Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது உண்மையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிசனுக்கு பிறந்த நேரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? பிறந்த நேரம் நன்றாக இருந்தால் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் பிறந்த நேரம் சரியில்லா விட்டால் நாய் படா,பேய் படா கஸ்டத்தினை மனிசர் அனுபவிக்க வேண்டி வரும்.

இப்ப பாத்தீங்கள் என்டால் சில பேர் பணக்காரருக்கு பிள்ளையாய் பிறந்திருந்தாலும் அவர்களை பெரும் நோய் வாட்டும்,நன்றாக படித்த அறிவாளிகளுக்கு அறிவில்லாத மக்கள் பிறப்பார்கள்,நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலையில் இருக்க வேண்டும் என சில பேர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களுக்கு அது சரியே வராது ஆனால் சில பேர் எதைத் தொட்டாலும் அது உடனே துலங்கி விடும் இதெற்கு எல்லாம் என்ன காரணம்? நேரம்,நேரம்,நேரம்

எங்கட மதத்தில நாங்கள் பிறந்த நேரத்தை வைத்து கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பார்கள். நாங்கள் பிறக்கேக்குள்ள எங்களை நல்ல கோள்கள் பார்த்தால் நாங்கள் நன்றாக இருப்போமாம் அதே நேரத்தில் சனி போன்ற கெட்ட கிரகங்கள் பிடித்தால் விடவே விடாதாம்...ராகு,கேது பலன் நன்றாக இருந்தால் தொழில்,கல்வி சிறக்குமாம்

ஏழாம் இடம் கணவன்/மனைவியையும்,எட்டாம் இடம் குடும்ப வாழ்க்கையும்,ஒன்பதாம் இடம் குழந்தைகளையும் குறிக்குமாம்...இதில் என்ன பிரச்சனை என்டால் ஏழில் செவ்வாய் அல்லது எட்டில் செவ்வாய் என்டால் கல்யாணம் தடைப்படுமாம் அப்படி இல்லை என்டு கல்யாணம் முடித்தால் குடும்ப வாழ்க்கை பிரியுமாம் அல்லது அவர்களுக்குள் பிரச்சனை இருந்து கொண்டே இருக்குமாம் பிறகு குழந்தை பிறந்த பிறகு அக் குழந்தையின் பலன் நல்லதாய் இருந்தால் அவர்களுக்கு பிரச்சனை இருக்காதாம்.

இந்த செவ்வாய் தோசக்காரர் நன்றாக பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டுமாம் அப்படி திருமணம் செய்வதற்கு முன் வாழை மரத்திற்கு தாலி கட்டி பின்னர் வாழை மரத்தை வெட்டி ஏதோ பூசை செய்வினமாம்[எனக்கு ஞாபகம் இருக்கு ஜஸ்வர்யாராயும் வாழை மரத்திற்கு முதலில் தாலி கட்டினவ]...ஜாதகம் பார்க்காமல் காதலித்து கட்டினவர்கள் வந்து கேட்பார்கள் நாங்கள் ஜாதகம் பார்த்தோ கட்டினாங்கள் நாங்கள் நல்லாய் இல்லையோ என்டு ஆனால் நான் நினைக்கிறேன் அவர்கள் ஜாதகம் பார்க்காமல் கட்டி இருந்தாலும் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தம் இருக்கும் என்று ஆனால் அவர்கள் ஜாதகம் எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

இதை எல்லாம் ரதி ஏன் இங்கே வந்து எழுதுகிறாள் என நீங்கள் யோசிப்பது விளங்குது ஏன் என்டால் ரதிக்கு பிறந்த நேரம் சரியில்லையாம்...ரதிக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம் என்று மூன்று,நாலு ஜோசியர் சொல்லி விட்டார்கள் ஆனால் அவர்கள் சொன்னதில் எனக்கு பிடித்த விடயம் நான் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எனக்கு பிடித்தவரை விரும்பித் தான் கட்டுவேனாம்...ஆனால் எவ்வளவு நாளைக்குத் தான் ரதி தனியாய் இருக்கிறது சொல்லுங்கோ பார்ப்போம் :lol: ஜோசியம் பொய் என்று நிருபீக்கவாவது ரதி சீக்கிரம் கல்யாணம் கட்ட வேண்டும் ஆனால் ஒருத்தரும் சிக்க மாட்டேன் என்கிறார்களே அல்லது எவ்வளவு முயற்சி செய்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் ரதிக்கு திருமணம் நடக்கா விட்டால் ஜோசியம் உண்மை என்ட நிலைக்கு நாங்கள் வந்து தான் தீர வேண்டும்.

ஆகவே அன்பான வாசகப் பெரு மக்களே உங்கள் பொன்னான் அறிவுரைகளை ரதிக்கு எடுத்து விடுங்கள் பார்ப்போம்...என்னை சாட்டி என்னைப் போல இருக்கும் மற்ற வாசகர்களும் பயன் பெறட்டும்.

  • Replies 77
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நேரம் சரியில்லாவிட்டால் அதைச் சரிக்கட்ட பேரை மாத்திப் பார்க்கலாம். நல்ல ஸ்ரைலான பேர் என்றால் பலர் பாய்ந்து வருவார்கள். தனிய இருக்கவேண்டியதில்லை.

ஒரு மனிதனை, அல்லது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டாரை, ஒரு மதத்தாரைக் காட்டுமிராண்டித் தன்மையுள்ளவர்கள் என்று சொல்லுவதற்குக் காரணங்களான குறிப்புகள் என்னவென்றால்:-

1.கைரேகை பார்த்தல்.

2.சோசியம் பார்த்தல்.

3.பிறந்த நேரம் கொண்டு சாதகப் பொருத்தம் பார்த்தல்.

4.சகுனம் பார்த்தல், அதற்குப் பலன் கணித்தல்.

5.நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம் என்பவைகளைப் பார்த்தல்.

6.ஆருடம் பார்த்தல், அதை நம்புதல்.

7.பட்சி சாத்திரம் பார்த்தல்.

8.ராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியன பார்த்தல்.

9.நல்ல நட்சத்திரம், கெட்ட நட்சத்திரம், நல்ல லக்னம், கெட்ட லக்னம், கெட்ட லக்னம் பார்த்தல்.

10.கழுதை கத்துதல் பலன் பார்த்தல், ஆந்தை அலறுதல் பலன் பார்த்தல்.

11.பல்லி கத்துவது குறித்துப் பலன் பார்த்தல்

12.பாம்பு குறுக்கே போவது பற்றிப் பலன் பார்த்தல்.

13.காக்காய் கத்துதலுக்குப் பலன் கூறுதல்.

14.பூனை குறுக்கே போவதற்குப் பலன் கூறுதல்.

15.ஒத்தைப் பார்ப்பான் தென்படுதல்.

16.முண்டை பார்ப்பாத்தி (விதவை) வருதல்.

17.நெருப்பு எதிரில் வருதல்.

18.மனிதன் தும்முவதன் (தும்மல்) பலன்.

19.விளக்கு அணைதல், அதற்குக் கெட்ட பலன் கூறுதல்.

20.கண் திருட்டி படுதல், திருட்டி கழித்தல்.

21.சாந்தி கழித்தல்.

22.பாடம் போடுதல் (நோய் தீருவதற்காக).

23.மந்திரம் செபித்தல்.

24.தழைகளைக் கொண்டு (வேப்பிலை) பாடம் போடுதல்.

25.சாமி ஆடுதல்.

26.வாக்குக் கேட்டல் (பூசாரியிடம்).

27.பேய் ஆடுதல் (இதில் நம்பிக்கை வைத்தல்)

28.பேய் ஓட்டுதல்.

29.வலம் சுற்றுதல், இடம் சுற்றுதல் (பிரதட்சணம்-அப்பிரதட்சணம்).

30.வலது கால், இடது கால், வலது கை, இடது கை, உயர்வு தாழ்வு கற்பித்தல்.

31.எண்களில் நல்ல எண்கள், கெட்ட எண்கள் எனக் கருதுதல் ( 3, 13, 8, 18 இவை கெட்ட எண்கள் என்பது ).

32.அதிசயங்கள் செய்வது, அற்புதங்கள் செய்து காட்டுவது பற்றிய நம்பிக்கைகள்.

33.ஆசீர்வாதம் செய்தல், வாழ்த்துக் கூறுதல் நம்பிக்கை கொள்ளுதல், வசவு (வைதலில்) சாபம் கொடுத்தல் ஆகியவைகளில் நம்பிக்கை வைத்தல்.

34.பிராத்தனை செய்துவிட்டு, தொழுதுவிட்டு வந்தவர்களைக் குழந்தைகளின் தலையில் வாயினால் ஊதச் சொல்லுவதில் குழந்தைக்கு நோய் சவுகரியமாகும் என்ற நம்பிக்கை.

35.அகால் – இயற்கைக்கு மாறான வகையில் செத்துப்போனவர்கள், பிசாசாகப் பிறந்து வந்து தொல்லை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை.

36.தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்த வஸ்துக்கள், சிலர் முகத்தில் விழிப்பதால் கெடுதி ஏற்படுதல் என்ற நம்பிக்கை.

37.அமாவாசை, சனிக்கிழமை முதலிய நாட்களில் கறிதின்னுவதில்லை என்ற நம்பிக்கை.

—தந்தை பெரியார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே எழுதிய பெரியாரின் அறிவுரைகளில் பெரியாருக்கே நம்பிக்கை இருந்திருக்குமோ தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நேரம் சரியில்லாவிட்டால் அதைச் சரிக்கட்ட பேரை மாத்திப் பார்க்கலாம். நல்ல ஸ்ரைலான பேர் என்றால் பலர் பாய்ந்து வருவார்கள். தனிய இருக்கவேண்டியதில்லை.

தங்கச்சியின்ரை பேரும் ஸ்ரைலான பேர்தானே யூ மீன் பொன்னம்மா,கனகம்மா,குஞ்சாச்சி,வள்ளியம்மை,அன்னப்பிள்ளை......... :lol:?

சொந்தப் புத்தி, சுய புத்தி, தன்னம்பிக்கை முக்கியம். இவைகள் இல்லாதவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

ஒருத்தரின் வாழ்க்கையை வழிநடத்துவது நாள், கோள்தான் என்றால் பேசாமல் போர்த்துக்கிட்டே தூங்கலாம். சகலமும் உங்களைத் தேடி வரும்

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணாவின் தொழிலுக்கு இலவச விளம்பரம்,

சந்தேக பேர் வழிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள், மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் தான், இந்த சாத்திரத்தை நம்புவார்கள்

கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் நிறைவாகக் கொடுப்பதில்லை.

ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமையை அவர்கள் சரியான வழியில் தொடர்ந்து பாவித்தால்/ செயல்ப் படுத்தினால் அவரவரின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யலாம்.

ஒரு முறை முயற்சித்து அதில் ஓரளவு பயன் பெறவில்லை என்றால், அதில் எது பிழைத்தது என்று தேடிக் கண்டு பிடித்து அடுத்த தடவை அதனை சரி செய்து முயற்சித்துப் பாருங்கள், முதல் முறையை விட இரண்டாம் முறை கூடிய அளவு பயன் பெறுவீர்கள். சுலபமான முறையில் கிடைக்கும் பலன்கள் நிலைத்து நிற்காது.

மற்றப் படி, சாத்திரம், ஜோசியம் இதில் எல்லாம் நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனமானது என்று சொல்லத் தெரியவில்லை.

சாதி, மதம், அந்தஸ்து, பணம், பதவி, கல்வி இது எல்லாம் பார்த்து ஒருவர் அமைத்தால் தான் ஒருத்தன் தனக்கு வாழ்க்கை கிடைக்கும் என்று இருந்தால் அப்படியே இருக்க வேண்டியது தான். கிடைகிறத்தை விட்டுபோட்டு பறக்கிறதுக்குத் தான் எம்மில் பலர் கனவு கண்டு வாழ்கையை விரையமாக்கிறோம். கடைசியில விதி, பிறந்த நேரம் பிழை, பாவி போன பாதை பள்ளமும் திட்டியும், குருவி இருக்கப் பனங்காய் விழுந்தது போல... இப்பிடி டையலோக்ஸ் வேற...

இந்த உலகத்தில ஒரு முறைத்தான் வாழப் போகிறோம், உங்கட மனச்சாட்சிக்கு நீங்கள் எப்படி இருக்கத் தோணுதோ அப்படியே இருங்கோ... உங்களுக்காக வாழ வேணும் என்று முதலில் நினையுங்கோ. அதற்கு உங்களில் அன்பானவர்களின் ஆசீர்வாதம் நிச்சயம் இருக்கும்.

திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ்ந்தால் மட்டும் தான் அது வாழ்க்கை என்று இல்லை. பலர் இவை இல்லாமலே சந்தோஷமாக வாழ்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருக்கும் ஒரு துறையில் நேரத்தை செலவழித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு இடம் பார்க்க வேணும் என்று நினைத்து இருப்பீர்கள், ஒரு ஆறு மாத, ஒரு வருட அவகாசம் உங்களுக்கு நீங்களே கொடுத்து அந்தப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். (உங்களால் முடியும் என்பதை முதலில் நீங்களே உங்கள் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.) புதிய நண்பர்களை சந்திக்க சந்தர்ப்பங்கள் தானாக வருவதில்லை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதில் நிச்சயம் ஒரு சந்தோசம், மனத்திருப்ப்தி இருக்கும். எம்மால் முடியும் என்ற ஒரு confident கட்டாயம் வரும். சந்தோசமா வாழ் எத்தனையோ வழி இருக்கு... ஆல் தி பெஸ்ட்! :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

ரதி பலநாளாக இங்கு கேட்டும் yarl இல் எவருமே கவனிக்காதது வருத்தம் தருகிறது . பாவம் ரதி . கொஞ்சம் கவனியுங்கள் அவரது கோரிக்கையை . நன்றி .

வணக்கம்

ரதி பலநாளாக இங்கு கேட்டும் yarl இல் எவருமே கவனிக்காதது வருத்தம் தருகிறது . பாவம் ரதி . கொஞ்சம் கவனியுங்கள் அவரது கோரிக்கையை . நன்றி .

உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

ரதி கேட்டிருப்பது கோரிக்கை இல்லை அண்ண அறிவுரையே... அந்த வகையில் கள உறவுகள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதில் ஏதாவது அவருக்கு பிரயோசனமாக இருப்பின் அவர் எடுத்துப் பயனடைவார் என்று நினைக்கிறேன். பாவம் என்று சொல்லுமளவுக்கு இதில என்ன இருக்கு? அடுத்தவர்ரைப் பாவம் என்று சொல்லுமளவுக்கு நாம் புண்ணியவான்களா?? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சியின்ரை பேரும் ஸ்ரைலான பேர்தானே யூ மீன் பொன்னம்மா,கனகம்மா,குஞ்சாச்சி,வள்ளியம்மை,அன்னப்பிள்ளை......... :lol:?

என்ன கு.சா அண்ணா இப்படி சொல்லிப் போட்டீங்கள் என்ட சொந்தப் பேரும் சூப்பராய் இருக்கும் :lol:

சொந்தப் புத்தி, சுய புத்தி, தன்னம்பிக்கை முக்கியம். இவைகள் இல்லாதவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

ஒருத்தரின் வாழ்க்கையை வழிநடத்துவது நாள், கோள்தான் என்றால் பேசாமல் போர்த்துக்கிட்டே தூங்கலாம். சகலமும் உங்களைத் தேடி வரும்

தப்பிலி,உடையார் உங்களிடம் சில கேள்விகள்? சொந்தப் புத்தி, சுய புத்தி, தன்னம்பிக்கை,போராடும் குணம் இருந்தும் ஒருத்தரால் ஜெயிக்க முடியா விட்டால் அதற்கு என்ன காரணம்?...ஜோசியம் பொய்யாகவே இருந்து விட்டு போகட்டும் ஆனால் அதை உங்கள் சொந்த வாழ்க்கையை அல்லது யதார்த்தத்தை அடிப்படையாக உங்களால் நிருபீக்க முடியுமா? அல்லது நிரூபீத்து உள்ளீர்களா?

குட்டி உங்கள் கருத்திற்கு நன்றி...நீங்கள் தான் நான் நான் எழுதிய பதிவை வாசித்து வடிவாய் விளங்கி கருத்து எழுதி உள்ளீர்கள்...என்னிடம் தன்னம்பிக்கை,போராடும் குணம் அதிகம் இருக்குது அது இருக்கிறதால் தான் யாழில் உங்களோடு கருத்தாடிக் கொண்டு இருக்கிறேன்...நான் கல்யாணம் கட்டாயம் கட்ட வேண்டும் என்டோ அல்லது அப்படி கட்டாமல் தனியே இருந்தால் செத்து விடுவேன் என்டோ எழுதவில்லை...நாம் பிறந்த நேரத்தை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படும் ஜோசியம் உண்மையா? பொய்யா என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

இது வரை கருத்து எழுதியவர்கள் ஜோசியம் பொய் என்ட வகையில் தான் கருத்து எழுதி உள்ளார்கள்...ஜோசியம் உண்மை என்டு ஒவ்வொரு வார‌மும் வார‌ பலனை கொண்டு வந்து இணைக்கும் தமிழ்சிறி கூட‌ எழுதவில்லை என்ன கார‌ணம் என்டு விளங்கவில்லை?...இதை எல்லாம் யாழில் எழுதி ஏன் வீண் விவாதத்தில் சிக்க வேண்டும் என நினைத்தார்களோ தெரியவில்லை

வணக்கம்

ரதி பலநாளாக இங்கு கேட்டும் yarl இல் எவருமே கவனிக்காதது வருத்தம் தருகிறது . பாவம் ரதி . கொஞ்சம் கவனியுங்கள் அவரது கோரிக்கையை . நன்றி .

உங்கள் உதவிற்கு நன்றி விசுகு அண்ணா...ர‌தி தைரியசாலி இவ்வளவு தைரியமாக என்னைப் பற்றி பதிவு போடுறன் எனக்குப் பிடித்திருந்தால் நேர‌டியாக மட‌ல் போட்டுக் கேட்க போறேன் அதெற்கு என்ன பயம்?...தன்னம்பிக்கை இல்லாதவர்கள்,தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தான் கேட்க பயப்படுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு நாளைக்குத் தான் ரதி தனியாய் இருக்கிறது சொல்லுங்கோ பார்ப்போம் :lol: ஜோசியம் பொய் என்று நிருபீக்கவாவது ரதி சீக்கிரம் கல்யாணம் கட்ட வேண்டும் ஆனால் ஒருத்தரும் சிக்க மாட்டேன் என்கிறார்களே

உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

ரதி கேட்டிருப்பது கோரிக்கை இல்லை அண்ண அறிவுரையே... அந்த வகையில் கள உறவுகள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அதில் ஏதாவது அவருக்கு பிரயோசனமாக இருப்பின் அவர் எடுத்துப் பயனடைவார் என்று நினைக்கிறேன். பாவம் என்று சொல்லுமளவுக்கு இதில என்ன இருக்கு? அடுத்தவர்ரைப் பாவம் என்று சொல்லுமளவுக்கு நாம் புண்ணியவான்களா?? :rolleyes:

:lol::D :D :D

சரி ரதி. ஜோசியம் சரியென வைப்போம். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பிறந்த குழைந்தைகளின் எதிர்கால வாழ்வு சமமாக உள்ளதா?

உதாரணமாக நீங்கள் பிறந்த அதே கணத்தில் (நேரத்தில்) பிறந்த குழந்தைகள் பலநூறு இருக்கும். எல்லோரினதும் வாழ்வும் ஒரே தரத்தில் உள்ளதா? அறிவியல் பூர்வமாக சாத்திரம் சரியென்று வைத்துக் கொண்டாலும், பூமியில் வேறு வேறு இடங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தூரங்களைப் பொறுத்து கோள்களின் தாக்கம் வேறு வேறு விதமாகவே இருக்கும்.

ஒரே நேரத்தில் உதிர்த்த விதையின் வீரியம் மாத்திரமல்ல அது விதைக்கப்படும் நிலம், சுற்றாடல், பராமரிப்பைப் பொறுத்தே செடியின் வளர்ச்சி அமையும். விதி என்று பராமரிக்காமல் விட்டால் எல்லாம் அம்போதான். ஜோசியத்தில் அதீத நம்பிக்கை உடையவர்கள் நடப்பதெல்லாம் சாத்திரத்தின் படியே அமைவதாக எடுத்துக் கொண்டு முயற்சி செய்வதில்லை.

தொடர் தோல்விகள் வருவது, முன்பே தோல்விக்குள்ளான முறைகளைப் திரும்பத் திரும்ப பாவிப்பதனால்.

எனக்கு ஒரு குறைபாடு இருந்தது. அதனால் சிறு வயதில் இருந்தே பலரின் கேலிக்கு உள்ளானேன். காலப்போக்கில் தன்னம்பிக்கையாலும் பயிற்சியாலும் அதனை மாற்ற முடிந்தது. விதியென்று விட்டிருந்தால் வீதியில் நின்றிருப்பேன்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும். அது உங்கள் விருப்புக்கு அமையவும் மற்றவர்களை பாதிக்காததாகவும் இருக்க வேண்டும். ஜோதிடம் etc போன்ற புறக் காரணிகள் அதற்கு தடையாக இருக்குமானால் அவற்றை ஒதுக்கி விடுவது நல்லது. :)

வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லம்மா

தடைக்கல்லும் உனக்கொரு படிக் கல்லம்மா :icon_idea:

Edited by thappili

எனது சொந்த அனுபவத்தின் படி சாத்திரம் உண்மையானதும் உண்டு. ஆனால் நான் சாத்திரத்தை முழுமையாக ஒருபோதும் நம்புவதில்லை, காலம் கூடாது என்று சோதிடர் சொன்னால் உதாரணமாக சனிக்கிரகம் கூடாதென்றால் சனிக்கிழமைகளில் (விரதம் பிடிக்க முடியுமானால் பிடிக்கலாம்) கோவிலுக்குப் போய் எள் எண்ணை எரிப்பது. எந்தக் கிரகம் கூடாதோ அந்தந்தக் கிரகத்திற்குப் பரிகாரம் செய்யலாம், அதற்கென ஒதுக்கப்பட்ட விசேடநாட்களில். இதில் நன்மை உண்டு. கல்யாணத்திற்கு என்ன கிரகமோ அதற்கான் பரிகாரத்தைக் செய்யவும். தனிய இருப்பது கடினம் தான் :( யாழ்களத்தில் திருமணமாகாதவர்கள் இருந்தால் தயவு செய்து ரதியுடன் உடன் தொடர்பு கொள்ளவும் :) சாத்திரத்தைப் பொய்யாக்க வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம். ரதியின் விருப்பப்பட்டி விரைவில் திருமணம் நிறைவேற இறைவன் அருள்பரிவாராக!!! :)

ஒரு மனிசனுக்கு பிறந்த நேரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? பிறந்த நேரம் நன்றாக இருந்தால் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் பிறந்த நேரம் சரியில்லா விட்டால் நாய் படா,பேய் படா கஸ்டத்தினை மனிசர் அனுபவிக்க வேண்டி வரும்.

இப்ப பாத்தீங்கள் என்டால் சில பேர் பணக்காரருக்கு பிள்ளையாய் பிறந்திருந்தாலும் அவர்களை பெரும் நோய் வாட்டும்,நன்றாக படித்த அறிவாளிகளுக்கு அறிவில்லாத மக்கள் பிறப்பார்கள்,நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலையில் இருக்க வேண்டும் என சில பேர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களுக்கு அது சரியே வராது ஆனால் சில பேர் எதைத் தொட்டாலும் அது உடனே துலங்கி விடும் இதெற்கு எல்லாம் என்ன காரணம்? நேரம்,நேரம்,நேரம்

எங்கட மதத்தில நாங்கள் பிறந்த நேரத்தை வைத்து கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பார்கள். நாங்கள் பிறக்கேக்குள்ள எங்களை நல்ல கோள்கள் பார்த்தால் நாங்கள் நன்றாக இருப்போமாம் அதே நேரத்தில் சனி போன்ற கெட்ட கிரகங்கள் பிடித்தால் விடவே விடாதாம்...ராகு,கேது பலன் நன்றாக இருந்தால் தொழில்,கல்வி சிறக்குமாம்

ஏழாம் இடம் கணவன்/மனைவியையும்,எட்டாம் இடம் குடும்ப வாழ்க்கையும்,ஒன்பதாம் இடம் குழந்தைகளையும் குறிக்குமாம்...இதில் என்ன பிரச்சனை என்டால் ஏழில் செவ்வாய் அல்லது எட்டில் செவ்வாய் என்டால் கல்யாணம் தடைப்படுமாம் அப்படி இல்லை என்டு கல்யாணம் முடித்தால் குடும்ப வாழ்க்கை பிரியுமாம் அல்லது அவர்களுக்குள் பிரச்சனை இருந்து கொண்டே இருக்குமாம் பிறகு குழந்தை பிறந்த பிறகு அக் குழந்தையின் பலன் நல்லதாய் இருந்தால் அவர்களுக்கு பிரச்சனை இருக்காதாம்.

இந்த செவ்வாய் தோசக்காரர் நன்றாக பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டுமாம் அப்படி திருமணம் செய்வதற்கு முன் வாழை மரத்திற்கு தாலி கட்டி பின்னர் வாழை மரத்தை வெட்டி ஏதோ பூசை செய்வினமாம்[எனக்கு ஞாபகம் இருக்கு ஜஸ்வர்யாராயும் வாழை மரத்திற்கு முதலில் தாலி கட்டினவ]...ஜாதகம் பார்க்காமல் காதலித்து கட்டினவர்கள் வந்து கேட்பார்கள் நாங்கள் ஜாதகம் பார்த்தோ கட்டினாங்கள் நாங்கள் நல்லாய் இல்லையோ என்டு ஆனால் நான் நினைக்கிறேன் அவர்கள் ஜாதகம் பார்க்காமல் கட்டி இருந்தாலும் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தம் இருக்கும் என்று ஆனால் அவர்கள் ஜாதகம் எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

இதை எல்லாம் ரதி ஏன் இங்கே வந்து எழுதுகிறாள் என நீங்கள் யோசிப்பது விளங்குது ஏன் என்டால் ரதிக்கு பிறந்த நேரம் சரியில்லையாம்...ரதிக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம் என்று மூன்று,நாலு ஜோசியர் சொல்லி விட்டார்கள் ஆனால் அவர்கள் சொன்னதில் எனக்கு பிடித்த விடயம் நான் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எனக்கு பிடித்தவரை விரும்பித் தான் கட்டுவேனாம்...ஆனால் எவ்வளவு நாளைக்குத் தான் ரதி தனியாய் இருக்கிறது சொல்லுங்கோ பார்ப்போம் :lol: ஜோசியம் பொய் என்று நிருபீக்கவாவது ரதி சீக்கிரம் கல்யாணம் கட்ட வேண்டும் ஆனால் ஒருத்தரும் சிக்க மாட்டேன் என்கிறார்களே அல்லது எவ்வளவு முயற்சி செய்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் ரதிக்கு திருமணம் நடக்கா விட்டால் ஜோசியம் உண்மை என்ட நிலைக்கு நாங்கள் வந்து தான் தீர வேண்டும்.

ஆகவே அன்பான வாசகப் பெரு மக்களே உங்கள் பொன்னான் அறிவுரைகளை ரதிக்கு எடுத்து விடுங்கள் பார்ப்போம்...என்னை சாட்டி என்னைப் போல இருக்கும் மற்ற வாசகர்களும் பயன் பெறட்டும்.

விசுகு அண்ண நீங்கள் மேற்கோள் காட்டியது எனது பார்வைக்குக் கோரிக்கையாகத் தெரியவில்லை. அறிவுரையாகவே தெரிகிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களே "வார ராசிபலன் கானொளியை" எனது பதிவில் இணைத்ததன் நோக்கம் என்னவோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி எங்கட ரதி அக்கா ஹிந்தி படத்த பாத்து பாத்து தனக்கு ஹிருத்க்ரோஷான் மாதிரி தான மாப்பிளை வேண்டுமெண்டா அவங்க அம்மா பாவம் எங்க போவா...?

ஈஸ்வரா....அந்த நெடுக்கண்ண சாமி தான் கருனை காட்டணும்.....

நான் என்னோட குல தெய்வத்த வேண்டிகிட்டேன்பா......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரத்த நானும் ஒரளவு நம்பிறன்..ஏண்.....அப்பிடினா..இந்த ஏழரை சனி பிடிச்சு கஸ்ட்டப்படுற ஆக்கள் நிறைய பேர பாத்திருக்கன்.......பட் இந்த ஏழரை முடிஞ்ஞ உடண அவங்கள் நல்லா வந்ததையும் பாத்திருக்கன்...சோ... முயற்சி....கொன்ஞம் நேரம்....அப்பிடியே தன்னம்பிக்கை.....இது எல்லாம் இருந்தா வாழ்கையில....ஜெயிக்கலாம்..................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களே "வார ராசிபலன் கானொளியை" எனது பதிவில் இணைத்ததன் நோக்கம் என்னவோ :unsure:

இங்கு சாத்திரம் பொய் எனக் கூறியவர்கள், தமது ராசிபலனை பார்த்து செக் பண்ணிக் கொள்ளவே இணைத்தேன்.

எனது ராசிக்கு, வித்தியாதரன் கூறும் ராசி பலன் 100% பொருந்துகின்றது.

ராசி பலன் பார்க்கும் போது.... அவர்கள் பிறந்த நேரத்தை துல்லியமாகக் பார்த்து, ராசியை கணித்த ஜோதிடரால் மட்டுமே... அதன் பலன்கள் தெளிவாக அமையும். பலர் அரை குறைச் சாத்திரியிடம் போய்... ராசியை கணித்து விட்டு, சாத்திரம் பொய் என வாதிடுவது ஏற்க முடியாது. ஒரு தேங்காங்காய்க்கும், பத்து ரூபா காசுக்கும் சாத்திரம் பார்ப்பவர்களை நம்பி ஏமாறுவதால் தான்... சாத்திரத்தில் உள்ள நம்பிக்கையை இழக்கிறார்கள். :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் எனக்கு சாத்திரத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. சிலருக்கு சில விஷயங்கள் பொருந்தி வரலாம் அதால எல்லோருக்கும் சரி வர வேணும் எண்டு இல்லை. உங்கள் தன நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால நீங்கள் பல விசயங்களை மாற்றலாம். உதாரணத்துக்கு என்னை எடுத்தால் நான் யூனி முடிக்கும் முன்பாகவே எனக்கு எனது துறையில் முழு நேர வேலை கிடைத்து விட்டது. என்னை விட பல மடங்கு கெட்டிக்காரரான என்னோட படித்த சிலர் இப்பவும் நல்ல வேலை கிடைக்காமல் எதோ கிடைத்த துறை சாரா வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுக்கு முக்கிய காரணம் பலருக்கு முயற்சி செய்ய விருப்பமில்லை அதோட சரியான வழி காட்டுதல் இன்மை, personality (தமிழ் தெரியவில்லை) இன்மை போன்ற பல காரணங்கள் இருக்கு. எது எது எப்ப எப்ப நடக்கணுமோ அது அது அப்ப அப்ப நடக்கும்.

மற்றயது கலியாணம் கட்டுறதுக்கு அவசரப் படாதேயுங்கோ. அவனவன் கட்டிப் போட்டு படுற பாடு..... நான் அடிக்கடி நினைப்பதுண்டு காதல் எண்டு ஒரு இழவை தொடங்காமல் கலியாணம் எண்டு ஒண்டை கட்டாமல் இருந்திருந்தால் புத்தப் புது B.M.W ஒண்டை வாங்கி சுதந்திரமா ஊர் சுத்தியிருக்கலாம். நான் வீட்ட வந்தால் என்ன வராமல் விட்டால் என்ன என்னை யாருமே கேக்கப் போவதில்லை. கலியாணம் கட்டிப் போட்டு நான் சலிப்பதாக யோசிக்க வேண்டாம் ஆனால் சிலவேளைகளில் இவள் மனிசி தாற அன்புத் தொல்லைகளை விட பேசாமல் கையை காலை வச்சுக் கொண்டு இருந்திருக்கலாமே எண்டு தோன்றும். குடும்ப காரரே, நான் சொல்லுறது சரி தானே?

  • கருத்துக்கள உறவுகள்

சாறி.. எனக்கு சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கையும் இல்ல.. அதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதனால.. இது உண்மையா பொய்யா என்று ஆராய்ச்சி செய்ய முடியல்ல. அறிவியலா இருந்தா கொஞ்சம் என்றாலும் விளங்கிக்கலாம்.. இது அஞ்ஞானம் ஆச்சே.. எப்படி விளங்கும். :lol:

அது சரி எங்கட ரதி அக்கா ஹிந்தி படத்த பாத்து பாத்து தனக்கு ஹிருத்க்ரோஷான் மாதிரி தான மாப்பிளை வேண்டுமெண்டா அவங்க அம்மா பாவம் எங்க போவா...?

ஈஸ்வரா....அந்த நெடுக்கண்ண சாமி தான் கருனை காட்டணும்.....

நான் என்னோட குல தெய்வத்த வேண்டிகிட்டேன்பா......

இப்ப எதுக்கு இது. சிவனேன்னு இருக்கிறவன பிடிச்சு.. சிங்கத்தட்ட கடிக்கக் கொடுக்கிற வேலை எதுக்கு. முடிஞ்சா நீங்க கருணை காட்டிக்கிங்க சாமி. ஆளை விடுங்க.. நா இந்த விளையாட்டுக்கே வரல்ல. கருணை.. பட்சாதாபம்.. அன்பு.. பாசம்.. நட்பு... இதெல்லாம் இப்ப மனிசாளுக்கு புரியிற பாசைகள் கிடையா. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே எழுதிய பெரியாரின் அறிவுரைகளில் பெரியாருக்கே நம்பிக்கை இருந்திருக்குமோ தெரியாது

ஹி.ஹி. பெரியாரின் விசயத்தில் இதுக்குப் பச்சை குத்தினவரும் நீங்களும் "சைவர்" ஆக இருக்கின்றீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...பல பேர் ஜோதிடம் பொய் அது,இது என கதைப்பார்கள் ஆனால் அவர்கள் களவாகவோ அல்லது அவர்களது மனைவி மூலமோ ஜோதிடம் பார்த்துக் கொள்வார்கள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தப்பிலிக்கும்,அலைமகளுக்கும், சுண்டலுக்கும்,தமிழ்சிறிக்கும்,தும்பளையானுக்கும் நன்றிகள்.

அது சரி எங்கட ரதி அக்கா ஹிந்தி படத்த பாத்து பாத்து தனக்கு ஹிருத்க்ரோஷான் மாதிரி தான மாப்பிளை வேண்டுமெண்டா அவங்க அம்மா பாவம் எங்க போவா...?

ஈஸ்வரா....அந்த நெடுக்கண்ண சாமி தான் கருனை காட்டணும்.....

நான் என்னோட குல தெய்வத்த வேண்டிகிட்டேன்பா......

சுண்டல் நெடுக்ஸ் பார்ப்பதற்கு ஹிருத்திக்ரோசன் மாதிரி இருப்பாரா என்ன :lol:

ஹி.ஹி. பெரியாரின் விசயத்தில் இதுக்குப் பச்சை குத்தினவரும் நீங்களும் "சைவர்" ஆக இருக்கின்றீர்கள்

சுத்த சைவர்களையோ,கிரிஸ்தவர்களையோ,முஸ்லீம்களையோ நம்பலாம் ஆனால் நாத்தீகம் பேசும் பெரியாரை பின்பற்றுவோரை மட்டும் நம்பவே முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த சைவர்களையோ,கிரிஸ்தவர்களையோ,முஸ்லீம்களையோ நம்பலாம் ஆனால் நாத்தீகம் பேசும் பெரியாரை பின்பற்றுவோரை மட்டும் நம்பவே முடியாது

:icon_mrgreen: "சைவர்" - Zero :icon_mrgreen: :icon_mrgreen:

சுத்த சைவர்களையோ,கிரிஸ்தவர்களையோ,முஸ்லீம்களையோ நம்பலாம் ஆனால் நாத்தீகம் பேசும் பெரியாரை பின்பற்றுவோரை மட்டும் நம்பவே முடியாது

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.