Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவுகளும் கறுப்பியும்

Featured Replies

கறுப்பி தயவு செய்து, இங்கே நிழலி, மற்றும் மோகன் அண்ணா கூறியதை கேட்கவும். உங்களை யாரும் தடை செய்யவில்லையாமே? நீங்கள் கறுப்பி-2 போன்ற பெயரை பதிவு செய்யுங்கள். நீண்டகாலமாக உங்கள் பதிவுகளை அவதானிக்கும் அபிமானிகளில் நானும் ஒருவன்.

முடிவை மாற்றுவீர்கள் என்று மிகவும் நம்புகிறேன்!

  • Replies 74
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி அண்ணா,

என்ன இது சின்னபிள்ளைத்தனமா?

மோகன் அண்ணாவே தடைசெய்யவில்லை என்று சொன்னபின்னரும் எதுக்கு வீண்பிடிவாதம்? எல்லாரும் சக உறவு என்ற உரிமையில் கேட்கிறோம்.

வாங்கோ அண்ணா.

கறுப்பி அண்ணா,

என்ன இது சின்னபிள்ளைத்தனமா?

மோகன் அண்ணாவே தடைசெய்யவில்லை என்று சொன்னபின்னரும் எதுக்கு வீண்பிடிவாதம்? எல்லாரும் சக உறவு என்ற உரிமையில் கேட்கிறோம்.

வாங்கோ அண்ணா.

அதுதான் வந்துட்டாரில்லே ^_^:)

http://www.yarl.com/...ndpost&p=680774

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் வந்துட்டாரில்லே ^_^:)

http://www.yarl.com/...ndpost&p=680774

இப்படி சொல்லாமால் கொள்ளாமல் வந்துட்டாரே குட்டி அண்ணா?

இப்படி சொல்லாமால் கொள்ளாமல் வந்துட்டாரே குட்டி அண்ணா?

:D

ஊரில எத்தினையோ இணையத்தளம் வைச்சு இருக்கிறவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்க... இங்கே ஒரே ஒரு இணையத்தளத்தை வைச்சுக் கொண்டு மோகன் அண்ணா படுகிற அவஸ்தை இருக்கே...

ஐ.. யை... யை.. யை... யோ.. ஓ...!!! :D:lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணா....எல்லா இணையங்களுக்கும் நின்மதியாக போய் வர ஏலாது தெரியும் தானே..யாழ் எங்கட வீடு மாதிரி.நாங்கள் எல்லாம் யாழ்,யாழ் என்று நிலைத்து நிற்பதற்கு காரணம் மோகன் அண்ணாவும் அவரது உதவியாளர்களும் எங்களை பேசாமல் கொள்ளாமல் நடத்தும் விதம் தான்..இது என்றும் நிலைக்க வேண்டும் என்பதே எனது அவா..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் கறுப்பி எழுதமுடியாமல் இருந்ததும் ஒருவகையில் நல்லதுதான். கறுப்பி இந்தத் திரியில்தான் ஒரு நீண்ட பதிவை சொந்தமாக இட்டுள்ளார். நெடுக்ஸ், கலைஞன் போன்றவர்கள் பந்தி பந்தியாக எழுத எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்று புரிந்திருக்கும்..

பி.கு. கறுப்பிக்காகவே மோகன் அண்ணா களத்தை புதிய வடிவில் அமைத்துள்ளார். எனவே மோகன் அண்ணாவையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்த கறுப்பிக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் கறுப்பி எழுதமுடியாமல் இருந்ததும் ஒருவகையில் நல்லதுதான். கறுப்பி இந்தத் திரியில்தான் ஒரு நீண்ட பதிவை சொந்தமாக இட்டுள்ளார். நெடுக்ஸ், கலைஞன் போன்றவர்கள் பந்தி பந்தியாக எழுத எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்று புரிந்திருக்கும்..

பி.கு. கறுப்பிக்காகவே மோகன் அண்ணா களத்தை புதிய வடிவில் அமைத்துள்ளார். எனவே மோகன் அண்ணாவையும் சுறுசுறுப்பாக இயங்க வைத்த கறுப்பிக்கு பாராட்டுக்கள்!

தப்பு தப்பா சொல்றேளே .

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு தப்பா சொல்றேளே .

அதுவும் வெட்டி ஒட்டியதா!

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் வெட்டி ஒட்டியதா!

அடப்பாவி.

கறுப்பியை வேண்டுமென்றே யாழ் நிர்வாகம் தடை செய்திருப்பதாகவே தெரிய வருகிறது????

ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்யும் யாழ் நிர்வாகத்தில், தொழில்நுட்ப கோளாறு வந்தது என்பதை ஏற்க முடியாது??????

... இப்படிப் பல பல ....

... எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது ... யாழ்நிர்வாகத்தின் மீது பாரிய பிழை இருப்பதாக தெரிகிறது!!! ... ஆகவே யாழ்நிர்வாகத்தின் மீது ஓர் 100000000000000 கேட்டு வழக்கு தாக்கல் செய்தால் என்ன???????

கறுப்பி ........

முன்பு

உங்கள கவிதை அழகு - இன்று

அதனையும் விஞ்சும் செய்திகள்

ஆ........... ஆ.......

பிற்குறிப்பு

என்ன விளையாட்டு இது. நாமெல்லாம் ஒன்றல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி.

மீண்டும் உங்களை உங்களின் யாழின் பழைய கணக்கோடு கண்டதை இட்டு மகிழ்ச்சி. :)

கதையோடு கதையாய்.. யாழ் களத்தின் செலவுகளை சமாளிப்பதற்கு ஆளாளுக்கு உங்கள் கல்லாப்பெட்டிகளை திறந்து தங்கங்களை, வைரங்களை, வெள்ளிகளை யூரோக்கள் டொலர் கரன்சிகளை விசுக்கிவிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசியத்தலைவர் எமக்கெல்லாம் கூறியது போல, ' நாம் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என வாழ்வோம்'.

இந்த யாழ்க்களத்தின் நெற்றிக்கண் ஊர்ப்புதினம், அதன் நட்சத்திரமாக விளங்கி பல நூறு உறவுகளின் 'நண்பி'யானவர் நீங்கள். அண்மையில் தான் எம்மில் பலரும் உங்களின் 20000 பதிவையிட்டு வாழ்த்தி இன்னும் பல பத்தாயிரம் பதிவுகளை வேண்டியிருந்தோம்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்ற வகையில் அதையும் நாம் ஏற்கிறோம்.

ஆனால் உங்கள் சேவையை karuppy - இந்தப்பெயரில் தொடர பணிவுடன்,உரிமையுடன் வேண்டுகிறேன். உங்கள் fans களை ஏமாற்றிவிடாதீர்கள்!

ஏன் நடுவர்கள் பிழையே விட மாட்டார்களா

கறுப்பி, எனக்கும் கருத்துக் காலங்களில் எழுதும் பிரச்சினை இருந்தது. இன்று தான் மீண்டும் கருத்துக்களை மீண்டும் பதியக்கூடியதாக இருந்தது. எனவே நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

நானும் என்னை தடை செய்துவிட்டார்களோ என்று ஆதங்கப்பட்டேன்! (காரணம் யாழ் தளத்தின் மேல் இருந்த பிரியம், ஈடுபாடு எனலாம்). ஆனால் தொழில்நுட்ப பிரச்சினைதான் என்று மோகன் அண்ணா சொன்னதும் இது நிச்சயமாக ஒருநாள் தீர்க்கப்படும் என்று பொறுமையாக இருந்தேன் (காரணம் மிக அற்புதமான, ஈடிணையற்ற ஒரு தளத்தை நடாத்தி ஈழத் தமிழருக்கு மாபெரும் சேவையாற்றிவரும் மோகன் அண்ணா மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் தான்). அவருக்கு உதவுபவர்களும் நல்ல பணியையே செய்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி!

யாழோடுதான் இருக்கிறேன். யாழுக்காகவாவது ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்! :rolleyes:

காத்திருக்கிறேன் படிப்பற்காக.........

என்ன நடந்தது கறுப்பி எதற்காக உங்களை தடை செய்தார்கள்?...எதாவது தப்பு செய்தீர்களா unsure.gif

இந்த கறுப்பி தப்பு செய்யுமா?

stock-vector-sad-emoticon-72187144.jpg

:)

கறுப்பிக்கு தடையா? யாழ் இணையத்தில் தடைசெய்யப்பட்ட இணையத்தள செய்திகளை தொடர்ந்து இணைத்தீர்களா?? ஒன்றும் புரியவில்லை.சரி இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?? காலையும் மாலையும் யாழை தரிசனம் செய்யுங்கள்.

யாழையும் தரிசனம் செய்கிறேன். நீங்க எழுத்தையும் தரிசனம் செய்கிறேன்.

ஆ ஆருயிர் தோழர்/தோழி கறுப்பிக்கு தடையா?ctrl+cctrl v செய்ததில் ஏதாவது கோளாறா? அல்லது பாஸ்வேர்ட் மறந்து போட்டீர்களா அல்லது யாராவது உங்களுக்கு நூல் விட்டு அதற்கு(இவர் ஆணா பெணா என்பதில் இனிக்கு வரைக்கு டவுட்டு உண்டு) பதிலுக்கு வம்படியா பேசி போட்டீர்களா.. ? ctrl+c ctrl +v தான் சிக்கல் எனில் அதுக்கெல்லாம் கவலை தேவையே இல்லை.. என்ன உங்களுக்கு ஜார்ஜ் புஸ் விருது கொடுக்க போகிறாரா?அதீத ஆர்வம். வேற யாருக்கும் நியூஸ் தெரியாது பாருங்க.! வீட்டுல போய் பிள்ளை குட்டிகளை ஸ்கூலில் படிக்க வைக்கிற வழிய பாருங்கப்பூ..

டிஸ்கி:

கருப்பி. கறுப்பி (எந்த ரூ போடுவது என்று இனி இலக்கிய ஆராய்சி செய்யவேணும்) இவர் அப்பாவியா தெரியரார்.. சிங்கள கைக்கூலியாகவும் தெரியவில்லை..அவரை ரிலீஸ் பண்ணுங்கப்பா.. கள போட்டியில் எல்லாம் கல்ந்து கொண்டு நிவாரண உதவி எல்லாம் செய்திருக்கார். அதுக்குமேல தடையென்றால் உங்கட உள்குத்து சமாச்சாரம் உங்களுக்குத்தான் தெரியும் ஐயாம் டோட்டலி கன்பூசன்.. :rolleyes:

கருத்துக்கு நன்றி.

எமது தேசியத்தலைவர் எமக்கெல்லாம் கூறியது போல, ' நாம் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என வாழ்வோம்'.

இந்த யாழ்க்களத்தின் நெற்றிக்கண் ஊர்ப்புதினம், அதன் நட்சத்திரமாக விளங்கி பல நூறு உறவுகளின் 'நண்பி'யானவர் நீங்கள். அண்மையில் தான் எம்மில் பலரும் உங்களின் 20000 பதிவையிட்டு வாழ்த்தி இன்னும் பல பத்தாயிரம் பதிவுகளை வேண்டியிருந்தோம்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்ற வகையில் அதையும் நாம் ஏற்கிறோம்.

ஆனால் உங்கள் சேவையை karuppy - இந்தப்பெயரில் தொடர பணிவுடன்,உரிமையுடன் வேண்டுகிறேன். உங்கள் fans களை ஏமாற்றிவிடாதீர்கள்!

மறுபிறவி எடுத்து வந்துவிட்டேன்.:)

விடை தரமுடியாது.. smile.gif ........மீண்டும் வருக. நல்ல ஒரு நண்பி(பன்) பாடல்களை எடுத்துவிடும பண்பானவள்.

என் கிறுக்கல் களும் தங்கள் மனம் தொட்ட்தையிட்டு மகிழ்ச்சி .

நன்றி.:)

வல்வை லிங்கம் -

இலக்கணாவத்தை என தான் பிறந்த ஊர் பற்றி அறியத்தந்தவர். இப்படி ஓர் ஊர் இருப்பதையே அறியாமல் இருந்திருக்கிறேன்.

தங்களையும் நினைவு கூர்ந்தபடியே

__________

நன்றி கறுப்பி அண்ணா/அக்கா, நல்ல பதிவு...உங்களை இடை நிறுத்தமா? நகைச்சுவையே வேண்ணாமெங்க, நீங்க செய்திப்பிரிவோடையே நில்லுங்க...

யாழ் இணையம் தான் எனக்கு தமிழில் தட்டச்சு செய்யும் பயிற்சியை கொடுத்தது , இதர இணையத்தளங்களில் எனக்கென்றொரு அந்தஸ்தை பெற்றுத்தந்தது, இன்று எந்தவிதமான அட்டகாசமுமில்லாது சமூகத்திலை சில விடயங்களை நகர்த்த வழிகோளி தந்தது, இப்படி பெரிய பட்டியலையே இங்கு இணைக்கலாம், இப்போ வேண்ணாம், வேறொரு சந்தர்ப்பத்திலை வாறனே....

நன்றி.:)

யாழ்களத்துல , இது ஒரு சாபக்கேடு!

அது எதுன்னா.. இடைக்கிடை ..டமால்னு எவராவது ஒரு உறுப்பினர் ...தன்மானம் பீறிட்டுஎழ................

"விடைபெறுகிறேன்" "நன்றி யாழ்" "இனிவரமாட்டேன்" "யாழை பிரிகிறேன்"

அப்பிடீன்னு ஒரு தலைப்பு ஆரம்பிக்கிறதும்...அதை சக நட்புவட்டங்கள் ஓடிவந்து தடுப்பதும்...

அப்புறம் கொஞ்சம்கூட கூச்சமில்லாம வந்து மறுபடியும் குந்திக்கிறதும்...

கண்ணைக்கட்டி கோவம் பாம்புவந்து கொத்தும் எங்கிறமாதிர்யான ...... இந்த உள்ளே வெளியே மங்காத்தா விளையாட்டை ஆரம்பிக்கும் ஒவ்வொரு கருத்தாளனின் நோக்கம்...

தனக்கு இந்தக்களத்தின்..உறவுவட்டத்திற்க்குள் உள்ள செல்வாக்கு என்ன என்பதை பரிசோதிப்பதே!

அந்த வட்டத்தில் சகராலும் மதிக்கப்படும், மிக பொறுமை&பண்பாளரான கறுப்பியும் சேர்ந்தது....நம்பவே முடியாத அருவெருப்பு!

யாழ்களத்தை காக்கணும்...

யாழ் எங்கள் உயிர்மூச்சு! ..பேச்சு ..!கைல கட்டுற வாட்ச்சு !...

என்னு உணர்ச்சிவசப்படும் மக்கா......இப்பிடியான தலைப்புகளை ஆரம்பித்து...

புதிதாய் உள்நுழையும் உறவுகளுக்கு ... இதனை ஒரு கேலிக்களமாக காமிக்காமல் இருப்பதே ....யாழைக்காக்க நீங்க செய்யக்க்கூடிய அதி உச்ச தொண்டு!

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி arivili.

யாழில் சில நாட்களாய் எழுத முடியாமல் போனதால் ஏற்பட்ட முடிவே தவிர வேறு ஒன்றும் இல்லை.

மீண்டும் உங்களை உங்களின் யாழின் பழைய கணக்கோடு கண்டதை இட்டு மகிழ்ச்சி. :)

மீண்டும் களத்தில் எழுத முடிந்ததில் மகிழ்வைத் தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கறுப்பி ..நமோ நமோ மாதா நம்மட கறுப்பி மீண்டும் வந்ததுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துல , இது ஒரு சாபக்கேடு!

அது எதுன்னா.. இடைக்கிடை ..டமால்னு எவராவது ஒரு உறுப்பினர் ...தன்மானம் பீறிட்டுஎழ................

"விடைபெறுகிறேன்" "நன்றி யாழ்" "இனிவரமாட்டேன்" "யாழை பிரிகிறேன்"

அப்பிடீன்னு ஒரு தலைப்பு ஆரம்பிக்கிறதும்...அதை சக நட்புவட்டங்கள் ஓடிவந்து தடுப்பதும்...

அப்புறம் கொஞ்சம்கூட கூச்சமில்லாம வந்து மறுபடியும் குந்திக்கிறதும்...

கண்ணைக்கட்டி கோவம் பாம்புவந்து கொத்தும் எங்கிறமாதிர்யான ...... இந்த உள்ளே வெளியே மங்காத்தா விளையாட்டை ஆரம்பிக்கும் ஒவ்வொரு கருத்தாளனின் நோக்கம்...

தனக்கு இந்தக்களத்தின்..உறவுவட்டத்திற்க்குள் உள்ள செல்வாக்கு என்ன என்பதை பரிசோதிப்பதே!

இது மிகவும் தவறான பார்வை. சிலர் அப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லோரும் இல்லை. ஆனால் எல்லோரும் இதற்காகத்தான் செய்கின்றனர் என்ற தோற்றத்தை இப்படியான கருத்துக்களால் ஏற்படுத்தவும் முடியும்.

சில சந்தர்ப்பங்களில் கருத்தாளர்கள் தங்களின் பக்கம் சரியான நியாயமிருக்க.. கள நிர்வாகம் நியாயத்துக்கு அப்பால் நடக்கிறது எனும் போது ஒரு பகிஸ்கரிப்பாகக் கூட தமது எதிர்ப்பினை தெரிவிக்கவும்.. பல வழிகளிலும் முயன்று தோற்ற பின்னர் இப்படி செய்வதுண்டு.

இன்னும் சிலர் தங்களின் உறுப்புரிமைக்கு சரியான மதிப்பளிக்கப்படுவதில்லை என்று நினைத்து விலகிச் செல்ல தம்மோடு உறவாடிவர்களின் பிரியாவிடை கேட்பதும் உண்டு.

இன்னும் பலர் சொல்லிக் கொள்ளாமலே ஓடி ஒளித்துக் கொள்வதும் உண்டு. (இதனை நிச்சயம் வரவேற்க முடியாது. மிகவும் நட்பாக.. பழகிவிட்டு தனிப்பட்ட காரணங்களால் ஓடி ஒளித்துக் கொள்பவர்கள்.. நிச்சயம்.. ஒரு பிரியாவிடையாவது பெற்றுச் செல்லும் போது பிற உறவுகளுக்கு அதில் ஒரு மனத் திருப்தி கிடைக்கும்.). இதெல்லாம் நட்பை சரியாக பயன்படுத்தி வாழ்ந்தால் நிச்சயம் புரியும். பலருக்கு அது புரிவதில்லை. காரணம்.. தாங்கள் நினைப்பதே சரி என்ற பலர் தற்றுணிவோடு வாழ்ந்துவிடுவது தான்.

கறுப்பி இங்கு தனக்கு எழுத முடியவில்லை என்று பட்ட மன அழுத்தத்தை என்னால் உணர முடிந்தது. அவர் யாழுக்கு வெளியிலும் இது தொடர்பாக உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார். அதிலிருந்து அவருக்கு யாழின் மீதான ஈடுபாட்டை உணர முடிகிறது. அது புறக்கணிக்கக் கூடிய ஒன்றல்ல.

யாழில் எழுத ஒரு morality தேவை. அதை யாழ் கள உறவுகள் என்ற அந்த நிலை பலமாக்கி நிற்கிறது. சும்மா வந்தமா எழுதினமா போனமா என்பது பிடிப்பில்லாத ஒருவரை மணந்து ஊருக்கு வாழ்வது போன்றது. அதற்கும் சிலர் வாழ்க்கை என்று பெயரிட்டுக் கொள்கின்றனர்.

இது moral சம்பந்தப்பட்ட விடயம். இதனை வெறுமனவே செல்வாக்கை அளக்க பாவிக்கின்றனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. யாழில் செல்வாக்குப் பெற்று.. நாம் எதனையும் இந்த உலகில் சாதிக்க முடியாது. காரணம்.. யாழ் ஒரு கருத்துக்களம். உணர்வுகளை கருத்துருவில் பகிரும் களம். சாதனைக் களமல்ல. அந்த வகையில்... உங்களின் இந்தக் கருத்தோடு என்னால் உடன்பட முடியவில்லை. நீங்கள் சொல்வது போல சிலர் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் கறுப்பி போன்ற உறவுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக நான் உணரவில்லை. இது போன்ற எழுத்துக்கள்.. moral damage ஐ அதிகரித்து வெறுப்புணர்வை ஏற்படுத்துமே அன்றி.. உண்மையான நிலை உணர்தலை செய்யமாட்டாது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கதையோடு கதையாய்.. யாழ் களத்தின் செலவுகளை சமாளிப்பதற்கு ஆளாளுக்கு உங்கள் கல்லாப்பெட்டிகளை திறந்து தங்கங்களை, வைரங்களை, வெள்ளிகளை யூரோக்கள் டொலர் கரன்சிகளை விசுக்கிவிடுங்கோ.

மோகனின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் நினைவில் வைத்திருந்தைமைக்கு மிக்க நன்றி கறுப்ஸ் :) உந்த சின்ன பிள்ளை விளையாட்டை விட்டுவிட்டு மீனடும் வந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

நெடுக்ஸசுக்கு நானும் ஒரு :) பச்சை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் நினைவில் வைத்திருந்தைமைக்கு மிக்க நன்றி கறுப்ஸ் :)

ஆனால் கறுப்பி அண்ணை என்னை கணக்கில் எடுக்காதது கடுப்பா இருக்குது மை லார்ட்..

(ஏம்பா எனக்கு ஸ்மைலிய அமுக்க வேலை செய்யுது இல்லை..ஃபன்னி(funny) ஆ சொல்லுறதை எல்லாம் பசங்க சீரியஸா எடுக்கிறாங்களப்பா !!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.