Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தளத்தினை மூடி விடுதல்??????????

Featured Replies

  • தொடங்கியவர்

இது ஒன்றும் விளங்காத்தனமான தலைப்பு அல்ல. நெல்லையனின் உள்நோக்கங்களைச் சொல்லும் தலைப்பாகக் கூட எடுக்கலாம்.

... சிறி, .. பல்லி சொன்னதாக எழுதுதினேன், புரியவில்லை? ... அதற்கு மேல் ... சொல்வதானால் ... இத்திரியை தொடங்கிய அன்றே, ஓர் மட்டு தூக்கியது, அத்துடன் வேறு சிலதுகளையும்!!!! ஆனால் நேற்று மீண்டும் ... இங்கு!!!! ... புரிந்தால் ..???

இத்திரியில் ... ஓர் கேள்வியே தலைப்பாக இருந்தது, மாறாக மூடுங்கள் என்ற கோரிக்கையா விடப்பட்டது???? ... ஏதோ சொல்ல வேண்டும் என்று பட்டதை மறைமுகமாக எழுதுதினேன் ... யாழை எவ்வாறு தொடர செய்யப்போகிறீர்கள் என்று?? ... மோகனின் சுமைகளையும் பகிர்ந்து கொண்டு செல்லப்போகிறீர்கள் என்று??? .... அது கூட விளங்கிக் கொள்ளப்படாமல் ... சீனா/இந்திய/ரஷ்ய உளவுத்துறையுடன் சேர்ந்தியங்கும் நெல்லை, யாழை மூட சதி ... என்றொரு திரியே வந்தது!!!!!!

!!!!

... இனி ஆண்டவனால் தான் ...???

நெல்லையனின் அரசியல் கருத்துக்கள்.. பல தடவைகள் ஒரு தளம்பல் நிலையில்.. சலனத்தன்மையை வெளிக்காட்டி இருக்கின்றன.

. :lol::D

இதற்கு, இதில் பதில் வரும்!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89433&pid=676495&st=0&#entry676495

மற்றும்படி.. எத்தனையோ இடர்களைக் கண்டு வளர்ந்து இன்று ரீன் ஆக இருக்கும் யாழ் களப் பையனை.. யாரும் எதுவும் பண்ண முடியாது. அவன் இப்ப ரீன்..! கருத்துக்கு கருத்தைத் தூக்குவான்.. கத்திக்கு கத்தியை தூக்குவான். :lol::D

.. மலை என்றோம், விருட்சம் என்றோம், ... எப்படியெல்லாம் வர்னிக்க முடியுமோ? அப்படியெல்லாம் ...!!! ... எங்கே இப்போ????

... நெல்லையன் மீது இத்தலைப்பிற்கு, கருத்துப் பிடித்து, துரோகிப்பட்டம் அழித்து மகிழும் அதேவேளை ... யாழை காப்பாற்ற முற்படுங்கள்!!!! ... நீங்கள் தான் இருக்கப் போகிறவர்கள்!!!!!

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழை தேசிய இணையமென்று முத்திரை குத்தி குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட ஒரு திறந்த ஜனநாயக தளமாக வைத்திருப்பதே நல்லது.

பச்சைபுள்ளிக்கு எழுதுபவர்களுக்கு அது தொடர்ந்தும் கிடைக்கும் பயப்பிடவேண்டாம்.

ஜனநாயகம் என்பது ஒன்றும் ஆடு மாடுகளுக்கல்ல. மக்களுக்கு. தமிழ் மக்கள் தங்களின் இன அடையாளத்தை தேசியமாக வரைந்து கொண்டு தங்களின் பூர்வீக நிலப்பரப்பில் வாழ்வதற்கு உரிய உரிமையை நிலைநாட்டுவதற்கும்.. தமிழ் மக்கள் ஜனநாயகத்தை ஒரு கருவியாக்கி தங்களை பரிபாலனம் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அறியாத அறியாமையின் வெளிப்பாடே இது ஆகும்.

ஜனநாயகம் என்பது இனத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றல்ல. அது ஒரு ஆட்சி முறைமை. ஒரு இனம்.. தனக்கான ஆட்சி உரிமையை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே அது தனக்கான ஆட்சி முறைமையை தீர்மானிக்க முடியும். இன்று தமிழ் மக்கள் சிங்கள தேசிய இன அடையாளத்தின் கீழ் சிங்கள இனத்தின் சோசலிச ஜனநாயக ஆட்சி முறைமையின் கீழ் தான் உள்ளனர். அதுவல்ல.. தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கை. அது தனது தேசிய இனத்தை தான் தனது விருப்புக்கு வேண்டிய உரிமைகளோடு.. தனது நிலத்தில் தானே தன்னைப் பரிபாலனம் செய்ய விளைகிறது... அதில் ஜனநாயகம் ஒரு கருவியாக முடியும். ஆனால் ஜனநாயகமே அந்த இனத்தின் இருப்புக்கான உரிமையை நிலைநாட்ட முடியாது. இந்த வேறுபாட்டை முதலில் தெளிவாக உள்வாங்கிவிட்டு அரசியல் பேச வருவது நன்று. இல்லை என்றால் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது மேல்...! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

... நெல்லையன் மீது இத்தலைப்பிற்கு, கருத்துப் பிடித்து, துரோகிப்பட்டம் அழித்து மகிழும் அதேவேளை ... யாழை காப்பாற்ற முற்படுங்கள்!!!! ... நீங்கள் தான் இருக்கப் போகிறவர்கள்!!!!!

உங்களின் தேவை உள்நோக்கத்தை இனம் காட்ட இந்த ஒன்றே போதும். பெரு விருட்சமாக வளர்ந்திருந்த.. படர்ந்திருந்த சோவியத் யூனியன் உடைந்து போன போது.. ரஷ்சியா என்ற தேசம் குறுகி அடிமைப்பட்டா போனது இல்லையே. அதேபோல் தான்.. தமிழ் தேசிய இனம்.. விடுதலை புலிகள் என்ற பெரு விருட்சத்தின் பாதுகாப்பில் இருந்து தற்காலிகமாக விடுபட்டிருந்தாலும்.. அதற்கு அந்த அமைப்பு அளித்த நிழல் இன்றும் பாதுகாப்பளிக்கிறது. அதேபோல் அந்த இனம் தன்னை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றலை அந்த இயக்கம் விதையாக்கி விட்டுள்ளது. அது அந்தப் பெரு விருட்சத்தின் இருப்பின் பலனாகும். இதனை உணரத் திரானி அற்றவர்கள்.. விடுதலைப் புலிகளின் இராணுவ பல வீழ்ச்சி என்பதை அவர்களின் ஒட்டுமொத்த வீழ்ச்சியாகவும்.. தமிழர்களால் எனி எதுவும் ஆகாது எதிரிக்கு அடிபணிவதே மேல் என்ற தொனியிலும் எழுதித் திரிய பயன்படுத்துகிறார்கள். இது எதிரிக்கு தமிழினத்தை அடிமைப்படுத்தும் செயல்களில் ஒன்று என்பது தெளிவு.

ஆனால் உண்மை அதுவாக இருக்க முடியாது. பெரு விருட்சம் ஒன்று இருந்ததற்கான அடையாளம் அது விதைத்துள்ள விதைகளின் பரம்பலில் தான் உள்ளது. ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான வரலாறு அவன் விதைத்துள்ள சந்ததிகளில் தங்கி இருப்பதற்கு ஒப்பானது இது. அதே நிலை தான் விடுதலைப்புலிகளினதும். அந்த விருட்சம் வேரோடு சாய்ந்து விட்டது என்பதிலும்.. அதன் விதைகள் உலகெங்கும் பரம்பி இருக்கிறது என்பதே யதார்த்தம்..! அன்று ஒரு பிரபாகரனுக்குள் இருந்த எண்ணக் கரு இன்று 12 கோடி தமிழர்களின் எண்ணங்களில் இருக்கிறது. அங்கு தான் புலிகள் என்ற அமைப்பு இன்னும் வீழாது வாழ்ந்து கொண்டிருக்கிறது..! இதுதான் அண்ணன் திலீபனில் இருந்து தேசிய தலைவர் வரை எதிர்பார்த்த மாற்றம். அது ஈட்டப்பட்டே இருக்கிறது. அது வெற்றியே ஆகும்.

நான் ஒன்றில் மிகத் தெளிவாக இருக்கிறேன்.. துரோகி என்ற பதத்தை பாவிக்கும் போது நான் அதற்கு தெளிவான வரையறையை வரைந்து கொண்டு விட்டுத்தான் அதனைப் பாவிக்கிறேன். நான் உங்களை இந்த இடத்தில் எங்கும் துரோகி என்று அழைத்துக் கொள்ளவில்லை. மாறாக நீங்கள் ஒரு அரசியல் தெளிவற்ற நிலையில் இருப்பதையே சுட்டிக்காட்டி இருக்கிறேன். இரண்டிற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயகம் என்பது ஒன்றும் ஆடு மாடுகளுக்கல்ல. மக்களுக்கு. தமிழ் மக்கள் தங்களின் இன அடையாளத்தை தேசியமாக வரைந்து கொண்டு தங்களின் பூர்வீக நிலப்பரப்பில் வாழ்வதற்கு உரிய உரிமையை நிலைநாட்டுவதற்கும்.. தமிழ் மக்கள் ஜனநாயகத்தை ஒரு கருவியாக்கி தங்களை பரிபாலனம் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அறியாத அறியாமையின் வெளிப்பாடே இது ஆகும்.

ஜனநாயகம் என்பது இனத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றல்ல. அது ஒரு ஆட்சி முறைமை. ஒரு இனம்.. தனக்கான ஆட்சி உரிமையை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே அது தனக்கான ஆட்சி முறைமையை தீர்மானிக்க முடியும். இன்று தமிழ் மக்கள் சிங்கள தேசிய இன அடையாளத்தின் கீழ் சிங்கள இனத்தின் சோசலிச ஜனநாயக ஆட்சி முறைமையின் கீழ் தான் உள்ளனர். அதுவல்ல.. தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கை. அது தனது தேசிய இனத்தை தான் தனது விருப்புக்கு வேண்டிய உரிமைகளோடு.. தனது நிலத்தில் தானே தன்னைப் பரிபாலனம் செய்ய விளைகிறது... அதில் ஜனநாயகம் ஒரு கருவியாக முடியும். ஆனால் ஜனநாயகமே அந்த இனத்தின் இருப்புக்கான உரிமையை நிலைநாட்ட முடியாது. இந்த வேறுபாட்டை முதலில் தெளிவாக உள்வாங்கிவிட்டு அரசியல் பேச வருவது நன்று. இல்லை என்றால் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது மேல்...! :)

அச்சா பிள்ளை :rolleyes:

இதுவெ எனது கருத்தும் அதனாலை எழுதி மினக்கெடாம நான் ஒரு பச்சை குத்திவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழை காப்பாற்ற முற்படுங்கள் என்று பகிரங்கமாகவே யாழை இவர் எச்சரிப்பதாக இருக்கிறது சோ யாழ் கள நிர்வாகம் இவரை உடணடியாக தடை செய்ய வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

யாழை தேசிய இணையமென்று முத்திரை குத்தி குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட ஒரு திறந்த ஜனநாயக தளமாக வைத்திருப்பதே நல்லது.

பச்சைபுள்ளிக்கு எழுதுபவர்களுக்கு அது தொடர்ந்தும் கிடைக்கும் பயப்பிடவேண்டாம்.

உங்களுக்கு தேனி, தேசம் தேசிய இணையமாக இருக்கலாம்.(யாழில் நீங்கள் கூறியுள்ளீர்கள்)அதற்காக எல்லோருக்கும் அவை தேசிய இணையமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சிறு பிள்ளைத்தனம்.அதை விட சிறுபிள்ளைத்தனம் உந்த பச்சைகளை எண்ணுவது. :lol:

  • தொடங்கியவர்

யாழை காப்பாற்ற முற்படுங்கள் என்று பகிரங்கமாகவே யாழை இவர் எச்சரிப்பதாக இருக்கிறது சோ யாழ் கள நிர்வாகம் இவரை உடணடியாக தடை செய்ய வேண்டும்....

http://www.youtube.com/watch?v=MyqD84RXKGI36_1_4.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாழை தேசிய இணையமென்று முத்திரை குத்தி குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட ஒரு திறந்த ஜனநாயக தளமாக வைத்திருப்பதே நல்லது.

பச்சைபுள்ளிக்கு எழுதுபவர்களுக்கு அது தொடர்ந்தும் கிடைக்கும் பயப்பிடவேண்டாம்.

நீங்கள் ஆயிரம் ஆறுதல் சொல்லலாம்...................

ஜனநாயகம் என்றால் உடம்மெல்லாம் பதறுது........................ அந்தளவிற்கு ஜனநாயகத்தை அனுபவித்துவிட்டோம்!

பச்சைபுள்ளி போடுவீங்களா ஐசா.............. நன்றிங்கோ! அதைவித்துத்தான் தற்போது எமது வாழ்கையே ஓடுது.

முள்ளிவாய்க்காலுக்கப்புறம் ஒரு மயான அமைதி,யாழ்களத்தில் நிலவுகிற்து...எல்லாரும் கதை சொல்றாங்க, நான் மட்டும் சொல்லகூடாதா என்ன? நீங்க யாரும் கேட்கலைன்னாலும்.........நானு சொல்லித்தான் ஆவேன்! ஐயோ பாவம் நீங்க!!

முள்ளிவாய்க்காலுக்கப்புறம் ஒரு மயான அமைதி,யாழ்களத்தில் நிலவுகிறது!

கர்ப்ப்மாயிருந்த ஒரு தாய் தன் பிரசவ நேரத்துல ,உயிர்போகுற வேதனையில மரண அலறல்பட்டாலும்...தன்னை அம்மான்னு கூப்பிட ஒரு உசுரு வருதேன்னு சந்தோசமா அத தாங்கிகொள்வாளே!

அது நம்ம தாயக மக்கள்!

தன்பேர் சொல்ல ஒரு வாரிசு வருதேன்னு சந்தோசம் ஒருபுறம் ........ ,

என்னதான் பிரசவவேதனை தன்க்கு இல்லாவிட்டாலும் ,அவளைவிட, மனசால் மரணவேதனை அனுபவித்து ஆஸ்பத்திரி விறாந்தில் குறுக்கவும் நெடுக்கவும் அலைவானே அந்தபொண்ணோட கணவன்!

அது நம்ம புலம்பெயர் மக்கள்!

எதிர்பார்ப்புக்கள், துயரங்கள், சந்தோசதருணத்திற்கான காத்திருப்புக்கள்...இத்தனையும் ஒருங்கு சேர அமைந்து இருந்த நேரத்துல , குழந்தை இறநதே பிறந்தது என்று மருத்துவர் சொன்னால்.......என்னாகும் மன நிலை?

அது முள்ளீவாய்க்கால்!

என்னதான் அடி பலமாய் விழுந்தாலும்...அழுகயை மறைத்துக்கொண்டு "ஹையா எனக்கு வலிக்கலியே"ன்னு போக்கு காட்டுற நிலமை!

இது இப்போதைய யாழ்களத்தின் நிலைமட்டுமல்ல..எம்மில பெரும்பாலானோரின் நிலையும் அதுதான்!

ஏறக்குறைய 2009 மே க்கு அப்புறம்...யாழ்களம் ,வெளிப்படையாக அறிவிக்கப்படாத ,ஒரு இணையஅரட்டைதளமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதே என் மனசுக்கு எட்டுற யதார்த்தம்!

அதன் தொடர்ச்சியாகவே......நிமிடத்துக்கு நிமிடம் நெல்லையன் ஆரம்பிக்கும் இந்த காமடி தலைப்புக்களை கண்டும் காணாமல் நிர்வாகம் இருப்பதும்னு சொல்லிக்கலாம்!

புலிகள் தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்கிறகாலம் இறந்து ,

இப்போ புலிகளுக்கு யார் ஏகபிரதிநிதிகள்?

என்பதில்தான் தினமும் புடுங்குப்பாடு எங்கிறது ...அருவெருப்பாயிருந்தாலும் ,சகித்துக்கொள்ளவேண்டிய நிஜம்!

Edited by arivili

60938main_ozone_hole.jpg

தேடற்கவியின் உழல்வை

இதயக்குழி உள்வாங்க

உயிர்ப்பின் மூச்சு

ஓசோன் ஓட்டையாக…

காலம் எழுதியின் கவனப்பிழை

கருப்பைச் சுவர்களில் விசமுட்களாய்…

தரித்த குளவியின் பாதி உடல்

சீழ்கட்டிப் போய் சிகிலமாக…

பிணவாடை, கொள்ளை கோமாரி

ஐயோ….

பச்சை உடம்புக்காரி படுக்கையிலே….

காலம் எழுதியை அழைத்து வருவீர்.

வனையும் சூட்சுமத்தை வசீகரித்து

கால் செருப்பாக்கி

கொப்பளிக்கும் கானல் வெளியில்

கிடந்துழலும் மனிதர்களின்

வேதனையை உணர்த்த வேண்டும்.

பாழும் உலகிடையே வாழக் கேட்டு

வெட்கங்கெட்டுக் கிடக்கும் ஆறாம் அறிவு

தேவையற்றதாகத் தீர்மானிக்கப்பட்டாயிற்று.

த்தூ…..

மண்ணாங்கட்டிகளே! குந்தியிருந்து

மணிக்கணக்காப் பேசுக.

எங்கே எவர் தலையில்

குண்டுகளைக் கொட்டலாம்?

இன்னும் குற்றுயிராய், குலையுயிராய்

துடிதுடிக்க வதைத்தழித்து

மந்தைப் பட்டிக்குள் போட்டு மேய்க்க

எந்தச் சனியனுக்குத் திட்டமிருக்கோ

அங்கின போய்க் கொஞ்சிக் குலவுக.

பொட்டைக்கண்களுக்கு

அசோக மலர்களிடம் அடங்காத ஆசையோ?

இத்தொப்பி எவருக்கென்று

தொல்பொருள் ஆராய்ச்சி தேவையில்லை

காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்

கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?

கோல விளக்கொளியில் கோலோச்சி வந்த மக்கா!

ஆட்சிக் கதிரைக்கு ஆளாய் பறந்து

அன்னை தமிழுக்கு ஆலவிசம் தந்தனையே….

போதுமப்பு உன் நடிப்பு.,

எல்லை தாண்டி வந்த கேடி

உயிரறுத்து துவசம் செய்தான்.

பள்ளி முதல் பங்கர்வரை

பாழ்படுத்திப் போனான்.

உயிர் கிடந்து உழன்றதனால்

ஊனத்துடன் அழுதலைந்தோம்.

விட்டானா?...

கந்தகக்குண்டுகளில் நஞ்சிருத்தி

கொன்றொழித்தான்

சந்ததி முழுவதையும்

சகதிக்குள் புதைய வைத்தான்.

மந்தைகளாய் அடைத்துள்ளான்.

அவன் சமபந்தி வைப்பானாம்.

சந்தர்ப்பம் பார்த்து சர்ப்பங்கள் ஆடுகின்றன.

வெந்து கிடக்கிறது உள்ளம்.

மீளத் தெளிவு

மிடுக்கெடுத்த நிமிர்விற்காய்

காலமுட்கள் கைநீட்டுகின்றன.

ஒரு இழவும் புரியல .. சஹாரா சகோதரம்! ஏதாச்சும் புரியுறமாதிரி எழுதினா குறைஞ்சா போயிடுவீங்க? :unsure:

முள்ளிவாய்க்காலுக்கப்புறம் ஒரு மயான அமைதி,யாழ்களத்தில் நிலவுகிறது!

அபாரமான சிந்தனை. !

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாழில் ஆயுத மோதல் இல்லாததை குறிப்பிடுகிறார் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

60938main_ozone_hole.jpg

காலம் எழுதிதான் கவனப்பிழை விட்டானென்றால்

கந்தறுந்த மனிதமுமா கண் கெட்டுக் கிடக்கிறது?

அக்கா.. :huh: வேணாம்.. :unsure:

அப்புறம் அழுதிருவன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் பொல்லை கொடுத்து அடி வேண்டியிருக்கார் :lol: :lol:

சற்று சிந்திக்க வேண்டியுள்ளது :unsure:

வணக்கம் முனிவர்ஜி . நீண்ட நாட்களுக்கு அப்புறம் என நினைக்கிறேன். எப்படி இருக்கிறீர்கள்.

ஜனநாயகம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அலர்ஜி.

ஊசி அடித்து வளர்த்துவிட்டார்கள் மாறுவது கஸ்டம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயகம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அலர்ஜி.

ஊசி அடித்து வளர்த்துவிட்டார்கள் மாறுவது கஸ்டம்தான்.

அண்ணை நீங்களும் ஊசி அடிச்ச மாதிரித்தானே கதைக்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. :huh: வேணாம்.. :unsure:

அப்புறம் அழுதிருவன்..! :lol:

இசை நீங்கள் மட்டுமில்லை இன்னும் இரண்டுபேர் அழுவதற்குப் பச்சைப்புள்ளி குத்தியிருக்கிறார்கள். சரி நான் எழுதவில்லை. :(

ஒரு இழவும் புரியல .. சஹாரா சகோதரம்! ஏதாச்சும் புரியுறமாதிரி எழுதினா குறைஞ்சா போயிடுவீங்க? :unsure:

புரிந்து கொள்வதற்கு எவராலும் முடியாது.... புரிந்து கொள்ளக்கூடியமாதிரி எழுதவும் என்னால் இயலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை நீங்கள் மட்டுமில்லை இன்னும் இரண்டுபேர் அழுவதற்குப் பச்சைப்புள்ளி குத்தியிருக்கிறார்கள். சரி நான் எழுதவில்லை. :(

புரிந்து கொள்வதற்கு எவராலும் முடியாது.... புரிந்து கொள்ளக்கூடியமாதிரி எழுதவும் என்னால் இயலாது.

ஆஹா அப்போ அக்காச்சி ........................இடிவீழ்ந்து பூ சருகானதே(??) என்னு எழுதிய கவிபேரரசு(??!) வைரமுத்துபோல ............பெரிய கவிபேரரசி என்னு சொல்லவர்றாங்கப்போ! :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர்ஜி . நீண்ட நாட்களுக்கு அப்புறம் என நினைக்கிறேன். எப்படி இருக்கிறீர்கள்.

நான் நல்ல சுகம் :) ஈஸ் நீங்கள் எப்படி?

ஐயாயிரம் அங்கத்தவர்கள் இருக்கும் போது நெல்லையன் கட்டைகளை கொடுத்துவிட்டார் இப்ப யார் யார் அவருக்கு ஆப்பை இறுக்க போகிறார்களோ?

  • தொடங்கியவர்

ஐயாயிரம் அங்கத்தவர்கள் இருக்கும் போது நெல்லையன் கட்டைகளை கொடுத்துவிட்டார் இப்ப யார் யார் அவருக்கு ஆப்பை இறுக்க போகிறார்களோ?

... முனிவர் கட்டையை கொடுத்ததால் ... இப்ப வயித்தாலை போய்க்கொண்டிருக்குது!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அலர்ஜி.

ஊசி அடித்து வளர்த்துவிட்டார்கள் மாறுவது கஸ்டம்தான்.

அந்தளவிற்கு ஜனநாயகம் கொடிகட்டி பறக்கிறது...............

எங்கே அது இருக்கிறது என்று எழுதினால் ஒரு விசிட்டாக நாமும் போய் ஒருக்கால் பாத்துவிட்டு வந்து உங்களைபோல ஓகோ ஆகா என்று எழுதலாமே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.