Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறை

[Tuesday, 2011-07-19 21:13:56]

அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன.இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் வீட்டுவேலை

எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள்.

பேசுவதை கேளுங்கள்

நான் என்ன சொன்னாலும் என் கணவர் கேட்டுக்குவார் என்று பெருமையாகக் கூறுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனர். மாத சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்துவிட்டு ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்க வேண்டுமாம். கேட்ட உடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவியின் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்குமாம்.

சிரித்த முகம்

அலுவலகத்தில் இருந்து வரும்போதே டென்சனை சுமந்து கொண்டு வராமல் சிரித்த முகத்தோடு கணவர் வரவேண்டும் என்பதைத்தான் அநேகம் பெண்கள் விரும்புகின்றனர். மலர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வரும் கணவரை மகிழ்ச்சி பொங்க வரவேற்க பெண்களும் ரெடியாகத்தான் இருக்கின்றனர்.

எங்காவது வெளியில் சென்றால் அழகாக உடை அணிந்து செல்வதைப்போல வீட்டிற்குள் இருக்கும் போதும் கணவர் ரசனையாக உடை அணியவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்கு என்று கூறினால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை� என்று பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம்.

பர்சேஸ் செல்வது முக்கியம்?

கடையில் சென்று என்ன பொருள் வாங்கினாலும் மனைவியை அழைத்துச்செல்லுங்கள் ஏனென்றால் ஒரு கைக்குட்டை வாங்க வேண்டுமென்றால் கூட என்னைக் கேட்காமல் என் கணவர் வாங்கமாட்டார் என்று பெண்கள் பெருமையாக பேசுவதற்கு அது உதவும்.

கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு� சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?� என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46771&category=CommonNews&language=tamil

தம்பி உதெல்லாம் வீண் வேலை..பொம்பிளையளை திருப்திப்படுத்த வெளிக்கிட்டு நீங்கள் வீணாப்போகாதேங்கோ..இது ஆலோசனை அல்ல நீலமேகத்தின் எச்சரிக்கை..

இந்த ஐடியாக்களைக் கொடுத்த மன நல மருத்துவருக்கு patients பற்றாக்குறைபோல இருக்கு... :lol::rolleyes:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவளவையை மகிழ்ச்சிப்படுத்த எனக்கு அஞ்சு நிமிசம் காணும் <_< ........இதுக்குப்போய் கறுப்பு எங்களுக்கு ரியூசன் குடுக்குது :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஷயத்தில் கறுப்பி, இன்னும் சின்னக்குழந்தை போல உள்ளது!

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி உதெல்லாம் வீண் வேலை..பொம்பிளையளை திருப்திப்படுத்த வெளிக்கிட்டு நீங்கள் வீணாப்போகாதேங்கோ..இது ஆலோசனை அல்ல நீலமேகத்தின் எச்சரிக்கை..

பெயரில் இருந்த நெருப்பு எங்கே!

இப்போ பெயரில் குளிர்மை தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னவோ.. குரங்கை கூட்டில் அடைச்சு வைச்சிட்டு.. அப்பப்ப வாழைப்பழம் கொடுத்து.. மகிழ வைச்சு.. ஆட்டி விக்கிறது போல எல்லோ இருக்குது. பெண்ணை மகிழ்ச்சிப் படுத்திறன் என்ற நோக்கமே தவறானது. துணைவியாகிய நல்ல தோழியை.. நல்ல மனிதனை.. எப்போதுமே மகிழ்ச்சியா வைச்சிருக்கனும் என்ற சிந்தனை அடிப்படையில் எல்லா கணவன்மாரிடம் இயல்பாக எழ வேண்டும். இப்படியான போலி மகிழ்ச்சிப்படுத்தல்கள் பெண்களை இரண்டாதரப் பிரஜைகளாக ஆக்கிக் காட்டும் அப்பட்டமான செயலைச் செய்கிறது. இப்படியான சிந்தனைகளை விதைப்பதே தவறானது.

பெண்ணை மகிழ்ச்சிப்படுத்துவதற்கும்.. நீங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துற்கும் இடையில் வேறுபாடில்லை. அவளும் ஒரு மனிதனே. நீங்கள் மகிழ்ச்சியடைய மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் அம்சங்கள்.. உங்களைச் சார்ந்த பெண்ணிடமும் அவளின் எதிர்பார்ப்பாக இருக்கும். உங்கள் இயல்பான அன்பும்.. கவனமும்.. அரவணைப்பும்.. அவளை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தும். இதற்கு எல்லாம் மகிழ்ச்சிப்படவில்லை என்றால்.. அந்தப் பெண்ணை மட்டுமல்ல.. அப்படியான மனிதர்களை.. மன நல அல்லது உள வள மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நன்று. :)

Edited by nedukkalapoovan

பரிணாம வளர்ச்சியில், நெடுக்கர்???

என்னத்துக்கோ தயாராகிறார் போல கிடக்கு!!! :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை மகிழ்ச்சிப் படுத்துவது என்பது.... கல்லிலிலை நார் உரிக்கிற மாதிரி.

அவர்களுக்கு எதிலுமே... திருப்தி ஏற்படாது. அது அவர்களின் இயல்பான குணம்.

பெண்களை மகிழ்ச்சிப் படுத்த வெளிக்கிட்டு, உங்கள் மகிழ்ச்சியை இழக்காதீர்கள் மொக்குப் பசங்களா.....

பரிணாம வளர்ச்சியில், நெடுக்கர்???

என்னத்துக்கோ தயாராகிறார் போல கிடக்கு!!! :D :D :D

நெடுக்கரை இந்த விஷயத்தில் பரிணாம வளர்ச்சி அடைய விட மாட்டோம்.

அவர் கலியாணம் கட்ட சம்மதித்தாலும்.... நாங்கல் குழப்புவோம்.

வாழ்க்கை முழுக்க... அவர் தனிய, இருந்து தவில் அடிக்க வேணும். :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்ச்சியில், நெடுக்கர்???

என்னத்துக்கோ தயாராகிறார் போல கிடக்கு!!! :D :D :D

பெண்கள் செய்யும் கெட்டவற்றை மட்டும் சுட்டிக் காட்டுவதால் அவர்களை திருத்த முடியாது. அவர்களுக்கு நல்லவற்றையும் இனம் காட்ட வேண்டும். அதேபோல்.. சமூகம் என்று வரும் போது பெண்கள் கெட்டுப் போக ஆண்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்களிப்பும் இருக்கிறது. அவையும் களையப்பட விளிப்புணர்வூட்டப்பட வேண்டும். அந்த வகையில் கருத்துக்களின் தன்மைகள்.. செய்திகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அவ்வளவே. :):D

நெடுக்கரை இந்த விஷயத்தில் பரிணாம வளர்ச்சி அடைய விட மாட்டோம்.

அவர் கலியாணம் கட்ட சம்மதித்தாலும்.... நாங்கல் குழப்புவோம்.

வாழ்க்கை முழுக்க... அவர் தனிய, இருந்து தவில் அடிக்க வேணும். :rolleyes::D:lol:

நல்ல தெளிவான கொள்கை.. சிறியண்ணா. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் செய்யும் கெட்டவற்றை மட்டும் சுட்டிக் காட்டுவதால் அவர்களை திருத்த முடியாது. அவர்களுக்கு நல்லவற்றையும் இனம் காட்ட வேண்டும். அதேபோல்.. சமூகம் என்று வரும் போது பெண்கள் கெட்டுப் போக ஆண்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்களிப்பும் இருக்கிறது. அவையும் களையப்பட விளிப்புணர்வூட்டப்பட வேண்டும். அந்த வகையில் கருத்துக்களின் தன்மைகள்.. செய்திகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அவ்வளவே. :):D

நல்ல தெளிவான கொள்கை.. சிறியண்ணா. :lol::D

அப்ப நீங்கள் சந்திக்கும் நாலு பெண்களுக்கு யாழ்களத்தில் மருதன்கேணி என்று ஒரு நல்லவர் இருக்கிறார் என்பதையும் இனம் காட்ட மறந்துவிடாதீர்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் சந்திக்கும் நாலு பெண்களுக்கு யாழ்களத்தில் மருதன்கேணி என்று ஒரு நல்லவர் இருக்கிறார் என்பதையும் இனம் காட்ட மறந்துவிடாதீர்கள்,

எனக்கு மருதங்கேணி என்பவர் நல்லவரோ கெட்டவரோன்னு தெரியாது. ஆனால் மருதங்கேணி என்ற அந்த ஈழத்துக் கிராமத்தின் இயற்கை அழகை ரசித்திருக்கிறேன். நான் முதன் முதலில் குண்டுமணிச் செடிகளை கண்டதும் அங்கு தான். மிகச் சிறிய வயதில் அங்கு ஒரு கோவிலுக்கு பெற்றோருடன் சென்ற ஞாபகம் இருக்கிறது. :)

மருதங்கேணி காத்திருக்கின்றார்?

இனிமேல், கருத்தெழுதும் போதும், சந்தர்ப்பங்கள் வரும் போதும் இது கவனத்தில் எடுக்கப் படும்! :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மருதங்கேணி என்பவர் நல்லவரோ கெட்டவரோன்னு தெரியாது. ஆனால் மருதங்கேணி என்ற அந்த ஈழத்துக் கிராமத்தின் இயற்கை அழகை ரசித்திருக்கிறேன். நான் முதன் முதலில் குண்டுமணிச் செடிகளை கண்டதும் அங்கு தான். மிகச் சிறிய வயதில் அங்கு ஒரு கோவிலுக்கு பெற்றோருடன் சென்ற ஞாபகம் இருக்கிறது. :)

ஓ.. இந்தப் பின்னணியில வந்ததுதான் குண்டுமணி புளொக்கா? :rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இந்தப் பின்னணியில வந்ததுதான் குண்டுமணி புளொக்கா? :rolleyes::wub:

எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது.. அம்மா பாம்பு இருக்கும் என்று கத்தக் கத்த.. பத்தைக்க இறங்கி குண்டுமணி பார்த்துப் பொறுக்கினது. குண்டுமணி எவ்வளவு அழகாக இருந்தாலும்.. பத்தைக்க தான் இருக்கும்.. என்று பின்னர் அறிஞ்சு கொள்ள அந்த குட்டி வயது அனுபவம் பேருதவியாக இருந்தது. அதேபோல.. குப்பையாகி உள்ள இந்த உலகத்தில் குண்டுமணிகள் போல நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ.. இந்தப் பின்னணியில வந்ததுதான் குண்டுமணி புளொக்கா? :rolleyes::wub:

எப்படித்தான் இப்படீ எல்ல யோசிக்கிறீங்க? நீங்க பெரிய கில்லாடிதான் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் இப்படீ எல்ல யோசிக்கிறீங்க? நீங்க பெரிய கில்லாடிதான் :lol: :lol: :lol:

ஒன்று மட்டும் தெரியுது.. இசை எங்களை.. கவனமா.. கண்காணிச்சுக் கொண்டு.. பின் தொடர்கிறார் என்று..! அதுதான் ஏனுன்னு புரியல்ல..! நட்பா இருக்கலாம்..?! நண்பேண்டா. :lol::D

Edited by nedukkalapoovan

இந்த சங்க பாடலையும் ஒருதடவை கேட்டு பாருங்களேன்.

இல்லறத்தின் முதுகெலும்பாகிய 'இயைபு' பண்பின் சிறப்பினை உணர்த்த வந்த பாடல் இது. இப்பாடலின் உண்மையான பொருளை அறியும் முன்னர் இப்பாடல் தோன்றிய பின்புலத்தை ஆராயலாம். செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்த ஒரே செல்ல மகள் ஒரு காளையின் மேல் காதல் கொள்கிறாள். அவனோ ஏழை. மகளின் பெற்றோர் இவர்களது காதலை எதிர்க்கவே இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கின்றனர். இதை அறிந்த அவளது அன்னை மிகவும் வருந்துகிறாள். சமையலைப் பற்றி எதுவுமே அறியாத தனது ஒரே செல்ல மகள் வயதில் மிகவும் இளையவள். எவ்வாறு தன் கணவனுடன் சிக்கல் ஏதும் இல்லாமல் இல்லறம் நடத்துகிறாளோ என்ற கவலை மேலிடவே தன் மகள் இல்லறம் நடத்தும் பாங்கினை அறிந்துவர செவிலித்தாயினை அனுப்புகிறாள். அந்த செவிலித்தாய் மகளின் வீட்டை அணுகி ஒரு சாளரத்தின் வழியாக அந்த வீட்டிற்குள் நடக்கும் நிகழ்ச்சியைக் கண்டு சென்று அன்னையிடம் கூறுவதாக அமைவதே இந்தப் பாடல் ஆகும்

பாடல்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்

குவளை உண்கண் குய்ப்புகை கமழத்

தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

இனிதுஎன கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.

- குறுந்தொகை பா.எண்: 167

பொருள்:

காய்ச்சித் தோய்த்த தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற தன் கைவிரல்களைக் கழுவாமல் (மாசறக்) கழுவுற்ற சீலையினை உடுத்திக்(அதாவது- நழுவிய சேலையை திருத்தி) கொண்டு குவளை போன்ற தனது மைதீற்றிய கண்களிலே தாளிப்பின் நறுமணம் கமழும் புகை புகுந்து வருத்தத் தானே தன் கையால் துழாவிச் சமைத்த இனிய புளிக்குழம்பினை இனிப்பாய் இருக்கிறது என்று புகழ்ந்து தன் கணவன் உண்டதினாலே உள்ளம் மிக மகிழ்ந்தது மகளின் முகம்.

(ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002)

http://thiruththam.blogspot.com/2009/05/blog-post_18.html

Edited by மல்லையூரான்

இதென்னவோ.. குரங்கை கூட்டில் அடைச்சு வைச்சிட்டு.. அப்பப்ப வாழைப்பழம் கொடுத்து.. மகிழ வைச்சு.. ஆட்டி விக்கிறது போல எல்லோ இருக்குது. பெண்ணை மகிழ்ச்சிப் படுத்திறன் என்ற நோக்கமே தவறானது. துணைவியாகிய நல்ல தோழியை.. நல்ல மனிதனை.. எப்போதுமே மகிழ்ச்சியா வைச்சிருக்கனும் என்ற சிந்தனை அடிப்படையில் எல்லா கணவன்மாரிடம் இயல்பாக எழ வேண்டும். இப்படியான போலி மகிழ்ச்சிப்படுத்தல்கள் பெண்களை இரண்டாதரப் பிரஜைகளாக ஆக்கிக் காட்டும் அப்பட்டமான செயலைச் செய்கிறது. இப்படியான சிந்தனைகளை விதைப்பதே தவறானது.

பெண்ணை மகிழ்ச்சிப்படுத்துவதற்கும்.. நீங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துற்கும் இடையில் வேறுபாடில்லை. அவளும் ஒரு மனிதனே. நீங்கள் மகிழ்ச்சியடைய மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் அம்சங்கள்.. உங்களைச் சார்ந்த பெண்ணிடமும் அவளின் எதிர்பார்ப்பாக இருக்கும். உங்கள் இயல்பான அன்பும்.. கவனமும்.. அரவணைப்பும்.. அவளை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தும். இதற்கு எல்லாம் மகிழ்ச்சிப்படவில்லை என்றால்.. அந்தப் பெண்ணை மட்டுமல்ல.. அப்படியான மனிதர்களை.. மன நல அல்லது உள வள மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நன்று. :)

நெடுக்கரின் கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான். முதலில் ஒரு மனிதனுக்குரிய அங்கீகாரங்களை கொடுக்கப்பழகினாலே போதுமானது. நடைமுறையில் தலைகீழாக நடந்துகொண்டு மனைவிகளை திருப்திப்படுத்துகன்றோம் என்றால் மனைவிகள் என்ன பாவைப்பிள்ளையா ??????????????????

இதென்னவோ.. குரங்கை கூட்டில் அடைச்சு வைச்சிட்டு.. அப்பப்ப வாழைப்பழம் கொடுத்து.. மகிழ வைச்சு.. ஆட்டி விக்கிறது போல எல்லோ இருக்குது. பெண்ணை மகிழ்ச்சிப் படுத்திறன் என்ற நோக்கமே தவறானது. துணைவியாகிய நல்ல தோழியை.. நல்ல மனிதனை.. எப்போதுமே மகிழ்ச்சியா வைச்சிருக்கனும் என்ற சிந்தனை அடிப்படையில் எல்லா கணவன்மாரிடம் இயல்பாக எழ வேண்டும். இப்படியான போலி மகிழ்ச்சிப்படுத்தல்கள் பெண்களை இரண்டாதரப் பிரஜைகளாக ஆக்கிக் காட்டும் அப்பட்டமான செயலைச் செய்கிறது. இப்படியான சிந்தனைகளை விதைப்பதே தவறானது.

பெண்ணை மகிழ்ச்சிப்படுத்துவதற்கும்.. நீங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துற்கும் இடையில் வேறுபாடில்லை. அவளும் ஒரு மனிதனே. நீங்கள் மகிழ்ச்சியடைய மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் அம்சங்கள்.. உங்களைச் சார்ந்த பெண்ணிடமும் அவளின் எதிர்பார்ப்பாக இருக்கும். உங்கள் இயல்பான அன்பும்.. கவனமும்.. அரவணைப்பும்.. அவளை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்தும். இதற்கு எல்லாம் மகிழ்ச்சிப்படவில்லை என்றால்.. அந்தப் பெண்ணை மட்டுமல்ல.. அப்படியான மனிதர்களை.. மன நல அல்லது உள வள மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நன்று. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் தெரியுது.. இசை எங்களை.. கவனமா.. கண்காணிச்சுக் கொண்டு.. பின் தொடர்கிறார் என்று..! அதுதான் ஏனுன்னு புரியல்ல..! நட்பா இருக்கலாம்..?! நண்பேண்டா. :lol::D

இப்பிடி ஒண்டு ரெண்டைப் பொறுக்கி வச்சிருந்தால் பின்னாளில கதை எழுத உதவுமில்லே..! :rolleyes: அதுக்குத்தான்..!! :lol:

தம்பி உதெல்லாம் வீண் வேலை..பொம்பிளையளை திருப்திப்படுத்த வெளிக்கிட்டு நீங்கள் வீணாப்போகாதேங்கோ..இது ஆலோசனை அல்ல நீலமேகத்தின் எச்சரிக்கை..

  • கருத்துக்கள உறவுகள்

laughing-smiley.giflaughing-smiley.gif

laughing-smiley.giflaughing-smiley.gif

பார்த்தால் ஒருக்கால் யாழ்ப்பாணம் போய், அம்மியிலை அரைச்ச சம்பளும், சட்டியிலை சுட்ட தோசையும் சாப்பிட்டாதானாச்சு என்றிருக்கு.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.