Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூப் பூவாய் பறந்துபோகும் பட்டாம் பூச்சியக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

988519_10152898137241551_406699599970842

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்.........
ஏதாவது எழுதுவோம் என்று உட்கார்ந்தால் மூளை நரம்பு மண்டலம் ஏதோ ஒரு அமுக்கத்திற்குள் சிறைப்பட்டதுபோல் விடுபட முடியாத.. வார்த்தைகளால் புனைய முடியாதவையாக மூழ்கடித்துவிடுகின்றன. எழுத்து வெளிகளில் அப்பட்டமாக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதுகளாகவே இக்காலம் நகர்கிறது. மனதின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் ஒரு பேரவா முறுக்கெடுத்து சிலசமயங்களில் தொண்டைக்குழியை திருகுவதுபோல் உயிரையே உலுப்பி விடுகிறது. அடடா கதைகதையாம் பகுதில் வந்து என்னுடைய புலம்பலை எடுத்துவிடுகிறேன் மன்னிக்கவும். தொடர்கிறேன்,

இனி, இங்கு எழுதப்போது எழுத்துக் குவியலுக்கு பொதுத் தலைப்பாக "தொலையா முகம்" இருக்கும் மற்றப்படி அதற்கு உட்பட்டுவரும் ஆக்கங்கள் அதனதற்குரிய தலைப்புகளுடன் வரும்.

அந்த வகையில முற்றிலும் இதுவரை நீங்கள் அறிந்த என்னிலிருந்து மாற்றம் கொண்ட எழுத்துக்களுடன் உங்களுடன் கைகோர்த்துக் கொள்கிறேன்.




 

பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம்பூச்சியக்கா

 

 

 

doll93.gif

 

‘ஒரு குடம் தண்ணீ வாத்து ஒரு பூப் பூத்து
ரெண்டு குடம் தண்ணீ வாத்து ரெண்டு பூப் பூத்து’
பாலர் பாடசாலை பாலகர்களான தீபா, கௌசி, அமுதா, சியா தங்களுடைய மழலை மாறாத வார்த்தைகளில் பாடிக் கொண்டு மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்..
“தீபா!”
சுபா ரீச்சர் தீபாவை அழைத்தாள். விளையாட்டின் சுவார்ஸ்யத்தில் தீபாவின் காதுகளில் சுபா ரீச்சரின் குரல் விழவில்லை
"தீ…பா “
சற்று அழுத்தமாக சுபா அழைத்தாள். குரலின் அழுத்தத்தில் துணுக்குற்ற சிறுவர்கள் சுபாவை புரியாமல் பார்த்தனர்.
“ தீபா”
“என்ன ரீச்சர்?” சிறுமி சுபா ரீச்சரின் அருகே ஓடினாள்.
“ உன்னுடைய அம்மாவை ஏன் கூட்டி வரேல்லை?”
விடை தெரியாத்தால் சிறுமி மலங்க மலங்க விழித்தாள்.
“உன்னைத்தான் கேட்கிறேன் ஏன் அம்மாவை கூட்டி வரவில்லை?”
தீபாவின் முகம் இருண்டு விட்டது.

“ஒரு குடம் தண்ணீ வாத்து ஒரு பூ பூத்து
ரெண்டு குடம் தண்ணீ வாத்து ரெண்டு பூ பூத்து”

சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த கௌசி, அமுதா, சியா புதிதாய் சேழியனைச் சேர்த்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
ரீச்சரின அழைப்பால் தன்னை விட்டுவிட்டு விளையாடும் நண்பிகளைப் பார்த்தபடியே நின்ற தீபாவை மீண்டும் உசுப்பியது சுபா ரீச்சரின் குரல்
“ரீச்சர் வரச் சொன்னவா என்று அம்மாவுக்குச் சொன்னீங்களா?”
மகிழ்ச்சியற்ற முகத்தை ஓம் என்று பொருள்பட மேலும் கீழுமாய் ஆட்டினாள் சிறுமி.
இப்போது சுபா ரீச்சரி சற்றுச் சினத்துடன் “ ஏன் வரவில்லை?” என்று கேட்டாள்.
ஏன் எதற்கு என்று தெளிவான பதிலைச் சொல்லத் தெரியாத சிறுமியின் கவனத்தை
“ எட்டுக்குடம் தண்ணீ வாத்து எட்டு பூ பூத்து”
என்று பாடி விளையாடும் நண்பர்கள் ஆக்கிரமித்தனர்.
இப்போது ரீச்சருக்கு கோபம் மிகுதியாகிவிட்டது.

“நாளைக்கு அம்மாவைக் கூட்டி வந்தால் மட்டுந்தான் நீர் பட்டாம்பூச்சி இல்லை என்றால் உம்மை நிற்பாட்டிப்போடுவேன்”
என்ற ஆசிரியரின் வார்த்தைகளால் திடுக்குற்றாள் சிறுமியின் இருண்ட முகத்தில் சின்னதாய் விசிப்பு, வராத கண்ணீரை கைகளால் கசக்கி கட்டாயமாக வரவைத்தாள்.
“ ஏன் இப்ப அழுகிறீர்?”
சரி... சரி நாளைக்கு அம்மாவைக் கூட்டிவா.”
சுபா ரீச்சர் கொஞ்சம் இறங்கி வந்தார்.

“ ரெண்டு கட்டுப் புல்லுத் தாறேன் என் மகளை விடடி”
“போடீ போடீ சம்மந்தி புத்தி கெட்ட சம்மந்தி”
"மூன்று கட்டுப்புல்லுத் தாறேன் என் மகளை விடடி"
போடீ போடீ சம்மந்தி புத்தி கெட்ட சம்மந்தி”
தோழர்களின் விளையாட்டு உச்சத்தை எட்டிக் கொண்டிருந்தது
தலையைத் தாழ்த்திக் கொண்டு நின்ற பாலகி தீபாவின் கசங்கிய கண்கள் திருட்டுத்தனமாக விளையாட்டில் மொய்த்தது.

“ சரி எல்லாரும் வாங்கோ பழகுவம்”
என்று சுபாவின் குரல் கணீரென்று ஒலித்தது. அந்தப் பாலர் பாடசாலையில் படிக்கும் எல்லாச் சிறுவர்களும் ஆசிரியையைச் சூழ்ந்து கொண்டனர்.
ரீச்சர் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களுக்குத் தகுந்த மாதிரி உடைகள் தைப்பித்துக் கொண்டதை உறுதிப்படுத்திக் கொண்டார் தீபாவின் முறை வந்தது……….
மற்றைய மாணவர்களின் பெற்றோர் ஆசிரியரைச் சந்தித்து உறுதிப்படுத்தி விட்டார்கள் தீபாவின் பெற்றோர் தேவையானவற்றை இன்னும் உறுதிப்படுத்தவில்லை

"நாளைக்கு அம்மா வந்து உன்னுடைய பட்டாம்பூச்சி உடையைக்காட்டினால்தான் நீ பட்டாம் பூச்சியாக நடிக்கலாம்." ரீச்சர் உறுதியாகச் சொன்னார். பின்னர் ரேப் ரெக்கார்டரில் பாடல் ஒலிக்க வைத்து ஆசிரியை அபிநயங்களைப் பழக்கினார். மூன்று தொப்பிகளை முக்கோண வடிவத்தில் வைத்து, ஒவ்வொரு தொப்பியையும் பூவாக நினைத்து பட்டாம்பூச்சி செட்டைகளை விரித்து பறந்து பறந்து நிற்பதாக தீபாவிற்குப் பழக்கினார். அப்படியே மற்றைய சிறுவர்களுக்கும் அவர்களுக்கு உரிய அபிநயங்களைப் பழக்கிமுடிய பாடசாலை முடியும் நேரமாகிவிட்டது. பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வந்தனர் தீபாவை அழைத்துச் செல்ல அண்ணன்கள் வந்தனர். அவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் விடயத்தை கூறினார் ஆசிரியர். வீட்டுக்கு வந்த்தும் தீபா ஓவென்று பெருங் குரலெடுத்து அழுதாள். காரணம் அம்மா தன்னிடம் பட்டாம் பூச்சிக்கான உடையை பளபளப்பான பட்டுத்துணியில் வாங்கித் தைப்பதற்கு வசதியில்லை என்றும் தான் சுபா ரீச்சரிடம் பட்டாம் பூச்சிக்கு வேறு சிறுமியை தெரிவு செய்யும்படி கூறப்போவதாக்க் கூறியதுதான்.

தீபா ஒருவருடனும் பேசவில்லை விசும்பி விசும்பி முகம் வீங்கியது. தன்னுடைய தோழர்கள் எல்லோரும் பாலர்தினவிழா மேடையில் அபிநயப்பாடலுக்கு நடிக்க தான் மட்டும் ஒதுக்கப்பட்டுப் போவதாக.., எண்ண அரும்பல்களால் அந்தக் குழந்தைமனம் ஏக்கத்தில் வாடியது.

வெளியே போயிருந்த, அவளைச் சீராட்டும் பேரன் வந்தபோது ஓடிப்போய் அவரிடம் தாவி விசும்பி விசும்பி அழுது அந்த முதிய தோளில் உறங்கிப்போனாள். அடுத்தநாள் பாலர் பாடசாலைக்குப் போக மறுத்து அழுது அடம்பிடித்து ஆர்ப்பாட்டங்கள் செய்து சோர்ந்தாள்.. ஒரு நாள் முடக்கப்பட்ட ஆசைகளுடன் கழிந்தது. அடுத்த நாளும் இதே அடம், அழுகை ஆனால் அம்மா வலு கட்டாயமாக அவளைத் தூக்கி இடுப்பில் இருத்தி பாடசாலையில் கொண்டு சென்று விட்டாள் சுபா ரீச்சர் உற்சாகமாகக் கூப்பிட்டார். தீபா அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். பட்டாம் பூச்சிப்பாடலுக்கு அபிநயம் பழக மறுத்தாள். அடுத்த நாள் மாலையில் விழா எல்லோரும் ஆரவாரமாக இருந்தனர். தீபா தனக்கு அருகாமையில் விளையாட வந்த நண்பர்களை கடித்தாள், அடித்தாள். எல்லோரும் அவளிடம் இருந்து எட்டப் போனார்கள். பட்டாம் பூச்சி உடைகள் இல்லாத்தால் நம்பிக்கை தேய்ந்து மனதின் குதூகலத்தைத் தொலைத்திருந்தாள் சிறுமி. குணஇயல்பில் ஒரு வகையான வன்மம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது..

அடுத்தநாள் மாலையை அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் வெளியே போயிருந்த பேரன் ஒரு பொதியுடன் வந்தார். அம்மா தீபாவை விழாவுக்குச் செல்வதற்காக குளிப்பாட்டி ஈரம் துவட்டிவிட்டு பேரன் கொண்டு வந்த பொதிக்குள் இருந்த சிவப்புக் கலர் பட்டுத்துணியில் தங்க நிற சீக்குன் வேலைப்பாடுகள் செய்த பட்டாம் பூச்சியின் உடையை எடுத்தார். தீபாவின் வாய் பிளந்த்து. சிரித்தபடியே அந்தப் பட்டாம் பூச்சியின் ஆடையை அணிவிக்க வந்த அம்மாவிடம் வெட்கப்பட்டு ஓடிப்போய் போர்வையால் தன்னை மூடிக்கொண்டாள். அம்மா விடவில்லை இழுத்து வைத்து பட்டாம் பூச்சிக்கு அலங்காரம் செய்தாள் விழா நடக்கும் மேடைக்கு அருகாமையில் அந்தச் சிவப்பு நிறப் பட்டாம் பூச்சிக்கு நீலநிறச் செட்டையில் சிவப்புப் பொட்டுகளின் அரும்பின் தங்கநிற அரும்புகள் கொண்ட செட்டைகளைக் கட்டினார்கள். தொடர்ந்து பாடல் ஒலிக்க அந்த சிவப்புநிறப் பளபளக்கும் பட்டாம்பூச்சி உண்மையிலேயே பட்டாம்பூச்சியாக மாறிப்போனது.

“ பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா – நீ
பளபளென்று போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா?

http://www.youtube.com/watch?v=BpNLcbReyYM

அன்று ஆரம்பித்த கலைப்பயணத்தில் வடிவங்கள் மாறிமாறி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறது அந்தப்பட்டாம் பூச்சி

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

தீபா = வல்வை சாகரா, நன்றாக கதையை நகர்த்தியுள்ளீர்கள் தீபா என்ற குழந்தையின் பார்வையில், அருமை. பாட்டும் கதைக்கேற்ற மாதிரி ஒன்றிவிட்டது. எளிய நடையில் உங்கள் புது கலை பயணத்தை தொடர முதல் பச்சையுடன் வாழ்த்துக்கள்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்.

கவிதை எழுதினால் அதற்குப் பொழிப்புரையும் :o சேர்த்து எழுதுங்கள் என்று அண்மையில் கனடா வந்திருந்த விசுகு அண்ணாவின் சந்திப்பில் ரொம்பவும் கடித்துவிட்டார்கள். :huh:

கானமயில் ஆட கண்டிருந்த வான்கோழி தன் பொல்லாச் சிறகு விரித்து ஆடியதுபோல் நானும் கதைகதையாம் பகுதிக்குள் நுழைந்திருக்கிறேன். எளிய நடையில் இலகு தமிழில் எழுத விளைவது குழந்தைத்தனமாக இருக்கிறது. இவள் எழுதினால் இன்னதாகத்தான் இருக்கும் என்ற வட்டத்தை தகர்த்து வெளியே வரும் முயற்சியே இந்தப்பதிவு. தொடர இருக்கும் தொலையா முகங்களில் சின்னச் சின்னதாய் நிறைய விடயங்களை பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

உங்களுடைய பச்சைப்புள்ளிக்கும் நன்றி உடையார். :rolleyes:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா கதையை நன்றாக நகர்த்தியிருக்கிறீங்கள். பேரன் பட்டு ஆடையை வாங்கிக் கொடுத்திரா விட்டால் பிள்ளை நிச்சயம் பாதிக்கப்பட்டு வன்முறை சார்ந்தோ அல்லது பாடங்களில் கவனமெடுங்காமலோ அதன் எதிர் காலம் பாதிக்கப்படும் அபாயம் வந்திருக்கும். காரணம் ஒரு குழந்தையை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் குழந்தையை சுற்றியுள்ள சமூகமே. :icon_idea: அதுக்காக நீ ஏன் இப்பிடி கெட்டுப் போனனி எண்டு என்னை கேக்கக் கூடாது :lol: :lol:

images-6.jpg

அதோடை நீங்கள் கானமயில்தான் எண்டதை ஒத்துக்கொண்டு ஒரு பச்சை குத்தியிருக்கிறன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா, நல்ல பாடலுடன் கதையை ஆரம்பித்துள்ளீர்கள்.தொடர நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் சகாரா அக்கா...நாங்கள் விளையாடுகையில் பத்துக் குடம் தண்ணி வாத்து பத்து பூ பூத்தது என்று சொல்லித் தான் விளையாடுவோம் ஆனால் நீங்கள் என்னென்னவோ சொல்லி விளையாடி இருக்கிறீர்கள் :):D

பி;கு எல்லோரும் யாழில் சுய சரிதை எழுத வெளிக்கிட்டார்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா கதையை நன்றாக நகர்த்தியிருக்கிறீங்கள். பேரன் பட்டு ஆடையை வாங்கிக் கொடுத்திரா விட்டால் பிள்ளை நிச்சயம் பாதிக்கப்பட்டு வன்முறை சார்ந்தோ அல்லது பாடங்களில் கவனமெடுங்காமலோ அதன் எதிர் காலம் பாதிக்கப்படும் அபாயம் வந்திருக்கும். காரணம் ஒரு குழந்தையை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் குழந்தையை சுற்றியுள்ள சமூகமே. :icon_idea: அதுக்காக நீ ஏன் இப்பிடி கெட்டுப் போனனி எண்டு என்னை கேக்கக் கூடாது :lol: :lol:

images-6.jpg

அதோடை நீங்கள் கானமயில்தான் எண்டதை ஒத்துக்கொண்டு ஒரு பச்சை குத்தியிருக்கிறன்.

நன்றி சாத்ஸ்

சின்ன வயதில் மறுக்கப்படும் அல்லது சந்தர்ப்பவசத்தால் இழக்கப்படும் விடயங்கள் பச்சைக் காயங்களாக இறக்கும் வரைக்கும் இருக்கும். உண்மையில் நம்பிக்கைகள் தளர்ந்துபோகும்போது சுற்றிலும் உள்ளவர்களோடு கருத்துபேதம் உருவாகும். ஓரிடத்தில் சிறுமி தீபாவின் ஏக்கம் வன்மமாக வெளிப்படுகிறது. உண்மையிலேயே இத்தகைய சின்ன செயல்களை நாம் கண்டு கொள்வதில்லை.

சாத்திரியார் கானமயில் என்று பச்சை குத்தியது ரெண்டு ரெண்டாத் தெரியுது. இந்தப்படத்தைப் போட்டது வம்புக்குத்தானே :huh:

சகாரா, நல்ல பாடலுடன் கதையை ஆரம்பித்துள்ளீர்கள்.தொடர நல்வாழ்த்துக்கள்.

நன்றி நுணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் சகாரா அக்கா...நாங்கள் விளையாடுகையில் பத்துக் குடம் தண்ணி வாத்து பத்து பூ பூத்தது என்று சொல்லித் தான் விளையாடுவோம் ஆனால் நீங்கள் என்னென்னவோ சொல்லி விளையாடி இருக்கிறீர்கள் :):D

பி;கு எல்லோரும் யாழில் சுய சரிதை எழுத வெளிக்கிட்டார்கள் :lol:

என்ன ரதி பத்துக்குடம் தண்ணி வாத்து பத்துப்பூ பூத்த பொழுது ஒருவர் அகப்படுவார் இல்லையா... அப்போது வெளியே நிற்கும் மற்றவர் இப்படிப் பாடுவார் "

"ஒரு கட்டுப்புல்லுத்தாறேன் என் மகளை விடடி"

அதற்கு ஒருவரைச் சிறைப்பிடித்தவர்கள்

"போடி போடி சம்மந்தி புத்தி கெட்ட சம்பந்தி" என்று பத்துகட்டுப் புல்லுத் தாறேன் என் மகளை விடடி என்று பாடி முடிக்கும் போது சிறைப்பட்டவரை விடுவிப்பார்கள். அப்போது சிறைப்படாமல் நின்று வாதாடி வணிகம் பேசியவர் விடுவிக்கப்படும் சிறைப்பட்டவரை எட்டிப் பிடிக்கவேண்டும் பிடிக்கமுடியாமல் போனால் மற்றவருக்கு வெற்றி கிடைக்கும்.

நானும் என்னுடைய அறிவுக்களஞ்சியத்தை உலுப்பிக் குலுக்கி தேடிப் பார்த்திட்டேன் இந்த விளையாட்டு இதன் பொருள் ஒன்றுமாப் பிடிபடேல்லை.... ஆராவது அரைமூடிச் சலங்கைக்கு பொருள் சொன்னதுபோல் இந்த விளையாட்டின் ஆதி அந்தத்தை கண்டு பிடித்துச் சொல்லுங்கள் :icon_mrgreen:

இனி எழுதப்போவது சுய சரிதை இல்லை ரதி சுவையான கதைகள். :lol:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்படி விளையாடவில்லை...இருவர் கையை விரித்துக் கொண்டு இருப்பார்கள் மற்ற எல்லோரும் அவர்களது கைகள் ஊடாக புகுந்து ஓடுவோம் அப்படி ஓடும் போது பத்துக் குடம் தண்ணி வார்த்து பத்துப் பூ பூத்தது என்று சொல்லும் போது ஒருவரை பிடித்தார்களானால் அவர் அவுட்...அவரை உடனே விளையாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு மிச்சம் இருப்பவர்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்கி விளையாடுவார்கள்...விளையாட்டுகள் கூட ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப வித்தியாசப் படும் போல :unsure:

நீங்கள் சுயசரிதை எழுதினால் கூட அது சுவையான கதைகளாய் தான் இருக்கும் அக்கா எழுதுங்கள் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இடத்தில் புல்லு வணிகம் பேசி மகளை சம்மந்தியிடம் இருந்து மீட்க மாட்டார்களா? :(

புல்லுக்கட்டுக் கொடுத்தா அவர்கள் மாட்டுப்பெண்ணை விட்டுவிடுவார்கள் என்று பெண் வீட்டார் வாதாடுவதாக இருக்குமோ? :icon_idea:

இவ்விளையாட்டில் நான்கு பேர்தான் பங்கு பற்றுவோம் . இருவர் கைகளைத் தூக்கி விரித்தபடி பாட மற்ற இருவரும் அதற்குள் புகுந்து கைகளைத் தூக்கிய இருவரையும் சுற்றி வருவோம். :icon_mrgreen:

தீபா அக்கா! :rolleyes: மன்னிக்கோணும்.... !!!! சஹாரா அக்கா! :D

ஒரு சின்னப் பிள்ளையின் மனத்தினை அப்படியே வரிகளில் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

அருமையான கதை நகர்வு... சொல்லவந்த விடயத்தினை தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

வாசிக்கும் போது உணர்வுபூர்வமானதாகவும் இருந்தது. :)

ஒரு பச்சை கட்டாயம் குத்தியே ஆகோணும்!

கவிதைகளில் இருந்து கதைகளையும் நாடி... பரிணமித்திருக்கும் உங்கள் எழுத்துக்கள் தொடர.....

இந்த அன்புத் தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை நல்லவடிவாய் அரக்கினது இரண்டாம் பட்சம்!...ரீச்சர்மார் ஒரு நாளும் சின்னன் சிறிசுகளின்ரை மனதை நோகடிக்கக்கூடாது.....முதல்லை அரவணைத்து..அன்புவார்த்தைகளால்..அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டுவரவேண்டும்.இதுதான் ரீச்சர்மாற்ரரை வேலை......தாய்தகப்பன் சரியில்லையெண்டாலும் இல்லை அவைக்கு நேரமில்லையெண்டாலும் வறுமையெண்டாலும் சிறுசுகளை வளர்த்தெடுப்பதில் இவர்களுக்கும் முக்கிய பங்கிருக்கு இது முதலாம் பட்சம்....சின்ன விசயத்துக்கே...சின்னனை நாலுபேருக்கு முன்னால் சிறுமைப்படுத்திய ரீச்சரை????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபா அக்கா! :rolleyes: மன்னிக்கோணும்.... !!!! சஹாரா அக்கா! :D

ஒரு சின்னப் பிள்ளையின் மனத்தினை அப்படியே வரிகளில் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

அருமையான கதை நகர்வு... சொல்லவந்த விடயத்தினை தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

வாசிக்கும் போது உணர்வுபூர்வமானதாகவும் இருந்தது. :)

ஒரு பச்சை கட்டாயம் குத்தியே ஆகோணும்!

கவிதைகளில் இருந்து கதைகளையும் நாடி... பரிணமித்திருக்கும் உங்கள் எழுத்துக்கள் தொடர.....

இந்த அன்புத் தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :)

நன்றி கவிதை,

மூன்றாம் நபராக நின்று பார்த்து கதைகள் எழுதியவர்களை விட தாங்களே அக்கதாப்பாத்திரங்களாக மாறி கதைகள் எழுதுபவர்களே வெற்றி யடைக்கிறார்கள். ஒரு நாயின் கதையை எழுதுவதாக இருந்தால் நான் நாயாக இருந்தால் என்று யோசித்தலே முக்கியமானது. ஒரு பூவைப் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒன்று பூவின் உணர்வாக அல்லது ஒரு தேனீயின் சுயமாக, இல்லாவிட்டால் தேன் சிட்டுக்களாக அதுவும் இல்லாவிட்டால் அதை பறிக்கும் கைகளாகவோ, முகரும் நாசியாகவோ இப்படியான ஏதோ ஒருவகை தொடர்பான நிலைக்குள் மாறி ஒரு ஆக்கம் உருவாகினால் அந்நக் கதையோடு ஒன்றக்கூடிய தன்மையைக் கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை. சின்ன வயதில் எத்தனை பொருட்களின் சுயசரிதை எழுதி இருக்கிறோம். அதுபோலத்தான் இதுவும்... :rolleyes:

இலக்கியம் தெரிந்தவர்களோ பண்டித சிகாமணிகளோ இப்படியா கதை எழுதுவது என்று கேட்டு விடாதீர்கள் எனக்குப் பதில் தெரியாது :(

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா! நீங்கள் திரும்பவும் பேனாவைத்தூக்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது...நிறைய எழுதுங்கள்..நீங்கள் எழுதாமல் உங்களுடைய இடம் யாழில் நீண்டநாள் வெறுமையாக இருந்தது..அந்த இடத்தை உங்களால்தான் நிரப்பமுடியும்..அழகான பட்டாம்பூச்சிபோல் உங்கள் கதை அழகு...

எனக்கு ஒண்ணுமே எழுத வராது... எழுத வர்றவங்கள பார்த்தா சந்தோசமாதானிருக்கும்! .. நல்லா எழுதுறீங்க .... யக்கோவ்...aristoteles.jpg +100pxgodfreyknellerisaa.jpg240pxvairamuthu.gif ஆனா...அரிஸ்டோட்டில்,ஐசாக் நியூட்டன், வைரமுத்து ரேஞ்சில போகாம, சிம்பிளா எழுதுங்க! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை நல்லவடிவாய் அரக்கினது இரண்டாம் பட்சம்!...ரீச்சர்மார் ஒரு நாளும் சின்னன் சிறிசுகளின்ரை மனதை நோகடிக்கக்கூடாது.....முதல்லை அரவணைத்து..அன்புவார்த்தைகளால்..அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டுவரவேண்டும்.இதுதான் ரீச்சர்மாற்ரரை வேலை......தாய்தகப்பன் சரியில்லையெண்டாலும் இல்லை அவைக்கு நேரமில்லையெண்டாலும் வறுமையெண்டாலும் சிறுசுகளை வளர்த்தெடுப்பதில் இவர்களுக்கும் முக்கிய பங்கிருக்கு இது முதலாம் பட்சம்....சின்ன விசயத்துக்கே...சின்னனை நாலுபேருக்கு முன்னால் சிறுமைப்படுத்திய ரீச்சரை????????

உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் கு.சா அண்ணா. :rolleyes:

ஆசிரியரின் வழிகாட்டல் என்பது ஒவ்வொரு பிள்ளைக்கும் மிக அவசியமானது. ஒரு நல்ல ஆசானின் வழிகாட்டலில் ஆரம்பிக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்போதுமே பிரகாசம் நிறைந்ததாக இருக்கும். முக்கியமாக இந்தப்பாலர் பாடசாலை என்பது அன்பு இல்லம். முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட குழந்தைகள் முதன்முதல் பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருக்க நேரிடும் இடம். இங்குள்ள ஆசிரியர்களின் அரவணைப்பு மனதிற்கு இதமாக இல்லையென்றால் குழந்தைகளின் மிகுந்த வெறுப்பிற்குரிய இடமாகவும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

என்ன கு.சா அண்ணா கடைசி வரியில கலவரத்தை உண்டு பண்ணிடுவீங்க போல இருக்கு :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா! நீங்கள் திரும்பவும் பேனாவைத்தூக்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது...நிறைய எழுதுங்கள்..நீங்கள் எழுதாமல் உங்களுடைய இடம் யாழில் நீண்டநாள் வெறுமையாக இருந்தது..அந்த இடத்தை உங்களால்தான் நிரப்பமுடியும்..அழகான பட்டாம்பூச்சிபோல் உங்கள் கதை அழகு...

நன்றி சுபாஸ்

சுபாஸ்,.... எங்குமே வெற்றிடங்கள் இருப்பதில்லை. காற்றிலிருந்து காலம் வரைக்கும் அனைத்தும் தன்னாலே நிரவப்படும் அதுதான் இயங்கியல் விதி. இப்பதிலை வாசிக்கும்போது தன்னாலே உங்களுக்குள் சில கேள்விகள் முளைக்கும் அவை தவிர்க்க முடியாதவை. வெற்றிடங்களாகத் தோற்றமளிப்பவை உண்மையிலேயே வெற்றிடங்கள் அல்ல. ஒரு திறந்த வெளியை பாருங்கள் அங்கு புல்பூண்டு என்று எதுவமே இல்லை. நீங்கள் அதனைப்பார்க்கும்போது அதுபெரிய வெற்றிடமாகத் தோற்றமளிக்கும். ஆனால் அங்கு கண்களுக்குப் புலப்படாத காற்றும் கண்ணுக்குப் புலப்படக்கூடியதாக மண்ணும் நிரவி இருக்கும். அதுபோல்தான் வெற்றிடங்கள் நிரவப்பட்டிருக்கும் அதைப்பரிச்சயப்படும் வரைக்கும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

இருப்பினும் உங்களுடைய அன்பிற்குத் தலைவணங்குகிறேன்.

எனக்கு ஒண்ணுமே எழுத வராது... எழுத வர்றவங்கள பார்த்தா சந்தோசமாதானிருக்கும்! .. நல்லா எழுதுறீங்க .... யக்கோவ்...aristoteles.jpg +100pxgodfreyknellerisaa.jpg240pxvairamuthu.gif ஆனா...அரிஸ்டோட்டில்,ஐசாக் நியூட்டன், வைரமுத்து ரேஞ்சில போகாம, சிம்பிளா எழுதுங்க! :rolleyes:

சாச்சா இவர்கள் லெவலுக்கெல்லாம் நாங்க போக முடியுமா? அத்தோடு அப்படியே போகும் வாய்ப்புக் கிட்டினாலும் போறதாக உத்தேசம் இல்லை. ஏனென்றால் உங்களைப் போல ஆட்களை "இதைத்தான்டா வாசி" என்று கலவரப்படுத்த எங்களைப் போல ஆட்கள் வேணுமெல்லே :icon_mrgreen::lol:

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன திரியைக் கண்டு பிடித்து "ஒரு குடம் தண்ணி வார்த்து ஒரு பூப்பூத்து" என்ற விளையாட்டுக்குரிய காட்சியை ஒட்டியாச்சு

 

988519_10152898137241551_406699599970842

 

:lol: :lol: :lol::D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அருமையான எழுத்து நடை . எவ்வளவு அழகாக உங்கள் உண்மைக்கதையைக் கூறியிருக்கிறீர்கள்.

உங்களைபோன்ற திறமையான எழுத்தார்கள் மத்தியில் எனக்கு எழுதவே பயமாக இருக்கிறது .

பாராட்டுக்கள் சஹாரா .(அழகான பெயர் கூட)

 

கதை ரொம்ப நன்னாயிருக்கு. எமது சிறு வயது நினைவுகளை மீள கண் முன் நிறுத்தியது்

நன்றி அக்கா்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அருமையான எழுத்து நடை . எவ்வளவு அழகாக உங்கள் உண்மைக்கதையைக் கூறியிருக்கிறீர்கள்.

உங்களைபோன்ற திறமையான எழுத்தார்கள் மத்தியில் எனக்கு எழுதவே பயமாக இருக்கிறது .

பாராட்டுக்கள் சஹாரா .(அழகான பெயர் கூட)

 

மீரா குகன் நம்மகிட்ட திறமையெல்லாம் கிடையாது ஆனா கொஞ்சம் கற்பனைவளம் இருக்கு அவ்வளவுதான்......

 

பயப்பிடாமல் எழுதுபவர்கள்தான் வெற்றியடைவார்கள் அதனால யாரைப்பார்த்தும் தேவையில்லாமல் பயத்தை வளர்த்து உங்களுக்குள் இருக்கும் திறமையை மங்கவைக்காதீர்கள்...

 

மறக்காமல் உங்களுக்கு ஒரு நன்றி...எதுக்கென்று பார்க்கிறீங்களா... அதாங்க என்னுடைய பெயரை அழகு என்று சொல்லீட்டீங்களே... :rolleyes:

கதை ரொம்ப நன்னாயிருக்கு. எமது சிறு வயது நினைவுகளை மீள கண் முன் நிறுத்தியது்

நன்றி அக்கா்

 

கதையை வாசித்து பதிவிட்ட தம்பியாருக்கு நன்றி

சின்ன வயது வாழ்க்கை அதுதான் சொர்க்கம் தம்பி

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுகதை ஒரு காலத்தின் பதிவு சகாறாவின் ஆரம்பப்பாடசாலையின் நினைவுகளோடு

சுபாவாக இந்த கதையில் வரும் ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நம்மை விட்டு பிரிந்துள்ளார். எனது இந்தக்கதையில் கலையுலகில் என்னைக் காலடி எடுத்து வைக்க உற்சாகம் ஊட்டிய இந்த ஆசிரியருக்கு இந்தக்கதையில் வரும் கலைநிகழ்வே முதன் முதல் நிகழ்வாகவும் அதற்கு அவர் பயிற்றுவிப்பாளருமாக இருந்ததை அவர் மறைவிற்குப் பின்னரே அறிய முடிந்தது. அந்த முதல் நிகழ்வின் பயிற்சிக்களம்தான் இந்தக்கதையின் பிண்ணனி... நினைத்தே பார்க்கமுடியவில்லை.

49143060_2155156141405474_47366169448016

  • கருத்துக்கள உறவுகள்

ராணி டீச்சர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ராணி டீச்சர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறன் .

எனக்கு முந்திய பட்ஜ்களுக்கு தயாக்கா படிப்பித்தார் பெருமாள் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியையின் மறைவிற்கு ஆழ்ந்த  அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.