Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்றிலும் எதிர்பாராமல் சந்தித்த மனதில் பதிந்து விட்ட சில காட்சிகள்

Featured Replies

1

ரொறன்ரோவின் பரபரப்பான வணிக மையத்தின் சனநெரிசல் மிகுந்த ஒரு சந்தியில் ஒரு வீடற்ற மனிதர் மெத்தை ஒன்றினைப் போட்டுப் படுத்திருந்தபடி போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவப்பு விளக்குப் பச்சையாவதற்காக நானுட்பட ஒரு சில நடை பயணிகள் அச்சந்திப்பில் காத்திருந்தோம். நாங்கள் அனைவருமே படுத்திருந்த மனிதனின் கால் மாட்டில் தான் நின்றிருந்தோம் என்றபோதும் அவரது மெத்தைக்கு மிக அருகாமையில் நின்றிருந்தவர் ஒரு பெண்.

வெள்ளையின, முப்பது வயது மதிக்கத் தக்க, கோர்ப்ப்றட் பெண்மணி ஒருவரை உங்கள் கற்பனைக்கு எட்டியவரை டாம்பிகமான கோர்ப்பறெற் உடையில் கற்பனை செய்து கொள்ளுங்கள். மெத்தையில் படுத்திருந்த வீடு அற்ற மனிதரின் கால்மாட்டில் அம்மனிதரின் மெத்தையில் தொட்டும் தொடாமலும் இப்பெண்மணி நின்றிருந்தார். அப்போது திடீரென அடக்கமுடியாமல் சிரித்த அந்த வீடற்ற மனிதர் பின்வருமாறு கூறினார்: “Look at her standing in my bedroom....Peeping Susan!!”

2

எத்தனையோ வீடற்றவர்களை கண்டிருந்தபோதும் முதல் முதலில் கனடாவில் ஒரு தமிழரை அவ்வாறு பார்த்தபோது என்னை அறியாது என் கால்கள் நின்றன. எனினும் தமிழர் தமிழரல்லாதவர் போன்ற அடையாளங்களைக் கிரகிக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை என்பது சில நொடிகளில் புரிந்தது. மனநிலை பிறழ்கையில் உருவாகும் மனிதம் சிந்திக்க வைத்தது. இன்று வரை ஏனோ அந்தத் தமிழரின் முகம் நினைத்த மாத்திரத்தில் மனத்திரையில் வந்து விடுகிறது.

3

ஜெயமோகனின் ஏதோ ஒரு கதையில் கசாப்புக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் ஆடு மாடுகளின் வெட்டப்பட்ட தலையில் திறந்திருக்கும் கண்களில் சாவின் சூட்சுமம் வெளிப்படுமோ என்ற தொனியில் ஒரு விடயம் இடம்பெற்றிருந்தது. இதை வாசித்த மாத்திரத்தில் இறந்த தலைகளின் கண்களைத் தொழில் நுட்பம் ஏதாவது வகையில் பரிசீலித்துக் கடைசிக்கணங்களின் அறிதல்கள் எதையேனும் அடைவது சாத்தியமாக என்று ஏதேதோ கோணத்தில் எனக்குள்ளும் கற்பனை கரையுடைத்தது. அப்படியே யோசித்தபடி நடந்து கொண்டிருக்கையில் எதிர்பாரா வகையில் ஒரு வாகனம் நான் நடந்து கொண்டிருந்த நடைபாதையில் ஏறியது. ஒரு கணம் இதர எண்ணங்கள் அனைத்தும் தடைப்பட்டு நடை ஸ்தம்பித்து உடல் விறைத்து அப்படியே நின்றபோது உரசும் தூரத்தில் வாகனம் ஓய்விற்கு வந்தது. எனது மூளை எனது கண்களை எனக்கு ஞாபகப்படுத்தியது. மனதுள் ஒரு நக்கல் கேட்டது: “சூட்சுமமுமில்லைச் சுக்குமில்லை மிளகுமில்லைப் பயமெடா பங்காளி பயம்”

4

இந்திய இராணுவத்தின் பரா படைப்பிரிவினர் எதிர்பாரா விதத்தில் சூழ்ந்தபோது மூன்று புலி வீரர்கள் அதற்குள் மாட்டியிருந்தார்கள். பொதுமக்கள் எங்களில் இருந்து அவர்களை இராணுவம் நன்றாக வித்தியாசப் படுத்திக் கொண்டது. ஓடுவதற்கான அவகாசம் அவர்களிற்கு இருக்கவில்லை. இராணுவத் துப்பாக்கிகள் நீண்டிருக்க ஒலி பெருக்கியில் சரணடையும்படியான உத்தரவு பிறந்து கொண்டிருந்தது. மூன்று புலி வீரர்களும்--மடித்துக் கட்டிய சறம், கோடு போட்ட சேர்ட், இந்திய இராணுவ காலத்து இயக்க உடை—ஆளிற்கொரு கிறனைட்டைக் கிளிப் களட்டிக் கையில் வைத்துக் கொண்டு மக்களில் இருந்து கணநேரத்தில் பாய்ந்து வயலிற்குள் வெட்டவெளியில் நின்றார்கள். குண்டு வெடித்தால் மக்களிற்கு ஆபத்து வராத தூரம், ஆனால் அவர்களில் எவரிற்கு வெடி விழுந்தாலும் அந்த மூவரில் எவரது உயிரும் மிஞ்சாது. பரா கொமாண்டர் தனது துப்பாக்கியை ஜீப்பில் சாய்த்து வைத்து விட்டு பல அடிகள் முன்னால் தனியாக நடந்து வந்து அவர்களைத் தனக்கு அருகே வருமாறு அழைத்தான். அவர்களும் கிளிப்பை;ப பிடித்படியே அவனிடம் வந்தார்கள். மூவரது தோழ்களையும் ஒவ்வொருவராய் தொட்ட படி வார்த்தையேதும் பேசாது அந்த இந்திய இராணுவத்தினன் அவர்களைச் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்ருந்தான். பின்னர் அவர்களை செல்லுமாறு கூறிவிட்டுத் தனைது படையுடன் ஒரு குண்டு தன்னும் சுடாது சென்று விட்டான்.

நீங்களும் உங்கள் வாழ்வில் எதிர்பாராது சந்தித்த நினைவில் பதிந்து விட்ட சம்பவங்கள் இருந்தால் பதியுங்கள்.

Edited by Innumoruvan

மூவரது தோழ்களையும் ஒவ்வொருவராய் தொட்ட படி வார்த்தையேதும் பேசாது அந்த இந்திய இராணுவத்தினன் அவர்களைச் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்ருந்தான். பின்னர் அவர்களை செல்லுமாறு கூறிவிட்டுத் தனைது படையுடன் ஒரு குண்டு தன்னும் சுடாது சென்று விட்டான்

இப்படி எல்லா ஆயுததாரிகளும் புத்த பகவான் போல் இருந்தால் எப்படியிருக்கும்????????

  • கருத்துக்கள உறவுகள்

----

இந்திய இராணுவத்தின் பரா படைப்பிரிவினர் எதிர்பாரா விதத்தில் சூழ்ந்தபோது மூன்று புலி வீரர்கள் அதற்குள் மாட்டியிருந்தார்கள். பொதுமக்கள் எங்களில் இருந்து அவர்களை இராணுவம் நன்றாக வித்தியாசப் படுத்திக் கொண்டது. ஓடுவதற்கான அவகாசம் அவர்களிற்கு இருக்கவில்லை. இராணுவத் துப்பாக்கிகள் நீண்டிருக்க ஒலி பெருக்கியில் சரணடையும்படியான உத்தரவு பிறந்து கொண்டிருந்தது. மூன்று புலி வீரர்களும்--மடித்துக் கட்டிய சறம், கோடு போட்ட சேர்ட், இந்திய இராணுவ காலத்து இயக்க உடை—ஆளிற்கொரு கிறனைட்டைக் கிளிப் களட்டிக் கையில் வைத்துக் கொண்டு மக்களில் இருந்து கணநேரத்தில் பாய்ந்து வயலிற்குள் வெட்டவெளியில் நின்றார்கள். குண்டு வெடித்தால் மக்களிற்கு ஆபத்து வராத தூரம், ஆனால் அவர்களில் எவரிற்கு வெடி விழுந்தாலும் அந்த மூவரில் எவரது உயிரும் மிஞ்சாது. பரா கொமாண்டர் தனது துப்பாக்கியை ஜீப்பில் சாய்த்து வைத்து விட்டு பல அடிகள் முன்னால் தனியாக நடந்து வந்து அவர்களைத் தனக்கு அருகே வருமாறு அழைத்தான். அவர்களும் கிளிப்பை;ப பிடித்படியே அவனிடம் வந்தார்கள். மூவரது தோழ்களையும் ஒவ்வொருவராய் தொட்ட படி வார்த்தையேதும் பேசாது அந்த இந்திய இராணுவத்தினன் அவர்களைச் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்ருந்தான். பின்னர் அவர்களை செல்லுமாறு கூறிவிட்டுத் தனைது படையுடன் ஒரு குண்டு தன்னும் சுடாது சென்று விட்டான்.

இப்படி எல்லா ஆயுததாரிகளும் புத்த பகவான் போல் இருந்தால் எப்படியிருக்கும்????????

அவர்கள் மற்றாஸ் ரெஜிமென்டை சேர்ந்த தமிழர்களாக இருக்கலாம் புத்தன்.

புத்தருக்கும் மனிதாபிமானத்துக்கும் சம்பந்தமே... இல்லை.

இப்ப இருக்கிற....... காட்டு மிராண்டி சிங்களவனைப் பார்க்கவே வடிவாய் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

அதி காலை நேரம் ஏழு மணி. தனக்கே உரிய கலகலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர் அல்பெர்டன் என அழைக்கப் படும், லண்டனின் உள் நகரவாசிகள்!

புகையிரத நிலையத்தின் முன்பு பாதசாரிகள் வீதிக்குக் குறுக்கே போகும், பச்சை சிவப்பு விளக்குக்களுடன் 'வரிக்குதிரை' அடையாளமிடப்பட்ட இடம்!

நான் ஒரு பிரிப் கேசுடன் அவசரமாக, நடைக்கும், ஓட்டத்திற்கும் இடைப்பட்ட வேகத்தில் வந்து கொண்டிருந்தேன்!

திடீரென ' நிப்பாட்'. நிப்பாட், நிப்பாட் என்று தமிழ்க் குரல்கள் கேட்டன! அவர்களுக்கு நிறை வெறி! (கு.சா.அண்ணை மன்னிக்கவும், இது உங்களிடம் கடன் வேண்டிய வார்த்தை)

தமிழ்ப் பொடியள் மூவர், இரண்டு கால்கள், மூன்று கால்கள், நான்கு கால்களில் வீதியின் குறுக்கே, வாகனங்களுக்குப் பச்சை விளக்கு நேரத்தில் வாகனங்களை நிற்பாட்டி நடந்து கொண்டிருந்தனர்!

நானும், விரைவாக அவர்கள் கண்ணில் படாமல் மறைய எத்தனித்துக் கொண்டிருந்தேன்!

அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, அண்ணை யாவ்ப்பானத் தமிழனை ஒருத்தரும் அசைக்கேலாது! நீங்க என்ன நினைக்கிறியள்?

நீண்ட காலங்கள் ஆகி விட்ட போதும், இன்னும் இந்த நினைவு எனது கண் முன் இன்று நடந்தது போல நினைவிருக்கின்றது!!!

அவள் மார்பின் முக்கால் வாசிக்கும் மேலாக காட்டும் உடையுடன் நின்று கொண்டு இருந்தாள், இடையில் தொங்கிய ஆடையும் முழங்காலுக்கும் மிக மேலாக நின்று பார்ப்பவரை வசீகரித்தது

நின்ற இடம் கொழும்பின் கல்கிசை போலிஸ் நிலையம் அருகில்; என் அருகில் என் காதலி; முழுக்க மூடி இருந்தாள். எம்முடம் பலர் அடுத்த Bus இற்காக காத்து நின்றோம்

அப்போது அங்கு நின்ற ஒரு வயோதிபர் திடீரென மயங்கி வீழ்ந்து வாயில் நுரை கக்கினார்

எனக்கு உடனே உதவி செய்ய மனம் வரவில்லை. என் காதலிக்கும் வரவில்லை; நின்ற மிச்ச ஆட்களுக்கும் வரவில்லை

ஆனால் அந்த கவர்ச்சியாக ஆடை அணிந்த பெண் மாத்திரம் உடனே அந்த வயோதிபரை தன் மடியில் தூக்கி வைத்து சிங்களத்தில் எவரிடமாவது தண்ணி இருக்கா என்று கேட்டாள்; பக்கத்தில் நின்ற ஒருவர் அருகே இருந்த கடைக்கு ஓடிச் சென்றார்; அந்த வயோதிபரின் வாய் நுரை அவளின் ஆடைகளில் பட்டு தெறித்து கிடந்தது

இந்தச் சம்பவம் என்னை மிக பாதித்து அடிக்கடி உறை சித்திரமாக, படிமமாக மனதுள் கிடக்கு;

இப்ப இதை எழுதும் போதும் என் காதலியின் முகத்தை விட அவளின் முகம் தெளிவாக மனதுள் வந்து போகுது

  • கருத்துக்கள உறவுகள்

1. நான் ஒரு குட்டிப் பையனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில். ஒரு நாள் யாழ் நகர் கோட்டையில் இருந்து செல் தாக்குதலை சிங்கள இராணுவம் மேற்கொண்டது. அப்படி ஏவிய செல்களில் ஒன்று நான் பள்ளி விட்டு நடந்து சென்று கொண்டிருந்த தெருவில்.. சற்று தொலைவில்.. தெருமுனைச் சந்தியில் வீழ்ந்து வெடித்தது. நான் செல் கூவி வரும் சத்தம் கேட்டதும் மதிலோடு ஒட்டி நின்று விட்டேன். செல் வெடித்து சிறிது நேரத்தில் முள் குத்துவது போல ஏதோ காலில் குத்தியது. ஒருவேளை மதிலோரத்தில் இருந்த செடியாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே அடுத்த செல் வரப்போகுது என்று எண்ணிக் கொண்டு... வீட்டை நோக்கி ஓடினேன். ஓடும் போது காலில் அணிந்திருந்த சொக்ஸ் ஈரமாகி இருப்பதை உணர்ந்தேன். பார்த்தால் சொக்ஸ் முழுக்க இரத்தம். உடனேயே கத்திக் கூச்சல் போட வீதியால் (யாழ் ஸ்ரான்லி வீதி வரை ஓடி வந்திட்டன்) போன பள்ளித் தோழர்கள் (பெரிய அண்ணாக்கள்).. என்னை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு தான் கண்டேன்.. காலில் ஒரு சிறிய செல் துண்டு தைத்திருந்ததை. அந்தத் துண்டை ஊசி எதுவுமே போடாமல் இழுத்து எடுத்து காயத்துக்கு மருந்து போட்டு கட்டி விட்டார்கள். அது மாற குறைந்தது 4 மாதங்கள் எடுத்தது. அதற்கு போட்ட ஊசிகள்.. ஒரு 25 க்கும் மேல இருக்கும். அதன் வலி அப்போதே போய் விட்டது. ஆனால்.. அதன் வடு என்னோடு எப்போதும் ஒட்டியே விட்டது. நானும் வளர அதுவும் வளருது. அதனோடு சிங்களப் படைகளின் கொடூர செயலின் ஞாபகமும் வளரது.

2. காதலுக்கு உதவி - 1

எங்கள் வீட்டுக்கு அருகில் 3 அக்காமார். அவையளுக்கு தம்பி இல்லாததால்.. நான் செல்லத் தம்பி ஆயிட்டன். ஒரு நாள் இன்னொரு பக்கத்து வீட்டு அண்ணா.. அந்த அக்காமாரின் வீட்டுப் பூனைக் குட்டியோடு நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது என்னிடம் வந்து அந்தப் பூனைக் குட்டியை தரும் படி கேட்க.. நானும் கொடுக்க.. அவர் அதற்கு கழுத்தில் ஒரு மணி கட்டி அனுப்பி விட்டார். பின்னர் சில நாள் கழித்து.. அந்தப் பூனைக் குட்டியின் கழுத்தில் ஒரு காகிதச் செய்தி கட்டப்பட்டு அது உலாவுவது கண்டு... அதனைப் பிடித்துக் கொண்டு போய் அந்த அக்காமாரிடம் கொடுத்தேன். அவர்களும் அதைப் பிரிச்சுப் படிச்சிட்டு.. பேசாமல் இருந்திட்டினம். சில தினங்கள் கழித்துப் பார்த்தேன்.. பூனைக்குட்டியின் முகம் முழுவதும் ஒரே கரி. பூனைக் குட்டி தானா பூசிக் கொண்டதாக அது தெரியல்ல.. யாரோ கரி பூசி விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். பின்னர் தான் கேள்விப்பட்டேன்.. அந்தக் காகிதச் செய்தி பற்றி அந்த அக்காமார் அவையிட அப்பாட்ட சொல்ல.. அவர் போய் அந்த இன்னொரு பக்கத்து வீட்ட அண்ணாவை பேசி இருக்கிறார். அதற்கு பதிலடியாக ஆத்திரத்தில் அழகான அந்தப் பூனைக்குட்டிக்கு கரி பூசி விட்டிருக்கிறார்கள். நான் ரெம்ப ஆசையா விளையாடியது அந்தப் பூனைக்குட்டியோட தான். அது அப்படி ஒரு அழகு. அதனால் இந்தச் சம்பவம் மனதில் நிலைத்திருக்கிறது... அதுவும் இல்லாம இப்படி ஆத்திரத்தில் பூனைக்குட்டிக்கு கரி பூசுவாங்க என்று நான் கனவிலும் எதிர்பார்க்கல்ல. :D

காதல் உதவி - 2

இது ஒரு அண்ணா. அவர் திருமலையில் இருந்து இடம்பெயர்ந்து தொழில் நிமித்தமாக எங்கள் ஊரில் தங்கி இருந்தவர். அவர் எங்களுக்கு அறிமுகமானவரும் கூட. ஒரு நாள் இந்தியப் படைகள் இணுவில் பக்கமாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க.. இவர் நான் சிறியவன் என்ற படியால் இந்தியன் ஆமிக்கு பயந்து மோடார் சைக்கிளில் என்னையும் கூட்டிக் கொண்டு முக்கிய வேலையாக கோப்பாய் போவதாகச் சொல்லிட்டு (எனக்கல்ல.. என் பெற்றோருக்கு).. இணுவிலுக்குள் நுழைந்து விட்டார். இடையிடையே தென்னங் குற்றிகள் போடப்பட்ட வீதித் தடைகள்... ஆனால் யாரையும் காணவில்லை. அவரும் கூலா போய்க்கிட்டிருக்க.. ஒரு ஒழுங்கை வழியாக போகும் போது திடீர் என்று வயல் வெளிக்குள் நிலத்தோடு நிலமாக படுத்திருந்த இந்தியப் படைகள் எங்களை சூழ்ந்து கொண்டு விட்டன. எறிகணை செலுத்திகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அன்று தான் இராணுவம் எறிகணை செலுத்திகளை களத்தில் எப்படி பாவிக்கிறது என்று நேரடியாகக் கண்டேன்.

அதுமட்டுமன்றி அங்கு நின்ற இந்தியப் படைகள் அணிந்திருந்த உடை சற்று வேறானது. அவர்களின் அந்த உடை இராணுவ உடையாக அன்றி.. பழுப்பு நிறத்திலான.. விமானப்படை விமானிகள் அணியும் உடையை ஒத்திருந்தது. எம்மைச் சூழ்ந்து கொண்ட இந்தியப் படைகள் வழிமறித்து என்னை இறங்கி ஓரமாக நிற்க வைத்துவிட்டு அந்த அண்ணாவை விசாரித்தார்கள். அவர் என்னை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போகும் வழியில் இந்தப் பக்கம் நுழைந்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார். அவரின் அடையாள அட்டைகளை பரிசோதித்துவிட்டு.. ஒரு இந்தியன் ஆமிக்காரன் என்னிடம் தமிழில் கேட்டான். நீ பள்ளிக்கூடமா போகிறாய் என்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சும்மா தலையை மட்டும் ஆட்டினேன். அவன் அதனை ஓம் என்று சொல்வதாக எண்ணிக் கொண்டு எங்களை எச்சரித்து வேறு பக்கமாகச் செல்லச் சொல்லி விட்டுவிட்டான்.

அப்புறம் தான் அந்த அண்ணாவிடம் கேட்டேன்.. இப்ப நீங்க எங்க போறீங்க எதற்கு என்று. அவர் சொன்னார் தன் காதலி கோப்பாயில் இருக்கிறாளாம்.. அவளைப் பார்க்க. தனக்கு தனியப் போகப் பயத்தில் தான் என்னை இழுத்துக் கொண்டு வந்தததாக. நானும் அப்பாவியாக அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே.. கோப்பாய் போனம். அடப்பாவிகளா.. காதலியைப் பார்க்கப் போய் என்ன காவு கொடுக்க பார்த்தீங்களேடா.. என்று அப்ப நினைக்கத் தெரியல்ல.. இப்ப நினைக்கத் தோணுது. இப்போதும்.. இந்தச் சம்பவங்கள் கண் முன் நிழலாடுகின்றன.

இப்படி நிறைய இருக்குது. இவை கொஞ்சம் சுவாரசியமானவை என்பதால் பகிர்ந்து கொண்டேன். நன்றி.

Edited by nedukkalapoovan

மாத்தையா அவர்களின் முகமும் அடேல் அன்ரியின் முகமும் மறக்க முடியா ஒரு தருணத்தில் எனக்கு தோன்றி இன்று வரை நினைத்தவுடன் தொடர்கின்றது

கோண்டாவிலில் அமைந்து இருந்த புலிகளின் ... தளம் ஒன்றுக்கு ஒவ்வொரு நாளும் போக வேண்டிய ஒரு தேவையை புலிகளின் குரல் செய்தி பிரிவின் ஒரு பகுதி எனக்கு நியமித்து இருந்தது

என் வேலை ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் புலிகளின் குரல் கரும்பலகை செய்திகளுக்கு வேண்டிய செய்திகளை கோண்டாவில் --- தளத்தில் இருந்து சேகரித்து கொடுப்பதே

அப்ப நான் சின்ன பையன் என்ற படியால் இந்த சின்ன வேலையை புலிகளின் உறுப்பினன் ஆகாத எனக்கு தந்து இருந்தினம். என் ஊடகம் சம்பந்தமான முதலாவது செயலும் இதுதான்

ஒரு முறை பலாலியில் இருந்து அடித்த ஷெல் மழை தின்னைவேலி சந்தை, கோண்டாவில் பஸ் டிப்போ, பல வீடுகள் என்று பதம் பார்த்த அன்று அங்கு போயிருந்தேன். ஆமி அடித்த ஒரு ஷெல் கோண்டாவில் காம்பிலும் வீழ்ந்து பலர் பலியான நாள் அன்று

அந்த காம்ப் மீது ஷெல் விழுந்த விடயத்தை நான் அறிந்து இருக்கவில்லை. போன பின் தான் அறிந்து கொண்டேன்

அப்படியான பரபரப்பு சூழ்நிலையிலும் அன்று மிக சாதாரண உறுப்பினர்களை போன்று திரிந்த மாத்தையா அவர்களையும் அடேல் அம்மையார் அவர்களையும் நேரே பார்க்க மட்டுமன்றி தேனீர் தட்டை கொண்டு சென்று கொடுத்து உபசரித்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் வந்தது.

இன்று இடையில் பல விடயங்கள் நடந்து விட்டன ....ஆனாலும் இவர்கள் இருவரின் முகமும் எப்பவும் மனதில் வந்து போகும் (அன்று அன்ரன் அண்ணாவுக்கும் தேநீர் கொடுத்து இருந்தேன்...)

  • தொடங்கியவர்

யாழ் இந்துவில் மிகச் சிறுவனாகப் படித்துக் கொண்டிருக்கையில், தினமும் யாழ் பஸ்தரிப்பில் இறங்கி ஒரு கும்பலாக பல பெரிய மாணவர்களின் கதைகளைக் கேட்டபடி பள்ளிக்கு நடந்துசெல்வதும் பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து இவர்களின் கதைகளைக் கேட்டபடி பஸ்தரிப்பிற்கு வந்து வீடு செல்வதும் அப்போது வழக்கமாய் இருந்தது.

ஒரு நாள் மாலை எங்கள் பேருந்து மீது ஹெலிகொப்ரர் பல நிமிடம் சரமாரியாய்த் தாக்கியது. ஒரு இயக்க வாகனம் மீது ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் பஸ்சையும் தாக்குதல் வீச்சிற்குள் சேர்த்துக் கொண்டது. பேருந்திற்குள் எவரும் சாகவில்லை என்பதால் சில நிமிடங்கள் கழித்து பேருந்து பயணத்தைச் சாதாரணமாகத் தொடர்ந்தது. மறு நாள் காலையில் தான் செய்தி தெரிந்தது. அன்றைய சம்பவத்தில் நான் வழமையாகச் சேர்ந்து பயணிக்கும் பெரிய வகுப்பு மாணவர்களில் ஒருவர் இறந்திருந்தார் என்பது.

அன்றைய தினம் அந்த பஸ்சில் அவர் ஏறியதே எனக்குத் தெரியாது. பஸ்சின் கதவில் தொங்கிய படி பயணித்துக் கொண்டிருந்தவர் ஹெலி அடிக்கத் தொடங்கியதும் ஓடிச்சென்று ஒரு மதவிற்குள் புகுந்திருக்கிறார், ஹெலி அந்த மதவைத் தகர்க்கையில் அவரும் இறந்து போனார்.

“பசியோட வந்த பிள்ளைக்குச் சன்னத்தை ஊட்டினாங்களோ” என்று அவரின் அம்மா கதறியதான வாசகம் இத்தனை வருடங்களின் பின்னரும் மறக்காமல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பசியோட வந்த பிள்ளைக்குச் சன்னத்தை ஊட்டினாங்களோ” என்று அவரின் அம்மா கதறியதான வாசகம் இத்தனை வருடங்களின் பின்னரும் மறக்காமல் இருக்கிறது.

:o:o:(

எனது மனைவியின் நண்பி ஒருவர்( (அவருக்கு கொஞ்ச வயது) கணவனை விட்டு பிரிந்துவிட்டார்.எனது மனைவி அவரை மறுமணம் செய்ய சொல்லி ஒரே நச்சரிப்பு அவர் தொடர்ந்து மறுத்தே வந்தார்.ஒருநாள் அவர் எங்கள் வீட்டில் இருக்கும்போது தனது பழைய கதையை சொல்லிக்கொண்டுவந்தார்.தான் கம்பஸ் இல் படிக்கும் போது தான் இருந்த வீட்டிற்கு மேல் மாடியில் இருந்த டொக்டர் பெடியன் தன்னை விரும்புவதாக எத்தனையோ முறைகேட்டும் தான் மறுத்துவிட்டதாகவும் பின்னர் இவனை கலியாணம் கட்டி அடிவாங்கவேண்டும் என விதி என நொந்துகொண்டார். நான் பின்னர் படுக்கைக்கு சென்றுவிட்டேன்.அவர்கள் இரவிரவாக கொம்பியுட்டரில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்

மறுநாள் நான் மெயிலை திறந்தால் ஒருமெயில் ரிரேன் பண்ணிருந்தது.

எனது மனைவி அந்த டொக்டர் பெடியனின் பெயரைக்கேட்டு கூகிலில் தேடினால் அதேபெயரில் யாழ்ப்பாணத்தில் ஒரு டொக்டர்.ஈ.மெயில் அட்ரெஸ் வேறு இருந்திருக்கின்றது.எனது ஈ.மெயில் அட்ரெஸ் பாவித்து அவரிடம் சுகம் கேட்டும் -------வின் இன்றைய நிலை பற்றியும் இரண்டுவரி எழுதியிருக்கின்றா.

அது அந்த டொக்டர் அல்ல ஊரில் எனதுஅடுத்தவீட்டுப்பெண்ணின் கணவர். சின்ன ஒரு பிரச்சனையால் அதுவும் என்னால் வந்தது(அது ஒரு அப்படி இப்படியான பெரியகதை) அவர்களுடன் நாங்கள் கதைப்பதில்லை.நல்லவேளை என்ன நடந்ததோ தெரியாது மெயில் திரும்பியிருந்தது.மனைவிக்கு நான் நல்ல பேச்சு அதுவும் எனது ஈ-மெயிலை பாவித்ததற்கு.மனைவிக்கு அந்தகதையில் ஒருபகுதிமட்டும் ஏற்கனவே சொல்லிவைத்திருக்கின்றேன்.கடந்தமுறை ஊருக்கு போகும் போதும் முடிந்தவரை எல்லாவீடுகளுக்கும் போனேன் அந்தவீடு தவிர.4 வருடங்களுக்கு அவர்கள் கனடா வந்தார்கள் அப்போ எனது ஊர் வைத்த பிக்னிக் இல் அவர்கள் தான் சீfப் கெஸ்ட்.அதற்கும் நான் பயத்தில? போகவில்லை.

---------- இப்போ வேறு கல்யாணம் கட்டிவிட்டார் மனைவிதான் செய்துவைத்தார்.

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o:o:(

ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியா செக்குமாடு போல ஒரே இடத்துல தான்யா நிக்குறானுங்க.. ^_^:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனது பள்ளிக் காலம் மானிப்பாய் இந்துவில் எனக்கு முதல் வகுப்பு மாணவன் ஆனால் மானிப்பாய் மெமேறியலில் பாடசாலையில் கராட்டி வகுப்பில் ஒரேவகுப்பு. நல்ல நண்பர்கள். அவன் வீட்டிற்கு நானும் என்வீட்டிற்கு அவனும் வந்துபோவான். அவன் புளொட்டிற்கும் நான் புலிக்கும் போனோம். அதன்பிறகு அவனது செய்திகள் மட்டும் கிடைக்கும் .அவன் இந்தியாவிலேயே இருந்திருந்தான் அவனது வீட்டிற்கு நான் போய் வருவது தொடர்ந்தது.இக்கட்டான நிலைகளிலும் என்னையும் என்னுடன் வருபவர்களையும் அவனது சகோதரிஉபசரிப்பார். இந்தியப்படைகாலம் ஒருநாள் அவனது வீட்டிற்கு போயிருந்த நான் அவனது சகோதரியிடம் அக்கா அவன் ஆமியோடை வந்து நிக்கிறதாய் கேள்வி வீட்டுப்பக்கம் வந்தால் அவனை எங்கையாவது போகச்சொல்லி சொல்லிவிடுங்கோ என்றேன். அவர் அவசர அவசரமாய் சமைத்து எனக்கும் என்னுடன் வந்தவர்களிற்கும் உணவை கலந்து பிசைந்து உருண்டையாய் கையில் தருகிறார் சாப்பிட்டுவிட்டு புறப்படுகிறோம். சில நாட்களின் பின்னர் உடுவில் டச்சு வீதியில் சைக்கிளில் நான் ..எதிரே இன்னொருத்தன் ..சைக்கிளில் கிட்டவந்து கடக்கமுற்படுகையில் பார்க்கிறேன் ..அவன்தான் ..அவனது இடுப்பில் ஏதோ ஒன்று அசைகின்றது. அவனது கண்களும் என்னுடைய கண்களும் நேர் எதிரே சந்திக்கின்றது. அவனேதான். சைக்கிளின் கான்டிலை பிடித்திருந்த ஒரு கையை அவன் எடுக்கிறான் ..எப்பொழுதும் தயாராய் இருக்கும் எனது கை இயங்கியது.. .. சில காலங்களின் பின்னர் அவனது சகோதரி என்னை வீதியில் கண்டார். டேய் திண்ட கோப்பையிலேயே பேண்டிட்டியேடா என்று கதறினார். இன்றுவரை தாங்கமுடியவில்லை...

Edited by sathiri

எனது பள்ளிக் காலம் மானிப்பாய் இந்துவில் எனக்கு முதல் வகுப்பு மாணவன் ஆனால் மானிப்பாய் மெமேறியலில் பாடசாலையில் கராட்டி வகுப்பில் ஒரேவகுப்பு. நல்ல நண்பர்கள். அவன் வீட்டிற்கு நானும் என்வீட்டிற்கு அவனும் வந்துபோவான். அவன் புளொட்டிற்கும் நான் புலிக்கும் போனோம்.

அவரின் பெயர் வி...,, தொடங்குமோ????வர்த்தக பிரிவில் படித்தவரா?

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பெயர் வி...,, தொடங்குமோ????வர்த்தக பிரிவில் படித்தவரா?

யார் வினோதனா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பெயர் வி...,, தொடங்குமோ????வர்த்தக பிரிவில் படித்தவரா?

நீங்கள் விதுரனை நினைத்து எழுதியிருந்தால் அது தவறு விதுரன் மாணிக்கதாசன் கொல்லப்பட்ட தாக்குதலில் காயமடைந்து இப்பொழுது நோர்வேயில் வசிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை.. இக்கட்டான சூழ்நிலைதான்..! :( எப்பிடி வாழ்க்கையைக் கொண்டு போறீங்களோ தெரியேல்ல..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யார் வினோதனா :unsure:

வினோதன் என்று நீங்கள் சண்டிலிப்பாய் வினோதனை நினைத்து எழுதியிருந்தால் இவரிற்கும் புளொட்டிற்கும் தொடர்பு இல்லை இவர் என்னுடைய உறவினர் நல்ல மனிதர் .இவர் சந்திரிக்காவின் பள்ளிக்கால நண்பர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் வேட்பாளர். சிறீமா யாழ்ப்பாணத்திற்கு வந்தால் தங்குவது இவரது வீட்டில்தான். காரணம் இவரது தகப்பன் குமாரசாமிக்கும் அவரிற்கும் நல்ல நெருக்கம் இருந்ததாம். ^_^ அப்ப நாங்கள் பிறக்கேல்லை.சந்திரிக்கா சாமாதா தேவதையாக வெற்றி பெற்றதும் (புலிகள் மறைமுக ஆதரவுடன்) சந்திரிக்கா காயை நகர்த்த தொடங்கினார் வினோதனையே வெளிநாட்டமைச்சராக்க முடிவெடுத்தார். அதனால் வினோதன் அவரது கொள்ளுப்பிட்டி வீட்டில் வைத்து சுட்டுக்கொலல்லப்படுகிறார்.(சுட்டவர் அவரது ஊர்க்காரர்தான்) இதுவும் புலிகளின் தவறானதொரு முடிவே. அதன்பின்னர்தான் கதிர்காமரை அந்த பதவிக்கு சந்திரிக்கா நியமிக்கிறார். இவர் மானிப்பாயை சேர்ந்தவர்.

Edited by sathiri

  • தொடங்கியவர்

அனைவரது அனுபவங்களிற்கும் நன்றி.

சாத்திரி மிகவும் இக்கட்;டான ஒரு அனுவத்தை தத்ரூபமாக விபரித்துள்ளீர்கள். உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நீங்கள் விதுரனை நினைத்து எழுதியிருந்தால் அது தவறு விதுரன் மாணிக்கதாசன் கொல்லப்பட்ட தாக்குதலில் காயமடைந்து இப்பொழுது நோர்வேயில் வசிக்கிறார்.

பெயர் சரியாக தெரியவில்லை என்னுடன் படித்த ஒருவர் (வேறு பிரிவு அதுதான் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை-- 160 பேர் ,4 பிரிவுகள் இருந்தன)மெல்லிய தேகம் சுருள் முடி பாடசாலையை விட்ட பல வருடங்களுக்கு பின்பு ,ஒரு நாள் ஒரு துண்டுப்பிரசுரத்தில் அவரது படம் போட்டு இருந்தது அப்பொழுது தான் அறிந்தேன் அவர் புளொட்டில் இருந்து மரணத்தை தழுவியிருகிறார் என்று...அவர் ஆசையாக வளர்த்த நாயின் படத்துடன் அவர் நிற்க்கும் போட்டோவை அதில் பிரசுரித்திருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் சரியாக தெரியவில்லை என்னுடன் படித்த ஒருவர் (வேறு பிரிவு அதுதான் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை-- 160 பேர் ,4 பிரிவுகள் இருந்தன)மெல்லிய தேகம் சுருள் முடி பாடசாலையை விட்ட பல வருடங்களுக்கு பின்பு ,ஒரு நாள் ஒரு துண்டுப்பிரசுரத்தில் அவரது படம் போட்டு இருந்தது அப்பொழுது தான் அறிந்தேன் அவர் புளொட்டில் இருந்து மரணத்தை தழுவியிருகிறார் என்று...அவர் ஆசையாக வளர்த்த நாயின் படத்துடன் அவர் நிற்க்கும் போட்டோவை அதில் பிரசுரித்திருந்தார்கள்

நீங்கள் சொன்ன சம்பவம் நாயுடன் கூடிய படப்போஸ்ர் எனக்கும் நினைவிரக்கின்றது. பெயர் ஞாபகத்தில் வரவில்லை .எனது மூத்த அண்ணர் கனடாவில் இருக்கிறார் அவரும் மானிப்பாய் இந்துதான்;.அவரும் ஆரம்பகாலத்தில் புளெட்டிற்காக வேலை செய்தவர். அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார் அது ரவிமூர்த்தி என்றார். ரவிமூர்த்தி கோண்டாலிலை சேர்ந்நதவர். அரியாலைப்பகுதியில் மணல் அள்ளும் பிரச்சனையின் போது புலிகள் அமைப்பின் றிச்சாடினால் சுட்டுக்கொல்லப்பட்டவர். றிச்சாட் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கிறார்.

ரவிமூர்த்தி கொக்குவிலை சேர்ந்தவர்.இவர் தகப்பனார் பிரபல ஆங்கில டியுசன் மாஸ்டர்(மூத்தி மாஸ்டர்).இவர் சுவிஸில் இருந்துவந்து இணைந்தவர்.

எனது மனைவியின் வீட்டிற்கு மிக அருகில் அவர் வீடு.

இவரின் பல நண்பர்கள் கனடாவில் உள்ளார்கள்.

நல்லவேளை நான் நாட்டிற்கு வரவில்லை,வந்திருந்தால் இப்ப சாத்திரியின் பதிவில்?

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வாய்ட் சப்பல் என்ற இடத்தில் ஒரு இந்தியச் சிற்பக் கலை பற்றிய கண்காட்சி!

ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் எண்பது தொன் எடையுள்ள, தனிக் கல்லின் நிழல் நிலத்தில் விழாமல் அதைக் கட்டிய எமது மூதாதையரின் கட்டிடக் கலையை வியந்த காலம்!

அந்தக் கோவிலின் யானைகளின் கழுத்துக்களில் தொங்கும் கற்சங்கிலிகளின் வளையங்களை, உடையாது, ஒட்டாது எவ்வாறு செய்தார்கள் என குழம்பிய காலம்!

அந்தக் கண்காட்ச்சிக்கு நானும் எனது நண்பரும் போயிருந்தோம். அப்போது கிருஷ்ணனின் பத்து அவதாரங்களும் ஒரு பலகையில் செதுக்கப் பட்டு இருந்தது! எனதும், எனது நண்பறதும் கிரிஷ்ணாவதாரம் பற்றிய அறிவு, தசாவதாரம் திரைப்படத்தில் இருந்து வந்தது மட்டுமே! நாங்கள் இருவரும் ஒவ்வொரு அவதாரமாக,எழுத்துக் கூட்டுவது போலச் சொல்லி, விரல்களை மடித்து எண்ணிக்கொண்டிருந்தோம்! ஐந்துக்கு மேல், எம்மால் போக முடியவில்லை!!

அப்போது ஒரு நூறு வீத வெள்ளை ஒன்று அவ்விடம் வந்து, நாங்கள் படும் அவஸ்தையைக் கண்டது!

வரிசையில் ஒன்பது அவதாரங்களையும், வரிசையிட்ட பின்பு, வரப் போகும் கல்கி அவதாரத்தைப் பற்றி விளக்கி விட்டு, ஒரு வேளை அது 'ஜோர்ஜ் புஷ்' ஆக இருக்கலாம் என்று ஒரு பகிடியும் விட்டு விட்டுச் சென்று விட்டது!

அன்று தான் எமது பழைய கல்லூரிக் குறளின் அர்த்தம் உண்மையாக எனக்குப் புரிந்தது!

கற்க, கசடு அறக் கற்க என்பதே அது!!!

புலவரா ஓடைங்கிறது ஒரு ஊர்! ,

மிக தீவிர புலி ஆதரவாளர்கள்தான் அந்த ஊரில, 2002 ல் மிக ரகசியமாய் மூன்று புலி போராளிகள் வந்தாங்க!

சரியா விடிய கூட இல்லை , வீட்டு வாசல்ல, பவள், இண்டியன் டாட்டா ட்றக் உட்பட!!

ஏற்கனவே தோண்டப்பட்டு மூடாது கிடந்த கழிப்பிட கிடங்கினுள்ள அந்த மூணுபேரும் ஓடிப்போய் பழைய கிடுகுகள தம்மேலமூடிகிட்டு படுத்திட்டாங்க !......

எப்பிடி போட்டு கொடுத்தாங்க ரொம்ப நல்லவங்கன்னே தெரியல்ல! எல்லாரையும் 300 அடி தள்ளி போக சொன்னான் சிங்களவன், அப்புறம் 2 "ஜே.ஆர்" கிளிப்புகளை கழட்டி உள்ள போட்டு ,அவங்கள உடலங்களாக்கிய மகிழ்ச்சியில ட்றக்கில ஏறி போய்கிட்டே இருந்தான!

நீங்கள் சொன்ன சம்பவம் நாயுடன் கூடிய படப்போஸ்ர் எனக்கும் நினைவிரக்கின்றது. பெயர் ஞாபகத்தில் வரவில்லை .எனது மூத்த அண்ணர் கனடாவில் இருக்கிறார் அவரும் மானிப்பாய் இந்துதான்;.அவரும் ஆரம்பகாலத்தில் புளெட்டிற்காக வேலை செய்தவர். அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார் அது ரவிமூர்த்தி என்றார். ரவிமூர்த்தி கோண்டாலிலை சேர்ந்நதவர். அரியாலைப்பகுதியில் மணல் அள்ளும் பிரச்சனையின் போது புலிகள் அமைப்பின் றிச்சாடினால் சுட்டுக்கொல்லப்பட்டவர். றிச்சாட் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கிறார்.

தகவலுக்கு நன்றிகள் சாத்திரியார்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன சம்பவம் நாயுடன் கூடிய படப்போஸ்ர் எனக்கும் நினைவிரக்கின்றது. பெயர் ஞாபகத்தில் வரவில்லை .எனது மூத்த அண்ணர் கனடாவில் இருக்கிறார் அவரும் மானிப்பாய் இந்துதான்;.அவரும் ஆரம்பகாலத்தில் புளெட்டிற்காக வேலை செய்தவர். அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார் அது ரவிமூர்த்தி என்றார். ரவிமூர்த்தி கோண்டாலிலை சேர்ந்நதவர். அரியாலைப்பகுதியில் மணல் அள்ளும் பிரச்சனையின் போது புலிகள் அமைப்பின் றிச்சாடினால் சுட்டுக்கொல்லப்பட்டவர். றிச்சாட் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கிறார்.

ஏன் அண்ணா சும்மா அவன் இவனை எல்லாம் போட்டு கொடுக்கிறீங்கள்??

ஏதோ முடிந்தது முடிந்துவிட்டது..................... பழையனவற்றை மறக்காது பழிவாங்குங்கள் என்றே எனக்கு விளங்குது. இனி இதுதான் ஜனநாயகம் என்றால் என்ன செய்வது எழுதி தள்ளுங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.