Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு!

Featured Replies

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது.

உறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது.

மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

முன் விளையாட்டுக்குத் தேவையானவை:

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.

அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தொடுதல் – ஒரு முக்கிய காரணி

முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.

மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும்.

கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தம் உணர்த்தும் அன்பு

முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்யலாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் கற்பனையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்யத்தில் இனிமை கூடும்.

http://thatstamil.oneindia.in/lifestyle/kamasutra/2011/the-art-sexual-foreplay-aid0174.html

Edited by ஆகாஷ்

அலோ ஆகாஸ்! என்னய்யா வந்தவுடனேயே கிழுகிழுப்பில இறங்கிட்டீர்.. :D

அலோ ஆகாஸ்! என்னய்யா வந்தவுடனேயே கிழுகிழுப்பில இறங்கிட்டீர்.. :D

என்ன பயரை குளிரப் பண்ணத்தான் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு!

சேவல் கோழி நிலையிலை இருக்கிறவை நல்லவடிவாய் வாசிச்சு பிரயோசனப்படுங்கோ. :lol: .......எனக்கு உது வாசிக்கவே தேவையில்லை.....ஏனெண்டால் நான் உதிலை டாக்டர் பட்ட்டம் எடுத்தவன் :)

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி, நிழலி, ஒழிச்சு நிண்டு பார்த்தது போதும்-வெளியில வாரும்!

  • கருத்துக்கள உறவுகள்

"கின்ஸி" ரிப்போர்ட் (Kinsey Report) பற்றி யாராவது கேள்விப் பட்டிருக்கிறீங்களா? அல்பிரட் கின்ஸி என்பவர் 1940 இலயே இது பற்றி விஞ்ஞான பூர்வமா ஆராய்ந்து சொன்ன ஒரு பெருமகன் :D .

இப்ப அதில்ல நான் சொல்ல வந்தது. 1990 இல் , கோட்டை அடிபாடு உச்சமாக இருந்த நேரம். யாழ் மத்திய கல்லூரி ரொமெய்ன் மண்டபத்தில இருந்த கல்லூரி நூலகம் ஒரு இரவு நேர செல் தாக்குதலால பெரும் சேதமடைந்தது. அடுத்த இரண்டு நாட்கள் மழை வேற அடிச்சுப் பெய்ய, பல அரிய நூல்கள் பாழாய்ப் போயின. இது நடந்து இரண்டு நாட்கள் கழிச்சு நானும் நண்பர்களும் இடிந்த நூலகக் கட்டிடத்தை வேடிக்கை பார்க்கப் போனம். கைவிடப் பட்ட சேதமான நூல்களிடையே தேடிய போது இந்த அரிய நூலான ^_^ கின்ஸி ரிப்போர்ட் என் கையில கிடைச்சது. நனைந்திருந்த அந்த நூலை வீட்டில யாருக்கும் தெரியாம ஒளிச்சு மறைச்சுக் காய வைச்சு பெரும்பாலும் வாசித்தேன். என்ன, அப்ப தியரி மட்டும் தான் - செய்முறை செய்யக் கிடைக்கேல்ல! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பயரை குளிரப் பண்ணத்தான் :lol::lol::lol:

அதுதானே :)

சேவல் கோழி நிலையிலை இருக்கிறவை நல்லவடிவாய் வாசிச்சு பிரயோசனப்படுங்கோ. :lol: .......எனக்கு உது வாசிக்கவே தேவையில்லை.....ஏனெண்டால் நான் உதிலை டாக்டர் பட்ட்டம் எடுத்தவன் :)

குமாரசாமி அண்ணை! எதுக்கும் சாடை மாடையாய் வாசிச்சுப்பாருங்கோ..ஆனைக்கும் அங்கினேக்க அடிசறுக்கிப்போடும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தத் தலைப்பை பேசாப் பொருளில் போட்டிருக்காங்க என்று புரியல்ல. ஒருவேளை இப்படியான தலைப்பில் கருத்தாடுவதை ஆபாசம் கலந்தது என்று நினைக்கிறாங்களோ தெரியல்ல. இருந்தாலும் இந்த தலைப்பை இங்கு இட்ட ஆகாஷுக்கு உள்ள துணிச்சலைப் பாராட்டனும்.

sexuality என்பது ஒரு கல்வி... ஒரு அறிவியல். ஆபாசம் அல்ல. ஆபாசமென்பது இயற்கைக்கு மாறான பாலியல் வெளிப்பாடுகள் செயல்களே ஆகும். sexuality என்பது இயற்கைக்கு முரணான பாலியல் கல்வி அல்ல. அந்த வகையில் இது மகிழ்ச்சிகரமான மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

முன் விளையாட்டு அல்லது foreplay என்பது பாலுறவு சார்ந்த உடற்தொழிலியல்.. உடற்கட்டமைப்பியல் கல்வியில் ஆராயப்பட்ட ஒரு விடயமாகும். ஒரு பரீட்சை எழுதனுன்னா எங்களை தயார் செய்வது போலவே.. உடலையும் மனதையும் பாலுறவுக்கு ஏற்ப நாம் தயார் படுத்த வேண்டும். இன்றேல் பாலுறவு என்பது அங்கு இயற்கைக்கு ஏற்ப நிகழ வாய்ப்பிருக்காது. அந்த வகையில் இந்த முன் விளையாட்டு என்பது ஆண் பெண் இருவரினதும் உடல் மன நிலைகளை பாலுறவுக்கு தயார் செய்யும் ஒரு செயற்பாடு. இதில் ஆபாசம் கிடையாது. இது எமது உடல் எவ்வாறு பாலுறவுக்கு தன்னை தயார் படுத்துகிறது என்பதைச் சொல்லும் ஒரு கல்வியும் கூட.

இந்தக் கட்டுரையில் முன் விளையாட்டு தொடர்பில் முழுமையாக அவர்கள் சொல்லவில்லை. ஒருவேளை அது ஆபாசமாகிடுமோ என்ற பயம் இதை எழுதியவருக்கு இருக்கலாம். ஆனால்.. மனித உடற்கல்வி கற்ற ஒருவருக்கு நிச்சயம் அந்தப் பயம் வராது. காரணம்.. இது மனித உடற்கல்வியில் அடக்கப்படும் ஒரு விடயமாகும்.

முன் விளையாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகம் தம்மை பாலுறவிற்கு உள.. உடல் அளவில் தயார் செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. பெண்களின் உடற்கூற்றியலுக்கு ஏற்ப இது நடைபெறுகிறது. அதற்காக ஆண்களை தயார் செய்யவில்லை என்பது அர்த்தமல்ல. ஆண்களையும் பெண்களுக்கு சமாந்திரமாக அது தயார் செய்கிறது என்பதையே இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

பாலுறவு என்பது.. ஆணின் திருப்திக்கான ஒன்றல்ல.. அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதற்கானது மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் அம்சம். அதை ஞானிகள் விலக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அறிவாற்றலால் அதனிலிருந்தும் விலகிக் கொள்கிறார்கள். ஆனால் சாதாரண மக்களுக்கு அது ஒரு வாழ்வியல் அம்சம். இயற்கையானது. பாலுறவின் போது ஆண் - பெண் இருவரினதும் ஒருமித்த உடல்.. உளச் செயற்பாடுகள் அவசியமாகிறது. இன்றேல் அந்தப் பாலுறவு பூரணமற்றதாகவே இருக்கும். குறிப்பாக பெண்கள் பாலுறவில் ஆண்களால் திருப்தி செய்யப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. காரணம் பல ஆண்கள் பாலுறவு பற்றிய அறிவியலைக் கொண்டிருப்பதில்லை. பாலுறவை ஆபாசமாக எண்ணி அது பற்றிய அறிவியலைக் கூட மக்களுக்கு மறைத்து விடுகின்றனர். இது தவறு. இதன் விளைவு பின்னர் குடும்பங்களின் நலன்களையே பாதிக்கச் செய்கிறது.

பாலுறவின் போது பெண் அவளின் உடற்கூற்றியலுக்கு அமைய ஒப்பீட்டளவில் அதிக நேரத்தை உடல் உள ரீதியில் தன்னை உறவுக்குள் கொண்டு வர எடுக்கிறாள். ஆனால் ஆண்கள் அப்படியல்ல. அவர்கள் குறுகிய காலத்துள்ளேயே அதற்கு தயாராகி விடுகின்றனர். இதன் விளைவால்.. பெண்கள் பொதுவாக பாலுறவின் போது பாலியல் உச்சம் அடைவது குறைவு. அந்த வகையில் இந்த முன் விளையாட்டு என்பது பெண்களுக்கு ஆண்களை விட மிகவும் அவசியமான ஒன்று. அவர்கள் தங்களை உடல் உள அளவில் பாலுறவிற்கும்... பாலுறவு உச்சம் பெறவும் இதனை பயன்படுத்திக் கொள்வார்கள். அது இரு தரப்பினருக்கும்.. உடல் உள அளவில் பாலுறவு திருப்தியையும் மன அமைதியையும் புத்துணர்வையும் அளிப்பதோடு வாழ்க்கையில் பிணைப்பையும் அதிகரிக்கும்.

அந்த வகையில்.. இந்த முன் விளையாட்டு என்பது.. பாலியல் சார்ந்த மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று.

முன் விளையாட்டுக்களில் பல வகைகள் இருப்பினும்.. தொடுகை.. முத்தம்.. உள நிலை தயார்ப்படுத்தல் முக்கியமாகின்றன. தொடுகையில் உணர்ச்சி தூண்டலுக்குரிய உடற்பகுதிகளிலான தொடுகை முக்கியமானது. முத்தமும் அந்த வகையினதே. உள நிலை தயார்படுத்தல் என்பது ஒருவரை ஒருவர் மனம் விட்டு தங்களின் பாலுறவிற்கான உணர்ச்சித் தேவைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுதல். இவை சரியாக நிகழும் போது ஆண்.. பெண் இருவரும்.. உடல் உள நிலையில் தம்மை பாலுறவுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்காக இயற்கைக்கு மாறான.. ஆபாசத்தனமான.. உடலுக்கும் உளத்துக்கும் பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய வழிமுறைகளை பின்பற்றுதல்.. கூடாது. அவை ஆபத்தானவை. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் தங்களது நேரத்துக்கு

எனக்குத்தேவையற்றதாக இருந்தபோதிலும்.............

நமக்கெல்லாம் காற்றுப்பட்டால்

மூச்சுப்பட்டால்

கால் நுனிபட்டால்.... தயார் இருபகுதியும்.

இதற்கு முதலில் அன்புவேணும். ஒருத்தரை ஒருத்தர் விரும்பணும்.

இவையில்லாத கலவி வற்புணர்வுதான். எந்த சுகமும் இல்லை. :wub::wub::wub:

இப்படியான விவாதங்களுக்கு நெடுக்கு அண்ணர் கட்டாயம் ஆஜராகிவிவார்! :lol:

கு. சா வும் தான். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விவாதங்களுக்கு நெடுக்கு அண்ணர் கட்டாயம் ஆஜராகிவிவார்! :lol:

கு. சா வும் தான். :lol: :lol:

பாடத்தில் படிச்சதை பரீட்சை செய்ய மட்டுமல்ல பாவிக்கிறது. சமூகத்தை தன்னை வழி நடத்தவும் அறிவூட்டமும் பாவிக்கனும். அப்படி பாவிக்கப்படாத படிப்பு எதற்கு. அது எதற்கும் உதவாத ஒரு படிப்பு. வெறும் மட்டையை வைச்சிருந்து என்ன செய்ய முடியும். நான் பெற்ற மட்டையள் எங்க இருக்கென்றே எனக்கு தெரியாது. ஆனால் படிச்ச படிப்பு மூளையோட என் கூடவே இருக்குது. :):D

கு.சாண்ணா அனுபவத்தால செய்முறையில படிச்சதைச் சொல்லுறார். நான் பாடத்தில ஆராய்ச்சிகள் கண்டுபிடிச்சுச் சொன்னதைச் சொல்லுறன். நிச்சயமா நான் உங்களுக்கு அண்ணன் இல்ல. தம்பி. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பொழுது ஏன் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்ற பழமொழி ஞாபகம் வருது............ :(

பெரும்பான்மையான ஆண்கள் அதிகளவு புறவிளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை. காரணம் தனது உணர்சிகளை தீர்த்து விடவேண்டுமென்ற அவசரம். வெறும் bang bang thank you mam எனும் கோழிப் புணர்ச்சிதான். இதனால் பெண்களுக்கும் உடலுறவில் திருப்தி கிடைப்பதில்லை. ஆண்களும் அரை குறை இன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.

நிறைய நேரம் மெல்ல மெல்ல முனவிளையாட்டுக்களில் ஈடுபட்டு பின்பு உடலுறவில் ஈடுபடும் பொழுதே அதிகளவு சந்தோசமும் திருப்தியும் கிடைக்கிறது.

இந்த நிதான நிலையை அடைய ஆண்களுக்கு சில காலம் எடுக்குமென நினைக்கிறேன்.

உணவை ரசித்து ருசித்து, மெல்ல மெல்ல அனுபவித்து உண்பது மாதிரிதான் உடலுறவும்.

கு.சாண்ணா அனுபவத்தால செய்முறையில படிச்சதைச் சொல்லுறார். நான் பாடத்தில ஆராய்ச்சிகள் கண்டுபிடிச்சுச் சொன்னதைச் சொல்லுறன். நிச்சயமா நான் உங்களுக்கு அண்ணன் இல்ல. தம்பி. :D:lol:

எப்படி சொல்கிறீர்கள்? அது போகட்டும் - நீங்கள் அனுபவங்களில் பெரியவர் போல இருக்கு.

எனக்கு இப்பதான் 18 வயசாச்சுது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சொல்கிறீர்கள்? அது போகட்டும் - நீங்கள் அனுபவங்களில் பெரியவர் போல இருக்கு.

எனக்கு இப்பதான் 18 வயசாச்சுது! :lol:

படிச்சதால வந்த அறிவு... அனுபவம் அல்ல. இரண்டுக்கும் இடையில் வேறுபாடுண்டு. எனக்கு இப்ப தான் 16 முடியுது..! :lol::D

சரி சரி, நிழலி, ஒழிச்சு நிண்டு பார்த்தது போதும்-வெளியில வாரும்!

அடப் பாவிகளா.... என்னை நல்லத்தான் புரிஞ்சு வைத்து இருக்கின்றார்கள் கள உறவுகள்..

.இப்ப வேலையில் நிற்பதால் இதுகளை வாசிச்சுப் போட்டு பக்கத்தில் இருப்பதுகளுடன் தான் இந்த முன் விளையாட்டை ஆட வேண்டி வந்து விடும்...வீட்டை போய் எழுதுறன்

படிச்சதால வந்த அறிவு... அனுபவம் அல்ல. இரண்டுக்கும் இடையில் வேறுபாடுண்டு. எனக்கு இப்ப தான் 16 முடியுது..! :lol::D

பதினாறிலேயே இவ்வளவு விஷயம் தெரியுமா? :lol: :lol:

சரி, இனி நெடுக்கர் என்றே அழைக்கிறேன். :lol:

அடப் பாவிகளா.... என்னை நல்லத்தான் புரிஞ்சு வைத்து இருக்கின்றார்கள் கள உறவுகள்..

.இப்ப வேலையில் நிற்பதால் இதுகளை வாசிச்சுப் போட்டு பக்கத்தில் இருப்பதுகளுடன் தான் இந்த முன் விளையாட்டை ஆட வேண்டி வந்து விடும்...வீட்டை போய் எழுதுறன்

வேலையும் போய் அடியும் வாங்க வேண்டிவரும் - கவனம் கண்டியளோ. :lol:

  • தொடங்கியவர்

எனக்கு கிட்டி புள் விளையாட்டில் முன் அனுபவம் இருக்கு .. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பான்மையான ஆண்கள் அதிகளவு புறவிளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை. காரணம் தனது உணர்சிகளை தீர்த்து விடவேண்டுமென்ற அவசரம். வெறும் bang bang thank you mam எனும் கோழிப் புணர்ச்சிதான். இதனால் பெண்களுக்கும் உடலுறவில் திருப்தி கிடைப்பதில்லை. ஆண்களும் அரை குறை இன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.

நிறைய நேரம் மெல்ல மெல்ல முனவிளையாட்டுக்களில் ஈடுபட்டு பின்பு உடலுறவில் ஈடுபடும் பொழுதே அதிகளவு சந்தோசமும் திருப்தியும் கிடைக்கிறது.

இந்த நிதான நிலையை அடைய ஆண்களுக்கு சில காலம் எடுக்குமென நினைக்கிறேன்.

உணவை ரசித்து ருசித்து, மெல்ல மெல்ல அனுபவித்து உண்பது மாதிரிதான் உடலுறவும்.

அடிபட்ட காய் ஒண்டு.........எக்கச்சக்கமான அனுபவம் நாலைஞ்சு எழுத்திலேயே தெரியுது fuma.gif

  • கருத்துக்கள உறவுகள்

அடிபட்ட காய் ஒண்டு.........எக்கச்சக்கமான அனுபவம் நாலைஞ்சு எழுத்திலேயே தெரியுது fuma.gif

அடிபட்ட விதை :wub:

அடிபட்ட காய் ஒண்டு.........எக்கச்சக்கமான அனுபவம் நாலைஞ்சு எழுத்திலேயே தெரியுது fuma.gif

அப்படியெல்லாம் இல்லையண்ணை.

எல்லாம் வெறும் புத்தகப் படிப்புத்தான். :D

சேவல் கோழி நிலையிலை இருக்கிறவை நல்லவடிவாய் வாசிச்சு பிரயோசனப்படுங்கோ. :lol: .......எனக்கு உது வாசிக்கவே தேவையில்லை.....ஏனெண்டால் நான் உதிலை டாக்டர் பட்ட்டம் எடுத்தவன் :)

தலையங்கத்தில் சின்ன பெடி பெட்டைகளுக்கு மட்டும் என்று போட்டிருக்க வேண்டும்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

உந்த முன் விளையாட்டடை பற்றி சொல்வதென்றால் முழுமையாக சொல்ல வேண்டும் :unsure::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.