக்கமும் ஏதாவது ஒருவகையில் தனிச் சிறப்பு பெற்றிருந்தது. இதில் பலர் இந்தியாவிலும் பாலஸ் தீனத்திலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றனர்.

இந்திய உளவுத்துறை 'டெலோ' அமைப் புக்கு பேராதரவை வழங்கி பயிற்சி கொடுத்தது. தமிழக உளவு அமைப்புகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து பயிற்சி அளித்தன.

ஒரு கட்டத்தில் ஆறு அமைப்புகளின் தலைவர்களான பிரபாகரன், சபா ரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஒன்றாக நின்று கைகளை உயர்த்தி பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர். தமிழகமே பூரித்தது.

எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்ததும், அந்தக் கோபத்தில் கருணாநிதி டெலோ அமைப்பின் தலைவரான சபா ரத்தி னத்தை ஆதரித்ததும் ஈழப் பிரச்சினை யில் குழு மோதல்களுக்கு வித்திட்டது.

பிரபாகரன் மிகச்சிறந்த போர்க்கலை நிபுணராக அடையாளம் காணப்பட்டார். உமா மகேஸ்வரனும், சபாரத்தினமும் சர்வ தேச போராட்ட வரலாறுகளை அறிந்த நுட்பமிகுந்த தலைவர்களாக அறியப்பட்ட னர். பத்மநாபாவோ மார்க்சிய பார்வையு டன் கூடிய போராட்டத்தை முன்னெடுப் பதில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.

இப்படி ஆளுமைமிக்க போராளித் தலைவர்கள் ஈழப் போராட்டத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்தனர். குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் இவர்களுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

ஈழத் தந்தை என போற்றப்பட்ட செல்வா, சமீபகால அரசியல் தலைவராக மதிக்கப்பட்டு புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட திலீபன் போன்றோர் ஈழப் போராட்டத்தின் அரசியல் முகங்களாக திகழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் தமிழ் போராட்ட அமைப்புகளுக்குள் ஏற்பட்ட மோதல் களும், அதில் உமா மகேஸ்வரன், சபா ரத்தினம், பத்மநாபா என பல தலைவர் கள் கொல்லப்பட்டதும் ஈழ வரலாற்றில் கரும்புள்ளிகளாகும். இந்தக் குழு மோதல்களில் விடுதலைப் புலிகளே இறுதியாக வென்றனர்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அன்று கொடுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி (இன்று 50 கோடிக்கு சமம்) புலிகளின் வளர்ச்சியில் மாபெரும் உதவியாக இருந்தது.

அனைவரையும் ஒடுக்கிவிட்டு ஒட்டு மொத்த ஈழ விடுதலை யின் கதாநாயகனாக பிரபாகரன் உருவா னார். அவரது ஆளுமை, போர்த் திறன், கட்டுப் பாடு மற்றும் ஒழுக்கத்துடன் புலிகளை உருவாக்கிய திறமை, சர்வதேச தொடர்பு, நிதி உருவாக்கம், ஆயுத கொள்முதலுக் கான தொடர்பு ஆகியன பலவகையிலும் புலிகள் அமைப்பை அரசுக்கு இணை யான அமைப்பாக மாறியது.

ஈழத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் உருவானார்கள். இடையில் அங்கே கிட்டுவுக்கும், மாத்தையாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி புலிகளை சலனப் படுத்தியது. ஒரு கட்டத்தில் மாத்தை யாவுக்கு பிரபாகரன் மரண தண்டனை வழங்கினார்.

1987ல் இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்ற போது, ஒரு கட்டத்தில் புலிகளும் இந்திய ராணுவமும் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகின் மிகப்பெரிய ராணுவமான இந்தியப் படையை பிரபாகரன் திணறடித் தார் என்பது உண்மை. சுமார் 2 ஆயிரம் இந்திய வீரர்கள் உயிர் துறந்தனர்.

இந்திய ராணுவத்தை எதிர்த்ததன் மூலம் பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் தங்கள் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்தினர்.

தியாகம், இணையற்ற உழைப்பு, கட்டுப்பாடு என தமிழர்களின் கவனத்தை ஈர்த்த விடுதலைப் புலிகள் முறையான அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுக்கத் தவறியது அவர்களது வரலாற்று பிழையாகும்.

இலங்கை ராணுவத்தை ஓட ஓட விரட்டியதோடு, கிளிநொச்சியை தலை நகராகக் கொண்டு, அறிவிக் கப்படாத ஒரு தேச நிர்வாகத் தையே புலிகள் வழி நடத்தி னர். தமிழ் ஈழ வங்கி, தமிழீழ காவல்துறை, அரசியல் தலைமையகம், நீதிமன்றம், மருத்துவமனை, கல்விக் கூடங்கள், நிவாரண முகாம் கள், போர் பயிற்சியகங்கள் என புலிகள் உலகத் தமிழர் களை வியக்க வைத்தனர்.

ஆனால், அவர்கள் செய்த சில தவறுகள் என்றோ நிகழ வேண்டிய தனி ஈழ தாயகத்தை முகிழவிடாமல் தடுத்து விட்டது.

•கிழக்கு இலங்கையில் காத்தான் குடியில் முஸ்லிம்கள் மீது நடத்திய படுகொலைகள்.

•இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றது.

•ஈழத் தமிழர்களின் அபிமான தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கத்தைக் கொன்றது.

•சக தமிழ் போராளி அமைப்பு களையும், போராளிகளையும் இரக்கமின்றி கொன்றது.

இந்த நான்கு காரணங்கள்தான் புலிகள் மீது பலரின் கோபத்தை திருப்பியது; இலங்கை பொதுமக்களின் அனுதாபத்தை இழக்க வைத்தது; இந்தியாவை எதிரியாக்கியது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் ஈழத் தோடு ஒன்றி வாழ்ந்த தமிழக மக்கள் ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் புலிகளை நூறு சதவீதம் நிராகரித்தது புலிகளே எதிர்பாராத ஒன்று.

ஜெயவர்த்தனே, பிரேமதாசா, சந்திரிகா என எல்லா இலங்கை பிரதமர்களும் புலிகளோடு போரிட்டனர். பிரபாகரன் மல்லுக் கட்டினார். பின்னர் நார்வே நாடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனி நாட்டுக்கான உத்தரவாதம் இல்லையென்பதால் பிரபாகரன் பின் வாங்கினார். அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இந்த காலக்கட்டத் தில்தான் புலிகள் அமைப்பில் முரண் பாடுகள் வெடித்து சாதிய ஏற்றத்தாழ்வு கள் வெளிப்பட்டன. வன்னி தமிழர்கள், கிழக்குப் பகுதி தமிழர்கள் என்ற பாகுபாடுகளினால் கருணா தலைமையிலான புலிகள் குழு பிளவுபட்டனர். இது ஈழத் தமிழர்கள் எதிர்பாராத ஒன்று.

புலிகள் அமைப்பிலிருந்து ஒரு குழு பெரிய அளவில் விலகியது இது இரண்டாவது முறை. ஏற்கனவே உமா மகேஸ்வரன், பிரபாகரனிடமிருந்து கருத்து வேறுபாடுகளினால் பிரிந்தபோது புலிகள் அமைப்பு பெரிய அளவில் பலகீன மடைந்தது. அப்போது பிரபாகரனே மனமுடைந்து டெலோ அமைப்பில் சேரும் மனநிலைக்கு ஆளானார் என்பது பலருக்கும் தெரியாது.

ஆனால், கருணாவின் பிரிவு புலிகளையே அழிவுக்கு உள்ளாக்கிவிட்டது. பிரபாகரனின் மறைவிடம் உட்பட அனைத்து விவகாரங்களையும் அறிந்த கருணா, அதை அப்படியே இலங்கை ராணுவத்திடம் விவரித்த பிறகுதான் முழுமையான போருக்கு பல நாடுகளின் உதவியுடன் இலங்கை தயாரானது.

இந்த காலக்கட்டத்தில் புலிகளின் மூளையாகத் திகழ்ந்த ஆன்டன் பால சிங்கம் மரணமடைந்ததால் புலிகளின் சர்வதேச தொடர்பு பின்னடைவை சந்தித்தது.

அதே காலக்கட்டத்தில் போரும் உக்கிரமாகத் தொடங்கியது. புலிகளின் அமைதி முகமாக காட்சியளித்த தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதிலிருந்து புலிகள் தொடர் சரிவை சந்தித்து வந்தனர்.

புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. புலிகளையும், பிரபாகரனையும் ராணுவம் துரத்தியது.

இடையில் தமிழக அரசியல் களத்தில் ஈழ ஆதரவு போராட்டங்கள் வெடித்த போது, சமாதான நாடகங்களும், போலியான போர் நிறுத்தங்களும் அறிவிக்கப் பட்டன.

ஈழப் போர் தமிழ்நாட்டில் அரசியல் படுத்தப்பட்டது. யார் உண்மையான ஈழ ஆதரவாளர்? என்ற போராட்டத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களை

முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோரை நம்பிய ஈழத் தமிழர்கள் இந்த மூவரையும் ஏனோ நம்பவில்லை.

மறுபுறம் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் மனிதாபிமான போராட்டங்களை நடத்தினர்.

இஸ்ரேலுக்கு ஒரு ஆபத்து என்றால், ஓடோடி உதவி செய்யும் அமெரிக்கா ஈழ விவகாரத்தில் மவுனம் காத்தது. ஐ.நா. அவை கூட போதிய நடவடிக்கை எதை யும் எடுக்கவில்லை.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா போன்ற எதிரும் புதிரு மான அரசியல் கருத்துக்களைக் கொண்ட நாடுகள் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்தது. இலங்கையை உக்கிரமாக தூண்டிவிட்டது.

எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாரானதும், இலங்கை அரசு அவர் களை நம்பவில்லை. காரணம் புலிகளின் கடந்தகால செயல்பாடுகள் அப்படி!

ஆனால், போரி னால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உண வின்றியும், மருந்து களின்றி யும் அவதிப் பட்ட துயரத்தை சர்வதேச சமூகம் வேடிக்கைப் பார்த் தது கொடூரமானது.

இப்போது மே 18 அன்று விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதாகவும், பிரபாகரன், அவர் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், ரமேஷ் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட தாகவும் இலங்கை அரசு அறிவித்திருக் கிறது.

போர் முனையில் இவர்கள் கொல்லப் பட்டிருப்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வி யில் முடிந்தது ஒரு பெரும் சோகமாகும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு (பி.எல்.ஓ) பிறகு உலகில் கவனத்திற்குரிய போராளிக் குழுவாக எல்.டி.டி.ஈ. அமைப்பு அடையாளம் காணப்பட்டது.

இவர்களின் சிறப்பு அம்சம் தரைப் படையைத் தவிர கடற்படையையும், விமானப் படையையும் உருவாக்கிய தாகும். இது புலிகளின் மீதான மதிப்பீடு களை உயர்த்தியது.

இன்று பிரபாகரன் கொல்லப்பட்டிருக் கலாம். உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இது ஒரு கறுப்பு வாரமாக இருக்கும். தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் சோகம் பரவும்.

ஈழத் தமிழர்களின் தமிழ் ஈழ கனவுகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அவர் களுக்கு பிரபாகரன் ஒரு யாசர் அராஃபத்தாகவும், ஒரு சேகுவேரா ஆகவும் திகழ்ந்தார்.

இனி அவர்களது அரசியல், வாழ் வுரிமை, சமூக நீதி எல்லாம் என்னவாகும் என்று தெரியவில்லை.

பிரபாகரன் மீது நமக்கு மாற்றுக் கருத்து உண்டு. விமர்சனங்கள் உண்டு. புலிகளின் அரசியல் தவறுகள் மீது மாறாத கோபம் உண்டு.

ஆனால், அவர்கள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம் என்பதில் ஐயமில்லை. ஒரு இன மக்களின் விடுதலைப் போராட்டம் ஏகாதிபத்திய சக்திகளின் கொடூரக் கரங்களால் ஒழிக்கப் பட்டிருப்பது எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் இது முற்றுப்புள்ளி அல்ல...

http://mmkindia.blogspot.com/2009/05/blog-post_7990.html

அயல்நாட்டு பயங்கரவாத ஆதரவு எழுத்தாளர்களின் கருத்துக்களை இங்கு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டுவதன் மூலம் புலிகள் தான் ஏனையவர்கள் செய்த கொலைகளுக்கு காரணம் என்று நிறுவிவிட சிலர் முயற்சிப்பது தெரிகிறது.

ஆனால் உண்மையை முழுமையாக மறைக்கமுடியாது.

அமிர்தலிங்கத்தைக் கொன்றது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இல்லை.

மாவை தம்முடன் இணைக்க நினைக்கும் வரதராஜப்பெருமாளை இயக்கும் பயங்கரவாதிகளுக்கும், சிங்கள பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினருக்கும் தான் அதில் முக்கியபங்கு உண்டு.

விசுவின் பங்கு பற்றி இங்கு குறிப்பிட்டவை பிரபலமான செவிவழிக் கதைகளே ஒழிய, உண்மையல்ல என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஏன் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டார்கள் என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்??

எந்தவொரு வல்லரசினதும் பலமான ஆதரவை தேடிக்கொள்ளாமல் இந்தியா உட்பட உலக வல்லரசுகளை எதிர்த்து போராட முடிவு செய்ததனாலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டார்கள். ஏதாவது ஒரு வல்லரசின் பலமான ஆதரவு இருந்திருந்தால் அந்த வல்லரசுக்கு எதிரான நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக காட்டியிருக்கும் அதேவேளை அந்த வல்லரசுக்கு ஆதரவான நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக காட்டி சர்வதேச மட்டத்தில் ஆதரவளித்திருக்கும்.

படுகொலைகளை செய்யும் அமைப்புகளும், நாடுகளும் பயங்கரவாதிகளாக காட்டப்படுகிறார்கள் என்றும், பயங்கரவாதிகளாக காட்டப்படாத அமைப்புகளும், நாடுகளும் படுகொலைகளை செய்யாத காரணத்தாலேயே அவ்வாறு காட்டப்படவில்லை என்றும் கருதுவது அப்பாவித்தனமானது.

பிரென்சு தளபதிக்கு தெரியாமல் தலைவர் கனக்க தாக்குதல்கள் செய்திருக்கின்றார் போல இருக்கு.பிரென்சு தளபதி சொல்லுகின்றார் பேச்சுவார்த்தைக்கு போன இடத்தில் நிகழ்ந்த கைகலப்பில் தான் அமிர் சுடப்பட்டாராம்.மாற்று இயக்கங்களை பற்றித்தான் தெரியாது என இருந்தேன் இப்ப பார்த்தல் புலிகளை பற்றியே அப்படி இப்படி போல் தான் ,வரலாறே குத்து மதிப்பில் இருக்கும் போது யோசித்தேன்.

அனுராதபுரம் தாக்குதல் ரோ சொல்லி

ராஜிவ் கொலை சீ.ஜ.ஏ சொல்லி

அமிர் கொலை பிரேமதாசா சொல்லி

அப்ப அதுதான்.

வரலாற்றை சொந்த இலாபத்துக்காக மாற்ற முயற்சிப்பவர்களும் அவ்வப்போது மேலோட்டமாக சில உண்மைகளை எழுத முயற்சிப்பது ஆச்சரியம் தான்.

புலிகள் எந்தவொரு குண்டு வெடிப்பையும் தாமாக வலிந்து திட்டமிட்டு செய்ததில்லை. அதாவது செய்தவை அனைத்தும் பதில் தாக்குதல்களாகவே இருந்தன.

சிங்களப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய ஈனர்கள் அப்பாவித் தமிழர் மீது மேற்கொள்ளும் படுகொலைகள் அதிகரிக்க, அவற்றைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே புலிகளின் பதில் தாக்குதல்களாகவே அனைத்து குண்டு வெடிப்புக்களும் / தாக்குதல்களும் செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஒரு தற்பாதுகாப்பு பதில் நடவடிக்கைகளே.

பாடசாலைகள் மீது சிங்கள அரச பயங்கரவாதிகள் குண்டு வீசியதும், சிங்கள மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க பட்டபாட்டை கொழும்பில் உள்ளவர்கள் சொல்வார்கள். ஆனால் புலிகள் ஒருபோதும் சிங்களப் பிள்ளைகளை தாக்கவில்லை. அவர்களின் இந்த அவலம் தமிழன் மீதான கண்மூடித் தாக்குதல்களை கட்டுப்படுத்தியது என்பதுதான் உண்மை.

வெளிநாட்டவர்களுக்கும், ராஜதந்திரிகளுக்கும், புலம் பெயர்ந்தவர்களுக்கு ஈழமண்ணில் நிகழ்ந்த குண்டு வீச்சுக்கள், தமிழின அழிப்புகள் செய்திகளாக - புள்ளிவிபரங்களாக மட்டுமே தெரியும். இங்கு வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும், ஈழமண்ணில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பை புலிகளின் குண்டு வெடிப்புகள் எப்படி கட்டுப்படுத்தியது என்ற விபரங்கள்.

புலிகளின் பெயரில் மற்றவர்கள் செய்த குண்டுவெடிப்புக்கள் பலவற்றுக்கு புலிகள் பொறுப்பில்லை.

புலிகள் ஏன் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டார்கள் என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்?? என்ற கேள்வியை விட்டுவிட்டு,

"பல இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்களவர்கள் ஏன் 30 வருடங்களாகியும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படவில்லை???" என ஆராய்ந்தால் நல்லது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு வல்லரசினதும் பலமான ஆதரவை தேடிக்கொள்ளாமல் இந்தியா உட்பட உலக வல்லரசுகளை எதிர்த்து போராட முடிவு செய்ததனாலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டார்கள். ஏதாவது ஒரு வல்லரசின் பலமான ஆதரவு இருந்திருந்தால் அந்த வல்லரசுக்கு எதிரான நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக காட்டியிருக்கும் அதேவேளை அந்த வல்லரசுக்கு ஆதரவான நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக காட்டி சர்வதேச மட்டத்தில் ஆதரவளித்திருக்கும்.

படுகொலைகளை செய்யும் அமைப்புகளும், நாடுகளும் பயங்கரவாதிகளாக காட்டப்படுகிறார்கள் என்றும், பயங்கரவாதிகளாக காட்டப்படாத அமைப்புகளும், நாடுகளும் படுகொலைகளை செய்யாத காரணத்தாலேயே அவ்வாறு காட்டப்படவில்லை என்றும் கருதுவது அப்பாவித்தனமானது.

இந்தக் கருத்தே எனதும்.

ரகுநாதன் நீங்கள்.. விடுதலைப் புலிகள் மீது மட்டும் குறை கண்டு கொண்டிருப்பதன் நோக்கம் என்ன..??! அமிர்தலிங்கம்.. சிவிலியன் அல்ல. அரசியல்வாதி. அவர் ஒன்றும் மக்களுக்கு தவறிழைக்கவில்லையா..??!

அமிர்தலிங்கத்தின் கொலை.. ஒரு அரசியற் படுகொலை. அரசியல் படுகொலைகளுக்கும்.. சிவிலியன் படுகொலைகளுக்கும் இடையில் வேறுபாடுண்டு. அரசியல் படுகொலைகளுக்காக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு இன்று அமைச்சர் ஸ்தானத்தில் இருப்பவர்களில் ஒட்டுக்குழுக்களின் பிரதிநிதிகளும் அடங்குவர். அவர்கள் சிவிலியன் படுகொலைகளையும் செய்துள்ளனர். இருந்தும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளனர்.

சிங்களம் செய்தது இனப்படுகொலை. சிவிலியன் படுகொலை. அதற்கு விடுதலைப் புலிகள் மீது தவறு காட்டுவதன் மூலம் நியாயம் கற்பிக்க முடியாது.

விடுதலைப்புலிகள்.. அமிர்தலிங்கத்தையோ, 5000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று கூவிவிட்டு.. தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த யோகேஸ்வரன் போன்ற போலி அரசியல்வாதிகளையோ கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு.. அவர்களில் தவறு காணும் நீங்கள் அமிர்தலிங்கம்.. யோகேஸ்வரன் விட்ட அரசியல் தவறுகளை.. மக்கள் தொடர்பான மக்கள் விருப்புக்கு அப்பாலான முடிவுகளை எடுத்தமை தொடர்பான தவறுகளை ஏன் இனங்காட்ட மறுக்கிறீர்கள். இது நீங்கள் விடுதலைப்புலிகள் மீது ஏதோ தவறுள்ளது என்ற எண்ணப்பாட்டில் இருந்து கொண்டு அமிர்தலிங்கத்தை சிவிலியனாக வரையறுத்துக் கொண்டு செயற்படுவது போன்றுள்ளது.

என்னைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளை விட அமிர்தலிங்கம் தரப்பினர் செய்த தவறுகள் பலமானவை. எமது இன அழிவுக்கு அவர்களின் முன்னைய முடிவுகளும் ஒரு காரணம். ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்திய யோகேஸ்வரன் போன்றவர்கள்.. தமிழீழத்தை வலியுறுத்திய அமிர்தலிங்கம் போன்றவர்கள்.. அந்தக் கொள்கையின் பால் இளைஞர்களை செயற்பட விட்டு.. பின்னர் அவர்களைப் பயங்கரவாதிகளாக இனங்காட்டி தங்களை மிதவாதிகளாக்கி.. போலி அரசியல் பேரம் பேசி.. தமது சொந்த சுகபோகத்தை இனத்தின் உரிமையாக இனங்காட்டி வாழ முற்பட்டவர்கள்.. அவர்கள் உங்களைப் பொறுத்தவரை சிவிலியங்கள். சொந்த மண்ணின் விடுதலைக்காக களமாடி உயிர் விட்டவர்கள்.. குற்றவாளிகள்.. தவறிழைத்தவர்கள்... பயங்கரவாதிகள். இந்த இடத்தில் உங்களுக்கும் சிங்களவனுக்கும் என்ன வேறுபாடு..??! இதற்குள் சிங்களவன் தமிழனை கொல்லுறதில ஒற்றுமையா இருக்கிறான் என்றும் சொல்கிறீர்கள். தமிழர்கள் நீங்களே சிங்களவன் தமிழர்களைக் கொல்வதை பயங்கரவாதிகளையே கொல்கிறான்..என்ற உச்சரிப்பினூடு அங்கீகரிக்கிற போது.. சிங்களவன் அதை தொடர்ந்து செய்ய சொல்ல.. நாழிகையா ஆகும். :unsure::o

விடுதலைப்புலிகள் மீது எவ்வளவு தவறுகளை சுட்டிக்காட்ட முடியுமோ அதற்கு பலமடங்கு மேலாக சிங்களத்தின் மீதும்.. மிதவாத.. மற்றும் ஒட்டுக்குழு தமிழ் அரசியல் மற்றும் ஆயுதக் கும்பல்கள் மீதும் தவறுகளை இனங்காட்ட முடியும். அதனையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அதனையும் நீங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும். அதைவிடுத்து அவர்களை சிவிலியன்களாக இனங்காட்டி மன்னிக்கும் கொடூரத்தை செய்ய முனையாதீர்கள்.

அமிர்தலிங்கம்.. ராஜீவ் படுகொலைகள் சிவிலியன் படுகொலைகள் அல்ல. அரசியற் படுகொலைகள். அரசியற் காரணங்களால் நிகழ்ந்த படுகொலைகள். இனக்கலவரங்கள்.. 1987 இந்திய இராணுவம் செய்த படுகொலைகள்.. செம்மணிப் படுகொலைகள்.. முள்ளிவாய்க்கால் படுகொலைகள்.. இவை.. சிவிலியன்கள் மீது ஏவப்பட்ட இன அழிப்புப் படுகொலைகள். இவற்றிற்கும் அரசியற் படுகொலைகளுக்கும் இடையில் பலமான வேறுபாடுண்டு. அதனையும் கருத்தில் கொண்டு குற்றவாளிக் கூண்டில்.. விடுதலைப் புலிகளை நிறுத்துவதை தொடர்ந்து செய்யுங்கள். அதற்காக மற்றவர்களின் தவறுகளை சிவிலியன் தவறுகளாக இனங்காட்ட முனையாதீர்கள். உங்களால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியுமானால்... என்னால் அதனைப் போல பல மடங்கு தவறுகளை அமிர்தலிங்கத்தின் மீது அதாவது நீங்கள் சொல்லும் சிவிலியன் வேடம் போட்ட குள்ள நரிகள் மீதும் இனங்காட்ட முடியும். அவையும் தவறுகளே. அங்கு அவர்களும் திருந்த இடமிருக்கிறது. அதனையும் துணிந்து சொல்லுங்கள். விடுதலைப்புலிகள் மீது மட்டும் தவறிருப்பதாகச் சொல்வது முழு அபந்தமான விடயம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்சு தளபதிக்கு தெரியாமல் தலைவர் கனக்க தாக்குதல்கள் செய்திருக்கின்றார் போல இருக்கு.பிரென்சு தளபதி சொல்லுகின்றார் பேச்சுவார்த்தைக்கு போன இடத்தில் நிகழ்ந்த கைகலப்பில் தான் அமிர் சுடப்பட்டாராம்.மாற்று இயக்கங்களை பற்றித்தான் தெரியாது என இருந்தேன் இப்ப பார்த்தல் புலிகளை பற்றியே அப்படி இப்படி போல் தான் ,வரலாறே குத்து மதிப்பில் இருக்கும் போது யோசித்தேன்.

அனுராதபுரம் தாக்குதல் ரோ சொல்லி

ராஜிவ் கொலை சீ.ஜ.ஏ சொல்லி

அமிர் கொலை பிரேமதாசா சொல்லி

அப்ப அதுதான்.

நாங்கள்.. தமிழீழம் எடுக்க.. மாலைதீவு மீது தாக்குதல் நடத்தினமே.. அது யார் சொல்லியா இருக்கும்...???! சோத்துப் பாசல் சொல்லி இருக்குமோ..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது சரியா தவறா என்பதற்கப்பால இந்த மனிதர் இந்திய ஆக்கிரமிப்பை தமிழ்நாட்டிலிருந்தபடி நியாயப்படுத்தியவர். இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தை வாழ்த்திப் பாடியதோடு, ஈழத்தமிழர்கள் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இந்திய ராணுவத்திற்கு உதவ வேண்டும் என்று "வெற்றி மாலை" வானொலி நிகழ்ச்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தவர். அவர் வழிவந்த தேசியக் கூட்டமைப்பும் அதையேதான் செய்துவருகிறது .

உமாவைக் கொன்றது யாரென்று தெரியவில்லை. ஆனால் அவர்பற்றி நாங்கள் எழுதுவதை விட அவர் கழகப் போராளிகளே அதிகம் தெரிந்துவைத்திருப்பார்கள்.

ஆனால் அரசிய பேசி உசுப்பேத்திவிட்ட கூட்டணியினரைக் காட்டிலும் போராளிக்குழுக்கள் எவ்வளவோ மேல். இடை நடுவில் சிலர் திசை மாறிப்போயிருந்தாலும்கூட, ஆரம்பத்தில் ஆக்கிரமிற்கெதிரான போராட்டம் என்பது உண்மையாகத்தானிருந்தது.

:( நிழலி,

அமிர்தலிங்கத்தின் கொலையை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரின் கொலையை மிகவும் நாசுக்காகப் பயன்படுத்தி எம்மைப் பயங்கரவாதிகளாக உலகுக்குக் காட்டுவதில் சிங்களம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. " அவர்கள் தமிழ் தலைவர்களைக்கூடக் கொன்றார்கள்" என்கிற பழியும் அவப்பெயரும் காலம் காலமாக எம்முடனேயே ஒட்டிவிடும்படி அவரது கொலை ஆக்கிவிட்டது. ஆனால் அவரைக் கொன்றதன் மூலம் கிடைத்த பயன் எதுவென்று பார்த்தால் எதுவுமேயில்லை என்பதுதான் எனது வாதம்.

நான் சொல்ல வந்தது அவர் இறுதிக்காலத்தில் செயலாற்றிய விதம் பற்றியது. இந்தியாவே எல்லாம் என்று நம்பியிருந்ததன் விளைவு, ஈற்றில் இந்தியாவே எமக்கு மிகப்பெரிய எதிரியாக மாற்றிவிட்டது. இத்தனை ஏம்மாற்றங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் சூழ்ச்சிகளை இன்னும் பார்க்க மறுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பற்றியது. அவ்வளவுதான்.

மற்றும்படி, அமீர் கொலையாகட்டும், யோகேஸ்வரன் கொலையாகட்டும், ரஜீவ் கொலையாகட்டும், இன்னும் நூற்றுக்கணக்கான அப்பாவிச் சிங்களவர்களின் கொலையாகட்டும்.. இவை எதுவுமே எமக்கு எந்தப் பயனையும் தரவில்லை. மாறாக சர்வதேசத்தில் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்கிற அவப்பெயரைத் தவிர. இவற்றால் நாம் அடைந்தது எல்லாம் அழிவுகள்தான், இறுதி முள்ளிவாய்க்கால்வரை.

நெடுக்கு,

அப்பாவித்தனமாகக் கேள்வி கேட்கக்கூடாது. புலிகள் பயங்கரவாதிகள் என்று உலகில் காட்டப்படுவதற்கான காரணம் நான் சொன்னவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் வேறு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?? இங்கே கொல்லப்பட்டவர்கள் சரியானவர்களா தப்பானவர்களா என்பதற்கப்பால் அனைவருமே "சிவிலியன்கள்" என்கிற பதத்தினுள் வருவதனால் புலிகள் செய்தவை பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது. மற்றும்படி சிங்களம் செய்த , செய்துவருகிற இனக்கொலையை சர்வதேசத்திற்கு பயங்கரவாதமாகப் படாமைக்கான காரணம் சிங்களத்தின் பிரச்சாரமும், சர்வதேசத்தின் சிங்களத்தினூடான நட்பும் ஆகும். எப்போது சிங்களம் தமக்குத் தேவையில்லை என்று சர்வதேசம் எண்ணுகிறதோ அன்றே அவர்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள். இவ்வளவு காலமும் சிங்கலத்தின் பயங்கரவாதத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கிவந்த சர்வதேசம் இப்போது அதனைக் கேள்வி கேட்பது என்ன காரணத்தினால் என்று நினைக்கிறீர்கள்??

கடாபிக்கும் சிங்களத்துக்குமிடையிலே உள்ள வேறுபாடு தெரியாதவரா நீங்கள்?? கடபிக்கெதிராக கடந்த 30 வருடங்களாக மேற்குலகு தருணம் பார்துக் காத்திருந்தது ( சோனியா கடந்த 20 வருடங்களாகக் காத்திருந்தது போல). இப்போது தருணம் பார்த்து ஆப்படிக்கிறது. ஆனால் சிங்கலத்துடன் மேற்குலகிற்கு எந்தப்பிரச்சனையுமில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்களம் மேற்குலகத்தின் செல்லப்பிள்ளை. 2009 வரை அமஎரிக்கா பிரித்தானியா உற்பட அனைத்து மேற்குலகும் சிங்களத்தை ஆதரித்துத்தான் வந்திருக்கின்றன. இப்போது கடாபீக்கு நடந்தது ஏன் சிங்களத்திற்கு நடக்கவில்லை என்கிற விளக்கம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

அமீர், யோகேஸ்வரன், கதிர்காமர், நீலன் போன்றவர்கள் தமது இறுதிக்காலங்களில் எமக்கெதிராகச் செயற்பட்டிருந்தாலும் கூட அவர்களின் கொலைகளின் மூலம் நாம் சாதித்தது என்ன?? ஏதாவது பலன்கள் இருந்தால் கூறுங்கல்??

ரஜீவைக் கொன்றதன் காரனம் இன்னொருமுறை பதவிக்கு வந்தால் மீண்டும் ராணுவத்தை அனுப்பி புலிகளையும் மக்கலையும் துவசம் செய்துவிடுவார் என்று சொல்லிவந்தோம். ஆனால் நடந்தது என்ன?? அவர் கொல்லப்பட்டதஆற்கான பழிவாங்கல்தானே முள்ளிவாய்க்கால் 2009?? இப்போது சொல்லுங்கள் ரஜீவைக் கொன்றதன் மூலம் நாம் அடைந்த பயன் என்ன??

சிவிலியன்கள் (அவர்கள் எப்படியிருந்தாலும் கூட) கொல்லப்படுவதை நிச்சயம் சர்வதேசம் பார்த்துக்கொன்டிருக்கப்போவதில்லை. 2009 முள்ளிவாய்க்காலிலும் கூட புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தார்கள், தப்பியோட எத்தனித்த மக்களைச் சுட்டார்கள், மக்கள் கூடியிருந்த ராணுவ முகாமைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்தார்கள் என்றுதான் சொல்லப்படுகிரது. ஆகவே பொதுமக்கள் இழப்பென்று வரும்போது நாம் பயங்கரவாதிகளாகத்தான் பார்க்கப்படுகிறோம். அரசாக இருக்கும் பட்சத்தில் சர்வதேசத்தில் அதற்கிருக்கும் அங்கீகாரமும், சர்வதேச நலன்களும், அதன் பிரச்சார பலமும் அவர்கள் செய்யும் படுகொலைகளில் இருந்து அவர்களை இலகுவாகக் காப்பற்றி விடுகிரது. எந்தவித அங்கீகாரமும், பிரச்சார வலுவும் இல்லாத போராளி அமைப்புக்கள் செய்யும் ஒன்றிரண்டு கொலைகள் கூட சர்வதேசத்தில் பெருப்பித்துப் பார்க்கப்படுகிரது. அதுதான் இன்றைய யதார்த்தம்.

புலிகள் மேலுள்ல இன்னொரு குற்றச்சாட்டு தற்கொலைத்தாக்குதலை பொதுமக்கள் இலக்குகள் மீது பாவித்தமை என்பது. அதற்கும் எம்மிடம் பதிலில்லை. ராணுவ இலக்குகளுடன் எமது தாக்குதல்கள் நின்றிருந்தால் எம்மைப் பயங்கரவாதிகள் என்று சர்வதேசம் பார்த்திராது. ஆனால் நாம் அப்படி நிற்கவில்லை. அவ்வப்போது பொதுமக்கலையும் தாக்கினோம். நல்ல உதாரணம், 1996 முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு நடந்து சில நாலைக்கூல் தெகிவலை புகையிரதத்தில் குண்டு வைத்து பலர் கொல்லப்பட்டனர். இதன் அர்த்தம் என்ன??

சில செஅயற்பாடுகலைத் தவறென்றால் அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேன்டும். சரி, பூர்க்குற்ற விசாரனைகளுக்கு ஆம் என்று சொல்லும் நாம் அதில் புலிகள் செய்த செயல்கலையும் சேர்த்தே விசாரியுங்கள் என்றுதானே கேட்கிறோம். புலிகள் செய்யவில்லை என்றால் நாங்களும் சிங்களவன் போல இக்கூற்றச்சாட்டுகளை மரைக்கலாமே, மறுக்கலாமே, ஏன் அப்படிச் செய்யாமல் விசாரனை நடத்துங்கள் என்று கேட்கிறோம்?? முடிந்தால் உங்களில் யாராவது "புலிகள் மக்களைக் கொல்லவில்லை, ஆகவே இந்த விசாரணைகள் தேவையில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!!!! உங்களால் முடியாது, சிங்கலத்தை தூக்கிலேற்ற புலிகள் செய்த கொலைகலையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, அப்படித்தானே??

நெடுக்கு,

பிரபாகரன் என்னும் மனிதர் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தலைவர்தான். புலிகள் உங்களுக்கெப்படியோ எனக்கும் அப்படியே. ஆனால் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படவேண்டும் என்பதுதான் எனது வாதம். ஒரு முள்ளிவாய்க்கால் போதும்.

சித்தன், நக்கல் நைய்யாண்டி எல்லாம் இருக்கட்டும், விடயத்துக்கு வாருங்கள். புலிகள் ஏன் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டார்கள் என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்??

நீங்கள் மீண்டும் மீண்டும் அதே பல்லவியைப் பாடுகிறீர்கள். இங்கே நாம் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டதற்கு நாம் செய்த செயல்களும் ஒரு காரணம். ஆனால் அரசாங்கமோ, இந்தியனோ அல்லது அமெரிக்கா உற்பட வேறு எந்த மேர்குலக நாடோ எமது இனக்கொலையில் வகித்த பாத்திரம் அவரவர் நலன்களுக்கேற்ற முறையில் மறைக்கப்பட்டிருக்கிறது. அது எமது சக்திக்கு அப்பால்ப்பட்டது. நாம் தலகீழாக நின்றால்க்கூட எம்மால் அதை நிரூபிக்க முடியாது.

அண்மையில் வெளிவந்த தி கேஜ் எனும் நூலில்க் கூட புலிகள் செய்த கொலைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். இவை சர்வ்தேசத்தின் முன்னால் எம்மை நல்லவர்களாகக் காட்டப்போவதில்லை. இதைப்போல் எத்தனையோ புத்தகங்கள், செய்திகள் வந்தாயிற்று. நீங்கள் ஏற்றுக்கொண்டாலென்ன இல்லாவிட்டலென்ன நாம் செய்த படுகொலைகள்தான் எம்மைப் பயங்கரவாதிகளாகக் காட்டியிருக்கின்றன.

அப்படியில்லை, நாம் எதுவுமே செய்யவில்லை, அவர்கள் சகட்டுமேணிக்கு எம்மைப் பயங்கரவாதிகளாகக் காட்டுகிறார்கள் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் சொல்வதற்கு இனி எதுவு,ஏயில்லை.

ரகு அண்ணா,

நீங்கள் முன்பு எழுதும் பாணிக்கும், இப்போது எழுதும் பாணிக்கும் நிறைய வித்தியாசங்களை அவதானிக்கக் கூடியதாய் இருக்கு. வேற கோணத்திலே சிந்திக்கிறீங்கள் என விளங்குது. நீங்கள் சொன்னது சரியே, பல கொலைகள் மூலம் எங்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை மாறாக சர்வதேசமும், பிராந்திய வல்லரசுகளும் எங்கள் வளர்ச்சியைப் பார்த்து பயப்படும் நிலையே உருவானது. இதனால் தான் முள்ளிவாய்க்காலில் அவ்வளவு பேர் சாகும் போதும் சர்வதேசம் மௌனித்திருந்தது. குறிப்பாக புலிகளின் வான் படையின் வளர்ச்சியே அவர்களின் பயத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எந்த ஒரு நாடு கூட எம்முடன் நட்பாக இல்லாமையும் நாங்கள் ராஜ தந்திர ரீதியில் உறவுகளை பேணாமையும் கூட சர்வதேசம் எங்களுக்காக குரல் கொடுக்காமைக்கு காரணமாகும்.

இது உலகின் போக்கை சரிவர மதிப்பிடாத நிலையிலிருந்தும்.. குற்றங் காணும் மனப்பான்மையில் இருந்தும் பிறக்கும்.. ஒரு வித கற்பிதம் மட்டுமே ஆகும்.

இம்மாதம் முதல் புதிய சுதந்திர தேசமாக உதயமாகியுள்ள தென் சூடான்.. அதன் 50 ஆண்டுகாலத்துக்கும் மேலான விடுதலைப் போராட்ட வரலாற்றில் 23 இலட்சம் மக்களை போராளிகளை தியாகம் செய்து தான் சுதந்திரக் காற்றை சுவாசித்துள்ளது. அந்த 23 இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட போதும் இந்த உலகம் மெளனமாகவே இருந்துள்ளது. இப்போதுதான்.. அந்த மக்களின் விருப்பு வெல்லப்பட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் வான்படை என்பது ஒரு அச்சுறுத்தலுக்குரிய அமைப்பு கிடையாது. அதன் வான் கலங்கள் மிகவும் மட்டுப்படுத்திய பயன்பாட்டுத் திறன் கொண்டவை. விடுதலைப் புலிகளின் தற்சார்பு நிலைப்பாடும்.. பலமான பேரம் பேசும் வலுவும்.. இராணுவ நுட்பங்களை தகர்க்கும் மன வலிமையும்.. நிலம் மற்றும் கடலை கட்டுப்படுத்தும் திறனுமே.. அவர்களின் மீதான உலகின் அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மாறாக தமிழ் மக்களுக்கான விடுதலைப் புலிகளின் போராட்டம் அல்ல. அப்படி என்றால் அந்தப் போராட்ட அமைப்பை இந்த உலகம் இவ்வளவுக்கு வளர விட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்காது. எப்போதோ அதைச் செய்து முடித்திருப்பர்.

அரசியற் படுகொலைகள் உலகில் எல்லா இடமும் தான் நடக்கின்றன. அமெரிக்காவிலும் அது நடக்கிறது. அதற்காக அங்கு எவரையும் அழிக்கும் முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. அரசியற்படுகொலைகள்.. தவறான மக்கள் விரோத.. அல்லது விருப்பற்ற.. அரசியல் முடிவுகளை எடுப்பதனால் மக்கள் ஆத்திரம் கொண்டு செய்யும் ஒன்றாகவே நோக்கப்படுகிறது. அதுதான் யதார்த்தமும் கூட.

நெடுக்ஸ் அண்ணா,

இதை இங்கே எழுதிறது சரியோ தெரியேல்ல ஆனால் புலிகளின் வான்படை உலகத்துக்கு காட்டிய சிலின் 143 இலகு விமானங்கள் மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை. பெல் 212 ரக ஹெலி உட்பட சில சிறிய ஜெட் விமானகளும் அவர்கள் வசம் இருந்திருக்கின்றன. அத்துடன் கரும் புலித் தாக்குதல்களும் சர்வதேசம் எங்களை பயங்கரவாதிகளாக் முத்திரை குத்த இன்னொரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான வாதம், நேரம் கிடைக்கும்போது மீண்டும் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

இதை இங்கே எழுதிறது சரியோ தெரியேல்ல ஆனால் புலிகளின் வான்படை உலகத்துக்கு காட்டிய சிலின் 143 இலகு விமானங்கள் மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை. பெல் 212 ரக ஹெலி உட்பட சில சிறிய ஜெட் விமானகளும் அவர்கள் வசம் இருந்திருக்கின்றன. அத்துடன் கரும் புலித் தாக்குதல்களும் சர்வதேசம் எங்களை பயங்கரவாதிகளாக் முத்திரை குத்த இன்னொரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

நாங்கள் நீண்ட ஒரு பார்வையை செய்வதில்லை. எப்போதும் குறுகிய பார்வையையே செய்து.. எங்களை நாங்களே காட்டியும் கொடுக்கிறோம்.

எம் மீதான பயங்கரவாத முத்திரை.. ஒரு வரலாற்றுப் பார்வை...

சிறீலங்கா நாம் எமது உரிமையைக் கேட்கத் தொடங்கியதுமே பிரிவினைவாத பயங்கரவாத முத்திரை குத்திவிட்டது.

சர்வதேசம்.. குறிப்பாக அமெரிக்கா.. எமது போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தியது.. கரும்புலிகள் தோன்ற முன்னரே ஆகும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனாட் ரேகன் தமிழர்களை அழிப்பதன் மூலமே இலங்கையில் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்று ஒட்டு மொத்த தமிழர்களையும் பயங்கரவாதியாக சித்தரித்து ஜே ஆர் ஜெயவர்த்தனவிற்கு ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர்.. இன்றைய சிங்கள அரசின் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த தலைமையிலான ஈபிஆர் எல் எவ் ஆயுதக் குழுவினர் அமெரிக்க அலன் தம்பதிகளை கடத்திய கடத்தல் நாடகத்தால் அப்போதும் எம் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. அப்போது எல்லாம் இந்தியாவின் சோவியத் சார்பு நிலைப்பாடும் இந்தியாவின் ஈழப்போராட்ட ஆதரவு நிலைப்பாடும் சர்வதேசம் எமக்கு பயங்கரவாத முத்திரை குத்த உதவி நின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளால்.. போராட்ட இலக்கின்றி படுகொலைகளை செய்யும் அமைப்புக்களாக போராளி அமைப்புக்கள் மாறி இருந்த போது அவற்றின் மீது தடை கொண்டு வரப்பட்ட போது எம்மவர்களில் ஒரு தரப்பினர் எமக்கு பயங்கரவாத முத்திரை குத்தினர்.

அதன் பின்னர் 1987 ஒக்டோபர் இந்தியப் படைகளை எதிர்த்து நாம் போராடிய போது இந்தியா எமக்கு பயங்கரவாத முத்திரை குத்தியது. சர்வதேசம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் என்போர் இந்திய சார்ப்பு நிலைப்பாடோடு எமக்கு பயங்கரவாத முத்திரை குத்தினர்.

1990 களில் முஸ்லீம்களை பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றிய போதும்.. காத்தான்குடி படுகொலையின் பின்னரும்.. பாகிஸ்தான் உள்ளிட்ட சில முஸ்லீம் நாடுகள் எமக்கு பயங்கரவாத முத்திரை குத்தின.

இஸ்ரேல்... எமது போராட்ட காலத்தின் ஆரம்ப காலம் தொட்டு எம்மவர்கள் பலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த நாள் முதல் எம்மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. இன்று வரை அது தொடர்கிறது.

புளொட் அமைப்பு மாலைதீவை கைப்பற்றிய போது எமக்கு பிராந்திய அச்சுறுத்தலுள்ள பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு.. புளொட்டின் எடுப்பார் கைப்பிள்ளை முயற்சி பலியிடல்களுடன் இனிதே முடிந்தது.

ராஜீவ் காந்தி படுகொலை.. பிரேமதாச படுகொலை.. சந்திரிக்கா படுகொலை முயற்சி என்று சம்பவங்கள் நடக்க முதலே எமக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டாயிற்று.

அமெரிக்காவின் நேரடி வழிகாட்டலில் நிகழ்த்தப்பட்ட ஜெயசிக்குறு தோல்வியோடு அமெரிக்கா எம்மை 1996 இல் பயங்கரவாதப்பட்டியலில் போட்டது.

அமெரிக்க வால்பிடி பிரிட்டன் அதனை 1998 இல் தொடர்ந்தது. இந்தியா இவற்றை வரவேற்றது.

அதன் பின்னர் 2001 செப் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர்.. சர்வதேச பயங்கரவாதிகளுக்கு குத்தப்பட்ட அதே முத்திரை குத்தப்பட்டு பயங்கரவாததிற்கு எதிரான போர் என்ற அமெரிக்க நவீன ஏகாதபத்தியத்திற்கு முகம் கொடுக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

கதிர்காமர் கொல்லப்பட்ட போதும்.. பயங்கரவாதிகளானோம்.

ஐரோப்பிய ஒன்றியமும் எம்மை பயங்கரவாத பட்டியலில் போட்டது. ஆனால் ஐநா அப்படிச் செய்ய மறுத்துவிட்டது.

2006 இல் அமெரிக்கா வெளிப்படையாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உதவித் திட்டத்தினை சிறீலங்காவிற்கு அளித்தது.

2009 இல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தொனிப் பொருளின் கீழ் ஒரு இனப்படுகொலையை உலகம் செய்து முடித்தது.

2011 அதனை காணொளியாக்கி.. மனித உரிமைகள் என்று நீலிக்கண்ணீர் வடித்து.. தமது பிராந்திய நலனை நோக்கி பயங்கரவாத எதிர்ப்பு என்பதை முதலீடாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில்.. நாம் எப்போதுமே பயங்கரவாதிகளாகவே இருந்துள்ளோம். கரும்புலிகள் தோன்றிய பின்னரோ.. வான்புலிகள் தோன்றிய பின்னரோ அல்ல..! சர்வதேசத்தின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப.. தேவைகளுக்கு ஏற்ப.. நாம் எப்போதுமே பயங்கரவாதிகளாக்கப்பட்டே வந்துள்ளோம். இதுதான் உண்மை. ஏனெனில்.. எம்மை வைத்து அவர்களின் தேவையை இலகுவாக நிறைவு செய்ய முடிந்ததால்.. எமக்கு போராளி அந்தஸ்து வழங்க அவர்கள் முன்வரவில்லை. கடாபி மாதிரி ஒரு தலைவர் சிறீலங்காவில் இருந்திருந்தால்... எமக்கும் போராளி அந்தஸ்தும்.. ஆயுத சப்பிளையும் செய்து கொண்டிருந்திருப்பர். சிங்களத் தலைமைகள்.. அப்படி இருக்கவில்லை. அவர்கள் புத்திசாலிகள்.. எப்போதும் தமிழர்களை பயங்கரவாதிகளாகக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் நல்லா வளைந்து கொடுத்திருக்கிறார்கள்.. சர்வதேசத்திற்கும் சரி.. பிராந்திய சக்திகளுக்கும் சரி. அதனால் தான் நாம் என்றுமே பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளோம். அவ்வளவே.

Edited by nedukkalapoovan

தென்பகுதியில் ஒரு பெருத்த பேரினவாதத்தை போட்டுத்தள்ள முதலில் அவரின் இரத்த உறவை போடவேண்டி இருந்தது. ஆனால் அந்த திட்டத்தினை தலைவர் அப்படியான திட்டத்தை கண்டிப்பாக செய்யவேண்டாம் என கூறி இருந்தார்.

.

சம்பந்தரை போட வெளிக்கிட அதனை செய்யவேண்டாம் என அப்போதைய திருமலைத் தளபதிக்கு கட்டளை இட்டார்.

.

ஆனந்த சங்கரியை போடவேண்டும் என யாழ் போராளிகள் கேட்க வேண்டாம் முடிந்தால் அவர்களை மக்களே தோற்கடிப்பார்கள் என்றார்.

.

அவந்தான் எங்கட சனத்திர்கு அடிக்கிறான் என்றால் நாங்களும் சிங்கள சனத்திற்கு அப்படி செய்ய கூடாது என அம்பாரை தளபதி கேணல் ராமுக்கு கூறினார்.

இப்படி பல நிகழ்ந்துள்ளன.

இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்ட எத்தனையோ குடும்பங்களுக்கு தலைவர் மன்னிப்பு கேட்டார், அவர்களுக்கு உதவ ஒரு பிரிவையே உருவாக்கினார். தவறாக தண்டனை கொடுத்த நூற்றுக்கணக்கான போராளிகள் இயக்கத்தில் இருந்து கலைக்கப்பட்டார்கள். சுடப்பட்டார்கள்.

.

இப்படி முடிந்தவரை இயக்கமும் தலைவரும் செய்துதான் கொண்டு இருந்தார்கள்.

தலைவர் சில இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டிருந்தால் ஒட்டுமொத்தமாக அப்போதைய தமிழ் அரசியல் கட்சிகளாலும், இந்தியா மற்றும் இலங்கை அரசினால் விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட்டிருக்கும்.

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.