Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது உண்மையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்திரத்தில நம்பிக்கையில்லை எண்டு கனநாளாச் சொல்லிக்கொண்டிருந்தன்..! :rolleyes: பிறகு ஒருக்கால் அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனாப்பில.. :o

  • Replies 77
  • Views 17.8k
  • Created
  • Last Reply

நானும் சாத்திரத்தில நம்பிக்கையில்லை எண்டு கனநாளாச் சொல்லிக்கொண்டிருந்தன்..! :rolleyes: பிறகு ஒருக்கால் அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனாப்பில.. :o

என்னது? :o உங்களுக்கு ஒரு காலில அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனதா? :o:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

எல்லா மதத்திலையையும் சில குறை,நிறைகள் இருக்குது ஆனால் கடவுளை கும்புடுறவர்கள் எவ்வளவு அநியாயம் செய்தாலும் கடவுள் தண்டிப்பார் என்ட பயம் அடி மனதில இருந்து கொண்டே இருக்கும் ஆகையால் தவறு செய்யும் போது கொஞ்சம் பயப்படுவார்கள் ஆனால் பெரியாரைக் பின்பற்றுவர்கள் எல்லோரும் என்ன தவறு செய்யாத உத்தமர்களா?...அப்படி தவறு செய்திருந்து மன்னிப்பு கேட்கிறது என்டால் யாரிடம் கேட்பார்கள் பெரியாரிடமா?...ஒருவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரியாரிடம் என்ன தகுதி இருக்கு?...அப்படி மன்னிப்பு கேட்கிறது என்டால் எதைப் பார்த்துக் கேட்பீர்கள் அவர் தான் உருவ வழிபாடே இல்லை என்டு சொன்னவராச்சே!

பெரியாரைக் கும்பிடுபவர்கள் உருவ வழிபாடு,கடவுள் இல்லை என கதைப்பார்கள் ஆனால் களவாக வீட்டில் சாமி கும்பிடுவார்கள் இதற்கு உதாரணம் தற்போது சிறையில் இருக்கும் ராசா அல்லது மனைவி கும்பிடுவார் கேட்டால் அவவுக்கு கடவுள் பக்தி இருக்குது என்னாலே அவவினது சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பார்கள்[மனைவி என்ன தான் மட்டும் நல்லாய் இருக்க வேண்டும் என்டா கும்பிடப் போறார் நல்ல உதாரணம் நடிகர் சத்தியராஜ்],நல்ல நாள் பார்த்து தான் எல்லாம் செய்வார்கள்,சம்பிரதாயம் எல்லாம் மூட நம்பிக்கை என ஊருக்கு உபதேசம் செய்வார்கள் ஆனால் தாங்கள் அதை பின்பற்றுவார்கள் இதற்கு யாழிலே நல்ல உதாரணம் சபேசன் அவர்களது திருமணம் அவரும் மனைவியைத் தான் குற்றம் சாட்டினதாய் ஞாபகம் இதை மாதிரி கணக்க இருக்கு...நாத்தீகம் பேசிக் கொண்டு போலியாய் வாழ்வதை விட எதாவது சாமியை கும்பிட்டுக் கொண்டு நிம்மதியாய் வாழலாம்

இந்தியாவில் பிழைப்பதற்கும்,பெரும்புள்ளியாவதற்கும் கதைக்க தெரிந்திருந்தால் போதும்...அரசியல்வாதிகள் அதைத் தான் செய்தார்கள்,செய்து கொண்டு இருக்கிறார்கள் அதையே தான் பெரியாரும் செய்தார்

  • கருத்துக்கள உறவுகள்

என்னது? :o உங்களுக்கு ஒரு காலில அட்டமத்துச் சனியும், ஏழரைச் சனியும் வந்து போனதா? :o:lol:

யோவ் குட்டி.. என்ன லொள்ளா? :wub:

அது ஒரு கால் இல்லை.. ஒருக்கால் (once)..! தி கிரேட் வடமராச்சியில் பேச்சுவழக்கில இப்பிடிச் சொல்லுவினம்..! :icon_mrgreen:

எனக்கு என்னமோ ரதி அக்காச்சி பழைய குப்பைய கிளறுறமாதிரி இருக்கே........

நாரதரும் பழையபடி வந்துட்டார்..........

இதுல அசத்தபோவது யாருன்னு ... சரியா தெரியலியே! :rolleyes:

மதங்களைபத்தி இல்ல மதங்களின் மறுப்பு பத்தி பேச.....

ஈழத்தமிழனுக்கு எப்பிடிடா மனசுவருது?

என்னோட சூவை களட்டி உங்களுக்கு அடிக்கத்தரவா?

இல்லை ,

உங்க காலில இருக்குறத நீங்களே களட்டி உங்க தலைல அடிச்சுக்குறீங்களா!

கேவலம்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாற ஜப்பசி மாதம் முதல் அட்டமத்து சனியாம்...தேவையில்லாத பெயர் எல்லாம் கேட்க வேண்டி வருமாம்[சனியன் என்னை விடாது போல இருக்குது] ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சனியோ செவ்வாயோ வேறு எங்கும் இல்லை. அவரவர் மனசிலே தான் இருக்கு :icon_idea:

எல்லா மதத்திலையையும் சில குறை,நிறைகள் இருக்குது ஆனால் கடவுளை கும்புடுறவர்கள் எவ்வளவு அநியாயம் செய்தாலும் கடவுள் தண்டிப்பார் என்ட பயம் அடி மனதில இருந்து கொண்டே இருக்கும் ஆகையால் தவறு செய்யும் போது கொஞ்சம் பயப்படுவார்கள் ஆனால் பெரியாரைக் பின்பற்றுவர்கள் எல்லோரும் என்ன தவறு செய்யாத உத்தமர்களா?...அப்படி தவறு செய்திருந்து மன்னிப்பு கேட்கிறது என்டால் யாரிடம் கேட்பார்கள் பெரியாரிடமா?...ஒருவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரியாரிடம் என்ன தகுதி இருக்கு?...அப்படி மன்னிப்பு கேட்கிறது என்டால் எதைப் பார்த்துக் கேட்பீர்கள் அவர் தான் உருவ வழிபாடே இல்லை என்டு சொன்னவராச்சே!

பெரியாரைக் கும்பிடுபவர்கள் உருவ வழிபாடு,கடவுள் இல்லை என கதைப்பார்கள் ஆனால் களவாக வீட்டில் சாமி கும்பிடுவார்கள் இதற்கு உதாரணம் தற்போது சிறையில் இருக்கும் ராசா அல்லது மனைவி கும்பிடுவார் கேட்டால் அவவுக்கு கடவுள் பக்தி இருக்குது என்னாலே அவவினது சுதந்திரத்தில் தலையிட முடியாது என்பார்கள்[மனைவி என்ன தான் மட்டும் நல்லாய் இருக்க வேண்டும் என்டா கும்பிடப் போறார் நல்ல உதாரணம் நடிகர் சத்தியராஜ்],நல்ல நாள் பார்த்து தான் எல்லாம் செய்வார்கள்,சம்பிரதாயம் எல்லாம் மூட நம்பிக்கை என ஊருக்கு உபதேசம் செய்வார்கள் ஆனால் தாங்கள் அதை பின்பற்றுவார்கள் இதற்கு யாழிலே நல்ல உதாரணம் சபேசன் அவர்களது திருமணம் அவரும் மனைவியைத் தான் குற்றம் சாட்டினதாய் ஞாபகம் இதை மாதிரி கணக்க இருக்கு...நாத்தீகம் பேசிக் கொண்டு போலியாய் வாழ்வதை விட எதாவது சாமியை கும்பிட்டுக் கொண்டு நிம்மதியாய் வாழலாம்

இந்தியாவில் பிழைப்பதற்கும்,பெரும்புள்ளியாவதற்கும் கதைக்க தெரிந்திருந்தால் போதும்...அரசியல்வாதிகள் அதைத் தான் செய்தார்கள்,செய்து கொண்டு இருக்கிறார்கள் அதையே தான் பெரியாரும் செய்தார்

மத வழிபாடு செய்பவர்கள் எல்லாம் தாம் விடும் குறைகளைக்குப் பிராயச்சித்தமாகக் கடவுளிற்க்கு கையூட்டுக் கொடுப்பார்கள் இல்லை கடவுளைப் பார்த்து வேண்டுதல் செய்வார்கள் ஜெபம்

செய்வார்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது மனதிற்க்கு பட்ட முறையில் நேர்மையாக நடப்பார்கள்.என்னைப் பொறுத்தவரை எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நான் நேர்மையாகவே நடந்திருக்கிறேன்.பொய் களவு ஏமாற்று ஏன் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பாத்ரியார் பிக்குகள் வரை கடவுள் வழிபடுபவர்கள் எத்தகைய குற்றங்களை கொடுமைகளைச் செய்கிறார்கள் என்பதை நாளாந்த்தம் செய்திகள் வாயிலாக காண்கிறோம்.பெரியார் தனது தந்தையின் சொத்துக்களை கடவுள் மறிப்பிற்காக இழந்தவர், அவரிற்கு கடவுள் மறுப்புப் பேசித் தான் சொதுக்களை இழக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

திருமணம் போன்ற விடயங்கள் பல பேர் சம்பந்தப்பட்டது, ஒருவர் மட்டும் தனது விருப்பு வெறுப்புக்களை இன்னொருவர் மீது திணிக்க முடியாது.கடவுள் மறுப்பு என்பது சுய சிந்தனையில் இருந்து வருவது.திணிப்புக்கள் மூலம் அல்ல. நீங்கள் திருமணம் செய்த பின் இதனை உணருவீர்கள்.மேலும் சொல்ல விருப்பம் ஆனா எழுத நேரம் இல்லை. நீங்கள் முன்பு ஒரு ஒன்று கூடலை நடாத்த ஆயுத்தம் செய்தீர்கள் அதற்க்கு என்ன நடந்தது? லண்டனில் நாடாத்தினால் எனது ஆதரவு உண்டு, யாழ்க் களம் மூடப்படும் முதல் சிலரை நேரே சந்திக்க விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எந்த மதத்திலும், கடவுள்களிலும், பேய், பிசாசு, பூதங்களிலும் சின்ன வயதில் இருந்தே (பெரியார் யார் என்று தெரிய முன்னரே) நம்பிக்கை இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன (பரம்பரையாக ஒரு கோயில் இருந்ததும் ஒரு காரணம்). ஆனால் மதங்கள் சொல்லும் தத்துவங்கள், கதைகள் எல்லாம் வாசிக்கப் பிடிக்கும். ஆனால் களவாகவோ/களவில்லாமலோ சாமி மீது பயபக்தி எல்லாம் வருவதில்லை. நமக்கு வரும் எல்லா நன்மை/தீமைகளுக்கும் நாமே காரணம் (அல்லது அரசாங்கம்/சமூகம் காரணம்) என்று காரண காரியங்களைப் பகுத்து அறியும் பக்குவம் இருந்தால் சாத்திரம், பலன் எல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை இழந்த சொத்தை மும்மடங்காக திரும்ப பெற்றிருப்பார்

எனக்கு எந்த மதத்திலும், கடவுள்களிலும், பேய், பிசாசு, பூதங்களிலும் சின்ன வயதில் இருந்தே (பெரியார் யார் என்று தெரிய முன்னரே) நம்பிக்கை இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன (பரம்பரையாக ஒரு கோயில் இருந்ததும் ஒரு காரணம்). ஆனால் மதங்கள் சொல்லும் தத்துவங்கள், கதைகள் எல்லாம் வாசிக்கப் பிடிக்கும். ஆனால் களவாகவோ/களவில்லாமலோ சாமி மீது பயபக்தி எல்லாம் வருவதில்லை. நமக்கு வரும் எல்லா நன்மை/தீமைகளுக்கும் நாமே காரணம் (அல்லது அரசாங்கம்/சமூகம் காரணம்) என்று காரண காரியங்களைப் பகுத்து அறியும் பக்குவம் இருந்தால் சாத்திரம், பலன் எல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

கிருபன்கடவுளை நம்பா விட்டாலும் எம்மை மீறிய சக்தி இருக்கிறதை நம்பத் தானே வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத வழிபாடு செய்பவர்கள் எல்லாம் தாம் விடும் குறைகளைக்குப் பிராயச்சித்தமாகக் கடவுளிற்க்கு கையூட்டுக் கொடுப்பார்கள் இல்லை கடவுளைப் பார்த்து வேண்டுதல் செய்வார்கள் ஜெபம்

செய்வார்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது மனதிற்க்கு பட்ட முறையில் நேர்மையாக நடப்பார்கள்.என்னைப் பொறுத்தவரை எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட நான் நேர்மையாகவே நடந்திருக்கிறேன்.பொய் களவு ஏமாற்று ஏன் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பாத்ரியார் பிக்குகள் வரை கடவுள் வழிபடுபவர்கள் எத்தகைய குற்றங்களை கொடுமைகளைச் செய்கிறார்கள் என்பதை நாளாந்த்தம் செய்திகள் வாயிலாக காண்கிறோம்.பெரியார் தனது தந்தையின் சொத்துக்களை கடவுள் மறிப்பிற்காக இழந்தவர், அவரிற்கு கடவுள் மறுப்புப் பேசித் தான் சொதுக்களை இழக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

மதத்திலுள்ள ஒருசிலர் செய்யும்தவறுகளும்....பெரியார் நாமத்தை சொல்லி ஒருசிலர் செய்யும் தவறுகளும் கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கின்றன.ஒரு முறை அண்ணார்ந்து வானத்தையும் பூமியையும் பாருங்கள்...இயற்கையும் அன்று போல் இன்றில்லை.

ஆகவே ஒருவர் நல்லவராக இருப்பதற்கும் கெட்டவராக இருப்பதற்கும் கடவுள் நம்பிக்கை என்பது ஒரு காரணம் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இங்கே பெரியார் மட்டும் அல்ல இன்னும் பலர் கடவுள் மறுப்புப் பற்றி பேசி உள்ளார்கள், பரிணாமக் கோட்பாட்டை முன் மொழிந்த டார்வின் முதல் இன்றைய ரிச்சட் டாக்கின் முதல் ஏராளமான அறிவியலாளர்கள் கடவுள் மறுப்புப் பற்றி எழுதியும் பேசியும் உள்ளார்கள்.அவர் அவர் தமது சுய சிந்தனையில் சீர்தூக்கிப் பார்த்தே முடிவுக்கு வர வேண்டும்.பெரியாரும் அதனைத் தான் சொன்னார்.

ரதி அக்கா துலாம் ராசி போல இருக்கு

இப்போது ஏழரை சனி சனி நடக்குது ஐப்பசி ல இருந்து ஜென்மத்து சனியாம்... முடியல

படிப்பு வேலை போன்ற விசயம்களில் இதுகள் பார்க்கிறது இல்லை but திரு மணம் என்று வரும் போது பார்க்க தான் வேணும் என்னை பொறுத்த வரையில் ஒரே ஒரு முறை வாழும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை.. :)

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரம்.. கடவுள் மறுப்பு.. பெரியார் பிரச்சாரமாக.. பரினாம வளர்ச்சி காண்பதை இத்தலைப்பில் தெளிவாகக் காணலாம். :lol::D

கிருபண்ணா.. நீங்கள் பெரியார் கொள்கையை (பெரியாரே அவரின்ர கொள்கையில் தெளிவற்றவராகவே இருந்துள்ளார்.. அது கிடக்க) கடைப்பிடிக்கிறவரென்றால்.. ஏன் கோவில் திருவிழாவுக்கு.. ஓ.. அங்க கடை போடுவாங்கல்ல..... இலவசமா உணவு கொடுப்பாங்கல்ல...! :lol::D

ரதி நீங்கள் சந்திரனின் ஆட்சி பெற்ற ஒரு நபராக இருப்பீர்கள் என நினைக்கின்றேன் . ஏனெனில் ,உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி வளர் தேய் பிறைகளைக் காணுகின்றேன். சாத்திரம் பார்பது பொய்யா? உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க , பூமிக்கு அருகில் இருக்கும் துணைக்கோளான சந்நிரன் பூரணை நாளில் அதன் காந்தப்புலன்களால் பூமியில் மாற்றங்கள் வருகின்றன உ+ ம் கடல் அலைகளின் எழுச்சி, விலங்குகளின பதட்ட நிலை , மனப்பிறள்வு கொண்டவர்களில் அதிக மூரக்கம் போன்றவை, அறிவியல் ரீதியாக நிரூபணமானவை. ஆக வளர்ச்சி அடைந்த சந்திரனால் பூமியில் உள்ள உயிரினங்களில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது ,எமது சூரியமண்டலத்திலுள்ள மற்றய கிரகங்களின் செயற்ப்பாடுகளால் நிட்சமாக பூமியின் உயிரனங்களின் செயற்பாடுகளில் மாற்றங்கள் நிகழும் . ஆனால், அது ஒருவர் பிறக்கின்ற நேரம் சரியாக இருக்கும் பொழுது உள்ள கிரகநிலைகளின் செயற்பாட்டைப் பொறுத்ததே. மேலும் ஒரு குழந்தை பிறப்பு நேரம் எதிலிருந்து என்பதிலேயே பல சர்ச்சைகள். பன்னீர்குடம் உடையும் போதா , கால்தெரியும்போதா , அல்லத காலிலருந்து தலை வந்துமுடிந்ததின் பின்உள்ள நேரமா ?என்று இருக்கும் பொழுது, எப்படி ஒருவரின் ஜாதகத்தைக் கணிக்கமுடியும்? எனது அப்பாச்சி பகிடியாக ஒருகதை சொல்லுவா, " அந்தக்காலத்தில் குழந்தை பிறக்கும்பொழுது எலுமிச்சம் பழத்தை மருத்துவச்சி வெளீல உறுட்டி விடுவாவாம், பிறந்த நேரத்தைச் சொல்ல. இதிலதான் சாத்திரியின் சீத்துவக்கேடு இருக்கும்" எண்டு சொல்லுவா. ஒருவரின் நல்லது கெட்டது சகலதும் அவர் எடுக்கின்ற முடிவிலேயே இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சூரியனைப் போன்றவனே. எப்படி சூரியனில் எரிசக்தி குறைந்து கடைசியில் பிண்டமாகின்றதோ ,அப்படியே மனிதனில் தேடல் என்ற எரிசக்தி கூடிக்குறையும் பொழுது அவன் வாழ்வில் ஏற்ரத்தாழ்வுகள் வருகின்றன. இதைத் தான் எங்கடை உருத்திராட்சங்கள் சாத்திரத்தைக் காட்டித் தப்பித்துக்கொள்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் சந்திரனின் ஆட்சி பெற்ற ஒரு நபராக இருப்பீர்கள் என நினைக்கின்றேன் . ஏனெனில் ,உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி வளர் தேய் பிறைகளைக் காணுகின்றேன். சாத்திரம் பார்பது பொய்யா? உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க , பூமிக்கு அருகில் இருக்கும் துணைக்கோளான சந்நிரன் பூரணை நாளில் அதன் காந்தப்புலன்களால் பூமியில் மாற்றங்கள் வருகின்றன உ+ ம் கடல் அலைகளின் எழுச்சி, விலங்குகளின பதட்ட நிலை , மனப்பிறள்வு கொண்டவர்களில் அதிக மூரக்கம் போன்றவை, அறிவியல் ரீதியாக நிரூபணமானவை.

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

yarl களத்தில இண்டைக்கு ஒரு கொலை விழ போகுது போல இருக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

yarl களத்தில இண்டைக்கு ஒரு கொலை விழ போகுது போல இருக்கு :lol:

ஓம் வீணா.. எதுக்கும் கோமகன் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது..! :unsure::lol:

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

ஐய்யா டங்குவார் என்ற இசை, எனது கருத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள். நான் ரதி அக்காவிற்கு சொன்ன செய்தி .அவா, எண்கணித சாஸ்திரத்தின்படி 2 ஆம் இலக்கத்தில், அதாவது ( 2 ,11 ,29 )பிறந்திருக்க வேண்டும் எனபதே. இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஒருபோதும் நிலையான மனதுடன் முடிவுகளை எடுக்கமாட்டார்கள். அடக்கடி வளர்பிறை தேய்பிறை மாதிரி மாறிக்கொண்டிருப்பார்கள். ரதியக்காவின் எழுத்துக்களில் பல இடங்களில் நான் இதை அவதானித்ததுண்டு. எனக்கு வந்த சந்தேகத்தை இயல்பாகவே அவாவிடம் கேட்டேன். மற்றும்படி நீங்கள் நினைக்கிறமாதிரியில்லை சரியோ? தகடு போடிற விளையாட்டெல்லாம் வேண்டாம் டங்கு :D :D :D .

இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஒருபோதும் நிலையான மனதுடன் முடிவுகளை எடுக்கமாட்டார்கள். அடக்கடி வளர்பிறை தேய்பிறை மாதிரி மாறிக்கொண்டிருப்பார்கள்.

சந்திரனின் ஆதிக்கம் என்று சொன்னதில் பிழையில்லை கோமகன். அதற்குப் பிறகு எழுதின உதாரணம்தான் பிரச்சனை. உங்களுக்கு அட்டமத்துச் சனி தொடங்கிட்டுப் போல கிடக்கு. :icon_mrgreen:

கோமகன் அண்ணா வுக்கு சாத்திரமும் பார்க்க தெரியும் போல இருக்கு எதுக்கும் இண்டைய தினசரி பலன் உங்களுக்கு என்ன சொல்லுது எண்டும் ஒருக்கா பார்த்து வையுங்க.. :icon_mrgreen:

எடுத்த காரியத்தை தங்கு தடையின்றி சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் அனுகூலமான உதவி கிடைக்கலாம். உறவினர் ஒருவர் உங்களை பாராட்டிப் பேசி காரியம் சாதிக்கலாம். நண்பர்கள் சிலர் உங்களுக்காக செலவு செய்யலாம். வரவேண்டிய பணம் ஒன்றை கேட்டு வாங்குவீர்கள். தற்பெருமை அதிகரிக்கும்.

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரம்.. கடவுள் மறுப்பு.. பெரியார் பிரச்சாரமாக.. பரினாம வளர்ச்சி காண்பதை இத்தலைப்பில் தெளிவாகக் காணலாம். :lol::D

கிருபண்ணா.. நீங்கள் பெரியார் கொள்கையை (பெரியாரே அவரின்ர கொள்கையில் தெளிவற்றவராகவே இருந்துள்ளார்.. அது கிடக்க) கடைப்பிடிக்கிறவரென்றால்.. ஏன் கோவில் திருவிழாவுக்கு.. ஓ.. அங்க கடை போடுவாங்கல்ல..... இலவசமா உணவு கொடுப்பாங்கல்ல...! :lol::D

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

இல்லை!. சுழற்சி (cycle) தான் காரணம் :icon_mrgreen: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணா நான் துலாம் ராசி இல்லை நான் மீனராசி[நட்சத்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன்]...கோமகன் நான் சந்திரனின் ஆட்சி பெற்றவரோ எனக்குத் தெரியாது ஆனால் நான் பிறக்கும் போது என்னை சனி தான் பார்த்ததாம் அதனால் அடிக்கடி சனி மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துமாம்...மற்றது நான் பிறந்தது 14 ம் திகதி[ஜந்தாம் இலக்கம் அதிஸ்டம் என சொல்வார்கள் ஆனால் எனக்கு இது வரை ஒரு அதிஸ்டமும் வரவில்லை]...மற்றது என்ன முடிவு எடுத்தாலும் ஆறுதலாக யோசித்து நிலையான முடிவு தான் எடுக்கிறது ஆனால் சில நேரங்களில சில பிரச்சனைகள் வரும் போது தான் இப்படியான பதிவுகளை போடுறது...யாழில் கொண்டு வந்து போட்டால் பல பேரினது கருத்துக்களை கேட்கலாம் ஆனால் முடிவு என்னோடது

இப்ப என்ன.. ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

யாழுக்கு வந்து உங்கள மாதிரி ஆட்களோடு சேர்ந்து கதைத்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் :mellow:

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

கிருபன் நீங்கள் என்பீல்ட் பக்கமோ :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.