Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட காத்திருக்கிறோம்

Featured Replies

ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட

கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் :டோக்ரா

ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார்.

இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா அளித்த பேட்டி ஒன்றில்,

’’ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு கவர்னரிடம் இருந்து வர வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். கவர்னரின் உத்தரவு வந்த 7-வது நாள் தூக்கு தண்டனை வேலூர் ஜெயிலில் வைத்து நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeer...ws.aspx?N=59631

===================================================

மரணதண்டனை தீர்ப்பு: அனைத்துலக மன்னிப்பு சபை எதிர்ப்பு : http://www.yarl.com/...showtopic=90400

Plea to cancel the death sentence wrongly given to innocent Perarivalan: http://www.yarl.com/...showtopic=90282

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நன்மைக்கே!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். இது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு.

அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. ராஜீவ் போன்ற போர்க்குற்றவாளிகளை.. நீதியின் முன் நிறுத்தி தண்டித்ததும் இல்லை. ஏன் இது என்று எனக்குப் புரியவில்லை.. இந்த உலகில் அப்பாவிகள் மீதும்.. அதிகாரமற்றவர்கள் மீதும் தானா நீதி காட்டப்படுகிறது.

சரி அவற்றை வழமை போல "மறப்போம் மன்னிப்போம்"..( ராஜீவ் காந்தியை கொன்றால் அது குற்றம்.. அதை ஏற்றுக் கொள்வோம்.. ஆனால் ராஜீவ் காந்தி எங்களைக் கொன்றால் மறப்போம் மன்னிப்போம்... நல்ல கொள்கை....) அதன்படி நின்றால் கூட..

இந்தியாவால் ராஜீவ் கொலை தொடர்பில் பிரதான குற்றவாளிகளாகச் சொல்லப்பட்டு பிரபாகரனும்.. பொட்டு அம்மானும் இன்னும் 60,000 அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டு விட்டனர். (ஐநாவும்..இந்தியாவும் சிங்களமும் அறிவித்ததற்கு அமைய)

இந்தக் கொலையில் இந்திய அதிகார வர்க்கத்தின் விருப்பப்படி எல்லோரும் பழிவாங்கப்பட்டு விட்டனர். இந்தக் கொலையில் நேரடியாக பங்கேற்றதாகச் சொல்லப்பட்ட பலரும் (பிரபாகரன்.. பொட்டு அம்மான்.. ஒற்றைக்கண் சிவராசன்..) என்று எல்லோருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே கொல்லப்பட்டுள்ளனர்.. அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளனர்.

நளினி உட்பட்ட இந்த 4 பேரும்.. உண்மையில் இந்திய குற்றச்சாட்டின் பிரகாரம்... இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தப்படவர்கள் கிடையாது. கொலைக்கு ஏதோ ஒரு வழியில் தெரிந்தோ தெரியாமலோ உதவினர் என்று தான் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் உத்தரவுக்கு அமைய வாக்குமூலங்களைப் பெறுவதில் கில்லாடிகள். இதனை உலகமே அறியும். அந்த வகையில் இந்த மரண தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆக.. 1991 இல் இருந்து ராஜீவ் காந்தி கொலை என்பதனூடாக.. இந்திய பிராந்திய நலன் திட்டமிட்டு காக்கப்படும் நடவடிக்கைகளும்.. காங்கிரஸ் கட்சியினூடான.. நேரு குடும்ப ஆட்சி தொடர்வதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தக் கொலையை வைத்து இந்தியம் தனது அதி உச்ச பலனை அடைய முடிவு செய்திருக்கிறது. ஆனால்.. ராஜீவ் என்ற அந்தக் கொடூரனால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் இன்று வரை கிடைக்கவில்லை. அதேபோல் தான் இந்த 4 அப்பாவிகள் மீதும்.. நீதி செயற்படவில்லை. நளினிக்கு.. மன்னிப்பு அளிக்கப்பட்டும்.. தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளார். மாறாக மீண்டும் மீண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப இந்திய நீதித்துறை பயன்படுத்தப்படும் மிகக் கேவலமான தன்மையே காணப்படுகிறது. இது தெற்காசியாவில் ஒரு தீராத நோயும் கூட. முற்றும் முழுதான ஜனநாயக விரோதச் செயலும் கூட.

இந்த 3 பேருக்குமான மரண தண்டனை என்பதை தமிழக காங்கிரஸ் வாழ்த்தி இருப்பதோடு புலிகளே தங்கள் எதிரிகள் என்றும் கூறி இருக்கின்றனர். இது தான் காங்கிரஸின் நிலைப்பாடு என்றால்.. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை வீடு தேடி வந்து கொன்ற.. ராஜீவ்.. சோனியா உட்பட முழுக் காங்கிரசும் அவர்களின் எதிரிகள். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.

ஆனால் இப்போது உள்ள பிரச்சனை.. இந்த 3 அப்பாவிகளின் உயிர்களையும் காங்கிரஸ் தனது பழிவாங்கல் கொள்கைக்காக பலியிடுவதில் இருந்து பாதுகாப்பது தான்.

சோனியா காங்கிரஸ் மீண்டும்.. இந்த ராஜீவ் கொலையை வைத்து இன்னொரு நாடகத்தை ஆட தொடங்கி இருக்கிறது. அண்மைய தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியைக் கண்டது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் எழுச்சியும் சீமானின் துணிச்சலுமே காரணமாக இருந்தது.சீமானுக்கு இந்த 3 பேருடனும் சிறையில் தொடர்பிருந்தது. இதனை சீமானே வெளியில் சொன்ன போது காங்கிரஸ் அதனை பெரிதுபடுத்தவில்லை... ஆனால் உள்ளூர ரசித்தது.

இப்போ காங்கிரஸின் ஆயுள் தமிழகத்தில் மோசமாக உள்ள நிலையில்.. சீமானை விழுத்த வேண்டிய ஒரு தேவை சோனியாவுக்கு எழுந்துள்ளது. அதற்கு உள்ள ஒரே மாற்றீடு.. ராஜீவ் கொலை. மீண்டும் அந்தக் கொலையை கிளறி.. அதன் உச்ச இலாபத்தின் இன்னொரு பக்கத்தை உருசிக்க காத்திருக்கிறார்.. புற்றுநோயாளி சோனியா.

நிச்சயம் பேரறிவாளனை முன்னிறுத்தினால் சீமான் சீறுவார் என்று அறிந்து கொண்ட காங்கிரஸ்.. இந்திய ஜனாதிபதியாக இருக்கும் சோனியாவின் பொம்மையைக் கொண்டு.. இவ்வளவு காலமும் கிடப்பில் கிடந்த கருணை மனுவை நிராகரிக்கச் செய்ததாக ஒரு செய்தியை பரப்பி விட்டுள்ளனர். உண்மையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டமை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. அது தேவைக்கு ஏற்ப வெளி வரும்.

ஆனால் அதற்கிடையில் சீமானை தூக்கி உள்ள போடு என்று பொலிஸ் கமிசனுருக்கு மனுப் போயுள்ளது. ஆக.. இந்த 3 பேரையும்.. ராஜீவ் கொலையையும் வைத்து இன்னும் என்னென்னவெல்லாத்தையும் சம்பாதிக்க முடியுமோ அவற்றை சம்பாதிக்க சோனியா திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவே தெரிகிறது. இது அவருக்கே ஓவரா தெரிந்தாலும்.. தமிழ் மக்களின் பலவீனத்தை நன்கு பயன்படுத்தி அவர் உச்ச பலன்களை அனுபவிக்கிக்கத் துடிக்கிறார். இதற்கு தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளும் மறைமுகமாக.. தமது அரசியல் இலாபத்திற்காக ஆதரவளித்தே வந்துள்ளன... வருகின்றன.

ஆனால்.. இதனை தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. உலகத் தமிழினத்துக்கு உண்டு. ராஜீவ் இந்தியர்களுக்கு அப்பாவியாக தலைவராக இருக்கலாம். ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரகடனப்படுத்தப்படாத போர்க்குற்றவாளி. அதற்கான ஆயிரம் சான்றுகள் அவர்களிடம் உண்டு. ராஜீவ் மேற்கொண்ட படுகொலைகளுக்காக சோனியாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்டிருக்க வேண்டிய தமிழர்கள் இன்று தங்கள் 3 பேரின் உயிரைக் காக்க.. சோனியாவின் காலில் விழுந்து கெஞ்சும் துர்ப்பாக்கியத்தைப் பார்க்கிறோம்.

தமிழர்களின் சாணக்கியமற்ற விவேகமற்ற மறப்போம் மன்னிப்புக்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. நாளை இந்த 3 அப்பாவிகளும் தூக்கில் தொங்குவார்களாக இருந்தால்.. அவர்களுக்காக குரல் கொடுத்து சீமான் சிறைக்குள் வாடுவாராக இருந்தால்.. அதற்கு தமிழர்களின் செயல் திறனற்ற.. தூர நோக்கற்ற.. செயற்பாடுகளே காரணம். ராஜீவ் கொலை அல்ல..!

இதனை தமிழர்கள் இன்றே உணர்ந்து தகுந்த வழியில் செயற்படவில்லை என்றால் இந்த ராஜீவ் கொலை என்றும் தமிழர்களைப் பழிவாங்கும் இந்திய நாகாஸ்திரமாக நேரு குடும்ப காங்கிரஸ் கட்சிக்கு அமையப் போவது உறுதி..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று தண்டனை விதிக்கக்கூடிய அளவில்தான் இன்னமும் நம் சட்டம் பணியாற்றுகிறதா என்பதை சட்டத்தை உருவாக்குகிறவர்களும், பயன்படுத்துபவர்களும் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

"கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்பது இந்தியா தனது தேசப்பிதாவாக கொண்டாடும் உத்தமர் காந்தியின் வாக்கு.

பணத்தின் மீது காந்திப் படத்தை அச்சடிக்கும் இந்தியா, காந்தியின் சிந்தனைகளுக்கு ஓரளவுக்காவது மதிப்பு கொடுக்குமாயின், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்தினை சட்டத்திருத்தம் மூலமாக ஒழித்திட முன்வந்திட வேண்டும். மூன்றாம் உலக நாடுகள் பலவும் தங்களது நாடுகளில் இந்த காட்டுமிராண்டித்தனத்தினை ஏற்கனவே ஒழித்துவிட்டன. காந்தியால் சுதந்திரம் பெற்ற அகிம்சை நாடு, புத்தன் பிறந்த மண் என்றெல்லாம் உலகில் அறியப்படும் இந்தியா இன்னமும் இதை ஒழிக்காதது வெட்கக்கேடு. மவுண்ட் பேட்டனை கொடூரமாக கொன்ற கொலைகாரனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை விதிக்கவில்லை.

ஒரு மனிதனுக்கு மரணம் என்பதுதான் இறுதிநாள். யோசித்துப் பார்த்தால் நீதிமன்ற ஆணையின் பேரில் தூக்குத்தண்டனை ஒருவனுக்கு இறுதிநாளாக அமைந்துவிட்டால் அது எப்படி தண்டனை ஆகுமென்று தெரியவில்லை. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்தி சிரிக்கும் என்பது உறுதி.

சர்வதேச நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. பல்லாண்டுகளாக கரடியாக கத்தி வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 135 நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த காட்டுமிராண்டித் தண்டனையை ஒழித்துவிட்டன. சுமார் 30 நாடுகளில் மரணதண்டனை வழக்கத்தில் இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் இத்தண்டனையை விதிக்கவில்லை. சுமார் 60 நாடுகளில் தான் இக்கொடுமை வழக்கத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிற்பாடு கருணையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கும் முன்னுதாரணங்கள்தான். தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் தமிழக அரசிற்கு பங்கு இருந்தது . மனிதநேய அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும். கொள்கையளவில் மரணத்தண்டனையை எதிர்ப்பது என்பது பகுத்தறிவாளர்களின் கடமையும் கூட . இந்திய அளவில் முடியாவிட்டாலும் தமிழக அளவிலாவது மரணத்தண்டனை என்ற அரச பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுமேயானால் மனிதம் இருக்கும் வரை தமிழகத்தின் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும்.

இதில் கேவலம் என்னவென்றால் கொலை செய்தவர்கள் அப்போதே மரணித்துவிட்டார்கள்..! ஆனால் ஒன்பது வோல்ட் மின்கலம் வாங்கித் தந்தவருக்கு தூக்குத் தண்டனை..! :unsure: பேரறிவாளன் கொலை நடக்கப்போவது தெரியாமலே தெரியாமலே வாங்கித் தந்திருக்கலாம்..! தெரிந்தே வாங்கித் தந்திருந்தாலும் அது சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படக்கூடியதன்று. மற்றும் கொலை செய்தவருக்கும், மின்கலம் வாங்கியவருக்கும் ஒரே தண்டனை என்றால் அந்தத் தீர்ப்பு நகைப்பிற்குரியது.

ஒருவேளை புகைப்படக்காரர் ஹரிபாபு குண்டுவெடிப்பில் தப்பியிருந்தால் அவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் போல..! :o

பி.கு: இந்திய அதிகாரவர்க்கம் நினைத்ததைச் செய்தே தீருமெனப் பட்சி கூறுகிறது..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை தான் கொடுக்க வேண்டுமென்றால்..... 21 வருடம் சிறையில் ஏன் வைத்திருந்தவர்கள்.

காங்கிரசின் பழி வாங்கல் மிகவும் அதிகம்.

இந்த நூற்றாண்டில் கேவலமான கொடிய விசர் நாய்கள் காட்டு மிராண்டிகள் என்றால்

அது இந்திய கேவலமான அரசாங்கம் தான். ஆனால் விரைவில் துண்டைகாணோம் துணியை காணோம் என்று ஓடும் காலம் வரும்,.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரண தண்டனை தான் கொடுக்க வேண்டுமென்றால்..... 21 வருடம் சிறையில் ஏன் வைத்திருந்தவர்கள்.

காங்கிரசின் பழி வாங்கல் மிகவும் அதிகம்.

அரசியல் வியாபரிகளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம். தூக்கில் போடவே மாட்டார்கள்.இது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடபோங்கப்பா ஊர் பூராவும் இங்க ஆர்பாட்டம் .. கட்டாயம் இவர்கள் போட போட்டார்கள் . {காங்கிரஸ் :)உங்களுக்காக இவர்க்ளை இன்னும் இவர்க்ளை விட்டுவைத்திருக்கிறமே!!! நாங்கள் எவ்வளவு பெரிய்ய்யா தாயுள்ளம் கொண்டவர்க்ள் .. !!!மேலும் தற்போதுள்ள தமிழ்நாட்டு நிலமையில் இக்கட்டானால் ஆயா குடுத்த பாயாவோடு மற்று மொருக்கா பிரியங்கா அவர்க்ள்.... நளினி முருகன் ஆகியொருக்கு லட்டு குடுத்துட்டு நலம் விசாரித்துட்டு வருவா .. மறுபடியும் நாங்க எல்லாம் ஏமாளி கோமாளி ஆகி 40 க்கு 40 ஜெயிக்க வைத்துடுவோம்.. செண்டி மென்ட்ஸ் சீன்ஸ் பாருங்க? (ஆக ராஜ தந்திரம் என்பது கெஞ்சலும் கொஞ்சலிலும் தான் தங்கியுள்ளது)

டிஸ்கி:

ஆயா விட்டு கோயா .. முதலில் கிந்தியாவும் முதன்மை போர்க்குற்றவாளி என்பதற்கான ஆராய்வுகள் மேற்கொள்ளபடவேண்டும் . தீர்வு என்ற ஒன்றினை இவர்க்ளால் வழங்க இயாலாது ......1980 கள் முதல் ..காலம் பூராவும் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல வண்டி ஓட்டுபவர்கள் இவர்கள்....... என்பதினை நடுநிலை நாடுகளுக்கு எடுத்து சொல்லவேண்டும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அடபோங்கப்பா ஊர் பூராவும் இங்க ஆர்பாட்டம் .. கட்டாயம் இவர்கள் போட போட்டார்கள் . {காங்கிரஸ் :)உங்களுக்காக இவர்க்ளை இன்னும் இவர்க்ளை விட்டுவைத்திருக்கிறமே!!! நாங்கள் எவ்வளவு பெரிய்ய்யா தாயுள்ளம் கொண்டவர்க்ள் .. !!!மேலும் தற்போதுள்ள தமிழ்நாட்டு நிலமையில் இக்கட்டானால் ஆயா குடுத்த பாயாவோடு மற்று மொருக்கா பிரியங்கா அவர்க்ள்.... நளினி முருகன் ஆகியொருக்கு லட்டு குடுத்துட்டு நலம் விசாரித்துட்டு வருவா .. மறுபடியும் நாங்க எல்லாம் ஏமாளி கோமாளி ஆகி 40 க்கு 40 ஜெயிக்க வைத்துடுவோம்.. செண்டி மென்ட்ஸ் சீன்ஸ் பாருங்க? (ஆக ராஜ தந்திரம் என்பது கெஞ்சலும் கொஞ்சலிலும் தான் தங்கியுள்ளது)

இது உசுப்பேத்தி தங்கட காரியங்களை செய்ய விரும்பும் அரசியல் வாதிகளின் விளையாட்டு களத்தில் ஒன்று. என்றாலும் எம்மால் இயன்றதை முடிந்தவரை செய்வேம்

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கிக்கி டிஸ்கி:

அப்படி நடு நிலைநாடுகள் உலகத்தில் இல்லையென்றால் பன்னி கிரவுகளை பற்றி கவலை படாமல் அடுத்த கட்டமாக எப்படி இந்த பன்னிகளை மீறி நிற்க முடியும் என்பதனை ஆலோசனை செய்யவேணும்..

  • தொடங்கியவர்

’’சுவரில் இருந்து அந்த பல்லி கீழே விழுந்து விடுமோ’’, ’’கதவு பூட்டியிருக்கும் நாட்களில் எதிர் வீட்டு ரோஜாவுக்கு யார் தண்ணீர் ஊற்றுவார்கள்?’’ ’’போன மழைக்காலத்தில் சேற்றில் மாட்டிக் கொண்ட நத்தை இந்நேரம் மீண்டிருக்குமா?’’...

நத்தைக்காகவும், பல்லிக்காகவும் கவலைப்படும் எழுத்தாளர்கள் தான், சக மனிதர்கள் தூக்குக் கயிற்றின் முன் காத்திருக்கும் நேரங்களில் அமைதி காக்கிறார்கள். சொல்வதற்கு ஒன்றுமில்லை... - Priya Thambi (முகநூலில் இருந்து)

கார்கில் போருக்காக, வீதி வீதியாய் அலைந்து நிதி திரட்டி கொடுத்தவன் என்ற உரிமையில் கேட்கிறேன்...இந்தியாவே உன் கள்ள மௌனத்தை கலைத்து, எங்கள் அண்ணன்கள் மூவரையும் விடுதலை செய்.....அன்று கார்கில் போருக்கு நிதி திரட்டி கொடுத்ததற்கா, இன்று இந்த தூக்கு கயிறை என் தமிழ் சாதிக்கு பரிசாக கொடுக்கிறாய்??????????? - Inaindha Karangal (முகநூலில் இருந்து)

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் உன் சகோதர்களாம் கிந்தியர்கள் காசுமீரிகள் இன்று பாகிஸ்தானின் பாசிஸ்படைகளால் 13 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழனே பொங்கியெழு .. அவர்களின் வாழ்வாதற்திற்காக தெருவெங்கும் உண்டியல் குலுக்கு(ஏற்கனவெ அவனுங்க பிச்சைகாரபய புளைக) பாரத மாதாவின் பிள்ளிகளை நீ வீதியில் விடலாமோ குலுக்கு குலுக்கு உண்டியல் குலுக்கு

டிஸ்கி:

தவறாமல் குலுக்கிய பணத்தினை சிம் செல்லுக்கு அனுப்பிடவும் .. (பணத்தை எடுத்தவன் 1 முக்கே கொடிஸ்வரன் எண்ணியவன் 2மடங்கு கோடிஸ்வரன் ) இது எப்படி இருக்கு :D

உதுக்கெல்லாம் அறிக்கை விட உருத்திரகுமரன் முழிப்போட இருக்கேக்க என்ன பயம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.