Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவனுக்கு குடுக்கலாம் ஆனால்??.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது.

தமிழர் நிலங்கள் பறிபோகின்றது. புலம்பெயர் தமிழர்களின் நிலங்களை இலங்கையரசு கையகப்படுத்த முயற்சி. இடம் பெயர்ந்த மக்களின் காணிகளில் இராணுவம். மீள் குடியேற சென்ற மக்களை இராணுவம் விரட்டியது.....இவை அண்மைக்காலங்களாக தமிழ் ஊடகங்களிலை வெளிவாற செய்தித் தலைப்புக்கள். அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலை இருக்கிற தமிழரின்ரை காணியள் பற்றின விபரங்களை இலங்கையரசு சேகரிச்சுக்கொண்டும் இருக்கினம். இந்த வருச வக்கேசனுக்கு என்ரை சொந்தக்காரன் ஒருத்தர் லண்டனுக்கு வந்து இருவத்தைஞ்சு வரியமாகிது போனமாதம் ஊருக்கு போனவர்.ஊருக்கெண்டால் கொழும்புக்கு... அங்கை அவர் ஒரு அப்பாட்மென் வாங்கிவிட்டிருக்கிறார். வருசா வருசம் வக்கேசனுக்கு அங்கைபோய் தங்கிட்டு வருவார்.

அப்பிடித்தான் இந்தவருசமும் போனவர்.. அவருக்கு தெல்லிப்பளையிலை சீதனவீடும் காணியும் இருந்தது .அதை ஆமி பிடிச்சு பிறகு பாதுகாப்புவலயம் எண்டு அரசாங்கம் அறிவிச்சு போட்டுது.இப்ப பிரச்சனையள் முடிஞ்சு பாதுகாப்பு வலயம் எடுத்தாச்சாம் சனங்கள் திரும்ப தங்கடை காணியளிற்கு போகினமாம் எண்டு செய்தி கேள்விப்பட்டு. இவரும் தன்ரை தெல்லிப்பளை காணியை போய் வீடு உருப்படியாய் இருக்கோ இல்லையோ தெரியாது இருந்தால் பாத்து திருத்திப்போட்டு இல்லாட்டி எல்லையை பாத்து மதிலை கிதிலை கட்டிப்போட்டு அப்பிடியே நல்ல விலைக்கு வித்து அந்தப் பிரச்சனையை இத்தோடை முடிச்சிடவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு தான் போனவர்.

போனவருக்கு காணி எங்கை எல்லை எது எண்டு தெரியேல்லை ஒரு மாதிரி மண் மூடிக்கிடந்த றோட்டுகரையிலை நிண்ட ஆலமரம் அப்பிடியே நிண்டபடியாலை காணியை அடையாளம் பிடிச்சிட்டார். வீடு தரைமட்டமாய் கிடந்தது.ஒரே பத்தைவளந்துபோய் இருந்தது.அவரும் கலியாணம் கட்டி புதிசா வந்து குடியேறின பழைய நினைவுகளோடை காணியை சுத்திபாத்தவர் அங்கை நட்டுக் கிடந்த கொங்கிறீற் கல்லை உத்துப்பாத்தார். அரைமீற்றர் அகலம் நிலத்திலையிருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தக் கல்லு இருந்தது அதிலை ஏதோ நம்பரும் எழுதியிருந்தது. அவருக்கு வந்திது கோவம்.அதைவிட அந்த நேரத்திலை அவர்தான் அந்த றோட்டிலையே சண்டியன். யாரவன் என்ரை காணிக்குள்ளை கொங்கிறீற் போட்டவன் எண்டு கத்தினபடி காலாலை எட்டி கல்லை உதைஞ்சார்.

கால் சுழுக்கிப்போட்டுது.கோவம் இன்னமும் கூடிப்போக இரு என்ன செய்யிறன் பார் எண்டபடி சுத்திவர பாத்தவர் துாரத்திலை யாரோ இடிஞ்ச வீட்டை திருத்திக்கொண்டிருந்தாங்கள் அவையிட்டை போய் தம்பியவை என்ரை காணிக்குள்ளை யாரோ கொங்கிறீற் நட்டிருக்கிறாங்கள் உங்களிட்டை அலவாங்கு இருந்தால் தாங்கோ அதை இடிச்சுப்போட்டுத்தாறன். என்னை யாரெண்டு தெரியாமல் விழையாடுறாங்கள் எண்டிருக்கிறார். அங்கை நிண்டவை அவரை ஏற இறங்க பாத்திட்டு ஜயா வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள் போலை அந்த கொங்கிறீற்று அரசாங்கம்தான் நட்டது. அதை நீங்கள் புடுங்க ஏலாது புடுங்கினால் பொலிஸ்காரன் வந்து பிடிச்சுக்கொண்டு போடுவான்.இஞ்சையிருந்து தங்கடை காணியெண்டு உறுதிசெய்யாத வெளிநாடுகளுக்குபோனவையளின்ரை காணியளிலை அரசாங்கம் கொற்கிறீற் போட்டு ஒரு நம்பரும் அடிச்சிடுவாங்கள்.நீங்கள் ஒண்டும் செய்யேலாது. வேணுமெண்டால் வழக்குத்தான் போடவேணும் எண்டிச்சினம். என்ரை சினேதன் கொழும்பிலை பெரிய லோயர் அவனை வைச்சு வழக்கு போடுறன் எண்டு கொழும்புக்கு வந்து தன்ரை சினேதனிட்டை விசயத்தை சொன்னார்.

அவனோ... உது பாதுகாப்பு அமைச்சு சம்பத்தப் பட்ட விசயம் வழக்கு போடுறதெண்டால் அவங்களுக்கெதிராத்தான் போடவேணும். பாதுகாப்பமைச்சுக்கெதிரா வழக்கு போட்டு வெல்லுறதெண்டதெல்லாம் நடக்கிற காரியமில்லை. இருபத்தைஞ்சு வரியமா நீயும் காணிக்கு வரியள் கட்டின அத்தாட்சியளும் இல்லை.வழக்காடுற செலவு காணிக்காசைவிட கூடவரும் எண்டு கையை விரிச்சிட்டான். புலம்பிய படி திரும்ப லண்டன் வந்தவர் தன்ரை சீதணக்காணி பறிபோட்டுதெண்டு சொந்தங்கள் எல்லாருக்கும் போனடிச்சு ஒரே ஒப்பாரி.அவர் என்னோடை கதைக்கிறேல்லையெண்டபடியால் நான் தப்பீட்டன்.

இந்த விசயம் கேள்விப்பட்டு கனடாவிலை இருக்கிற என்ரை சின்னம்மா எனக்கு போனடிச்சார் அவருக்கு ஊருக்கு போக பயம் ஏனெண்டால் கனடாவிலை நடந்த ஊர்வலங்களிலையெல்லாம் புலிக்கொடியோடை முன்னாலை நிண்டு எங்கள் தலைவன் பிரபாகரன் எண்டு கத்தினவர்.அந்தப் படங்கள் தமிழ் ரிவி பேப்பருகளிலையும் வந்திருந்தது.ஆனால் தன்ரை காணிக்குள்ளையும் அரசாங்கம் கொங்கிறீற் போட்டிடும் எண்ட பயத்திலை எனக்கு போனடிசு எடேய் என்ரை வீடுகாணி விக்க முடிவெடுத்திட்டன்.வித்தா பிறகு சொந்த பந்தத்தை கேக்காமல் வித்திட்டன் எண்டு குறை சொல்லக்கூடாது அதுதான் எல்லாருக்கும் போனடிச்சனான் உனக்கும் அடிக்கிறன் உனக்கு வேணுமெண்டால் சொல்லு இல்லாட்டி கொழும்பிலை காணி வீடு விக்கிற ஏஜென்சி ஒண்டுக்கு சொன்னால் அவங்கள் வித்திட்டு தங்கடை கொமிசனை எடுத்திட்டு மிச்சத்தை பாங்கிலை போட்டு விடுவாங்கள் எண்டார்.

இருக்கிற காணியை பாக்கவே மனிசரில்லை இதுக்கை எனக்கு எதுக்கு காணி எனக்கு வேண்டாம்.போனவரியமல்லோ யாரோ வாங்க கேட்டவை ஏன் இன்னமும் விக்கேல்லையெண்டு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில் டேய் அது அவங்களல்லோ வாங்கிறதுக்குகேட்டவங்கள் .நாங்கள் பரம்பரையா வாழ்ந்த வீட்டை நா...னாக்கும்...ப....னாக்கும் விக்கேலுமே. அதுதான் விக்கேல்லை எண்டார். இப்ப ஏஜென்சிகாரணென்டால்... அதுவும் கொழும்பு ஏஜென்சியெண்டால் அவனுக்கு யார் எவரெண்ட கவலையில்லை நல்ல காசு அம்பிட்டா வித்துப்போடுவானே எண்டன். ஓமடா அவங்கள் கூடுதலா சிங்களவருக்குத்தான் விக்கிறாங்கள். சிங்களவர் றோட்டுக்கரையிலை உள்ள வீடுகள் தென்னங்காணியள் விழைச்சல் காணியளை நல்ல விலைக்கு வாங்கிறாங்களாம். என்ரை காணியும் யாரே சிங்களவான் தானாம் வந்து பாத்திருக்கிறான் எண்டார்.

எனக்கு பத்திக்கொண்டு வந்தது ந..னா .. .ப..னா எண்டு பாத்து தமிழனுக்கு காணியை விக்காதேங்கோ ஆனால் சி..னாக்கு வித்தா பரவாயில்லை . பிறகு தமிழரின்ரை காணி பறிபோகுதெண்டு ஒப்பாரிவேறை. இனி எங்கையாவது நீங்கள் தமிழ் தேசியம் எண்டு கதைச்சதை கேள்விப்பட்டால் ரிற்கற் போட்டு கனடாக்கு வந்து காதைப் பொத்தி காலாலை தருவன் எண்டன். ரெலிபோனை வைச்சிட்டார். எனக்குத்தெரியும் இனி அவர் என்னோடை கதைக்கமாட்டார். இப்பிடியானவையை சொந்தம் எண்டு கதைக்கிறதை விட பேசாமல் இருக்கிறதே நல்லது

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை சிறி அண்ணை....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேவி ஓடின, ரெயில் ரோட்டிலையும் கன சனம் வீடு கட்டி இருக்குது.

என்ன செய்வது, எமது போராட்டம் எதுக்கோ... ஆரம்பிச்சு.. எங்கையோ.. வந்து நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் புலிகளாலே பிரச்சனை என்று அகதி அந்தஸ்த்து கேட்ட ஆட்களல்லோ.அவ்வளவு இனப்பற்று உள்ள ஆட்கள் காணி என்ன என்னத்தையும் சிங்களவருக்கு விற்கக்கூடியவர்கள்.ஒன்றென்ன 100 பிரபாகரன் வந்தாலும் உருப்படாத சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சமுகமும் இப்படித்தான் ஜயா...கொழும்பில தமிழனும் முஸ்லிம்களும் வீடு காணிகளை வாங்கும் பொழுது சில சிங்களவன்கள் திட்டி கொண்டிருந்தாங்கள் பிறகு தங்களின் காணிகளையும் வீடுகளையும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் நல்ல விலைக்கு வித்தவையள்...மனித இயல்பு...

சிட்னியில் நான் இருக்கும் வீதியில் 15 வருடங்களுக்கு முதல் பெரும்பான்மையானவர்கள் வெள்ளையள் ,இப்ப வெள்ளை சிறுபான்மை...நல்ல விலைக்கு கறுவல்கள் வாங்கினவுடன் வித்துப்போட்டு போய்ட்டாங்கள்...ஜயோ கறுவல் வீடு வாங்கிறாங்கள் என்று கத்தினாங்கள் பிறகு தாங்களே தங்கட வீட்டை வித்துபோட்டு போய்ட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அங்க வீடு வளவு வைத்திருப்பவர்கள் கச்சேரில படிவம் ஒண்டு எடுத்து நிரப்பிக் கொடுக்க வேணுமாம்! இணையத்திலும் இருக்காம், நான் இன்னும் காணேல்லை ! யாரும் தெரிந்தால் தயவுடன் இணைத்து விடவும் !

  • தொடங்கியவர்

சுவியண்ணா வெளிநாட்டில் வசிப்பவர்களிற்கான காணி பதிவுகள் புதிய சட்டமொன்று கடந்தவாரம் இயற்றியிருக்கிறார்கள். என அறிவித்தல் வெளியாகியிருந்தது ஆனால் விண்ணப்ப படிவம் பற்றிய விபரங்கள் தெரியவில்லை கிடைத்தால் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சத்திரியண்ணா நன்றி பகிர்வுக்கு, இனி இதுதான் நடக்கும், இப்பவே பல பேர் முஸ்ஸிலிம்களுக்கு விற்றுவிட்டார்கள்

http://www.lankapropertyweb.com/index.php?page=2&location=North_Jaffna&type=all&accom_type=&new=&search=1&srch_words=

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிய தருவது என்னவென்றால்................சுண்டலுக்கு யாழ்பாணத்தில்.....வீடு வளவு சீதனமா தந்தா ஏற்றுக்கொள்ள படமாட்டா...சோ 5 பத்த கூட போட்டு கொழும்பில் வாங்கி தரவும்........

வாசிக்க வேண்டியவங்க வாசிச்சா சரி......................

உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன. காணி மட்டுமல்ல திருமணங்களும் இப்படித்தான். எனது நண்பர் ஒருவர் தனது 10 வயதுப் பிள்ளைக்கு இப்போதே சாதி பற்றி விளக்கம் கொடுத்து வளர்க்கிறார். பின்நாளில் தனது பிள்ளை வெள்ளையை விரும்பினாலும் பரவாயில்லையாம் வேறு சாதியுடன் சேர விட மாட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி அப்பிடியானதுகள் தான் வேற ஜாதியளோட ஒடி போகுங்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சமுகமும் இப்படித்தான் ஜயா...கொழும்பில தமிழனும் முஸ்லிம்களும் வீடு காணிகளை வாங்கும் பொழுது சில சிங்களவன்கள் திட்டி கொண்டிருந்தாங்கள் பிறகு தங்களின் காணிகளையும் வீடுகளையும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் நல்ல விலைக்கு வித்தவையள்...மனித இயல்பு...

சிட்னியில் நான் இருக்கும் வீதியில் 15 வருடங்களுக்கு முதல் பெரும்பான்மையானவர்கள் வெள்ளையள் ,இப்ப வெள்ளை சிறுபான்மை...நல்ல விலைக்கு கறுவல்கள் வாங்கினவுடன் வித்துப்போட்டு போய்ட்டாங்கள்...ஜயோ கறுவல் வீடு வாங்கிறாங்கள் என்று கத்தினாங்கள் பிறகு தாங்களே தங்கட வீட்டை வித்துபோட்டு போய்ட்டாங்கள்

வட கிழக்கிலை தமிழர் எல்லா காணியையும் வித்துப்போட்டு தெற்கிலை வந்து அப்பாட்மன்ற் வாங்கலாமெண்டுறியள். மனித இயல்புதானே. அப்பிடி செய்திட்டா பல பிரச்சனையள் முடிவிற்கு வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னNh இந்த கருத்து புதஸ் அண்ணாவ கடிக்கிற மாதிரி இருக்கு....

வட கிழக்கிலை தமிழர் எல்லா காணியையும் வித்துப்போட்டு தெற்கிலை வந்து அப்பாட்மன்ற் வாங்கலாமெண்டுறியள். மனித இயல்புதானே. அப்பிடி செய்திட்டா பல பிரச்சனையள் முடிவிற்கு வந்திடும்.

நல்ல யோசனை, ஒரு காலத்தில நாங்கள் கொழும்பிலேயே தமிழீழம் கேட்கலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை, ஒரு காலத்தில நாங்கள் கொழும்பிலேயே தமிழீழம் கேட்கலாம் :lol:

அதாவது சிங்களவனின் யாழ்ப்பாணத்தைப் பிடிச்சுப்போட்டு தமிழீழம் கேட்டிருக்கிறம் எண்டுறியள்..! :rolleyes:

எலிவளையானாலும் தனிவளை வேண்டும் - அந்த

வளைக்குள்ளிருக்கும் எலிகள்

வெளிவர வேண்டும்..! :lol:

ஏறக்குறைய முழு தமிழர்களின் மனோநிலையும் இதுதான்,ஆனால் பலர் நன்கு படம் காட்டுவதால் இன்றும் தேசியக் காவலர்கள் போல் வலம் வருகின்றார்கள். இப்படியானவர்களை இனம் கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் எமது இனத்தின் சாபக்கேடு. யாழிலும் இதே நிலைதான்.

தமிழர் தெற்கில் போய் குடியேறுவது தமது தனிப்பட்ட முடிவு , ஆனால் சி.....கள் தமிழர் பிரதேசங்களில் குடியேறுவது சி..... அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்!

இந்தாள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிய தருவது என்னவென்றால்................சுண்டலுக்கு யாழ்பாணத்தில்.....வீடு வளவு சீதனமா தந்தா ஏற்றுக்கொள்ள படமாட்டா...சோ 5 பத்த கூட போட்டு கொழும்பில் வாங்கி தரவும்........

அப்ப தானே வேலைக்குப் போகாமல் அரட்டை அடிக்காலாம், சரி தானே சிறுவன் சுண்டல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி அரட்டை என்டெல்லாம் பச்சையா சொல்க்கூடா......................கடலை அப்பிடின்ணு பண்பா சொல்லணும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிய தருவது என்னவென்றால்................சுண்டலுக்கு யாழ்பாணத்தில்.....வீடு வளவு சீதனமா தந்தா ஏற்றுக்கொள்ள படமாட்டா...சோ 5 பத்த கூட போட்டு கொழும்பில் வாங்கி தரவும்........

வாசிக்க வேண்டியவங்க வாசிச்சா சரி......................

சீதனம் வேறை கேக்கிதோ :lol:

இந்த பதிவுக்கு கருத்து எழுதினது போல இருந்தது ஆனால் அது நான் நேற்று இரவு பகல் கணவு கண்டேன் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன. காணி மட்டுமல்ல திருமணங்களும் இப்படித்தான். எனது நண்பர் ஒருவர் தனது 10 வயதுப் பிள்ளைக்கு இப்போதே சாதி பற்றி விளக்கம் கொடுத்து வளர்க்கிறார். பின்நாளில் தனது பிள்ளை வெள்ளையை விரும்பினாலும் பரவாயில்லையாம் வேறு சாதியுடன் சேர விட மாட்டாராம்.

இதைவிட இன்னொரு அனியாயமும் நடக்குது.எப்படி என்டால் 10 வயது பிள்ளைக்கு யாராவது தங்கள் சொந்தங்களில் இருந்து ஒன்டை வீட்டோடு வைத்திருந்து இவனை(ளை)த்தான் நீ கலியானம் கட்ட வேனும் என்டு மூளைச்சலவை செய்கினம். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன. காணி மட்டுமல்ல திருமணங்களும் இப்படித்தான். எனது நண்பர் ஒருவர் தனது 10 வயதுப் பிள்ளைக்கு இப்போதே சாதி பற்றி விளக்கம் கொடுத்து வளர்க்கிறார். பின்நாளில் தனது பிள்ளை வெள்ளையை விரும்பினாலும் பரவாயில்லையாம் வேறு சாதியுடன் சேர விட மாட்டாராம்.

இப்பிடித்தான் எனக்குத் தெரிந்த குடும்பம் மாந் லா ஜெலியிலை இருந்தவவை. பிள்ளையளிற்கு பள்ளிக்கூடத்திலையே சாதிகேட்டுத்தான் சக பிள்ளையளோடை பழகவிட்டவை. கடைசியிலை மகள் வழந்ததும் அடையான் ஒண்டோடை ஓடிப்போய் கட்டையடிச்சுக்கொண்டு திரிந்தது. தாய் தகப்பன் வாயிலை வயித்திலை அடிச்சுகொண்டு திரிஞ்சவை :lol: :lol:

ஆகா மொத்தம் ஜரோப்பாவில வந்து உயர்சாதி ஆக்களின் பிள்ளைகள் கெட்டு போகிறார்கள் தாழ்ந்த சாதி பிள்ளைகள் உயர்ந்து போகிறார்கள் வாழ்வாதரத்தில்? :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மொத்தம் ஜரோப்பாவில வந்து உயர்சாதி ஆக்களின் பிள்ளைகள் கெட்டு போகிறார்கள் தாழ்ந்த சாதி பிள்ளைகள் உயர்ந்து போகிறார்கள் வாழ்வாதரத்தில்? :lol: :lol:

அப்பிடியில்லை சின்னவயதிலை அதுகளிற்கு சாதி எண்டு தமிழரையே பிரிச்சுப்பாக்கப் பழக்காமல் சாதாரணமாக குழந்தைகளாக வளத்தாலே போதும். அவர்கள் சிறந்தவர்களாக வருவார்கள். இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எண்டில்லை. ஆனால் பெற்றோரே பிரிவுகளை சொல்லி கட்டுப்பாடுகளை போடும் பொழுது பிள்ளைகளிற்கு வெறுப்பு வந்து தங்கள் புத்திக்கெட்டிபடி நடக்க தொடங்கும் போது புலம்பெயர் நாடுகளில் அதனை கட்டுப்படுத்த முடியாது. பிறகு வாயிலை வயித்திலை அடிக்கிறதைத் தவிர வேறை வழியில்லை :icon_idea:

அடையான் ஒண்டோடை

"அடையான்" என்றால் என்ன? அலைமகள் மகாஜனாவில் தமிழ் வடிவாய் படிக்கவில்லைப் போல் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.